Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுருதி மாறுகிறதா தமிழோசை ?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுருதி மாறுகிறதா தமிழோசை ?!

ஆனந்தி, ஷங்கர், தாசீசியஸ் போன்ற ஈழத்து செய்தி அமைப்பாளர்களின் காலத்தின் பின்னர், லண்டன் பி.பி.ஸி இனது தமிழோசை தமிழர் ஆதரவுத் தளத்திலிருந்து சிறிது சிறிதாக விலகி ஒரு கட்டத்தில் சிங்கள அரசின் இனவழிப்பை அப்படியே நியாயப்படுத்துமளவிற்கு தனது செய்திகளை அமைத்தும் ஒளிபரப்பியும் வந்தமை நாம் அனைவரும் அறிந்ததே. இதன் உச்சகட்டமாக கருணா பிளவின்போது அது நடந்துகொண்ட விதம் மற்றும் 2008 இன் ஆரம்பக் காலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் கடைச் நாட்கள் வரையிலும் அவ்வாறே இலங்கை சனாதிபதித் தேர்தல் காலம் வரையிலும் அதனது செய்திகள் கேட்பவர்கள் உளரீதியாக சோர்வடையச் செய்து ஒரு சரணாகதி நிலையாடையச் செய்வதாகவே இருந்து வந்தது.

ஆனால், அண்மையில் நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தலின் பின்னர் அது எழுதிய இரு ஆய்வுக்கட்டுரைகள் அதன் சுருதி மாறி வேறு திசையில் பYஅணிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்தவகையான முதலாவது கட்டுரை நேற்று தயா அவர்களால் இங்கே இணைக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது கட்டுரை தமிழோசை செய்தித் தயாரிப்பாளரான எதிராஜன் அன்பரசன் அவர்களால் தேர்தலின் பின்னரான யாழ் மக்களின் மனோநிலை என்ன என்பது பற்றி அலசுகிறது.

RAW வின் ஊதுகுழல் என்பதை புல்மோட்டையில் வைத்து வெளிப்படையாக தமிழோசை காட்டிக்கொண்டது... இப்போவரும் செய்திகள் இலங்கையை சாடி வருவது கொஞ்சம் மாற்றமாக இருக்கிறது...

தமிழர்களுக்கு வெளிப்படையாக எதிரியாக காணப்படும் இந்தியா மீண்டும் இரட்டை வேடம் போட தயாராவது போல இருக்கு... எங்கட ஆக்கள் அடுத்த முறை சோனியா ஆட்ச்சிக்கு வரவேண்டும் எண்டு சொல்லும் அளவுக்கு கொண்டு வந்து விடுவாங்கள்... ( தமிழர்கள் இண்றும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தான் செயற்படுகிறார்கள் எண்டது வேறு விடயம்... )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயமும் மனக் கிலேசமும் யாழ் மக்களை வாட்டுகின்றன..என்கிற தலைப்பில் இவர் ஒரு கட்டுரையை வரைந்திருக்கிறார்.

அக்கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கே தர முயற்சிக்கிறேன்.

கடந்த சனாதிபதித் தேர்தலின் பின்னர், தமிழர்களின் கலாச்சாரத் தலைநகரான யாழ்ப்பாணத்தில் மக்களிடையே உள்ளார்ந்த பயமும், கலக்கமும் நிறைந்து காணப்படுகிறது.

மகிந்த பெரும் வாக்கு வித்தியாசத்தில் அந்தத் தேர்தலில் வென்றிருந்தார்.ஆனால் அவர் தனது எதிரி வேட்பாளரான சரத் பொன்சேக்காவைக் காட்டிலும் மிகவும் குறைந்த வாக்குகளையே தமிழர் பிரதேசங்களில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பெற்றிருந்தார்.

"நாங்கள் இந்தத் தேர்தல் முடிவுகளால் மிகவும் அதிருப்தியடைந்திருக்கிறோம்.நாங்கள் பொன்சேக்கா வெல்லவேண்டுமென்றே விரும்பியிருந்தோம்.இனித் தமிழர்களை இந்த அரசு எப்படி நடத்தப்போகிறதோ என்று எமக்குத் தெரியவில்லை என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கூறினார்.

முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்த தமிழ்க் கட்சியான தமிழர் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் சரத் பொன்சேக்காவை ஆதரித்திருந்தது.

சுருதி மாறுகிறதா தமிழோசை ?!

