Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்களத்தின் கருணா! -ஜெகத் கஸ்பர்

Featured Replies

சிங்களத்தின் கருணா!

"சுற்றித் திரிவது கிட்ட வரும்' என்றொரு சொல் வழக்குண்டு. இயற் பியல் விதிக்குள்ளும் இது வருமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. What goes around, comes around -என ஆங்கிலத்தில் அழகாகச் சொல்வார்கள். செய்த வினைகள் நம்மைச் சூழ வரும், தன்வினை தன்னைச் சுடும், பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும் -போன்ற தமிழரின் அறநெறிச் சொல்லாடல்களும் அந்த "சுற்றித் திரிவது கிட்ட வரும்' என்ற விதியையொட்டியதே.

ராஜபச்சேவா, பொன்சேகாவா என்பது தமிழர்களுக்கு இன்று முக்கியமே அல்ல. ஆலகால விஷம் கக்கும் சிங்களப் பேரினவாதம் என்ற பெரும் பாம்பின் இரு தலைகள் இவர்கள். பாம்பு ஒன்று, தலைகள் இரண்டு என்பது மட்டும்தான் இன்றைய வேறுபாடு. சேனநாயகேக்கள், பண்டார நாயகேக்கள், என்.எம்.பெரேராக்கள் என பலரது மோசடி துரோக அரசியலை கடந்த அறுபது ஆண்டுகளில் ஈழத் தமிழர்கள் பார்த்து விட்டார்கள். ராஜபக்சேக்களையும், பொன்சேகாக்களையும் முள்ளிவாய்க் காலுக்குப் பின்னரும் நம்புமளவுக்கு தமிழர்களொன்றும் பரிதாபமான முட்டாள்களல்ல. உண்மையில் தமிழர் கள் இன்று அங்கு படுகுழியில் விழுந்து கிடக்கிறார்கள். உலகம் முள்ளிவாய்க்காலின் போது கண்களை கவனமாக மூடிக் கொண்டதுபோல் இப்போதும் செய்யு மென்றால் படுகுழியில் தமிழர்களை ஒரேயடியாகப் புதைத்துவிட்டு தமிழர் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு நிறைவேற்றி விட்டோம் என புது டில்லிக்கு கடித மும் அனுப்பி வைப் பார்கள்.

அரசியல் ரீதி யாக தமிழருக்கு எவ் வித அர்த்தமும் கொண்டிராத இலங்கை யின் அதிபர் தேர்தல் தமிழர்கள் நமக்கு நாமே சில செய்திகளை சொல்லிக் கொள்வதற்கான வாய்ப்பாக அமையும் சாத்தியப்பாடு உள்ளது. அதனை பின்னர் விவாதிப்போம். சரியோ, தவறோ எதைச் செய்தாலும் இக் காலகட்டத்தில் தமிழர்கள் அத்தனைபேரும் ஒரு கருத்தாய் இணைந்து செய்ய வேண்டுமென்பதே இன்று முக்கியமானது. "சுற்றித் திரிவது கிட்ட வரும்' எனத் தொடங்கியதை புரிந்துகொள்ள முயல்வோம். முள்ளிவாய்க்கால் முழுவதுமுள்ள அத்தனை இன அழித்தல் ஆதாரங்களையும் சிங்களப் பேரினவாதம் துடைத்து அகற்றியிருக்கலாம். ஆயினும் ஓடிக் களைத்து விழுந்தபின் ஈவிரக்கமின்றி வேட்டையாடப்பட்ட எம் உறவுகளின் உயிர்க்குரல் அலறல் ராஜபக்சேக்களையும் பொன்சேகாக்களையும் விடுவதாயில்லை- விடாது. "யுத்தக் குற்றவாளி நீதான் -இல்லை நீதான்' என அவர்கள் இருதரப்பினரும் தங்களுக்குள் ஒருபுறம் அடித்துக் கொண்டி ருக்க, புலம்பெயர் தமிழர்களும் உலக சமுதாயமும் மெதுவாய் மெதுவாய் இருவரையுமே யுத்தக் குற்றவாளிகளாய் இறுக்கும் முயற்சியில் முன்னேறிக் கொண்டி ருக்கின்றன.

