Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகநூலும் நாங்களும் | எங்கள் facebook அனுபவங்கள்

Featured Replies

இனிய வணக்கங்கள்,

கடந்த சில நாட்களாய் இந்த முகநூல் பற்றியதோர் கருத்தாடலை செய்யவேண்டும் என்று நினைச்சு இருந்தன். இன்றுதான் சந்தர்ப்பம் கிடைச்சது. விசயத்துக்கு வருவோம்.

நான் நினைக்கின்றேன் சுமார் மூன்று அல்லது நான்கு வருசங்களுக்கு முன்னர் எனது நண்பன் ஒருவன் முகநூலில் இணைவதற்கு தொடர்ச்சியாக மின்னஞ்சலில் எனக்கு அழைப்புக்கள் அனுப்பிக்கொண்டு இருந்தான். வழமையாகவே வலைத்தளங்களில் இணையுமாறு ஏதாவது புதுசுபுதுசாய் அனுப்பிக்கொண்டு இருப்பான். நான் இணைவதில்லை. ஆனால் இதில் என்னமோ அவனை திருப்திப்படுத்துவதற்காக இணைந்துகொண்டேன்.

இதில் ஒரு விசயம் சொல்லவேணும், பலர் பலவிதமான வலைத்தளங்களில் இணைவதற்கு தினமும் மின்னஞ்சலில் அழைப்புக்கள் அனுப்பிக்கொண்டு இருப்பார்கள். மற்றவர்களின் மனம்கோணக்கூடாது என்பதற்காக சிலவேளைகளில் சும்மாபோய் அங்கு புதிய கணக்கை பதிவது உண்டு. ஆனால்.. பெரும்பாலும் உள்ளே சென்று குறிப்பிட்ட வலைத்தளத்தை பயன்படுத்துவது கிடையாது. விதம்விதமாக ஆயிரம் ஆயிரம் வலைத்தளங்கள் இருக்கின்றன. எல்லாத்திலும் மினக்கட முடியாதுதானே.

சரி.. முகநூலினுள் ஒருவாறாக போய் தட்டித்தடவி அதை எப்படி பயன்படுத்துவது என்று விரைவிலேயே அறிந்துகொண்டேன். எனது மின்னஞ்சலில் இருக்கும் தொடர்புகள் முகநூலிலும் இருக்கின்றார்களா என்று கண்டுபிடிக்கும் பயன்பாட்டு அமைப்புக்கள் அங்கு இருப்பதனால் ஏற்கனவே அறிமுகமானவர்களை முகநூலில் நண்பர்களாக இணைத்துக்கொள்வது கடினமாக இருக்கவில்லை.

சும்மா சொல்லக்கூடாது, உண்மையில் முகநூல் சற்று வித்தியாசமான உற்சாகமான அனுபவமாக ஆரம்பத்தில் இருந்தது. பின்னர் தனிப்பட்ட காரணங்களிற்காக சில மாதகால பாவனையின்பின் எனது முகநூல் கணக்கை முடக்கம் [Deactivate] செய்தேன்.

மீண்டும் இந்தவருடமும் முகநூல் கணக்கை ஆரம்பிக்கவேண்டிய தேவை இருந்தது. உறவினர்கள், நெருக்கமான நண்பர்களுடன் தொடர்பாடல் செய்வதற்கு ஓர் கணக்கையும், முகம் அறியாத நண்பர்களுடன் குறிப்பாக வலைத்தளம் மூலம் அறிமுகமான நண்பர்களுடன் தொடர்பாடல் செய்வதற்கு இன்னோர் கணக்கையும் ஆரம்பித்தேன். நீண்டகாலத்தின்பின் மீண்டும் முகநூலை பயன்படுத்தியபோது ஆரம்பகால முகநூலிற்கும், தற்போதைய முகநூலிற்கும்.. அதை எப்படி எல்லோரும் பயன்படுத்துகின்றார்கள் என்கின்ற அளவில் பார்த்தபோது பாரிய வேறுபாட்டை காணமுடிந்தது.

நேரப்பற்றாக்குறை, இதர பல காரணங்களிற்காக எனது இரண்டு முகநூல் கணக்குகளையும் நான் மீண்டும் அண்மையில் முடக்கம் செய்தேன். இனி முகநூலில் நான்கண்ட சுவாரசியமான அனுபவங்கள், பிரச்சனைகள் பற்றி பார்ப்போம்.

எனக்கு இங்கு மிகவும் பிடித்த விசயம் என்ன என்றால் தொடர்பாடல் செய்வதற்கும், தொடர்பாடல் வலைப்பின்னலை பேணுவதற்கும் முகநூல் மிகப்பெரியதோர் பொக்கிசமாக இருக்கின்றது. மின்னஞ்சல், இதர தொடர்பாடல் ஊடகங்களில் உள்ள பல்வேறு குறைபாடுகளை முகநூலில் தவிர்க்கக்கூடியதாக இருக்கின்றது. அதேசமயம் நேரத்தையும் மிச்சப்படுத்த முடிகின்றது. புகைப்படங்கள், காணொளிகள், மற்றும் பல்வேறு தகவல்களை உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் முகநூல் எளிமையானதோர் அதேசமயம் சிறந்ததோர் ஊடகமாக திகழ்கின்றது. எம்.எஸ்.என் போன்ற அரட்டை தொடக்கம்.. வாங்குதல் விற்றல், வேலை தேடுதல் வரை ஆயிரக்கணக்கான பயன்பாட்டு அமைப்புக்கள் எமது தேவைக்கு அதிகமாகவே முகநூலில் இருக்கின்றன.

