Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் பிறந்த அனைவருமே துரோகிகள் , என முத்திரை குத்தும்.....

Featured Replies

யாரோ ஒரு பன்னாடை எழுதியிருக்கும் கட்டுரைக்கு இவ்வளவு விவாதமா? கட்டுரை எழுதியவனே இங்கு பிரதேசவாதத்தைத் தூண்டிவிட்டிருக்கிறான். சொல்லியவர்களைப் பகிரங்கப்படுத்தாமல் கொழுத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறான்.

யாரோ ஒரு பன்னாடை எழுதியிருக்கும் கட்டுரைக்கு இவ்வளவு விவாதமா? கட்டுரை எழுதியவனே இங்கு பிரதேசவாதத்தைத் தூண்டிவிட்டிருக்கிறான். சொல்லியவர்களைப் பகிரங்கப்படுத்தாமல் கொழுத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறான்.

சக தமிழனை மதிக்க தெரியாத நீங்கள் சொல்கிறீர்கள் ஐயோ சிங்களவன் எங்களை ஒழுங்காக நடத்தேலை எண்டு.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும், சில நேரம் ஒருவருடைய கருத்தை ஏற்க முடியாது இருக்கும், அதே போல நீங்கள் சொல்லும் கருத்தை எனக்கு ஏற்க முடியது இருக்கலாம். கருத்து ஏற்புடையதில்லை என்றால் அதில் என்ன தவறு என்று எடுத்து சொல்ல முயலுங்கள். முடியவில்லையா? கருத்தை சொல்லாது மூடி கொண்டிருங்கள். அதை விட்டு விட்டு கருத்து எழுதியவரை/ கட்டுரை வரைந்தவரை தரங்கெட்ட விதமாக தனிப்பட்ட தாக்குதல் செய்ய வேண்டியதில்லை.

நடந்து முடிந்த சிறி லங்கா ஜனாதிபதி தெர்தலில் என்ன நிலையை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்திருக்க வேண்டும் என்பதில் பலருக்கு/ சிலருக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது. மகிந்த போரை உத்தரவிட்டதை நடத்தி கொடுத்தது சரத் பொன்சேகா. இதில் இரண்டு பேருமே தமிழர்களின் விரோதிகள் தான்.

ஒரு சிலர் சொல்வது இருவருமே கெட்டவர்கள், எனவே தமிழர்கள் தெர்தலை பகிஸ்கரித்திருக்க வேண்டும் என்று. சரத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து துரோகம் இழைத்து விட்டது. ஆகவே சம்பந்தர் துரோகி....

சரி தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிஸ்கரிக்கிறது என்று வைத்து கொள்வோம், அப்போது என்ன நடக்கும்.

இங்கு கருத்தெழுதும் எத்தனை பேர் 94/ 95 சந்திரிகாவின் ஜனாதிபதி தேர்தல் நேரம் ஊரில் இருந்தீர்கள்? தயா, நீங்கள் அந்த நேரம் ஊரில் இருந்தீர்கள்/ சிறி லங்காவில் இருந்தீர்கள் என்று தான் நினைக்கிறேன்.

குடா நாடு அரச கட்டுப்பாடில் இல்லை. தீவு பகுதியில் இருந்த சில நூறு பேரும், யாழில் இருந்து பெயர்த்தெரியப்பட்டு, புத்தளம் பகுதியில் இருந்த முஸ்லீம் மக்களுமே வாகளித்திருந்தனர். சில தொகுதிகளில் 90 பேர் தான் வாக்களித்திருந்தனர். மொத்தமாக விழுந்த வாக்குகள் சில ஆயிரங்கள். ஆனால் வாகளித்தவர்களில் 90- 95 % வீதமானோர் சந்திரிகாவுக்கு வாக்களித்திருந்தனர். இதையே பல ஊடகங்கள் முதற் கொண்டு, சந்திரிகாவே பல முறை சிங்கள பகுதிகளை விட தமிழ் பகுதிகளில் தான் அதிக ஆதரவை, அல்லது அதிக வீதமான வாக்கை பெற்றதாக எந்த கூச்சமும் இல்லது பிரச்சாரம் செய்ய முடிந்தது.

நெடுக்கால போவான் சொல்வது போல் அவரவரும் அவரது அரசியல் தேவைக்கு ஏற்ப வாக்கு முடிவை எடுத்தாளுவார்கள் என்பது உண்மை.

