Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்மொழி மாநாட்டு ஆய்வரங்க குழு தலைவராக சிவத்தம்பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், அதிக மக்களாதரவு என்பது, மக்களை அறிவிலிகளாக்கி வைத்ததால் ஏற்பட்ட இலாபம்... அது நிரந்தரமானது அல்ல. ஆனால் அறிஞர்களையும் அறிவிலிகளாக்க முடியுமென்றால்...?

நீங்கள் வேறு இடுகையில் கூறிய 50,000 மக்கள் கொலையுண்டதையும் 31/2 இலட்சம் மக்கள் முள்வேலியில் அடைபட்டதையும் (சிவத்தம்பி அய்யா)இவர் தான் மறக்கின்றார் போலும்...அப்படியென்ன நன்னிலை உள்ளது தலைமை பொறுப்பேற்க்க? மேலும் நாம் துயர சூழலில் இருக்கும் போது (என்னதான் எங்கள் மாநகரில் நடப்பதாக இருந்தாலும்)இந்த மாநாடே அருகதையற்றது.

தமிழ்நாட்டு மக்கள் அறிவிலிகளாக இருக்கிறார்கள் என்று மட்டம் தட்டுவது பானையைப் பார்த்து சட்டி கறுப்பு என்று சொல்லுமாப் போலுள்ளது.

50 000 மக்கள் கொல்லப்பட்டதையும், 3 1/2 லட்சம் மக்கள் அவலப்படுவதையும் சிவத்தம்பி மட்டுமல்ல பலரும் மறந்துதான் செயற்படுகின்றார்கள்.

செம்மொழி மாநாடு நடக்க இன்னமும் பல மாதங்கள் உள்ளன. அப்போதும் துக்கத்தில் தமிழர்கள் இருப்பார்கள் என்று சொல்லுவது சரியல்ல. இந்த வருடம் நல்லூர் திருவிழாவிலும், அதன் பின்னர் அரசால் நடாத்தப்பட்ட களியாட்டங்களிலும் யாழ் மக்கள் பங்குகொள்ளாமல் வீட்டுக்குள்ளா இருந்தார்கள்? புலம்பெயர் நாடுகளில் களியாட்டம் நின்றுபோய் விட்டதா என்ன?

செம்மொழி மாநாட்டில் அரசியல் வேண்டாம்!

'இலங்கை தமிழறிஞரும் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பி செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வாரா... மாட்டாரா?' என்பதுதான் தமிழகத்தில் பரபரப்பு விவாதமாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கை தெகிவல பகுதியில் வசிக்கும் 77 வயதான சிவத்தம்பியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்:

''கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ் மாநாட்டுக்கு உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் ஏன் அனுமதி வழங்க வில்லை?''

''உலகத்தில் எங்கு உலகத் தமிழ் மாநாடு நடந்தாலும் உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்திடம் முன்கூட்டியே தெரிவித்து, அவர்களுடன் இணைந்து நடத்துவதுதான் வழக்கம். தற்போது அந்த கழகத்துக்கு நெபுரூ கரோஷிமா தலைவராக இருக்கிறார். அமைப்பின் செயலாளர்களில் ஒருவராக நான் இருக்கிறேன். இந்தியப் பிரிவு தலைவராக வா.செ.குழந்தைசாமி இருக்கிறார். தமிழக முதல்வர் கலைஞர் மாநாட்டை முதலில் பிப்ரவரி மாதம் நடத்துவோம் என அறிவித்தபோது, 'இவ்வளவுகுறைவான நேரத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க முடியாது!' என உலகத் தமிழறிஞர்கள் கருதினர். அதனால்தான் மாநாட்டை 2011-ம் வருடம் ஜனவரி மாதம் நடத்தும்படி கரோஷிமா கூறினார்.

ஆனால், தமிழகத்தில் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வைத்து அவ்வளவு காலம் தள்ள முடியாது என கலைஞர் கருதுவதாகத் தெரிவித்தார். ஆனாலும் கரோஷிமா சில விஷயங்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டினார். ஆகவே, ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரனிடம் உலகத் தமிழ் மாநாடு என்பதற்கு பதிலாக உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என நடத்தலாம் என்ற என் எண்ணத்தைச் சொன்னேன். அதன்படியே அந்த மாநாடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டில் நெபுரூ கரோஷிமாவும் கலந்துகொள்வார் என நம்புகிறேன்.''

''இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதி நடந்துகொண்ட விதம் திருப்தி அளிக்காததால், மாநாட்டில் நீங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என செய்திகள் வெளியாகியிருக்கிறதே....?''

''முதலில், இந்த விவகாரம் தொடர்பாக நான் தெரிவித்த கருத்துகள் சற்றுத் தவறான கண்ணோட் டத்தில் பார்க்கப்பட்டது. நானும் சில கருத்துகளை லேசான தடுமாற்றத்துடன் தெரிவித்தேன். இப்போது ஜூ.வி-க்கு நான் சொல்லும்

விஷயங்களை, கோவை உலக செம்மொழித் தமிழ் மாநாடு தொடர்பான என் தெளிவான, இறுதியான, உறுதியான நிலைப்பாடாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்...

கடந்த ஒன்பது ஆண்டுகளில் சர்வதேச அளவில் தமிழுக்காக மாநாடு நடக்காத நிலையில், அதிலும் தமிழ் செம்மொழி ஆன பிறகு இந்த மாநாடு நடப்பதை மகிழ்வுடன் வரவேற்கிறேன். அதோடு, மாநாட்டில் கலந்துகொள்ளும் ஆர்வமும் எனக்கிருக்கிறது. என் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பார்க்கையில்,அதில் கலந்துகொள்வது குறித்து உடனே என்னால் தெரிவிக்க இயலாது. உரிய நேரத்தில் என் முடிவைத் தெரிவிப்பேன். இதில் சிலர் தங்களுடைய ஆசைகளையும் எண்ணங்களையும் என் மேல் திணிக்க முயல்கிறார்கள். நான் தமிழை நேசிப்பவனே தவிர, அரசியலை அல்ல.''

''மாநாட்டுக்கு தங்களை வரவிடா மல் தடுக்க சில ஆதிக்க சக்திகள்முயல் வதாக கருணாநிதி சொல்லியிருக்கிறாரே?''

(பலமாகச் சிரிக்கிறார்...) ''இதில் கலைஞர் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். அவர் என்னை மாநாட்டுக்கு வரவேண்டுமென அழைப்பு விடுத்திருக்கிறார். நானும் பரிசீலிப்பதாகச் சொல்லி யிருக்கிறேன். மற்றபடி, நான் மாநாட்டுக்கு வருவதை தடுக்க சில சக்திகள் விரும்புவதாகச் சொல்லப்படும் அரசியலுக்குள் நான் வர விரும்பவில்லை. அரசி யல் வேறு, தமிழ்மொழி வேறு. இரண்டையும் கலக்கவேண்டாம். நான் மாநாட்டுக்கு செல்ல முடிவெடுத்து விட்டால், என்னை யாராலும் தடுக்க முடியாது!''

''கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் என்னென்ன விஷயங்கள் விவாதத்தில் இடம்பெற வேண்டும்?''

''இந்த மாநாட்டில் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. செம்மொழி பற்றிய கொள்கைகள்... குறிப்பாக, தமிழ் செம்மொழி ஆன பிறகு அதற்கான கொள்கை வரைவு செய்யப் பட வேண்டும். சைனீஸ், கிரீக், சம்ஸ் கிருதம், லத்தீன், ஹீப்ரு போன்ற உலகச் செம்மொழிகளின் கொள்கைகளை ஆராய்ந்து, அவற்றுடன் செம்மொழி தமிழை ஒப்பிட்டு... கொள்கைகள் வரைவு செய்யப்பட வேண்டும். இந்திய மொழி வம்சம் பற்றிய அறிமுகங்களோடு, சுமேரிய மொழியும் தமிழும், ஜப்பானிய மொழியும் தமிழும் போன்ற விஷயங்களும் ஆராயப்பட வேண்டும். இந்தோ - ஆரியன், இந்தோ - ஆரியன் - திராவிடன் போன்ற கலாசாரங்களும் ஆய்வு செய்யப்பட வேண்டும். மருத்துவம், வானியல் மற்றும் ஜோதிடத்தில் செம்மொழியாக தமிழ் பயன்படும் விதம், தமிழகத்தில் ஆட்சிமொழியான தமிழ், இலங்கையில் தமிழ், மலேசியா - சிங்கப்பூர் - தென்னாப்பிரிக்காவில் தமிழின் வளர்ச்சி நிலை, மேற்கத்திய நாடுகளில் சமகால மொழியாக இருந்த தமிழைப் பற்றிய ஆய்வுகள் ஆகியவை நடத்தப்படவேண்டும். இவைதான் செம்மொழி யான தமிழை இன்னும் பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஜொலிக்கச் செய்யும்!''

