Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிக்கும் – அறிவிப்பு இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான பதில் பல தடவை களத்தில் ......

http://lankawhistleblower.blogspot.com/2007/07/how-mahinda-rajapaksa-channeled-money.html

http://www.lankaenews.com/English/news.php?id=4387

இந்த இரண்டு இணையதளங்களும்தான் உங்கள் கண்ணுக்கு பட்டதா?

புலிபுராணம் பாட என்றே பல இணையங்கள் தொடங்கி வெற்றி நடைபோடுகின்றன................

அதுகளையும் இணைக்கலாமே?

... பிழைகள் விடப்பட்டவைதான்!!! திரும்பத்திரும்ப ... முழுப்பூசனிக்காயை சோற்றினுள் புதைக்கும் அலுவல்களை விடுங்கள்!! ... முதலில் விட்ட பிழைகளை ஒத்துக்கொள்வோம்!! ... அதனை மீளாய்வு செய்து ... சரியான பாதையில் செல்ல முற்படுவோம்!! இல்லை .... சுத்திச்சுத்தி சுப்பற்றை கொல்லைக்குள்ளேயே .....

சூப்பரா தந்தீங்கள் ஆதாரத்தை...

அவையும் வாயிலை வீணி வடியிற அளவுக்கு எழுதி இருக்கினம்...!

80 கோடியை குடுத்து புலியின் வாலை சுறுட்டி வைச்ச மகிந்த நாலு வருசமாய் தேவை 80 000 கோடி செலவளிச்சு போரை நடத்திப்போட்டான் முட்டாள்... அதிலை ஒரு 10% தை புலியிட்டை குடுத்து இருந்தால் மொத்தமாய் வித்துப்போட்டு அமத்தி வைச்சு கொண்டு படுத்து இருக்கும் புலி....

என்ன செய்ய உங்களை மாதிரி அறிவு காது வளியாலை வடியும் ஆக்களின் ஆதரவும் அறிவுரையும் இல்லாமல் போட்டுது மகிந்தவுக்கு...

ஒண்டை மட்டும் தெளிவாய் எனக்கு புரியுது... சிங்களவன் என்ன செய்தாலும், சொன்னாலும் அவனை நம்பும் தமிழ் கூட்டம் அதிகமாகவே இருக்கு...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

... நல்லது ... சரி சரத்துக்கும் வாக்களிக்க வேண்டாம் ...

1) என்ன செய்யலாம்?

2) என்ன செய்யப் போகிறோம்?

3) ஏதாவது செய்யலாமா?

.... ஒன்றுக்கும் பதிலில்லை! திரும்பத்திரும்ப பழைய வாய் வீச்சுக்களை விட்டுக் கொண்டிருக்கத்தான் சரி!! நாங்கள் இங்கு விட்டுக் கொண்டிருக்க ... அங்கு சிலர் உள்ளதுகளை சுருட்டுகிறார்கள் .... கொடுத்த ஒருவரிடம் காசு கேட்டினமாம் .. பதில் வந்ததாம், தலைவர் வரட்டும் தருகிறேன் என்று!!! ... இப்படி பலவாம்!! உதுகள் ஒருபுறம் கிடக்கட்டும் ..,...

... நேற்றொருவர் ஒரு தொலைக்காட்சியில் சொன்னார் ... மகிந்தவையும், சரத்தையும் ஒப்பிடும் போது சரத், பலமில்லாத எதிரியாம்!! ஆகவே அவரை தெரிந்து , எமது அடுத்த கட்டத்தை கொண்டு போவோம் என்று!!

மற்றும் வரலாற்றில் இலங்கையில் சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட்டு வென்றதாக சரித்திரம் இல்லை!!! இம்முறைதான் தனித்து போட்டியிடுகிறார்கள், முக்கிய சிங்கள கட்சிகளின் துணை இல்லாமல் .... முடிபை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!!!!????

நிங்களோ அண்ணை பிறகும். பிழை பிடிப்பதை விட்டு நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒருக்கால் மனதை திறந்து பதிலளியுங்கோ பார்ப்போம்? உங்களுடைய பம்மாத்து தெரியும்? புலி அது செய்து போட்டான் இது செய்து போட்டான் என்று முட்டையில் மயிரை புடுங்க முடிகிறதே தவிர ஒரு உருப்படியான கருத்தை உங்களால் எப்போவாவது வழங்க முடிந்திருக்கிறதா?

