Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனிப்பெயர்ச்சிப் பலன்கள் {nakkheeran}

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

(2009 - 2012)

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்" சி சுப்பிரமணியம்

கன்னி ராசிக்கு மாறும் சனி பகவான்

இதுவரை சிம்மராசியில் இருந்த சனிபகவான் 26-9-2009, விரோதி ஆண்டு, புரட்டாசி மாதம் 10-ஆம் தேதி, சனிக்கிழமை பகல் 3-30 மணிக்கு உத்திரம் 2-ஆம் பாதம் கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது வாக்கியப் பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டது. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஆவணி 24-ல் (9-9-2009) சனிப் பெயர்ச்சி. என்றாலும், திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா வாக்கியப் பஞ்சாங்கப்படி 26-9-2009-ல்தான். சனீஸ்வரருக்குரிய அதிகாரப்பூர்வமான தலம் திருநள்ளாறு. ஊர் ஊருக்கு அய்யப்ப சுவாமிக்கு கோவில் கட்டினாலும் கேரளத்தின் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலே அதிகாரப்பூர்வமான கோவில் என்பதுபோல, திருநள்ளாறு கோவிலே சனீஸ்வரருக்கு உரிய திருத்தலம். அதனால் நாமும் சனிப்பெயர்ச்சி நாளாக 26-9-2009-ஆம் தேதியை எடுத்துக் கொள்வோம்.

பொதுக்குறிப்பு

நவகிரகங்களில் மிக முக்கியமான கிரகம் - சக்திபடைத்த கிரகம் சனிபகவான்தான். சர்வேஸ்வரனால் சனீஸ்வரர் என்று ஈஸ்வரப் பட்டம் பெற்றவர்.

ஈஸ்வரன் என்ற பட்டம் ஐவருக்கு உண்டு. எல்லாம் வல்ல எம்பெருமான் சிவன்- சர்வேஸ்வரன்! ஈஸ்வரன் என்றாலே அது சிவனைத்தான் குறிக்கும். கணநாதர்களில் விநாயகருக்கு- விக்னேஸ்வரன் என்ற பட்டம். அசுரர்களில் இலங்கையை ஆண்ட இராவணனுக்கு- இலங்கேஸ்வரன் அல்லது இராவணேஸ்வரன் என்று பட்டம். நவகிரகங்களில் சனிக்கு- சனீஸ்வரர் என்று பட்டம். மனிதர்களில் கோடிச் செல்வத்துக்கு அதிபதி ஆகிவிட்டால்- கோடீஸ்வரன் என்ற பட்டம்!

அந்தக் காலத்தில் கோடீஸ்வரனாக இருப்பது ரொம்பவும் அபூர்வம்! அதேபோல கோடீஸ்வரர் வீட்டில் குடை வைத்துக் கட்டி குடைவீடு என்பார்கள்! இந்தக் காலத்தில் கோடீஸ்வரர்கள் என்பது சர்வசாதாரணம். அதிலும் தொழிலதிபர்களைவிட அரசியல் தலைவர்களும் மந்திரிகளும் பிரமுகர்களும் ஆயிரம் கோடி ஐயாயிரம் கோடி என்று பலகோடி அதிபர்களாக இருக்கிறார்கள்.

மற்ற எல்லா கிரகங்களையும்விட சனி கிரகம் பலமான- சக்திபெற்ற கிரகம் மட்டுமல்ல; ஒரு ராசியில் அதிக காலம்- இரண்டரை வருடம் தங்கிப் பலன் செய்யும் கிரகம். அதனால் அவருக்கு மந்தன் என்றும் முடவன் என்றும் பல பெயர்கள் உண்டு.

ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசிகளையும் ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகும். அந்த முப்பது ஆண்டுகளில் பொதுவாக மனித வாழ்க்கையிலும் சரி; வீட்டிலும் நாட்டிலும்- அரசியல், ஆன்மிகம், சமுதாயம், பொதுவாழ்வு, தொழில்துறை என எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுவது இயல்பு. அதனால்தான் முப்பது வருடத்துக்குமேல் சேர்ந்தாற்போல் யோகத்திலே திளைத்தவர்களும் இல்லை; கஷ்டத்திலேயே இளைத்தவர்களும் இல்லை என்பார்கள்.

அவரவர் ராசிக்கு (சந்திரன் நிற்கும் இடம் ராசி எனப்படும். அதற்கு) 12-ஆம் இடத்தில் சனி வரும்போது ஏழரைச்சனி ஆரம்பம். அது முதல்கட்டச் சனி. அங்கு இரண்டரை வருடம் இருக்கும் சனி விரயச்சனி எனப்படும்.

அடுத்து ஜென்மராசிக்கு மாறும் சனி (2-ஆம் கட்டம்) ஜென்மராசி யில் இரண்டரை வருடம் இருக்கும்; அது ஜென்மச்சனி எனப்படும்.

அதைவிட்டு விலகி ஜென்ம ராசிக்கு 2-ஆம் இடத்தில் சனி வரும்போது, (மூன்றாம் கட்டச் சனி) இரண்டரை வருடம்- பாதச்சனி, குடும்பச்சனி, வாக்குச்சனி எனப்படும்.

இப்படி மூன்று கட்டமாக வரும் சனியின் மொத்தக் காலம்தான் ஏழரைச்சனியின் காலம் எனப்படும்! ஜாதக ரீதியாக ஒருவருக்கு வரக்கூடிய சனிதசை என்பது வேறு; கோட்சார ரீதியாக வரும் ஏழரைச்சனி என்பது வேறு.

சனீஸ்வரரால் சங்கடப்படுகிறவர்களும் பாதிக்கப்படுபவர்களும் சோதிக்கப்படுகிறவர்களும் பக்தியோடு அவரைச் சரணடைந்து வழிபட்டால் சனியின் கருணைக்குப் பாத்திரமாகலாம். அவர் பிடியில் இருந்தும் விடுபடலாம்.

சனி காயத்ரி மந்திரம்

காகத்வஜாய வித்மஹே; கட்க ஹஸ்தாய தீமஹி;

தந்நோ மந்த ப்ரசோதயாத்.

சனி சுலோகம்

நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்

ச்சாயா மார்த்தாண்டம் ஸம்பூதம்

தம் நமாமி சனைஸ்சரம்.

தமிழ்த் துதி

சங்கடம் தீர்க்கும் சனிபகவானே

மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்

சச்சரவின்றி சனீஸ்வர தேவே

இச்சகம் வாழ இன்னருள் தா! தா!

முனிவர்கள் தேவர்கள் ஏழுலக மூர்த்திகள் முதலானோர்கள்

மனிதர்கள் சகல வாழ்வும் உன் மகிமையது அல்லாதுண்டோ,

கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகமேறும்

சனிபகவானே உனைத் துதிப்பேன் தமியேனுக்கு அருள் செய்வாயே!

நவகிரகங்களில் முதன்மையான ஆதி கிரகம் சூரியன். துவஷ்டாவின் மகள் சஞ்ஞிகை என்பவள் (உஷா என்றும் ஒரு பெயர்) சூரியனை விரும்பித் திருமணம் செய்துகொண்டாள். வைவஸ்வதமநு, யமன் (மகன்கள்), யமுனை (மகள்) என்ற மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். இருந்தும் சூரியனுடைய வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். அதனால் சூரியனுக்குத் தெரியாமல் தன்னுடைய நிழலையே தன் மாதிரி பெண்ணாக்கி சூரியனுடன் குடும்பம் நடத்தும்படி கூறிவிட்டுத் தன் தகப்பனார் வீட்டுக்குப் போய்விட்டாள். அவள் பெயர் சாயாதேவி. பிரத்யுஷா என்றும் இன்னொரு பெயர்!

சஞ்ஞிகையின் வேண்டுகோளின்படி தான் வேறு ஒருத்தி என்ற ரகசியத்தை வெளியிடாமல், சூரியனுடன் அவன் முதல் மனைவி போலவே வாழ்ந்தாள் சாயாதேவி. அவளும் மூன்று பிள்ளைகள் பெற்றாள். சாவர்ணீமனு என்ற ஆண்மகனும், அடுத்து சனிபகவானும், பிறகு பத்திரை என்ற பெண் மகளும் பிறந்தனர்.

சாயாதேவிக்குக் குழந்தைகள் பிறந்ததும் சஞ்ஞிகையின் குழந்தைகளை சக்களத்திப் பிள்ளைகளாகக் கருதி கொடுமைப்படுத்த ஆரம்பித்தாள். இதையறிந்த சூரியனின் மூத்த தாரத்து இளைய குமாரன் யமன் (தர்மராஜன்) சாயாதேவியை மிரட்டி அடிக்கப் போனான். சனி தன் தாய்க்குப் பரிந்துகொண்டு சஞ்ஞிகையை ஓடிப்போனவள் என்று உதாசீனமாகப் பேசவே, யமன் கோபங்கொண்டு தன்னுடைய தண்டத்தால் சனியின் முழங்காலில் அடித்தான். அதனால் சனிபகவானின் வலதுகால் ஊனமானது.

இந்நிலையில் சூரியனுக்குத் தன் மனைவியைப் பற்றிய உண்மை தெரியவந்தது. தன்னை விட்டுப் பிரிந்துபோய் தவம்செய்து கொண்டிருந்த மூத்த மனைவி சஞ்ஞிகையைச் சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்தான். அதனால் சனிக்கு விரக்தி ஏற்பட்டு காசிக்குச் சென்று சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு கிரகபதவி பெற்றான். ஈஸ்வரனால் சனீஸ்வரன் என்ற பட்டமும் பெற்றான்.

சனிக்கு மந்தன், பிணிமுகன், முதுமகன், முடவன், காரி என்று பல பெயர்கள் உண்டு. சனிக்கு நீலா என்பவள் மனைவி. அவளைத் தவிர மந்தா, சேஷ்டை என்ற இரு மனைவியரும் உண்டு என்று நூல்கள் கூறும். சனிக்கு குளிகன் என்ற மகனும் உண்டு என்று ஜோதிட நூல்கள் கூறும். ஒவ்வொரு நாளிலும் குளிகனுக்குரிய காலம் (ஒன்றரை மணி நேரம்) ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நற்காரியங்கள் செய்தால் மேன்மேலும் விருத்தியுண்டாகும் என்றும்; தீய காரியங்கள் செய்யக்கூடாது என்றும் கூறப்படுகிறது.

