Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செருப்..........பூ ...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செருப்.........பூ ...(காலணி )..

மனிதனுக்கு அன்றாடம் தேவையான பொருட்களில் ஒன்று. இதன் பலன்கள் பெருமை பல கோடி.........காலுக்கு பாதுகாப்பு ........மழை ....குளிர் ...வெப்பம்.... முட்கள் ...அழுக்குகள் என்று .........ஆனால் இதற்கு மதிப்பு என்னவோ ?........இத்தனைக்கும் சுமை தாங்கியாய் உற்ற தோழனாய் நம்மோடு தொடர்ந்து வருகிறது. இந்த பாதணி. ஆரம்ப காலத்தில் மிதியடிக்கட்டை என்றும்...செருப்பு என்றும் காலணி..... பாத அணி ......என்றும் அழைக்க பட்டது. இதன் அமைப்பு ..வண்ணவண்ணமாய் ...நிறங்களாய் ..ரகங்க்களாய்...இதன் அலங்காரம் சொல்லி முடியாது. காலத்தின் தேவைக்கேற்ப மாறு படும். சில சமயம் புதுசாய் இருக்கையில் காலையே ( கடித்து )வலிக்க செய்து விடும். இன்டர் வியூ சமயத்தில் சங்கடம் தந்த சமயங்களும் உண்டு. இந்த காலணி பற்றி நினைக்கையில் , இந்த செருப்பு ஒரு காதலுக்கு தூது போன கதை சொல்லவா? ..........இதோ

அந்த கிராமத்தில் சற்று வசதியானது ராஜரத்தினம் குடும்பம். இவர்களுக்கு ஒரு தியேட்டர் (சினிமா கொட்டகை) இருந்தது .நகரில். இவரது செல்ல பெண் தான் ஜீவா எனும் ஜீவராணி. வழக்கம்போல பள்ளி மாணவி, சிறுவயதில் தாயை இழந்த ஒரே ஒரு செல்லப்பெண். நிறைய நண்பிகளும் இருந்தார்கள். பள்ளி வாழ்வும் கேலிகளும் கிண்டல்களுமாய் இனிய பொழுது இவர்களுக்கு.வாழ்க்கை வண்ண வண்ண பட்டாம் பூச்சியாய் சிறகடித்து பறந்து கொண்டிருந்தது.

அவ்வூரின் வாத்தியார் மகன் அருணாகிரி என்னும் அருணா .இவனுக்கும் நட்பு வட்டம் உண்டு. அருணாவுக்கு ஜீவாமீது ஒரு ஈர்ப்பு இருந்தது . மாணவியர் கூட்டம் எங்கு சென்றாலும் இவர்களும் செல்வார்கள். ஒரு நாள் தன் தோழன் மூலம் தூது விடான் அருணா. அவள் ஜீவா கண்டு கொள்வதாயில்லை. சில சமயம் தனி மையில் சந்திக்க நேர்ந்தால் என்னை சுற்றி சுற்றி வராதே என்பாள். ஒரு முறை இவன் கொடுத்தனுப்பிய கடிதத்தை அவன் முன்னே கிழித்தெறிந்து விட்டாள். இருந்தாலும் அருணாவின் மனசு அவளை சுற்றி சுற்றியே வந்தது . ஒரு முறை மாணவிகள் எல்லோரும் நகரில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார்கள். மாணவர்கள் காதிலும் இந்த சேதி எட்டி விட்டது. அருணா கூட்டமும் தியேட்டர் நோக்கி படையெடுத்தது. படம் முடிந்ததும் ....அருணா கூட்டம் பஸ்தரிப்பிடத்தில் , காத்திருந்தார்கள். ஜீவா தன் வீட்டுக காரில் தோழியர் களையும் ஏற்றிக் கொண்டு புறப்பட தயாராகும்போது .., தாம் படம் பார்க்க வரும்போது இவர்கள் ஏன் வந்தார்கள் என்று மாணவர்களுடன் கார சாரமான விவாதம் நடந்தது . வாய்ச்சண்டை முற்றி ...... நண்பிகள் தடுத்தும் கேட்காமல் .ஜீவராணி அருணாவுக்கு செருப்பால் அறைந்து விடாள். . அருணா சற்றும் எதிர் பாராமல் நிலை குலைந்து விட்டான் . இவர்கள் வீடு சேர்ந்ததும் அவ்வூர் முழுக்க் "தியேட்டர் காரன் மகள் செருப்பால் அறைந்து விடாள்" என்று .........கதை பரவி விட்டது. ஜீவாவுக்கு அவமானமாக் போய் விட்டது. நண்பிகள் மறு நாள் மன்னிப்பு கேட்கும் படி சொன்னார்கள். ஜீவா தன் தந்தைக்கு இந்த சேதி போகாமல் பார்த்துக்கொண்டாள். வாத்தியார் , பணக்காரன் ராஜரத்னாதுடன் மோத விரும்பாமல் ,மகனுக்கு மாற்றல் வாங்கி வேறு நகர் பள்ளியில் சேர்த்து விடார்.. ஊரார் இவளை திமிர் பிடித்தவள் என்று திட்டி தீர்த்தனர். அதன் பின் ஜீவா .......அதிகம் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை பள்ள்ளிக்கு வந்தாலும் கலகலப்பாக இருபதில்லை அவளது நட்பு வட்டமும் குறைந்து விட்டது. காலம் யாருக்கும் காத்திராமல் ஆண்டு இறுதி தேர்வும் வந்தது........எல்லோரும் தேர்வு எழுதி முடியவும், விடுமுறைக்காக பள்ளி மூடபட்டது.

