Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

170 ஆண்டுகால கல்விச் சேவையை நிறைவு செய்யும் வேம்படி மகளிர் கல்லூரி

Featured Replies

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கல்விக் கூடங்களில் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியும் ஒன்றாகும். இன்று இக்கல்லூரி இலங்கையினதும் வட இலங்கையினதும் தேசிய உணர்வு வளர்ச்சிக்கும்

கல்வி வளர்ச்சிக்கும் 170 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றிய பங்களிப்பு வரலாற்றுப் பிரசித்தமானது.கல்வி என்பது இடையறாத படிப்பும், தவறக்கூடாத பரீட்சை சித்தியும் என்று இயங்கும் யாழ்ப்பாணக் கல்விச் சூழலில் விளையாட்டு சமூக ஊடாட்டம் ஆகியவற்றினூடாக மாணவிகளின் ஆளுமை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பண்பு யாழ்.வேம்படி மகளிர் உயர்தரக் கல்லூரியின் பாரம்பரியங்களிலொன்றாகும். மாணவிகளின் தன்னம்பிக்கையுடையவர்களாய், செல்லுமிடங்களில் செல்வாக்குடையவர்களாய்ப் பழகக்கூடிய ஒரு பண்பை இக்கல்லூரி வளர்த்து வந்துள்ளது.

மேலும், யாழ்.வேம்படி மகளிர் உயர்தரக் கல்லூரி யாழின் இனிய ஓசையாய் ஞாலந்தழுவிய நயங்களின் வண்ணமாய், கல்வியின் செம்மைசார் வளர்ச்சியின் இயக்க வரலாற்றைக் கொண்ட நிதியமாய் மிளிர்ந்து வந்துள்ளது. வையந்தழைக்க அவதரித்த யேசுபகவானின் ஆணையால் வெஸ்லியன் சங்கத்தினரின் சிந்தையில் உதித்த இக்கல்லூரி வாழையடி வாழையாகக் கல்வி மரபுகள் வளர்ந்தோங்கி யாழ்ப்பாணத்தில் 1838 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஆங்கிலமும் அருந்தமிழும் சங்கமமாகிப் பண்பாட்டு விளைநிலத்தின் அழியாத சுவடுகளும் சின்னங்களுமாகிச் செங்கதிர் செல்வர்களாக மிளிர்ந்த பலர் இக்கல்லூரியின் அருந்தவப்புதல்விகளாவர்.

நாம் வாழுகின்ற யுகம் விஞ்ஞான தொழில்நுட்ப அபிவிருத்தி அதி தீவிர வளர்ச்சி கண்டுள்ள காலப்பகுதி. இவர்கள் மக்களின் வாழ்க்கை வசதிகள், நாகரிக ஆடம்பரங்கள் என்பன செழித்து ஓங்குகின்றன. எனினும் மக்கள் வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி, சாந்தி, சமாதானம் என்பவை காணப்படுதல் மிக அரிதாகவேயுள்ளது. எத்துணைச் செல்வங்கள் இருப்பினும் மன அமைதி மக்களிடையே இல்லையாயின் செல்வங்களினால் பயனில்லை. மனிதர் மனிதத் தன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவுவது கல்வி. இந்த நோக்கத்திற்காகவே கல்வி கற்பித்தல் ஆரம்பிக்கப்பட்டது. அண்மைக் காலம் வரை இக்கல்வி நோக்கம் மனித வரலாற்றின் முக்கியத்துவம் பெற்று வந்திருப்பதை நாம் அறிவோம்.

இத்துடன் கல்வியின் நோக்கம் என்னவெனில் மானிடநேயம்,மானிடசேவை, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுணர்வு , இறை நம்பிக்கை, மூத்தோரைக் கனம்பண்ணுதல், பெற்றோர், ஆசிரியர், சுற்றத்தினர் ஆகியோரைப் பேணுதல், அவர்களுக்கு மதிப்பளித்தல், நலிந்தோருக்கு உதவுதல், பிறர் நலம் பேணுதல், உண்மை, அன்பு, நன்னடத்தை, சாந்தி,அகிம்சை என்பவற்றில் நாட்டம் கொள்ளல், தியாகம், அர்ப்பணம், சேவை ஆகியவற்றில் ஊக்கம் கொள்ளல் என்பனவாகும். இத்தகைய உயர்ந்த பண்புகளை யாழ்.வேம்படி மகளிர் உயர்தர கல்லூரி இறுதிவரை கடைப்பிடித்து வந்துள்ளமையை இச்சந்தர்ப்பத்தில் நாம் குறிப்பிட வேண்டும்.