இப்போ கூட்டமைப்பினர் சரத்துக்கு ஏன் வாக்கKஇக்க கூடாது? ஒரு முடிவாக விளக்கம் சொல்லுங்கோ பார்ப்போம்? செய்ய மாட்டீர்கள். பிறகு சுதப்புவது தான் உங்கள் தொழிலே.

இந்த நன்றி கடன் பற்றி அதாவது டக்ளஸ் பற்றி நேற்று சிங்கள பிரச்சார பீரங்கி என்ன எழுதி உள்ளான் என்பதை வாசித்து அது பற்றி கருத்து எழுத உங்களால் முடியுமா? அதாவது தமிழ் மக்களிடம் கப்பம் வாங்குவது பற்றி தெளிவாக கூறியுள்ளான். ஒரு சிங்களவன் கூறும் உண்மையை கூட ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை. அவ்வளவு மக்கா இல்லை சேம் சைற் கோலா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூப்பரா தந்தீங்கள் ஆதாரத்தை...

அவையும் வாயிலை வீணி வடியிற அளவுக்கு எழுதி இருக்கினம்...!

80 கோடியை குடுத்து புலியின் வாலை சுறுட்டி வைச்ச மகிந்த நாலு வருசமாய் தேவை 8000 கோடி செலவளிச்சு போரை நடத்திப்போட்டான் முட்டாள்... அதிலை ஒரு 10% தை புலியிட்டை குடுத்து இருந்தால் மொத்தமாய் வித்துப்போட்டு அமத்தி வைச்சு கொண்டு படுத்து இருக்கும் புலி....

என்ன செய்ய உங்களை மாதிரி அறிவு காது வளியாலை வடியும் ஆக்களின் ஆதரவும் அறிவுரையும் இல்லாமல் போட்டுது மகிந்தவுக்கு...

ஒண்டை மட்டும் தெளிவாய் எனக்கு புரியுது... சிங்களவன் என்ன செய்தாலும், சொன்னாலும் அவனை நம்பும் தமிழ் கூட்டம் அதிகமாகவே இருக்கு...

ம்.....2005 மாவீரர் உரையில பாலா அண்ணையின்ர பொழிப்புரையில புரியும்படி சொல்லியிருக்கே! மகிந்ததான் சரியான ஆளெண்டு. அவர கொண்டுவரவேண்டிய தேவை 80 கோடியாயிருந்திருக்கும். இங்க களத்தில தேர்தலுக்குப் பிறகு ரணில் சென்னதாயும்.... மங்கள பிரிஞ்சாப்பிறகு மங்கள ஸ்ரீபதி சொன்னதாகவும் எத்தின திரி திரிச்சினம். இப்ப எல்லாமே நரிக்கதையாப்போச்சு..... :wub::(

ம்.....2005 மாவீரர் உரையில பாலா அண்ணையின்ர பொழிப்புரையில புரியும்படி சொல்லியிருக்கே! மகிந்ததான் சரியான ஆளெண்டு. அவர கொண்டுவரவேண்டிய தேவை 80 கோடியாயிருந்திருக்கும். இங்க களத்தில தேர்தலுக்குப் பிறகு ரணில் சென்னதாயும்.... மங்கள பிரிஞ்சாப்பிறகு மங்கள ஸ்ரீபதி சொன்னதாகவும் எத்தின திரி திரிச்சினம். இப்ப எல்லாமே நரிக்கதையாப்போச்சு..... :wub::(

80 கோடி வாங்கின புலியை அழிக்க ஏனப்பு 80 000 ( எண்பதாயிரம்) கோடி செலவளிக்க வேணும்... டக்கிளசுக்கு குடுத்ததை விட கொஞ்சம் அதிகமாக குடுத்தால் போதாதோ...?? அவ்வளவு மோட்டு சிங்களவனா மகிந்த...??:D :D :D

"கூ தொமளோ" எண்டு சிங்களவன் சொல்லுறது உங்களை தானாம் எண்டும் சிறீபதி சொன்னவர்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

80 கோடி வாங்கின புலியை அழிக்க ஏனப்பு 80 000 ( எண்பதாயிரம்) கோடி செலவளிக்க வேணும்... டக்கிளசுக்கு குடுத்ததை விட கொஞ்சம் அதிகமாக குடுத்தால் போதாதோ...?? அவ்வளவு மோட்டு சிங்களவனா மகிந்த...??:(:D :D

"கூ தொமளோ" எண்டு சிங்களவன் சொல்லுறது உங்களை தானாம் எண்டும் சிறீபதி சொன்னவர்...

