Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடியத் தமிழரின் வாக்குக் கணிப்பு பெரும் உற்சாகத்துடன் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடியத் தமிழரின் வாக்குக் கணிப்பு பெரும் உற்சாகத்துடன் ஆரம்பம்

திகதி: 19.12.2009 // தமிழீழம்

கனடா தழுவி நடைபெறும் வட்டுக்கொட்டைத் தீர்மானம் மீதான வாக்குக்கணிப்பு இன்று காலை 9.00 மணிமுதல் ஆரம்பமாகியுள்ளது. இது இன்று மாலை 9.00 மணிவரை வரை நடைபெறும் சில வாக்களிப்பு நிலையங்களின் முன்பாக காலை 9.00 மணிக்கு முன்பாகவே மக்கள் ஆவலுடன் நீண்ட வரிசையில் நிண்டதை காணக்கூடியதாக இருந்தது.

கனடியத் தமிழ் ஊடகங்கள் மட்டுமல்ல கனடியத் தேசிய ஊடகங்களும் இத்தேர்தலுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டவண்ணமுள்ளன. ஒரு நாட்டின் தேர்தல் நடைபெறுவதுபோல் மிக ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் நடைபெறுவதாக கனடிய ஊடகம் ஒன்று செய்தி தெரிவித்துள்ளது.

உலகில் பரப்பளவில் இரண்டாவது பெரிய நாடாகவும் சனநாயகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடான கனடாவில் தமிழீழத்திற்கு வெளியே ஈழத்தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். தமிழீழத்திற்கு வெளியே ஈழத்தமிழ் மக்களால் நடத்தப்படும் முதலாவது பாரிய தேர்தல் என்பதுடன் அரசியில் எதிர்காலத்துக்கான தேர்தல் என்பதால் சரித்திர முக்கியத்துவம் பெறுகின்றது.

கனடா தழுவி 31 வாக்களிப்பு நிலையங்களில் 62 வாக்களிப்ப மின் இயந்திரங்களினூடாக வாக்குப்பதிவு நடைபெறுகின்றது என தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்காக வயது பால் வேறுபாடின்றி பல நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தேர்ததலை நடத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஊர்ச்சங்கங்கள் விளையாட்டுக் கழகங்கள், இளையோர் அமைப்புகள், துறைசார் வல்லுனர் அமைப்புகள் என பல்வேறு தமிழ் சமூக அமைப்புக்களும் தேர்தலுக்கான பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

மாலை 9.00 மணிவரை வக்களிகக் நேரம் இருந்தபோதும் காலைமுதலே மக்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் வாக்களிப்பில் கலந்துகொள்வதை காணக்கூடியதாக உள்ளது. மிகவும் நவீனத்துவப்படத்தப்பட்ட வாக்களிப்பு இயந்திரங்கள் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. இந்த இயந்திரம் 6 கணப்பொழுதுக்கு ஒரு வாக்களிப்பு அட்டையை உள்வாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாக்களிப்பு முடியும் நேரம் 9.00 மணியிலிருந்தே தேர்தல் முடிவுகள் அறியக் கூடியதாக இருக்கும் என கூறப்படுகின்றது. தேர்தல் முடிவடைந்ததும் ரொறன்ரோ பெரும்பாகத்தில் ஸ்காபுரோவில் அமைந்திருக்கும் பிரபல்யமான டெல்ரா விடுதியில் (2035 Kennedy - Delta Toronto East Hotel) பத்திரிகையாளர் மாநாட்டில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என அறியப்படுகின்றது.

தமிழர்கள் அதிகமாக வாழும் ரொரன்ரோ பெரும் பாகத்தில் மட்டும் 20 வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ளன. மற்றும் மொன்றியல், ஒட்டாவா, வன்கூவர், கல்கரி, எட்மிண்டன், வோட்டலூ, வினிப்பெக், கோன்வல், கலிபக்ஸ் போன்ற கனடாவின் பாரிய நகரங்களிலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ளன.

