Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Der Untergang (downfall - வீழ்ச்சி)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில நாட்களாக Film4 இல் போர் சம்பந்தமான படங்கள் காண்பித்து வருகின்றார்கள். அதிகமான படங்கள் வியட்னாம் யுத்தம் பற்றிய படங்களாக இருந்தாலும், Downfall என்ற ஜேர்மனிய மொழிப்படம் (ஆங்கில சப்டைட்டிலுடன்) பார்த்தபோது, அதில் வரும் காட்சிகள் சிலவற்றை தமிழீழ இறுதியுத்தத்தின் கடைசி நாட்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்கமுடியவில்லை.

சிலவேளை இந்தப் படம் வன்னியிலும் பல தடவை காண்பிக்கப்பட்டிருக்கலாம்.

உதாரணத்திற்கு சில வசனங்கள் (தமிழில் மொழிமாற்றிக் கெடுக்க விரும்பவில்லை!)

Adolf Hitler: General Von Greim, I appoint you supreme commander of the Luftwaffe. I hereby promote you to General-Fieldmarshall. A big responsibility rests on your shoulders. You have to rebuild the Luftwaffe from scratch. Many mistakes have been made. Be ruthless. Life doesn't forgive weakness. This so-called humanity is religious drivel. Compassion is an eternal sin. To feel compassion for the weak is a betrayal of nature. The strong can only triumph if the weak are exterminated. Being loyal to this law, I've never had compassion. I've always been ruthless when faced with internal opposition from other races. That's the only way to deal with it.

General der Artillerie Helmuth Weidling: My Führer, as a soldier I suggest we try to break through the encirclement. During the fight for Berlin we've already lost 15-20,000 of the younger officers.

Adolf Hitler: But that's what young men are for.

General feldmarschall Wilhelm Keitel: Your report impressed the Führer. He has appointed you commander of Berlin's defences.

General der Artillerie Helmuth Weidling: Id rather be shot than have this honour.

Adolf Hitler: The war is lost... But if you think that Ill leave Berlin for that, you are sadly mistaken. Id prefer to put a bullet in my head.

Adolf Hitler: In a war as such there are no civilians.

Joseph Goebbels: I feel no sympathy. I repeat, I feel no sympathy! The German people chose their fate. That may surprise some people. Don't fool yourself. We didn't force the German people. They gave us a mandate, and now their little throats are being cut!

Magda Goebbels: My Führer, I beg you to leave Berlin! My Führer, please. Don't leave us! What will become of us?

Adolf Hitler: Tomorrow millions of people will curse me, but fate has taken its course.

  • கருத்துக்கள உறவுகள்

"In Defense of Lost Causes", by Slavoj Zizek, என்றொரு புத்தகம் தற்போது வாசித்துக் கொண்டிருக்கின்றேன். நேரமிருந்தால் வாசித்துப் பாருங்கள். இப்புத்தகத்தில் தத்துவவியல் சார்ந்து மேற்கோள்கள் கட்டின்றி நிறைந்து கிடப்பதால், வாசகரின் தத்துவவியல் பரிட்சயத்தைப் பொறுத்து வாசிப்புச் சிலநேரம் சற்றுக் கடினமாய் இருக்கலாம். எனினும் எமது நிலையுடன் ஒப்பிடக்கூடிய பல பகுதிகள் விளங்கக்கூடியனவாகவே உள்ளன.

பிரஞ்சுப் புரட்சியின் றோபஸ்பியர் தொடக்கம் மாவோ ஈறாகப் பல விடயங்கள் சுவாரசியமான கோணத்தில் பேசப்பட்டுள்ளன. எமது நிலை சார்ந்தும் பல விடயங்கள் சிந்திக்கச் செய்கின்றன. எமது நிலையோடு ஏகப்பட்ட ஒற்றுமைகள் இப்புத்தகத்திற்குள் கிடப்பதாகவே எனக்குப் படுகின்றது. வாசித்துப் பாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"In Defense of Lost Causes", by Slavoj Zizek, என்றொரு புத்தகம் தற்போது வாசித்துக் கொண்டிருக்கின்றேன். நேரமிருந்தால் வாசித்துப் பாருங்கள்.