ஆடை அகற்றி நிர்வாணமாக்கி, கைகளை பின்புறமாய் இழுத்துக் கட்டி "தமிழ் நாய்கள், பறத் தமிழர்கள்' எனச் சொல்லிக் கொண்டே நிராயுதபாணி களான தமிழ் இளைஞர்களை சிங்கள ராணுவக் காடையர்கள் சுட்டுக் கொல்லும் கொடூரக் காட்சிகளை பிரித்தானியாவின் "சேனல்-4' தொலைக்காட்சி ஒளிபரப்பியதையும், அந்த ஒளிப்பதிவு பொய்யானது, தந்திரமாகத் தயாரிக்கப்பட்டது என இலங்கை அரசு மறுத்ததையும் வாசகர்கள் அறிவீர்கள். ஆனால் அந்த ஒளிப்பதிவும் அதில் பதிவாகியுள்ள கொடூரக் கொடுமையும் உண்மையே என ஐ.நா. அவையின் சட்டவிரோதப் படுகொலைகள் தொடர்பான சிறப்பு அதிகாரி பிலிப் அல்ஸ்டன் அறிவித்துள்ளார். நம்பகமான அனைத்துலக நீதி விசாரணைக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரான்சு நாடு அனைத்துலக போர்க் குற்ற விசாரணைகளுக்கென தனி நீதிமன்றம் அமைத்து அறிவித்துள்ளது. ""மனித உரிமைகளின் தாயகமாம் பிரான்சு நாடு இன அழித்தல், போர்க்குற்றங்கள் புரிந்தவர்களின் புகலிடமாகவோ, அவர்கள் வந்துபோகும் இடமாகவோ இருக்காது' என அந்நாட்டின் நீதி அமைச்சர் பெர்னார்ட் குச்னர் முழங்கியுள்ளார்.

டப்ளின் நகரில் இரு வாரங்களுக்கு முன் நடந்த அனைத்துலக மனித உரிமை ஆர்வலர்களின் "மாமன்றம் இலங்கையை தமிழருக்கெதிராய் போர்க்குற்றங்கள் புரிந்த நாடு' என ஒருமனதாய் தீர்மானம் நிறைவேற்றிப் பிரகடனம் செய்துள்ளது.

இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகி வரும் எல்லா பொருட்களுக்கும் ஐரோப்பிய நாடுகள் இதுவரை வழங்கி வந்த சிறப்பு வரிச்சலுகைகளை போர்க்குற்றங்களுக்காய் ரத்து செய்யும் தீர்மானத் தினை பிரித்தானியா நாடு கடந்த வாரம் இரண்டாம் முறையாக வலியுறுத்தி ஐரோப்பிய கூட்டமைப்பிற்கு முன்மொழிந்துள்ளது.

அமெரிக்காவில் அஞ்சலி மணியன் தலைமையில் தமிழ் இளையர்கள் புதுமையாகத் தொடங்கிய "உள்ளாடை களுக்கு விலை ரத்தம் அல்ல' என்ற எளிய பரப்புரை முயற்சி இன்று அமெரிக்க வர்த்தகக் களத்தில் தீப்பற்றி எரிந்து உலக கவனம் பெற்றி ருக்கிறது. இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் உள் ளாடைகள் அந்நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படும் சூழல் உருவாகியுள்ளது. சர் க்ஷப்ர்ர்க் ச்ர்ழ் ல்ஹய்ற்ண்ங்ள் என்ற அஞ்சலி மணியன் குழு வினரின் பரப்புரை உலகத் தமிழர்கள் புதுயுகத்தின் நுட்பமான போர்க்களங்களுக்குப் பயிற்சி பெற்றுத் தயாராகிவிட்டார்கள் என்ற மகிழ்ச்சி செய்தியாகவும் அமைந்திருக்கிறது. இப்பரப்புரையின் வெற்றி எந்த அளவுக்கென்றால் ஙஹக்ங் ண்ய் நழ்ண்ப்ஹய்ந்ஹ என்று பார்த்தாலே இப்போது அமெரிக்க வாடிக்கையாளர்கள் வாங்கத் தயங்குகிறார்களென்பதை பல பின்னலாடை விற்பனை நிலையங்களின் வணிகப் பொறுப் பாளர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு பதிவு செய்துள்ளார்கள்.

