Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்த்திரேலியாவிற்குப் படகுகளில் வந்தவர்களுள் புலிகளும் நிச்சயம் இருக்கிறார்கள் - விக்டர் ராஜகுலேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்த்திரேலியாவிற்குப் படகுகளில் வந்தவர்களுள் புலிகளும் நிச்சயம் இருக்கிறார்கள் - விக்டர் ராஜகுலேந்திரன்

அவுஸ்த்திரேலியாவிலிருக்கும் தமிழ் அமைப்புக்களில் ஒன்றான AFTA எனும் அவுஸ்த்திரேலிய தமிழ் அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் என்று கூறப்படும் கலாநிதி விக்டர் ராஜகுலேந்திரன் என்பவர் அவுஸ்த்திரேலியன் எனப்படும் நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றில், படகுகளில் வந்துள்ள தமிழர்களில் பல முன்னாள்ப் போராளிகளும் நிச்சயமாக இருப்பதாக அடித்துக்க் கூறியுள்ளார்.அப்பேட்டியின் இரு இடங்களில் தனது கூற்றை ஆணித்தரமாக சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாலையில் வெளிவந்த இப்பத்திரிக்கைச் செவ்வியைத் தொடர்ந்து அவுஸ்த்திரேலியாவிலியங்கும் பிரபல தொலைக்காட்சிகளான சனல் 7 , ஏ.பீ.சீ, எஸ்.பீ.எஸ் மற்றும் வனொலிகளான 2 ஜீ.பீ போன்றவை இவரை அடுத்தடுத்துப் பேட்டிகண்டுள்ளன.

இந்த எல்லா ஊடகங்களிலும் தான் முன்னர் சொல்லிய அதே கருத்தான "படகுகளில் புலிகளும் உள்ளார்கள்" என்பதை திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கும் இவர், பேட்டியாளர் புலிப்பயங்கரவாதிகள் எமது நாட்டுக்குள் வந்திருக்கிறார்களா என்று கேட்ட போது ஆம் என்று பதிலளித்தார். தீவிர தமிழின விரோதியான ஒரு வானொலி நடத்துனர் இவரிடம், " நீங்கள் சொல்லும் போராளிகளும் தமிழ்ப் பயங்கரவாதிகளும் ஒரே ஆட்கள் தானே " என்று கேட்டதற்கு "சிலர் அவர்களை அப்படியும் அழைக்கிறார்கள்" என்று கூறினார். " மனித தற்கொலைத்தாக்குதலின் மூலம் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள 100 பொதுமக்களையும் கொல்லும் பயங்கரவாதிகள் எமது நாட்டுக்குள் வந்திருக்கிறதாகச் சொல்லுகிறீர்கள்" என்ற இன்னொரு கேள்விற்கு " அவுஸ்த்திரேலியாவில் அவர்கள் தாக்குதல் நடத்துமளவிற்கு போர் நடக்கவில்லையே" என்று அப்பாவித்தனமாகப் பதிலளித்தார்.

இவ்வளவு காலமும் தமிழர் மீது நடந்த இனக்கொலையைப் பற்றி வாயே திறக்காத இந்தப் பிரபல ஊடகங்கள் இவரது செவ்விகளை தமது முன்பக்கச் செய்தியாகவோ அல்லது தலைப்புச் செய்தியாகவோ போட்டுத் தள்ளியுள்ளன." படுகளிலிருக்கும் அகதிகளின் பேச்சாளர் ஒருவர் தாங்கள் கொழும்புப் பகுதியிலிருந்துதான் வந்தோம், எம்மில் எவரும் வடக்கிலிருந்து வரவில்லை என்று சொல்லியிருக்கிறாரே ?" என்று பேட்டியாளர் கேட்ட போதும், " அதில் புலிகளும் இருக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்" என்று மீண்டும் கூறினார்.

இவரது செவ்விகளை அறிந்து கொதிப்படைந்த தமிழர்கல் பலர் இவரைத் தொடர்பு கொண்ட போது, "எனக்கு நேரமில்லை, பல செய்தி ஊடகங்களிற்கு செவ்விகள் வழங்குவதால் இப்போதைக்கு நேரமில்லை " என்றும் பதிலளித்துள்ளார்.

இவரது பேட்டியின் மூலம் இவர் செய்ததெல்லாம், படகுகளில் வந்திறங்கும் அப்பாவிகளைத் திருப்பியனுப்புவதுதான்.அண்மைக்காலமாக அவுஸ்த்திரேலிய மக்களின் தமிழர் மீதான பாரவை எமக்குச் சார்பாகத் திரும்பிவரும் நிலையில் இவரது பேட்டி எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கியுள்ளது.