நன்றி இன்னுமொருவன். படிக்க முயல்கிறேன்.

  • 4 weeks later...

அதாவது நாசிகள் என்று பேசாமல் பேசுகிறோம் போல கிடக்குது

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://ashwin-cinema.blogspot.com/2010/08/downfall-2004.html

இந்த படம் பார்த்து முடித்து போது மனதில் நான் வடிவமைத்திருந்த ஹிட்லர் அந்த மனிதனின் வேறுமுகம் எனக்கு தெரிந்தது உலகத்தையே தன் வசபடுத்த நினைத்தவனின் வாழ்க்கையை இந்த படத்தில் பார்த்த போது இந்த மாமனிதன் மீது மிகப்பெரிய மதிப்பு வந்தது....இப்படியும் ஒரு மனிதனின் முன்னேற்றம் இருக்குமா? என்று என்னை வியக்கவைத்தன...

ஹிட்லர்- ஜெர்மன் மட்டுமே உலகை ஆள வேண்டும் என்று இரண்டாம் உலக போரை ஆரம்பித்து வைத்து விட்டு 5 கோடி பேரின் இறப்புக்கு கரணமாய் இருந்து, போதமைக்கு 50லட்சம் யூதர்கள் இறக்க காரணமாக இருந்த கொடுர மிருகம் என்பதாய் நாம் எல்லோரும் மனதில் வைத்து இருந்த பிம்பம்.

இரண்டாம் உலக போரை மையபடுத்தி நிறைய படங்கள் வந்து விட்டன...அதில் ஹிட்லரின் கொடுரத்தை சொல்லி அழுத படங்கள் ஏராளம்

முதல் உலக போரில் ஜெர்மனில் இராணுவ சிப்பாய் இரண்டாம் உலக போரின் போது ஜெர்மன் நாட்டை வழி நடத்துபவர் என்றால் அந்த வளர்ச்சியை யோசித்து பாருங்கள்...

ஒரு நாட்டையே ஆண்டவன் எல்லாவ்ற்றிலும் வெற்றி...அவனுக்காக எதையும் செய்ய கண் எதிரில் தயராக ஒரு கூட்டம்... இப்படி இருந்தால் ஒருவனுக்கு என்ன தோன்றி இருக்கும்??? உலகத்தின் பிதா நான் தான் என்று வாழ்ந்த ஒரு சர்வாதிகாரியின் கடைசி நிமிடங்கள்தான் இந்த படம்.... ஆனால் நன்றாக வாழ்ந்தவன் வீழ்வதை ஏனோ மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது...காரணம் அது போல இந்த படத்தை எடுத்து இருக்கின்றார்கள்...

இரண்டாம் உலக போரின் போது ஜெர்மன் படைகள் ரஷ்ய படைகளிடம் தோல்வியை சந்தித்து பெர்லினை நோக்கி முன்னேறி வந்து கொண்டு இருக்க பதுங்கு அறையில் பதுங்கி இருத்த ஹிட்லர்.....அவர் சொல்வதை குறிப்பெடுத்து அதனை டைப்செய்து கொடுக்க சில பெண்களுக்கு நேர்முக தேர்வு நடப்பதில் துவங்கிறது படம்.

ஜெர்மன் தோல்வி செய்திகள் கேட்பதில் இருந்து... நாலாவது படையணி என்ன செய்து கொண்டு இருக்கின்றது ?என்று கேட்டு கத்துவதில் இருந்து...தீவிரவாதி, 40000 குழந்தைகள் கொன்றதில் பங்கு பெற்றவன், எழுத்தாளர், சர்வாதிகாரி, ஓவியன், அரசியல்வாதி, மது பழக்கத்தை விட்டவன்... நான்வெஜ் சாப்பிடாதவன்....என மாற்றும் இல்லாமல் தோல்வியால் துவண்டு திருமணம் செய்து கொண்டு,புதுமனைவியுடன் தற்கொலை செய்து இறப்பது வரை.... ஹிட்லரின் கடைசி காலத்தை நுட்பமாய் பதிவு செய்து இருக்கின்றது.