போகப்போக நிலைமை சூடாகும் என்பதை நன்குணர்ந்திருக்கும் ஐ.நா.பொதுச்செயலர் பான்-கி-மூனும் நீடு துயில் நீக்கியவராய், ""இலங்கையில் நடந்ததாய் கூறப்படும் போர்க் குற்றங்களை முறைப்படி விசாரிக்க அதிபருக்கு உதவும் பொருட்டு அனைத்துலக நிபுணர் குழுவொன்றை அமைப்பது பற்றி தீவிரமாகப் பரிசீலித்து வருகிறேன்'' என்றிருக்கிறார். செய்தியைச் சொல்லும் மொழி பவ்யமாய் செதுக்கப் பட்டிருந்தாலும் உண்மையான செய்தி இதுதான் : ""கயிறு நெருங்கி வருகிறது; ராஜபக்சே, பொன்சேகா நண்பர்களே -நமது ராத்திரி விருந்துகளின் சிரிப்பொலிகள் முடிந்துவிட்டன. நீங்கள் தமிழரின் ரத்தம் குடித்தவர் களென்ற செய்தியை வெளிப் படையாக உலகிற்குச் சொல்ல வேண்டிய பகற்பொழுது நெருங்கி வருகிறது...''

ஆம், சுற்றித் திரிவது கிட்ட வரும். வினைகள் விதைத் தவன் அவற்றையே அறுப்பான். தர்மத்தை சூது வெல்லும், தர்மம் மறுபடியும் வெல்லும்.

பிறிதொரு முக்கிய செய்தி, இந்தியாவின் அதி வல்லமை கொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து எம்.கே.நாராயணன் மேற்குவங்க ஆளுநராக வழியனுப்பி வைக்கப்பட்டிருப்பது. ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நிர்மூல மாக்கி சிங்களப் பேரினவாதத்தின் காலடியில் நிரந்தரமாய் அரசியற் பிச்சை வேண்டிநிற்கும் அவலத்திற்கு தமிழ் மக்களை ஆளாக்கிய பாவிகளில் முக்கியமான ஒருவர். இந்த மகத்தான நாட்டின் 106 கோடி மக்களுக்கும் பொதுவான பிரதமர் அலுவல கத்தை மலையாளிகளின் டீக்கடை ஆக்கியவர். எந்தமொழிக்கும் நான் எதிரியல்ல. நல்ல மலையாளி நண்பர்கள் எனக்குப் பலர் உண்டு. இன்னும் சொல்லப்போனால் எங்களின் பூர்வீகம் முந்தைய சேர நாடு, பழைய திருவிதாங்கூர், இப்போதும் முக்கால் மலையாளம்தான். என் அம்மா படித்தது மலையாள வழிக்கல்வி.

ஆனால் இந்தியா போன்ற அழகான பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் சமூகக் கூட்டாட்சித் தன்மை (Social Federalism) பற்றின அக்கறை துளியளவும் இல்லாமல் அரசின் அதிமுக்கிய வெளியுறவு, விண்வெளி ஆராய்ச்சி, ராணுவத் தொழில்நுட்பம், புலனாய்வுத் துறைகளை மலையாளிகளின் "ப்ரைவேட் லிமிடெட்' ஆக்கியவர் களில் முக்கியமானவர். முள்ளிவாய்க்கால் அரங்கேறியபோது எம்.கே.நாராயணன் -பாதுகாப்பு ஆலோசகர், சிவசங்கர் மேனன் -வெளியுறவுச் செயலர், எம்.என்.நாயர் -பிரதமரின் தனிச்செயலர், மாதவன் நாயர் -விண்வெளி ஆராய்ச்சித்துறை தலைவர், எம்.என்.நம்பியார்- ஐ.நா.பொதுச்செயலரின் சிறப்புச் செயலர். அத்தனைபேரும் மலையாளிகள். இவர்கள் அத்தனைபேரையும் உள்ளடக்காமல் தமிழர் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றின உரையாடல்களும், விவாதங்களும் முற்றுப் பெற முடியாது. சுற்றித் திரிவது கிட்டவரும், வரவேண்டும்.

