Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

LttePress யாருடைய கையில் ? றோ ?????

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Lttepress தளத்தில் தேர்தலைப் புறக்கணிக்கும்படி அறிக்கை வந்துள்ளது. இந்த இணையத்தளம் விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளம் என்று தன்னைத் தானே அறிவித்திருந்தது

http://www.lttepress.com/more1.html

அறிக்கையின் முழு விபரம் :

இலங்கைத் தேர்தலும் தமிழரின் துக்கதினமும்.

பாசமிகு தமிழீழ மக்களே இலங்கையின் தேசிய இனங்களுக்கு உண்டான ஜனாதிபதி தேர்தல் என இலங்கை தேர்தல் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த தேர்தல்.

தேசிய இனங்களில் ஒன்று என குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழ் இனத்தை அடக்கி ஒடுக்கி இடுக்கத்தின் உச்சியில் வைத்து நடாத்தப்படுகின்றது.

சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி வாழ்வாதாரங்களை அழித்து தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்து அவர்கள் இரத்தத்தில் சிங்கக் கொடி ஏற்றி விட்டு நடாத்தப்படுகிறது.

இதற்குத்தான் ஜனநாயகம் என சிங்கள பேரினவாதம் பெயர் வைத்துள்ளது.

ஒடுக்குமுறைக்கும் இடம் பெயர்தலுக்கும் இரத்தக்களறிக்கும் சிங்கள பேரினவாதம் வைத்தருக்கும் பெயர்தான் ஜனநாயகம்.

இன உரிமைக்காய் போராடியவர்களை கொடும் சிறைக்குள் அடைத்துவைத்தும் சமாதானம் பேசியவர்களை கொன்று ஒழித்தும் ஈவிரக்கமற்ற அநீதிகள் புரிந்த பதவியின் பெயர்தான் இலங்கையின் ஜனாதிபதி.

இதற்குத்தான் இப்போது தேர்தல்.

தேர்தல் சமயங்களில் தம்மை நல்லவர் போல் காட்டி சமாதானம் பேசி அப்பாவிகளான தமிழ்மக்களை நம்பவைத்து மீண்டும் ஏமாற்றி அவர்களை ஒடுக்குவதுதான் இலங்கை ஜனாதிபதி தேர்தல்.

சிங்கள பேரினவாதம் தன்னை வளர்த்துக்கொள்ளுவதற்காகாவும் தமிழர் ஒடுக்குமுறைக்காக சில மாற்றங்களைச் செய்துகொள்ளுவதும்தான் இந்த தேர்தல்களின் வெளிப்பாடுகளும் முடிவுகளுமாக இருக்கும்.

ஆனால் இதில் போட்டியிடும் பேரினவாதிகளுக்குள் தமிழ் இன ஒடுக்குமுறைக்கொள்கையில் எந்தக் கருத்துவேறுபாடும் இருக்காது.

இதுவரை காலமும் ஏற்படாத மனித பேரவலத்தை ஏற்படுத்தி தமிழர் இரத்தத்தில் கொடியேற்றிய இந்த ஜனாதிபதி தேர்தல் ஈழத் தமிழர்களின் துக்க தினமாகும்.

தமிழீழத்தில் மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது மக்கள் இந்ந தேர்தல் நாளை இனப்படுகொலையின் துக்க தினமாக அனுஷ்டிக்கும்படி வேண்டுகிறோம்.

புலம் பெயர் நாடுகளில் வாழும் எமது மக்கள் சர்வதேச நாடுகளுக்கு எமது அவலம் தெரியும்படி கறுப்புக்கொடிகள் ஏற்றி துக்கத்தை வெளிப்படுத்துமாறு வேண்டப்படுகின்றனர்.

நன்றி

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்

தலைமைச் செயலகம்

தமிழீழ விடுதலைப்புலிகள்

தமிழீழம் .

தளம் யாருடையதோ ஆனால் சொல்லப்படும் விடயத்தில் எனக்கு 100% உடன்பாடு உண்டு...

தளம் யாருடையதோ ஆனால் சொல்லப்படும் விடயத்தில் எனக்கு 100% உடன்பாடு உண்டு...

அது றோ சொறிலங்கா கூட்டு இணையத்தளம் போல தெரிகிறது.