ஆனால்.. பிடிக்காத விசயங்கள் என்று சொல்லப்போனால் பலவிசயங்களை அடுக்கிக்கொண்டு போகலாம். முதலாவது விடயம்.. உறவுக்கட்டமைப்புக்கள் பற்றியது. முன்பு நேரில் ஒருவரை பார்த்து பேசி பழகியவர்கள் தொலைபேசி வசதி வந்ததும் நேரில் சந்திப்பதை குறைத்து தொலைபேசியூடாக ஹாய் சொல்லிவிட்டு உறவுகளை மொட்டையாக நிறுத்திக்கொண்டார்கள். தற்போது முகநூல் வந்ததும் முகநூலினூடாக அதன் சுவரில் ஆடிக்கு ஒருக்கால் அமாவாசைக்கு ஒருக்கால் வந்து ஹாய் என்று எழுதிவிட்டு போகின்றார்கள். முகம் அறியாதவர்கள், வலைத்தளம் ஊடாக பழகுபவர்கள் என்றால் பரவாயில்லை. ஆனால்.. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இவ்வாறு செய்யும்போது கடுப்பு வருகின்றது [நானும் யாருக்காவது இப்படி செய்து இருந்தால் அடியேனை மன்னித்துக்கொள்ளவும்].

வலைத்தளம் என்பது ஓர் ஊடகமே. இங்கு தகவல்களை பரிமாறலாம், தொடர்பாடல் செய்யலாம். ஆனால் குடித்தனம் செய்யமுடியாது. அதாவது நெருங்கிய உறவுக்கட்டமைப்புக்கள், நட்பு வளர்வதற்கு, பேணப்படுவதற்கு வலைத்தளம் ஊடான தொடர்பாடல் மட்டும் உதவாது. வலைத்தளத்துடன் மட்டுப்படுத்தாது.. வெளியிலும் யதார்த்த வாழ்க்கையில் நேரில் சந்தித்து பழகவேண்டும். மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. ஆனால் எனது நிலைப்பாடு இதுவே. ஏற்கனவே நன்கு விருத்தி பெற்ற உறவுக்கட்டமைப்புக்கள் மேலும் விருத்திபெற வலைத்தளம் உதவலாம். ஆனால் வெறும் வலைத்தளம் மூலமாகவே உறவுநிலைகள் நல்ல நிலையில் தொடர்ந்து பேணப்படமுடியாது. இதற்கு ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து உறவாட வேண்டும். [இங்கு உறவுநிலை என்றதும் டேட்டிங் அல்லது காதல் என்று மட்டும் தவறாக விளங்கக்கூடாது. உடன்பிறப்புக்கள், மாமா, மச்சான், மருமக்கள், பெறாமக்கள், நண்பர்கள் என இவ்வாறு அனைத்தும் இதனுள் அடக்கம்]

அடுத்த விடயம்.. விளம்பரம் செய்தல். எல்லோரும் மனிதர்களே. இந்த பூமியில் விருந்தினர்களாக வந்த நாங்கள் அனைவருமே ராஜாக்களும், ராணிகளுமே. ஆனால்.. முகநூலில் ஒவ்வொருவரும் என்னைப்பார் உன்னைப்பார் என்று பிரபலம் செய்வது எனக்கு என்னமோ சுத்தமாக பிடிக்கவில்லை. பிரபலம் செய்வதற்கு வேறு ஊடகங்கள், வழிவகைகள் இருக்கும்போது முகநூலை மட்டுமே அனைவரும் வளைத்துப்போட்டு இருப்பது புரியாத புதிராக இருக்கின்றது. நானும் முசுப்பாத்திக்கு முகநூலில் புகைப்படங்கள் இணைப்பது, முகநூலில் ஏதாவது நகைச்சுவையாக எழுதுவதுதான். ஆனால்.. எனது கணிப்பீட்டின்படி பெரும்பாலானோர் முகநூலை தம்மை பிரபலப்படுத்துவதற்கு அளவுக்கு அதிகமாகவே பயன்படுத்துகின்றார்கள்.

முகநூலில் சிலர் இருக்கின்றார்கள். போறவன் வாறவன் எல்லோருக்கும் நட்புவேண்டுகோள் விடுத்து தமது நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே இருப்பார்கள். இன்று 1,000 ஆக இருக்கும் நண்பர்களின் எண்ணிக்கை நாளை 1,100 ஆகி மறுநாள் 1,200 ஆகிவிடும். இவ்வளவிற்கும் தமது நண்பர் பட்டியலில் இருக்கும் 1,200 பேரில் ஒரு நூறு பேருடனாவது முறையான அறிமுகம் இவர்களிற்கு இருக்காது.

ஆட்களுடன் அறிமுகம் செய்வது, ஆட்களை அறிந்துகொள்வது, உறவுநிலைகளை கட்டியெழுப்புவது என்பது கணணி முன்னால் குந்தி இருந்து முகநூலில் உள்ள நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மட்டும் அடையப்பட முடியாது. இன்னமும் தெளிவாக கூறினால் ஏற்கனவே உள்ள நல்ல உறவுகளைக்கூட நாங்கள் முகநூல் பாவனை காரணமாக இழக்கவேண்டியும் வரலாம்.

தமது நண்பர் பட்டியலை முகநூலில் தினமும் நீட்டிச்செல்பவர்கள் அவ்வாறு செய்வது அவர்களிற்கு சிலவேளைகளில் பொழுதுபோக்காககூட இருக்கலாம். அத்துடன், அப்படிச் செய்யும்போது உலகுடன் அதிகளவில் தாம் இணைந்து இருப்பதாய் உணர்கின்றார்களோ தெரியாது. ஆனால் இவ்வாறு நண்பர் பட்டியலை நீட்டுவது ஒருவகையில் மிகவும் ஆபத்தானதும்கூட.