உள்ளபடியே போர்க்குற்றங்கள் உலக முக்கியத்துவம் பெறுவதற்கும் தமிழருக்கான அரசியற் தீர்வு வாய்ப்புகளுக்கும் இன்றைய சூழலில் மிக நெருங்கிய தொடர்புண்டு. அதன் தொடர்ச்சியாகவே ஜனவரி 26 அதிபர் தேர்தலையும் தமிழர்கள் அணுகவும் வேண்டும். மூன்று அடிப்படைகளில் தமிழர்கள் வழிநடத் தப்படலாம் என எண்ணுகிறேன். இன்றளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே இலங்கை ஜனநாயக அரசியற்களத்தில் தமிழருக்கான முகம் என்பதை ஏற்றுக்கொண்டு அவர்கள் எடுக்கின்ற நிலைப்பாட்டிற்கு முழு வலுச் சேர்ப்பது; இரண்டாவது வாக்களிப்பதால் எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை என்ற மனநிலை தவிர்த்து சிறிதாக இருந் தாலும் எமது வாக்கிற்கும் ஓர் வலுவும் மதிப் பும் உண்டு என்பதை ஒன்றுபட்ட தமிழ் இன மாக, இசுலாமிய மக்களுடனும் உரையாடி இணைந்து பதிவு செய்வது; மூன்று ராஜ பக்சே, பொன்சேகா இருவரும் பெருநாகப் பாம்பின் இருதலைகள் என்றாலும், தமிழர் இன அழித்தல் தொடர்பான அத்தனை அரசியற் கொள்கைகளையும் எடுத்தவர் ராஜபக்சே என்ற வகையில் அவரைத் தோற்கடிக்க முடியுமெனில் தோற்கடிப்பது.

சிங்களம் கருணாவை பயன்படுத்தி தமிழர் கண்களில் குத்தியது. பொன்சேகா சிங்களத்தின் கருணாவாக இருந்துவிட்டுப் போகட்டுமே, நமக்கென்ன வந்தது?!

http://www.tamilcanadian.com/tamil/index.php?cat=40&id=766

Edited by vimalk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிகளார், நீங்கள் சிங்களத்தின் கருணாவை பற்றிப்பேசுறியள். ஆனால் உங்களை தமிழ் நாட்டின் கருணா எண்டு பரவலா கதைக்கினம். அதைப்பற்றியும் கொஞ்சம் விளங்கப்படுத்துங்கோ. உங்கட மனதை புண்படுத்துற மாதிரி ஏதாவது சொல்லிப்போட்டன் எண்டால், கர்த்தர் என்னை மன்னிப்பாராக!!!

அன்பே இறைவன்.....

Edited by samiyar

அடிகளார், நீங்கள் சிங்களத்தின் கருணாவை பற்றிப்பேசுறியள். ஆனால் உங்களை தமிழ் நாட்டின் கருணா எண்டு பரவலா கதைக்கினம். அதைப்பற்றியும் கொஞ்சம் விளங்கப்படுத்துங்கோ. உங்கட மனதை புண்படுத்துற மாதிரி ஏதாவது சொல்லிப்போட்டன் எண்டால், கர்த்தர் என்னை மன்னிப்பாராக!!!

அன்பே இறைவன்.....

எந்த கருனா கனிமொழியின் தந்தை செம்மொழி கருணாவா? சென்னைசங்கமம் நிச்சயமாக அடிகளார் மனது புண்படும்படிதான் சொல்லியிருக்கிறீர்கள்.கர்த்தர் மன்னித்தாலும் அடிகளார் மண்ணிக்கமாட்டார்.

சிங்களத்தின் கருணா!

"சுற்றித் திரிவது கிட்ட வரும்' என்றொரு சொல் வழக்குண்டு. இயற் பியல் விதிக்குள்ளும் இது வருமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. What goes around, comes around -என ஆங்கிலத்தில் அழகாகச் சொல்வார்கள். செய்த வினைகள் நம்மைச் சூழ வரும், தன்வினை தன்னைச் சுடும், பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும் -போன்ற தமிழரின் அறநெறிச் சொல்லாடல்களும் அந்த "சுற்றித் திரிவது கிட்ட வரும்' என்ற விதியையொட்டியதே.