காலை 9 மணி முதல் மாலை 9 மணிவரை தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் மக்கள் வாக்களிக்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு மேலும் அறிவித்துள்ளது. அத்துடன் வாக்களிக்க வரும்போது மக்கள் கொண்டு வரவேண்டிய அடையாள ஆவணங்கள் குறித்தும் அவ்வமைப்பு மேலும் அறிவித்துள்ளது. அது குறித்த விபரங்களையும், வாக்களிப்பு நிலையங்களின் விபரங்களையும் அவ்வமைப்பின் இணையத்தளம் www.tamilelections.ca இல் நீங்கள் பார்க்கலாம்.

மேலதிகத் தகவல்களுக்கு பதிவு, சங்கதி மற்றும் தமிழ்நெட் இணையத் தளங்களைப் பார்க்கவும். மரப்பலகை இனையத்தளம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கெதிரான தீவிர பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது நீங்கள் அறிந்ததே.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இருக்கும் எல்லா தமிழ் மக்களும் கட்டாயம் வாக்கு போட‌ போக வேண்டும்...வாழ்த்துகள்.

Edited by ரதி

இன்று மாலை 3 மணியளவில் வாக்களிக்கச் சென்றேன். நிறையப் பேர் வந்து வாக்களித்துச் செல்வதை அவதானிக்ககூடியதாக இருந்தது. அரசியல் பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளாதவர்கள் கூட 'இது எம் கடமை' என்ற ரீதியில் வந்து வாக்களித்தனர். நான் கதைத்த, தொலைபேசியில் தொடர்பு கொண்ட அனைவரும் கண்டிப்பாக வாக்களிப்பதாகவும், வாக்களித்ததாகவும் கூறினர்.

உண்மைதான் நிழலி. கடந்த காலங்களில் போராட்டங்களில் கலந்து கொள்ளாதவர்களும் மற்றும் தமிழீழம் குறித்து முரண்பட்ட கருத்துக்கொண்டிருந்தோர் பலரும் குடும்பத்தாருடன் வாக்களிக்க வந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று மாலை 3 மணியளவில் வாக்களிக்கச் சென்றேன். நிறையப் பேர் வந்து வாக்களித்துச் செல்வதை அவதானிக்ககூடியதாக இருந்தது. அரசியல் பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளாதவர்கள் கூட 'இது எம் கடமை' என்ற ரீதியில் வந்து வாக்களித்தனர். நான் கதைத்த, தொலைபேசியில் தொடர்பு கொண்ட அனைவரும் கண்டிப்பாக வாக்களிப்பதாகவும், வாக்களித்ததாகவும் கூறினர்.

சந்தோசமான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

அய் நானும் போனேன் வாக்குப் போடுவதற்கு.அதற்குள் இன்னுமொரு நோக்கமும் இருந்தது சொன்னால் சிரிக்க கூடாது...ஸ்காபிறோவில் இருக்கும் யாழ் கள உறவுகள் யாராச்சும் இண்டைக்காவது என் கண்ணில் படமாட்டார்களா.... என்ற ஏக்கத்தில் தான் போனேன்.யாரும் நிண்டு இருந்தாலும் எனக்கு யாரையும் ஏற்கனவே தெரிந்தது இருக்காத காரணத்தினால் போனதும் வந்ததுமாக வந்து விட்டேன்.முன்னர் வேறு பல சரீர உதவிகள் எம் நாட்டுக்காக செய்திருந்தாலும் கூட. முதல் தடவையாக எங்கள் நாட்டுக்காக,மக்களுக்காக ஒரு நல்ல விடயத்தை மற்றவர்களோடு ஒத்து நானும் செய்துள்ளேன் எண்ட திருப்தியோடு இண்டைக்கு வந்துள்ளேன்.இன்றைய நாள் மிகுந்த குளிரான ஒரு நாளாகக் காணப்பட்டாலும் கூட மக்கள் வந்து வாக்குப் போட்டுக் கொண்டு இருந்ததை காணக் கூடியதாக இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணடா வாழ் தமிழீழ மக்கள் இந்தத் தேர்தலை நிச்சயம் வெற்றிபெறச் செய்வார்கள் என்கிற நம்பிக்கை உலகத் தமிழர் அனைவருக்கும் இருக்கிறது. நாம் ஒன்றுபடுவதற்குக் கிடைத்த மிகப்பெரிய சந்தர்ப்பம்.