அண்ணே தலைவர் ஒரு நாட்டுக்காக 80 கோடி வேண்டினார், மகிந்த 80,000 கோடி செலவளிச்சு ஒரு நாடாக்கினார். ரெண்டும் ஒண்டுதான்....ஏன் இவளவு செலவளிச்சார் எண்டத நீங்கள்தான் சொல்லவேணும். :wub:

அண்ணே தலைவர் ஒரு நாட்டுக்காக 80 கோடி வேண்டினார், மகிந்த 80,000 கோடி செலவளிச்சு ஒரு நாடாக்கினார். ரெண்டும் ஒண்டுதான்....ஏன் இவளவு செலவளிச்சார் எண்டத நீங்கள்தான் சொல்லவேணும். :wub:

உங்களைப்போலவே உங்கள் கணக்கும் இருக்கு...

அண்ணே தலைவர் ஒரு நாட்டுக்காக 80 கோடி வேண்டினார், மகிந்த 80,000 கோடி செலவளிச்சு ஒரு நாடாக்கினார். ரெண்டும் ஒண்டுதான்....ஏன் இவளவு செலவளிச்சார் எண்டத நீங்கள்தான் சொல்லவேணும். :wub:

அதாவது 80 கோடி குடுத்து ஆட்ச்சிக்கு வந்த மகிந்தவுக்கு ஒரு 800 கோடி குடுத்து பிரச்சினையை சுமூகமா தீர்க்க தெரிய இல்லையாக்கும்... இப்ப பாருங்கோ தேவை இல்லாமல் ஐநா முதல் அமெரிக்கா வரைக்கும் ஆப்பு வைக்க காத்து இருக்கு... அடுத்த மிலோசவிச் ஐயா தான் எண்டு எல்லோ கதைக்கினம்...

உங்களுக்கு எல்லாம் மூளை எங்கை இருக்கு கக்கா போற இடத்துக்கு கிட்டவோ...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதாவது 80 கோடி குடுத்து ஆட்ச்சிக்கு வந்த மகிந்தவுக்கு ஒரு 800 கோடி குடுத்து பிரச்சினையை சுமூகமா தீர்க்க தெரிய இல்லையாக்கும்... இப்ப பாருங்கோ தேவை இல்லாமல் ஐநா முதல் அமெரிக்கா வரைக்கும் ஆப்பு வைக்க காத்து இருக்கு... அடுத்த மிலோசவிச் ஐயா தான் எண்டு எல்லோ கதைக்கினம்...

உங்களுக்கு எல்லாம் மூளை எங்கை இருக்கு கக்கா போற இடத்துக்கு கிட்டவோ...??

ஓஓஓஓ அப்ப தனிநாடெல்லாம் போய் இப்ப குற்றவியல் நீதிமன்றில மிலசவிச்மாதிரி ஒண்டுக்க வந்திட்டம்....... :wub::(

ஓஓஓஓ அப்ப தனிநாடெல்லாம் போய் இப்ப குற்றவியல் நீதிமன்றில மிலசவிச்மாதிரி ஒண்டுக்க வந்திட்டம்....... :wub::(

மிலோசவி எண்டவர் போர் குற்றவாளி ஆகியதால்( ஆகிய பின்னால் தான்) பொஸ்னியா எண்ட நாடு மேற்கு நாடுகளாலை அங்கீகரிக்க பட்டது...

உலக அறிவை பெருக்குங்கப்பா... உங்களுக்கு வியாக்கியானம் சொல்லியே எனக்கு டங்குவார் அந்து போச்சு... :D

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிலோசவி எண்டவர் போர் குற்றவாளி ஆகியதால்( ஆகிய பின்னால் தான்) பொஸ்னியா எண்ட நாடு மேற்கு நாடுகளாலை அங்கீகரிக்க பட்டது...