ஆம், சுற்றித் திரிவது கிட்ட வரும். வினைகள் விதைத் தவன் அவற்றையே அறுப்பான். தர்மத்தை சூது வெல்லும், தர்மம் மறுபடியும் வெல்லும்.

இதை காங்கிரஸ் உட்பட்ட வட இந்திய பயங்கரவாதிகளுக்கும், கைப்பொம்மையாக இருந்த மலையாளிகளுக்கும் கருணாநிதி போன்றவர்களுக்கும் சொல்லி வையுங்கள்.

இந்த பயங்கரவாதிகள் அழியவேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும் என்பது ஈழத்தமிழர் அனைவருதும் தினசரி பிரார்த்தனையாகும்.

இந்த மகத்தான நாட்டின் 106 கோடி மக்களுக்கும் ............

ஈழப் படுகொலைகளுக்கு உடனிருந்து பேருதவி புரிந்த இந்திய பயங்கரவாதிகள் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தியாவை "மகத்தான நாடு" என்பது உங்கள் நகைசுவையாக இருக்குமோ? :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லி வையுங்கள்.

இந்த பயங்கரவாதிகள் அழியவேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும் என்பது ஈழத்தமிழர் அனைவருதும் தினசரி பிரார்த்தனையாகும்.

? :lol::)

ஆமென்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் கருணா!

"சுற்றித் திரிவது கிட்ட வரும்'

பிறிதொரு முக்கிய செய்தி, இந்தியாவின் அதி வல்லமை கொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து எம்.கே.நாராயணன் மேற்குவங்க ஆளுநராக வழியனுப்பி வைக்கப்பட்டிருப்பது. ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நிர்மூல மாக்கி சிங்களப் பேரினவாதத்தின் காலடியில் நிரந்தரமாய் அரசியற் பிச்சை வேண்டிநிற்கும் அவலத்திற்கு தமிழ் மக்களை ஆளாக்கிய பாவிகளில் முக்கியமான ஒருவர். இந்த மகத்தான நாட்டின் 106 கோடி மக்களுக்கும் பொதுவான பிரதமர் அலுவல கத்தை மலையாளிகளின் டீக்கடை ஆக்கியவர். எந்தமொழிக்கும் நான் எதிரியல்ல. நல்ல மலையாளி நண்பர்கள் எனக்குப் பலர் உண்டு. இன்னும் சொல்லப்போனால் எங்களின் பூர்வீகம் முந்தைய சேர நாடு, பழைய திருவிதாங்கூர், இப்போதும் முக்கால் மலையாளம்தான். என் அம்மா படித்தது மலையாள வழிக்கல்வி.

http://www.tamilcanadian.com/tamil/index.php?cat=40&id=766

இத்தனை கொடுமைகளையும் புரிந்த இந்த கொடுமைகாரனை. தனது உறவுகளை தனது கண்முன்னமே வைத்தழி;த்த மாபாவியை காத்திருந்து தற்போதைய ஒரு தமிழ் சிறுவன் அடிப்பானாக இருந்தாலும். ஏதோ பிரந்திய அரசியலில் பீற்றிவிட்டார்கள் என்று பினாத்த இந்த யாழ்களத்திலேயே பலருண்டு என்பது அவமானம். கொடியவர்களை கொன்றொழித்தே தீரவேண்டும் இதில் மாற்று சிந்தனை;ககே இடம் இருக்க கூடாது. புலிகளின் பின்னையநாளின் தளர்வு எண்ணங்கள்தான் பல போலிகளை உருவாக்கி வைத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள்- தமிழ் தேசிய போலிகளின் கூடாரம்