இந்த தேர்தலில் கூட்டமைப்பு பக்ஸிகரிப்பு கோரிகையை விட்டிருந்தால், பெரும்பாலான இடங்களில் மக்கள் வாக்களிக்க போய் இருக்க மாட்டார்கள். ஆனால் டக்கிலஸ், கருணாவின் கூட்டுறவளார்கள் நிச்சயம் வாக்களிக்க போவார்கள், மகிந்த 98 % வாக்குகள் தமிழ் பகுதியில் வென்றார், சிங்கள பகுதியில் கூட அவ்வளவு அதரவை கொடுக்கவில்லை. தமிழ் மக்கள் புலிகளை அழித்ததால் மகிந்தவுக்கு ஏகோபித்த,

ஆதரவை வழங்கினார்கள் என்று பிரச்சாரம் செய்யவும் வாய்ப்பாக இருந்திருக்கும்.

சரத்துக்கு வாக்களிக்க கேட்டதால், மக்கள் இருவரையும் விரும்பாவிட்டாலும், இருவரில் ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய இக்கட்டில் இப்பொது ஆட்சியில் இருப்பவ்ரை நிராகரித்திருக்கிறார்கள், அவரது கொள்கைகளை விரும்பவில்லை, தமிழ் சிங்கள மக்களின் அரசியல் தெரிவுகள் மிக மிக வெறுபட்டவை என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. என்னை பொறுத்தவரை கூட்டமைப்பு எடுத்த முடிவு சரியனதே. தனித்து போட்டியிட்டிருக்கலாம் என்பது வெறும் பம்மத்து. முன்னர் குமார் பொன்னம்பலம், பல ஜனாதிபதி தேர்தல்களில் தனித்து நின்றிருக்கிறார். அதானால் கிடைத்த பலன் பூச்சியம் தான்.

அடுத்தது இங்கு உள்ள தலைப்பு க்கு எனது கருத்து.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=68705

உண்மையில் ஊரில் இருந்த போது சரி, இப்போதும் சரி எனக்கு பழைய தலை முறை அரசியல் வாதிகளை பிடிப்பதில்லை, பழைய தலை முறைக்குள் சம்பந்தனும் அடக்கம். ஆனால் இப்போது உள்ள சூழ்னிலையில் சம்பந்தன் சொன்ன கருத்தை வைத்து துரோகி என்று புலம் பெயர்ந்திருந்து, உயிருக்கு எந்த பயமும் இல்லாது கோண்டு சொல்லுவோரை பார்க்க சிரிப்பாக தான் வருகிறது. அங்கு இப்பொதுள்ள சூழ் நிலையில் யாரவது தமிழீழம் தான் தீர்வு, அதற்கு வாகளியுங்கள் என கேட்பது, தமிழர்களுக்கு எந்த ஒரு அரசியல் தலமையும் இல்லாது அனாதைகள் ஆகுவதற்கு சமம். அப்படி கேட்பவர்கள் ஒன்றில் கொல்லப்படுவார், அல்லது சிறையில் தள்ள படுவார்கள், அல்லது குடியுரிமையை பறித்து நாடு கடத்தப்படுவார்கள். பிறகென்ன யாழில் டக்கிளஸ் 11 தொகுதியிலும் வெல்லுவார், வன்னியில் 5 இல் 4 ஐ சித்தார்த்தன் வெல்லுவார், கிழக்கை கருணாவும் பிள்ளையானும் பங்கு போட்டு கொள்ளுவார்கள். இதுதான் புலம் பெயர் தமிழரின் உள்ளம் கனிந்த விருப்பம் என்றால் எனக்கு வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை.