சிங்களத் தூதுவன் வலகம்பாய அண்மையில் அவுஸ்த்திரேலிய ஊடகங்களுக்கு வழங்கிய " பயங்கரவாதிகளும் படகுகளில் இருக்கிறார்கள்" என்ற செய்திக்கு " அப்படி எவரும் படகுகளில் இல்லை" என்று அவுஸ்த்திரேலியப் பிரதமர் கெவின் ரட் உறுதிப்படுத்தியிருக்கும் தறுவாயில் இவரது இந்த செவ்வி எதிர்க்கட்ட்சி தலைவர்களுக்கும், தமிழர் விரோத ஊடகங்களுக்கும் துரும்புச் சீட்டாக மாறியுள்ளது.படகு மக்கள் மீதான அரசின் கரிசணை மீது தமது தீவிரத் தாக்குதலை இவ் எதிர்க்கட்ட்சி உறுப்பினர்கள் இவரது செவ்வியைத் தொடர்ந்து தீவிரமாக்கியுள்ளன."அவுஸ்த்திரேலியத் தமிழர்களின் தலைவர்" என்று எல்லா ஊடகங்களிலும் மேற்கோள் காட்டப்பட்ட இவர் கூறியுள்ள கூற்றுக்கள் அவுஸ்த்திரேலியாவில் இதுவரை காலமும் தமிழர் சிறுகச் சிறுக சேமித்துவந்த தமிழர் மீதான பரிவுப் போக்கை ஒரே நாளில் அடித்து நொறுக்கியுள்ளது.

இவரோ அல்லது இவர் சேர்ந்துள்ள அமைப்போ இவரது செய்கை பற்றி எந்தக் கவலையும் அல்லது நடவடிக்கையோ இதுவரை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"அவுஸ்த்திரேலியாவுக்குச் சட்ட விரோதமாகப் போகும் அனைவரும் புலிப்பயங்கரவாதிகள்தான்" எனும் சிங்கள வெளிவிவகார அமைச்சனின் கூற்றை உறுதிப்படுத்தியிருக்கும் இவரின் செவ்விகள் தமிழர்க்குச் செய்யவிருக்கும் ஆபத்தின் அளவு இன்னும் உணரப்படவில்லை.அதேவேளை தமிழர்க்குச் சார்பாக இவ்வளவு நாளும் பேசியும் எழுதியும் வந்த அவுஸ்த்திரேலிய நண்பர்களின் முகத்திலும் இவர் கரி பூசியுள்ளார்.

இவரது செவ்விகளுக்குப் பின்னரான மக்களின் அபிப்பிராயங்கள் இன்பத் தமிழ் வானொலியில் நேற்றிரவு ஒளிபரப்பபட்டன. அதில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான மக்களின் ஆதங்கங்கள் இவரின் செயலின் ஆழத்தை எடுத்தியம்பின. ஆங்கில செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளிக்க ஆர்வப்பட்ட இவர் இதுவரை எந்தத் தமிழ் ஊடகத்திலும் தனது செயலை நியாயப்படுத்தியோ அல்லது மனிப்புக் கேட்டோ பேசவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Edited by ragunathan

மக்கள் வானொலியில பேசிய வார்த்தைகளுக்கு தன்மானமுள்ள ஒரு தமிழனென்றால் தற்கொலையே செய்திருப்பான்,. இவங்கள் எல்லாம் ஏன் இன்னும் உயிரோட இருக்கிறாங்களோ தெரியாது. தமிழ் மக்களை பிரதிநிதி படுத்திறாங்களாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ்கவி,

நானும் நேற்று 1 மணிவரை வானொலியில் இணைந்திருந்தேன். கருத்துக்கள் மிகவும் கார சாரமானவை. புரிந்தால்ச் சரி.

சிங்கள அரசாங்கத்தின் நோக்கம் தமிழரை எவ்வளவு கெதியாக இலங்கையை விட்டு அப்புறப் படுத்த முடியுமோ அதைச் செய்வதுதான். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் நேற்று அல்லது முந்தாநாள் ஓர் ஆங்கில ஊடகத்தில் இவரது கருத்தை இப்படி கூறியுள்ளார் என்று வாசித்து இருந்தேன். அதில் புலிகளும் படகில் இருக்கலாம் என்று கூறப்பட்டு இருந்ததேயொழிய புலிகள் நிச்சயம் இருப்பார்கள் என்று கூறினார் என்று இருக்கவில்லை.

இப்ப உங்களுக்கு பிரச்சனை என்ன? புலிகளுக்கு அகதி உரிமைகோரும் தகமை இல்லை என்று நீங்களே சொல்லவாறீங்களோ ரகுநாதன்? புலியில் இருந்தவர்கள் புலியாக அகதி உரிமை கேட்கும்போது இனம்காட்டப்படுவதே உங்களுக்கு இஸ்டம் இல்லையென்றால் பிறகு எப்படி நாடு கடந்த தமிழீழ அரசு, தமிழீழம் எல்லாம் காணப்போறீங்கள்?

எனது தனிப்பட்ட கருத்து என்ன என்றால்.. விடுதலைப்புலிகள் அமைப்பில் உள்ளவர்களினை சிறீ லங்கா அரசாங்கம் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைய கையாளவில்லையென்றால்... அவர்கள் சிறீ லங்காவில் இருப்பது உயிராபத்து என்றால் வெளிநாடுகளில் அகதி தஞ்சம் கோரமுடியும் என்பதே. அவர்களும் மனுசர்தானே?

பார்த்தீர்களா.. நாட்டுக்காக நாட்டுக்காக என்று எல்லாரும் சொல்லிப்போட்டு.. கடைசியில இப்ப பிரச்சனை என்று வரேக்க.. புலி என்கின்ற சொல்லையே எல்லோரும் வெறுக்கின்றார்கள் என்பதை.