தயா அண்ணா எல்லாம் அறிந்த தாங்களா இப்படி சொல்லுவது. நம்ப முடியவில்லை.

சரத் வந்து ஒண்டும் புடுங்க போவது இல்லை. ஆனால் மஹிந்த குரூப்பை வீட்டுக்கு அனுப்ப அதை தவிர

வேறு வழி இல்லை. சரத் வந்தால் பாராளுமன்ற தேர்தலில் ரணில் அரசாங்கம் வரும் சாத்திய கூறு அதிகம்.

ரணிலும் சரத்தும் புடுங்கு படுவது சிங்களவனுக்கு ஒரு உறுதியான ஆட்சி அமைய முடியாது.

அதுவே எமக்கு தேவையானது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சீமான் கனநாள யாழுக்க வரவில்லைபோல.....

இந்த திணிப்பு கனநாளா தொடருது

இன்றைக்கு தங்களுக்கு ஆரம்பமாகப்போகுது

ஓட ஓட...

தற்போதுள்ள சூழ் நிலையில் யார்வேண்டுமானாலும் இதைக்கையிலெடுத்துக் கொள்ளாலாம் கையை சுட்டுக்கொள்ளும்போது தெரியும்.

தான் நினைப்பதை மற்றவன் ஏற்று கொள்ள இல்லை எண்றதும் ஒப்பாரி வைக்கும் கூட்டத்தில் தொகை யாழுக்கை அதிகம்... கருத்து வைக்க முடியாதவர் மற்றவரை திட்டி தீர்ப்பதை கூட நேரடியாக செய்ய முடியாத பேடி நிலையிலை இருக்கும் கூட்டம்... நான் கேட்க்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத பேடித்தனம் தான் இந்த திணிப்பு ஒப்பாரி...

இவர்கள்தான் தமிழர்களுக்காக நெஞ்சை நிமிர்துகினம் எண்டு சொல்லி கொள்ளுகினம்... சுத்தமான பேடிக்கூட்டங்கள்...

அது றோ சொறிலங்கா கூட்டு இணையத்தளம் போல தெரிகிறது.

தயா அண்ணா எல்லாம் அறிந்த தாங்களா இப்படி சொல்லுவது. நம்ப முடியவில்லை.

சரத் வந்து ஒண்டும் புடுங்க போவது இல்லை. ஆனால் மஹிந்த குரூப்பை வீட்டுக்கு அனுப்ப அதை தவிர

வேறு வழி இல்லை. சரத் வந்தால் பாராளுமன்ற தேர்தலில் ரணில் அரசாங்கம் வரும் சாத்திய கூறு அதிகம்.

ரணிலும் சரத்தும் புடுங்கு படுவது சிங்களவனுக்கு ஒரு உறுதியான ஆட்சி அமைய முடியாது.

அதுவே எமக்கு தேவையானது.

மகிந்தவை அகற்றுவதின் மூலம் சுந்தந்திர கட்ச்சிக்கு சந்திரிக்கா தலைமை ஏற்கும் நிலை வரலாம்... ஏற்கனவே சரத் பொன்சேகாவை தலைமை பொறுப்பில் நியமித்த சந்திரிக்காவுடன் சரத்துக்கு எந்த விதமான பிரச்சினையும் கிடையாது... அதோடு சரத்தின் ஒரு காலத்து நண்பர்கள் கூட சுந்தந்திர கட்ச்சியில்தான் இருக்கிறார்கள்... மகிந்தவை அகற்றும் கருவியாக தான் JVP யும் UNP யும் சரத்தை ஆதரிக்கிறார்கள் என்பது எங்களை விட சரத்துக்கு நன்கு தெரியும்...

JVP யின் பரம எதிரியான ஐதேகவுடன் JVP கூட அதன் பின்னர் சேர்ந்து இருக்கும் என்பதுக்கு இல்லை... ஆக நாடாளுமண்ற தேர்தலில் மாற்றங்கள் வரலாம்...

அதோடு தன்னை முழுமையாக விரும்பாதவர்கள் கூட ஜனாதிபதியான பின் சரத் இருப்பான் எண்று நான் நம்பவில்லை...

