Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேட்டைக்காரன் - புறக்கணிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கென்னவோ 17 ம் திகதி பாக்கக்கூடியதா இருக்கும்போல இருக்கு.

குவாலிடி அந்தமாதிரி இருக்கவேணும் சரியோ!!!! :unsure:

  • Replies 64
  • Views 8k
  • Created
  • Last Reply

காங்கிரசு கட்சியில் உறுப்பினராகிய திரு.விஐய் அவர்கள் நடித்த படமாகிய வேட்டைக்காரனையும் நாம் புறக்கணிப்பதிலும் ஓரு ஆணித்திரமான செய்தியினை இந்தியாவில் இருப்போருக்கு நாம் அனுப்பலாம் என தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு - கனடா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள்து.

அவ்வறிக்கையின் முழு வடிவம் வரமாறு:

அன்பான உறவுகளே!

உங்களோடு சில நிமிடங்களை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றோம். நாம் கடந்த காலங்களில் புறக்கணிப்பு போராட்டங்களை பெருமளவில் நடத்துவதற்குத் தயக்கம் காட்டி வந்திருக்கின்றோம். எம் தயக்கத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஸ்ரீலங்கா அரசு தட்டிக் கேட்பாரற்ற நிலையில் எம் மக்களைக் கொன்றொழித்தது.

வதை முகாம்களில், சிறைகளில் அடைத்துச் சித்திரவதை செய்கின்றது. நாம் எதையும் ஆழமாக சிந்தித்துச் செயற்படுவதில்லை. பொதுநோக்கில் ஆழமான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை. உணர்ச்சி வேகத்தால் அவ்வப்போது கூடிக் கலைந்திருக்கின்றோம். நாம் புறக்கணிப்பு போராட்டங்கள் குறித்து நிறையப் பேசுவோம். களங்களையும் குறிப்போம்.

ஆனால் களமிறங்கும்போது பின்வாங்கிவிடுகின்றோம். ஈடுபாடின்மை பயம் இவை போன்றவையே நாம் ஒப்புக்கொள்ள மறுக்கின்ற காரணங்கள். புறக்கணிப்புப் போராட்டம் என்பது உலகில் எல்லா நாடுகளிலும்; அங்கீகரிக்கப்பட்ட சனநாயக உரிமை. அந்த சனநாயக உரிமையினைக் கையிலெடுத்து எம் உறவுகளைக் காப்பதற்காக போராடியிருக்க வேண்டிய நாம் காலங்கடந்தும் அதை உணராமல் இருப்பதுதான் வேதனைக்குரியது.

ஆரம்ப நாட்கள் முதல் நாம் ஸ்ரீலங்கா பொருட்களையும், சன் ரீவி (Sun TV) போன்ற தொலைக்காட்சிகளையும் பெரும் முனைப்போடு புறக்கணித்திருந்தால்@ சிலவேளை எம் உறவுகளை நாம் காப்பாற்றியிருக்கக் கூடும். இன்று உறவுகளை இழந்து, அழது புலம்புகின்றோம்.

முள்ளியவாய்க்கால் கொலைக் களத்தில் எஞ்சிய எமது மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்து விட்டன. இன்றும் தமிழர் வணிக நிறுவனங்களில் குவிந்து கிடக்கிக்கின்ற ஸ்ரீலங்கா உற்பத்திப் பொருட்கள் எதைப் புலப்படுத்துகின்றன?

அந்தச் சுவைகளைத் துறக்க நாதியற்று, அவற்றை நுகர்ந்துகொண்டிருக்கின்றோமே நாம் இன்னும் புறக்கணிப்பின் உண்மையான போராட்டக்களத்துக்குள் இறங்கியிருக்கின்றோமா? இல்லை என்பதுதான் வெளிப்படையான விடை.

இதன் ஊடாக, தொடர்ச்சியான புறக்கணிப்பு போராட்டத்தால் விளைந்திருக்கக்கூடிய நன்மைகளை நாம் அறிய முயற்சிக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. சனநாயக வழிப்பட்டதும் பெரு வெற்றியைத் தரக்கூயடியதுமான புறக்கணிப்பு போராட்டத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்வது, எதிர்காலத்தில் நாம் அதனைக் கையில் எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும்.