எனது கேள்வி புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் என்பவர்கள் அகதி அந்தஸ்து கோரப்படுவதற்கு அருகதை அற்றவர்களா? ரகுநாதனின் முறைப்பாடுகளை வாசிக்க இவ்வாறுதான் தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:wub:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மச்சான்,

உங்கள் அறிவாற்றல் மெய் சிலிர்க்க வைக்கிறது. இப்போது புலிகள் வரக்கூடாது என்று யார் சொன்னார்? புலிகளும் வரட்டும், ஆனால் அதை நாம் சொல்லிக்காட்ட வேண்டாம். இவரிடம் யாராவது கேட்டார்களா புலிகளும் வருகிறார்களா என்று? பிறகு எதற்கு சும்மா இருந்த சங்கை ஊதுவான்?

வருவது மக்களாயிருந்தாலென்ன, புலிகளாயிருந்தாலென்ன, எல்லாம் தமிழர்கள்தான்.

புலிகள் வருகிறார்கள் என்று சொல்லியதன் மூலம் எவருமே வருவதை கடிணமாக்கியிருக்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை.

புலிகள் வந்தால்க்கூட நாம் அப்படியில்லை , அவர்கள் புலிகளில்லை என்று சொல்வதுதான் நாம் செய்ய வேன்டியது. அதை விட்டுட்டு, அதிமேதாவித்தனமாக , புலிகள் நிச்சயமாக இருக்கிறார்கள் என்றால் இது எல்லாரையுமே சிக்கலில் மாட்டிவிடும் வேலையல்லவா?

எனது கருத்தில் பிழை காண வருமுன்னர் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மச்சான்,

நாங்களென்ன, புலிகள் என்று அறிந்தவுடன் விசேட விமானத்தில் அவர்களை அழைத்துவந்து செங்கம்பள வரவேற்பளித்து விருந்தோம்பல் நடத்தக்கூடிய மனிதாபிமானம் மிக்க நாடுகளிலேயா இருக்கிறோம்?

நாங்கள் புலிகள் என்று பெருமையுடன் காலரைத் தூக்கிக் கொண்டு வருவதற்கு எத்தனை நாடுகள் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றன?

யதார்தத்தைக் கதையுங்கள்.

உடனேயே, இவ்வளவுகாலமும் எமக்காகப் போரிட்டவர்கள் என்று அழத்தொடங்குகிறீர்களே? முல்லை மைந்தனுக்கு நக்கல் வேறு வருகிறது.

இல்லை தெரியாமல்த்தான் கேட்கிறேன், நீங்கள் கதைப்பது என்னவென்று தெரிந்துகொண்டுதான் பேசுகிறீர்களா??

ஐய்யா, புலிகள் வரட்டும்.அவர்கள் எமது பிள்ளைகள், சகோதரங்கள். ஆனால் அவரகளை நாமே காட்டிக்கொடுக்க வேண்டாம். புரிந்தால்ச் சரி.

ரகுநாதன்.. உங்கள் கருதுக்கு குற்றம் கண்டு பிடித்தவர்கள்.கண்டிப்பாக..வெளிநாட்டில்...சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள்தான்..அவர்கள் தப்பினால் மட்டும் போதும்...மற்றவர்கள் எப்ப்டி போனாலும்........பரவாயில்லை..

இல்லை என்றால்..புலிகள் ஏன் நாட்டை விட்டு வருகிறார்கள்... திரும்பவும்..அங்க இருந்து சண்டை பிடிகணும் எண்டு நினைக்கிறார்கள் போல...

அழுதுடுவேன் சொல்லிட்டன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2 லச்சம் வவுனியா முகாமில, அதில 1 லச்சம் மீள குடியேறுதாம் மிச்சம் 1 லச்சத்துக்கும் ஏற்பாடு செய்யுங்கோ!

வாறது நல்லது அதுசரி நீங்கள் வைகோ ராமதாஸ் சீமானுக்கு இதுபற்றி தெரிவிச்சுபோட்டீங்களே? அவையள் விட்ட அறிக்கையள படியுங்கோ!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=65431

http://www.yarl.com/forum3/index.php?showtopic=65433

http://www.yarl.com/forum3/index.php?showtopic=65445

2 லச்சம் வவுனியா முகாமில, அதில 1 லச்சம் மீள குடியேறுதாம் மிச்சம் 1 லச்சத்துக்கும் ஏற்பாடு செய்யுங்கோ!

வாறது நல்லது அதுசரி நீங்கள் வைகோ ராமதாஸ் சீமானுக்கு இதுபற்றி தெரிவிச்சுபோட்டீங்களே? அவையள் விட்ட அறிக்கையள படியுங்கோ!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=65431

http://www.yarl.com/forum3/index.php?showtopic=65433

http://www.yarl.com/forum3/index.php?showtopic=65445

இப்ப என்ன சொல்ல வாறியள்.. ? சிங்களவன் நல்லவனா.............???? கெட்டவனா....????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப என்ன சொல்ல வாறியள்.. ? சிங்களவன் நல்லவனா.............???? கெட்டவனா....????