முகநூலில் பிடிக்காத அடுத்தவிடயம்.. வேண்டுகோள்கள்! தினமும் பல்வேறு விதமான வேண்டுகோள்கள் வந்துகொண்டு இருக்கும். குறிப்பாக நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து வேண்டுகோள்கள் வரும்போது அதற்கு பதில் அளிக்காமல் இருந்தால் அதுவேறு எங்களுக்குள் மனச்சுமையை உருவாக்கும். மாறாக, அனைத்து வேண்டுகோள்களையும் ஏற்றால் வேறுவிதமான பல சிக்கல்கள் வரும்.

முகநூலில் நாங்கள் எதைப்பயன்படுத்த விரும்புகின்றோம், எதை காண்பிக்க விரும்புகின்றோம், எதை பார்க்க விரும்புகின்றோம் போன்ற விடயங்களை privacy settings இற்கு சென்று எங்கள் விருப்பப்படி நிறுவமுடியும். ஆனால்.. பிரபலமான மற்றும் அடிப்படை பயன்பாட்டு அமைப்புக்களை நாங்கள் முகநூலில் அனுமதிக்கும்போதுகூட பல்வேறுவிதமான நெருக்கடிகள், உளைச்சல்கள் ஏற்படுகின்றன என்பதுதான் நான் அனுபவத்தில்கண்ட உண்மை.

அட.. இவர் என்ன எல்லாமே முகநூலை பற்றி கூடாமல் எழுதி இருக்கிறார் என்று நீங்கள் கோபிக்ககூடாது. மனதை மகிழ்விக்கும் பல விடயங்கள் தாராளமாக முகநூலில் இருக்கின்றனதான். யாழ் இணையத்தில் உறவுகளாக உள்ள பலருடன் முகநூல் மூலம் தொடர்பாடல் செய்யக்கூடியதாக இருந்தது. நேரில் சந்திக்கமுடியாத, தொலைபேசிமூலம் தொடர்புகொள்ளமுடியாத, எம்.எஸ்.என் மூலம் தொடர்புகொள்ள முடியாத.. எத்தனையோ பேரை [அதாவது ஊரில் உள்ள கள்ளர் எல்லாரையும் :wub: ] முகநூலிற்கு சென்றால் மிக இலகுவாக சந்திக்கக்கூடியதாக இருக்கின்றது. [கடன்வாங்கிவிட்டு காசை திருப்பித்தராமல் சுத்திக்கொண்டு இருக்கும் ஆளைக்கூட நீங்கள் முகநூலில் இலகுவாக பிடிக்கக்கூடியதாக இருக்கலாம் :wub: ]

அண்மையில் அக்டோபர் மாதத்தில் முகநூலில் சில புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. குறிப்பாக முகநூல் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இறந்தால் அவரது முகநூல் பக்கத்தை ஓர் நினைவுகூறல் பக்கமாக மாற்றமுடியும் அல்லது முடக்கமுடியும். [இதற்கு அவரது உறவினர்கள் முகநூல் நிருவாகத்தை தொடர்புகொண்டு மரணம் அடைந்ததை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும்]

கற்காலம், வெண்கலக்காலம், இரும்புக்காலம் இப்படி மனிதநாகரீக வளர்ச்சியில் பல்வேறு படிநிலைகள் கூறப்படுவதுபோல் வலைத்தள காலம் என்று கூறப்படும்போது அதில் நிச்சயம் முகநூல் காலமும் ஓர் முக்கிய உபபிரிவாய் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

முகநூல் பற்றி எத்தனையோ விசயங்கள், பகிடிகள் இருக்கின்றன. இப்போதைக்கு எனக்கு ஞாபகத்தில் வந்த இவ்வளவு விடயங்களை மட்டுமே கூற முடிந்தது. எனக்கு முகநூலில் பிடித்த விசயங்கள் உங்களிற்கு பிடிக்காமல் இருக்கலாம். பிடிக்காத விசயங்கள் பிடித்து இருக்கலாம். உங்கள் முகநூல் அனுபவங்களையும் இங்கு பகிர்ந்துகொள்ளுங்கள். நானும் எனது அனுபவங்கள், கருத்துக்களை உங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்கின்றேன்.

[இங்கு முகநூல் பற்றிய எனது பொதுவான பார்வையையே நான் தெரிவித்து இருக்கின்றேன். யாரையாவது தனிப்பட குற்றம், குறை பிடிச்சு இருக்கிறன் அல்லது குத்திக்காட்டி இருக்கிறன் என்று தவறாக விளங்கிக்கொள்ளாதிங்கோ]

நன்றி! வணக்கம்!

பிகு: எனது முகநூல் நண்பர்களிற்கு: சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போயிட்டன் என்று யோசிக்க / கோபிக்ககூடாது. நேரில் சந்திக்கமுடியாத, இதரவழிகளில் தொடர்பாடல் செய்யமுடியாதவர்களிற்கு நான் முகநூலில் இருந்து விலகுவதுபற்றி தகவல் அனுப்பியிருந்தேன். உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றி! காலம், சூழ்நிலை வாய்த்தால் மீண்டும் நாங்கள் முகநூலினூடாக சந்திப்போம்.