IRISH நாட்டில் ஏற்பட்ட நிலச் சண்டையில் (Land War) Captain Charles Boycott அவர்களினால் பறிக்கப்ட்ட நிலப்பிரதேசங்களும், அவருடைய தேவையற்ற பண அறவிடல்களுக்கும் எதிராக கிழந்தெழுந்த விவசாயிகளின் போராட்டமே பின்னால் Boycott என்ற போராட்ட வடிவம் உருவாகுதற்கு காரணமாக இருந்திருக்கின்றது.

ஒரு மனிதன் சுவாசிப்பதற்கும், இதர மக்களுக்கு நடக்கின்ற அநியாயங்களைத் தட்டிக்கேட்பதற்கும் புறக்கணிப்பு போராட்டம் ஒரு கருவியாக பல நாட்டு மக்களால் இற்றைவரைக்கும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. சனநாயகத்தின் அடிப்படை உரிமையின் ஒரு அங்கமாகவே இந்தப்போராட்டம் இருப்பதை உணர வேண்டியது தமிழர்களின் முக்கிய கடமையாகும்.

மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சூழல், மற்றும் விலங்குகளுக்கும் தீங்கு ஏற்படுகின்ற போது, அந்த தீங்கைச் செய்கின்ற நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசாங்கங்களுக்கு எதிராக தொடர் போராட்டமாக இருக்கக்கூடியது இந்தப் போராட்டமே!

தீங்கு செய்பவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், அவர்களைச் சட்டத்தின் முன்னால் நிறுத்தவும், அவர்களின் மமதைப்போக்கை நிறுத்தவும் இந்தப் போராட்டம் மிகப்பெரும் கருவியாய் இருந்திக்கின்றது.

வெற்றியீட்டிய புறக்கணிப்புப் போராட்டங்கள் சில:

• 1830 இல் நடந்தேறிய நிக்கரோ மாநாட்டில் (National Negro Convention) ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத் தீர்மானம் அடிமைகளை வைத்து உருவாக்கப்படும் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன் அடிமைத்தனத்தை ஊக்கப்படுத்துவதையும் தடைசெய்யுமாறு அத் தீர்மானம் கேட்டுக்கொண்டது.

• அமெரிக்காவில் நிற வேறுபாடு உச்சம் தொட்ட காலத்தில்; வெள்ளை இனத்தவர்களால் நடத்தப்படும் பேருந்துகளில் கறுத்த இனத்தவர்கள் பயணிப்பதை புறக்கணிக்கும்மாறு வேண்டிக்கொள்ளப்பட்டார்கள். பேருந்துகளில் கறுப்பர்களுக்கான தனியான இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

• அமெரிக்காவின் விடுதலைக் காலத்தில்; பிரித்தானியா அரசாங்கத்துக்கெதிராக போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது பிரித்தானியாவில் இருந்து இறுக்குமதியாகும் அனைத்தையும் புறக்கணிக்குமாறு அமெரிக்க விடுதலைப் போராளிகள் அமெரிக்க மக்களுக்கு மிகவும் கடுமையான கட்டளையொன்றை பிறப்பித்திருந்தார்கள்.ய

• இந்திய சுதந்திரக்காலத்தில் பிரித்தானியாவுக்கு எதிராக காந்தியடிகள் தலைமையில் பல புறக்கணிப்புப் போராட்டங்கள் நடந்தேறியது.

• யூதர்களின் வன்முறை அழிவுக்கு அவர்களே காரணம் என கருத்துப்பட தெரிவித்த Henry Ford அவர்களுக்கெதிராக, அவருடைய நிறுவனம் தயாரித்த கார்களை வாங்கவேண்டாம் என யூதர்கள் புறக்கணிப்புப் போராட்டத்தில் இறங்கியிருந்தார்கள்.

• 1980 இல் ரஸ்ஸியாவில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியினை புறக்கணிக்க வேண்டி அமெரிக்க அரசாங்கமே முன் நின்று புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தியது.

இத்தகையபோராட்டங்களூடாகவே போராடிய இனங்கள் விடுதலை பெற்றிருக்கின்றன அல்லது விடுதலைக்கு வலுவேற்றியிருக்கின்றன. புறக்கணிப்பின் தாக்கமே எம் மக்களின் சுதந்திரத்தை வெற்றியாக்கித் தரும்.

