Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழக மாணவர் உதவியில் மோசடியா ? செல்வாக்கா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர் உதவியில் மோசடியா ? செல்வாக்கா ?

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து பல மாணவர்கள் தமது பல்கலைக்கழக மற்றும் பாடசாலைக்கல்வியைக் கற்க முடியாத பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறார்கள். இந்த மாணவர்களுக்கு சில அமைப்புக்களும் பல தனிநபர்களும் அங்கங்கு உதவிக் கொண்டுமிருக்கிறார்கள்.

இத்தகைய உதவிகளை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வரவேண்டுமென சில ஒன்றியங்களின் செயற்பாட்டாளர்கள் முயற்சி செய்வதும் வரவேற்கத்தக்க விடயம். ஏற்கனவே தமிழர்களுக்காக இருந்த கட்டமைப்புகள் போல ஒரு அமைப்புத்தான் இருக்க வேண்டும் அதன் ஊடாகத்தான் உதவிகள் கொடுபட வேண்டுமென்ற விதியை இனியும் நாங்கள் எழுதி வைக்க வேண்டுமா ?

ஏற்கனவே நாம் உதவவிரும்பின் அது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மட்டும்தான். அதைத்தான் நாமும் எல்லாருக்கும் சிபாரிசு செய்தோம். மற்றும் எந்த நிறுவனங்களையும் நாம் வளர விடவுமில்லை வளர்க்கவுமில்லை. அதன் விளைவு இன்று தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் கையில் பலகோடிகள் இருந்தும் அது சிலரது சொத்தாகிவிட்டது. தேவையானவர்களுக்குப் பயன்படாமல் தனிச்சொத்தாக அங்குமிங்கும் அடிபாடும் இழுபாடும் நடக்கிறது.

இதுபோன்றதொரு நிலமைக்கு இட்டுச் சென்று அடுத்தும் ஒற்றை நிறுவனங்களை உருவாக்குவதை விட்டு மேலும் பல உதவும் அமையங்களை தமிழர்கள் உருவாக்குவதுதான் சிறந்தது என்பது எனது கருத்து.

இன்னும் பல உதவும் அமையங்களை அமைய ஏற்கனவே இருக்கும் அமையங்கள் வழி விடவேண்டும். ஒன்றில்லாவிடில் அடுத்த அமையத்தால் உதவிகள் சென்று கொண்டிருக்க வேண்டும். ஒரு அமைப்பால் எல்லா மாணவர்களது தேவைகளையும் பூர்த்தி செய்வது இலகுவானது அல்ல. இதை குறிப்பிட்ட சில சங்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் *வன்னித் தமிழ்ச் சங்கம்* கனடாவிலிருந்து யாழ் மற்றும் பிற மாவட்டங்களிலுள்ள தமிழ் மாணவர்களுக்கு உதவுகிறது. தற்போது சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பும் தனது உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. இவற்றை விடவும் தனிநபர்கள் மற்றும் சில நண்பர்கள் இணைந்தும் தேவைகளைப் பொறுத்து உதவி வருகின்றனர்.

இவற்றில் வன்னித் தமிழ்ச் சங்கம் செய்யப்படும் உதவிகள் அவர்களால் சொல்லப்பட்டது போல உண்மையில் உதவி தேவைப்படும் மாணவர்களுக்குப் போய்ச் சேரவில்லை. பல மாணவர்கள் இந்தச் சங்கத்திடம் தமது விண்ணப்பங்களை எழுதிக் கொடுத்துவிட்டு கப்பல் வருமா கப்பல் வருமா என வன்னி மக்கள் காத்திருந்தது போலக் காத்திருக்கிறார்கள்.

இப்படிக் காத்திருக்கும் மாணவர்கள் பலரிடம் ஒரு நூறு ரூபாய் கூட இல்லாத நிலையில் இந்த அமைப்பைச் சார்ந்தவர்களுடன் தொடர்பு கொள்ள தொலைபேசியெடுத்துத் தமது நிலமையை விளக்கியும் இன்னும் எதுவும் கிடைக்காத நிலமையில் இருக்கிறார்கள். இவர்களை விட இன்னும் சிலருக்கு ஒரு தரம் அல்லது இருதரத்துடன் உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவர்கள் உதவுவார்கள் என்று இன்னும் பலர் நம்பியிருக்க என்ன செய்வதென்று தெரியாத நிலையில் மேலும் பல மாணவர்கள் வன்னித் தமிழ்ச் சங்கத்தை நம்பியிருக்கிறார்கள்.

