Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னிப்பிரதேசத்திற்கு விஜயம்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல்லாயிரக்கணக்கானோர் வாழும் முகாம்களில் அடிப்படை வசதிகளை எதிர்பார்க்க முடியாது:ஸ்ரீகாந்தா

வீரகேசரி நாளேடு 11/17/2009 9:01:03 AM - பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்கின்ற முகாம்களில் முழுமையான வசதி வாய்ப்புகளை எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் திருப்தியான அளவுக்கு செய்துகொடுக்கப்பட்டு இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான விடிவினைப் பெற்றுக்கொள்வதற்கு ஆக்கபூர்வமான அணுகுமுறைகளையே கையாள வேண்டும். அதற்கு எமது வன்னிப் பயணம் உதவும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் பயணத்தின் மூலம் பல விடயங்களை நேரடியாக அவதானிக்கக் கூடியதாவும் இருந்தது என்றும் அவர் சொன்னார்.

இடம்பெயர்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வவுனியா நலன்புரி முகாம்களுக்குச் செல்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கம் முதன் முதலாக அனுமதி அளித்ததன் அடிப்படையில், அக்கட்சியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழு நேற்று திங்கட்கிழமை செட்டிக்குளம் முகாம்கள் மற்றும் வடக்கின் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கு விஜயம் செய்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களான என். ஸ்ரீகாந்தா, சிவநாதன் கிஷோர், செல்வம் அடைக்கலநாதன், தோமஸ் வில்லியம், வினோ நோகராதலிங்கம், பி. அரியநேத்திரன் மற்றும் ஆர்.எம். இமாம் ஆகியோரே இந்த விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, வட மாகாண ஆளுநர் மற்றும் வன்னிக் கட்டளைத் தளபதி ஆகியோரும் அரசு தரப்பில் இக்குழுவில் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

வன்னி விஜயம் தொடர்பில் ஸ்ரீகாந்தா எம்.பி. மேலும் கூறுகையில்,

"முகாம்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. அவர்களுடன் உரையாடுவதற்கும் மற்றும் அவர்களது குறை நிறைகளைக் கேட்டறிவதற்கும் எம்மால் முடியுமாக இருந்தது.

விரைவில் சொந்த இடங்களுக்கு...

ஆயினும், முகாம் வாழ்க்கை நீண்ட காலத்திற்குத் தொடரமுடியாது. எனவே, தமது சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பிவிட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

அத்துடன், அருகே உள்ள முகாம்களுக்குச் சென்று தமது உறவினர்களைப் பார்ப்பதற்கும், அவர்களின் தேவைகளை நிறைவுசெய்து கொள்ளும் வகையில், பாஸ் நடைமுறைகளை இலகுபடுத்துவது தொடர்பிலும் அவர்களது கோரிக்கை அமைந்திருந்தது.

அத்துடன், உணவு விடயத்தைப் பொறுத்தவரையில் போதுமான மரக்கறிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொண்டனர்.

மேலும், புலிச் சந்தேக நபர்கள் என வேறுபடுத்தப்பட்டவர்களின் மனைவி, பிள்ளைகள் எந்தவித வசதிகளும் அற்றவர்களாக இருப்பதனால், அந்தத் தேவைகளையும் நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டனர்.

இவ் விடயங்கள் தொடர்பில் நாம் உடனடியாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி மற்றும் வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சமல் குணரட்ன ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவந்தோம்.

இங்கு குழந்தைகளுக்கான பால் மா மற்றும் சுகாதார வசதிகள் போதியளவில் காணப்படுவது அவதானிக்க முடிந்தது. அதுமட்டுமல்லாது, அங்கு வாழ்கின்ற மக்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டு இருக்கின்றனர். எது எவ்வாறிருப்பினும் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு, வீடுகளுக்குச் செல்லாத வரையில் அவர்களது மனக் கவலை நீடித்துக் கொண்டே தான் இருக்கும்.

இதனையடுத்து, மீள்குடியேற்ற பிரதேசங்களான விடத்தல்தீவுக்கு அருகிலுள்ள சில கிராமங்களுக்கும் துணுக்காய் மற்றும் கருங்கண்டல் ஆகிய பிரதேசங்களுக்கும் நாம் சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானித்தோம்.

மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் பல்வேறு இழப்புக்களை சந்தித்திருந்தாலும் தமது சொந்த இடங்களுக்கு வந்து விட்டோம் என்ற உற்சாகத்தையும் திருப்தியையும் அவர்களில் காணக்கூடியதாக இருந்தது. இவர்களுக்கு அரசாங்கம் உதவி வழங்கியுள்ள போதிலும் அதற்கும் மேலதிகமான தேவைகளை எதிர்நோக்கியிருப்பதால் சமூக தொண்டு நிறுவனங்களின் உதவிகளும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளும் இங்கு எதிர்பார்க்கப்படுகின்றன.

இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் கடந்த காலங்களில் தமது சொத்து, வீடு, காணிகள், விவசாய நிலங்கள், விவசாய உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் என சகலதையும் இழந்துள்ளனர் என்பதை மறந்து விடக்கூடாது.

துரிதகதியில் மீள்குடியமர்வு

மீள்குடியேற்றத்தை பொறுத்தவரையில் அது துரிதகதியில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை காண முடிகின்றது. அதேபோல் கண்ணிவெடி அகற்றும் பணிகளும் தங்குதடையின்றி சீராக இடம்பெற்று வருவதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

பல இடங்களில் பாரியளவில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதன் காரணத்தாலேயே மீள்குடியேற்ற பணிகள் சற்று தாமதம் அடைந்திருப்பதாக எம்முடன் வந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். கண்ணிவெடி அகற்றும் பணிகளில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் அதனை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இப்படியான விடயங்களை அவதானிப்பதற்காகவே நாம் அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தோம். அதற்கமைய தற்போது இந்த சந்தர்ப்பத்தை ஒரு ஆக்கபூர்வமான பயணமாகவே கருதுகிறோம். விரும்புகிறோம். இதன் மூலம் பல்வேறு விடயங்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எடுத்துக் கூறவுள்ளோம்.

எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் பூரணப்படுத்தப்படும் என்றும் அதே காலப் பகுதிக்குள் பெரும்பாலானோர் மீள்குடியேற்றப்பட்டு விடுவார்கள் என்றும் அதிகாரிகள் எமக்குத் தெரிவித்தனர்.

இதேவேளை, மன்னார் வீதியில் முருங்கனுக்கருகே உள்ள இராட்சத குளத்தின் அணையின் புனர்நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜப்பான் உதவியுடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமக்கு தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் மன்னார் பிரதேச மக்களின் விவசாய தேவைகளுக்கு இது பேருதவியாகவும் ஆறுதலாகவும் இருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது மற்றும் அவர்களின் விடயங்களில் தலையிடுவது தொடர்பில் குறிப்பிட்ட வரையறைக்கு மேல் செல்ல முடியாதிருப்பதை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டும் புரிந்துகொண்டும் இருக்கின்றனர்" என்றார்.

ஆய்வு மூலம் மீள்குடியேறிய மக்களின் தேவைகள் நிறைவேற்றம்: அமைச்சர் றிஷாட்

வீரகேசரி இணையம் 11/17/2009 11:41:43 AM - வவுனியா நலன்புரிமுகாம்களில் தங்கியுள்ள பொதுமக்கள் அனைவரும் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் அவர்கள் தொடர்பான ஆய்வொன்றை நடத்தி, அதன்மூலம் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கவுள்ளதாக அனர்த்த நிவாரண மீள்குடியேற்ற அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெறுகிறது. அதன் முதலாவது அமர்வின் வாய்மூல வினாக்களுக்கு விடையளிக்கும் நேரத்தில், இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.டி.ஏ. ரணவீர பத்திரண கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் தனது பதிலில், இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பின்னர் நாம் முழுமையான ஆய்வொன்றை நடத்தவுள்ளோம். அந்த ஆய்வினை உலக வங்கிக்குச் சமர்ப்பித்து அதன்மூலம் உதவிகளைப் பெற எதிர்பார்த்துள்ளோம்.

மீள்குடியேற்றப்படும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூபா 5000 வழங்கி, அவர்களுக்கென வங்கிக் கணக்கொன்றை ஆரம்பித்து ரூபா 20,000 ஐ ஆரம்ப வைப்பாக இட்டு வருகிறோம். இன்னும் சில நாட்களில் மீள்குடியேற்றப் பணிகளை முழுமையாக நிவர்த்தி செய்ய எதிர்பார்க்கிறோம்" என்றார்.

ஜோன் ஹோம்ஸ் இன்று இலங்கை வருகை

வீரகேசரி இணையம் 11/17/2009 10:41:24 AM - அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை 8.50 மணியளவில் அமெரிக்காவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் இலங்கை வந்துள்ளார்.

நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர் இன்று யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்குச் செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள மக்களின் நலன் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கை குறித்தும் இவர் ஆராய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி வீரசேரி

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

கல்லுக்குள் ஈரம்.....

ஆனாலும்

தனக்கு பிடித்த சாப்பாடுதான் பொறுக்கி எடுத்துள்ளீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு குழந்தைகளுக்கான பால் மா மற்றும் சுகாதார வசதிகள் போதியளவில் காணப்படுவது அவதானிக்க முடிந்தது. அதுமட்டுமல்லாதுஇ அங்கு வாழ்கின்ற மக்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டு இருக்கின்றனர்

மக்கள் சூழ்நிலைக்கு ஏற்ப வாழப் பழகி விட்டனர். ஆகவே அவையளப் பற்றிக் கவலை இல்லை. இவங்கள விட கலைஞர் பரவாயில்லை.

இதுவும் உண்மையாகிவிடுமோ எண்டுதான் பயாயிருக்கு. இவை தான் எங்கடை - இந்த மக்களின்டை பிரதிநிதியள்..

இடம்பெயர்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வவுனியா நலன்புரி முகாம்களுக்குச் செல்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கம் முதன் முதலாக அனுமதி அளித்ததன் அடிப்படையில், அக்கட்சியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழு நேற்று திங்கட்கிழமை செட்டிக்குளம் முகாம்கள் மற்றும் வடக்கின் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கு விஜயம் செய்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களான என். ஸ்ரீகாந்தா, சிவநாதன் கிஷோர், செல்வம் அடைக்கலநாதன், தோமஸ் வில்லியம், வினோ நோகராதலிங்கம், பி. அரியநேத்திரன் மற்றும் ஆர்.எம். இமாம் ஆகியோரே இந்த விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

அனுமதி கொடுத்தும் அவர்கள் போகவில்லை எண்டு எல்லோ முன்னம் எல்லாம் நீர் சொல்லி திரிந்தீர்.... இப்ப நீரே இப்பதான் அனுமதி கொடுத்தது எண்டு செய்தியை ஒட்டுறீர்...

வன்னி விஜயம் தொடர்பில் ஸ்ரீகாந்தா எம்.பி. மேலும் கூறுகையில்,

"முகாம்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. அவர்களுடன் உரையாடுவதற்கும் மற்றும் அவர்களது குறை நிறைகளைக் கேட்டறிவதற்கும் எம்மால் முடியுமாக இருந்தது.

விரைவில் சொந்த இடங்களுக்கு...

ஆயினும், முகாம் வாழ்க்கை நீண்ட காலத்திற்குத் தொடரமுடியாது. எனவே, தமது சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பிவிட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

அத்துடன், அருகே உள்ள முகாம்களுக்குச் சென்று தமது உறவினர்களைப் பார்ப்பதற்கும், அவர்களின் தேவைகளை நிறைவுசெய்து கொள்ளும் வகையில், பாஸ் நடைமுறைகளை இலகுபடுத்துவது தொடர்பிலும் அவர்களது கோரிக்கை அமைந்திருந்தது.

அத்துடன், உணவு விடயத்தைப் பொறுத்தவரையில் போதுமான மரக்கறிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொண்டனர்.

மேலும், புலிச் சந்தேக நபர்கள் என வேறுபடுத்தப்பட்டவர்களின் மனைவி, பிள்ளைகள் எந்தவித வசதிகளும் அற்றவர்களாக இருப்பதனால், அந்தத் தேவைகளையும் நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டனர்.

இவ் விடயங்கள் தொடர்பில் நாம் உடனடியாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி மற்றும் வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சமல் குணரட்ன ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவந்தோம்.

இங்கு குழந்தைகளுக்கான பால் மா மற்றும் சுகாதார வசதிகள் போதியளவில் காணப்படுவது அவதானிக்க முடிந்தது. அதுமட்டுமல்லாது, அங்கு வாழ்கின்ற மக்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டு இருக்கின்றனர். எது எவ்வாறிருப்பினும் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு, வீடுகளுக்குச் செல்லாத வரையில் அவர்களது மனக் கவலை நீடித்துக் கொண்டே தான் இருக்கும்.

