Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வலைபதிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் வணக்கம் தற்போது மாறி காலத்திற்கேற்ப ஓர‌ளவு எழுதத் தெரிந்த அனைவரும் தாங்கள் தாங்கள் வலைப்பதிவுதொட‌ங்கி நட‌த்துகிறார்கள் இது ஆரோக்கியமானாதா? சமூதாயத்தில் அவர்களின் எழுத்துகள் மூலம் மாற்றம் ஏற்படுமா? எவ் வகையில் அவர்களின் கருத்துகள் தமிழருக்கும்,தமிழுக்கும்,ஈழத்திற்கும் உதவ கூடிய வகையில் இருத்தல் வேண்டும்...

ஒரு வலைப்பதிவு தொட‌ங்குவதற்கு என்ன என்ன தகுதி வேண்டும்[நிச்சயமாக எழுதத் தெரிந்திருக்க வேண்டும்]இதை விடுத்து வேறு என்ன தகுதி வேண்டும்? நான் இங்கு குறிப்பிடுவது தனி ஒருவரால் எழுதி நட‌த்தப்படும் வலைப்பதிவுகள் பற்றினதாகும்.[தனி ஒருவரால் நட‌த்தப்படும் இனணயங்கள் பற்றி சொல்லவில்லை]

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகள் எவை? பிடித்த பதிவாளர்கள் யார்? எத‌னால் உங்களுக்கு

அவர்களின் பதிவோ அல்லது அவர்களையோ பிடிக்கும்? எனக்கு லோச‌னின் வலைப்பதிவுக்கு போக பிடிக்கும் ஒன்றும் இல்லாத சிறிய விட‌யத்தை வைத்து சிறந்த பதிவாக்குவதில் அதாவது மொக்கை பதிவு போடுவதில் லோச‌ன் சிறந்தவர் என்பது என் கருத்து.உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள் நன்றி

எனக்கு வலைப்பூவில் எழுதி பழக்கம் இல்லை / குறைவு. ஆனால் யாழ் கள உறவுகளின் வலைப்பூக்களிற்கு - சினேகிதி, தூயா, கானாபிரபா, நிலாமதி அக்கா, சின்னக்குட்டி அண்ணா.. இவர்கள் வலைப்பூக்களிற்கு நேரம் கிடைக்கும்போது செல்வது உண்டு, அங்கு பின்னூட்டலும் இடுவது உண்டு.

கரும்பு வலைப்பூ எனது நிருவாகத்தில் இருக்கின்றது. ஆனால்.. இங்கு எழுத எனக்கு விருப்பம் இல்லை. எழுதுவதற்கு கருத்துக்களை பகிர்வதற்கு யாழ் கருத்துக்களமே பிடித்து இருக்கின்றது. அஞ்சனா (தமிழ்தங்கை), பவித்திரா (எனது அக்கா) ஆகியோர் கரும்பு வலைப்பூவில் எழுதுகின்றனர். கரும்பு வலைப்பூவின் சேவையை WordPress வழங்குகின்றது. வலைப்பூ செய்பவர்கள் WordPressஐ பயன்படுத்துவது சிறப்பானது என்பது எனது அபிப்பிராயம்.

வலைப்பூ என்பது பொழுதுபோக்கையே மையமாக கொண்டு இருக்கின்றது என்று நினைக்கின்றேன். யாழும் எனது பார்வையில் அப்படித்தான். விருப்பமான பதிவர்கள் என்று எவரையாவது குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை. சந்தர்ப்பம் கிடைக்கும்போது எழுந்தமானமாக எல்லா வலைப்பூக்களிற்கும் சென்று வருவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் வணக்கம் தற்போது மாறி காலத்திற்கேற்ப ஓர‌ளவு எழுதத் தெரிந்த அனைவரும் தாங்கள் தாங்கள் வலைப்பதிவுதொட‌ங்கி நட‌த்துகிறார்கள் இது ஆரோக்கியமானாதா? சமூதாயத்தில் அவர்களின் எழுத்துகள் மூலம் மாற்றம் ஏற்படுமா? எவ் வகையில் அவர்களின் கருத்துகள் தமிழருக்கும்,தமிழுக்கும்,ஈழத்திற்கும் உதவ கூடிய வகையில் இருத்தல் வேண்டும்...