இல்லை சம்பந்தர், கூட்டமைப்பு துரோகி என்று இங்கிருந்து சொல்லும் துணிவுள்ள ஆக்கள் கூட்டக சிறிலங்காவுக்கு போய் தமிழீழத்துக்கு நாங்கள் வக்கு கேக்கிறம் என்று சொல்லி தேர்தலில் நிலுங்கோ. அது மிக சிறப்பாக இருக்கும்.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது இங்கு உள்ள தலைப்பு க்கு எனது கருத்து.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=68705

உண்மையில் ஊரில் இருந்த போது சரி, இப்போதும் சரி எனக்கு பழைய தலை முறை அரசியல் வாதிகளை பிடிப்பதில்லை, பழைய தலை முறைக்குள் சம்பந்தனும் அடக்கம். ஆனால் இப்போது உள்ள சூழ்னிலையில் சம்பந்தன் சொன்ன கருத்தை வைத்து துரோகி என்று புலம் பெயர்ந்திருந்து, உயிருக்கு எந்த பயமும் இல்லாது கோண்டு சொல்லுவோரை பார்க்க சிரிப்பாக தான் வருகிறது. அங்கு இப்பொதுள்ள சூழ் நிலையில் யாரவது தமிழீழம் தான் தீர்வு, அதற்கு வாகளியுங்கள் என கேட்பது, தமிழர்களுக்கு எந்த ஒரு அரசியல் தலமையும் இல்லாது அனாதைகள் ஆகுவதற்கு சமம். அப்படி கேட்பவர்கள் ஒன்றில் கொல்லப்படுவார், அல்லது சிறையில் தள்ள படுவார்கள், அல்லது குடியுரிமையை பறித்து நாடு கடத்தப்படுவார்கள். பிறகென்ன யாழில் டக்கிளஸ் 11 தொகுதியிலும் வெல்லுவார், வன்னியில் 5 இல் 4 ஐ சித்தார்த்தன் வெல்லுவார், கிழக்கை கருணாவும் பிள்ளையானும் பங்கு போட்டு கொள்ளுவார்கள். இதுதான் புலம் பெயர் தமிழரின் உள்ளம் கனிந்த விருப்பம் என்றால் எனக்கு வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை.

இல்லை சம்பந்தர், கூட்டமைப்பு துரோகி என்று இங்கிருந்து சொல்லும் துணிவுள்ள ஆக்கள் கூட்டக சிறிலங்காவுக்கு போய் தமிழீழத்துக்கு நாங்கள் வக்கு கேக்கிறம் என்று சொல்லி தேர்தலில் நிலுங்கோ. அது மிக சிறப்பாக இருக்கும்.

இந்த சம்பந்தரின் பேச்சு அரசியல் சாணக்கியமானது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. தனிநாட்டுக் கோரிக்கையை நான் ஒரு போதும் ஆதிகரிக்கவில்லை என்பது அவரின் தனிப்பட்ட அரசியல் அங்கீகாரத்திற்காக அவர் சொல்லிக் கொண்டதாகவே தெரிகிறது. ஆனால் இவரின் இந்தக் கருத்தை வைத்து இதுதான் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று நம்ப சிங்களம் தயாராக இல்லை. அதேபோல் சம்பந்தனின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடே தமிழ் மக்களின் நிலைப்பாடும் அல்ல.

டக்கிளஸ்.. சித்தார்த்தன்.. கருணா.. வரதராஜப் பெருமாள்.. இவர்கள் சிங்கள.. இந்திய கூலிகள்.. அடியாட்கள். அரச ஆதரவுள்ள இவர்கள் நினைப்பதைச் செய்ய அரசுகள் ஆதரவளிக்கும். கடந்த பொதுத்தேர்தலிலும் கூட விடுதலைப்புலிகள் பகிரங்கமாக கேட்டுக் கூட அதற்கு மக்கள் செவிமடுத்து வாக்களித்தும் கூட 20,000 வாக்குகளை எப்படியோ பெற்று டக்கிளஸ் என்பவர் எம்பியாகி அமைச்சரும் ஆனார்.

அடுத்து கருணா.. அவர் தேர்தலை கூட சந்திக்கவில்லை. தேசிய பட்டியல் என்ற அட்சய பாத்திரம் மூலம்.. எம் பி ஆனார். பின் அமைச்சரானார். இப்போ சுதந்திரக் கட்சியின் உப தலைவராக இருக்கிறார். இவர்கள் தமிழ் மக்களின் வாக்குகள் இன்றியே அரச கூலிகள் அடியாட்கள் என்பதால் அரசால் உயர்பதவி நிலைகளுக்கு கொண்டு வரப்பட்டவர்கள். எதிர்காலத்திலும் அரசின் தேவை கருதி கொண்டு வரப்படுவார்கள். தமிழ் மக்கள் வாக்களித்தால் என்ன இல்லா விட்டால் என்ன சிங்களப் பேரினவாதம் நினைத்தால் யாரும் அமைச்சராகலாம். அப்படித்தான் கதிர்காமரும் அமைச்சரானார். எமது போராட்டத்தினை அழிக்க பெரும்பாடுபட்டவர்களில் அதுவும் சர்வதேச அளவில் பாடுப்பட்டவர்களில் அவர் பெயர் பெற்றார். சிங்களவர்களால் கூட தலைவா என்று மதிக்கப்படுகிறார்.