இதற்கான காரணம் வன்னித் தமிழ்ச் சங்கமா அல்லது வன்னித் தமிழ்ச் சங்கத்தின் உதவியைப் பங்கீடு செய்யும் பங்கு பிரிப்போரா என்பது புரியவில்லை. எதுவாயினும் இவற்றைக் கண்டறிந்து நடவடிக்கைகள் எடுப்பது வன்னிச் சங்கத்தின் பொறுப்பானவர்களின் பொறுப்பே. இத்தகைய உதவிகள் கிடைக்காமை தொடர்பாக வன்னித் தமிழ்ச் சங்கத்தின் தொடர்பாளர் ஒருவருக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இந்தத் தவறு குறித்து வன்னித் தமிழ்ச் சங்கம் நடவடிக்கை ஏதும் எடுத்ததாகவும் தெரியவில்லை. ஆனால் எவராவது பல்கலைக்கழக மாணவர்களுக்கோ அல்லது முகாம்களிலிருந்து வெளிவந்திருக்கும் ஆதரவற்ற சிறுவர்களுக்கோ உதவிகள் கோரினால் உடனடியாக இந்தச் சங்கம் தம்முடன் இணையுங்கள் ஒரு குடையின் கீழ் இயங்குவோம் என்ற விண்ணப்பத்தை வைத்துவிடுகிறது. குறிப்பிட்ட சிலருக்கு தொடர்ந்து உதவிகள் கிடைப்பதை மட்டுப்படுத்தலாம் என்றொரு ஆலோசனையையும் வழங்குகிறார்கள். ஆனால் உதவிகள் கிடைக்கிறது என இவர்களால் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு இவர்களால் வாக்குறுதியழிக்கப்பட்ட உதவி கிடைக்காமல் இன்னும் அவதிப்படுகிறார்கள் பலர்.

இந்த நிதிகளைப் பங்கீடு செய்து கொடுக்கும் மாணவர் பிரதிநிதிகள் மற்றும் பேராசிரியர்கள் கூட செல்வாக்குச் சார்ந்தும் முன்னுரிமை கொடுத்து உதவுவது கூட நடைபெறுகிறது.

மேமாதம் அளவில் 3யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவிகள் கோரியிருந்தேன்.

வவுனியாவில் ஒரு நண்பர் தனது அலுவலாகச் சென்ற ஓர் அலுவலகத்தில் ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு உதவி கோரிய விண்ணப்பத்துடன் அங்குமிங்கும் அலைந்ததைக் கண்டார். அங்கு அவர்கள் கேட்கும் எதனையும் சரியாக புரிந்து கொள்ள முடியாத ஒரு ஏழைத்தாய் அந்தத்தாய். ஏற்கனவே தனது ஒரு பிள்ளையை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் இழந்தவர். தனது மிஞ்சிய 3பிள்ளைகளுக்காக உதவிகள் கேட்டுக் கடைசி முயற்சியாக அந்த இடத்தில் வந்திருப்பதைக் கண்ணீரோடு தெரிவித்தார். அப்பிள்ளைகளுக்கு உதவி கோரிய நண்பர் அந்தத்தாயுடன் தொடர்பெடுத்துத் தந்தார் பேசுவதற்கு. அந்தத்தாயின் அழுகை இன்னும் காதுக்குள் கேட்டபடியிருக்கிறது. எத்தனை பேரிடம் தனது பிள்ளைகளுக்கு உதவும்படி அந்தத்தாய் ஏறியிறங்கியிருக்கிறாள் என்பது அந்தத்தாயின் கண்ணீரால் வெளிப்பட்டது.

ஏற்கனவே அந்தத்தாயின் பிள்ளைகள் வன்னித் தமிழ்ச் சங்கத்திடம் தமது விண்ணப்பங்களை அவர்களது தொடர்பாளர்களிடம் விண்ணப்பித்துவிட்டுக் காத்திருந்தார்கள். எதுவும் உதவி கிடைக்காத நிலையில் தன் பிள்ளைகளுக்கு ஒவ்வொருவரும் சொல்லும் அலுவலகங்களுக்கு அவர்களது விபரங்களோடு திரிந்த அம்மாவிடம் இனி யாரிடமும் அலையாதீர்கள் என அறிவித்துவிட்டு நமது நண்பர்கள் வட்டத்திற்குத் தெரிவித்தேன்.

இரு மாணவர்களுக்கு ஒருவர் உதவ முன்வந்தார். அந்த நண்பர் இதுபற்றி இந்த வன்னித் தமிழ்ச் சங்கத்திடம் கூறியிருந்தார். உடனடியாக வன்னித் தமிழ்ச் சங்கம் தம்மிடம் அந்த மாணவர்களின் விபரங்கள் வந்திருக்கிறது தாம் உதவுவதாக வாக்குறுதி தந்தார்கள். சொல்லப்பட்ட 2வாரத்தில் ஒரு மாணவருக்கு வன்னித் தமிழ்ச் சங்கத்தினால் இலங்கை ரூபாவில் பத்தாயிரம் (இரண்டு மாதங்களுக்கானது) யூன் மாதம் கிடைத்தது. ஆனால் வன்னித் தமிழ்ச் சங்கத்திலிருந்து தொடர்பு கொண்டவர் தாம் முப்பதாயிரம் ரூபாய் (ஆறு மாதங்களுக்கான தொகை) கொடுத்திருப்பதாகவும் ஏனையவர்களுக்கும் அடுத்துச் சிலவாரங்களில் உதவுவதாகத் தெரிவித்தார்கள்.