புறக்கணிப்புப் போராட்டத்திலே நாம் தேடும் பல விடைகள் மறைந்திருக்கின்றன. இந்தவகைப் போராட்டமே தமிழர்களில் விடிவை எடுத்துவரும் என்பதற்கு மேலே சொல்லப்பட்ட உதாரணங்கள் போதுமானவை.

இலங்கையின் பொருளாதாரத்தையும், இன்னும் புதியதாக உருவாகிக்கொண்டிருக்கும் தமிழ் விரோத சக்திகளையும் கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வருவதற்கு தமிழர்கள் நாம் முன்வந்தால் மட்டுமே முடியும். அப்போதுதான் தேடிக்கொண்டிருக்கின்ற விடிவை நம் மக்கள் அடையலாம்.

நாளை நாங்கள் இலங்கையில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கும் போது, செத்து மடிந்த எங்கள்; மொழி பேசுகின்ற மக்களையும், கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டு காடுகளில் வீசப்பட்ட எங்கள் உறவுகளையும், கொடுரமாகப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட எங்கள் பெண்மணிகளையும், பிஞ்சுகளிலே உயிரைக் கொடுத்த எம் பச்சிளம் பாலகர்களையும், காணாமல் போய்க்கொண்டிருப்போரையும் மனதில் கொண்டு வாருங்கள்.

உங்களால் முடியும்!

நீங்களும் மனிதர்கள் தான். நீங்கள் வாங்கப்போகின்ற ஒவ்வொரு பொருளிலும் எம் உறவுகளின் சோகமும் இரத்தக் கறையும் கலந்திருப்பதை உணருங்கள். புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது எந்தவொரு பங்களிப்பையும் விட மிக இலகுவானதாக செய்யக்கூடியது.

இதைக் கூட நாம் செய்யத் தவறினால், தமிழர்களாக அல்ல, மனிதர்களாக பிறந்ததில் பயன் உண்டா என்பதை உங்கள் மனச்சாட்சியிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.

வேட்டைக்காரன் படப் புறக்கணிப்பு!!!

கொடுமைகளை செய்கின்ற இலங்கை இராணுவத்துக்கு இசை அமைத்தவர்@ இப்போது வரப்போகின்ற வேட்டைக்காரன் படத்துக்கும் இசை உதவி செய்திருக்கிறார். கொலை செய்கின்ற அரசாங்கத்தை ஊக்கப்படுத்தி, பல கொலைகளை செய்ய உதவிய இந்திய காங்கிரசு கட்சியில் உறுப்பினராகிய திரு.விஐய் அவர்கள் நடித்த படமாகிய வேட்டைக்காரனையும் நாம் புறக்கணிப்பதிலும் ஓரு ஆணித்திரமான செய்தியினை இந்தியாவில் இருப்போருக்கு நாம் அனுப்பலாம்.

நீங்கள் பணம் கொடுத்துப் பார்க்கப்போகின்ற படத்துக்குப் பின்னால் ஒரு இரத்தக் கதையொழிந்திருப்பதை உணருங்கள். பொழுதுபோக்குக்காக மற்றைய படங்களை பாருங்கள். ஆங்கிலப்படங்களை ஊக்கப்படுத்துங்கள். குற்றம் செய்தவர்களை இன்னும் பணம் கொடுத்து ஊக்கப்படுத்தாதீர்கள்.

மக்களுக்காக கண்ணீர் சிந்தும் மற்றய தமிழர்கள் நடித்த படங்களை பாருங்கள். எமக்கான ஆதரவுக் குரல்களைத் தரும் கலைஞர்களை ஆதரியுங்கள்.

பாசத்துக்குரிய தமிழர்களே!!!

எல்லாவகையான புறக்கணிப்பு போராட்டங்களையும் வெற்றியடைய வைப்பீர்களா?

அல்லது மீண்டும் தலையைச் சுற்றி வந்து மூக்கைத் தொட முயற்சிப்பீர்களா?

எம் விடிவுக்கான வாசலின் திறவுகோல் உங்கள் ஒவ்வொருவரிடமும்; தான் உள்ளது!!!

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்க்கலாம்.........

இந்த ப்படம் வெளிநாடுகளில் வெற்றியடைவதும் , தோல்வியடைவதும் தமிழனைப்பற்றிய உண்மையை உணர்த்துவதாக இருக்கும்!