இப்படியான ஒரு அரசியலையா சம்பந்தனும் விரும்புகிறார்..???! இதன் மூலம் சம்பந்தன் எதனை சாதிக்கப் போகிறார்..???! தனி நாட்டுக் கோரிக்கையை சம்பந்தன் அங்கீகரிக்கவில்லை என்றால்.. உலக நாடுகளிடம் தமிழ் மக்கள் எப்படி கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் சுட்டிக்காட்டி அப்படியான ஒரு கோரிக்கையை முன் வைக்க முடியும்..??!

பொங்கு தமிழ் மூலம் தமிழ் மக்கள் தாயகத்திலும் சரி உலகெங்கும் சரி தனிநாட்டுக்கான ஆதரவை சொன்னார்கள்.. காட்டினார்கள் தானே. மீண்டும் ஒரு வாக்குப்பதிவு மூலம் தான் அதைக் காட்ட வேண்டும் என்றில்லை. சூழ்நிலைகள் சரியாக அமைந்து ஒரு நடுநிலையான சர்வதேச மத்தியஸ்துடனான தேர்தல் வரின் தமிழ் மக்கள் மீண்டும் தனி நாட்டுக் கோரிக்கைக்காக வாக்களிக்க மாட்டார்கள் என்றில்லை. நிச்சயம் வாக்களிப்பார்கள்.

ஆனால் சம்பந்தனின் இன்றைய இந்த நிலைப்பாடு என்பது மக்களின் நிலைப்பாட்டோடு முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. மக்கள் தமது கருத்தை தெரிவிக்க சுதந்திரம் இழந்துள்ள நிலையில்.. சம்பந்தனும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது உலகம் சிங்களப் பேரினவாதத்தின் நிலைப்பாட்டை அங்கீகரிக்க இட்டுச் செல்லும் நிலையையே வலுப்படுத்தும்.

புகலிடத்தில் மக்கள் தமிழீழக் கோரிக்கைக்கு வலுச் சேர்க்க சில நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் சம்பந்தனின் இவ்வாறான குறைக்குரல்கள் எதனை சாதிக்கப் போகின்றன. அநாவசியமான சகோதரத்துவ கூவல்கள்.. எத்துணை சாத்தியம்.. சிங்களவர்கள் தமிழர்களை சகோதர்களாக நடத்துவார்களா..??! அப்படி என்றால் எதற்காக ஒரு இலட்சம் மக்களும் சந்தேக நபர்கள் 11 ஆயிரம் பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்...??! இதுதான் சிங்கள தேசம் காட்டும் சகோதரத்துவமா..???!

முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கும் போது மெளனமாக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சம்பந்தர்.. இந்தக் கூவலை அப்போதே விடுத்து சகோதர்களைக் சகோதர்கள் கொல்வதை தடுத்திருக்கலாமே...???! அப்பாவி தமிழ் மக்களை கொன்று வெற்றி கொண்டதை பட்டாசு கொழுத்தி கொண்டாடியதும் இதே சிங்களச் சகோதர்கள் தான் என்பதையும்.. அதன் பின் நிர்வாணப்படுத்தி எமது மக்களைக் கொன்றதும்.. சிறை வைத்ததும் இதே சிங்களச் சகோதரர்கள் தான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சம்பந்தனைக் காட்டிலும் தந்தை செல்வா சிங்களவர்களை அதிகம் சகோதர்களாக மதித்தவர். அப்படிப்பட்டவராலேயே சிங்களப் பேரினவாதத்திடம் இருந்து தமிழ் மக்களைக் காக்க முடியவில்லை எனும் போது.. சம்பந்தன்.. இப்படியான கூவல்கள் மூலம் எதனை எப்படி சாதிக்கப் போகிறார்..???! இல்லை இதுதான் ஜனநாயகம் என்று காட்டப் போகிறாரா..???! அல்லது இப்படிக் கூவினால் தான் சோனியா உதவிக்கரம் நீட்டி தமிழ் மக்களை இரட்சிப்பாராமா..???! நடந்தால் சுபம். நடக்கட்டும் பார்க்கலாம்..??! அல்லது நடத்திக் காட்டட்டும்...??!