சனிபகவான் ஒரு முகமும் நான்கு கைகளும் உடையவன்; மேலிரு கைகளில் அம்பும் வில்லும், கீழ்க் கைகளில் வாளும் வரதமும் கொண்டவன்; நீல மேனி உடையவன்; சடைமுடி தரித்தவன்; கருநிற ஆடை, கருஞ்சந்தனம், நீல மலர்மாலை, நீலமணி மாலை புனைந்தவன்; இடப்பாகத்தே நீலா என்ற தேவியைப் பெற்றுத் திகழ்பவன்.

சனிபகவான் வில் வடிவமான ஆசனத்தில், சூரியனுக்கு முன்பாகிய மேற்குத் திசையைத் தனக்குரிய இடமாகக் கொண்டு சிறிது குள்ள வடிவினனாக வீற்றிருப்பவன்; அலித்தன்மையும் தாமத குணமும் கொண்டவன்; உலோகம்- இரும்பையும், ரத்தினம்- நீலத்தையும், தானியம்- எள்ளையும், புஷ்பம்- கருநீல மலரையும், சமித்து- வன்னியையும், சுவை- கசப்பையும், பாஷை- அன்னிய பாஷையையும், வாகனம் - காகத்தையும் கழுகையும் தனக்கென்று உடையவன். ஆயுள் காரகன்! சனிக்கு அதி தேவதை - யமன்; பிரத்யதி தேவதை - பிரஜாபதி! யமன் சனிபகவானுக்கு வலமாகவும்; பிரஜாபதி சனிக்கு இடமாகவும் விளங்குவர்.

சனிக்குரிய தலமாகத் திருநள்ளாறு திகழ்கிறது. இத்திருத்தலம் காரைக்கால் அருகே இருக்கிறது. நள மகாராஜாவுக்கு விமோசனம் கொடுத்த தலம். நளச்சக்கரவர்த்திக்கு ஏழரைச்சனிக் காலத்தில் பல வகையிலும் கஷ்ட- நஷ்டங்களைத் தந்து முடிவில் சனி விலகிய இடம்.

ஒவ்வொரு புண்ணிய தலத்துக்கும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற பெருமைகள் உண்டு. திருநள்ளாறில் இந்த மூன்று பெருமைகளும் உண்டு.

இத்தலத்தின் மூர்த்தி தர்பாரண்யேஸ்வரர். கிழக்குப் பார்த்த சந்நிதி. சுயம்பு மூர்த்தி. தர்ப்பை வனத்தில் எழுந்தருளியதால் தர்ப்பையிலான வடுக்கள் திருமேனியில் உள்ளதாகக் கூறப்படும். அம்பாள் "பிராணேஸ்வரி' என்றும்; "போகமார்த்த பூண் முலையாள்' என்றும் பேர் வழங்கப்படுகிறது. முசுகுந்த சக்ரவர்த்தி தேவேந்திரனிடமிருந்து வாங்கிவந்த சப்த விடங்கப் பெருமான் என்னும் ஏழு லிங்கங்களில் இரண்டாவது நகவிடங்கத் தியாகர் இங்கு அருள்பாலிக்கிறார்.

இத்திருத்தலத்தில் அஷ்டதிக்குப் பாலகர்கள் எட்டு பேரும் எட்டு தீர்த்தங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சந்நிதிக்கு எதிரே வாணி தீர்த்தமும், கோவிலின் வடதிக்கில் அன்ன தீர்த்தமும், அகத்தியர் தீர்த்தமும், வடமேற்கில் நளதீர்த்தமும், அதற்குப் பக்கத்தில் நள கூபமும் உள்ளன. பிரம்ம தீர்த்தம், சரசுவதி தீர்த்தம், அம்ச தீர்த்தம் என்று பதின்மூன்று தீர்த்தங்கள் உண்டு.

அம்மன் சந்நிதிக்குப் பின்புறம் கிழக்குப் பக்கத்தில் சனி பகவான் திருச்சந்நிதி இருக்கிறது. மற்ற எட்டு கிரகங்களும் இல்லாமல் சனிபகவான் மட்டுமே தனியாகக் காட்சி தருகிறார்.

கலி நீங்கிய நளமகாராஜன் நள தீர்த்தத்தை உருவாக்கி, வைகாசி மாதம் புனர்பூச நன்னாளில் திருவிழா நடத்திப் புகழ்பெற்றதாக திருஞானசம்பந்தர் தமது பதிகத்தில் பாடுகிறார். வைகாசி மாதம் உத்திரட்டாதியில் தொடங்கி 18 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கும்.

சனிப்பெயர்ச்சிக் காலங்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து நளதீர்த்தத்தில் நீராடி ஈரம்பட்ட உடைகளை அங்கேயே விட்டுவிட்டு கோவிலுக்குச் சென்று வழிபடுவது உத்தமம்.

Edited by jhansirany

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷராசி அன்பர்களே!

மேஷ ராசியில் பிறந்த நீங்கள் கம்பீரமான தோற்ற மும் நடுத்தர உயரமும் கொண்டவராக இருப்பீர்கள். எதையும் கண்டுகொள்ளாதவர் மாதிரி தெரிந்தாலும், சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமும் அக்கறையும் நிரம்பியவர்கள். சுற்றுச் சூழலைக் கூர்ந்து கவனிக்கும் சக்தியும் கொண்ட வர்கள். உடம்பில் முகத்தில் கைகளில் அல்லது தொடையில் மச்சம், தழும்பு அல்லது வடுக்காயம் இருக்கும். எல்லா விஷயத்திலும் பொதுஅறிவு இருக்கும். அதனால் பிறர் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும் அதைப் பற்றித் தெரிந்திருக்கும் ஞானம் உடையவர்கள். பலரிடமும் அபிப்பிராயமும் ஆலோ சனையும் கேட்டாலும் எந்த ஒரு காரியத்திலும் சொந்த விருப்பம் என்று ஒன்று இருக்கும். அதன்படியே செயல்படுவீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் மறைத்துப் பேசத் தெரியாது. எதுவானாலும் நேருக்கு நேர் கூறும் பழக்கம் உடையவர்கள். அதனால் மற்றவர்களின் விமர்சனங்கள் ஏற்பட்டாலும் அதைப் பற்றித் துளியும் கவலை கொள்ளமாட்டீர்கள்.

உங்களிடம் அன்பும் பாசமும் கொண்டவர்களுக் காக எந்தத் துன்பம் வந்தாலும் தாங்கிக் கொண்டு அவர்களுக்காக வாதாடி சாதனை படைப்பீர்கள். ஒரு காரியத்தை உங்களை நம்பி ஒப்படைத்தால் அதை வெற்றியோடு செயல்படுத்தி முடிக்கும்வரை ஓயமாட் டீர்கள். அதேசமயம் சாமான்யமாக எந்த ஒரு பொறுப் பையும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.

மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் திறனுடைய நீங்கள் உங்களையே புரிந்து கொள்ள முடியாதவர் களாகவும் இருப்பீர்கள். தெய்வ வழிபாடு இருந்தாலும் சில விஷயங்களில் பலவீனமான பழக்க - வழக்கத்துக்கு அடிமையாகவும் இருப்பீர்கள். கொஞ்சம் நெருங்கிப் பழகியவர்களை நம்பி பணவிரயம் செய்து முடிவில் பகை, விரோதம் ஆகிவிடும். பூர்வீகச் சொத்து இருந்தும் பயன்படாது. விரயம் ஆகலாம். பிள்ளைகள் ஆதரவாலும் அவர்தம் சம்பாத்தியத்தாலும் சொத்து சுகங்களைத் தேடிக் கொள்ளவும்- அனுபவிக்கும் யோகமும் அமையும். சிலர் பூர்வீக எல்லையை விட்டு இடம் மாறி வாழலாம். சிலகாலம் வாடகை வீடு பிறகு ஒத்தி வீடு அப்புறம் சொந்த வீட்டில் வாழும் யோகமும் உண்டு. வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு போராடித்தான் முன்னுக்கு வரவேண்டிய நிலை!

எப்போதும் ஏதாவது சிந்தனையிலேயே இருப்பீர்கள். அதனால் மூளை நரம்புகளில் சில தொல்லைகள் ஏற்படலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுவீர்கள். பணவிரயத்தைத் தவிர மற்ற வகைகளில் கவலை இராது. எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கென்று செலவு வந்துவிடும். உங்களுடைய பேச்சால் மற்றவர்களை வசியப் படுத்துவீர்கள். உங்கள் வாக்கை மற்றவர்கள் தெய்வ வாக்காக- தேவ வாக்காக மதித்து மரியாதை செய்வார்கள். தாய் - தகப்பனார் உறவு அவ்வளவு திருப்திகரமாக இருக்காது. கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழலாம்; அல்லது அவர்களை விட்டு நீங்கள் பிரிந்து வாழலாம். சகோதர வகையிலும் ஆதரவு, அனுசரணையை எதிர்பார்க்க முடியாது. முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாகச் செயல்பட வேண்டும்.

உங்களது ராசிக்கு இதுவரை 5-ல் இருந்த சனி இப்போது ஆறாம் இடத்துக்கு வருவது யோகம்தான். கன்னியில் நிற்கும் சனி 3-ஆம் பார்வையாக 8-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தையும்; 10-ஆம் பார்வையாக 3-ஆம் இடத்தையும் பார்க்கப் போகிறார்.

சிலருக்கு உடல்நலக் குறைவும் நரம்பு அல்லது உஷ்ண சம்பந்தமான கோளாறுகளும் ஏற்படலாம். தாய் அல்லது தாய் வகையில் மனச்சஞ்சலங்களும் மருத்துவச் செலவுகளும் உண்டாகும். மனதிற்குள் இனம்புரியாத பயமும்- தொழில் அல்லது வேலையில் சிறுசிறு பிரச்சினைகளும் உண்டாகி கவலை ஏற்படுத்தலாம். வீடு, வண்டி வாகனம் ஆகியவற்றில் பழுதுகளும் பராமரிப்புச் செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. மனதில் ஏதேனும் ஒரு கவலை குடிகொண்டிருக்கும். அதனால் மனச்சோர்வு உண்டாகி உடலில் தெம்பு இல்லாமல் வித்தியாசமாகக் காட்சி அளிப்பீர்கள்.