பொறுத்து தான் பாகனும்.........

எங்கட தமிழன் இப்போதைக்கு 5 மதத்துக்கு முதல்ல நடந்ததை மறந்திருப்பான்...

இணைப்பு ஒண்டு Maila வந்தது அதனை இணைத்துள்ளேன் சற்று விரிவாக உள்ளது

tamilcinema.pdf

படம் பற்றி தென்னிந்திய தமிழர் ஒருவரை கேட்டன் படம் எப்பிடி எண்டு.... அவரும் படம் இன்னும் பார்க்கவில்லையாம்... ஆனால் தமிழகத்தில் படம் பார்த்த அவரது நண்பர் சொன்னதாக ஒரு கருத்தை சொன்னார்... ஈழத்தவரோடை சேந்து நாங்களும் புறக்கணிச்சு இருக்கலாம், குடுத்த காசாவதுச் மிச்சமாகி இருக்கும்... அவ்வளவு கொலை வெறியோடை மோசமான ஒரு தமிழ் படத்தை தமிழர்கள் மீது செலுத்தி இருக்கிறார்களாம்... :rolleyes:

எனிவே... உயிருக்கு துணிந்த தமிழர்கள் தாராளமாக படத்தை பார்க்கலாம்...

Edited by தயா

புறக்கணிப்பு நிலவரத்த யாராவது அறியத் தரமாட்டியளோ? :)

நேற்று கனடா toronto வில் housefull.

நேற்று கனடா toronto வில் housefull.

யேர்மன், சுவிஸ் நிலவரங்கள் தெரியுமா? :)

தமிழ் தொலைக்காட்சி ஒண்டிலயும், சில தமிழ் இணையத்தளங்களிலயும் புறக்கணிக்கப்படுற படத்துக்கு விளம்பரம் போவதாக கேள்விப்பட்டன். :)

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மன், சுவிஸ் நிலவரங்கள் தெரியுமா? :)

தமிழ் தொலைக்காட்சி ஒண்டிலயும், சில தமிழ் இணையத்தளங்களிலயும் புறக்கணிக்கப்படுற படத்துக்கு விளம்பரம் போவதாக கேள்விப்பட்டன். :)

இளைஞன் நீங்கள் இன்னும் இலங்கை [ஈழ] தமிழர்களை புரிந்து கொள்ளவில்லை :D

இளைஞன் நீங்கள் இன்னும் இலங்கை [ஈழ] தமிழர்களை புரிந்து கொள்ளவில்லை :)

தமிழ்ச்சனத்துக்குள்ள அதிசயங்கள்/மாற்றங்கள் நடக்காதோ எண்ட நப்பாசை தான் முனிவர். :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்சனத்துக்குள்ள அதிசயங்கள்/மாற்றங்கள் நடக்காதோ எண்ட நப்பாசை தான் முனிவர். :)

காலம் கடந்து விட்டது இளைஞன் அண்ணா.............. :)

  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணிப்பு நிலவரத்த யாராவது அறியத் தரமாட்டியளோ? :)

புறக்கணிப்பு வெற்றியா?

தோல்வியா?

யாராவது அறியத் தரமாட்டியளோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேட்டைக்காரன் மெகாஹிட் என சண்டிவி சொல்கிறது

http://www.tubetamil.com/view_video.php?viewkey=8b370a90ab6459993711

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:) ஏனப்பா இன்னும் நெட்ல வரேல்ல? 17 ம் திகதி இரவிலிருந்து தேடுறன் கிடைக்கேல்ல!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்கள் “வேட்டைக்காரன்” படம் பார்த்தே தீருவது என்று முடிவெடுத்திருப்பார்கள் போல்..என்னையும் இழுத்து கூட்டிக் கொண்டு போனார்கள். பொதுவாக நான் விஜய் படங்களின் டிரெய்லர் மட்டுமே பார்ப்பேன்.அதுவே முழுக்கதையும் சொல்லிவிடும்..ஆனால், நேற்று நேரம் சரி இல்லை என்று நினைக்கிறேன், ஏழரை நாட்டு சனி, தியேட்டர் வரைக்கும் கொண்டு சென்றது..