Edited by nedukkalapoovan

இந்தக்கருத்தில் இருப்பது போல இனிமேல் யாரும் டக்கிளைசையோ கருணாவையோ பிள்ளையானையோ ஒருமையில் யாழில் விளிக்க மாட்டார்கள் விளித்தால் வெட்டப்படும் எண்று நம்பலாமா...??

இங்கை இனிமேல் யாரையும் துரோகி எண்றும் அழைக்க அனுமதிக்க கூடாது... காரணம் அவர்களுக்கும் தமிழர்களில் ஆதரவாளர்கள் உண்டு அவர்களின் மனதையும் அது புண்படுத்தும்...

நான் இதை ஆமோதிக்கிறேன் ,அவர்களும் தமிழர்கள்தானே,அவர்களாலும் நன்மையடைந்த டமிழ்ஸ் இருக்கினம்தானே,

ஆயுதம் ஏந்தி களத்தில நின்ற சூரன்கள் எல்லோ.

ஜனநாயகம் என்று காட்டப் போகிறாரா..???! அல்லது இப்படிக் கூவினால் தான் சோனியா உதவிக்கரம் நீட்டி தமிழ் மக்களை இரட்சிப்பாராமா..???! நடந்தால் சுபம். நடக்கட்டும் பார்க்கலாம்..??! அல்லது நடத்திக் காட்டட்டும்...??!

நடத்திக்காட்ட முடியாது,வேணுமென்றால் கூவிக்கொண்டு அரசியல் நடத்தலாம்

சம்பந்தர், நாம், தமிழீழம் கேட்கவில்லை, பிரச்சனைக்காரர் பிரபாகரன் தான் தமிழீம் கேட்கின்றார். என அனைத்துலக சமூகத்தின் கைகளைக்குலுக்கிக் கதைக்கும் போது சொல்லிவந்த கருத்தை இப்போது எமக்குச் சொல்லியிருப்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரையின் உள் நோக்கம் தாயக மக்களையும் புலம் பெயர் மக்களையும் பிரிக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டதாகும்.பிரதேசவாதம் என்பது இல்லை என்பதை xட்டு மொத்த மக்களும் பிரதேசவாதத்தை பேசியவர்களை நிராகரித்ததின் மூலம் வடக்கு கிழக்கு மலையகம் உட்படக் காட்டியிருக்கிறார்கள்.Njர்தலில் மக்கள் தங்கள் ஒரே உள்ளக் கிடக்கையை ntt;வேறு பிரதேசத்தில் ntt;வேறு வித்தில் காட்டுவது வரலாறு சொல்லும் பாடம். வடபகுதியில் தேர்தலைப் புறக்கணிப்பு மூலம் காட்டியதை (புறக்கணிக்காத மக்கள் என்ன நிலையை எடுத்தார்களோ அதே நிலைப்பாட்டை கிழக்கிலும் )கிழக்F வாழ் மக்கள் வாக்களிப்பதன் மூலம் காட்டியிருக்கிறார்கள். இதில் நாம் நியாயமாகச் சிந்திக்கவேண்டும்.கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு xரு இயல்பான அச்சம் உண்டு. அதாவது தாம் வாக்களிக்காத பட்சத்தில் மூவின மக்களும் வாழும் பிரதேசத்தில் தங்கள் பிரதிநிதியாக ஒரு சிங்களவனோ முஸ்லிமோ வரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.ஜனாதிபதித் தேர்தலில் Kக்கிய வேட்பாளர்கள் இருவரும் சிங்களவர்களாக இருந்த போதிலும் ஒட்டு மொத்த தமிழர்களின் கருத்தே தq;களின் கருத்து என்றும். பேரினவாத்திற்கு துணைபோகும் துரோகிகளை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் காட்டியிருக்கிறார்கள்.தமிழர்களைக் கூறுபோடும் இப்படியான கட்டுரைகளை கண்டிப்பாக தமிழர்கள் நிராகரிப்பார்கள்.