ஐந்தில் இருந்த சனி பகவான் உங்களது கௌரவத்திற்கு எந்தப் பாதிப்பும் வராமல் காப்பாற்றி வந்தார். உங்களது கௌரவத்தையும் மதிப்பையும் காப்பாற்றிக் கொள்ள சில சமயம் தவிர்க்க முடியாத செலவுகளையும் செய்யும் அவசியம் ஏற்பட்டது. குடும்பத்தில் ஏற்பட்ட வைத்தியச் செலவுகளையும் சமாளித்தீர்கள். எடுத்த காரியத்தில் சில தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டாலும் விடாமுயற்சி செய்தீர்கள். நம்பிக்கை தளரவில்லை. உறவினர்களின் விமர்சனங்களையும் கண்திருஷ்டி, பொறாமை போன்றவற்றையும் தொல்லைகளையும் தாங்கிக் கொண்டீர்கள்.

இப்போது 6-ஆம் இடத்துக்கு வந்துள்ள சனி பகவான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நீங்கள் எடுத்துக் கொண்ட கடின முயற்சி களுக்கும் உழைப்புக்கும் வெற்றியைத் தேடித் தந்து உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார். எடுத்த காரியங்கள் எல்லாம் இனிது நிறை வேறும். தொடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றிபெறும். தொட்டது துலங்கும். பட்டது துளிரும்.

6-ஆம் இடம் நோய், வைத்தியச் செலவு, எதிரிகளைக் குறிக்கும் இடம். அங்கு சனி வருவதால் உடல்நலனில் சிற்சில தொந்தரவுகள் இருந்தாலும், அதற்காக செலவு செய்து நோயை நீக்கி சுகத்தை அடைய லாம். அதேபோல எதிரிகளையும் எளிதாக வெற்றி கொள்ளலாம். எதிரிகளே உங்களைக் கண்டு பயப்படும் அளவு பலவீனமாகிவிடுவார் கள். கடன் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றையும் தீர்த்து விடலாம். வம்பு வழக்கு - கோர்ட் கேஸ் ஆகியவை இருந்தாலும் அவற்றிலும் உங்களுக்குச் சாதகமான முடிவுகளே அமையும்.

குடும்பத்தில் இருந்துவந்த மருத்துவச் செலவினங்களும் நீங்கி குடும்பத்தார் அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நலமுடன் இருப்பார்கள். குடும்பத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாகும். அனைவரும் உங்கள் சொல்படி கேட்டு நடப்பார்கள். பணவரவும் அதிகரிக்கும். கையில் தாராளமாகப் பணப் புழக்கம் இருக்கும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி அலங்கரிக்கலாம்.

உங்களிடம் உதவிபெற்று உங்கள் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு, வெளியே போனவுடன் உங்களை எப்படிக் கவிழ்க்கலாம் என்று சதித்திட்டம் போடுகிறவர்களைச் சனி பகவான் சரியானபடி தண்டித்துவிடுவார். நீங்கள் உயர்நிலையை அடையும்போது உங்களுக்கு உண்மையானவர்கள் மட்டுமே உங்கள் அருகில் இருப்பார்கள். உங்களுக்குத் துரோகம் செய்தவர்கள் உங்கள் நிழலைக்கூட காணமுடியாதபடி ஒதுங்கிப் போய்விடுவார்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். சிலருக்கு கேட்ட இடத்தில் இடமாற்றமும் அமையும். தொழில் அல்லது வேலையில் அலைச்சல் இருக்கலாம். அலைச்சலுக் குத் தகுந்த ஆதாயமும் இருக்கும். அப்படி அலைச்சல் இருந்தால் அதுவும் ஒரு நன்மைக்கே என்று கருத வேண்டும். உங்களுடைய நீண்ட காலக் கனவுத் திட்டங்கள் ஒவ்வொன்றாக வெற்றியடையும். இதற்கு முன்பிருந்த ஆத்திரமும் அவசரமும் பதட்டமும் இனி இருக்காது! நிதானமும் பொறுமையும் கொண்டு விவேகமாகச் செயல்படுவதால் வெற்றி உங்களைத் தேடிவரும்.

பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முன்பைவிட இனி அதிக மதிப்பெண் பெற்று பெருமை சேர்ப்பார்கள்.

இளைய சகோதரர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படலாம். அவர்களுக்கு வயிறு, கிட்னி, கண் சம்பந்தமான கோளாறுகள் உண்டாகலாம். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் தானாகவே வந்து தங்களிடம் உதவி கேட்டு நிற்கலாம். எதையும் தீர யோசித்து முடிவெடுப்பது நல்லது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது பொதுவிதி என்றாலும், பாத்திரம் அறிந்து பிச்சை போட வேண்டும் என்பதும் விதிதான்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் நன்மையும் உதவியும் கிடைக்கும். கேட்ட இடத்தில் தாராளமாகப் பணமும் கடனும் கிடைக்கும். அந்தப் பணத்தைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தலாம் அல்லது புதிய கூட்டாளிகளைச் சேர்க்கலாம். சுபமங்கள விரயச் செலவுகளும் உண்டா கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். சிலருக்கு தெய்வ ஸ்தலங்களுக்குப் புனிதப் பயணம் செய்யும் யோகமுண்டாகும். குலதெய்வம் எதுவெனத் தெரியாமல் இருப்பவர்களுக்குக்கூட குலதெய்வ விவரம் தெரிய வரும். குலதெய்வ இருப்பிடம் போக முடியா விட்டாலும் இருக்கும் இடத்திலேயே சுவரில் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து வழிபட்டாலும் வாழ்க்கையில் வளமும் நலமும் உண்டாகும்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2009- செப்டம்பர் முதல் பத்து மாத காலம் சனி பகவான் மேஷ ராசிக்கு 5-க்குடைய சூரியன் சாரத்தில் சஞ்சரிப்பார். ஜாதக தசா புக்தி கள் யோகமாக இருந்தால் உங்களது திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறை வேறும். நீண்ட கால கனவுகளும் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் மனத் திருப்தியும் நிறைந்திருக்கும். நீங்கள் கடன் கொடுத்து நீண்ட காலம் வராமல் இருந்த பணம் வசூலாகும். அன்னிய இனத்த வரால் உதவியும் லாபமும் உண்டாகும். சிலசமயம் உங்கள் வளர்ச்சி யைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்படலாம். கண் திருஷ்டிக்கு ஆளாகலாம். அதற்காகத் தேவையான பரிகாரம் செய்து கொள்ளவும். ராஜாங்க காரியங்களிலும் அனுகூலமான பலனை எதிர்பார்க்கலாம்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2010- ஜுலை முதல் 14 மாதகாலம் சனி பகவான் மேஷ ராசிக்கு 4-க்குடைய சந்திரன் சாரத்தில் சஞ்சரிப்பார். ஜாதக தசா புக்திகள் பாதகமாக இருந்தால் தாயாரின் உடல்நிலை அல்லது தாய் வர்க்கத்தில் பீடை பிணி வியாகூலம் அல்லது குடும்பத்தில் வைத்தியச் செலவு போன்ற சங்கடங்கள் உண்டாகும். பூமி,வீடு, வாகனம் சம்பந்தமான ஏமாற்றமோ வீண் விரயமோ உண்டாகலாம். ஜாதக தசா புக்திகள் யோகமாக அமைந்தால் பூரண உடல்நலம், கல்வி முன்னேற்றம், ஆரோக்கியம், பூமி, வீடு, வாகன யோகம், சுப முதலீடு உண்டாகும். தாயின் ஆதரவையும் தாய்மாமன் உதவியையும் எதிர்பார்க்கலாம். சிலர் கடல் கடந்த பயணத் திட்டத்தையும் சந்திக்கலாம்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2011- செம்டம்பர் முதல் ஆறு மாதகாலம் கன்னிராசியில் சித்திரை நட்சத்திரத்தில் முன்பகுதி 2-ஆம் பாதம் வரை சனி சஞ்சாரம் செய்வார். ராசிநாதன் செவ்வாயின் சாரம் பெறுவதால் உங்களுடைய கௌரவமும் மதிப்பும் கூடும். சில காரியங்களில்- சில விஷயங்களில் முதலில் பிரச்சினைகள் உருவானாலும் பின்னால் அனுகூலமாகவும் நன்மையாக வும் முடியும். செவ்வாய் ராசிநாதன் என்பதோடு அட்டமாதிபதியும் ஆவார் என்பதால், சிலருக்கு இடப் பெயர்ச்சி அல்லது ஊர் மாற்றம், வேலை மாறுதல் உண்டாகலாம். அலைச்சலும் அதிகப் பிரயாசையும் ஒருபுறம் இருந்தாலும் அதனால் ஆதாயமும் நன்மையும் உண்டாகும். கடன் சுமையைக் குறைத்துவிடலாம்.

அசுவதி நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி கடன்களையும் உருவாக்கி கனவுகளையும் நனவுகளாக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கும். பூமி, வீடு, வாகன யோகம் அமையும். போட்டிகளில் வெற்றி உண்டாகும். வைத்தியச் செலவுகளுக்கு விடுதலை கிடைக்கும்.

பரணி நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி மகிழ்ச்சியையும் மனம் நிறைந்த வாழ்க்கையையும் தரும். இதில் பிறந்த பெண்களுக்கு புத்திர யோகமும் வாரிசு யோகமும் உண்டாகும். பூமி, வீடு, வாகன சம்பந்தமான யோகமும் அமையும். சிலருக்கு இடமாறுதலை ஏற்படுத்தும்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி தொழில், வாழ்க்கை இரண்டிலும் நல்ல முன்னேற்றம் தெரியும். சில நேரங்களில் பொருளாதாரத்தில் பற்றாக் குறை ஏற்பட்டாலும் கடன் உடன் கைமாற்று வாங்கி சமாளித்து விடலாம். பயணங்களினால் பலன் உண்டாகும்.

பரிகாரம்

நெல்லை மாவட்டம், கடையநல்லூர் அருகில் கிருஷ்ணாபுரம் சென்று ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சனேயருக்கு படிப்பாயச பூஜை செய்யவும். ராஜபாளையம் - தென்காசி பாதையில் கிருஷ்ணாபுரம் உள்ளது.

ரிஷபம்(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசி அன்பர்களே!

