Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமில் மக்களுக்கும் இராணுவத்துக்குமிடையில் மோதல், ஒருவர் பலி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமில் மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் முறுகல் நிலைஏற்பட்டது.

இம் முறுகல் நிலை மோசமாகி கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் பலியானதுடன் பலர் காயத்திற்குள்ளாகினார்.

இறந்தவர் 5 பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீசந்திரமோகன் என்பவர் ஆவார்.

கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்த இவர் ஒரு கூலித்தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறுகல் நிலை மோசமாகி வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமை அண்டியுள்ள மக்களும் ஒன்றுதிரண்டு மோதியதனால், இராணுவம் மிகவும் மோசமாக மக்களை அடித்து முறுகல் வலுவடைந்துகொண்டிருக்க்கின்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2ஆம் இணைப்பு‐ வவுனியா பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரி முகாமில் படையினருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் ஒருவர் ஆபத்ததான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

23 September 09 04:09 am (BST)

வவுனியா பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரி முகாமில் படையினருக்கும் மக்களுக்கும் இடையில் நேற்று முறுகல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தமிழ்க் கூட்டமைப்பு அரச உயர் மட்டத்துடனும் வவுனியா அரச அதிபருடனும் தொடர்பு கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்குத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக வெளிவந்த தகவலை அடுத்து முகாமில் பதட்டம் நிலவியதாகவும் எனினும் படையினரால் தாக்கப்பட்ட நடுத்தரவயதான ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலை அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை உறுதிப்படுத்துமாறு அரசாங்க அதிபரிடம் தமிழ்க் கூட்டமைப்பு கோரியுள்ளது.

இது குறித்து வவுனியா இடைத்தங்கல் முகாம் மக்களுடனும் வைத்தியசாலையுடனும் தொடர்பு கொணடபோது படையினரால் தாக்கப்பட்டு நேற்று பின்னிரவு காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நடுத்தர வயதான இவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஆபத்தான நிலையினைக் கடந்துள்ள இவர் மரணித்துவிட்டதாக வெளியான வதந்தியை அடுத்து முகாம் மக்கள் கலகத்தில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

http://www.globaltamilnews.net/tamil_news1...14918&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

அடக்குமுறை வென்றதாக சரித்திரம் இல்லை

அடக்குவதை நிறுத்தாவிட்டால்.....???

சிங்கள இராணுவத்தின் தொகை 2 லட்சத்தை தாண்டிவிட்டதாக சொல்கின்றார்கள்

அப்படியாயின் இந்த மக்கள் அதையும் எதிர் கொள்ளும் அளவுக்கு வதைக்கப்பட்டனரா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[2 ஆம் இணைப்பு] பூந்தோட்ட முகாமில் மக்களுக்கும் இராணுவத்துக்குமிடையில் மோதல்[2 ஆம் இணைப்பு] வவுனியா பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரி முகாமில் படையினருக்கும் மக்களுக்கும் இடையில் நேற்று முறுகல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தமிழ்க் கூட்டமைப்பு அரச உயர் மட்டத்துடனும் வவுனியா அரச அதிபருடனும் தொடர்பு கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக வெளிவந்த தகவலை அடுத்து முகாமில் பதட்டம் நிலவியதாகவும் எனினும் படையினரால் தாக்கப்பட்ட நடுத்தரவயதான ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலை அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை உறுதிப்படுத்துமாறு அரசாங்க அதிபரிடம் தமிழ்க் கூட்டமைப்பு கோரியுள்ளது.

இது குறித்து வவுனியா இடைத்தங்கல் முகாம் மக்களுடனும் வைத்தியசாலையுடனும் தொடர்பு கொணடபோது படையினரால் தாக்கப்பட்டு நேற்று பின்னிரவு காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நடுத்தர வயதான இவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஆபத்தான நிலையினைக் கடந்துள்ள இவர் மரணித்துவிட்டதாக வெளியான வதந்தியை அடுத்து முகாம் மக்கள் கலகத்தில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

http://www.meenagam.org/?p=11284

முகாம்களில் இருந்து பல பிரபாகரன்கள் உருவாவர் என்று பலர் சொன்ன போது நான் நம்பவில்லை......

Civilians clash with SLA in Vavuniyaa internment camp

[TamilNet, Wednesday, 23 September 2009, 12:09 GMT]

Additional police and Sri Lanka Army troops were brought into the College of Education internment camp in Vavuniyaa after clashes erupted between civilian inmates and Sri Lankan forces following the arrest and assault of a Tamil youth in the camp. Several civilians and armed personnel sustained minor injuries, sources in Vavuniyaa said.

On Monday, a 31-year-old Tamil youth Paranchami Chandramohan, was taken by force by the SLA. He was severely assaulted and taken away. The inmates of the camp were inquiring the SLA and police on his whereabouts for the last two days.

The civilian protestors who did not get any positive reply from the Sri Lankan forces tried to breach the fences and attempted to come out Wednesday morning. They were throwing stones.

In return, the Sri Lankan forces also reacted in the same manner. The matter was brought to the notice of Vavuniyaa Magistrate A.G.Alexraja. He personally visited the camp and brought the situation under control.

The youth is presently being treated at the Vavuniyaa hospital.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த போராட்டம் ஆயத்தமாம்........... விசைப்பலகை வீரர்களை தமிழீழம் நாடுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த போராட்டம் ஆயத்தமாம்........... விசைப்பலகை வீரர்களை தமிழீழம் நாடுகிறது.

ஓம் ஓம்.. இந்த நக்கல், நையாண்டிதான் எங்களை இண்டைக்கு இந்தநிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கு... ஒரு மனிசனின் சாவில் கூட உங்களைபோன்றவர்களால் தான் இப்படி நையாண்டி பண்ண முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஓம்.. இந்த நக்கல், நையாண்டிதான் எங்களை இண்டைக்கு இந்தநிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கு... ஒரு மனிசனின் சாவில் கூட உங்களைபோன்றவர்களால் தான் இப்படி நையாண்டி பண்ண முடியும்

உண்மைதான் எல்லோரையும் அணைத்தபடி போராடு என்பது ...........???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.