OldFatherChristmas.jpg

மக்கள் தன்னர்வ எழுச்சி ஏற்படும் போதொல்லாம் அவர்களை கட்டுபடுத்துவதற்கு அவர்கள் வழியிலே சென்று லகானை பிடித்து தன்னார்வ போராட்டங்களை மழுங்கடிக்க செய்வார்கள்.. உலகின் பெரும் பால ஏகாதிபத்திங்கள் பொதுவாக கடைபிடிக்கும் வழி முறை.. அந்த வகையில் பொந்திய அரசு ஈழ பிரச்சனையை அடக்க தேர்வு செய்தது.. அரசு சாரா தொண்டு நிறுவனங்களை.. மக்களிடம் இவ்வாறன வர்கள் களம் இறங்கும் போது ..மக்கள் மனநிலை இவர்களோ பொது தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கு மற்ற அரசியல் வாதிகளை போல இந்த விடயத்தில் என்ன லாபம் வந்துவிடபோகிறது..பொது நலத்தோடு தான் செய்கிறார்கள் என்ற எண்ணமே மேலோங்கும்.. சூடான் இனபடுகொலைகள், ஈராக்,ஆப்கானிஸ்தான்,போஸ்னியோ போன்ற இடங்களில் எல்லாம் இவ்வாறன பொது தொண்டு நிறுவனங்களின் சேவை(?) ஏகாதிபத்தியங்களுக்கு தேவை பட்டே வந்துள்ளன..

உண்மையில் யார் இந்த பகத் பாஸ்பர்?

நாம் என்ற அரசு சார பொது தொண்டு நிறுவனத்தின் தலைவர்(?) அல்லது ரோ உளவாளி..

இவ்வாறன பாதிரி இயக்கம் ஆரம்பிக்கலாமா ? அதற்கு அவர்கள் திருச்சபை அனுமதி அளிக்குமா என்பதெல்லாம் வேறு கதை..

உண்மையில் தமிழர் நாட்டில் எப்போது தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்ற ஆரம்பிக்கிறார்.. இதற்கு முன்னால் சில சிலுப்பு பொய்களை அவிழ்த்துவிட்டு கொண்டிருந்தார்..சூசை கடைசிநாள் அன்று பேசினாராம் ..பொந்தியா வெள்ளை கொடியோடு வரசொன்னதாம்.. வந்தார்களாம் சுட்டு கொன்றுவிட்டார்களாம்.. நீலி கண்ணீர் வடித்து ஊரை ஏமாற்றுகிறார்..

. இதில் நமக்கு உறுத்துகிற ஒரு கேள்வி இருக்கிறது. சரண்டையச் சொல்லி புலிகளுக்கு ஆலோசனை அல்லது நிர்ப்பந்தம் கொடுத்த மூன்றாம் தரப்பு யார்?

பல நாட்களாக தூக்கமின்றி, உணவின்றி, போராடும் வலுவின்றி, காயங்களுக்கு மருந்தின்றி உளவியல் ரீதியாக பலவீனமாகிப் போயிருந்த போராளிகளை சரணடையச் சொல்லி கடிதம் தயாரித்த பகத் பாஸ்பர் அக்கடிதத்தை யாருக்காக, யாருடைய வழிகாட்டுதலின் பேரில் தயாரித்தார்? தான் ஏதோ புலிகளுக்கு உதவி புரிந்ததாகவும், ஆனால் ராஜபட்சே சகோதர்கள் தன் துரோகம் இழைத்து நடேசனைக் கொன்று விட்டதாகவும் கூறுகிறார். அப்படியே வைத்துக் கொண்டாலும். கடைசி நேரத்தில் பகத் பாஸ்பர் தொடர்பு கொண்ட “அந்த டில்லி பெரியவர்” இந்த துரோகம் குறித்து என்ன சொன்னார்? அந்தப் பெரியவர் யார்? இந்தக் கபட நாடகம் குறித்து அந்தப் பெரியவருக்குத் தெரியாதா? தெரியாது என்று பகத் பாஸ்பர் தேவ சாட்சியம் கூறுகிறாரா? ஒரு கொடூரமான அரசியல் படுகொலையை நடத்திவிட்டு, தான் நடத்திய திரை மறைவு பேரத்தை இன்னமும் இரகசியமாக வைத்துக் கொள்ளும் உரிமை கஸ்பாருக்கு உண்டா?

இது போகட்டும் இவர்களுடைய அமைப்பின் கொள்கை என்ன என்று கேட்டுபாருங்களேன் பொந்திய அரசின் வெளியுறவு கொள்கையை மாற்ற போகிறார்களாம்!.. லால் பகதூர் சாஸ்திரி காலத்தில் இருந்தே இவர்களின் வெளியுறவு கொள்கையின் அம்சம் தெரிய ஆரம்பித்துவிட்டது(மலையக தமிழர்களை நாடற்றோர் ஆக்கியது)..