ஆனால் யூலைவரை ஏனைய இருவருக்கும் உதவிகள் கிடைக்கவில்லை. உதவிகள் சென்றடையும் என்ற நம்பிக்கையில் நாமும் அதனை அப்படியே விட்டுவிட்டோம். ஆனால் ஒரு மாணவருக்குக் கொடுக்கப்பட்ட பத்தாயிரம் ரூபாவைத் தவிர வன்னித் தமிழ்ச் சங்கத்தால் இதுவரையும் எந்தவித நிதியும் கொடுக்கப்படவில்லை.

எதிர்பாராமல் செப்டெம்பர் இந்த மாணவர்களது தாயாரிடம் தொடர்பு கொண்டு உதவிகள் கிடைக்கிறதா எனக் கேட்ட போதுதான் மேற் குறிப்பிட்ட பத்தாயிரம் ரூபா மட்டும் கொடுபட்டது தெரியவந்தது. உதவி கிடைக்கப்பெற்ற மாணவனோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போதுதான் தெரிந்தது அவரது சகோதரர்களும் இன்னும் பலரும் வன்னித் தமிழ்ச் சங்கத்தை நம்பிக் காத்துக் கொண்டிருப்பது.

இதன் பின்னர் மீண்டும் உதவி கோரி நான் இணையத்தில் போட்டபோது இந்தச் சங்கம் வாயும் திறக்கவில்லை. இணையத்தில் செய்தியைப் பார்த்துவிட்டுப் பல மின்னஞ்சல் உதவ விரும்பம் தெரிவித்து வந்தது. ஆனால் சிலர் உதவத் தயாராக இருப்பதாயும் அவர்களது கணக்கிலக்கத்தையும் கேட்டார்கள். 3மாணவர்களுக்குமான 4மாதங்களுக்குமான உதவிகள் ஒக்ரோபர் 6ம் திகதி கிடைக்கும் வகை செய்துள்ளார்கள்.

இந்த மாணவர்கள் ஊடாக மேலும் சிலருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களிடம் தொடர்பு கொண்ட போது பலர் வன்னித் தமிழ்ச் சங்கத்திடம் உதவிக்கு விண்ணப்பித்துவிட்டு வேறு எந்த வழியையும் தேடாமல் இருக்கின்ற உண்மை புரிந்தது.

இப்படித் தொடர்பு கொண்ட ஒரு மாணவிக்கு ஒரு குடும்பத்திடம் உதவி கேட்டேன். அவர்கள் சம்மதித்தார்கள். அவர்களது உறவினரான பேராசிரியர் ஊடாக ஒரு மாதம் உதவி கிடைத்தது. மறுமாதம் உதவி போகவில்லை. காரணம் கேட்ட போது சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தார்கள். கனடா வன்னித் தமிழ்ச் சங்கத்திலிருந்து அந்த மாணவி உதவி பெறுவதாக அந்தப் பேராசிரியர் சொன்னதாக. அவர்கள் அவளுக்கான உதவியை நிறுத்திவிட்டார்கள்.

அந்த பேராசிரியர் நாம் உதவி கோரும் வரை தனது உறவினருடன் எதுவிதமான மாணவர்களுக்கான உதவிகள் தேவை பற்றி கூறவுமில்லை உதவிகள் கோரவுமில்லை. ஆனால் குறித்த மாணவிக்காக அவர்கள் அனுப்பிய பணத்தை தான் வேறு மாணவர்களுக்கு கொடுக்கப் போவதாகவும் மாணவர்களுக்கு உதவுமாறும் கோரிக்கை விட்டுள்ளார்.

அந்த மாணவியைக் குறித்த பேராசிரியரின் வீட்டிற்குச் சென்று பணத்தை வாங்கும்படி பண உதவி செய்தவர்கள் கூறியுள்ளார்கள். பேராசிரியர் அந்த மாணவியை விசாரணை செய்ய வேண்டுமாம் எங்கிருந்தாவது உதவி கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய.

உண்மையிலேயே அந்த மாணவிக்கு வன்னித் தமிழ்ச் சங்கத்தால் எதுவும் கிடைக்கவில்லை. பேராசிரியரின் வீட்டுக்குப் போகாமல் இதனைத் தனது தாயாருக்குச் சொல்லி அழுதிருக்கிறாள். ஏற்கனவே குடும்பம் திக்கொன்றாய் பிரிந்த நிலையில் இருக்கும் இந்த மாணவியின் நிலைபற்றி அவளது தாயார் தொலைபேசியில் தெரிவித்திருந்தார். தற்போது அந்த மாணவிக்கு லண்டனிலிருந்து ஒருவரால் 2மாதங்களுக்கான கொடுப்பனவு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா முகாம்களுக்குள்ளிருந்து வெளிவந்த பல மாணவர்கள் கடந்த 2வருடங்களாக முல்லைமாவட்டத்தில் பாடசாலை போகாது இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நமது *நேசக்கரம்* நண்பர்கள் வட்டத்தினால் கற்றலுக்கான உதவிகள் கொடுக்கப்படுகிறது. சில மாணவர்களை பொறுப்பேற்றுக் கவனிக்கிறோம். (பங்களிப்போருக்கு விபரங்கள் பயனாளர்கள் பயன்பெற்றமைக்கான கடிதங்கள் மற்றும் சிலருக்கு நேரடித் தொடர்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது)