ரிஷப ராசியில் பிறந்த நீங்கள் புதிய நண்பர் களுடனோ அல்லது விருந்தாளிகளுடனோ திடீ ரென்று பழகுவது சிரமமே. பழகிவிட்டால் சகஜமாகப் பழகி மனதில் இடம் பிடித்து விடுவீர்கள். உங்களைப் புகழ்ந்து பேசினால் மயங்கி விடுவீர்கள். பிறருக்கு அடி பணிவது உங்களுக்குப் பிடிக்காத செயல். நேர்மை யுடன் வாழ்வதே உங்களுக்குப் பிடித்தமானதாகும். தர்க்கம், விதண்டாவாதம் செய்வதில் கெட்டிக்கார ரான நீங்கள் எந்தப் பக்கமும் பேசி வெற்றி பெறுவீர் கள். சாதுவான குணம் கொண்ட உங்களைச் சீண்டி விட்டால் பயங்கரமான கோபம் கொள்வீர்கள்! பார்ப் பதற்கு சாதாரண ஆளாக இருப்பினும், எதிர்த்தவர் களின் பலம் குறையும்வரை விரட்டி அடிப்பீர்கள். நடந்ததை உலகம் பூராவும் சொல்லிச் சொல்லி அவமானப்படுத்துவீர்கள். அதனால் யாருமே உங்களிடம் மோதிப் பார்க்க அஞ்சுவார்கள். வயதில் சிறுவராக இருப்பினும், அந்தஸ்தில் குறைந்து இருப்பினும் உங்களுடைய புத்திமதிகளை யாவரும் ஏற்று உங்களைப் போற்றிப் புகழ்ந்திடுவார்கள். உங்கள் கைராசியானது அடுத்தவர்களுக்கு மட்டுமே பலன் தரும்- பயன் தரும்! உங்களுக்கு அல்ல!

வாக்கு ஸ்தானம் புதன் என்பதால் சிரித்துப் பேசியே யாவரையும் கவர்ந்துவிடுவீர்கள். ஆடம்பரப் பிரியராக இல்லாவிட்டாலும் பார்வைக்கு செல்வந்தர் குடும்பத் தில் பிறந்தது போன்ற தோற்ற அமைப்பு கொண்டவ ராகக் காணப்படுவீர்கள். மிகவும் வெண்மையான உடைகளை அதிகம் விரும்புவீர்கள். பணத்தை அதிகம் செலவழிக்க மாட்டீர்கள். உங்களுடைய சகிப்புத்தன்மையும் பொறுமையுமே உங்களுடைய வெற்றிக்குக் காரணம். எக்காரியத்தை எடுத்தாலும்- அது மற்றவர்களுக்காக இருந்தாலும் சரி; உங்களுக்காக இருந்தாலும் சரி - அதில் உண்மையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். நீங்கள் மற்றவ ருடைய அபிப்பிராயத்திற்குச் செவிசாய்க்க வேண்டும். மற்றவர்களுக் காக உழைப்பதைவிட உங்களுக்காகவும் உழைக்க வேண்டும். கருத்து வேறுபாடு உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லுதல் வேண்டும். நீங்கள் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. இதுவரை உங்களுக்கு இருந்து வந்த அவப்பெயர் நீங்கி கௌரவமும், மரியாதையும் கூடும். புதிய தொழில் தொடங்க முனைவோர் முதலீடு இல்லாமலேயே தொழில் தொடங்க தாராளமாக வழிவகை பிறக்கும். வேலையில் மனதிற்குப் பிடித்த இடத்தில் மாற்றமும், பதவி உயர்வும் உண்டாகும். பலரும் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். கணவன் - மனைவி இடையே பிரச்சினைகள் தீர்ந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். அன்பு பெருகும். வாழ்க்கைத் துணையின் சொந்தங்களால் பல உதவிகள் கிடைக்கும்.

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ல் அர்த்தாஷ்டமச் சனியாக இருந்த சனி இப்போது 5-ஆம் இடத்தில் திரிகோணம் பெறுவார். நாலாமிடத் தில் இருந்த சனிபகவான் அதிக அலைச்சலையும் மன உளைச்சலையும் கொடுத்தார். வீடு, வண்டி வாகனம் ஆகியவற்றில் வீண் விரயங்களை யும் ரிப்பேர் செலவுகளையும் கொடுத்தார். உடல்நிலையிலும் பாதிப்பு உண்டானது. வயிறு சம்பந்தமான கோளாறுகளும் நரம்பு சம்பந்தமான கோளாறுகளும் ஏற்பட்டது. முதுகுத் தண்டுவடம், இடுப்பு சம்பந்தமான தொல்லைகளும் அறுவை சிகிச்சை செய்யும் அளவு பாதிப்பும் ஏற்பட்டது. அடிக்கடி வெளியூர் பயணங்களும் அதனால் கூட அவஸ்தைகளும் உண்டானது. எதிர்பாராத திருப்பங்களையும் சந்தித்த நிலை! தாயாரின் உடல்நிலையிலும் சங்கடம், பாதிப்பு உண்டானது. இருப்பிடம், செய்தொழில், உத்தியோகம் ஆகியவற்றில் நிலையான அமைப்பும் வருமான யோகமும் இருந்ததால்- பணவசதி தாராளமாக இருந்ததால் அர்த்தாஷ்டமச் சனியின் தொல்லைகளை யெல்லாம் தாங்கிக் கொண்டு சமாளிக்கும் சக்தி ஏற்பட்டது.

இப்போது சனிபகவான் உங்களது ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ய ஸ்தானத்துக்குப் பெயர்ச்சி ஆவதால் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள், சிக்கல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாகத் தீரும். குல தெய்வத்தின் அருளால் எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிப்பீர்கள். குலதெய்வ அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். இழந்த கௌரவத்தை மீண்டும் பெறுவீர்கள். மனதில் எண்ணிய காரியங்கள் யாவும் மனத்திருப்தியாக நிறைவேறும். மனதில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும்.

கன்னிச் சனி 11-ஆம் இடத்தைப் பார்ப்பதால் மூத்த சகோதர - சகோதரி வகையில் நன்மையும் உதவியும் கிடைக்கும். 10-க்குடையவர் 11-ஆம் இடத்தைப் பார்ப்பதால் செய்தொழிலில் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். புதிய திட்டங்கள் வகுத்து சொந்தத் தொழிலை விரிவுபடுத்தலாம். வேலை உத்தியோகத்தில் உங்களுக்கு அனுகூலமான திருப்பங்களும், மேலதிகாரிகளின் அனுசரணையும் ஆதரவும் பாராட்டும் கிடைக்கலாம்.

6-ஆம் இடத்துக்கு 12-ல் சனி வந்திருப்பதால் கடன் பிரச்சினைகள் தீரும். (கடன் விரயம் ஆகும்.) அதேபோல இதுவரை எதிரிகளால் இருந்த மறைமுகத் தொல்லைகளும் இடையூறுகளும் விலகிவிடும். வேலை இல்லாதிருந்தோருக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வேலை அமைப்பு உருவாகும். மனதில் நிலவிய கசப்பான நிகழ்ச்சியின் நினைவுகளை மறந்து தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். இதுவரை பதுங்கும் புலியாக ஒதுங்கியிருந்த நீங்கள் இனி பாயும் புலியாக மாறி சாதிக்கலாம். உங்களைவிட்டு விலகிச் சென்றவர்களும் தானாக வந்து நட்பு கொண்டாடுவார்கள். கருத்து வேறுபாடு காரணமாக பகையாக இருந்த வர்களும் மனம்மாறி உறவு கொண்டாடி வருவார்கள். புதியவர்களின் நட்பும் கிடைக்கும்; நட்பினால் நன்மையும் அனுகூலமும் இருக்கும்.

தாயாரின் உடல்நிலையில் இருந்த பாதிப்புகளும் நீங்கிவிடும்; இனி ஆரோக்கியமாக இருப்பார். பூர்வீகச் சொத்து விவகாரம், வில்லங்கம், பிரச்சினைகள் விலகி அதனால் பலன் அடையலாம். சொத்தில் ஒரு பகுதியை விற்பதால் லாபம் கிடைத்து கடன் பிரச்சினையும் தீர்த்துவிடலாம். சிலர் பழைய வண்டி வாகனங்களை நல்ல விலைக்கு விற்றுப் புதிய வாகனங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ரொக்கமாகவோ தவணையாகவோ புதிய வாகனங்களை வாங்கலாம். தாய்வழிச் சொந்தம் - தாய்மாமன் வகையில் அனுகூலமும் ஆதாயமும் நன்மையும் உண்டாகும். 5-ஆம் இடம் மாமன் ஸ்தானம், பாட்டனார் ஸ்தானம். பாட்டனார் வகையிலும் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

ரிஷப ராசிக்கு யோக ஆதிபத்தியம் பெறும் சனி (தர்மகர்மாதி பத்தியம் 9, 10-க்குடையவர்) 5-ஆம் பாவத்துக்கு 5, 6-க்குடையவர் என்பதால் ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் யோகத்தைச் செய்வார். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் அவரே அந்த பாவத்துக்குக் கெடுதலையும் செய்வார். தீக்குச்சி விளக்கை ஏற்றவும் பயன்படும்- குடிசையை எரிக்கவும் பயன்படும். அது பயன்படுத்து கிறவரின் தன்மையைப் பொறுத்தது.

குழந்தைகளுக்கு மருத்துவச் செலவுகளும் நீர் சம்பந்தமான நோய்களும் உண்டாக வாய்ப்பு உண்டு. ஆதலால் குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்வது அவசியம்! சிறு நோய் நொடி என்றால்கூட உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது. பெரிய பிள்ளைகளால் சிறுசிறு தொல்லைகள் உண்டாகும். என்றாலும் சில சமயம் அது அன்புத் தொல்லையாக அமையலாம். உடல்நலத்துக்காகப் பத்தியம் காப்பதுபோலவும் அமையலாம்.

தாயாருக்கு சனிப் பெயர்ச்சியின் முற்பகுதி சிரமமாக இருந்தாலும் பிற்பகுதி சிறப்பாக இருக்கும். புனித ஸ்தலங்களுக்கு தெய்வத் திருத்தல வழிபாடு, தீர்த்த யாத்திரை சென்றுவரும் யோகம் உண்டாகும். ஞானிகள், சாது சந்நியாசிகள், மத குருமார்களின் ஆசியைப் பெறும் வாய்ப்பும் கிடைக்கும். தந்தைக்கும் உத்தியோகத்தில் உயர்வும் முன்னேற்றமும் உண்டாகும். தொழில் துறையிலும் லாபம் உண்டாகும். புதிய கௌரவப் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடப் பெயர்ச்சியும் ஏற்படலாம். அதற்காக தவிர்க்க முடியாத அலைச்சலை யும் பிரயாசையையும் சந்திக்க நேரும். அலைச்சல் இருந்தாலும் அதற்குத் தகுந்த ஆதாயமும் இருக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும்.