நான் அன்றிலிருந்து இன்றுவரை சுட்டிகாட்டுவது உள்ளூர் கொள்கையின் விரிவாக்கமே வெளியுறவு கொள்கையாகும்.இளித்தவாயன் பொண்டாட்டி ஊருக்கெல்லாம் வப்பாட்டி என்ற ரீதியில் தமிழன் போன இடமெல்லாம் அவனவன் போட்டு தாக்கிகொண்டிருக்கிறான்.. இதில் மருதமலை படத்தில் வரும் சிரிப்பு போலீஸ் வடிவேலு போல ..நம்மை அடித்து பலர் அரசியலில் முன்னுக்கு வந்துள்ளனர்.. பால்தாக்க்ரே வாட்டாள் நாகராசு.. இவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கபட்டது?

ஆக வெட்டாத அருவாய்க்கு இந்த கும்பல் பிடி போடுகிறார்கள்.. இந்திய வெளியுறவு கொள்கையும் உள்ளுரவு கொள்கையும் இவர்கள் மட்டுமல்ல இவர்கள் பாட்டன் பூட்டன் வந்தாலும் மாற்ற முடியாது.. இது இவர்களுக்கு தெரியும். மக்களை முட்டாளாக்குவதற்கான முயற்சியே இது..

இவர்களுக்கு டெல்லி ஏகாதிபத்தியத்தால் கொடுக்க பட்ட பணி என்ன?

டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திரும்பிய மக்கள் தன்னார்வு போராட்டங்களை நீர்த்து போவசெய்வது

‘யாரையும் பகைத்துக்கொள்ளக் கூடாது. நாம் பகையுணர்வை அதிகப்படுத்துவதன் மூலம் அரை ஆதரவாளனாக இருப்பவனை முழு எதிர்ப்பாளனாக மாற்றிவிடுகிறோம்’

‘தாழாது, தாழாது... தமிழினம் தாழாது’, ‘தாழ்த்தாது தாழ்த்தாது, தமிழினம் யாரையும் தாழ்த்தாது’ என்று ஆளும்வர்க்கம் தயாரித்துக் கொடுத்த கழிவிரக்க வசனங்களைப்போல ‘யார் மனதும் புண்படாமல் போராடுவது எப்படி?’ என்று வகுப்பு எடுத்தார். அதற்காக இந்த பாதிரி தேர்ந்தெடுத்த போராட்ட வடிவம் ‘மௌன ஊர்வலம்’. ஈழப் போரை நடத்திய இந்தியாவுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் குரல் கொடுத்தபோதுதான் கஸ்பர் மௌன ஊர்வலம் நடத்தினார்.மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்காதீர்கள் அது ஆபத்தானது கெஞ்சி கூத்தாடி அவர்களிடம் நாம் மாற்றத்தை உருவாக்கலாம். இதுவே இந்த் போலிகளின் நிலைபாடானது எதற்காக நாம் அவரிடம் கெஞ்ச வேண்டும் ஏன் டெல்லி வாலாக்களுக்கு மூன்று நான்கு என்று இருக்கிறதா?தமிழனிடம் ஒன்றுதான் இருக்கிறதா? அல்லது அவர்களுக்கு தங்கத்தில் செய்யப்ட்டுள்ளதா? நம்மவர்களுக்கு தகரதில் செய்யபட்டுள்ளதா? இந்த நிலைமைக்கு நம்மை ஆளாக்கியோர் யார்? அதைபற்றி மூச்சுவிடக்கூடாது.. கெஞ்ச மட்டுமே செய்யவெண்டும். இது இந்த ஏகாதிபத்திய அடிப்பொடிகளின் நிலைப்பாடு..