உலக அறிவை பெருக்குங்கப்பா... உங்களுக்கு வியாக்கியானம் சொல்லியே எனக்கு டங்குவார் அந்து போச்சு... :wub:

அடே... எல்லாமே மாஸ்ர பிளானிங்தான்.... அப்ப இனித்தான் ஐநா நேட்டோ துருப்புக்கள் எல்லாம் ஸ்ரீலாங்காவுக்கு வரும்.....விலக்குப்பிடிக்க. :(:D

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே தலைவர் ஒரு நாட்டுக்காக 80 கோடி வேண்டினார், மகிந்த 80,000 கோடி செலவளிச்சு ஒரு நாடாக்கினார். ரெண்டும் ஒண்டுதான்....ஏன் இவளவு செலவளிச்சார் எண்டத நீங்கள்தான் சொல்லவேணும். :D

26 க்கு பிறகு இருவரில் ஒருவர் மற்றவருக்கு வைப்பார் என்பது நிச்சயம். உமக்கெல்லாம் எங்கு வைக்க வேண்டும் என்று சொன்னால் சிங்களவர்கள் ஆவியாக திரிகிறான். நீர் தான் சுவரை காட்ட வேண்டும். சுவரை தேடி பிடியும் மதி. மிகுதி தானாக நடக்கும். இம்சா உல்லா. :wub::(:D

அடே... எல்லாமே மாஸ்ர பிளானிங்தான்.... அப்ப இனித்தான் ஐநா நேட்டோ துருப்புக்கள் எல்லாம் ஸ்ரீலாங்காவுக்கு வரும்.....விலக்குப்பிடிக்க. :wub::(

நேட்டோ துருப்பு வாருகுதோ இல்லையோ அடுத்த ஆட்ச்சிக்கு யார் வந்தாலும் ஒட்டு குழுவுக்கு தானாம் முதல் ஆப்பு.. அப்ப எங்கை கொன்டு போய் தலையைவைக்க போறியள் எண்டு பாப்பம்...

அது சரி சேர்பியாவுக்கை நேட்டோ துருப்புக்கள் எப்பபோனது...?? நான் நினைச்சன் கடலிலை கப்பலிலை நிண்டுதான் வேடிக்கை பாத்தைவை எண்டு எல்லோ...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தயாவும்

நல்லையனும் ஏன் இப்படி மோதியபடி...

நடந்தவைகளை மறந்து நடக்கப்போவதற்கு ஒத்துழைக்க நல்லையன் தயாரான பின்...

ஏன் தயா நீங்கள் அவரை அணைத்துச்செல்லக்கூடாது

இவ்வளவு புத்திசொல்லும் தாங்கள்...

தூரப்பார்வைமூலம் இதை சாதித்தாலென்ன....?

சிறியவனின் சிறிய முயற்சிதான்

ஆனால் இது தேவை எமக்கு....

எமது இனத்துக்கு....

தயாவும்

நல்லையனும் ஏன் இப்படி மோதியபடி...

நடந்தவைகளை மறந்து நடக்கப்போவதற்கு ஒத்துழைக்க நல்லையன் தயாரான பின்...

ஏன் தயா நீங்கள் அவரை அணைத்துச்செல்லக்கூடாது

இவ்வளவு புத்திசொல்லும் தாங்கள்...

தூரப்பார்வைமூலம் இதை சாதித்தாலென்ன....?

சிறியவனின் சிறிய முயற்சிதான்

ஆனால் இது தேவை எமக்கு....

எமது இனத்துக்கு....

அது எல்லாம் புலிக்காச்சல் இல்லாத ஆக்களுக்கு செய்வது... கூட இருக்கிறது மாதிரி இருந்து கழுத்து அறுத்தவன்களுக்கு அல்ல... நாளைக்கு மீண்டும் குணம் கொள்ள மாட்டாங்கள் என்பதுக்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.... இதை விட சிங்களவனை நம்பலாம்..

மற்றது உங்களை எல்லாம் கட்டி பிடிச்சு கொண்டு நான் கூட்டி போக நீங்கள் குழந்தைகளும் இல்லை. நான் உங்கட தலைவரும் இல்லை...

Edited by தயா

“எதிரியின் எதிரி நண்பன்”: இப்போது அதுவே ஆயுதம்

நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தயாராகிவிட்டது. இத்தேர்தல் மூலம் தமிழர் தரப்புக்கள் சாதிக்கபோவது என்ன? சரத் பொன்சேகாவிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பால் என்ன உத்தரவாதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன? அவை தொடர்பான உறுதிப்பாடுகள் எவை என்பது பற்றி இப்பத்தி ஆராய்கிறது.

தற்போது தமிழ் மக்களுடைய உடனடி பிரச்சனைகளை முன்வைத்து இரண்டு பிரதான வேட்பாளர்களுடனும் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மகிந்தவுடன் எக்காலத்திலும் உடன்படக்கூடிய சாத்தியங்கள் இல்லையென்பதை தெரிந்துகொண்ட நிலையிலும் ஆளும்கட்சியினுடைய எதிர்கால திட்டங்கள் என்பது பற்றி அவர்களுடனும் ஆராய்ந்து இறுதியாகவே சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கமுடியுமென தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது.