''இலங்கையில் தமிழர் கள் முள்வேலிக்குள் கடும் அவதிப்படும் சூழலில் இந்த மாநாடு எந்தளவு அவசியம்?''

''உலக நாடுகள் மற்றும் ஐ.நா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் முள்வேலி அவதி பற்றி வருத்தம் தெரிவித்திருக்கின்றன. தமிழர்கள் விரைவில் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் என் எண்ணம். தமிழ் மொழி மாநாடு என்பது, தமிழுக்கான கௌரவம். எனவே, இந்த விஷயத்தையும் தமிழ் மொழி மாநாட்டையும் இணைத்துப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.''

''இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தனக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை துடைக்கவே இந்த நேரத்தில் செம்மொழி மாநாட்டை கருணாநிதிநடத்துவதாக தமிழர் அமைப்புகள் குற்றம் சாட்டு கின்றனவே?''

''இம்மாநாடு அரசியலைத் தாண்டியதாகும். இதற்கு அரசியல் சாயம் பூச முயலக் கூடாது. அதை விடுத்து தமிழ் மொழி பற்றிய சீரியதோர் மாநாட்டினை அரசியலாக்கி, அதற்குக் களங்கம் கற்பிப்பது அழகல்ல..!''

இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் பிறந்தவர் கார்த்திகேசு சிவத்தம்பி. இலங்கையில் பட்டப்படிப்பு; லண்டன் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 17 ஆண்டுகள் பணியாற்றியவர். பிறகு உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். தமிழ், சமயம், சமூகவியல், மானுடவியல், அரசியல், வரலாறு, கலாசாரம், நுண்கலைகள் என பல துறைகளிலும் பரந்து விரிந்த ஆர்வம் காட்டிய சிவத்தம்பி, இது தொடர்பாக எண்ணற்ற நூல்களையும் எழுதியுள்ளார். கடந்த 95-ம் ஆண்டு (அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்) நடந்த உலகத்தமிழ் மாநாட்டின்போது விமானநிலையத்திலேயே அவரைத் திருப்பி அனுப்பிவிட்டனர். இந்த சர்ச்சை அப்போது உலகம் முழுவதும் தமிழறிஞர்கள் மத்தியில் பெரிய சலசலப்பைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க அமைப்புக் குழுவின் தலைவராக சிவத்தம்பியை நியமித்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு. இந்தக் குழுவின் ஓர் உறுப்பினராக ராஜ்யசபா எம்.பி-யான கனிமொழியும் இடம்பெற்றிருக்கிறார்!

- மு.தாமரைக்கண்ணன்

நன்றி: ஜூனியர் விகடன், அக்டோபர் 2009

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இம்மாநாடு அரசியலைத் தாண்டியதாகும். இதற்கு அரசியல் சாயம் பூச முயலக் கூடாது. அதை விடுத்து தமிழ் மொழி பற்றிய சீரியதோர் மாநாட்டினை அரசியலாக்கி, அதற்குக் களங்கம் கற்பிப்பது அழகல்ல..!''

ஐயா! நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்... உண்மையிலேயே நீங்கள் நினைக்கின்றீர்களா இது அரசியல் தாண்டிய மாநாடு என்று?

அரசியல் தாண்டியதாகவிருந்தால் ஏன் கனிமொழிக்கு முக்கிய பொறுப்புக்கள்? கனிமொழி பெரிய தமிழ் பண்டிதையோ? யாராவது இதுவரையில் கனிமொழியின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தமிழ் படைப்புக்களை வரிசைப்படுத்தமுடியுமா? கனிமொழியின் தமிழ்மொழியின் இலட்சணத்தை இங்கு பாருங்கள்..

[

Edited by காட்டாறு

ஐயா! நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்... உண்மையிலேயே நீங்கள் நினைக்கின்றீர்களா இது அரசியல் தாண்டிய மாநாடு என்று?