எந்த வகை அரசியல் நிலைபாடும் அற்ற, டெல்லி ஏகாதிபத்தியத்தின் முகவரான இந்த பாஸ்பர் தமிழ் தேசிய சக்திகளுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். இந்த அடிப்படையிலேயே இவர் நக்கீரனில் இடம் பிடித்து எழுதிக் கொண்டிருக்கிறார்.சிவரூபனின் கடிதம் என்ற பெயரில் உடான்ஸ் கடித்தை தனக்கு தானே எழுதி போஸ்ட் செய்துவிட்டு தனக்கு வந்ததாகவே உதார் விடுகிறார்..ஈழ தமிழர்களின் ஆதரவு இணையதளங்களில் ஒன்றுக்கு கூட அந்த 'சிவ ரூபன்' கடிதம் அனுப்பவில்லை இவருக்கு மட்டுமே அனுப்பி வைத்துகொண்டிருக்கிறார்..இதை நாம் நம்ப வேண்டும்..

இதோ இப்போது அவரின் முழு முகமும் தெளிவாக தெரிந்துவிட்டது.. தற்காலத்தில் அவர் என்ன புளுகுகிறார் பாருங்கள்..

கடந்த வாரம் இந்திய பாராளுமன்ற இரு அவைகளிலும் ஈழத்தின் இன்றைய நிலை குறித்து நடந்த விவாதங்களைப் பார்த்தாலே போதுமானது. பாரதிய ஜனதா கட்சியின் சுஷ்மா ஸ்வராஜ், வெங்கைய நாயுடு இருவரின் உரைகளும் கண்களில் நீர்மல்க வைத்தன. வெறும் அரசியல்வாதிகளாக அவர்கள் பேசவில்லை. உண்மையில் தமிழர்களாக நின்று அவர்கள் பேசியது போலவே இருந்தது.

ஏன் இவ்வளவு காலம் ஈழ தமிழர்கள் கொல்லபடும் வேளையில் இவர்கள் இஞ்சி மரபா விற்று கொண்டிருந்தார்களா? என்று நாம் கேட்க கூடாது.. நமக்காக யாரோ அழுகிறார்கள் என்றால் சுழிவிரக்கதோடு நாம் அணுகவேண்டும்.. அதை ஏன் எதற்கு என்று ஆராய கூடாது.. இப்படித்தான் காலாதி காலம் இந்தி தேசியம் நம்மை காயடித்து வைதிருக்கிறது..எவன் டெல்லியில் இருந்து பிரச்சரத்திற்கு வந்தாலும் தமிழ்நாட்டில் தவறாமல் ஒன்றை கூறுவார்கள்.. தமிழர்கள் புத்திசாலிகள் கடுமையான உழைப்பாளிகள் என .. எல்லா மாநிலங்களிலும் அதே புளுகுகளைத்தான் அவிழ்த்து விடுகிறார்கள் என்பது பெரும்பாலோருக்கு உரைப்பதில்லை அதையே வேத வாக்காக எடுத்து கொண்டு தங்கள் எஜமானர்களின் புகழ் கூட்ட இந்த போலி கும்பல் கிளம்பிவிடுகிறது..

இவ்வாறன இந்தி தேசிய அடிப்பொடிகள்..ரோ உளவாளிகளை தமிழ் தேசிய தோழர்கள் சரியாக அடையாளம் காண்பதுடன் . டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு கொடிபிடிப்பவர்களை செருப்பால் அடித்து தமிழர் நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியை தொடர்ந்து ஆதரித்துக் கொண்டிருப்பவர் எப்படித் தமிழர்களுக்காக ஓங்கிக் குரல் கொடுக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ எல்லாம் சொல்றீங்கப்பா!!!

ஈழத்தமிழனுக்கு உதெல்லாம் கேட்கவேண்டிய ஒரு கட்டாயமாச்சு.

எல்லாம விதியப்பா.

நக்கீரன் குமுதம் ஆகியோர் அடகளாரின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தன. முள்ளிவாக்கால் வரைக்கும் மக்கள் ஒதுக்கப்படும் வரை இவருடன் ஏதோ ஒரு ச(க்)தி தொடர்பிலிருந்தது, என்பதை வெளிப்படுத்தியிருந்தார்கள், அவரது செவ்வியிலிருந்தே. அதன் உண்மைத் தன்மையை அவர்தான் வெளிப்படுத்த வேண்டும். இந்த வரைவிலும் சறுக்கல் இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.