எல்லாம் தெரிஞ்ச நீங்களே இடக்குமுடக்கான கேள்வியள் கேட்டு சங்கடத்தில மாட்டுறியள். பாதிப்பேருக்கு அகதி அந்தஸ்து வாங்கி குடுத்திருக்கிறார்கள், மீதிக்கும் ஒரு வழி பன்னுறார்கள். எங்களின்ட போராட்ட குறிக்கோளே அதுதானே நிறைவேற்றுறார்கள் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். :wub:

Edited by Mathivathanang

:wub::(:D

எல்லாம் தெரிஞ்ச நீங்களே இடக்குமுடக்கான கேள்வியள் கேட்டு சங்கடத்தில மாட்டுறியள். பாதிப்பேருக்கு அகதி அந்தஸ்து வாங்கி குடுத்திருக்கிறார்கள், மீதிக்கும் ஒரு வழி பன்னுறார்கள். எங்களின்ட போராட்ட குறிக்கோளே அதுதானே நிறைவேற்றுறார்கள் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். :wub:

புலி அமைப்பு ஆரம்பிக்க முன்னம் சிங்களவனாலை யாரும் பாதிக்க படவோ , கொல்லப்படவோ இல்லை அகதியாகவோ இல்லை எண்டு நிறுவ நிக்கிறீர் போல கிடக்கே...??

இந்தியனோடை வந்து சனத்தை துரத்தி துரத்தி கொழும்புக்கு கொண்டு போய் விடேக்கை உங்கட உந்த கவலைகள் எல்லாம் எங்கை போனது....?? அந்த காலத்திலை தான் வசதி படைத்த தமிழர்கள் அதிகமாக கொழும்பு நோக்கி இடம் பெயர்ந்தவை...

ரகுநாதன்,

அதாவது நீங்கள் வெளிநாட்டு அரசாங்கங்களின் காதில் இலகுவாக பூச்சுத்த முடியும் என்று நினைக்கின்றீர்கள்?

இத்தூண்டு பெரியவர்கள், அமைப்புக்கள் இருக்கின்றன தாயகத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொண்டு... ஏன் சட்டரீதியாக வாதிடுவதற்கு... சரி வேண்டாம்... மனிதாபிமான ரீதியாக முன்னாள் புலி உரிப்பினர்களின் அகதிகோரிக்கை தொடர்பாக குரல் கொடுப்பதற்கு யாராவது நடவடிக்கை எடுக்கலாமே?

இங்கு கனடாவிற்கும் அண்மையில் 76பேர் கப்பலில் வந்தார்கள். உங்கு மேற்கண்ட டாக்டர் கூறியதுபோல் நம்மவர்கள் ஒருவரும் கப்பலில் புலி உறுப்பினர்களும் இருக்கலாமென்றோ அல்லது நிச்சயம் இருக்கலாமென்றோ கூறவில்லை பேட்டியும் கொடுக்கவில்லை (கனேடிய தமிழ் காங்கிரஸ் டேவிட் பூபாலபிள்ளை ஒர் கேள்விக்கு பதிலளித்தபோது வந்தவர்களில் புலிகளும் இருக்கலாம் என்கின்ற வகையில் கருத்து கூறியதை National Postஇல் வாசித்த ஞாபகம்).

எனினும், கப்பல் இறங்கிய கையுடனேயே... வந்தவர்கள் எல்லாரும் புலிகள் என்கின்ற சாயலில் ஊடகங்கள் செய்திகள் பரப்பத் தொடங்கிவிட்டன. பல்வேறு ஊடகங்களில் பின்னூட்டல் போடுவர்களின் பெரும்பாலான கருத்துக்கள் இவர்களை திருப்பி அனுப்பவேண்டும் என்பதே.

தவிர, 76பேர் வந்து இறங்கிய கையுடனேயே கப்பலின் சரித்திரத்தை கண்டுபிடித்து விட்டார்கள் ( – எங்கு தயாரிக்கப்பட்டது, உரிமையாளர்கள் யார் என்பன), வந்தவர்களில் ஒருவர் இண்டர்போலினால் தேடப்படுபவர் என்றும் செய்தி வெளியிட்டார்கள்.

வெளிநாட்டு அரசாங்கங்களிற்கு அகதிகளாக தஞ்சம் அடைபவர்களை Screening செய்யும்போது அவர்களின் பின்புலத்தை கண்டுபிடிப்பது கடினமான பணியாக இருக்காது. சரசாலை குச்சி ஒழுங்கை ஒன்றுக்கை தனக்கு இத்தனையாம் திகதி இப்பிடி நடந்திச்சிது எண்டு தங்கள் கதையில் சம்பவங்களை விபரிக்கும்போது அதன் உண்மைத்தன்மையை கண்டுபிடிப்பதற்கு இங்குள்ள அரசாங்கங்களின் புலனாய்வு அமைப்புக்களிற்கு கடினமான பணியாக இருக்கப்போவது இல்லை.

உங்கள் வாதம் என்ன என்றால்.. புலிகள் என்று தெரிந்தால் அகதிகோரிக்கை செவிசாய்க்கப்படுவது யதார்த்தத்தில் கடினமானது என்று கூறுகின்றீர்கள். நான் சொல்லவருவது... புலிகளில் இருந்தவர்களை அகதி கோரிக்கையின்போது கண்டுபிடிப்பது அரசாங்கங்களிற்கு கடினமாக இருக்காது என்பது.

மனிதாபிமான ரீதியில் நம்மவர்கள் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களின் அகதிகோரிக்கை செவிசாய்க்கப்படுவதற்கு பல முயற்சிகளை எடுக்கலாம். அதைவிடுத்து நம்மவர்களே புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை வெளிநாட்டு அரசாங்கங்கள் பயங்கரவாதிகளாகவே பார்த்து அகதிகோரிக்கையை நிச்சயம் நிராகரிக்கும் என்கின்ற ரீதியில் தாழ்வுமனப்பான்மையுடன் செயற்பட்டால் என்னவென்று சொல்வது?