இவர்களுக்கான உதவிகள் கோரிய செய்தியொன்றும் அண்மையில் வெளியிட்டிருந்த போது இதே வன்னித் தமிழ்ச் சங்கத்திலிருந்து நண்பர் ஒருவர் அவசர அவசரமாக தொடர்பு கொண்டு தமது ஒன்றியத்துடன் இணைப்பை ஏற்படுத்துமபடி கோரினார். இணைந்த கூட்டு முயற்சியால் பலர் பயனடையலாம் என்ற நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நல்நோக்கில் இணைந்து செயற்படுதலில் எந்த முரண்பாடுமில்லை. ஆனால் எல்லாரும் என் பின்னால் வாருங்கள் எல்லாவற்றையும் எல்லாரையும் ஒரு குடையின் கீழ் நிறுத்திச் செயற்படுவோம் என்பது தற்போதைய நிலையில் தமிழரைப் பொறுத்தவரை இயலாத விடயம். ஒரு அமையத்தின் கையில் நிதிகள் குவிய வேண்டும் என்பதும் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இயங்க வேண்டும் என்ற எழுதாத விதியில் இதுவரை இயங்கியதால் தமிழினம் பெற்ற வெற்றி எல்லாவற்றையும் இழந்தது தான் என்பதை இந்தச் சங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாடுகளிலும் பல நிறுவனங்கள் இயங்குகின்றது. ஒற்றைக் குடையில் வடம் பிடிக்க வேண்டுமென்ற சட்டத்தை வைக்காமல் பல நிறுவனங்கள் செயற்படுகின்றன. இவற்றால் பல நாடுகள் பயன்பெறுகின்றன. அது போல ஏன் நாங்களும் உதவும் நிறுவனங்களை உருவாவதைத் தடுக்க வேண்டும் ?

இங்கிருந்து பணம் சேகரித்து அனுப்புவது என்பது எவ்வளவு சிரமம் என்பதை நாமும் புரிந்து கொள்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் எங்கள் தலையில் வையுங்கள் நாங்கள் சுமந்து போய் கொடுக்கிறோம் என்ற எண்ணத்தை வன்னித் தமிழ்ச் சங்கம் கைவிடுவது நல்லதே.

எமது மக்களுக்கு இப்போது தேவையானவற்றை உங்கள் ஒரு சங்கத்தால் மட்டும் நிறைவேற்ற முடியாது. ஏற்கனவே உங்களால் செய்யப்படுகிறதாகச் சொல்லப்படும் உதவிகள் சரியாகச் சென்றடையவில்லை. இவற்றை முதலில் சரிபாருங்கள். காலப்போக்கில் இன்று சிறியளவில் இயங்கும் ஒன்றியங்களோ மற்றும் நிறுவனங்களோ ஒன்றாகும் நிலமையை உருவாக்கலாம்.

வன்னித் தமிழ்ச் சங்கத்தின் சேவையில் குறைபிடிக்கும் எண்ணம் அல்ல இக்கட்டுரையின் நோக்கம். உங்கள் உழைப்பை உங்கள் நடுவில் நின்று நடைமுறைப்படுத்தும் தரகர்களின் மோசடிகளை அல்லது செல்வாக்கைக் கண்டறியுங்கள். உதவி கோரியுள்ள மாணவர்கள் ஏதோ பிச்சையெடுக்க வரிசையில் நிற்பது போல கெஞ்ச விடாதீர்கள். வசதியுள்ளவர்கள் முன்னால் வசதியற்றோர் மண்டியிட்டு இறைஞ்ச வேண்டுமென்ற எங்கள் தரித்திரம் பிடித்த தமிழ்க் குணத்தை இனங்காணுங்கள். வசதியுள்ளவர்கள் பலருக்கு மேலதிகமாக உங்கள் சங்கத்தின் பணம் போகிறது. இதனைக் கண்டறிந்து உண்மையாக உதவி தேவைப்படுவோருக்கு உங்கள் பணத்தைச் செலவிடச் செய்யுங்கள். தவறுகள் உங்கள் சங்கத்தின் பெயரால் நடைபெறுவதைத் தெரிவித்துள்ளேன். எங்கே எந்த இடத்தில் என்பதைக் கண்டுபிடியுங்கள். உங்கள் நல்நோக்கம் தேவையானவர்களுக்குக் கிடைக்க வழி செய்யுங்கள்.

31.10.09

தமிழர் புனர்வாழ்வுக்க கழகம் தான் புலம்பெயர் தேசத்தில் ஒரேயொரு அமைப்பு அல்ல பல நிறுவனங்கள் செயற்பட்டுள்ளன.செயற்படுகின்றன. போராட்டத்தின் கால ஓட்டங்களுக்கு ஏற்ப புலம் பெயர் மக்களால் அவ்வப்போது நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுத்தான் வந்துள்ளன. உதாரணமாக அமெரிக்காவில் IMHO, TRRO இவ்வாறு TRO சமனான பலமான நிறுவனங்கள் இருக்கின்றன.சுனாமி காலப்பகுதியில் TRO வினை விட இந்த நிறுவனங்கள் மட்டுமன்றி கனடாவிலும் பல நிறுவனங்கள் நிதி சேகரித்தன. ஆகவே புனர்வாழ்வு கழகம் இலங்கையில் பலம் வாய்ந்த அதே நேரம் இயக்க கட்டுப்பாட்டிலும் கூடுதலாக வேலை செய்ததால் அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி செய்யப்பட்டது. வேலைத்திட்டம் செய்யாத நிறுவனங்களுக்கு நிதி கொடுத்து என்ன பயன்?