கடன்வகையில் (நீங்கள் கொடுத்த கடன்) உங்களுக்கு வரவேண்டி யவை- பாக்கி சாக்கிகள் வசூலாகும். அன்னிய மதம், அன்னிய இனத்தவரால் அனுகூலம் எதிர்பார்க்கலாம். சனிபகவான் 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பணத்தட்டுப்பாடு வராது. 2-ஆம் இடமான மிதுனத்துக்கு சனி 8, 9-க்குடையவர். 2-ஆம் இடமும் புதன்வீடு. சனி நிற்கும் 5-ஆம் இடமும் புதன்வீடு. அத்துடன் 8-க்குடையவர் 5-ல் நின்று 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் அதிர்ஷ்டமான வழிகளில் தன வரவுக்கு இடமுண்டாகும். வக்கீல்கள், வாத்தியார்கள், கமிஷன் புரோக்கர்கள், மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ், எல்.ஐ.சி. ஏஜெண்டுகள் போன்ற வாக்கினால் ஜீவனம் செய்கிறவர்களுக்கு இக்காலம் அபரிமிதமான தனயோகம் உண்டாகும்.

10-ஆம் இடத்துக்குரிய சனி, அந்த ஸ்தானத்துக்கு 8-ல் மறைவதால் செய்யும் சொந்தத் தொழிலில் சிறுசிறு பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும். அரசு அதிகாரிகளின் விசாரணைகளைச் சமாளிக்க வேண்டும். இருந்தாலும் 10-ல் குருவும் ராகுவும் சேரும் காலம் சனி தோஷ வேகம் குறைந்துவிடும். எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அவற்றைப் பணத்தாலும் அரசியல் பிரமுகர்களாலும் சமாளித்துவிட லாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுக்குக் கீழ் வேலை செய்கிறவர்களிடம் சுமூகமாகவும் அரவணைத்தும் நடந்து கொள்வது நல்லது. ஏனெனில், சமயத்தில் உங்களிடம் காப்பி, டீ வாங்கிக் குடித்துவிட்டே மேலதிகாரியிடம் உங்களைப் பற்றித் தவறான தகவல் களைக் கொடுத்து உங்கள் முன்னேற்றத்துக்குத் தடை ஏற்படுத்தலாம்.

சனிபகவான் 3-ஆம் பார்வையாக 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால், 7-ஆம் இடத்துக்கும் ரிஷப ராசிக்கும் சனி யோகாதிபதி என்பதால், திருமண முயற்சிகளில் ஆரம்பத்தில் தடை தாமதம் ஏற்பட்டாலும் முடிவில் சுபமாக நிறைவேறும். இதை எப்படி நடத்தப் போகிறோம் என்று ஆரம்பத்தில் மலைப்பாகத் தெரியும் பல சம்பவங்கள், நடந்து முடிந்தபிறகு அற்புதமாக இருந்தது என்று மற்றவர்களின் பாராட்டுக் கிடைக்கும்போது, எல்லாம் தெய்வத்தின் கருணை என்று நன்றி செலுத்துவீர்கள். அப்படித்தான் நினைக்க வேண்டும். அதைவிட்டு, "என் சாமர்த்தியம்' என்று தற்பெருமைக்கு அடிமையாகிவிட்டால் சனி பகவானின் சாபத்துக்கும் கோபத்துக்கும் ஆளாக நேரிடும்.

திருமணம் ஆனவர்களுக்கு மனைவியால் கணவனுக்கும் - கணவனால் மனைவிக்கும் லாபமும் நன்மையும் அனுகூலமும் உண்டாகும். அவர்கள் பேரில் சொத்து சுகம் வாங்கும் யோகமும் அமையும். புதிய தொழில் ஆரம்பிக்கும் யோகமும் ஏற்படும். அல்லது தொழில் துறையில் கணவன் அல்லது மனைவியைக் கூட்டாக இணைத்து ரிக்கார்டு செய்யும்படி ஆடிட்டர் ஆலோசனையைப் பெறலாம். கணவன்- மனைவிக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்த தம்பதிகள் இணைந்து வாழலாம்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2009- செப்டம்பர் முதல் சுமார் பத்து மாதகாலம் சனி பகவான் ரிஷபராசிக்கு 4-க்குடைய சூரியன் சாரத்தில் சஞ்சரிப்பார். உடல்நலமும் மனநலமும் சிறப்பாக இருக்கும். செய்தொழிலில் நல்ல முன்னேற்றமும்- புதிய கிளைகள் தொடங்கவும் வாய்ப்பு உள்ளது. வேலையில் ஆர்வமும் அக்கறையும் உண்டாகும். பாராட்டும் உயர்வும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். தடைகள் விலகும். தகப்பன் - பிள்ளைகள் உறவில் நெருக்கமும் இணக்கமும் உண்டாகும். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியமான ஆடம்பர அலங்காரப் பொருள்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தாயார் வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். வாகனப் பரிவர்த்தனை யோகமும் அமையும்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2010- ஜூலை முதல் 14 மாதகாலம் சனி பகவான் ரிஷபராசிக்கு 3-க்குடைய சந்திரன் சாரத்தில் சஞ்சரிப்பார். இக்காலம் சகோதர - சகோதரி வகையில் நிலவிய சஞ்சலங்களும் சச்சரவுகளும் விலகி சமரச உடன்பாடு நிலவும். அன்னிய நண்பர்களின் உதவியும் சலுகைகளும் சகாயமும் எதிர்பார்க்கலாம். 3-ஆம் இடம் என்பது 4-ஆம் இடத்துக்கு விரய ஸ்தானம் என்பதால், சிலருடைய உடல் நலத்தில் பிரச்சினை உருவாகும். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்ளலாம். அல்லது தன்வந்திரி மஹா மந்திரத்தை தினசரி ஜெபம் செய்வதோடு, ஒரு நோட்டில் எழுதி வாலாஜாபேட்டையிலுள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்துக்கு அனுப்பலாம். கடகம் - ரிஷப ராசியின் 7-ஆம் இடத்துக்குத் திரிகோணம் என்பதால் திருமண முயற்சிகள் கைகூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2011- செப்டம்பர் முதல் ஆறு மாத காலம் கன்னிராசியில் சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்வார். சித்திரை செவ்வாயின் நட்சத் திரம். ரிஷப ராசிக்கு செவ்வாய் 7, 12-க்குடையவர். 7-க்கு 11-ல்- 12-க்கு 6-ல் சனி இருப்பதாலும், 7-ஆம் இடத்தை சனி பார்ப்பதாலும் திருமணம் ஆகவேண்டியவர்களுக்குத் திருமண யோகமும் திருமணம் ஆனவர்களுக்கு மனைவி அல்லது கணவர் வகையில் யோகமும் அதிர்ஷ்டமும் உண்டாகும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் குடும்பப் பிரச்சினையும் குழப்பமும் ஏற்படலாம். என்றாலும் ரிஷபராசிக்கு சனி யோகாதிபதி என்பதால், "கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்' என்ற அடிப்படையில் முடிவில் நல்லதாக அமையும். சுபவிரயம் எனலாம். அதன் வகையில் சுபச்செலவு வரலாம். அதற்காகக் கடன் வாங்கும் அவசியமும் ஏற்படலாம்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி ஆரம்பத்தில் தடையும் தாமதமும் கொடுத்தாலும் பிற்பகுதியில் வெற்றியும் நிறைவையும் ஏற்படுத்தும். அலைச்சலும் திரிச்சலும் இருக்கும். அதனால் பயனும் பலனும் உண்டு. தேக நலனில் பிரச்சினை ஏற்பட்டால் தன்வந்திரியை வழிபடவும்.

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி செல்வாக்கு, புகழ், கீர்த்தி, கௌரவத்தை உண்டாக்கும். சமுதாயத்தில் வி.ஐ.பி. அந்தஸ்தை உருவாக்கும். அரசியல் ஈடுபாடு அல்லது முக்கிய திருப்பணி பதவிகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படுத்தும்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி குடும்பத்தில் மகிழ்ச்சியையும் திருப்தியையும் ஏற்படுத்தும். செல்வாக்கு சிறக்கும். பதவி யோகமும் தனயோகமும் உண்டாகும். சிலருக்கு தசா புக்திகள் மோசமாக இருந்தால் உடல்நிலை பாதிக்கும். அதற்குரிய பரிகாரத்தைச் செய்வது நல்லது.

பரிகாரம்

நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் என்ற ஊரில் (சாமியார்கரடு ஸ்டாப்) தத்தகிரி முருகன் கோவில் உள்ளது. இங்கு ஏழரை அடி உயர சனியும் அவருக்கு எதிரில் ஒன்பது அடி உயரத்தில் பஞ்சமுக ஆஞ்சனேயர் சந்நிதியும் உண்டு. அங்கு சென்று வழிபடலாம்.

மிதுனம்(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசி அன்பர்களே!

மிதுனராசியில் பிறந்த நீங்கள் கோபம் வரும்போது கூட சிரித்துக் கொண்டே இருப்பீர்கள். ஆனால் மனதில் பழி உணர்ச்சியைப் பதித்துக் கொள்வீர்கள். குதர்க்கமும் கிண்டலும் கொண்ட வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவீர்கள். தந்திரமாகப் பேசும் காரியவாதி. நீங்கள் பிறரை எளிதில் நம்பமாட்டீர்கள். சந்தேகப் பேர்வழி. நயமாக - பணிவாகப் பேசியே உங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். வெளித் தோற்றத்திற்கு அப்பாவிபோல இருப்பினும் மனதில் உயர்ந்த ஹீரோ என்றும்; புத்திசாலி என்றும் நினைப் பீர்கள். மனம் ஒரு நிலையில் இல்லாததைப் போல சொன்ன சொல்லையும் காப்பாற்ற மாட்டீர்கள்! எதிலும் புதுமை தேவை என்று அடிக்கடி கூறுவீர்கள். உடம்பு என்றும் இளமையுடன் இருக்க பயிற்சி செய்வீர்கள்.