நான் அண்மையில் வைத்தியசாலைக்கு சென்றபோது எனது வைத்தியர் 76பேர் சிறீ லங்காவில் இருந்து இங்கு வந்து இருக்கின்றார்கள் இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று என்னிடம் கேட்டார். நான் சுமார் ஐந்து நிமிடங்கள் பிரச்சனைகளை விபரித்தேன். வந்தவர்களில் புலிகளும் இருக்கலாம் என்றும் கூறினேன். ஆனால்... அங்கு அவர்களிற்கு இருக்கும் உயிராபத்துக்கள், சிறீ லங்கா அரசாங்கத்தின் கொடுமைகள், சட்ட அத்துமீறல்கள் இவைபற்றியும் சொன்னேன். மிகவும் பொறுமையாக கேட்டு இறுதியில்.. வந்த76பேரை கனடா திருப்பி அனுப்பமுடியாது திருப்பி அனுப்பக்கூடாது என்று வைத்தியர் சொன்னார்.

நீங்கள் மற்றவனுக்கு உண்மைநிலையைச் சொல்லாமல் காதில் பூ சுத்தவெளிக்கிட்டால்.. உண்மையை அவன் கண்டுபிடிக்கும்போது நிலமை பாரதூரமாக இருக்கும் அத்துடன் எதிர்காலத்தில் அகதிதஞ்சம் கோருபவர்களையும் பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலி அமைப்பு ஆரம்பிக்க முன்னம் சிங்களவனாலை யாரும் பாதிக்க படவோ , கொல்லப்படவோ இல்லை அகதியாகவோ இல்லை எண்டு நிறுவ நிக்கிறீர் போல கிடக்கே...??

ஓ.....நீங்களும் அப்பிடி யோசிக்கிறீங்களே அப்ப பிரச்சனையில்ல! :wub:

இந்தியனோடை வந்து சனத்தை துரத்தி துரத்தி கொழும்புக்கு கொண்டு போய் விடேக்கை உங்கட உந்த கவலைகள் எல்லாம் எங்கை போனது....?? அந்த காலத்திலை தான் வசதி படைத்த தமிழர்கள் அதிகமாக கொழும்பு நோக்கி இடம் பெயர்ந்தவை...

உது எப்ப? எந்தக்காலம்? கிறிஸ்துவுக்கு முன்னமோ பின்னமோ? அதுசரி அவங்கள் 85% நாங்கள் 15% மானது எப்பிடி? (இப்ப 5% மாம் சொல்லுறாங்கள்) :(

ஓ.....நீங்களும் அப்பிடி யோசிக்கிறீங்களே அப்ப பிரச்சனையில்ல! :wub:

உது எப்ப? எந்தக்காலம்? கிறிஸ்துவுக்கு முன்னமோ பின்னமோ? அதுசரி அவங்கள் 85% நாங்கள் 15% மானது எப்பிடி? (இப்ப 5% மாம் சொல்லுறாங்கள்) :(

1970 களில் புத்தளத்திலை 90% தமிழர்கள்தான் இருந்தவை... ஆனால் இண்டைக்கு அங்கை 10 வீதமானோர் கூட தமிழை முழுமையாக அங்கே பேசுவதில்லை... இது மாதிரித்தான் மட்டக்களப்பின், திருமலையின் வவுனியாவின் முழுமையான கரையோர தமிழ் கிராமங்களிலையும் நடந்து இருக்கிறது...

தென்னமரவாடி, பதவியாறு , மணலாறு கொக்கிளாய், முந்திரிக்குழம் மண்கிண்டி, மணலாறு போண்ற முழுமையான பிரதேசங்களிலையும் 100% சிங்களம் தான் பேசப்படுகிறது... இது நட்ந்ததுக்கு போர் காரணம் இல்லை...

போர் எண்ற ஒண்று வராவிட்டு இருந்தால் பெரிய விகிதத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து இருக்கும்... நீர் சாகாமல் இருந்தால் இன்னும் 10 வருடத்துக்கு அதை தாராளமாக காணலாம்...

ஏன் தெரியுமே...?? உங்களை மாதிரி மர மண்டைக்கு புரியும் எண்ட நம்பிக்கையும் எனக்கு இல்லை...

மற்றவனை குழப்ப நிக்க்கிறதை விட்டு உமது அறிவை வளர்க்க முயலும்... இல்லை காசு தாறவனுக்கு வாலை தான் ஆட்டுவன் எண்றால் வாலை நறுக்க தான் வேண்டும்..

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1970 களில் புத்தளத்திலை 90% தமிழர்கள்தான் இருந்தவை... ஆனால் இண்டைக்கு அங்கை 10 வீதமானோர் கூட தமிழை முழுமையாக அங்கே பேசுவதில்லை... இது மாதிரித்தான் மட்டக்களப்பின், திருமலையின் வவுனியாவின் முழுமையான கரையோர தமிழ் கிராமங்களிலையும் நடந்து இருக்கிறது... தென்னமரவாடி, பதவியாறு , மணலாறு கொக்கிளாய், முந்திரிக்குழம் மண்கிண்டி, மணலாறு போண்ற முழுமையான பிரதேசங்களிலையும் 100% சிங்களம் தான் பேசப்படுகிறது...

போர் எண்ற ஒண்று வராவிட்டு இருந்தால் பெரிய விகிதத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து இருக்கும்... நீர் சாகாமல் இருந்தால் இன்னும் 10 வருடத்துக்கு அதை தாராளமாக காணலாம்...