TRO இன் கோடிக்கணக்கான நிதிகள் ஒருசிலரது கைகளில் புரள்வதாக சாந்தி அவர்கள் சொல்வது எதனை அடிப்படையாக வைத்து சொல்கின்றார்.TRO ஒவ்வொரு நாட்டிலும் ஐந்து தொடக்கம் 11 பேர் கொண்ட நபர்களினால் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. சட்ட ரீதியான கணக்குகளும், ஆவனங்களும் உள்ளன. ஒருசிலர் சுருட்டி கொண்டு போவதற்கு இது ஒருவர் இருவர் நடத்தும் இணைய வானொலி அல்ல.

வங்கி கணக்குகளை சில நாடுகள் முடக்கியதால் அதில் குறிப்பிட்ட தொகை பணங்கள் முடக்கப்பட்டுள்ளது உண்மை. உதாரணமாக இலங்கையில் 12 கோடி ரூபா வங்கியில் முடக்கப்பட்டுள்ளது. அதுவும் 15 வீதமான நிதி தான் புலம்பெயர் மக்கள் அதாவது அமெரிக்காவில் உள்ள சில மக்கள் அனுப்பிய நிதி என கூறப்படுகின்றது.

அதிலும் இலங்கை புனர்வாழ்வுக்கழகம் மத்திய வங்கியில் ஏற்கனவே 15 கோடி ரூபா கடன் எடுத்துள்ளது.இந்த கடன்கள் வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள மீன்பிடி சமாசங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. அடுத்ததாக இலங்கையில் உள்ள கணிசமான வங்கிகளில் குத்தகைக்கு கிட்ட தட்ட 120 உழவு இயந்திரங்கள் வாங்கி படுவான் கரை, வாகரை பகுதிகளுக்கு மக்களுக்கும் விவசாய அமைப்புக்களுக்கும் கொடுக்கப்பட்டது. 04 புதிய பஸ் வண்டிகள் எடுத்து வாகரை மற்றும் மூதூர் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த தொகைகள் முடக்கிய தொகைக்கு மேலானது.

நானுன் இன்னும் பல பல்கலை கழக மாணவர்களும் கொழும்பு புனர்வாழ்வுக்கழகத்தில் பணி புரிந்த காரணத்தினால் இன்னும் பல தகவல்களை நாம் நேரடியாக பார்த்துள்ளோம். ஆகவே எழுந்தமாத்திரத்தில் யாரும் எழுதுவதனை விட்டு சந்தேகங்கள் இருப்பின் உரியவர்களிடம் கேட்டு அறிவது நல்லது.

அடுத்ததாக பல நிறுவனங்கள் உருவாக வேண்டும் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை அதனை மறு வளத்தில் சிந்தித்தால் பலர் சேர்ந்து ஏன் சில பலமான நிறுவனங்களை உருவாக்கமுடியாது? எனவும் சிந்திக்கலாம்.

புலம்பெயர்ந்த நாடிகளில் 600 இற்கு மேற்பட்ட அமைப்புக்கள் இருக்கின்றன.அவை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் மொத்த சொத்துக்கள் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி புனர்வாழ்வுக்கழகத்தினை விட அதிகம். உதாரணமாக இலண்டன் கனகதுர்கை அறக்கட்டளை நிதியம் இதன் சொத்து கிட்ட தட்ட 05 மில்லியன் பவுண்கள், ஆச்வே கோவில் இதனைவிட அதிகம், தமிழர் வீட்டுவசதி கழகம் இதன் சொத்து 05- 06 மில்லியன் பவுண்கள். இலண்டன் கோவில்களின் வருமானம் மாதாந்தம் 150,000 பவுண்கள்.

இவர்கள் நாட்டிற்கு சேவை செய்வதாக பல்வேறு திட்டங்களை முன்வைத்து நிதி சேகரிக்கின்றார்கள். இவ்வாறு பல நிறுவனங்கள் கடந்த 10 வருடத்திற்கு மேலாக இயங்கி வருகின்றனர். இவர்களது சொத்துக்களும் வருமானங்களும் ஒவ்வொரு நாட்டிலும் புனர்வாழ்வு கழகத்தின் வருமானங்களை விட திகமானது.இதற்கு மக்களும் பங்களிப்பு செய்து வருகின்றனர். புனர்வாழ்வுக்கழகம் தான் ஒரேயொரு அமைப்பு அதற்குதான் எல்லோரும் குடுங்கோ என்றால் இந்த நிறுவனங்கள் வளர்ந்திருக்க முடியாது.எல்லோருக்கும் தெரிந்த நிறுவனம் அல்லது பேர் என்பதால் அந்த நிறுவனங்கள் மீது பழி போடுவது அழகல்ல.