ஒரு வலைப்பதிவு தொட‌ங்குவதற்கு என்ன என்ன தகுதி வேண்டும்[நிச்சயமாக எழுதத் தெரிந்திருக்க வேண்டும்]இதை விடுத்து வேறு என்ன தகுதி வேண்டும்? நான் இங்கு குறிப்பிடுவது தனி ஒருவரால் எழுதி நட‌த்தப்படும் வலைப்பதிவுகள் பற்றினதாகும்.[தனி ஒருவரால் நட‌த்தப்படும் இனணயங்கள் பற்றி சொல்லவில்லை]

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகள் எவை? பிடித்த பதிவாளர்கள் யார்? எத‌னால் உங்களுக்கு

அவர்களின் பதிவோ அல்லது அவர்களையோ பிடிக்கும்? எனக்கு லோச‌னின் வலைப்பதிவுக்கு போக பிடிக்கும் ஒன்றும் இல்லாத சிறிய விட‌யத்தை வைத்து சிறந்த பதிவாக்குவதில் அதாவது மொக்கை பதிவு போடுவதில் லோச‌ன் சிறந்தவர் என்பது என் கருத்து.உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள் நன்றி

இது வரை நான் எந்த வலைப்பதிவிலும் எழுதவில்லை, அத்துடன் குறிப்பிட்ட வலைப்பதிவுக்குச் சென்று செய்திகள் வாசிக்க வேண்டும் என்ற ஆவலும் ஏனோ ஏற்படவில்லை.

ஆனால் யாழ் களத்தில் சிலர் செய்தியை இணைத்துவிட்டு மிகுதியை அங்கு பார்க்கவும் என்றோ ....அல்லது செய்தி இங்கு அதுசம்பந்தப்பட்ட படம் அங்கு ...... என்று தூண்டில் போட்டு இழுத்தால் வேண்டா விருப்பாக போவதுண்டு.

மொத்தத்தில் கதை , கவிதை, கட்டுரை எழுதுபவர்களுக்கு ஒரே இடத்தில் தமது வலைப்பதிவில் பதிந்து வைத்திருப்பது பிரயோசனமானதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

மொக்கை போடுவதற்கு யாழ் களம் இருக்கும் போது ...... வலைப்பதிவிற்கு சென்று பொன்னான நேரத்தை ஏன் வீணாக்குவான். :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மச்சான்,தமிழ்சிறி உங்களின் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.உங்களுக்காவது எனது பதிவை படித்து கருத்து எழுத வேண்டும் எனத் தோன்றியதே சந்தோஸம். :(

மொக்கை போடுவதற்கு யாழ் களம் இருக்கும் போது ......

மொக்கை என்று எதை குறிப்பிடுகிறீர்கள் ?


மொக்கே (moquer) பிரஞ்சு மொழியில் பகிடிபன்னுதல், நாக்காலடித்தல் , மதிக்காமை என்பதைக் குறிக்கும் சொல்லு...

to mock : see in other langues

Kadis of India : According to our class terminology, Joke, Kadi, Mokkai and Sakkai are ranked in that order.

Here lets enjoy some mokkais and kadis which we authored in our happiest days.

Sridhara "Wandayar"

Once Sridharan was prepaing for GATE Exam. He was revising TOC. Shrini Knocked at his door. Sridhar said that he heard it as "TOC, TOC".

Jokes from Babu

A man goes to a doctor for his annual check-up. After performing some tests, the doctor comes into the examining room with a serious look on his face.

The man immediately senses something is wrong.

... ...

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கை போடுவதற்கு யாழ் களம் இருக்கும் போது ......

மொக்கை என்று எதை குறிப்பிடுகிறீர்கள் ?

-----

மொக்கை என்னும் சொல்லை தமிழ்நாடு ரோக் என்னும் களத்தில் தான் நான் கற்றுக்கொண்டேன்.

மொக்கை என்பதின் நேரடி அர்த்தம் ....ஒரு கத்தியோ , மரம் அரியும் வாள் போன்றவை மொட்டையாக இருப்பது.

(அதனால், ஒரு பொருளை வெட்டும் போதோ..... அரியும் போதோ ..... எதிர்பார்த்த பலனை தராது.)

அத்துடன் ஒருவர் ,களத்தில் ஒரு தலைப்பை ஆரம்பித்தால் ..... அந்த தலைப்புக்கு சம்பந்தமில்லாத கருத்தை கொண்டு, அந்த வந்து அந்தப்பதிவில் இட்டு அந்த தலைப்பின் போக்கை வேறு திசைக்கு இழுத்துச் செல்வதன் மூலம் தலைப்பை இட்டவரை எரிச்சல்(கடுப்பு) ஏற்படுத்துதல்.போன்றவை சிலருக்கு அற்ப சந்தோசம். :D (உ+ம்; நலமோடு வாழ்தல் பகுதியில் சினிமா பற்றி கதைத்தல், நாவூற பகுதியில்-அரசியல்,மெய்யெனப்படுவது பகுதியில்-கணனி போன்றவை)

மொக்கை போடுவதில் பல மன்னர்கள் யாழில் இருக்கிறார்கள். அவர்களின் பெயர் ...... வேண்டாம். :(

மொக்கை பற்றி மேலும் அறிய.....

http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/15074-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/

Edited by தமிழ் சிறி

மொக்கை பற்றிய விளக்கத்திற்கு நன்றி.

வலைப்பதிவு என்றால் என்ன?