ஏன் தெரியுமே...?? உங்களை மாதிரி மர மண்டைக்கு புரியும் எண்ட நம்பிக்கையும் எனக்கு இல்லை...

மற்றவனை குழப்ப நிக்க்கிறதை விட்டு உமது அறிவை வளர்க்க முயலும்... இல்லை காசு தாறவனுக்கு வாலை தான் ஆட்டுவன் எண்றால் வாலை நறுக்க தான் வேண்டும்..

ம்......புத்தளத்துக்கு அனுப்பியவர்கள் அங்க தமிழ்தான் பேசுகிறார்கள், முந்தி இருந்தவங்கள் வெளிநாட்டுக்கு வந்து அகதித்தஞ்சம் கோரிட்டார்கள்.

1970 களில 18 லச்சமிருந்த யாழ்ப்பாணம் குஞ்சு குருமனோட சேத்து 6 லச்சமாப்போச்சு.

இருக்கிற ராணுவ குடும்பங்கள் குடியேற யாழ்ப்பாணமும் புத்தளம்மாதிரி வரும் பிறகு நோர்வேலயோ லண்டனிலயோ அவுஸ்திரேலியாவிலயோ கனடாவிலயோ தமிழீழத்த நிறுவிட்டா போச்சு. தமிழ் வழரும்.... எங்கட போராட்ட குறிக்கோளும் அதுதானே!! :wub:

ம்......புத்தளத்துக்கு அனுப்பியவர்கள் அங்க தமிழ்தான் பேசுகிறார்கள், முந்தி இருந்தவங்கள் வெளிநாட்டுக்கு வந்து அகதித்தஞ்சம் கோரிட்டார்கள்.

1970 களில 18 லச்சமிருந்த யாழ்ப்பாணம் குஞ்சு குருமனோட சேத்து 6 லச்சமாப்போச்சு.

இருக்கிற ராணுவ குடும்பங்கள் குடியேற யாழ்ப்பாணமும் புத்தளம்மாதிரி வரும் பிறகு நோர்வேலயோ லண்டனிலயோ அவுஸ்திரேலியாவிலயோ கனடாவிலயோ தமிழீழத்த நிறுவிட்டா போச்சு. தமிழ் வழரும்.... எங்கட போராட்ட குறிக்கோளும் அதுதானே!! :(

புத்தளத்தில் இருந்தவை வெளி நாட்டுக்கு வந்திட்டினமோ... என்ன 10 . 15 சனம்தான் பூர்வீக குடிகளோ...?? :wub: புலம்பெயர்ந்த நாட்டின் எத்தினை பேரை ஒரு நாளைக்கு சந்திக்கிறீர்...??

போன சனம் சிங்களம் பேசுதோ ஏற்கனவே இருந்த சனம் தமிழ் பேசுதோ எண்டு அங்கை போய் பாரும்...

யாழ்ப்பாணத்திலை 70 களிலை 18 லச்சம் பேர் யாழுக்கை இருந்தது எண்ட கனவை எப்ப கண்டனீர்... இந்தியன் வரும் போது இருந்த 10 லட்ச்சம் தான் யாழின் அதிகமான மக்கள் தொகை.... மக்கள் தொகை கணிப்பை முதலிலை எங்கையாவது தேடி எடுத்து பாரும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தளத்தில் இருந்தவை வெளி நாட்டுக்கு வந்திட்டினமோ... என்ன 10 . 15 சனம்தான் பூர்வீக குடிகளோ...?? :wub: புலம்பெயர்ந்த நாட்டின் எத்தினை பேரை ஒரு நாளைக்கு சந்திக்கிறீர்...??

போன சனம் சிங்களம் பேசுதோ ஏற்கனவே இருந்த சனம் தமிழ் பேசுதோ எண்டு அங்கை போய் பாரும்...

அண்ணே நான் அனுப்பின முஸ்லீமுகளைப்பற்றி சொன்னநான் அதுகள் தமிழ்தான் பேசுதுகள்.

யாழ்ப்பாணத்திலை 70 களிலை 18 லச்சம் பேர் யாழுக்கை இருந்தது எண்ட கனவை எப்ப கண்டனீர்... இந்தியன் வரும் போது இருந்த 10 லட்ச்சம் தான் யாழின் அதிகமான மக்கள் தொகை.... மக்கள் தொகை கணிப்பை முதலிலை எங்கையாவது தேடி எடுத்து பாரும்...

வாக்காளர்தொகையே இருந்தது.....இந்தியன் வரேக்க (86-87 ல) 10 லச்சமாயிருந்திருக்கும். 86-87 வரையில அகதித்தஞ்சம் கோரின தொகைய கணக்கில எடுத்திருந்தா சரியா வந்திருக்கும். :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:wub: மச்சான்,

உங்களோடு விதண்டாவாதம் புரிவதால் எந்தப் பயனுமில்லை என்பது தெரிகிறது.

நீங்கள் சொல்லுவதுபோல மனிதாபிமானமுள்ள எவரும் நாங்கள் சொல்வதைக் கேட்பார்கள். அதாவது உங்களது வெள்ளைக்கார வைத்திய நண்பரைப்போல ! அப்படியே அவர்களது நாட்டு அரசும் நாங்கள் சொல்வதைக் கேட்கும். ஏனென்றால் தனிமனித கருத்துத்தானே அரசின் வெளிநாட்டுக்கொள்கையையும் தீர்மானிக்கிறது?! இது முன்னமே தெரிந்திருந்தால் மனிதாபிமானம் பேசி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 30,000 பேரையும் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் என்ன, உங்களைப்போல மனிதாபிமானத்தால் வெளிநாடுகளுக்கு புரியவைக்கக்கூடிய தகுதி எங்களிடமில்லை.