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

நானம் இந்தக் கண்றாவியில ஒரு கணக்கு வைத்திருக்கிறன் பிரியோசனமாக ஏதாவது இதுவரை செய்யவில்லை. செய்யவம் தெரியாது. இதுபற்றி யாராவது விசயம் தெரிற்தவர்கள் ஒரு திரியைக் கொழுத்திப்போடவும். அதுக்குப்பிறகாவது தேறுகிறேனாபாப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு நானும் இந்த முக நூலுக்கு போய் ஒரு பகுதியை திறப்போம் என்று போய் பார்த்தேன் .எனக்கு பொம்பிளை நண்பிகள்தான் தேவை என்று போய் தேடுனேன் போன உடனே அதிர்ந்து போனேன் ,அங்க பார்த்தா .........திரிசா,சினேகா,நயந்தாரா,தமன்னா,அனுஸ்க்கா இன்னும் பலபேர்கள் பாய் போட்டு படுத்திருக்கினும் அட நான் நம்மட தமிழ் பொண்டுகளுடைய போட்டோவைத்தான் சொல்கிறன் பெயர் வந்து ,செல்லதாயி ,அழகு சுந்தரி ,ராக்கம்மா ,மூக்காயி :blink::blink::wub: என்று பெயர் இருக்கிறது அப்ப நினைத்துக்கொண்டேன் இதில சிக்கி சீரழியக்கூடாது என்று. நான் இணையவில்லை :wub:

இது உன்மை மீதியை நெடுக்கரிடம் கேட்டு பாருங்கள் :wub:

  • தொடங்கியவர்

எழுகஞாயிறு,

உங்கள் எப்படியான தேவை முகநூல் மூலம் நிறைவேற்றப்படவேண்டும் என்று தெரிந்தால் எனக்குத் தெரிஞ்ச சில விசயங்களை சொல்லலாம். பிரயோசனமாக ஏதாவது செய்தல் என்று எதை சொல்லுறீங்கள்? ஒருவர் பிரயோசனமான விசயம் என்று நினைக்கிறது இன்னொருவருக்கு பிரயோசனம் இல்லாமலும் இருக்கலாம்.

உங்களுக்கு சுருக்கமாக கூறுவதானால்.. முகநூலில் உங்கள் முதுகெலும்பு Privacy Settingsஏ. Privacy Settingsஐ [தமிழில் இரகசியகாப்பு அமைப்பு என்று நினைக்கின்றேன்] எப்படி நிறுவுவது என்று சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் பரீட்சை தேறியதுமாதிரி..!

இதற்காக நீங்கள் என்ன செய்யலாம் என்றால்.. முதலில் பழகிப்பார்ப்பதற்கு இரண்டு டம்மி கணக்குகளை முகநூலில் ஆரம்பியுங்கள். உங்களை நீங்களே நண்பர்பட்டியலில் இணைத்து முகநூலில் உள்ள ஒவ்வொரு செயற்பாட்டு அமைப்புக்களும், பாவனைகளும் எப்படி தொழிற்படுகின்றது என்பதை அவதானியுங்கள். இதன்பிறகு உங்களை பிரதிநிதிப்படுத்தும் உண்மையான கணக்கை முகநூலில் பயன்படுத்தலாம்.

சுவாமி,

உங்களுக்காவது பரவாயில்லை, சினிமா நடிகர், நடிகைகளின் முகங்கள் நல்ல அறிமுகம். எனக்கு பிரபலமான ஒருசிலர் தவிர ஏனையோர் முகங்கள் தெரியாது. முகநூலில் ஒவ்வொருத்தரும் காண்பிக்கும் புகைப்படங்கள் அவர்களுடையதா இல்லையா என்று கண்டறிவதே பெரும்பாடுதான். நீங்கள் சொல்வதுபோல் பொன்னம்மா அக்கா பாவனாவின் புகைப்படத்தை இணைப்பதும் வழமைதான்.

ஆள்மாறாட்ட மோசடிகள் முகநூலில் செய்யப்பட்டால்கூட யாருக்கு தெரியும்? யாராவது தங்கள் படங்களை இன்னொருவர் தனதுபடமாக முகநூலில் இணைத்து இருக்கின்றார் என்பதை கண்டுபிடித்தால் ஒழிய மற்றும்படி மிகவும் கடினம்.

எனவே, நேரில் நாங்கள் கண்டறியாதவர்களை முகநூலில் இணைக்கும்போது சற்று கவனமாக இருக்கவேண்டும். நாங்களும் மற்றவர்களுடன் முகத்தை காட்டாமல் வெறும் நீ யாரோ நான் யாரோ நண்பர்களாக இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால்.. அவன் தனது முகத்தை காட்டுகின்றானே என்று நினைத்துவிட்டு அது உண்மையான முகமா அல்லது ஆள் மாறாட்டமா என்று தெரியாமல் நாங்கள் அப்பாவித்தனமாக எங்கள் முகத்தை புகைப்படத்தில் காட்டும்போது ஏமாறுகின்றோம்.

நாங்கள் புகைப்படங்களை, முக்கிய தனிப்பட்ட தகவல்களை தேவையின் நிமித்தம் பிரசுரிக்கும்போது அதை யார் யார் பார்க்கலாம் என்று நாங்களே தீர்மானிப்பதன் மூலமும், நண்பர்பட்டியலில் உள்ளவர்களை நம்பிக்கைத்தன்மையின் அடிப்படையில் பல்வேறு குழுமங்களாக நாங்கள் வகைப்படுத்தி வைப்பதன் மூலமும் மற்றவர்கள் எங்களை மோசடிகள் செய்வதை ஓரளவு தவிர்க்கமுடியும் என்று நினைக்கின்றேன்.