ஒரு வலைப்பதிவு என்பது ஒரு தனிப்பட்ட நாட்குறிப்பேடு. ஒரு தின மேடை. ஒரு தொகுப்பான இடம். ஒரு அரசியல் மேடை. முக்கியச் செய்திக்கான இடம். இணைப்புகளின் தொகுப்பு. உங்கள் சொந்த தனிப்பட்ட சிந்தனைகள். உலகிற்கான அறிவிப்புகள். நீங்கள் விரும்பும்படியே உங்கள் வலைப்பதிவு இருக்கலாம். பல்வேறு அளவுகளில் வடிவங்களில் மில்லியன் கணக்கில் வலைப்பதிவுகள் உள்ளன, மேலும் இங்கு உண்மையில் எந்தவொரு கட்டுபாடுகளும் கிடையாது. எளிதாகக் கூற வேண்டுமானால், ஒரு வலைப்பதிவு என்பது நீங்கள் மிக எளிதாக உங்கள் எழுத்துத் திறனை வெளிப்படுத்தும் இணையத்தளம் ஆகும் புதிய படைப்புகள் மேலேயே காட்டப்படுவதால், உங்கள் பார்வையாளர்கள் புதியவற்றை எளிதில் படிக்கமுடியும் பிறகு அவர்கள் அதற்கு கருத்துரைக்கவோ, அதற்கு இணைப்பு ஏற்படுத்தவோ, அல்லது மின்னஞ்சல் அனுப்பவோ செய்வார்கள். அல்லது செய்யமாட்டார்கள்.

1999 இல் Blogger தொடங்கப்பட்டதிலிருந்தே, வலைப்பதிவுகள் வலை அமைப்பை மாற்றியமைத்துள்ளன, அரசியலில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன, இதழியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின, மற்றும் பல மில்லியன் மக்கள் அவர்கள் சொந்த கருத்துகளை வெளிப்படுத்தவும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் வழி ஏற்படுத்தின.

http://www.blogger.com/tour_start.g

வலைப்பதிவு என்றால் என்ன? என்று என்னைக் கேட்டால் இப்படித்தான் விளக்கியிருப்பேன் : :rolleyes:

This question looks odd to most people; the question should not be what is blog but rather what is a blog?

http://www.whatisblog.net

So what is a Blog anyway? I am asked every week via emails, conversation and Instant Messaging chats to define: ‘what is a blog’. If you’re reading this you may well be asking the same question.

http://www.problogger.net/archives/2005/02/05/what-is-a-blog/

It is 2008; do we still need to ask ourselves what a blog is? I think so, and for two reasons. First of all we still have many misconceptions about blogging floating around the web. Pretty much every week I get at least one email from someone asking if I believe blogging has a future. My answer is always “as long as the Internet has a future, blogs do too.” You will see why I answer that below.

http://www.dailyblogtips.com/what-is-a-blog/


இந்த விபரங்கள் எல்லாவற்றையும் உட்கொண்டு, நன்றாக விளங்கியபின், ஒரு சரியான எல்லோராலும் (குறிப்பாக சிறுவர்களிற்கு ) விளங்கிக்கொள்ளகூடிய வரையறுப்பு ஒன்றை புளொக் என்ற சொலிற்கு ஆக்குவிர்கக்ள் என்று நம்பி, இவற்றை இங்கு இணைத்துள்ளேன்

அத்தொடு கீழ்கண்டவாறு ஒரு புதிய இளையில் போட்டீர்களானால் , யாராவது புளொக் எண்டு கூகிள் பண்னினால் இந்தப்பதிலும் அவர்களிற்கு கிடைக்கும் !

புளொக்: உங்கள் இல்ககணம், விளக்கம், விபரிப்பு ... ...

முதலாக நன்றி! :rolleyes:

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ. குமார், பலதரப்பட்ட விடயங்களையும் விளக்கமாகத் தருகின்றீர்கள் நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெகுமார் வருகைக்கும் விளக்கமான பதிவுக்கும் நன்றி...தமிழ்சிறி மொக்கை பற்றிய உங்கள் விளக்கம் அருமை நான் இவ்வள‌வு காலமும் மொக்கை போடுதல் என்றால் ஒன்றுக்கும் பிர‌யோச‌னம் இல்லாத விச‌யத்தை கதைத்தல் என நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெகுமார் வருகைக்கும் விளக்கமான பதிவுக்கும் நன்றி... தமிழ்சிறி மொக்கை பற்றிய உங்கள் விளக்கம் அருமை நான் இவ்வள‌வு காலமும் மொக்கை போடுதல் என்றால் ஒன்றுக்கும் பிர‌யோச‌னம் இல்லாத விச‌யத்தை கதைத்தல் என நினைத்தேன்.

ரதி, நீங்க நினைத்தது நூற்றுக்கு நூறு சரி. :rolleyes:

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.