ஆகவே நாமும் வாக்களிப்போம், மற்றவர்களையும் ஊக்குவிப்போம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !!!!!!!!

ஓட்டுப்பலகை மற்றும் தமிழர் விரோதப் பிரச்சரங்களைத் தூக்கி எறிவோம். திரண்டு வாக்களிப்போம் !!!பங்குபற்றிய அனைத்து நெஞ்சங்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !!!!!

எனது பெற்றோர் காலையில் சென்று வாக்களித்தனர். நான் இரவு சென்று வாக்களித்தேன். சிறீ லங்காவில் இருந்தபோது நான் ஒருதடவைகூட பொதுசன வாக்கெடுப்பில் கலந்ததுகிடையாது. அகதிக்கு ஏது வாக்களிப்பு... ஆனால் கனேடிய திருநாட்டில் பொதுசன வாக்கெடுப்பில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்து இருந்தது. ஆனால்.. முதன்முறையாக தாயகம் சம்மந்தமாக கனடாவில் வாக்கெடுப்பு ஒன்றில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது நல்லதொரு அனுபவமாக இருக்கின்றது. இப்படி செய்வது சரியா பிழையா என்று சொன்னவர்கள்கூட.. சரி பிழை பாராது தமிழர் என்கின்ற வகையில் வாக்கெடுப்பில் கலந்துகொண்டதை அவதானிக்க முடிந்தது. பார்போம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தமிழர் தேர்தல் பல்லாயிரக்கணக்கானோர் வாக்களிப்பு சிறிலங்காவின் பொய் பிரச்சாரம் - மக்கள் ஆவேசம்

திகதி: 20.12.2009 // தமிழீழம்

கனடாவில் வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்குப் கணிப்பு இன்று 19ம் திகதி சனிக்கிழமை 9மணிமுதல் மாலை 9.00 மணிவரை நடைபெறுகின்றதுகாலை முதல் உணர்வு பூர்வமாக உற்சாகத்துடன் மக்கள் தெடர்ச்சியாக சென்றவண்ணமுள்ளனர்.

மாலை 2.00 மணிவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் வாக்களித்துள்ளனர். மதியத்துக்குப் பின்னர் மக்கள் குடும்பமாகவும் சாரை சாரையாக வந்து வாக்களிப்பதை காணக்கூடியதாக உள்ளது. வாகன வசதியில்லாதோருக்கு ஊர்சங்கங்கள் தொண்டர் அமைப்புகள் எனபன வாகன வசதிகள் செய்து கொடுப்பதை காணக்கூடியதாக உள்ளது.

கனடியத் தமிழ் ஊடகங்கள் மட்டுமல்ல கனடியத் தேசிய ஊடகங்களும் இத்தேர்தலுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டவண்ணமுள்ளன. ஒரு நாட்டின் தேர்தல் நடைபெறுவதுபோல் மிக ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் நடைபெறுவதாக கனடிய ஊடகம் ஒன்று செய்தி தெரிவித்துள்ளது. இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் உள்ள கனடாவில் ஐம்பதாயிரம் மக்கள் வாக்களிக்கக்கூடும் என கனடிய தேசிய ஊடகம் ஒன்று செய்தி தெரிவித்துள்ளது.