நெடுக்கரும் முகநூலும் என்று ஓர் வலைத்தளமே [www.neduksOnFacebook.com] ஆரம்பிக்கலாம். ஆனால அவர் எனது நண்பர். நண்பரின் விசயங்களை இங்கு எழுதமுடியாது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொண்டீர்கள் மச்சான் ,

இந்த‌ அனுப‌ப‌வ‌ங்க‌ளின் ஆர‌ம்ப‌ நிலைப்பாட்டை ப‌ற்றியே ம‌ட்டும் வாசித்தேன் . ஆர்வமான கட்டுரை.

முகிதியையையும் நேர‌ம் கிடைக்கும் போது ஆறுத‌லாக‌ வாசிப்பேன்.

facebook பற்றிய யதார்தர்தை அறியதந்ததற்க்கு நன்றி :lol: மச்சி :lol::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நன்ற, மச்சான் அவர்களே.

Facebook இனை அதிகளவில் பயன்படுத்துபவன் என்ற முறையில் எனக்கு அது பலவழிகளில் தொடர்பாடல்களைப் பேண உதவியுள்ளது என்றே சொல்வேன். திக்கொன்று திசைக்கொன்று என்று பிரிந்து கிடக்கும் உறவுகளையும் நண்பர்களையும் தொடர்ந்து தொடர்பில் வைத்திருக்கவும், சந்தோசமான துயரமான விடயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் உதவி புரிகின்றது. 22 வருடங்களுக்கு முன் தொடர்பற்று இருந்த 6 பள்ளிக்கூட நண்பர்களை மீண்டும் தொடர்பு கொள்ளவும் உரையாடவும் சந்தர்ப்பத்தை facebook ஏற்படுத்தி தந்துள்ளது. குடும்பம், தொழில் என்று ஆன பின் ஒவ்வொருவருடனும் தனித்தனிய கதைப்பதற்கோ அல்லது பகிர்ந்து கொள்வதற்கோ நேரம் இன்மையால் FB மூலமான தொடர்பு மிகவும் பிரயோசனமாக இருக்கு.

Facebook இல் நண்பர்களைத் தவிர பல communities இலும் சேரலாம். Microsoft இன் பல தொழில்நுட்ப பிரிவுகளுக்குரிய பிரிவுகளுடன் கலந்தாலோசிக்கவும், அதில் உள்ள சிறந்த தேர்ச்சி பெற்றவர்களின் புதிய நுணுக்கங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் FB மிகவும் உதவியாக இருக்கின்றது. கனடா நாட்டின், மக்கள் சுகாதார சேவை பிரிவுடனான தொடர்பாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

மச்சான் சொல்வது போன்று பலர் தேவைக்கதிகமாக பலரை தம் நண்பர்களாக இணைப்பதும், இணைய விருப்பம் தெரிவிப்பதும் அடிக்கடி நடப்பவைதான். ஏதோ நான் கொஞ்சம் அழகாக இருப்பதனால் அழகான பெண்கள் இப்படி அடிக்கடி அழைப்பு விடுவர். அவர்களைக்கூட நான் தேவை (!!) இல்லைவிடின் இணைப்பதில்லை

என் சொந்தப் பெயரில் ஒரு கணக்கும், நிழலி எனும் பெயரில் ஒரு கணக்கும் வைத்துள்ளேன். அண்மைக்காலமாக நிழலி கணக்கில் சுவாரசியமான பல விடயங்களையும் நம்மட சாத்திரி, சாந்தி போன்ற பெரிய தலைகளையும் (கடவுளே கடவுளே) காண முடிகின்றது

  • தொடங்கியவர்

யாம் பெற்ற இன்பமும், துன்பமும் நீங்களும் பெறுக தமிழ்சிறீ + இணையநண்பன் + எழுகஞாயிறு.

நிழலி சொல்வதுபோல்.. பலவித நிறுவனங்கள், அமைப்புக்கள், குழுக்கள் எல்லாம் முகநூலில் இருக்கின்றன. நண்பர்கள் என்பதற்கு அப்பால் தொழில், கல்வி ரீதியான பலவித தகவல்களை பரிமாறிக்கொள்ள, சந்தேகங்களை போக்கிக்கொள்ள உதாரணமாக யாழ் கருத்துக்களம் போன்ற Message Forum வசதிகளை முகநூலில் காணமுடிகின்றது. பல்வேறு துறையில் உள்ளவர்கள் தங்கள் துறைசார்ந்தவர்களுடன் தொடர்பில் இருக்க முகநூல் உதவுகின்றது.

ஆனாலும் ஒருவிசயம்.. இதற்கு என்று தனித்தனியாக முகநூலைவிட பலமடங்குகள் அதிக வசதிகளுடன் பிரத்தியேக வலைத்தளங்கள் இருக்கின்றன. இன்னொருவிதத்தில் கூறுவதானால் முகநூலை வட அமெரிக்காவின் WalMart நிறுவனத்திற்கு ஒப்பாக உதாரணத்திற்கு கூறலாம். அதாவது WalMart இல் சகல தேவைகளையும் நாங்கள் ஒரே இடத்திலேயே பூர்த்தி செய்யக்கூடியதுபோல் இருப்பதை ஒத்ததாக முகநூலிலும் பல்வேறு தேவைகளை வலைத்தளத்தில் ஓரிடத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

அதேசமயம் எப்படி WalMart ஐ விட தரமானதும், சிறந்ததுமான தனித்தனி பொருட்களுக்கு என்று குறிப்பிட்ட ஓர் விடயத்தில் நிபுணத்துவம் – தேர்ச்சி பெற்ற கடைத்தொகுதிகள் இருக்கின்றனவோ அதுபோலவே... முகநூலில் பூர்த்தி செய்யக்கூடிய பலவித தனித்தனி தேவைகளிற்கு அவற்றை பூர்த்தி செய்வதற்கு அதில் பிரபலம் வாய்ந்த முகநூலைவிட சிறப்பான சேவையை வழங்கும் தனித்தனி வலைத்தளங்கள் இருக்கின்றன என்பதையும் நினைவில் வைத்து இருங்கள்.