தியேட்டர் வாசலை அடைந்தபோது, வழக்கம்போல் கட் அவுட் பேனர்களில், விஜய் கோபத்துடன் தெரிந்தார்..அப்போதே ஓடி வந்து இருக்க வேண்டும். இதில் விஜய் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான ரசிகர் பெருமக்கள் “அறம் செய்ய விறும்பு, வேட்டைக்காரன் பக்கம் திறும்பு” என்று தமிழ் மேல் புல்டோசர் விட்டு ஏத்தியிருந்தார்கள். இன்னொரு பேனரில் “எவன்டா ரெட்டு..எங்க வேட்டைக்காரந்தான்டா ஹிட்டு” என்று அஜித்துக்கு எச்சரிக்கை செய்திருந்தார்..இன்னொரு பேனரில் “நெருப்பை தீண்டியவரில்லை..எங்கள் போக்கிரியை தொட்டவருமில்லை” என்று தீயின் பெருமையை சொல்லிக் கொண்டிருந்தார்..எங்கு பார்த்தாலும் மனித தலைகள்..

தியேட்டரின் வாசலை அடைத்திருந்தார்கள்..தியேட்டர் வாசலை தள்ளிக்கொண்டு ரசிகர் பட்டாளம்.எல்லோருக்கும் 20-30 வயதுதான் இருக்கும்..ஒரே நேரத்தில் தியேட்டர் கதவை தள்ளிக் கொண்டு நின்றார்கள்..சாதிக்க நினைக்கும் வயதுள்ள இளைஞர் பட்டாளம்..தண்ணி, பான்பராக் போட்டு விட்டு மூத்திர சந்தில் தியேட்டர் கதவை தள்ளிக் கொண்டு நின்ற போது இந்தியா கண்டிப்பாக வல்லரசாக மாறி விடும் என்ற நம்பிக்கை வந்தது..விஜய் அடிக்கடி சொல்வது போல் “ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் குட்டி, குட்டி ரசிகர்கள்” வலுக்கட்டாயமாக அம்மா தோளில் தூங்கிக் கொண்டு இருந்தார்கள்..அந்த குட்டி குட்டி ரசிகர்களுக்கு 1 முதல் 2 வயது இருப்பதுதான் கொடுமை..

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நிற்பது போல் இளைஞர் பட்டாளம், கியூவில் நின்றது..அனைவரில் கண்களிலும் அப்படி ஒரு வெறி, அன்று படம் பார்த்தே தீருவது என்று. இதே வெறியை படிப்பதில் காட்டியிருந்தால், சென்னையில் குடிசைகளே இல்லாமல் இருந்திருக்கும். ஒருவழியாக கவுண்டரை அடைந்தேன்..

“3 டிக்கெட் குடுங்க..”

“300 ரூபா கொடு சார்..”

“என்னங்க..120 ரூபா தானங்க..”

“அய்ய..ஊருக்கு புதுசா…ஒரு வாரத்துக்கு 100 ரூபாதான்..அப்பால வா..”

கடுகடுத்துக் கொண்டே டிக்கெட் வாங்கினேன்..

“என்னடா நண்பா, டிக்கெட் வாங்கிட்டியா..”

“டே..இது என்னடா அநியாயமா இருக்கு..100 ரூபாயா..40 ரூபாயதனடா இருந்துச்சி”

“ஆமாண்டா..அதெல்லாம் முன்னாடி..இப்பதான் கவர்மெண்ட் சொல்லிருச்சே..முதல் மூன்று வாரத்திற்கு தியேட்டர் விலை நிர்ணயம் பண்ணிக்கலாம்னு..”

கடுப்பாக இருந்தது..பக்கத்தில் இருப்பவர் வாரப்பத்திரிக்கை படித்துக் கொண்டுருந்தார்..நடுப்பக்கத்தை விரித்த போது கண்ணில் பட்டது..”திரையுலகம் சார்பில் முதல்வருக்கு பாராட்டு விழா”..இருட்டில் தட்டு தடுமாறி கொண்டு சீட்டை அடைந்தபோதுதான் மூச்சே வந்தது..கொஞ்சம் சொகுசாக உக்காரலாம் என்று கைப்பிடியின் மேல் கையை வைத்தபோது கைப்பிடியை காணவில்லை..வெறும் இரும்பு கம்பி ராடு தான் இருந்தது….அந்தநேரம் பார்த்து டிக்கெட் கைதவறி விழுந்தது.அதை எடுத்து சரிபார்க்க திறந்தபோது கொட்டை எழுத்தில் “கேளிக்கை வரி 10 ரூபாய்” என்று எழுதியிருந்தது..