இவ்வாறான நிலைப்பாடு தொடர்பாக எம்மவர் சிலரிடம் மாற்றுக்கருத்துக்கள் உண்டு. சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதியை ஆதரிப்பதில் சில கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன. இந்திய இராணுவத்தினர் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது இந்திய இராணுவத்தினரை அகற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை எடுத்த முடிவை இங்கு ஞாபகப்படுத்தி கொள்வது நல்லது. அப்போதைய சிறிலங்கா ஆட்சி பீடத்தோடு இணைந்து முதல் எதிரியாகவிருந்த இந்திய படைகளை அகற்றுவதில் புலிகள் தமது இராசதந்திரத்தை சரியாக பயன்படுத்தியிருந்தனர்.

முன்னர் நாம் குறிப்பிட்டது போல ஒரு நாகபாம்பை அகற்றி இன்னொரு பற்கள் புடுங்கப்பட்ட நாகபாம்பை ஆட்சியில் இருத்தபோகின்றோம். ஏனென்றால் சரத் பொன்சேகாவுக்கு அவருக்கென்று ஒரு கட்சி இல்லை. பலவீனமான ஒரு ஆட்சிபீடத்தையே அவரால் அமைக்கமுடியும். சிறிலங்காவின் ஆட்சிபீடம் பலவீனமாக இருக்கும்போதே தமிழர் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இப்போது தமிழர் தரப்பின் ஆதரவை தேடி ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் படையெடுப்பதும் இதன் ஒரு ஆரம்பமே.

இப்போது சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் உடனடி பிரச்சனைகளுக்கு என்ன உத்தரவாதங்கள் பெறப்பட்டுள்ளன? எதிர்வரவுள்ள தேர்தல் தமிழர் தரப்பால் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றதா? என்ற வினாக்கள் எழுவது வழமையானதே.

சரத் பொன்சேகாவுடனும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு காணப்பட்ட முக்கிய விடயங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கல், உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல் மற்றும் அவசரகால சட்டத்தை நீக்குதல் என்பன முக்கியமானதாகும்.

தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதை தமிழர் தரப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது. தற்போதைய மகிந்த அரசாங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினரை கூட இன்னமும் விடுவிக்காமல் இருப்பதை பார்க்கிறோம். இவ்வாறான அரசை ஆட்சியில் தொடர்ந்து அமரவிட்டு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையோ அல்லது அதன் ஆதரவாளர்களையோ சிறையிலிருந்து வெளியில் கொண்டுவருவது என்பது சாத்தியமில்லை. அத்தோடு அவர்களின் உயிருக்கு கூட உத்தரவாதத்தை கூட பெற்றுக்கொள்ளமுடியாத நிலையே இருந்துவருகின்றது.

அத்தோடு தடுத்துவைக்கப்பட்டுள்ள முழுமையான விடுதலைப்புலிகளின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. யார் யார் சிறையில் இருக்கின்றார்கள் என்பது அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக சொல்லப்படவில்லை. இதனால் அவர்களின் உயிருக்கு எந்தவேளையிலும் ஆபத்து இருப்பதை புரிந்துகொள்ளமுடியும். அரசாங்கத்திற்கு சார்பாக கருத்து சொல்லுவார்கள் என அரசாங்கம் நம்பிக்கை கொள்ளும் முன்னாள் போராளிகளை மட்டுமே அரசு வெளியில் விட விரும்புகிறது. அப்படியானால் மற்றையவர்களின் நிலை என்ன?

எனவே தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகளின் விடயத்தில் முன்னேற்றகரமாக தமிழர் தரப்பால் செய்யமுடியுமாகவிருந்தால் அதனை நிச்சயம் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்துமட்டங்களிலும் இருந்து வந்தது. அதனை சரியாக தமிழர் தரப்பின் பிரதிநிதிகள் பயன்படுத்தியிருப்பது ஆறுதலான விடயமே.

அடுத்ததாக உயர் பாதுகாப்பு வலயங்கள் பற்றிய விடயங்கள் மிகவும் முக்கியமானதாகும். சிறிலங்கா அரசாங்கத்தால் யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயங்கள் பேணப்படுவதற்கான திட்டங்களே தற்போதைய அரசிடம் உண்டு. யாழ்ப்பாணத்தில் மூன்றில் ஒரு பகுதி பிரதேசங்கள் உயர் பாதுகாப்புவலயங்களாகவே இருந்துவருகின்றன. இங்கு 30, 338 குடும்பங்கள் இருபது வருடங்களாக தமது வாழ்விடங்களுக்கு திரும்பமுடியாமல் இருந்துவருகின்றார்கள்.