உங்களுக்கு முகநூலில் தொழில் அல்லது கல்வி ரீதியான தேவைகள் மட்டுமே பூர்த்தி செய்யப்படவேண்டும் என்றால் வழமையான பாவனையில் இருக்கும் உங்கள் முகநூல் கணக்கை பயன்படுத்தாது இதற்கென ஓர் பிரத்தியேக கணக்கை ஆரம்பிப்பது சிறப்பானது என்று நினைக்கின்றேன்.

Edited by மச்சான்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

முகநூலால எங்களுக்கு வரக்கூடிய வில்லங்கமான பிரச்சனைகள் பற்றிய ஓர் சம்பவத்தை இன்று சீபீசியில பார்த்தன். நீங்களும் பாருங்கோ.

என்ன பிரச்சனை என்றால்.. ஐபீஎம் இல வேலை செய்த ஒருத்திக்கு சில உளவியல் பிரச்சனைகள். இதற்காக இவவிற்கு காப்புறுதி கொடுக்கப்பட்டது. ஆனால்.. காப்புறுதி கம்பனி இவவிண்ட முகநூல் புரபைலுக்கை களவாக போய் இவவிண்ட புகைப்படங்கள், இவ சந்தோசமாய் இருக்கிறதுக்கான அத்தாட்சிகளை எடுத்துப்பிரதி பண்ணிப்போட்டு.. இவவுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, நல்லா இருக்கிறா எண்டு சொல்லிப்போட்டு இப்ப காப்புறுதி கட்டணத்தை நிறுத்திப்போட்டுதாம்.

எம்மைக்கேளாமல் எங்கட முகநூல் கணக்குகளினுள் வெளியார் - வெளி நிறுவனங்கள் - 3rd parties முகநூல் நிறுவனத்தின் அனுமதியுடன் வரலாம், விபரங்களை சேகரிக்கலாம் எண்டுறதுக்கு இது சாட்சி. இதனால.. எங்கடை வாழ்க்கையில நடக்கிற விசயங்களை, படங்களை எல்லாம் முகநூலுக்கைபோடுவது மிகவும் ஆபத்தானது.

செய்தி:Depressed woman loses benefits over Facebook photos

A Quebec woman on long-term sick leave is fighting to have her benefits reinstated after her employer's insurance company cut them, she says, because of photos posted on Facebook.

Nathalie Blanchard, shown here on a beach holiday during her sick leave.Nathalie Blanchard, shown here on a beach holiday during her sick leave. (Facebook)Nathalie Blanchard, 29, has been on leave from her job at IBM in Bromont, Que., for the last year and a half after she was diagnosed with major depression.

The Eastern Townships woman was receiving monthly sick-leave benefits from Manulife, her insurance company, but the payments dried up this fall.

When Blanchard called Manulife, the company said that "I'm available to work, because of Facebook," she told CBC News this week.

She said her insurance agent described several pictures Blanchard posted on the popular social networking site, including ones showing her having a good time at a Chippendales bar show, at her birthday party and on a sun holiday — evidence that she is no longer depressed, Manulife said.

Blanchard said she notified Manulife that she was taking a trip, and she's shocked the company would investigate her in such a manner and interpret her photos that way.

"In the moment I'm happy, but before and after I have the same problems" as before, she said.

Blanchard said that on her doctor's advice, she tried to have fun, including nights out at her local bar with friends and short getaways to sun destinations, as a way to forget her problems.

She also doesn’t understand how Manulife accessed her photos because her Facebook profile is locked and only people she approves can look at what she posts.

Insurer confirms it uses Facebook

Her lawyer Tom Lavin said Manulife's investigation was inappropriate.

"I don't think for judging a mental state that Facebook is a very good tool," he said, adding that he has requested another psychiatric evaluation for Blanchard.

"It's not as if somebody had a broken back and there was a picture of them carrying with a load of bricks," Lavin said. "My client was diagnosed with a major depression. And there were pictures of her on Facebook, in a party or having a good time. It could be that she was just trying to escape."

Manulife wouldn't comment on Blanchard's case, but in a written statement sent to CBC News, the insurer said: "We would not deny or terminate a valid claim solely based on information published on websites such as Facebook." It confirmed that it uses the popular social networking site to investigate clients.

Insurance companies must weigh information found on such sites, said Claude Distasio, a spokeswoman for the Canadian Life and Health Insurance Association.

"We can't ignore it, wherever the source of the information is," she said. "We can't ignore it."

Blanchard estimated she’s lost thousands of dollars in benefits since Manulife changed her claim.

மூலம்: http://www.cbc.ca/canada/montreal/story/2009/11/19/quebec-facebook-sick-leave-benefits.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேஸ்புக் என்பது ஒரு பெயர். அதற்கெல்லாம் முகநூல் என்று ஒரு தமிழாக்கம் தேவை தானா? அப்போ மைக்கிரோசொப்டை நுண்ணியமென்மை என்றழைப்பதா? :)

பலருடைய பெயர்கள் வைட், பிளாக் என்று இருக்கின்றன. விட்டால் அதையெல்லாம் தமிழாக்கம் எனும் பெயரில் வெள்ளை, கறுப்பு என்று அழைப்போமா?