மேலும், இக்கல்லூரி படிப்பு, விளையாட்டு, ஒழுக்கம், உடற்பயிற்சி, சங்கீதம், நாடகம், பேச்சு போன்ற பல்வேறு துறைகளிலும் திறமை கொண்டதாக வட மாகாணத்தில் பிரகாசிக்கின்றது. "கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக' எனும் வள்ளுவர் வாக்குக்கு அமைய நாம் "யாழ்ப்பாணத்தில் வேம்படியில் படித்தோம்' என்று பெருமையாகக் கூறுமளவுக்கு இக்கல்லூரி உலகளாவிய ரீதியில் உயர்ந்து நிற்கின்றது. இதற்கு மேலாக மும்மணிகளாம் செல்விகள் வடிவேலு, தோமஸ், மேபல் தம்பையா ஆகியோரின் அன்பு கலந்த கண்டிப்பு தமது நினைவுகளிலிருந்து என்றும் அகலாது என சிரேஷ்ட விரிவுரையாளர் (கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடம்) திருமதி சாந்தி செகராஜசிங்கம் கூறியிருப்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

தமிழ் மரபு, கல்வியின் குறிக்கோள் என்னவெனில் "மனிதர்களைச் சான்றோர் ஆக்குதல் என்பதாகும்' மேலும், கல்வி முறைமையானது பொருளாதார விருத்தி, சமூக நீதி, தன்னிறைவு, வேலை வாய்ப்புகள், விஞ்ஞான தொழில்நுட்ப அபிவிருத்தி, சமூகநலன் ஆகியவற்றை நோக்காகக் கொண்டிருத்தலுடன் மானிட ஒழுக்கப் பண்புகள், விழுமியங்கள், நன்மனப்பாங்கு, நற்செயல்கள், நன்னடத்தை உள்ளிட்ட நல்லொழுக்கப் பயிற்சிகளையும் இளம் சந்ததியினர் பெற்றுக்கொள்ள வாய்ப்பு நல்கக்கூடிய முறையில் அமைய வேண்டும். இத்தகைய உயர்ந்த நோக்கம் கொண்டே யாழ்.வேம்படி மகளிர் உயர்தரக் கல்லூரி செயற்பட்டுவருவதை நாம் கண்கூடாக அவதானிக்க முடிகிறது.

கல்விச் செல்வமே எல்லாச் செல்வத்திலும் மேலான செல்வம். பெற்ற தாய், பிறந்த பொன்னாடு, கற்ற கல்லூரி, கலைதரு ஆசான்கள் நம் நெஞ்சத்தில் என்றும் நினைத்து நிற்கும் நினைவுப் பொக்கிசங்கள். புண்ணியம் கோடி ஒருவனுக்கோ, ஒருத்திக்கோ எழுத்து அறிவித்ததாகும். உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான மயக்கம் நிறைந்த வாழ்வில் உண்மையைத் தேடிப்பிடிக்க உதவுவது கல்விப்பேறேயாகும். இப்பெரும் பேறிணை கடந்த 170 ஆண்டுகளுக்கு மேலாக யாழ்.வேம்படி மகளிர் உயர்தரக் கல்லூரி பாரி வள்ளலைப் போல் வாரி வழங்கிவந்துள்ளது.

யாழ்.வேம்படி மகளிர் உயர்தரக் கல்லூரி மாணவிகளிடம் காணப்படும் அறிவுச் சுடரும் ஆர்வமும் ஆளுமையும் அர்ப்பணிப்பும் அவர்களது ஆழ் மனதில் புகுந்து அவர்களின் அறியாமை, மூடநம்பிக்கை, வறுமையின் கருநிழல் ஆகியவற்றை அகற்றும்.

இத்துடன் ?மாணவிகளே! நீங்கள் உலகின் ஒளி. நீங்கள் பிரகாசத்தையும் புன்னகையையும் நல்லொழுக்கத்தையும் கொண்ட விளக்காக ஒளி ஏற்றப்பட்டிருக்கிறீர்கள். இவ் ஒளி உங்கள் இதயத்தைத் தாண்டி "சரியையும், தவறுகளையும் இனங்காணச் செய்யும். நீங்கள் துலக்கப்படாமலும், எரிக்கப்படாமலும் மூலையில் கிடக்கும் ஒரு விளக்காக இருக்கிறீர்கள். உங்களுடைய ஒளி வெகுதூரம் பரந்த, இதமான, பிரகாசமான வெளிச்சத்தைத் தந்து உங்களது இல்லங்களில் ஒளியின் அழகையும், இனிமையையும் அளிக்கட்டும்'. இதையே உலகப் புகழ்பெற்ற மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களும் "என்னுடைய இல்லம் இருளடைந்தும் தனிமையாயும் இருக்கிறது. உங்களுடைய ஒளியைத் தாருங்கள்' என்ற வரிகளில் கூறிச் சென்றுள்ளார்.