பெண்களிடம் பேசுவதற்கும் அவர்களுடைய நட்பைப் பெறுவதற்கும் முயற்சி செய்து வருவீர்கள். அவர்களை நம்பிக்கைக்கு உரியவராகச் செய்வதிலும் கெட்டிக்காரர்தான். பல பெண்களின் நட்பும் அவர் களால் பல ஆதாயங்களையும் பெறுவீர்கள். நீங்கள் யாரையும் எளிதில் நம்ப மாட்டீர்கள். வெளியில் பார்ப்பதற்கு தைரியசாலி போல தோன்றினாலும் மனதுக்குள் கோழை! சிறிய விஷயமானாலும் பிறர் உதவியை நாடுவீர்கள். மற்றவரின் அபிப்பிராயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்வீர்கள். ஆனால் உங்க ளுடைய எண்ணத்தை யாரிடமும் கூறமாட்டீர்கள். நீங்கள் மழுப்பிப் பேசியே காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். உங்களால் கோபத்தை மட்டும் அடக்க முடியாது. எவ்விஷயத்தையும் தோண்டித் துருவி ஆராயும் மனம் கொண்டவர். ஆனால் உங்கள் மனதில் சந்தேகமும் பயமும் எப்பொழுதும் இருக்கும். 3-ல் இருந்த சனியால் மனதில் இனம்புரியாத கவலைகள், வேதனைகள் இருந்தன. உடலிலும் சோர்வு, மந்தநிலை போன்றவை ஏற்படலாம். பணப்பிரச்சினை இருந்தது. மருத்துவச் செலவு, குடும்பத்திற்காகத் தேவையில்லாத வீண் செலவுகள் அடுத்தவர்க்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டு அதனால் பல வகையாலும் விரயங்கள் - இப்படிப் பல சிரமத்திற்கு உள்ளானீர்கள். எங்கும் யாருக்கும் வாக்குறுதி அளிக்காதீர்கள். அதேபோல் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடக்கூடாது. மற்றவர்களுடைய பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது நல்லது. புதிய முறைகளைக் கையாண்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். யாருக்கும் பாதகம் இல்லாமல் பேசுவீர்கள். தந்தையால் அனுகூலமும் பூர்வீகச் சொத்துகளும் கிடைக்கும். வாங்கிய இடத்தில் கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துவிடுவீர்கள்.

இனி சனி பகவான் உங்களது ராசிக்கு 4-ஆம் இடத்திற்கு வருகிறார். இது அர்த்தாஷ்டமச் சனி எனப்படும். 4-ஆம் இடத்தில் சனி பகவான் வருவதால் உடல் நலக்குறைவும் நரம்பு சம்பந்தமான கோளாறுகளும் ஏற்படும். தாயாருக்கு மனச் சஞ்சலங்களும் மருத்துவச் செலவுகளும் ஏற்படும். மனதிற்குள் இனம் புரியாத பயமும், வேலையில் சிறுசிறு பிரச்சினைகளும் உண்டாக வாய்ப்பு உண்டு. வீடு, வண்டி வாகனம் ஆகியவற்றில் பழுதுகள் ஏற்பட வாய்ப்புண்டு. வேலை தேடிக் கிடைக்காமல் அலைக்கழிக்க வைக்கும்.

மூத்த சகோதரத்திற்குப் பிரச்சினைகளும் சிக்கல்களும் ஏற்பட்டுத் தீரும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனதில் ஏதேனும் ஒரு கவலை குடிகொண்டிருக்கும். இதனால் மனச்சோர்வு உண்டாகி உடலிலும் தெம்பு இல்லாமல் மிகவும் மெலிந்து காணப்படுவீர்கள். உடலில் என்ன நோய் உள்ளது என்பதை அறிய முடியாமல் இருக்கும். குடும்பத்தில் அன்னியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சொன்ன வாக்கைக் காப்பாற்ற முடியாத சூர்நிலை உண்டாகும். பூர்வீகச் சொத்தை விரயம் செய்யும் நிலை உண்டாகும். இல்லையெனில் பூர்வீகச் சொத்தில் வில்லங்கமும் வம்பு, வழக்குகளும் உண்டாகும். வீடு கட்டும் பணி நடந்து கொண்டிருந்தால் அதில் காலதாமதம் உண்டாகும். கடன் கொடுத்த இடத்தில் பணம் சீக்கிரம் வந்து சேராது. முன்பு உதவி செய்தவர்கள்கூட தற்போது உதவி செய்யத் தயங்குவார்கள். உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் மந்த நிலையும், இடம் மாறி வேலை செய்யும் சூழ்நிலையும் உண்டாகும். மேலதிகாரிகள் உங்களை வேலையில் இருந்து விலக்கும் சூழ்நிலையும் அல்லது அவமரியாதை ஏற்படும் நிலையும் உண்டாகும். தீய பழக்க - வழக்கங்களுக்கு அடிமையாகும் சூழ்நிலை உண்டாகும்.

கணவன் - மனைவி இடையிலான உறவு சுமூகமாக இருந்துவரும். குடும்பத்தில் சிறுசிறு பூசல்களும், பிள்ளைகளால் விரயச் செலவும் உண்டாகும். நீங்கள் அமைதியாக இருந்தாலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உங்களிடம் வலிய வந்து பிரச்சினையை உருவாக்குவார் கள். ஆதலால் மற்றவர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது சிறந்தது. தெய்வ வழிபாட்டை விடாமல் தொடர்ந்து செய்து வருவது நல்லது. தாயின் உடல் நலனில் அக்கறை தேவை. குடும்பத்தில் நெருங்கிய உறவினரைப் பிரிய அல்லது இழக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நிம்மதியான உறக்கம் என்பது குறைவே!

சனி பகவான் உங்களுடைய ராசிக்கு 4-ஆம் இடத்துக்கு வந்து 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் செய்தொழிலில் சிறப்பும், நிலையான தொழில் அமையக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். தொழிலில் லாபமும்- அதே சமயம் அந்த லாபம் முழுதும் கடனை அடைக்கவே சரியாக இருக்கும். மீதி என்று எதுவும் இருக்காது. சிலர் கடன் வாங்கி வீட்டிற்குத் தேவை யான ஆடம்பரப் பொருட்களை வாங்குவார்கள். கல்வியில் சிறிது தடை உண்டாக வாய்ப்புண்டு. பிள்ளைகள் படிப்பில் கவனம் இல்லாமல் விளையாட்டு, பொழுதுபோக்கு என்று ஊர் சுற்ற வாய்ப்புண்டு. படிப் பில் மந்தத்தன்மையும் மறதியும் உண்டாகும். கவனமாகப் படித்தால் வெற்றி நிச்சயம். வேலையில் உள்ளவர்கள் மேலதிகாரியிடம் பகைமை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பொதுவாக சனி பகவான் பார்க்கும் இடத்தைக் கெடுப்பார் என சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி சனி பகவான் மூன்றாம் பார்வையாக ஆறாமிடத்தைப் பார்ப்பதால் வம்பு, வழக்கு, கடன், பகை, நோய் ஆகியவற்றை அழிப்பார் என்று பொருள். அதாவது கடன் ஏற்பட்டால்தானே கடன் நிவர்த்தி ஆகும். வம்பு, வழக்கு போன்றவை உண்டாகி பின் மறையும். இருக்கின்ற நோயும் தீரும்! எதிரிகள் தானே பயந்து ஒதுங்கிவிடுவார்கள். சிலருக்கு உத்தி யோகத்தை விட்டு சுயமாகத் தொழில் தொடங்கும் நிலையும் உண்டா கும். தொழிலுக்காக எங்கு கடன் கேட்டாலும் தயங்காமல் தருவார்கள்.

சனி பகவான் ஏழாம் பார்வையாகப் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் தொழிலில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் பலரின் பாராட்டும் கிடைக்கும். இருப்பினும் சிலர் உங்கள்மீது பொறாமை கொண்டு உங்களைப் பற்றி மேலதிகாரிகளிடம் அல்லது முதலாளிகளிடம் தவறான தகவல்களைத் தருவார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது போல் நடக்காமல் உங்களைப் பற்றிய நம்பிக்கை அதிகரிக்கும். இது உங்கள்மீது பொறாமை கொண்டவர்களுக்குத் தலைகுனிவை உண்டாக்கிவிடும். சனிபகவான் பத்தாம் பார்வையாக உங்களது ராசியைப் பார்ப்பதால் உங்கள் உடல்நலனில் பாதிப்பு உண்டாகலாம். எந்தச் செயலையும் உடனடியாகச் செய்து முடிக்க முடியாமல் மந்தத் தன்மையுடன் காணப்படுவீர்கள். பல் சம்பந்தமான நோய் உண்டாக வாய்ப்புண்டு. எப்பொழுதும் ஏதாவது ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