சரி வேண்டாம்... தமிழ்நெற்றை தமிழ் வலை என்றா அழைக்கின்றோம்?

பேஸ்புக் என்பது ஒரு பெயர். அதற்கெல்லாம் முகநூல் என்று ஒரு தமிழாக்கம் தேவை தானா? அப்போ மைக்கிரோசொப்டை நுண்ணியமென்மை என்றழைப்பதா? :wub:

பலருடைய பெயர்கள் வைட், பிளாக் என்று இருக்கின்றன. விட்டால் அதையெல்லாம் தமிழாக்கம் எனும் பெயரில் வெள்ளை, கறுப்பு என்று அழைப்போமா?

சரி வேண்டாம்... தமிழ்நெற்றை தமிழ் வலை என்றா அழைக்கின்றோம்?

இதில் என்ன பிரச்சனை... :)

ஒரு தமிழாக்கம் தேவை தான்... :lol:(ஒவ்வொரு புது கண்டுபிடிப்புக்களுர்கும் தமிழில் ஏற்கனவே அதற்குரிய கருத்து [எப்பவோ!] உள்ளது! இருந்து கொண்டுள்ளது... !? அதை நாம் நமது[இளைய] சமுதாயத்துக்கு அங்காங்கே அறியவைத்தல் இன்றைய காலத்தில் நம் ஒவ்வொருவரின் கடமையும் கட்டாயமும்! :lol: )

அது ஆங்கிலம் நாம தமிழில கதைக்க முனைகிறோம் அவ்வளவுதான்... இதில் என்ன பிரச்சனை... :):(:) நன்றி

"தாயைப்போல் தாய்மொழியும் ஒவ்வொரு மானிடருக்கும் முக்கியம் இல்லையேல் மானிடம் இவ்நவீன உலகில் இல்லாமல்போய் இருக்கும் இதுதான் யாதார்த்த உண்மை !" நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக் என்பது ஒரு பெயர். அதற்கெல்லாம் முகநூல் என்று ஒரு தமிழாக்கம் தேவை தானா? அப்போ மைக்கிரோசொப்டை நுண்ணியமென்மை என்றழைப்பதா? :)

பலருடைய பெயர்கள் வைட், பிளாக் என்று இருக்கின்றன. விட்டால் அதையெல்லாம் தமிழாக்கம் எனும் பெயரில் வெள்ளை, கறுப்பு என்று அழைப்போமா?

சரி வேண்டாம்... தமிழ்நெற்றை தமிழ் வலை என்றா அழைக்கின்றோம்?

வெங்காயத்தை ..... ஆனியன் ,

உப்பை ...... சால்ட்

என்று சொல்லுற மாதிரி வந்திடும் என்று தான் பயமாயிருக்கு.

எதனையும் ஆரம்பத்திலேயே வேரோடு புடுங்கி எறிஞ்சு விட வேண்டும் .

இல்லாவிட்டால் தாய் மொழிக்கு ஆபத்து தான்.

விதண்டாவாதம் செய்யாமல் புரிந்து கதையுங்கள் காட்டாறு.

தற்போதைய நமது சூழலில் உலகம் எங்கும் அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பிள்ளைகளுக்கு சுத்தமான தமிழ் மொழி அவசரத்தேவை. எல்லா மொழியையும் கலக்க விட்டால் நாம் தமிழர் அல்ல. :)

பேஸ்புக் என்பது ஒரு பெயர். அதற்கெல்லாம் முகநூல் என்று ஒரு தமிழாக்கம் தேவை தானா? அப்போ மைக்கிரோசொப்டை நுண்ணியமென்மை என்றழைப்பதா? :)

பலருடைய பெயர்கள் வைட், பிளாக் என்று இருக்கின்றன. விட்டால் அதையெல்லாம் தமிழாக்கம் எனும் பெயரில் வெள்ளை, கறுப்பு என்று அழைப்போமா?

சரி வேண்டாம்... தமிழ்நெற்றை தமிழ் வலை என்றா அழைக்கின்றோம்?

இந்தக் கருத்துடன் நானும் உடன்படுகின்றேன்

Facebook என்பது ஒரு application (மென்பொருள்), இணையத்தில் இயங்கும் ஒரு மென்பொருள். Microsoft word. excel, Microsoft, firefox என்பனவற்றை எப்படி நேரடி மொழிபெயர்ப்பகுட்படுத்தாமல் இருக்கின்றமோ அதே போல்தான் இதுவும்.

உண்மையில் இப்படியான நேரடி மொழிபெயர்ப்பால்தான் தமிழ் மொழி வாழமுடியும் என்று சிந்திப்பதை விட, தமிழர்களான நாம் ஏதேனும் உருப்படியான ஒரு விடயத்தை உருவாக்கி, அதனை தமிழ் பெயர் கொண்டு அழைத்து உலகம் முழுதும் அதனை பயன்படுத்தும் விதமாக மாற்றினால், தமிழ் மொழி காலகாலமாக மதிப்புடனுன் பெருமையுடனும் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

.

Microsoft word. excel, Microsoft, firefox

யப்பான் , சீனாக்காரன் இப்பிடியா சொல்லுறான்.