இதனையடுத்து, மீள்குடியேற்ற பிரதேசங்களான விடத்தல்தீவுக்கு அருகிலுள்ள சில கிராமங்களுக்கும் துணுக்காய் மற்றும் கருங்கண்டல் ஆகிய பிரதேசங்களுக்கும் நாம் சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானித்தோம்.

மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் பல்வேறு இழப்புக்களை சந்தித்திருந்தாலும் தமது சொந்த இடங்களுக்கு வந்து விட்டோம் என்ற உற்சாகத்தையும் திருப்தியையும் அவர்களில் காணக்கூடியதாக இருந்தது. இவர்களுக்கு அரசாங்கம் உதவி வழங்கியுள்ள போதிலும் அதற்கும் மேலதிகமான தேவைகளை எதிர்நோக்கியிருப்பதால் சமூக தொண்டு நிறுவனங்களின் உதவிகளும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளும் இங்கு எதிர்பார்க்கப்படுகின்றன.

இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் கடந்த காலங்களில் தமது சொத்து, வீடு, காணிகள், விவசாய நிலங்கள், விவசாய உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் என சகலதையும் இழந்துள்ளனர் என்பதை மறந்து விடக்கூடாது.

துரிதகதியில் மீள்குடியமர்வு

மீள்குடியேற்றத்தை பொறுத்தவரையில் அது துரிதகதியில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை காண முடிகின்றது. அதேபோல் கண்ணிவெடி அகற்றும் பணிகளும் தங்குதடையின்றி சீராக இடம்பெற்று வருவதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

பல இடங்களில் பாரியளவில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதன் காரணத்தாலேயே மீள்குடியேற்ற பணிகள் சற்று தாமதம் அடைந்திருப்பதாக எம்முடன் வந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். கண்ணிவெடி அகற்றும் பணிகளில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் அதனை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இப்படியான விடயங்களை அவதானிப்பதற்காகவே நாம் அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தோம். அதற்கமைய தற்போது இந்த சந்தர்ப்பத்தை ஒரு ஆக்கபூர்வமான பயணமாகவே கருதுகிறோம். விரும்புகிறோம். இதன் மூலம் பல்வேறு விடயங்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எடுத்துக் கூறவுள்ளோம்.

எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் பூரணப்படுத்தப்படும் என்றும் அதே காலப் பகுதிக்குள் பெரும்பாலானோர் மீள்குடியேற்றப்பட்டு விடுவார்கள் என்றும் அதிகாரிகள் எமக்குத் தெரிவித்தனர்.

இதேவேளை, மன்னார் வீதியில் முருங்கனுக்கருகே உள்ள இராட்சத குளத்தின் அணையின் புனர்நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜப்பான் உதவியுடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமக்கு தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் மன்னார் பிரதேச மக்களின் விவசாய தேவைகளுக்கு இது பேருதவியாகவும் ஆறுதலாகவும் இருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது மற்றும் அவர்களின் விடயங்களில் தலையிடுவது தொடர்பில் குறிப்பிட்ட வரையறைக்கு மேல் செல்ல முடியாதிருப்பதை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டும் புரிந்துகொண்டும் இருக்கின்றனர்" என்றார்.

பல்லாயிரக்கணக்கானோர் வாழும் முகாம்களில் அடிப்படை வசதிகளை எதிர்பார்க்க முடியாது:ஸ்ரீகாந்தா

இப்படி சிறீகாந்தா மேலிருக்கும் நீர் இணைத்த செய்தியில் எங்கு சொல்லி இருக்கிறார்.... ஏன்யா தலைப்புக்கும் செய்திக்கும் சம்பந்தம் இல்லா இடங்களிலை எடுக்கிறதுதான் உங்களுக்கு எல்லாம் நம்பிக்கையான செய்திகளோ...???

அதை நீங்கள்தான் சொல்லவேணும், மசவாசா செய்யிறதுகள் எங்களுக்கு வெளியால சொல்லமாட்டினம்.

பழம் சாப்பிடுகிறது அவங்கள், கொட்டை மட்டும் தானே நீங்கள் சூப்பிறனீங்கள்.... உங்களுக்கு அமைச்சர் தரப்பு செய்யுறது ஒண்டும் தெரியாது... ஆனால் புலி தரப்பில் செய்யுறது எல்லாம் சொல்லி போட்டு செய்யுறவை... பாலா அண்ணை மங்கிந்தவை வரவைச்சது தான் தான் எண்டு உமக்கு மட்டும் கேக்கும் வண்ணம் சொன்னாரே.. அது மாதிரி..

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.