காலம் காலமாக தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டுவந்த கனடாவின் தமிழ் வானொலி ஒன்று சிறிலங்கா அரசுக்கு துணையாக மக்களை குழப்புவதற்காக பொய்பிரச்சாரத்தில் ஈடுபட்டு துரோகத்துக்கு துணைபோகின்றது. ஆனால் அதனையும் தாண்டி மக்கள் வரவு அதிகரித்தவண்ணமுள்ளது.

குளிரையும் பொருட்படுத்தாது வயோதிபர்கள், நடக்க முடியாத அங்கவீனர்கள் கூட இவ்வாக்களிப்பில் கலந்து கொள்வதை காணக்கூடியதாக உள்ளதுதேர்தல் கண்காணிப்பில் உள்ள வேற்றினத்தவர் இவர்களுடன் உரையாடிபோது இந்நிலையலும் இவர்களின் கடமையுனர்ச்சியை எண்ணிக் கண்கலங்கினார்மிகவும் நவீனத்துவப்படத்தப்பட்ட வாக்களிப்பு இயந்திரங்கள் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது.

இந்த இயந்திரம் 6 கணப்பொழுதுக்கு ஒரு வாக்களிப்பு அட்டையை உள்வாங்ககின்றமை குறிப்பிடத்தக்கது. வாக்களிப்பு முடியும் நேரம் 9.00 மணியிலிருந்தே தேர்தல் முடிவுகள் அறியக் கூடியதாக இருக்கும் என கூறப்படுகின்றது. தேர்தல் முடிவடைந்ததும் ரொறன்ரோ பெரும்பாகத்தில் ஸ்காபுரோவில் அமைந்திருக்கும் பிரபல்யமான டெல்ரா விடுதியில் (2035 Kennedy - Delta Toronto East Hotel) பத்திரிகையாளர் மாநாட்டில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என அறியப்படுகின்றது.

தமிழர்கள் அதிகமாக வாழும் ரொரன்ரோ பெரும் பாகத்தில் மட்டும் 20 வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ளன. மற்றும் மொன்றியல், ஒட்டாவா, வன்கூவர், கல்கரி, எட்மிண்டன், வோட்டலூ, வினிப்பெக், கோன்வல், கலிபக்ஸ் போன்ற கனடாவின் பாரிய நகரங்களிலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ளன.காலை 9 மணி முதல் மாலை 9 மணிவரை தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் மக்கள் வாக்களிக்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு மேலும் அறிவித்துள்ளது.

அத்துடன் வாக்களிக்க வரும்போது மக்கள் கொண்டு வரவேண்டிய அடையாள ஆவணங்கள் குறித்தும் அவ்வமைப்பு மேலும் அறிவித்துள்ளது. அது குறித்த விபரங்களையும், வாக்களிப்பு நிலையங்களின் விபரங்களையும் அவ்வமைப்பின் இணையத்தளம் www.tamilelections.ca இல் நீங்கள் பாhக்;கலாம்.

வீழ்வோமாயினும் போராடுவோம்...போராடுவோமாயின் வாழ்வோம்

வாழ்வோமாயின் மீண்டும் போராடுவோம்

போராடுவோமாயின் மீண்டும் வாழ்வோம்

தலைவன் கொண்ட இலட்சியப் பாதை மாறலாம்

இலட்சியம் மாறாது

Edited by நிழலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீழ்வோமாயினும் போராடுவோம்...போராடுவோமாயின் வாழ்வோம்

வாழ்வோமாயின் மீண்டும் போராடுவோம்

போராடுவோமாயின் மீண்டும் வாழ்வோம்

தலைவன் கொண்ட இலட்சியப் பாதை மாறலாம்

இலட்சியம் மாறாது

அருமை நிழலி !!!வாழ்த்துக்கள் !!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, உங்கள் அளவிற்கு இல்லையென்றாலும் என்னால் முடிந்தது.......

நான் வாழும்வரை மனதில் இருக்கும் பாடல்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.