மிதுன ராசிக்கு 3-க்குடைய சூரியன் சாரத்தில் 2009- செப்டம்பர் முதல் சுமார் பத்து மாத காலம் சனி சஞ்சாரம் செய்வார். தொழில் ஸ்தான மான மிதுனத்துக்கு 6-க்குடையவர் சூரியன். அவர் சாரம் பெறுவதால் தொழில் துறையில் தொய்வு நிலையும் மந்தகதியும் ஏற்படும். போட்டி பொறாமைகளைச் சந்திக்கக்கூடும். இருப்பிடத்திலும் சச்சரவுகள் தோன்றி அதிருப்தி அடையச் செய்யும் கடன் பெரும் பாதிப்பை உண்டாக்காது என்றாலும், மனதுக்குப் பாராமாகத் தோன்றும். வாக்கு நாணயத்தைக் காப்பாற்ற வேண்டுமே என்ற கவலையை உண்டாக்கும். சூரியன் வீடான சிம்மராசிக்கு 2-ல் சனி நிற்பதால் பொருளாதாரத் தட்டுப்பாடு இல்லாமல் பணவரவு - செலவு தாராளமாக அமையும். சனி நிற்கும் கன்னிராசிக்கு 5, 6-க்குடையவர் என்பதால் மனதில் வகுத்த திட்டங்கள் நிறைவேறும்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2010- ஜூலை முதல் 14 மாதங்கள் சனி பகவான் மிதுனராசிக்கு 2-க்குடைய சந்திரன் சாரத்தில் சஞ்சாரம் செய்வார். சனி நிற்கும் கன்னிராசிக்கு சந்திரன் 11-க்கு உடையவர். எனவே தாராளமான வரவு- செலவு இயக்கமும் பணப்புழக்கமும் உண்டாகும். போட்டி பொறாமைகளையும் எதிர்ப்பு இடையூறுகளையும் ஜெயித்து வெற்றி பெறலாம். மூத்த சகோதரர், இளைய சகோதரர் வகையில் நன்மைகளும் அனுகூலங்களும் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் சொல்வாக்கு இனி செல்வாக்குப் பெறும்! சந்திரன் தாயார் கிரகம், தன் உடலைக் குறிக்கும் கிரகம். எனவே தாயார் அல்லது தன் சரீர இயக்கத்தில் சிறுசிறு சங்கடங்களைச் சந்திக்க நேரும்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2011- செம்டம்பர் முதல் ஆறு மாத காலம் சனி பகவான் மிதுன ராசிக்கு 6, 11-க்குடைய செவ்வாயின் சாரத்தில் சஞ்சரிப்பார். சனி 6-ஆம் பாவத்துக்கு பதினொன்றிலும், 11-ஆம் பாவத்துக்கு ஆறிலும் இருக்கிறார். அதனால் கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி, சத்ருஜெயம் ஆகிய நற்பலன்களைத் தருவார். இவை எல்லாம் முதலில் உண்டாகி பிறகு அவை எல்லாம் நிவர்த்தி ஆகும். செய்முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் உண்டாகும். தொழில் வகையில் லாபம் கிடைக்கும். பாடுபட்டதற்குப் பலன் உண்டாகும். வாழ்க்கையில் இதுவரை நீங்கள் அனுபவித்த வேதனைகளுக்கும் சோதனைகளுக்கும் விடிவுகாலம் ஏற்படப் போகிறது. வாழ்க்கையில் இதுவரை வீசிய புயல் அடங்கி புயலுக்குப்பின் அமைதியாக - தென்றல் தவழும்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி போட்டி பொறாமைகளையும் எந்தக் காரியத்தைத் தொட்டாலும் தடையும் தாமதமும் உண்டாக்கினாலும், உங்கள் விடாமுயற்சியினால் படிப்படியாக முன்னேறி காரியத்தை நிறை வேற்றலாம். உற்றார்- உறவினர், சுற்றத்தாரின் திருஷ்டிகளைச் சமாளிக்க வேண்டும். எதிர்பாராத வைத்தியச் செலவுகளையும் சந்திக்க நேரும்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி ஆரம்பத்தில் வீண் கவலை, சஞ்சலம், ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும் அடுத்து மகிழ்ச்சியையும் வெற்றியும் உண்டாக்கி சமப்படுத்திவிடும். பொருளாதாரத்தில் நெருக்கடி இருக்காது. ஆனால் ஈகோ - கௌரவப் போராட்டம் இருக்கும்.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி தெய்வ பலத்தாலும் நம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் நினைத்ததை நிறைவேறச் செய்யும். கடல் கடந்த பயண வாய்ப்பும் அதனால் நன்மையும் உண்டாகும்.

பரிகாரம்

தேனி- சின்னமனூர் அருகிலுள்ள குச்சனூர் சென்று சனி பகவானை வழிபடவும். அர்த்தாஷ்டமச் சனி தோஷம் விலகும்.

கடகம்(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசி அன்பர்களே!

கடக ராசியில் பிறந்த நீங்கள் சுறுசுறுப்பு கொண்ட வர். உங்களை எளிதில் யாரும் ஏமாற்ற முடியாது. விழிப்புணர்ச்சியுடன் இருப்பீர்கள். எவ்வளவு நஷ்டம், கஷ்டம் வந்தாலும் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காத பிடிவாதக்காரர். கூட்டாளி சேர்க்கையால் புதிய பழக்க- வழக்கங்களைக் கற்றுக் கொண்டு சிலகாலம் போதை வஸ்துகளுக்கு அடிமையாவீர்கள். பிறந்த இடம் விட்டு வனவாசம் மாதிரி வெளியிடத் தில் வாழ்வீர்கள். அப்படி வாழ்வதே முன்னேற்றம் தரும்! இளமைக் காலத்தில் கல்வி தடைப்படும். சிறப்பாகப் பயில இயலாது; பயின்றாலும் பலன்கள் இராது. பிறகு படிப்பைத் தொடரலாம். சகோதரர்களுடன் இளமை யில் ஒற்றுமையுடன் வாழ்வீர்கள். ஆனால் காலப்போக் கில் பண விவகாரத்தில் பிரிவு ஏற்பட்டு பிறகு ஒன்று சேர்வீர்கள். அன்னையின் அரவணைப்பு இளமைக் காலம் வரை தொடரும். உங்களுக்கென்று வாழ்க்கை ஏற்பட்டு தாய், தகப்பன் ஒற்றுமை குறைந்து தனிக்குடித் தனம் அமையும்போது வேறுபடும். தந்தையை விட்டுப் பிரிந்து வாழ்வீர்கள். புத்திர விருத்தி உண்டு. அவர்களிடம் சுயநலமும் அவசர புத்தியும் கொண்ட சிக்கனவாதி எனப் பெயர் வாங்குவீர்கள். நீங்கள் பெற்ற புகழ், பெயர், அந்தஸ்தை உங்கள் வாரிசுகளால் பெற முடியாது. எந்தக் குடியில் பிறந்திருந்தாலும் மக்கள் மத்தியில் நன்கு தெரிந்தவர்களாக இருப்பீர்கள். வெளியூர் பயணங்கள் செய்ய ஆர்வம் கொண்டிருப்பீர் கள். மக்களுக்குப் பொதுத் தொண்டு செய்யவும், பொதுமக்களிடையே கலந்து உறவாடவும் விரும்புவீர் கள். ஊருக்காக உழைப்பவர் நீங்கள்! உயர்ந்த கல்வி இல்லை என்றாலும், அறிவு, திறமை, ஞானம் இயற்கை யாகவே பெற்றிருப்பீர்கள். உங்களுக்கு ஞாபகசக்தி அதிகம். நீங்கள் எக்காரியத்தையும் விரைவாக முடிப்பீர்கள். எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்தாலும் அதைச் சுலபப் படுத்தி சீக்கிரம் முடிப்பீர்கள். நீங்கள் எக்காரியத்தைத் தொடங்கினாலும் ஆரம்பத்தில் தோல்வி அடைந்தாலும் விடாமல் அதீத முயற்சி செய்து அக்காரியத்தை முடித்து வெற்றி அடைவீர்கள். எவ்விஷயத்தையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர். ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன் பல முறை தீர ஆலோசனை செய்து அக்காரியத்தில் இறங்குவீர்கள். அப்படி இறங்கிவிட்டால் அக்காரியத்தை முடிக்கும் வரை தூக்கம் வராது. எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் துணிந்து நின்று வெற்றி காண்பீர்கள்.

இனி சனி பகவான் உங்களது ராசிக்கு 2-ஆம் இடத்தில் இருந்து 3-ஆம் இடத்துக்கு வருவது நல்ல யோகம். நன்மைகள் கிடைக்கும்! தைரியமும் நம்பிக்கையும் கூடும். எந்தக் காரியத்தை எடுத்தாலும் அதை நிறைவேற்றும்வரை ஓயமாட்டீர்கள்! வசதி வாய்ப்பு அதிக மாகும். நண்பர்கள், உறவினர்கள் நெருங்கி வருவார்கள். இதுவரை உங்களுக்கு இருந்த அவப்பெயர் நீங்கி கௌரவமும் மரியாதையும் கூடும். புதிய தொழில் தொடங்க முனைவோர் முதலீடு இல்லாமலேயே தொழில் தொடங்க தாராளமாக வழிவகை பிறக்கும். வேலையில் மனதிற்குப் பிடித்த இடத்தில் மாற்றமும், பதவி உயர்வும் உண்டாகும். பலரும் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். கணவன் - மனைவி இடையே பிரச்சினைகள் தீர்ந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். அன்பு பெருகும். வாழ்க்கைத் துணையின் சொந்தங்களால் பல உதவிகள் கிடைக்கும். நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் ஆபரண- ஆடை சேர்க்கை உண்டாகும். இதனால் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மிக விரைவாகத் தடையின்றி நடக்கும். தன - தான்ய விருத்தியும் உண்டாகும். எங்கு சென்றாலும் மதிப்பும், மரியாதையும் கூடும். திருமணம் ஆகாதவர் களுக்குத் திருமணம் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பெற்றோர்களுக்குப் பெருமை தேடித் தருவார்கள். சிலருக்கு (படிக்கும் மாணவர்களுக்கு) உடல்நலக் குறைவால் படிப்பில் நாட்டம் செலுத்த முடியாமல் கல்வியில் தடை உண்டாகவும் வாய்ப் புண்டு. தெய்வ நம்பிக்கை அதிகமாகும். போட்டி, பந்தயம் போன்றவற் றில் உங்களுக்குச் சாதகமான முடிவுகளே ஏற்படும். பிற மதத்தவரால் நன்மைகன் உண்டாகும். சுகமான தூக்கமும் திருப்தியான போஜனமும் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். வாகனப் பரிவர்த்தனையும் ஏற்படலாம். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வருவார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும்.

பதவி உயர்வை எதிர்பார்த்திருப்பவர்களுக்

Edited by jhansirany

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.kuraltvinfo.com/eelam-prabha.html

முதல் பக்கம் » செய்திகள் » ஈழத்துச் செய்திகள் »

தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மையான ஜாதக அடிப்படையில் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மைகளை இங்கே கூறுகிறோம்.

பிறந்தநாள் : 26-11-1954.

பிறந்த நேரம் : பகல் 12.00 மணி, 02 நிமிடம்.

பிறந்த இடம் : யாழ்ப்பாணம் அருகிலுள்ள கிராமம்.

ஜென்ம லக்னம் : கும்பம்.

ஜென்ம ராசி: விருச்சிகம்.

ஜென்ம நட்சத்திரம் : கேட்டை 1-ஆம் பாதம்.

திதி: பிரதமை திதி.

ஜெயவருடம், கார்த்திகை மாதம், 11-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.

பாதசார விவரம்

அனுஷம் 3-ல் சூரியன்.

கேட்டை 1-ல் சந்திரன்.

அவிட்டம் 3-ல் செவ்வாய்.

விசாகம் 2-ல் புதன்.

பூசம் 2-ல் குரு (வக்ரம்).

விசாகம் 2-ல் சுக்கிரன் (வக்ரம்).

விசாகம் 1-ல் சனி.

பூராடம் 1-ல் ராகு.

திருவாதிரை 3-ல் கேது.

மூலம் 3-ல் மாந்தி.

அவிட்டம் 3-ல் லக்னம்.

ஜனன கால மகாதசை - புதன் மகாதசை இருப்பு: 14 வருடம், 07 மாதம், 13 நாட்கள்.

இந்தக் கணிப்பை எழுதிய நாள்: 21-05-2009. அன்று பிரபாகரன் வயது 54, ஐந்து மாதம், 25 நாள்.

தற்போது சந்திரன் மகாதசை- 07-07-2002 முதல் 07-07-2012 வரை நடக்கிறது.