Edited by புலவர்

சக தமிழனை மதிக்க தெரியாத நீங்கள் சொல்கிறீர்கள் ஐயோ சிங்களவன் எங்களை ஒழுங்காக நடத்தேலை எண்டு.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும், சில நேரம் ஒருவருடைய கருத்தை ஏற்க முடியாது இருக்கும், அதே போல நீங்கள் சொல்லும் கருத்தை எனக்கு ஏற்க முடியது இருக்கலாம். கருத்து ஏற்புடையதில்லை என்றால் அதில் என்ன தவறு என்று எடுத்து சொல்ல முயலுங்கள். முடியவில்லையா? கருத்தை சொல்லாது மூடி கொண்டிருங்கள். அதை விட்டு விட்டு கருத்து எழுதியவரை/ கட்டுரை வரைந்தவரை தரங்கெட்ட விதமாக தனிப்பட்ட தாக்குதல் செய்ய வேண்டியதில்லை.

‘மட்டக்களப்பில் பிறந்த அனைவருமே கருணா குழுவினர், துரோகிகள்’ என முத்திரை குத்தும் புலம்பெயர்வாழ் தமிழ்த் தேசியவாதிகள்(?) சிலர் இதன் பிறகாவது தமது திருவாய்களை மூடிக் கொள்ள வேண்டும்.

யாரிந்தத் தேசியவாதிகள். வெளிப்படுத்தவேண்டும் அவ்வாறு வெளிப்படுத்தாமல், தான் போனபோக்கில் சொல்லிவிட்டு, அதனைப் புலம் பெயர்ந்த தமிழ்த் தேசியத்தின் மீது சுமத்தும் கருத்தை ஆமோதிக்கும் நீங்கள்தான் மூடிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு கருணாவால் முடியாமல் போனதை, புலம்பெயர்ந்த தமிழ்த்தேசியவாதிகளா செய்துவிடப் போகிறார்கள்.

தன்னுடைய செயற்பாட்டைத்தான் இங்கு கட்டுரையாளர் தேசியவாதிகள் சொல்கிறார்கள் எனக் கூறித் தன்னை ஒழித்திருக்கிறார். தனக்கு அவ்வாறானவர்களை வெளிப்படுத்தத் தகுதியில்லாவிட்டால் இப்படியொன்றை எழுதாமலேவிட்டிருக்கலாம். அவ்வாறான ஒரு கட்டுரை போராட்ங்களில் தேசியத்தில் தம்மை இணைத்துக் கொண்ட மட்டக்களப்பு மக்களை இழிவுபடுத்தும் ஒன்றாகத்தான் நான் பார்க்கிறேன்.

அதற்குவக்காலத்து வாங்காமல் நீங்களும் மூடிக்கொண்டிருப்பது சாலப் பொருந்தும்.

தற்போது அண்ணளவாக வட கிழக்கில் தமிழர் எட்டு சத வீதத்திலும் குறைவு.ஏனெனில், கொழும்பில் வாக்காளர் பதிவு மற்றும் வெளிநாடு சென்ற காரணங்கள் பெரிய அளவாக கூறப்படுகின்றன.

இந்த எட்டு வீதத்தினரிடையே சொல்லொணா பிரிவுகள்,பிரதேச வாதங்கள்,தன்னிலை அறியாது பிதற்றுவது இப்படி ஏராளம்.அத்துடன் வெளிநாட்டை சொர்க்கம் என்று மற்ற தலைமுறைக்கு சொல்ல முனைதலும் ஈழம் கிடைக்குமட்டும் எமக்கு அங்கு அலுவலில்லை என்று மனைவியர்க்கு பயந்து குளிரில் ஒழிந்திருத்தலும் எமது இனத்தின் சாபக்கேடு.

சிங்களவனை பாருங்கள் எவ்வளவோ உயிரிழப்பை சந்தித்தும் கலங்காது எம்மை அழித்துக்கொண்டே தானும் அழியப்போகின்றோம் என்று தெரிந்தும்)முள்ளிவாய்க்கலில் சிலை நிறுவி,கிளிநொச்சியில் புத்தருக்கு கோவில்கள் பல கட்டுகின்றான்.அவனுள் தமிழனை அழித்தல் என்பதில் எவ்வித முரண்பாடுமில்லை.அந்த ஒரு நிலையில் ரணில்,பொன்சேகா,சந்திரிக்கா,சோமவன்ச...இன்னும் அனைவரும் நண்பர்கள்.இன்று அவன் மோதிக்கொள்வதற்கு காரணம் உண்டு.ஏனெனில்,அதிகமாக தமிழனை படுகொலை செய்தவன் யாரென்பதில் போட்டி.