ஆனந்தி, ஷங்கர், தாசீசியஸ் போன்ற ஈழத்து செய்தி அமைப்பாளர்களின் காலத்தின் பின்னர், லண்டன் பி.பி.ஸி இனது தமிழோசை தமிழர் ஆதரவுத் தளத்திலிருந்து சிறிது சிறிதாக விலகி ஒரு கட்டத்தில் சிங்கள அரசின் இனவழிப்பை அப்படியே நியாயப்படுத்துமளவிற்கு தனது செய்திகளை அமைத்தும் ஒளிபரப்பியும் வந்தமை நாம் அனைவரும் அறிந்ததே. இதன் உச்சகட்டமாக கருணா பிளவின்போது அது நடந்துகொண்ட விதம் மற்றும் 2008 இன் ஆரம்பக் காலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் கடைச் நாட்கள் வரையிலும் அவ்வாறே இலங்கை சனாதிபதித் தேர்தல் காலம் வரையிலும் அதனது செய்திகள் கேட்பவர்கள் உளரீதியாக சோர்வடையச் செய்து ஒரு சரணாகதி நிலையாடையச் செய்வதாகவே இருந்து வந்தது.

ஆனால், அண்மையில் நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தலின் பின்னர் அது எழுதிய இரு ஆய்வுக்கட்டுரைகள் அதன் சுருதி மாறி வேறு திசையில் பYஅணிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்தவகையான முதலாவது கட்டுரை நேற்று தயா அவர்களால் இங்கே இணைக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது கட்டுரை தமிழோசை செய்தித் தயாரிப்பாளரான எதிராஜன் அன்பரசன் அவர்களால் தேர்தலின் பின்னரான யாழ் மக்களின் மனோநிலை என்ன என்பது பற்றி அலசுகிறது.

என்னதான் அரச சார்பற்றவர்கள், நடுநிலையானவர்கள் என்று தம்மை மேற்கத்தைய ஊடகங்கள் சொல்லிக்கொண்டாலும், அவை அந்தந்த அரசுகளின் பிரதான அரசியல் தீர்மானங்களுக்கு ஏற்றவாறுதான் நடந்து கொள்வர். ஈராக் யுத்தத்திற்கு பிபிசி கருத்தியல் தளத்தில் தன் முழுப்பங்களிப்பையும் கொடுத்து ஆதரவு நல்கியது ஒரு சிறந்த உதாரணம். எம் பிரச்சனையிலும் சமாதான காலத்திற்கு முன் ஒரு முகத்தையும், பின் மேற்கத்தைய நாடுகள் புலிகளை ஒடுக்க முழுமுயற்சியில் இருக்கும் போது இன்னொரு முகத்தையும் பிபிசி (தமிழோசை உட்பட) காட்டியது. இன்று மேற்கத்தைய நாடுகளின் நிகழ்சி நிரலுக்கு ஏற்றவாறு சரத் வெல்லவில்லை என்பதால் மகிந்த தலைமையிலான இலங்கை அரசின் ஒவ்வொரு விடயத்தையும் விமர்சிக்க ஆரம்பித்து அவர் மீதான் கூட்டு எதிர்ப்பு மனநிலையை தோற்றுவிகக் முயல்கின்றது. மகிந்த வென்ற சில மணி நேரத்திலேயே, சரத் மகிந்தவின் வெற்றியை Challenge பண்ணுகின்றார் எனும் விதத்தில் தான் செய்தியின் தலைப்பை இட்டு இருந்தது. இன்றும் காணாமல் போன சிங்களப் பத்திரிகையாளரின் மனைவியின் வேண்டுகோளை முதன்மையாக வெளியிட்டு இருந்தது.

முடிந்தால், இந்த 'சரத்' வெல்லாத காலமதில் தமிழர்கள் எமக்கு கிடைக்கக் கூடிய ஆகக்குறைந்த அனுகூலங்களையாவது பெறுவதற்கு ஒன்றுபடுவோம்

Edited by நிழலி
எழுத்து பிழை திருத்த

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்கள ராணுவத்தல் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாரிய அழிவினைச் சந்தித்த தமிழினத்தை நோக்கி சனாதிபதி எந்தவொரு நேசக்கரத்தையோ அல்லது சமரசத் தீர்வையோ இதுவரை வழங்கவில்லை என்கிற ஆத்திரமும் ஏமாற்றமுமே இந்த வாக்களிப்பில் தமிழர் நடந்துகொண்ட முறைக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.