மேலும், 170 ஆண்டுகளுக்கு மேலான நிறைவை நாம் பெருமையாகவும், பெரு மகிழ்ச்சியாகவும் நினைவுகூரும் இத்தருணத்தில் யாழ். வேம்படி மகளிர் உயர்தர கல்லூரியின் வளர்ச்சிக்காகவும் உயர்ச்சிக்காகவும் அயராது அர்ப்பணிப்போடு உழைத்த ஸ்தாபகர்களையும் அதிபர்களையும் ஆசிரியர்களையும் இக்கல்லூரியின் பழைய மாணவிகளையும் மற்றும் நலன் விரும்பிகள் யாவரையும் இக்கண்நினைவு கூருவதோடு இக்கல்லூரி மேலும் மேலும் பல துறைகளிலும் சிறப்பும் முன்னேற்றமும் அடைந்து கல்வி வானில் ஒரு சிறந்த நட்சத்திரமாகப் பிரகாசிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வாழ்த்துவோமாக!

http://appaa.com/index.php?option=com_cont...4&Itemid=61

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் இப்படி படித்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு அங்கு இப்படியும் வரவேற்பு

இந்த செயலை ச் செய்த மாணவன் என்ன பாவம் செய்தாரோ/

மாணவன் மூன்றான் ஆண்டு மருத்துவமாணி பரீட்சை எழுதியுள்ளார். இதற்கு முன் இவர் இரண்டாம் ஆண்டு பரீட்சை எழுதி சித்தி பெற்றிருக்க வேண்டும்.

மிகவும் பொறுமைசாலி என எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில் இந்த பரீட்சைக்கு 6 தடவைகள் இந்த மாணவன் தோற்றியுள்ளார்.வெற்றிகரமாக ஆறாவது தடவையும் அந்த குறிப்பிட்ட பாடத்தில் சித்தியெய்த தவறியுள்ளார். இதற்கு காரணம் இந்த முன்னாள் பேராசிரியர் ஆகும் என கூறுகின்றனர். இந்த மாணவன் முட்டாளாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் மருத்துவ படிப்பில் மிகவும் கஸ்டமான இரண்டாவது மருத்துவமாணி பரீட்சையில் இவர் சித்தி பெற்றிருக்கின்றார். மூன்றாம் ஆண்டு மருத்துவமாணி பரீட்சையிலும் இவர் சித்தி பெற்றுள்ளதாக தெரிகின்றது. ஆகவே இங்கு அந்த பாட ஆசிரியரின் படிப்பித்தல் தன்மையில் ஒரு கேள்விகுறி ஒருவாகிறது. ஆனால் அவருக்கு படிப்பித்தலில் மட்டும் நல்ல பெயர் உண்டு. எனவே மூன்றாவதாக இடம்பெற்றது இதுதான் அந்த ஆசிரியரின் பழிவாங்கும் படலம். இலங்கை பல்கலைக்கழகங்களில் இரகசியம் காக்கும் போர்வையில் பல அட்டூழியங்கள் நிறைவேறிகின்றன. சிங்கள பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விட, யாழ் பல்கலைக்கழகத்தில் மிக மிக அதிகம். ஆனால் சில வருடங்களாக இவை நடைபெற வில்லை. ஆனால் இப்போது மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இவர்களால் பல மாணவர்கள் தமது எதிர்காலத்தை தொலத்து நிற்கிறார்கள். இந்த ஆசானுக்கு பின் தங்கிய இட மாணவர்களை கண்ணில் காட்ட கூடாது.அராலி. தீவு,பளை,வன்னி,கிழக்கு மாகாணம், மற்றும் சில இடங்கள் இவரால் பின் தங்கிய பிரதேசங்கள் என எழுத்தாத சட்டமாக உள்ளது. ஆனால் இவருடைய படிப்பு பிந்தங்கிய மக்களுக்கு உதவும் சமூக மருத்துவம் என்பது கேலிக்குரியதுதான்.

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சமூக மருத்துவ பிரிவில் பல ப்ட்டதாரிகள் இணைய விரும்ம்பியும் இவர்கள் அவற்றை நிராகரித்துள்ளனர். தற்போது 70 வயது அப்புவின் ஆசியில் மருத்துவ பீட பரீட்சைகள் நடக்கிறது.

பொங்கியெழும் மக்கள் படை எங்கே?... :):lol::huh::huh::huh::huh::huh:

பொங்கியெழும் மக்கள் படை எங்கே?... :):lol::huh::huh::huh::huh::huh:

பொங்கியெழம் படையில் இருந்தவார்களில் பலர் புலத்திக்கு ஒடிவந்து விட்டார்கள். இப்ப அவர்கள் புலத்தில் களம் அமைக்கிறார்களாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரும் இஞ்சை வேம்படியிலை மினைக்கெட்டவையள் இருக்கிறியளோ? குறிப்பாய் ஆண்சிங்கங்கள்!

ஏனெண்டால் எல்லாருக்கும் சேர்த்து வாழ்த்து சொல்லுவம் எண்டுதான். :)

மற்றும்படி எனக்கு கரவுவஞ்சகம் ஒண்டுமில்லை கண்டியளோ? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.