அதேபோல் திருகோணமலையிலும் சம்பூரை உயர் பாதுகாப்புவலயமாக்கி 4249 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இங்கிருக்கின்ற 19 பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடப்பட்டேயிருக்கிறது. இதுதவிர மணலாறு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் கொக்கிளாய் போன்ற பிரதேசங்களிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் இருபத்தைந்து வருடங்களாக தமது சொந்த இடங்களுக்கு திரும்பமுடியாமல் இருக்கிறார்கள்.

எனவேதான் உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான உறுதியான பதிலை தமிழர் தரப்பு எதிர் பார்த்திருக்கவேண்டும். சாதகமான பதிலளித்த சரத் பொன்சேகா உயர் பாதுகாப்பு வலயங்களை விரைவினிலே நீ்க்குவதற்கான ஒழுங்குகளை செய்வதாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

அடுத்ததாக தற்போது இலங்கைத்தீவை ஆட்டிப்படைத்துவரும் அவசரகாலசட்டம் பற்றிய விடயமாகும். தற்போது கைது செய்யப்படும் தமிழர்களை நீண்ட காலமாகவே தடுத்துவைப்பதற்கு அரசுக்கு வசதிசெய்யும் சட்டமூலமே இதுவாகும். தற்போதைய நிலையில் இதனை நீக்குவதற்கு வழிசெய்வதன் மூலமே தமிழர்களது குரலை வெளியுலகிற்கு கொண்டுவரமுடியும். அவசரகால சட்டம் நீக்கப்படுவதை உறுதிப்படுத்தி அதற்கான எழுத்து மூல ஆவணங்களும் சரத் பொன்சேகாவிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பால் பெறப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் தமிழர்களது அன்றாட அவசர தேவைகளை ஒட்டியதே தவிர தமிழர்களது அடிப்படை அரசியல் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான எந்தவித முன்னேற்றங்களும் இப்பேச்சுவார்த்தைகளின்போது ஏற்படவில்லை என்பதையும் அனைவரும் கவனித்துக்கொள்ளவேண்டும்.

ஒரு சாதாரண பொதுமகனுக்கு இருக்கவேண்டிய அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளே நடைபெற்றன என்பதையும் தமிழர்களது தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியிருக்கும் என்பதையும் எவரும் மறந்துவிடக்கூடாது.

தமிழர்கள் தமது உரிமைகளை பற்றி விவாதிப்பதற்கான களநிலைமையை ஏற்படுத்துவதே இன்றைய தேவையாகும். அதனை ஏற்படுத்தி தாயகத்திலுள்ள மக்களே தமது உரிமைகள் என்னவென்பதையும் அதற்கான களத்தையும் திறக்கவேண்டும். அவர்களுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் தன்னாலான பங்களிப்பை வழங்கமுடியும்.

எனவே தாயகத்தில் எமது மக்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை சொல்லக்கூடிய சூழ்நிலையை முதலில் ஏற்படுத்துவோம். அவ்வாறான சுதந்திரமான சூழல் வரும்வரை அதற்கான வழிகளை திறப்பதே எம்முன்னுள்ள ஒரேதெரிவாகும்.

கொக்கூரான்

http://www.tamilspy.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருக்கிறது மாதிரி இருந்து கழுத்து அறுத்தவன்களுக்கு அல்ல... நாளைக்கு மீண்டும் குணம் கொள்ள மாட்டாங்கள் என்பதுக்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.... இதை விட சிங்களவனை நம்பலாம்..

சரத்து....அதுக்குப் பிறகு என்ன, வழக்கம்போல ஒண்டாயிருந்து ஒண்டாச்சாப்பிட்டு ஒண்டாப்படுத்து இரவில போட்டிட்டு ஓடிவந்து உரிமைமீறல் எண்டு கத்த தமிழனும் இல்ல. அண்ணை சொல்லுறமாதிரி சிங்களவனை நம்பலாமெண்டா 35 வருசம் எத்துக்கு? முள்ளிவாய்க்காலோட கனபேர் முதிச்சியடைச்சிட்டாங்கள், என்னையும் சேத்துதான்........ :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.