எம் நிலை?

எங்களிடையே ஒருமித்த கருத்து என்றைக்குமே வரப்போவது இல்லை.இது சிங்களவனுக்கு நன்கு தெரியும்.

விடுதலை புலிகளின் முடிவோடு ஈழம்,அதிகாரப்பகிர்வு,சுய நிர்ணயம்,பாரம்பரிய பூமி,இணைந்த மாகாணங்கள்,..மற்றும் சுயாட்சி போன்றவையும் முடிந்து விட்டாயிற்று.

இதன் பின்பும் நாம் தோற்றுபோனவர்களின் உளவியலில் உள்வாங்கப்பட்டு அடித்துக்கொள்வதோ வேதனையிலும் வேதனை.

எங்குதான் பிரதேச வேறுபாடு இல்லை..மட்டக்களப்பில் இல்லாததா?ஊருக்கு ஊர் அடிபாடுகள்.கோயிலுக்கு கோயில் வெட்டுக்குதும் கரணமும்.யாழ்பாணத்திலும் இதேநிலைமைதான்.முஸ்லிம்களிடத்திலும் அதேதான்.

சாதிக்க வேண்டுமானால் இவை போன்றவற்றை கடக்க வேண்டும்,ஆனால் உள்ளதை ஒருத்தர் கூறும் போது எமக்குள் சத்தியசோதனை நடாத்தி பார்க்கவேண்டும்.அதை விடுத்து கருத்து கூறியவரை கேவலப்படுத்துதல் எதிரியை பலப்படுத்தும்.

ஒற்றுமையாக இருக்க வேண்டும், பலமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் சாத்தியமற்றுப் போவது இது போன்ற பிரதேசவாதக் கருத்துக்களால்தான். எங்களில் உள்ள குறைகளை முன்னிறுத்திப் பிரசாரம் செய்வது இந்தக் கட்டுரையின் நோக்கம்.

பிரதேசங்களில் பற்றுடன் இருக்கும் மக்கள் தேசியத்திற்கு எதிரானவர்களல்ல. முத்ரைகுத்தும் புலம் பெயர்ந்த தமிழ்த் தேசியவாதிகளாம். இவர்களை வெளிப்படுத்தி மக்களுக்கு அடையாளம் காட்டப்பட வேண்டும். இவர்களுக்கு எதற்கு புலம்பெயர்ந்த தமிழத் தேசியவாதிகள் என்ற அடைமொழி.

இது அந்தக் கட்டுரையாளர்தான் என்பது என் எண்ணம். டக்ளஸ், ஆனந்தசங்கரி பேசாத விடயத்தை இந்தத் தமிழ்த் தேசியவாதிகள் பேசுகிறார்கள் என்றால் அவர்களை வெளிப்படுத்தி மக்களுக்கு அடையாளங் காட்டுங்கள்.

எங்கள் தமிழின ,தலைவனது இருப்பை பற்றி கேள்விகளால் சாடிவிட்டு தற்போது அந்த மாபெரும் தலைவனிடத்தில் காணப்படாத இந்த பிரதேச வாதம் எனும் தீய கருப்பொருளை இந்த நேரத்தில் எடுப்பவர்கள் எமது மக்களுக்கு என்ன லாபம் என ஆராயவேண்டும்.

தமிழின ஒற்றுமையை குலைக்கும் இந்த இந்துத்துவ பார்ப்பன கொள்கைகளில் ஊறி திளைத்த கருத்தியல் வாதங்களில் ஒன்றான கீழைத்தேய பிரதேசவாத சிந்தனை அடியோடு களையப்பட்டால் எம்மக்கள் தாங்களாகவே சற்று ஓய்வெடுக்க உதவி புரியும்.