ஊரடங்கு உத்தரவுகள் கெடுபிடிகள் என்று ஒருவருட காலத்துக்கு முன்னர் இருந்த யாழ்ப்பாண நகர் இன்று வேறு நகராகக் காட்சியளிக்கிறது.நீண்ட நேரம் கடைகள் திறக்கப்பட்டிருப்பதோடு கலாச்சார நிகழ்வுகளும் இப்போது ஆங்காங்கே நடைபெற ஆரம்பித்திருக்கின்றன. தென்னிலங்கையிலிருந்து இங்குவரும் சிங்கள உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஆனால் பலரும் இந்த அரசாங்கத்தின்மீது பல்வேறு காரணங்களுக்காக அதிருப்தியடைந்தவர்களாகவே காணப்படுகின்றனர். அதில் பிரதானமானது, போரின் இறுதிக்கட்டத்தின்போது அகதிகளாக்கப்பட்ட லட்சக்கனக்கான மக்களின் மீள்குடியேற்றம் என்றால் மிகையாகாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறுதிக்கட்டப் போரின்போது அகதிகளாக்கப்பட்ட லட்சக்கண்க்கான மக்களில் பெரும்பாலானோர் இன்று விடுவிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் 80,000 தமிழர்கள் வவுனியா நகருக்கு அண்மையில் அமைந்திருக்கும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.விடுவிக்கப்பட்ட மக்களின் பெரும்பான்மையானவர்கள் இன்றும் தமது அன்றாட உணவிற்குக் கஷ்ட்டப்படுவதையே காண முடிகிறது.இவ்வாறு யாழ்ப்பாணம் வந்திறங்கிய சுமார் 60,000 தமிழர்கள் தமது உறவினர் நண்பர்களின் வீடுகளிலோ அல்லது வேறு இடங்களிலோ தங்குவதைத்தான் கான் முடிகிறது. வேலை வாய்ப்பின்றித் தவிக்கும் இவர்கள் வாடகை கொடுப்பதுவும் கடிணமாகத்தான் இருக்கிரது.

"இடம்பெயர்ந்த மக்களுக்கான வசதிகள் எதுவும் செய்துகொடுக்கப்படாமையினால் அவர்கள் கவலையுடனேயே இருக்கின்றனர்.வன்னி பெரு நிலப்பரப்பில் அவர்களிடமிருந்த எல்லா வளங்களையும் அவர்கள் இன்று இழந்து விட்டனர்" என்று யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவிக்கிறார்.

இவ்வாறு யாழ்ப்பானம் அனுப்பிவைக்கப்பட்ட ஒரு தம்பதியினர் கடும் வறுமை தாங்காது தற்கொலை செய்துகொண்ட செய்தியும் சில மாதங்களுக்கு முன்னர் வந்திருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதனால் ஏற்பட்ட துயரம் இவர்களின் மனதில் ஆழத்திலிருந்ததியும் அறிந்துகொள்ள முடிந்தது......

இவ்வாறு மக்கள் தற்போதிஅய் அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அதிருப்தியடைந்திருக்கிறார்கள் என்று எழுதும் அன்பரசன், இறுதியில் டக்கிளசின் பொன் மொழிகலையும் சேர்த்திருக்கிறார்." சந்தர்ப்பங்களைத் தவரவிட்டு விட்டோம், 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தம்..என்றதில் தொடங்கி இன்று சனாதிபதிய நிராகரித்து வரை தமிழர்கள் சந்தர்ப்பங்கலைத் தவர விட்டு விட்டார்கள்" என்று புலம்பியிருக்கிறார் டக்கிளஸ்.இதனால் தமிழருக்கு இன்னும் அழிவுதான் சேரப்போகிறது என்று பயமுறுத்தியிருக்கிறார்.

ஆக, எமது தார்மீகப் போராட்டம் இந்தியாவையும் மேற்குலகையும் பொறுத்தவரை சதுரங்கம். தமக்குத் தேவையென்றால் அரசாங்கத்தி விமர்சிப்பார்கள், இல்லையென்றால் எம்மைப் பயங்கரவாதிகள் என்று முத்திரையிடுவார்கள்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

வஞ்சம் தீர்ப்பதில் தமிழர்களை வெல்ல எவராலும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