ஆகவே ஒவ்வொருவரும் தமது அறிவுக்கு எட்டியவரை பொது விடயங்களை கதைப்பதில் வரையறை தேவை. அல்லது கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் எதனையும் எழுதலாம் என்றால் எழுதும்போது “ எனக்கு கிடைத்த தகவலின்படி அல்லது எனது அறிவுக்கு எட்டியவரை” என்று குறிப்பிட்டு எழுதுவது நல்லது.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னித் தமிழ் சங்கக் குறை பாடுகள் மோசடி என்பதை விட நிர்வாகம்/ஆவணம் பேணலில் இருக்கிற குறைபாடுகள் என்பதாத் தான் விளங்குது. பல அமைப்புகள் இருக்கலாம், ஆனால் அவை தங்களுக்கிடையில தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டிய தேவை இந்தக் குறை பாடுகளால உணரப் படுகுது எண்டு நான் நினைக்கிறன். குறைந்த பட்சம் உதவி பெறுனருடைய பெயர், அடையாள அட்டை இலக்கமாவது இந்த அமைப்புகள் வைத்திருக்க வேணும். உதவி பெறுனர் ஒரு உதவிக்கு விண்ணப்பிக்கும் போது, வேற அமைப்புகளிடம் இப்படி விண்ணப்பம் செய்தீர்களா எண்டு கேட்கிறது ஒண்டும் பாரதூரமான, அவமானப் படுத்தும் கேள்வியாக எனக்குத் தெரியேல்ல. சிலர் தங்களுடைய உதவித் தொகையக் கூட்டிக் கொள்றதுக்காக இந்தக் கேள்விக்கு சரியான பதிலைத் தராமல் விடும் போது மேற் சொன்ன குறைந்த பட்ச ஆவணப் படுத்தல் உண்மை அறிய உதவக் கூடும். உதவி பெறும் விடயத்தில எங்கட ஆட்கள் எல்லாரும் நேர்மையாக நடப்பார்கள் எண்டு எதிர்பார்க்கிறது அப்பாவித் தனம். இதை ஒரு பல்கலை மாணவருக்கு பல வருடங்கள் முன்பு உதவி ஏற்பாடு செய்த ஒரு குழுவில் இருந்த அனுபவத்தில சொல்லுறன். இன்னும் வெளிநாட்டில இருந்து வரும் பண உதவிகளை மறைச்சு சமுர்த்தி உதவி பெறுகிற எங்கட ஆட்கள் இருக்கீனம். கிள்ளிக் குடுக்கிற உதவிகள் ஒரு நாளும் ஒரு உதவி பெறுனருக்குப் போதாது என்பது உண்மை, ஆனால் எல்லாருக்கும் அடிப்படையில தேவையானதைக் கொடுக்க வேண்டியது தான் முக்கியம். அதுக்கு இந்த குறுக்கு விசாரணைகள் சில நேரம் தேவைப் படலாம். இதில அழுவதற்கு என்ன இருக்கு எண்டு எனக்கு விளங்கேல்ல! மன்னிக்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறைந்த பட்சம் உதவி பெறுனருடைய பெயர், அடையாள அட்டை இலக்கமாவது இந்த அமைப்புகள் வைத்திருக்க வேணும். உதவி பெறுனர் ஒரு உதவிக்கு விண்ணப்பிக்கும் போது, வேற அமைப்புகளிடம் இப்படி விண்ணப்பம் செய்தீர்களா எண்டு கேட்கிறது ஒண்டும் பாரதூரமான, அவமானப் படுத்தும் கேள்வியாக எனக்குத் தெரியேல்ல. சிலர் தங்களுடைய உதவித் தொகையக் கூட்டிக் கொள்றதுக்காக இந்தக் கேள்விக்கு சரியான பதிலைத் தராமல் விடும் போது மேற் சொன்ன குறைந்த பட்ச ஆவணப் படுத்தல் உண்மை அறிய உதவக் கூடும். உதவி பெறும் விடயத்தில எங்கட ஆட்கள் எல்லாரும் நேர்மையாக நடப்பார்கள் எண்டு எதிர்பார்க்கிறது அப்பாவித் தனம். இதை ஒரு பல்கலை மாணவருக்கு பல வருடங்கள் முன்பு உதவி ஏற்பாடு செய்த ஒரு குழுவில் இருந்த அனுபவத்தில சொல்லுறன். இன்னும் வெளிநாட்டில இருந்து வரும் பண உதவிகளை மறைச்சு சமுர்த்தி உதவி பெறுகிற எங்கட ஆட்கள் இருக்கீனம். கிள்ளிக் குடுக்கிற உதவிகள் ஒரு நாளும் ஒரு உதவி பெறுனருக்குப் போதாது என்பது உண்மை, ஆனால் எல்லாருக்கும் அடிப்படையில தேவையானதைக் கொடுக்க வேண்டியது தான் முக்கியம்.

நீங்கள் குறிப்பிட்ட விடயங்களுடன் உடன்படுகிறேன் ஜஸ்ரின்.

உதவிகள் பெறுவதில் சிலர் மேலதிகமாக பெறுகிறார்கள் பொய் சொல்லி ஆனால் உண்மையில் உதவி தேவைப்படுவோரை அடையாளம் காட்டிய பின்னரும் காணாது இருப்பது வேதனை தருகிறது.