ஈழத்தில் புலிகள் போராடியபோது எந்தச் சம்பந்தமுமில்லாமல் 31 நாடுகள் அவர்கலைத் தடை செய்தன. 30,000 பொதுமக்கள் வன்னியில் கொல்லப்பட்ட போது இந்த அரசுகள் பார்த்துக்கொண்டிருந்தன. நாங்கள் வீதிகளில் இறங்கியும், எங்களை நாங்களே எரித்தபோதும் கூட அவர்களது மனிதாபிமானம் எட்டிப்பார்க்கவில்லை. ஆனால் தாமே தடை செய்த ஒரு இயக்கத்தை இன்று புனர்வாழ்வளிக்க சம்மதிக்கப் போகிறார்கள். ஆகவே நாங்கள் எவரின் காதிலும் பூச் சுத்தாமல் "நாங்கள் புலிகள்தான்" என்று அறிவித்து விட்டே வருவோம். நிச்சயம் அரவணைப்பார்கள். சாதாரண பொதுமக்க்ளையே சட்டவிரோத குடியேற்றக் காரர்கள் என்று நாடு கடத்திய இந்த அரசுகள் நிச்சயம் புலிகளுக்குப் புகலிடம் அளிக்கும்.

எல்லாம் சரி, இந்த அரிய கண்டுபிடிப்புக்களை, படகுகளில் வந்து, எங்கே செல்லப்போகிறோம் என்று தெரியாமல் நடுக்கடலில் கைதுசெய்யப்பட்டு தடை முகாம்களில் இருக்கும் தமிழரிடம் சொல்லிப்பாருங்கள், அவர்களுங்களது காதில் பூச்சுற்றா வியாக்கியானங்களை நிச்சயம் பூரண மனதுடன் வரவேற்பார்கள்.

அண்ணே நான் அனுப்பின முஸ்லீமுகளைப்பற்றி சொன்னநான் அதுகள் தமிழ்தான் பேசுதுகள்.

நானும் சோனகர்களை சேர்த்துதான் சொன்னான்... அங்கை போய் பேசிப்பாரும்...

வாக்காளர்தொகையே இருந்தது.....இந்தியன் வரேக்க (86-87 ல) 10 லச்சமாயிருந்திருக்கும். 86-87 வரையில அகதித்தஞ்சம் கோரின தொகைய கணக்கில எடுத்திருந்தா சரியா வந்திருக்கும். :(

ஓட்டு மொத்தமாக புலம்பெயர்ந்தவையின் தொகை 17 லட்சமாம்... அப்பிடி பாத்தால் அரைவாசிக்கு கிட்ட இந்தியன் அங்கை போக முன்னம் புலம்பெயந்திட்டினம் போல கிடக்கே... :wub:

1960 களில் ஒட்டு மொத்த சிங்களவரின் பாராளுமண்ற ஆசனங்களின் தொகை 77 ... தமிழர்களின் ஆசனங்களின் தொகை 11.. அதே 1978 ம் ஆண்டு சனத்தொகை கணிப்பீட்டின் பின்னர் ஆசனங்களின் தொகையில் மாற்றம் கொண்டு வந்தது சிங்கள அரசு... அதில் சிங்களவர்களின் ஆசனங்கள் 190 ஆகவும் தமிழர்களின் பிரதேசங்களுக்கு 23 ஆசனங்களும் வழங்கப்பட்டது...

அதாவது ஒரு லட்டசம் சிங்களவருக்கு ஒரு ஆசனம் விகிதமும் இரண்டு லட்ச்சம் தமிழர்களுக்கு ஒரு ஆசனம் விகிதமும் வழங்கப்பட்டது... ( அப்ப எல்லாம் அமத்தி கொண்டு தான் உங்கட குஞ்சி அப்பர் மார் எல்லாம் இருந்தவை) அப்ப யாழ்ப்பாணத்திற்க்கு எத்தினை ஆசனங்கள் வழங்கப்பட்டது எண்று நீரே கண்டு பிடியும்...

அவன் திட்டம் போட்டு தமிழரை அமத்துறைதை மறைக்க என்ன மாதிரி எல்லாம் கஸ்ரப்படுகிறீயள்...

  • கருத்துக்கள உறவுகள்

உது எப்ப? எந்தக்காலம்? கிறிஸ்துவுக்கு முன்னமோ பின்னமோ? அதுசரி அவங்கள் 85% நாங்கள் 15% மானது எப்பிடி? (இப்ப 5% மாம் சொல்லுறாங்கள்) :wub:

http://easyweb.easynet.co.uk/sydney/separate.htm

ரகுநாதன்,

நீங்கள் தான் மேலே தமிழர் ஒருத்தர் பேட்டி ஒன்று கொடுத்தார் இதனால் தமிழருக்கு அகதிநிலை அங்கீகாரம் கிடைப்பது அவுஸ்திரேலியாவில் பாதிக்கப்படப்போகின்றது என்று சொல்லி இருக்கிறீங்கள்.