வீழ்ந்து கிடக்கும் ஒரு இனத்தின் அரசியல் இயன்றவரை நலன்களை காப்பாறியபடி எழுகிற சமரசங்கள்தான். எழுந்தால்தான் நடப்பது பற்றியோ ஓடுவது பற்றியோ விடுதலை பற்றியோ பேசமுடியும். நாம் இரு சிறு நகரத்தின் குடித்தொகைக்கும் குறைவான சனத்தைகையைக்கொண்ட ஒரு சிற்றினம் என்பதையும் நமது உழைப்பாற்றலும் கருவளமும் கொண்ட இளய தலைமுறைகளை புலப்பெயர்விலும் போரிலும் இளந்துபோன சிற்றினம். இதை நாம் ஒருபோதும் கருத்தில் கொள்ளவில்லை. போராளிகளின் காலத்திலேயே வீதிகள் நிர்மாணிக்கவும் வீடுகள் கட்டவும் சிங்கள தொழிலாளர்களையும் நிபுணர்களையும் கொண்டு வரவேண்டியிருந்தது. இப்போ உழைப்பவர் பற்றாக்குறை மிக மோசமாக உள்ளது. எதிர்காலத்தில் சிங்கள தொழிலாளர்கள் திரும்பிப் போக மாட்டார்கள். சிங்களக்குடியேற்றம் தவிர்க்க இயலாத நிகழ்வாகிவிடும். சிங்களத் தொழிலாளர்களும் சீனத் தொழிலாளர்களும் நிபுணர்களுமா அல்லது நாமுன் இந்திய தமிழக தொழிலாளரும் நிபுணர்களா என்கிற கேழ்வி வரலாற்றுக் கேழ்வி எங்கள்முன் நிற்க்கிறது. புலம் பெயர்ந்த அரசுகளோ வேறு அமைப்புகளோ வரலாற்றையும் விடுதலையையும் ஆதரிக்க முடியுமே அல்லாமல் வரலாற்றையும் விடுதலையையும் ஏற்றுமதி செய்ய முடியாது. எங்கள் புலக்குடி (Diaspora) பொருளாதார ரீதியிலும் இறையியல் ரீதியிலும் அனுதாப ரீதியிலும் மேற்றுலகில் செல்வாக்குப்பெற்ற யூத புல்க்குடிபோல எண்ணுவது அபத்தமாகும்.

எங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தப்புத் தப்பாக எழுதப் பட்ட பளைய ஏற்ப்பாடு தோற்றுப்போய்விட்டது எங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையில் மீண்டும் புதிய ஏற்ப்பாடு எழுதப் படலாம். இப்படித்தானே சோழர் காலத்தில் இருந்து பிராந்திய அரசியல் இயங்குகிறது. இந்தியாவுடன் ஏற்பாடு இருந்தால் மட்டுமே தமிழக அரசால் இந்தியாவை எங்களுக்குச் சாதகமாக அழுத்த முடியும் என்பதும் தெளிவாகி உள்ளது. புலம்பெயர்ந்த எங்களது நடவடிக்கைகலால் அல்ல களத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்தலில் சம்பந்தர் றவ்ஹக்கீம் மனோகணசேனின் கூட்டு நிலைபாட்டால் தோல்விக்கு பின் எமது மக்கள தாம் ஒரு அணி என்பதை உலகிற்க்கு சொல்லி இருக்கிறார்கள். அதிதீவிரவாதம் பேசுவதல்ல அவர்கள் அரசியல் ரீதியாக அடுத்த கவடும் வைக்க உதவுவதே இன்றைய காலத்தின் தேவை.

Edited by poet

இந்தியாவுடன் ஏற்பாடு இருந்தால் மட்டுமே தமிழக அரசால் இந்தியாவை எங்களுக்குச் சாதகமாக அழுத்த முடியும் என்பதும் தெளிவாகி உள்ளது. புலம்பெயர்ந்த எங்களது நடவடிக்கைகலால் அல்ல களத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்தலில் சம்பந்தர் றவ்ஹக்கீம் மனோகணசேனின் கூட்டு நிலைபாட்டால் தோல்விக்கு பின் எமது மக்கள தாம் ஒரு அணி என்பதை உலகிற்க்கு சொல்லி இருக்கிறார்கள். அதிதீவிரவாதம் பேசுவதல்ல அவர்கள் அரசியல் ரீதியாக அடுத்த கவடும் வைக்க உதவுவதே இன்றைய காலத்தின் தேவை.

:lol::lol::o

BBC தமிழ் சேவையினுள் இந்திய பயங்கரவாதிகள் "ரோ" ஊடுருவி வலுப்பெற்ற காலம் முதல், வெளிப்படையாக நீதி விரோத, ஈழத்தமிழர் விரோத போக்கு, இனப்படுகொலை ஆதரவுப் போக்கு தொடக்கி கோலோச்சி வந்தது.

அதன் விளைவாக அது தன் நம்பகத்தன்மையை இழக்க, படிப்படியாக அதன் நேயர் வட்டம் குறுகி வந்தது.