காட்டாறு,

என்னை quote பண்ணியமையால், ஏதோ நான் சொன்ன மாதிரி இருக்கு.... பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் சொன்னதாக காட்டுங்களப்பா...

விகடனில் வந்த ஒரு பின்னூட்டல் மிக தெளிவாக ஒன்றை பின்வருமாறு சொன்னது

" திரு. சிவத்தம்பி, அரசியலும், தமிழ்மொழியும் வேறு வேறானாலும், கலைஞர் இதை அரசியலுக்காகத்தானே நடத்துகிறார்??????இதை நடத்த கலைஞர்க்கு என்ன அருகதையிருக்கு???மேலும் லோக்கல் ஜால்ரா போரடித்து விட்டது போலும்! அதனால்தால் வெளிநாட்டு ஜால்ராவை வரவழைக்கிறார் போலும் இதை திரு. சிவத்தம்பி, புரிந்துகொள்ளவேண்டும்.....தம்பியின் தம்பி "

இதனை விட சாதாரண தமிழில் வேறு என்னத்தை சொல்வது?

Edited by நிழலி

  • தொடங்கியவர்

தமிழா அல்லது தமிழனா? எது முக்கியம்?

தமிழன் இல்லாது தமிழ் எங்கே?

கிருபன்:

1) பெரும்பான்மை தமிழ்நாட்டு மக்கள் அறிவிலிகளாக இருப்பதால் தான் முக்கிய காலக்கட்டத்தில் காசை வாங்கி அதற்கு மதிப்பளித்து ஓட்டு போட்டனர்.

2) வரலாற்றில் அழியாத வடு தமிழன் பெற்ற வடு. இது எத்தனை ஆண்டென்றாலும் மாறாது.

3) யாழில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த தேசத்திலும் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றதுதான், என்ன செய்வது யார் அவதிப்பட்டால் என்ன சிங்களவனின் துப்பாக்கி முனையில் உட்கார்ந்து மூத்திரம் பெய்வது சாவதைவிட மேல் என்று நினைக்கின்றனர் சிலர்.

  • கருத்துக்கள உறவுகள்

1) பெரும்பான்மை தமிழ்நாட்டு மக்கள் அறிவிலிகளாக இருப்பதால் தான் முக்கிய காலக்கட்டத்தில் காசை வாங்கி அதற்கு மதிப்பளித்து ஓட்டு போட்டனர்.

உங்கள் கருத்துச் சரியாய் இருந்தால் ஜெயலலிதா அமோகமாக எல்லாத் தேர்தலிலும் வென்று தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்கவேண்டும். அவரிடம் இல்லாத பணமா! தி.மு.க. கூட்டணி அரசியல் மூலமாகத்தான் வெற்றிபெற்றது. அதிக வாக்கு வங்கிகள் இல்லாத கட்சிகளுடன் கூட்டுவைத்துத்தான் ஜெயலலிதாவால் வெல்ல முடியவில்லை. மேலும் தமிழ்நாட்டு மக்களின் கல்வியறிவு ஈழத்தமிழரின் கல்வியறிவை விட அதிகம் தாழ்ந்துபோய் விடவில்லை.

பேரா.சிவத்தம்பி எப்படியும் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வார் என்றுதான் அவருடைய அறிக்கைகள் சொல்லுகின்றன. நல்ல ஆய்வுக் கட்டுரையோடு செல்லட்டும்.

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துச் சரியாய் இருந்தால் ஜெயலலிதா அமோகமாக எல்லாத் தேர்தலிலும் வென்று தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்கவேண்டும். அவரிடம் இல்லாத பணமா! தி.மு.க. கூட்டணி அரசியல் மூலமாகத்தான் வெற்றிபெற்றது. அதிக வாக்கு வங்கிகள் இல்லாத கட்சிகளுடன் கூட்டுவைத்துத்தான் ஜெயலலிதாவால் வெல்ல முடியவில்லை. மேலும் தமிழ்நாட்டு மக்களின் கல்வியறிவு ஈழத்தமிழரின் கல்வியறிவை விட அதிகம் தாழ்ந்துபோய் விடவில்லை.

நீங்கள் அறிந்த உண்மை அவ்வளவே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.