இன்னும் மூன்று வருடம், ஒரு மாதம், 18 நாட்கள் சந்திர தசை பாக்கி உள்ளது.

சந்திர தசையில் புதன் புக்தி: 07-05-2008 முதல் 07-10-2009 வரை.

கேது புக்தி: 07-10-2009 முதல் 07-05-2010 வரை.

சுக்கிரன் புக்தி: 07-05-2010 முதல் 07-01-2012 வரை.

சூரியன் புக்தி: 07-01-2012 முதல் 07-07-2012 வரை.

07-07-2012-ல் சந்திர தசை முடிகிறது.

சந்திர தசையில் புதன் புக்தியில் அந்தரங்கள் முறையே-

08-05-2009 முதல் 17-07-2009 வரை குரு அந்தரம்.

17-07-2009 முதல் 07-10-2009 வரை சனி அந்தரம்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 என்பதும்; அவருக்கு கேட்டை நட்சத்திரம் என்பதும் நூறு சதவிகிதம் உண்மையானது!

கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்- பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954, பகல் 12.00 மணி, 02 நிமிடம் என்றும்; பிரபா கரனின் நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, யாழ்ப்பாணம் அருகில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார். இந்த விவரங் களைக் கொண்டு, சரியான விவரம் தானா என்று உறுதி செய்து கொண்டு தெளிவாகக் கணிக்கப் பட்ட ஜாதகம் இது.

பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற - மிகவும் விசேஷமான ஜாதகம்!

பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் "தனித் தமிழீழம்' என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.

பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.

07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ்வாய் கிரகம்தான்.

பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள்.

Edited by jhansirany

  • கருத்துக்கள உறவுகள்

------

------

தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மையான ஜாதக அடிப்படையில் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மைகளை இங்கே கூறுகிறோம்.

பிறந்தநாள் : 26-11-1954.

பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற - மிகவும் விசேஷமான ஜாதகம்!

பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் "தனித் தமிழீழம்' என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.

பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.

07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ்வாய் கிரகம்தான்.

பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள்.

இந்த சனிமாற்றம் நல்ல செய்தியை கொண்டு வந்துள்ளது . :unsure:

09. 09.2009 என்பது வாற புதன்கிழமை.

அந்த நல்ல நாளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

எனக்கும் அண்டைக்கு தான் ....... இவ்வளவு நாளும் எனக்கு பிடிச்சிருந்த ஏழரை சனியன் கழியுது .smiley-happy006.gif

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது நடக்கவேண்டும்

அவனை விட்டால் நம்கதி..............???

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது நடக்கவேண்டும்

அவனை விட்டால் நம்கதி..............???

விசுகு , இந்த சனிமாற்றத்திற்கு பின்பு இங்கு கன பேர் பிரபாகர புராணம் பாட ஆரப்பிப்பார்கள் . இப்பவே கன பேருக்கு வயித்தை கலக்கியிருக்கும். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நடந்தா சந்தோசம்..

இதை வாசிக்க ஜயா செல்லப்பா பாடிய பாட்டுத் தான் ஞாவகத்துக்கு வருது

எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை...

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

IMG5139-1252143439.jpg

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

தமிழ்ஸ்ரீ

தாங்கள் பலமுறை என்னைத்தேற்றியுள்ளீர்கள்

தங்களைப்போன்றவர்களை யாழ் களம்மூலம் பெற்றதையிட்டு மட்டற்றமகிழ்ச்சி

கனநாளைக்குப்பின்.....

குட்டிப்பையனையும் சந்திக்கமுடிந்ததையிட்டும் சந்தோசம்

குட்டிப்பையனிடம் ஒருவேண்டுகோள்

தங்களின் இருப்பிடமாக

அமைதியான நாடு என்று எழுதியுள்ளீர்கள்

அதை வாசிக்கும்போது தேவையற்ற ஒருவர் ஞாபகத்துக்கு வருகின்றார்....???

இனி தங்கள் விருப்பம்

இந்தியாவை நம்பினோம் ஏமாந்துபோனோம்..

நோர்வேயை நம்பினோம் ஏமாந்துபோனோம்..

அமெரிக்காவை நம்பினோம் ஏமாந்துபோனோம்..

ஐ.நா வை நம்பினோம் ஏமாந்துபோனோம்..

அட.. அம்மான் கருணாவை நம்பிக்கூட ஏமாந்துபோனோம்.

இப்போது சனியனை நம்புவோம்

எங்கள் தலையில் தரித்திரங்கள்

ஏறுவதற்கும் இறங்குவதற்கும்

சனீஸ்வரன் காரணம் என்போம்..!

அடேய் சனீஸ்வரா..

நீயும் ஈழத்தமிழனை ஏமாற்றிவிடாதே..!

ஈழத்தமிழனின் இறுதி நம்பிக்கை நட்சத்திரம்

இப்போது நீ தான்! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்

கவிதை

நன்றி

வணக்கம்

கலைஞன்

நீயுமா?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

தமிழ்ஸ்ரீ

தாங்கள் பலமுறை என்னைத்தேற்றியுள்ளீர்கள்

தங்களைப்போன்றவர்களை யாழ் களம்மூலம் பெற்றதையிட்டு மட்டற்றமகிழ்ச்சி

கனநாளைக்குப்பின்.....

குட்டிப்பையனையும் சந்திக்கமுடிந்ததையிட்டும் சந்தோசம்

குட்டிப்பையனிடம் ஒருவேண்டுகோள்

தங்களின் இருப்பிடமாக

அமைதியான நாடு என்று எழுதியுள்ளீர்கள்

அதை வாசிக்கும்போது தேவையற்ற ஒருவர் ஞாபகத்துக்கு வருகின்றார்....???

இனி தங்கள் விருப்பம்

ஒம் அண்ணா..

ஒண்ட விட்ட சகோதரத்தின் கலியாண வீடு அதாலை கொஞ்சம் பிசி .. நான் யாழுக்கு ஒவ்வரு நாளும் வருவேண் வந்து செய்தி வாசிச்சு போட்டு போய் விடுவேண்.. இப்ப தான் நேரம் கிடைச்சது உங்க எல்லாருடனும் கருத்து எழுத..

உங்களின் விருப்பப் படி அதை அகற்றி விட்டேன்..

ஹலோ... ஹலோ...

மைக் டெஸ்டிங்... வன்... டூ... திறீ...

செம்மறிக் கூட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

செம்மறிக் கூட்டம்

யாரை சொல்லுறிங்கள் செம்மறிக் கூட்டம் என்று,, இதிலை கருத்து எழுதின ஆக்களையா இல்லாட்டி ... :icon_mrgreen::wub:

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் நல்லதையே நினைப்போம்

நல்லதே நடக்கும்

அடிமையாக வாழ்வதை விட சாவது மேல்

என்ன தமிழ் சிறி ஏழரை சனியன் முடியுதோ சந்தோசம்

Edited by jhansirany

  • கருத்துக்கள உறவுகள்

-----

என்ன தமிழ் சிறி ஏழரை சனியன் முடியுதோ சந்தோசம்

ஓம் ஜான்சிராணி , வாற புதன்கிழமை எனக்கு பிடிச்சிருந்த சனியன் விலகுது .

இவ்வளவு நாளும் சனி பகவானின் உக்கிர பார்வையை குறைக்க ,

சனிக்கிழமைகளில் விரதம் இருந்தேன் greensmilies-002.gif . இனி வெள்ளி திசை தான். :icon_mrgreen:

ஆனால் இங்கை கொஞ்சபேருக்கு புதன்கிழமை ஏழரை சனியன் ஆரம்பிக்கப் போகுது.greensmilies-008.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ... ஹலோ...

மைக் டெஸ்டிங்... வன்... டூ... திறீ...

சனியன் மாறுறதுக்கு இப்பவே எல்லாம் ......ரெடி பண்ணுறீங்கள் போலை , வெரி குட் . smiley-angelic008.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் செம்மறிக் கூட்டத்தை தவிர வேறு கூட்டத்தை தெரியாதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

(2009 - 2012)

சூரியனுக்குத் தெரியாமல் தன்னுடைய நிழலையே தன் மாதிரி பெண்ணாக்கி சூரியனுடன் குடும்பம் நடத்தும்படி கூறிவிட்டுத் தன் தகப்பனார் வீட்டுக்குப் போய்விட்டாள். அவள் பெயர் சாயாதேவி. பிரத்யுஷா என்றும் இன்னொரு பெயர்!

இந்த மாதிரி ஆண்களும் நிழலை புருசனாக்கி விட்டு எங்காவது போவதற்கு வழியிருக்கிறதா? :icon_mrgreen:

இன்னும் 2 வருடங்களிற்கு போராட்டம், ஊர்வலம் அது இது என்று பேசுவதை நிறுத்தி விட்டு அமைதியாக இருங்கள். 2012 இல் தமிழீழம் அமையும். பிறகென்ன தமிழனுக்குச் சிறப்புத்தான்..... :wub:

Edited by சதிராடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செம்மறிக் கூட்டம்

நான் இரண்டாவது வரிசையிலை நிக்கிறன் ................. :wub:

நீங்கள் எங்கை தொங்கல்லை நிக்கிறியள் போலை கிடக்கு? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஒம் அண்ணா..

ஒண்ட விட்ட சகோதரத்தின் கலியாண வீடு அதாலை கொஞ்சம் பிசி .. நான் யாழுக்கு ஒவ்வரு நாளும் வருவேண் வந்து செய்தி வாசிச்சு போட்டு போய் விடுவேண்.. இப்ப தான் நேரம் கிடைச்சது உங்க எல்லாருடனும் கருத்து எழுத..

உங்களின் விருப்பப் படி அதை அகற்றி விட்டேன்..

நன்றி

மன்னிக்கவும் தாமதத்திற்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிமையாக வாழ்வதை விட சாவது மேல்

புலம்பெயர்ந்த நான் நீங்கள் அவன் அவள் எல்லாம் அடிமைகள்தான்....

வாறீங்களா செத்துப்போவோம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவடி மாவீரனாக சாவதற்கு நான் ரெடி நீங்க ரெடியா?

  • கருத்துக்கள உறவுகள்

காவடி மாவீரனாக சாவதற்கு நான் ரெடி நீங்க ரெடியா?

நீங்க வேற

உங்களுக்கு பகிடியும் தெரியாது

வெற்றியும் தெரியாது

இப்படி யெல்லாம் இடக்கு மடக்கா கேட்கக்கூடாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.