பிறகு நீங்கள்தான் வெளிநாட்டு அரசாங்கங்களின் கொள்கையில் எங்கள் தனிமனித கருத்துக்கள் செல்வாக்கு செலுத்தமுடியாது என்றும் சொல்லி இருக்கிறீங்கள். அப்படியானால் மேற்குறிப்பிட்ட தமிழரை நீங்கள் தூற்றுவான் ஏன்?

அவர் என்ன சொன்னாலும்.. பத்தோடு பதினொன்றாக அவரது கருத்து இருக்கப்போகின்றதேயொழிய அவுஸ்திரேலிய புலனாய்வுப்படை அவருக்கு முகமூடி அணிவித்து ஆட்களை அடையாளம் காட்டுவதற்கு தலையாட்டியாக அவரை கிறிஸ்துமஸ் தீவில் பாவிக்கப்போகின்றதா?

நான் இன்று 76தமிழர்களின் நிலைபற்றி ஓர் செய்தியை ஆங்கில ஊடகமொன்றில் பார்த்து இருந்தேன். அதில் குடிவரவு அதிகாரிகளின் விசாரணைக்காக மேற்குறிப்பிட்ட தமிழர்கள் அழைத்துவரப்பட்டபோது அவர்களது கால்களிற்கும், கைகளிற்கும் விலங்குகள் இடப்பட்டு பாரிய குற்றச்செயல்கள் புரிந்தவர்கள்போல் அழைத்துவரப்பட்டார்கள் என்று இருந்தது.

மனிதாபிமானம் என்கின்ற ரீதியில் ஒன்றும் புடுங்கமுடியாது. ஆனால் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற மனிதாபிமான சட்டங்கள் மூலம் ஏதாவது செய்யமுடியுமா என்று சட்டம் தெரிந்தவர்கள் முயற்சித்து பார்க்கலாம்.

சாதாரண பொதுமக்களை விடுங்கள், அகதி அந்தஸ்து அவர்களிற்கு கிடைப்பது அல்லது கிடைக்காதது ஒருபக்கம் இருக்க.. முன்னாள் புலி உறுப்பினர்கள் என்று இனம்காணப்பட்டவர்களின் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களின் கதி என்ன?

இது நீங்களும் நானும் விதண்டாவதாம் செய்து பயன்கிடைக்காமல் போகின்ற விடயம் என்று இல்லை. எதிர்காலத்தில் இவ்விடயங்கள் சம்மந்தப்பட்டவர்கள், உறவுகள் வேறு வழிவகைகள் பற்றி சிந்தித்து பார்க்கலாம்.

கனடாவிற்கு வந்தவர்களின் நிலை என்று பார்த்தால் வயதில் குறைந்தவர் எனும் காரணத்துக்காக ஒருவரை விடுவித்து இருக்கின்றார்கள். இங்கு பிரச்சனை என்னவென்றால் வந்தவர்கள் எல்லோரும் ஆண்கள். தவிர குழந்தைகளும் இல்லை.

எத்தனையோ பல விடயங்கள் சம்மந்தப்பட்ட சிக்கலான ஓர் விடயத்தில் ஒருவரை மட்டுமே ஏதோ சொல்லிவிட்டார் என்று நீங்கள் குற்றம் சாட்டுவது சரியாகப்படவில்லை. அவர் ஒன்றும் சொல்லாமல் வாயை மூடி இருந்தால் எல்லாரும் வாங்கோ என்று அவுஸ்திரேலிய அரசு நேசக்கரம் நீட்டி இருக்கும் என்று சொல்லுவீங்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மச்சான்,

அகதிகள் உள்ளே வருவதை கடுமையாக எதிர்த்து வரும் நிறுவனங்களும், தனிநபர்களும், தீவிர எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இவரது பேட்டியை தமக்குச் சார்பாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவுஸ்த்திரேலிய பொதுமக்களின் மன்நிலையையும், தமிழர் மீதான அண்மைக்காலமாக மாறிவரும் பரிவுப் போக்கையும் மாற்றிவிடுவார்கள். இது எமக்கு நண்மை பயக்கப்போவதில்லை என்பதைத்தான் சொல்ல வருகிறேன்.

மற்றும்படி புலிகள் புனர்வாழ்வு வழங்கப்படுவதையோ அல்லது அவர்களும் இங்கு வந்து எவரையும் போல் வாழ்வதையோ நான் மறுக்கவுமில்லை எதிர்க்கவுமில்லை. என்னைப்பொறுத்தவரை எமக்காகத் தமது இளம் வயதை தியாகம் செய்த அந்த உயர்ந்த மனிதர்கள் எங்கிருந்தாலும் நல்லொரு வாழ்வை ஆரம்பிக்க வேன்டுமென்பதுதான் விருப்பம்.

ஆனால் என்ன, இந்த அகம்பாவம் கொண்ட மேற்குலகு அவர்களையும் மனிதர்களாகப் பார்க்கும் காலம் எப்போது வருமென்று தான் தெரியவில்லை.

உங்களது கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். நாம் அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு இலகுவாக இருக்கப்போவதில்லை என்பது மட்டும் உறுதி. ஏனென்றால் வெள்ளைக்காரரில்லாத வேறு எந்த முன்னாள்ப் போராளியையும் மனிதாபிமானத்துடன் நடத்தும் மனப்போக்கு மேற்குலகிடம் இன்னும் இல்லை என்பதுதான் மனவேதனை.

உங்கள் கருத்துக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.