திடீரென்று காதை கிழிக்கும் விசிலோசை..திரை ஒளிர தொடங்கியது..”பிலிம் டிவிசன்” என்று “ பாரத பிரதமர் 10 நாள் வெளிநாட்டு பயணம்..” என்று தொடங்கியபோது..பின்னால் இருக்கும் இளைஞர் பட்டாளம் “டே..**** மவய்ங்களா..படத்தை போடுங்கடா..” என்று அலற தொடங்கியது..ஒரு வழியாக நியூஸ் ரீல் துவங்கியபோது காது சவ்வு கிழிய ஆரம்பித்தது..படம் துவங்கியபோது, படத்தில் ஒருவர் கொடுத்த காசுக்கு மேல் விஜயை புகழ்ந்து கொண்டிருந்தார்….காலிலிருந்து ஆரம்பித்து, அப்படியே மேலே விஜயை காண்பித்தபோது விசில் சத்தம் டி.டீ.எஸ் சவுண்டை விடக் கேட்டது…அப்துல் கலாம் கனவு கண்ட ஒரு இளைஞன் எழுந்து “இளைய தளபதி விஜய் வாழ்க” என்று அடித்தொண்டையில் கத்திய போது புல்லரித்தது..

விஜய் வழக்கம்போல் பஞ்ச் டயலாக் பேசும் போதும் “தலைவா பின்னிட்ட போ..” என்று சத்தம் காதைப் பிளந்தது,,.படத்தில் கதை என்று சொல்வது என்றால்..ம்..ம்…ம்…ம்…வழக்கம்போல் ஒன்றுமேயில்லை..விஜய் வழக்கம் போல் பஞ்ச் டயலாக் விடுகிறார்..எதிரிகளை ஒரே ஆளாக தூக்கி புட்பால் விளையாடுகிறார்..வில்லனிடம் சவால் விடுகிறார்..அனுஷ்காவுடம் ரொமான்ஸ் செய்கிறார்..காமெடி நடிகர் வேறு இல்லாததால் காமெடி செய்ய முயற்சித்து உசிரை எடுக்கிறார்..அனுஷ்கா வழக்கம்போல் ஹீரோக்கள் படத்தில் வரும் ஊறுகாய்..கேமிரா விஜய் சண்டை போடும்போது சும்மா சுழட்டி சுழட்டி அடிக்கிறது…எடிட்டிங்குக்கு சிரமமேயில்லை..ஒரு கட்டிங்க்..ஒரு ஒட்டிங்க்..மனதுக்கு ஒரே ஆறுதல் விஜய் ஆண்டனி இசை..பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன..

படத்தைப் பார்த்தபோது ஒன்று மட்டும் தெரிந்தது..”இன்னும் விஜய் திருந்தவில்லை..இனிமேலும் திருந்தவும் மாட்டார்..” இடைவேளையில் எழுந்து வர முயற்சித்தேன்…என்னுடைய பைக் பார்க்கிங்க் நடுவில் மாட்டிக் கொண்டதால் தியேட்டர் ஊழியர் அனுமதிக்கவில்லை….நொந்து கொண்டே, படம் முழுவதையும் பார்த்தபோது எப்போதும் எனக்கு வந்திராத தலைவலி வந்தது..அப்படியே தலையை பிடித்துக் கொண்டே தியேட்டரை விட்டு வெளியே வந்தபோது எங்கேயோ காற்றை கிழித்துக் கொண்டு குரல் கேட்டது..

“அடுத்த முதலைமைச்சர் விஜய் வாழ்க….”

இதுபோன்ற ஆட்கள் இருக்கும் வரை விஜய் முதலைச்சர் என்ன, பிரதமர், ஜனாதிபதி கூட ஆகலாம்..எனக்குப் பிடித்த பி.எஸ் வீரப்பா சொன்ன டயலாக்குதான் நினைவுக்கு வந்தது..

“இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்..”

http://aveenga.blogspot.com/2009/12/blog-post_19.html

Edited by சித்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.