அதோடு நாட்டின் இராணுவத்துக்கு 5 வருடமாக தலைமை தாங்கியவர் வெற்றி பெற்றவர்.. நாட்டின் ஜனாதிபதியாக இருந்து இராணுவத்தை கொண்டு வெற்றி பெற்ற ஒரு அரசியல் வாதி.. இதில் ஆபத்தானவர் யார் எண்று சொல்லுங்கள்...

அது நிற்சயமாக இராணுவ தளபதியே... சூழ்ச்சிகளும், நல்ல திறமையான தலைமை பண்பும், முடிவெடுக்கும் திறனும் இல்லாதவரால் நல்ல இராணுவ தளபதியாக இருக்க முடியாது என்பதுதான் உண்மை.... ஆனால் அரசியல் வாதிக்கு இரண்டு நல்ல தம்பிகள் இருந்தால் போதும்... அப்படி பார்த்தால் உருத்தெரியாமல் மறைந்து நிற்க்கும் பூதம் தான் சரத் பொன்சேகா... அவன் வெற்றி பெற்றால் எடுக்கும் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதும் வெளிப்படையே...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் அடிவாங்க என்றே பிறந்தவனாச்சே...இதுவரைக்கும் மஹிந்த அடிச்சான் ஒருமாறுதலுக்காக சரத்தை வரவைச்சு அடிவாங்குவம்...அடிவாங்கிறதென்று முடிவாச்சுது..எவன் நல்லா அடிக்கிறான் என்று பார்ப்பம்..

இதுவே எமக்கு பிழைப்பா போச்சுது :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயாவின் கருத்துடன் நான் முழுதாக ஒத்துப்போகிறேன்.

இரண்டு வேட்டைநாய்களில் எதைதீர்மானிக்க முடியும் முயல்களால்???

மற்றது..ஒரு இணையத்தளம் நடாத்தித்தான் சுதந்திரபோராட்டத்தை அழிக்கவேண்டிய நிலையில் இப்போது

'றோ' இல்லை எனலாம்.

ஏனெனில் முள்ளிவாய்க்காலில் றோ வுடன் சேர்ந்து இயக்கத்தை காட்டிக்கொடுத்து அழித்தவர் இப்போது

கொழும்பு உயர்குடி விடுதியில் இருக்கும்போது

அவரால் நியம்க்கப்பட்ட பொறுப்பாளர்கள் இன்னும் ஒவ்வொரு நாட்டிருலும் பழைய பதவிகளிலேயே ஒட்டி

இருக்கும்போது புதிதாக இணையம்மூலம்தான் 'றோ' வரவேணுமாக்கும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ

மகிந்தவே வரட்டும் என்கிறீர்களா?

... மற்றது..ஒரு இணையத்தளம் நடாத்தித்தான் சுதந்திரபோராட்டத்தை அழிக்கவேண்டிய நிலையில் இப்போது 'றோ' இல்லை எனலாம். :wub:

ஏனெனில் முள்ளிவாய்க்காலில் றோ வுடன் சேர்ந்து இயக்கத்தை காட்டிக்கொடுத்து அழித்தவர் இப்போது

கொழும்பு உயர்குடி விடுதியில் இருக்கும்போது அவரால் நியம்க்கப்பட்ட பொறுப்பாளர்கள் இன்னும் ஒவ்வொரு நாட்டிருலும் பழைய பதவிகளிலேயே ஒட்டி இருக்கும்போது புதிதாக இணையம்மூலம்தான் 'றோ' வரவேணுமாக்கும்!!! :huh:

இத் தளம் ஆரம்பிக்கப்பட்ட தினம், வெளியிடும் தகவல்கள் - தமிழ் கூட்டமைப்பின் முடிவை ஏற்று தமிழ் மக்கள் வாக்கு அளித்துவிடுவார்கள் என்ற கருத்து வலுப்பெற்று வரும் பின்னணியிலும், சூழ்நிலைகள் கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு சாதகம் அற்றுள்ள நிலையிலும் - தமிழ் மக்களை குழப்ப உருவாகியது போலத் தெரிகிறது.

இப்பின்னணியில், இத் தளம் தமிழினத்துக்கு எதிரான பயங்கரவாதிகளால் நடத்தப்படுவது போல தெரிகிறது. இத்தகைய கீழ்த்தரமான புத்தியில் இந்திய பயங்கரவாதிகள் வல்லவர்கள் என்பதால் அவர்களின் பின்புலம் இருக்கும் போலத் தெரிகிறது.