விண்ணப்பம் செய்தீர்களா என்று கேட்பதில் தவறு இல்லை. விண்ணப்பங்கள் கொடுத்தவர்களுக்கு உரிய பதிலையாவது கொடுக்கலாமல்லவா ?

பலர் வெளிநாட்டிலிருந்து பண உதவிகளை உறவினர் மூலம் பெற்றுக்கொண்டே வன்னித்தமிழ்ச்சங்கத்தின் உதவியையும் பெறுகிறார்கள். அவை இன்னும் இனங்காணப்படவில்லை. குறித்த சிலரின் செல்வாக்கில் அவை கிடைக்கிறது. ஆனால் உண்மையாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களை சிலருக்காக தண்டிக்க வேண்டுமா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் புனர்வாழ்வுக்க கழகம் தான் புலம்பெயர் தேசத்தில் ஒரேயொரு அமைப்பு அல்ல பல நிறுவனங்கள் செயற்பட்டுள்ளன.செயற்படுகின்றன. போராட்டத்தின் கால ஓட்டங்களுக்கு ஏற்ப புலம் பெயர் மக்களால் அவ்வப்போது நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுத்தான் வந்துள்ளன. உதாரணமாக அமெரிக்காவில் IMHO, TRRO இவ்வாறு TRO சமனான பலமான நிறுவனங்கள் இருக்கின்றன.சுனாமி காலப்பகுதியில் TRO வினை விட இந்த நிறுவனங்கள் மட்டுமன்றி கனடாவிலும் பல நிறுவனங்கள் நிதி சேகரித்தன. ஆகவே புனர்வாழ்வு கழகம் இலங்கையில் பலம் வாய்ந்த அதே நேரம் இயக்க கட்டுப்பாட்டிலும் கூடுதலாக வேலை செய்ததால் அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி செய்யப்பட்டது. வேலைத்திட்டம் செய்யாத நிறுவனங்களுக்கு நிதி கொடுத்து என்ன பயன்?

TRO இன் கோடிக்கணக்கான நிதிகள் ஒருசிலரது கைகளில் புரள்வதாக சாந்தி அவர்கள் சொல்வது எதனை அடிப்படையாக வைத்து சொல்கின்றார்.TRO ஒவ்வொரு நாட்டிலும் ஐந்து தொடக்கம் 11 பேர் கொண்ட நபர்களினால் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. சட்ட ரீதியான கணக்குகளும், ஆவனங்களும் உள்ளன. ஒருசிலர் சுருட்டி கொண்டு போவதற்கு இது ஒருவர் இருவர் நடத்தும் இணைய வானொலி அல்ல.

வங்கி கணக்குகளை சில நாடுகள் முடக்கியதால் அதில் குறிப்பிட்ட தொகை பணங்கள் முடக்கப்பட்டுள்ளது உண்மை. உதாரணமாக இலங்கையில் 12 கோடி ரூபா வங்கியில் முடக்கப்பட்டுள்ளது. அதுவும் 15 வீதமான நிதி தான் புலம்பெயர் மக்கள் அதாவது அமெரிக்காவில் உள்ள சில மக்கள் அனுப்பிய நிதி என கூறப்படுகின்றது.

அதிலும் இலங்கை புனர்வாழ்வுக்கழகம் மத்திய வங்கியில் ஏற்கனவே 15 கோடி ரூபா கடன் எடுத்துள்ளது.இந்த கடன்கள் வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள மீன்பிடி சமாசங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. அடுத்ததாக இலங்கையில் உள்ள கணிசமான வங்கிகளில் குத்தகைக்கு கிட்ட தட்ட 120 உழவு இயந்திரங்கள் வாங்கி படுவான் கரை, வாகரை பகுதிகளுக்கு மக்களுக்கும் விவசாய அமைப்புக்களுக்கும் கொடுக்கப்பட்டது. 04 புதிய பஸ் வண்டிகள் எடுத்து வாகரை மற்றும் மூதூர் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த தொகைகள் முடக்கிய தொகைக்கு மேலானது.

நானுன் இன்னும் பல பல்கலை கழக மாணவர்களும் கொழும்பு புனர்வாழ்வுக்கழகத்தில் பணி புரிந்த காரணத்தினால் இன்னும் பல தகவல்களை நாம் நேரடியாக பார்த்துள்ளோம். ஆகவே எழுந்தமாத்திரத்தில் யாரும் எழுதுவதனை விட்டு சந்தேகங்கள் இருப்பின் உரியவர்களிடம் கேட்டு அறிவது நல்லது.

அடுத்ததாக பல நிறுவனங்கள் உருவாக வேண்டும் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை அதனை மறு வளத்தில் சிந்தித்தால் பலர் சேர்ந்து ஏன் சில பலமான நிறுவனங்களை உருவாக்கமுடியாது? எனவும் சிந்திக்கலாம்.