தேர்வின் முடிவு பார்க்க இரண்டு மாதங்களின் பின் வந்தவள் அருனாவை சந்தித்தாள். அவன் முகம் கொடுத்து பேச விரும்பவில்லை. அவனுக்கு நல்ல பெறு பேறுகள் கிடைத்திருந்தன. தந்தையார் தலை நகரத்துக்கு அனுப்பி .உயர் கல்வி படிப்பித்தார். காலம் தன் பாட்டில் போய் கொண்டு இருந்தது. இறுதியில் ஒரு பெரிய கம்பனியில் , முதன்மைப்பதவி பெற்றான். ராஜரத்தினம் ஐயாவும் தன் மகளுக்கு திருமண பேச்சை எடுத்தார். தாயில்லாப் பிள்ளை நேரகாலத்துடன் கலியாணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன். அவள் எதற்கும் சம்மதிக்க வில்லை. வெளியூரில் இருந்து உயர் பதவியில் இருக்கும் இளைஞ்சர்களின் பெற்றார்கள் , இவாகளின் உறவுக்காக , நடபுக்காக ( பணத்துக்காக ) போட்டி போட்டனர் இறுதியாக இவள் தனக்கு இப்பொழுது திருமணம் வேண்டாமென்று சொல்லி விட்டாள்.

ஒரு நாள் பேச்சு வாக்கில் இந்த சேதி ராஜரத்தினம் ஐயாவுக்கு எட்டியது மகளை விசாரித்தார். அவளும் உண்மையை ஒப்புக்கொண்டாள். அருணாவுக்கு செய்யும் பரிகாரம் அவனையே திருமணம் செய்ய இருப்பதாக தன் முடிவை சொன்னாள். அவருக்கு என்ன செய்வதன்று தெரியவில்லை. இவளின் பிடிவாதமும் தெரியும் .தன் மகளுக்காக் தன் நிலையிறங்கி வாத்தியாருடன் , சமாதானம் செய்ய புறபட்டார். முதலில் வாத்தியார் விரும்பவில்லை என்றாலும் மகனின் விருப்பமே பெரிது என்றார். அந்த வருட ஊர் திருவிழாவின் போது . அருணா ஊருக்கு வந்திருந்தான். முதலில் மறுத்தவன் , ஜீவா நேரில் சென்று கதைத்து மன்னிப்பு கேட்ட பின் , அந்த அடி தன் திமிர் தனத்துக்கு கிடைத்த பெரும் தண்டனை என்றாள். ஒருவாறு இரங்கினான். அந்த சம்பவத்தின் பின் ....அதன் பின் அவள் நிறைய மாறி இருந்தாள் . பணத்திமிர் தனம் இல்லை. அகங்காரம் இல்லை சாது போன்று இருந்தாள். திருமணம் இனிதே நிறைவேறியது. பொறுமையின் இருப்பிடமான அந்த செருப்பு (செருப்படி) அவர்களுக்கு காதல் தூது ஆனது.

குறிப்பு ": இக்கதை பல வருடங்களுக்கு முன் என் பாட்டி சொன்ன கதையின் சாராம்சம் .காலணி பற்றி எழுதும்போது கதையாக் வந்தது . என்பாட்டி காலமாகி முப்பதுக்கு மேற்பட்ட வருடங்கள். செருப்புகளின் சேவை பலவிதம். கலியாணப் புரோக்கர்களின் காலம் தொட்டு இன்று வரை..........

வெளியிட்டவர் நிலாமதி நேரம் 10:01 AM தேதி Dec 17, 2009

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சகோதரி செருப்பை வெறும் செருப்பாய் நினைசசிட்டீங்கள் ! இந்தச் செருப்பு, உப்பு , அம்மா , அக்கா, பொக்கட்டில் இருக்கும் பணம் ஆகியவைகளில் நாம் அக்கறை செலுத்தாதற்கு காரணம் கண்ணிமைபோல் அவை எப்போதும் எம்முடனும் எமக்குத் தேவையாகவும் இருப்பதுதான்.

பி .கு; இராமன் முடிசூட வரும்போது ஒரு பிரச்சனை பின் வனவாசம் முடித்து அரசாண்டபோது ஒரேஏ பிரச்சனைகள்தான். அனால் இடையில பதினான்கு வருடங்கள் செருப்பு அரசாண்டபோது அயோத்தி மக்கள் பிரச்சனைகள் எதுவுமின்றி சுபீட்சமாக வாழ்த்தார்கள். :rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கலியானம் கடடிய பின் என்ன வாங்கு வாங்கியுருக்குமோ அந்தப்பெண். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கலியானம் கடடிய பின் என்ன வாங்கு வாங்கியுருக்குமோ அந்தப்பெண். :(

எதை சொல்கிறீர்கள் சகிவன் :):):D

நிலா அக்கா செருப்பு[பூ] கதை நன்றாக உள்ளது ஆத்திரத்தில் செய்யும் சில சம்பவங்கள் சிலருக்கு வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியிருக்கிறது... :D

அப்ப காதலுக்காய் செருப்படி வாங்கினாலும் பரவாயில்லை எண்டு சொல்லுறீங்கள் அக்கா.. ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.