சமகாலத்தில் வாழ்ந்த ஒரு சர்வாதிகாரியின் அந்திமகாலம் எப்படி இருக்கும் என்பதை நம் கண் முன் நிறுத்தி இருக்கின்றார்கள்...

படத்தில் நான் ரசித்த காட்சிகள் சில... ஹிட்லராக Bruno Ganz வாழ்ந்து இருக்கின்றார்

நேர்முக தேர்வில் கலந்து கொண்டு ஹிட்லர் முதல் வருகையை ரொம்ப சிம்பிளாக பதிவு செய்தாலும் அந்த பெண்கள் கண்களில் காட்டும் அந்த ஆர்வம் உற்சாகம் வாய்ப்பே இல்லை...

பதுங்கு குழியில் இருக்கும் போது கூட போரிட்ட சிறுவர்களுக்கு மேடல் கொடுத்து உற்சாகபடுத்தியவன்...அந்த மெடல் கொடுக்கும் போது அந்த சிறுவர்களின் சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே???...

அப்படி ஒரு பெரிய சர்வாதிகாரியை, ஜெர்மனியில் வாழ்ந்த பல லட்சகணக்கான நேசிப்பை அந்த கண்களில் உள்ள ஆச்சர்யத்தின் மூலம் காட்சி படுத்தி இருப்பார்கள்...

இறக்கும் முன் நடக்கும் திருமணத்துக்கு, பயத்தில் முகத்தில் பவுடர் அதிகமாக அடித்துகொண்டு வரும் ஒரு காட்சி வாழ்கை முடிய போகின்றது என்று சலித்துகொள்ள அந்த ஒரு காட்சி போதும்...

பயம் வந்த பிறகு அதை காட்டிக்கொள்ளாமல் நடப்பது மிக அற்புதம்... எப்ப வேண்டுமானாலும் பிடிபடலாம் என்ற நிலையிலும் ஒருத்தனுக்கு தேச துரோகம் பட்டம் கொடுத்து அவனை சாகடிப்பதும் ஜெர்மனி & ஹிட்லர் வாழ்த்தி விட்டு சாவதும் அருமையான காட்சி.....

நிறைய இளைய படைவீரர்கள் இறந்து போய் விட்டார்கள்... பலருக்கு மருத்துவ உதவி இல்லை என்று சொல்லும் போது அறையில் உட்கார்ந்து கொண்டு.. அது அவர்கள் தலையேழுத்து அதற்கு தானே அவர்களை படையில் எடுத்தது என்று பேசுவது சுயநலத்தையும், கடைசி கட்ட திமிரையும் காட்டுகின்றது....

இன்னும் கொஞ்ச நேரத்தில் ரஷ்ய படையிடம் மாட்ட போகின்றோம் என்பது தெரிந்தும் பெரிய தலைகள் எல்லாம் தண்ணியை போட்டு விட்டு , பெண்களை அரைநிர்வாணமாக ஆடவிட்டு வேடிக்கை பார்பதும்... பலர் எதிரிலேயே உடலுறவு கொள்வதும் போகின்ற போக்கில் காட்டி இருப்பது அற்புதம்....எந்த உதவியும் இல்லாமல் பல வீரகள் இறந்து போவது... தலமை இல்லாமல் ஒரு சாம்ராஜ்யம் எப்படி எல்லாம் சின்னா பின்னமாகிவிடும் என்பதை மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றார்கள்...

இன்னும் நிறைய எழுதும் என்று ஆர்வம் இருத்தாலும்..... நேரமின்மை காரணத்தால் கடைசி ஒரு செய்தியுடன்.... ஹிட்லரோடு சமகாலத்தில் வாழ்ந்த படைதளபதிகள் பதுங்குழியில் இருந்த உதவியாளர்கள் என எல்லோரிடமும் பேசி அவர்கள் தந்த அடிப்படையில் இந்த படம் எடுக்கபட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.