புலம்பெயர்ந்த நாடிகளில் 600 இற்கு மேற்பட்ட அமைப்புக்கள் இருக்கின்றன.அவை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் மொத்த சொத்துக்கள் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி புனர்வாழ்வுக்கழகத்தினை விட அதிகம். உதாரணமாக இலண்டன் கனகதுர்கை அறக்கட்டளை நிதியம் இதன் சொத்து கிட்ட தட்ட 05 மில்லியன் பவுண்கள், ஆச்வே கோவில் இதனைவிட அதிகம், தமிழர் வீட்டுவசதி கழகம் இதன் சொத்து 05- 06 மில்லியன் பவுண்கள். இலண்டன் கோவில்களின் வருமானம் மாதாந்தம் 150,000 பவுண்கள்.

இவர்கள் நாட்டிற்கு சேவை செய்வதாக பல்வேறு திட்டங்களை முன்வைத்து நிதி சேகரிக்கின்றார்கள். இவ்வாறு பல நிறுவனங்கள் கடந்த 10 வருடத்திற்கு மேலாக இயங்கி வருகின்றனர். இவர்களது சொத்துக்களும் வருமானங்களும் ஒவ்வொரு நாட்டிலும் புனர்வாழ்வு கழகத்தின் வருமானங்களை விட திகமானது.இதற்கு மக்களும் பங்களிப்பு செய்து வருகின்றனர். புனர்வாழ்வுக்கழகம் தான் ஒரேயொரு அமைப்பு அதற்குதான் எல்லோரும் குடுங்கோ என்றால் இந்த நிறுவனங்கள் வளர்ந்திருக்க முடியாது.எல்லோருக்கும் தெரிந்த நிறுவனம் அல்லது பேர் என்பதால் அந்த நிறுவனங்கள் மீது பழி போடுவது அழகல்ல.

ஆகவே ஒவ்வொருவரும் தமது அறிவுக்கு எட்டியவரை பொது விடயங்களை கதைப்பதில் வரையறை தேவை. அல்லது கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் எதனையும் எழுதலாம் என்றால் எழுதும்போது “ எனக்கு கிடைத்த தகவலின்படி அல்லது எனது அறிவுக்கு எட்டியவரை” என்று குறிப்பிட்டு எழுதுவது நல்லது.

நன்றி.

உமை உங்கள் விபரங்களுக்கு நன்றிகள். உங்கள் பேரறிவுக்கு முன்னால் எனது சிற்றறிவின் அடிப்படையில் புனர்வாழ்வுக்கழகத்தின் நிதி எந்தெந்தக் கைகளில் உள்ளது என்பதை அறிந்துதான் எழுதியுள்ளேன். இன்னும் ஒளிப்பு மறைப்புக் கூட்டுத்தாபனம் நடத்தி அது செய்தோம் இது செய்தோம் என்று விளக்கம் கொடுத்து இன்னும் உழைப்புக்கு வழியைத்தான் நீங்களும் உரியவர்களுக்குக் காட்டுகிறீர்கள்.

நீங்கள் சொல்லும் மாற்று அமைப்களையும் தன் கையகப்படுத்தலில் தான் இதுவரை இயங்கிய புனர்வாழ்வுக்கழகம் முனைந்து நின்றது. இதைவிட இன்னொரு விடயம் பல அமையங்கள் புனர்வாழ்வுக்கழகத்தின் பின்னணியில் புதிய பெயர்களில் இயங்கியவை. நிதிக் கையாள்கை புனர்வாழ்வுக்கழகத் தலைமையினால் தான் கையாளப்பட்டவை.

புனர்வாழ்வுக்கழகம் எதையும் செய்யவில்லையெச் சொல்ல வரவில்லை. அதை புரிந்து கொள்ளுங்கள்.

உரியவர்களின் கேட்டு புரிந்து கொள்ளுங்கள் என்ற வார்த்தையை பல விடயங்களில் பலர் சொல்லி வருகிறார்கள். ஆனால் எந்தவித உண்மையும் வெளியில் தெரியப்படுத்தப்படுவதில்லை நீங்கள் சொல்லும் உரியவர்களால்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் புனர்வாழ்வுகழக பொறுப்பாளர் றெஜியையும் அவரின்ரை உதவியாளர்..அசுச்சுனன் எதிர் வீரசிங்கத்தையும் சில விடயங்களிற்காக தொடர்பு கொள்ள ஒரு மாதமாய் முயற்சி செய்கிறன்..உமை அவர்களோடை முடிந்தால் தொடர்பை ஏற்படுத்தி தர முடியுமா??அல்லது நீங்கள் சொன்னது போல பொறுப்புள்ள உறுப்பினரை கதைக்க சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு அமைப்போ அல்லது பல அமைப்புக்களோ இருக்கலாம். ஆனாலும் அவை எல்லாம் அந்தந்த பல்கலைக் கழகங்களில் உள்ள தமிழ் மாணவர் அமைப்புக்களினூடாக உதவி செய்வதற்கு முயற்சி செய்வதே சிறந்தது என நான் நினைகின்றேன். ஏனெனில் அங்குள்ள மாணவர்கள் ஒவ்வொருவரது நிலையும் அநேகமாக மாணவர் அமைப்புக்களால் அறிய முடியும். இதன் மூலம் தேவையானவர்கள் உதவி பெறுவது உறுத்திப்படுத்த கூடியதாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.