Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரான்சில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு - 30000ஐயும் தாண்டியுள்ளது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு - 30000ஐயும் தாண்டியுள்ளது!

திகதி: 14.12.2009 // தமிழீழம்

பிரான்சில் 12ம் 13ம் திகதிகளில் 37வாக்குச் சாவடிகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது.

தற்போது வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு இறுதிக்கட்டத்தை அடைந்துகொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது கிடைத்த தகவலின் படி 30000 ற்கும் மேற்பட்ட வாக்குகள் "ஆம்" என்று வாக்களிக்கப்பட்டுள்ளது என அறியப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சாதனையை புரிந்து, பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மீண்டுமொரு முறை ஆணித்தரமாக சர்வதேசத்துக்கு "தமிழீழமே இறுதித் தீர்வு" என எடுத்துக்கூறியுள்ளனர்.

மேலதிக தகவல்கள் உடனுக்குடன் அறியத்தரப்படும்.

பிரான்சில் நடைபெற்றுள்ள இந்த வாக்கெடுப்பு மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளதை வாக்கெடுப்பின் முடிவுகளில் இருந்து அறியக்கூடியதாக இருப்பதாகவும், இது ஏனைய நாடுகளில் நடைபெறப்போகும் வாக்கெடுப்பிற்கும் முன் உதாரணமாக இருக்கும் எனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் வரலாறு படைத்த வட்டுக்கோட்டை கருத்துக்கணிப்பு முடிவுகள் - 30936 வாக்குகள்: "தமிழீழமே இறுதித் தீர்வு"

திகதி: 14.12.2009 // தமிழீழம்

பிரான்சில் 12ம் 13ம் திகதிகளில் 37வாக்குச் சாவடிகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது.

தற்போது வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு முடிவடைந்துள்ளன.

தற்போது கிடைத்த இறுதித் தகவலின் படி,

31148 வாக்குகள் வாக்களிக்கப்பட்டதாகவும் அதில் 30936 வாக்குகள் "ஆம்" என வாக்களிக்கப்பட்டுள்ளது எனவும்,

மேலும், 43 வாக்குகள் மட்டுமே "இல்லை" என வாக்களிக்கப்பட்டதாகவும், 169 வாக்குகள் செல்லுபடியற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சாதனையை புரிந்து, பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மீண்டுமொரு முறை ஆணித்தரமாக சர்வதேசத்துக்கு "தமிழீழமே இறுதித் தீர்வு" என எடுத்துக்கூறியுள்ளனர்.

இன்று காலை 11மணிக்கு தமிழீழ மக்கள் பேரவையால் நடத்தப்படும் ஊடகவியலாளர்கள் மாகாநாட்டில் மேலதிக விபரங்கள் அறியத்தரப்படும் என தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் நடைபெற்றுள்ள இந்த வாக்கெடுப்பு மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளதை வாக்கெடுப்பின் முடிவுகளில் இருந்து அறியக்கூடியதாக இருப்பதாகவும், இது ஏனைய நாடுகளில் நடைபெறப்போகும் வாக்கெடுப்பிற்கும் முன் உதாரணமாக இருக்கும் எனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

99% assent Tamil Eelam in overwhelming turn out of 31,000 in France

[TamilNet, Monday, 14 December 2009, 02:23 GMT]

31,148 eligible Eezham Tamil diaspora voters over 18 in France participated this weekend in the referendum to say yes or no to independent and sovereign Tamil Eelam and 30,936 of them have said yes. The postal votes permitted to interior areas of France are yet to be counted and is expected to be between 2,000 and 3,000. In the absence of any official statistics, police estimates earlier placed the number of adult Eezham Tamils in France between 25,000 and 35,000. The near total turn out of voters amidst international campaign that Tamil Eelam is drowned in Mu'l'livaaykkal has stunned the observers. The public spirit has made sections of Tamil media, initially engaged in vicious campaign against the referendum, to make a U-turn supporting it later.

அப்ப நாளைக்கு பிரான்ஸ் வாழ் தமிழர் எல்லாம் ஊருக்கு போகினமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இவ்வளவு காலமும் புலிகள் போராடியது புலம்பெயர் சனத்தை மீளவும் ஊருக்குக் கூப்பிடத்தானோ?? இல்லாமல் தெரியாமல்த்தான் கேட்கிறன், அப்படியென்ன அவர்களை ஊருக்குக் கூப்பிடுவதில அவ்வளவு அக்கறை?? அப்ப புலம்பெயர் தமிழருக்கும் போராட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, அவர்கல பேசாமல் ஒதுங்கியிருந்து ஊரில நடக்கிற கூத்துக்களைப் பார்க்க வேண்டும், அப்படித்தானே??

மகிந்த ஊர் ஊராகப் போய் சனத்தைச் சந்தித்து சாப்பாட்டுப் பொட்டளமும் பை நிறையக் காசும் குடுத்து படமெடுத்துப் போடுவான். சனமு சிரிச்சுக்கொண்டே படத்துக்கு போஸும் குடுக்கும். அப்ப இனி எல்லா சரி வந்திட்டுது தமிழருக்கு இலங்கையில எந்தப் பிரச்சனையுமில்லை எண்டு சிங்களவன் சொல்ல அதை அப்படியே உலகமும் ஏற்றுக்கொள்ளும்.

உந்தப் புலம்பெயர் சனியங்களால தான் இவ்வலவு பிரச்சனைஉய்ம், உதுகளாலதான் மகிந்தவும் உப்பிடி எங்களோட கராரா இருக்கிறான். இல்லாட்டி எவ்வளவு நல்ல மனுசன்!!!!!!!!!

டக்கிளஸும் அவ்னின்ர அடிவருடிகளும் யாழ்ப்பாணத்தை கூறுபோட்டுச் சிங்கலத்து விற்றுக்கொண்டு வருகிறார்கள். அதை நீர் வேணுமென்Dஆல் சும்மா பார்த்துக்கொண்டு இரும். என்னால முடியாது.

அப்ப நாளைக்கு பிரான்ஸ் வாழ் தமிழர் எல்லாம் ஊருக்கு போகினமே.

ஒருநாள் அல்லதொரு நாள் அவர்கள் ஊருக்கு போவார்கள்.

அதில என்ன நக்கல்?

Edited by இளைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.