என்ன ..... எங்களுக்கு தான் ...... தமிழில் கதைத்தால் அவமானம் புடுங்கி திண்டுபோடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெங்காயத்தை ..... ஆனியன் ,

உப்பை ...... சால்ட்

என்று சொல்லுற மாதிரி வந்திடும் என்று தான் பயமாயிருக்கு.

எதனையும் ஆரம்பத்திலேயே வேரோடு புடுங்கி எறிஞ்சு விட வேண்டும் .

இல்லாவிட்டால் தாய் மொழிக்கு ஆபத்து தான்.

விதண்டாவாதம் செய்யாமல் புரிந்து கதையுங்கள் காட்டாறு.

தற்போதைய நமது சூழலில் உலகம் எங்கும் அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பிள்ளைகளுக்கு சுத்தமான தமிழ் மொழி அவசரத்தேவை. எல்லா மொழியையும் கலக்க விட்டால் நாம் தமிழர் அல்ல. :)

வெங்காயம், உப்பு போன்றவை பொது சொற்கள். அவற்றிற்கு தமிழாக்கம் கூடாதென்று நான் சொல்லவில்லை. ஆனால் x என்ற பெயருடைய உப்பை எந்த மொழியிலும் x உப்பு என்று தான் அழைக்கவேண்டும்.

இன்னும் தெளிவாக உங்களுக்கு விளங்கப்படுத்த வேண்டுமானால்.. ஜோர்ஜ் புஷ் என்ற பெயர் எந்த மொழியிலும் ஜோர்ஜ் புஷ் தான். அப்படித்தான் பேஸ்புக் என்ற பெயரும். இல்லை புஷ் என்றால் பற்றை :D .. இப்படி ஏடாகூட மொழிபெயர்ப்பு செய்ய நீங்கள் விரும்பினால் தாராளமாக செய்யுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரும் முகநூலும் என்று ஓர் வலைத்தளமே [www.neduksOnFacebook.com] ஆரம்பிக்கலாம். ஆனால அவர் எனது நண்பர். நண்பரின் விசயங்களை இங்கு எழுதமுடியாது. :D

அடப்பாவிகளா.. இதுக்குள்ளையும் நம்மள வைச்சு காமடி பண்ணுறீங்களா. இப்ப தானே கவனிச்சன்.

fb யை ஒரு வலையமைப்பிற்காக பொதுவான தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தலாம். மற்றும்படி.. அங்கு தனிப்பட்ட விபரங்களை கொண்டு தனிப்பட்ட விபரங்களோடு திரிவது ஆபத்தானது மட்டுமன்றி அநாவசியமானதும் கூட. அடிப்படையில் fb ஆணெல்லாம் பெண்ணாகவும் பெண்ணெல்லாம் ஆணாகவும் உலவும் பேய் வீடு. பேய்களோடு பேய்களாக இருந்தலை விட அங்கு வேறு எதுவும் அதிகம் செய்ய முயலக் கூடாது.

சொந்த விபரங்கள் வழங்காத கணக்கில்.. 1000 என்ன 5000 பேரையும் அட்பண்ணிக்கோங்கோ.. கேம்ஸ் விளையாட நிறைய அயலவர்கள் கிடைப்பார்கள். :):D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.. இதுக்குள்ளையும் நம்மள வைச்சு காமடி பண்ணுறீங்களா. இப்ப தானே கவனிச்சன்.

fb யை ஒரு வலையமைப்பிற்காக பொதுவான தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தலாம். மற்றும்படி.. அங்கு தனிப்பட்ட விபரங்களை கொண்டு தனிப்பட்ட விபரங்களோடு திரிவது ஆபத்தானது மட்டுமன்றி அநாவசியமானதும் கூட. அடிப்படையில் fb ஆணெல்லாம் பெண்ணாகவும் பெண்ணெல்லாம் ஆணாகவும் உலவும் பேய் வீடு. பேய்களோடு பேய்களாக இருந்தலை விட அங்கு வேறு எதுவும் அதிகம் செய்ய முயலக் கூடாது.

சொந்த விபரங்கள் வழங்காத கணக்கில்.. 1000 என்ன 5000 பேரையும் அட்பண்ணிக்கோங்கோ.. கேம்ஸ் விளையாட நிறைய அயலவர்கள் கிடைப்பார்கள். :):D

ச .ச நெடுக்கு அண்ணை உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் சொல்வீங்கள் தானே அதுக்காகத்தான் உங்களை உள்வாங்கினோம் உங்களை வைத்து யாராச்சும் காமடி கீமடி பண்ணுவாங்களா?? :D:D

... ..... தமிழர்களான நாம் ஏதேனும் உருப்படியான ஒரு விடயத்தை உருவாக்கி, அதனை தமிழ் பெயர் கொண்டு அழைத்து உலகம் முழுதும் அதனை பயன்படுத்தும் விதமாக மாற்றினால், தமிழ் மொழி காலகாலமாக மதிப்புடனுன் பெருமையுடனும் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.....

:D:D ஐயோ... ஐயோ... இதெல்லாம் நக்கிற காரியமாய்யா இன்றைய "நாகரீக" தமிழ் உலகில... :):D

  • தொடங்கியவர்

யோவ் காட்டாறு நான் ஆங்கிலத்திலையும் முகநூலும் நாங்களும் எண்டு சொல்லி அத்தோட எங்கள் facebook அனுபவங்கள் எண்டு போட்டிருக்கன்தானே.

+++

நெடுக்கு பாத்தீங்களோ... கனதளங்களுக்கை புகுந்து விளையாடினால் எங்களைச்சுத்தி ஒவ்வொரு தளத்திலையும் என்ன நடக்கிது எண்டு கண்காணிக்க ஏலாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.