இத் தளம் பதிவு பற்றிய விபரங்கள் கீழ் தரப்பட்டுள்ளது:

LTTEPRESS.COM SITE INFORMATION

IP: 188.121.46.128

Registrant:

Domains by Proxy, Inc.

DomainsByProxy.com

15111 N. Hayden Rd., Ste 160, PMB 353

Scottsdale, Arizona 85260

United States

Registered through: GoDaddy.com, Inc. (http://www.godaddy.com)

Domain Name: LTTEPRESS.COM

Created on: 23-Dec-09

Expires on: 23-Dec-11

Last Updated on: 23-Dec-09

Administrative Contact:

Private, Registration @domainsbyproxy.com

Domains by Proxy, Inc.

DomainsByProxy.com

15111 N. Hayden Rd., Ste 160, PMB 353

Scottsdale, Arizona 85260

United States

(480) 624-2599 Fax -- (480) 624-2598

Technical Contact:

Private, Registration @domainsbyproxy.com

Domains by Proxy, Inc.

DomainsByProxy.com

15111 N. Hayden Rd., Ste 160, PMB 353

Scottsdale, Arizona 85260

United States

(480) 624-2599 Fax -- (480) 624-2598

Domain servers in listed order:

NS27.DOMAINCONTROL.COM

NS28.DOMAINCONTROL.COM

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தரவுகளுக்கு

நான் இந்த இணயத்தை இன்னும் பார்க்கவில்லை

அதில் வந்தவற்றையும் பார்க்கவில்லை

ஏன் அவசரம்

உண்மை என்றால் நிலைக்கட்டுமே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தரவுகளுக்கு

நான் இந்த இணயத்தை இன்னும் பார்க்கவில்லை

அதில் வந்தவற்றையும் பார்க்கவில்லை

ஏன் அவசரம்

உண்மை என்றால் நிலைக்கட்டுமே...

இதில ஒரு விசயம் என்னண்டா இப்படி ஒண்டு இருக்கு என்று முதலில் வெளியிட்ட பத்திரிகை ஒரு இந்திய பத்திரிகை, அப்ப விசயம் எப்படி போகுது, கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயம்தான்.

"எப்பொருள் யார் வழி கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு"

அய்யன் வள்ளுவன்.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

அய்யன் வள்ளுவன் சொன்னது:

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு"

பொருட்பால்-அரசியல்-அறிவுடைமை-குறள்: 423

நிச்சயமாக இணையத்தளங்களைச் சொல்லியிருக்கமாட்டார் என்பது எனது கருத்து..."

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியஉளவு நிறுவனத்துடன் நாங்கள் தொடர்புகளை வைத்துள்ளோம் என்றும்

இந்தியாவே எமது விடுதலையை பெற்றுத் தரும் என்று இந்தியாடுடே க்கு யூலைமாதம்2009 பேட்டிகொடுத்த கே.பி யை மறந்துவிட்டீர்களா???

அய்யன் வள்ளுவன் சொன்னது:

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு"

பொருட்பால்-அரசியல்-அறிவுடைமை-குறள்: 423

நிச்சயமாக இணையத்தளங்களைச் சொல்லியிருக்கமாட்டார் என்பது எனது கருத்து..."

வணங்காமுடி - உங்கள் அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது. :huh:

தமிழன் அடிவாங்க என்றே பிறந்தவனாச்சே...இதுவரைக்கும் மஹிந்த அடிச்சான் ஒருமாறுதலுக்காக சரத்தை வரவைச்சு அடிவாங்குவம்...அடிவாங்கிறதென்று முடிவாச்சுது..எவன் நல்லா அடிக்கிறான் என்று பார்ப்பம்..

இதுவே எமக்கு பிழைப்பா போச்சுது :)

ஒரு காலத்தில் சந்திரிக்கா துலைஞ்சால் போதும் எண்டு இருந்தது... இப்ப அதே சந்திரிக்காவின் ஆதாரவு பெற்ற ஒருவரை ஆட்ச்சிக்கு கொண்டுவர வேண்டும் எண்ட அளவுக்கு மகிந்த துலைஞ்சால் போதும் எனும் நிலை....

அக்கரைக்கு இக்கரை பச்சை எண்டு இதைத்தான் சொல்வார்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.