இழந்த நம்பகத்தன்மையை பெற பலவருடங்கள் செல்லலாம். முதலில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து வெளிவரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் அரச சார்பற்றவர்கள், நடுநிலையானவர்கள் என்று தம்மை மேற்கத்தைய ஊடகங்கள் சொல்லிக்கொண்டாலும், அவை அந்தந்த அரசுகளின் பிரதான அரசியல் தீர்மானங்களுக்கு ஏற்றவாறுதான் நடந்து கொள்வர். ஈராக் யுத்தத்திற்கு பிபிசி கருத்தியல் தளத்தில் தன் முழுப்பங்களிப்பையும் கொடுத்து ஆதரவு நல்கியது ஒரு சிறந்த உதாரணம். எம் பிரச்சனையிலும் சமாதான காலத்திற்கு முன் ஒரு முகத்தையும், பின் மேற்கத்தைய நாடுகள் புலிகளை ஒடுக்க முழுமுயற்சியில் இருக்கும் போது இன்னொரு முகத்தையும் பிபிசி (தமிழோசை உட்பட) காட்டியது. இன்று மேற்கத்தைய நாடுகளின் நிகழ்சி நிரலுக்கு ஏற்றவாறு சரத் வெல்லவில்லை என்பதால் மகிந்த தலைமையிலான இலங்கை அரசின் ஒவ்வொரு விடயத்தையும் விமர்சிக்க ஆரம்பித்து அவர் மீதான் கூட்டு எதிர்ப்பு மனநிலையை தோற்றுவிகக் முயல்கின்றது. மகிந்த வென்ற சில மணி நேரத்திலேயே, சரத் மகிந்தவின் வெற்றியை Challenge பண்ணுகின்றார் எனும் விதத்தில் தான் செய்தியின் தலைப்பை இட்டு இருந்தது. இன்றும் காணாமல் போன சிங்களப் பத்திரிகையாளரின் மனைவியின் வேண்டுகோளை முதன்மையாக வெளியிட்டு இருந்தது.

முடிந்தால், இந்த 'சரத்' வெல்லாத காலமதில் தமிழர்கள் எமக்கு கிடைக்கக் கூடிய ஆகக்குறைந்த அனுகூலங்களையாவது பெறுவதற்கு ஒன்றுபடுவோம்

மகிந்த ஆட்சி தொடர்வதே தழிருக்கு நன்று என்று சொன்னபோது என்னை பலபேர் திட்டினார்கள்.

தற்போதைய சுதந்திர தின உரை இன்னும் கொஞ்சம் உறுதுணையாக அமைந்திருக்கின்றது.

கருணாநிதிபோல் தருகிறேன் தருகிறேன் என்பவனைவிட. தரமாட்டேன் எனும் ஜெயா பரவாயில்லை என்ற வாதத்தை எதிர்த்து. மகிந்தவை போக்குவதற்கு சரத்தை தெரிவோம் என்றவர்களின் தற்போதைய கருத்து எதுவாகுமோ?

வஞ்சம் தீர்ப்பதில் தமிழர்களை வெல்ல எவராலும் முடியாது.

குட்ட குட்ட குனியவில்லை என்று ஆதங்கபடுகின்றீர்களா?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த ஆட்சி தொடர்வதே தழிருக்கு நன்று என்று சொன்னபோது என்னை பலபேர் திட்டினார்கள்.

தற்போதைய சுதந்திர தின உரை இன்னும் கொஞ்சம் உறுதுணையாக அமைந்திருக்கின்றது.

கருணாநிதிபோல் தருகிறேன் தருகிறேன் என்பவனைவிட. தரமாட்டேன் எனும் ஜெயா பரவாயில்லை என்ற வாதத்தை எதிர்த்து. மகிந்தவை போக்குவதற்கு சரத்தை தெரிவோம் என்றவர்களின் தற்போதைய கருத்து எதுவாகுமோ?

தருவன் என்று சொலி போட்டு தராமல் விடுவதிலும், தரமாட்டேன் என்று சொல்லி தராமல் விடுவதிலும் என்ன வேறு பாடு இருக்கு யாருமே தரப்போவதில்லை என்று ஆன பின்னால் சரத்தை விட மகிந்தர் எப்படி உசந்தவர் நேர்மையாக தரமாட்டேன் என்ற படியாலா?

மொத்தத்தில் பூச்சியம் இதில் என்ன உசத்தியும் தாழ்ச்சியும் இருக்கு? :rolleyes::lol:

சர்வதேசம் வந்து ஏதாவது தரும் என எதிர்பாக்கிறீர்களா? ரெம்ப நல்லவர் போல் தெரியுது எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாங்க, :D:lol::lol:

Edited by சித்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.