இந்த பிரதேசவாத கருத்து உண்மையில் ஆரோக்கியமானதே,அது மற்றவரை காயப்படுத்தாதவரைக்கும்.தனது பிரதேசத்தில் பற்று இல்லாதவன் உண்மையான தமிழ் தேசியவாதியாக இருக்கமுடியாது.தனது பிரதேசம் எனும்போது அதனை சிங்களன் ஏற்படுத்திய மாவட்ட வரையறை தாண்டி விரிந்த மனதுடன் எங்களது தமிழீழ எல்லையாக கொள்ளவேண்டும்.

இந்த கட்டுரையாளர் என்னை பொறுத்தவரையில் குறுகிய வட்டத்திற்குள் நிற்பவராகவே தென்படுகிறார்.மேலும்,சூசகமாக குறிப்பிடாமல் மாற்று சிந்தனையுடன் இருக்கும் பிரிவினரை பெயர் கொண்டு அழைக்கலாமே!தன்னின சேர்க்கையாள்ர்களே தங்களை துணிவாக வெளிப்படுத்தும் காலமிது!

இல்லை என்னுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது நீர் எந்த இடமமெண்டு கேட்பார்கள் ,மட்டக்களப்பு என்பேன் பின்னர் என்னிடம் அவர்கள் பேசும் விதம் நழுவல் பேச்சாகத்தான் இருக்கும் சற்றுநேரத்தில் அவர்கள் என்னுடன் பேசமாட்டார்கள்...ஒரு சிலர் மட்டுமே இப்படி என்றில்லை நான் சந்தித்த 50 % பேர் இப்படித்தான்.

தராக்கி! உங்கள் கூற்று உண்மையில் எனக்கு கவலையாகவே உள்ளது. இந்த நிலைக்கு நீங்களும் (சிறிதளவிலாவது) காராணம் போல் உள்ளது - நீங்கள் அவர்களை யாழ்ப்பாணத்தவர் என்று பார்ப்பதையும் விட்டுவிடுங்கள்.

இவ்வளவு அழிவுகளின் பின்னர், புத்தி வராமல் எம்மவர்களை புறக்கணிக்க முயற்சிப்பதும், பிரதேசவாதங்களை முன்னிறுத்துவதும் கவலையானவை.

நாம் என்ன விலை கொடுத்தாவது தமிழரின் ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும். இல்லையெனில் எதிர்காலம் கேள்விக்குறியே!

யாழ் மண்ணில் பிறந்து வளர்ந்த நான், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகள் பெரும்பாலானவற்றுக்கு சென்று வருபவன். இதனால் மட்டக்களப்பு, மலையாக நண்பர்கள் பலர் உண்டு. கடந்த 6 மாதங்களில் நேரடியாக உணர்ந்த, தெரிந்துகொண்ட இரண்டு விடயங்கள்:

(1) ஒருதடவை கொழும்பில் வன்னி மக்களுக்கு கொடுப்பதற்கான பொருட்களை பொதி செய்து முடிக்க நள்ளிரவாகிவிட்டது. நான் தங்கியிருந்த இடத்துக்கு (4 km) நடந்து போகவேண்டிய எதிர்பாராத சூழ்நிலை. ஆள்நடமாட்டம் அற்ற வீதியில் தனியாக சென்றுகொண்டிருந்தேன்.

என்னை கடந்து சென்ற வெள்ளை வான், சில வினாடிகளின் பின்னர் என்னருகில் வந்து நின்றது. யோசனையுடன், வானைப் பார்க்க, ஓட்டுனர் "எங்கை அண்ணை இந்த நேரத்தில் ... " என்று கேட்டார். இருளாக இருக்க அவரை அடையாளம் தெரியாது முழித்தேன். உள் விளக்கை போட்டபடி மீண்டும் "எங்கே போகிறீர்கள்" என கேட்டார். சில வினாடிகளில் எங்கோ பார்த்த முகம் போல இருந்தது - அவர் மட்டும் தான் வானில் இருந்தார் - விபரம் சொன்னார் - நாம் மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவிகள் வழங்கிய போதும், சுனாமி காலத்திலும் சில தடவைகள் வாகன சாரதியாக இருந்து எமக்கு உதவிய மட்டக்களப்பு இளைஞர் அவர். எனக்கும் முழு தைரியம் வந்தது. விபரங்களை கூறினேன். வற்புறுத்தி என்னை தங்கவேண்டிய இடத்தில் விடுவதாக கூற நானும் (வழமையாக உதவிகேட்க தயங்குபவன்) அரை மனதுடன் ஏறினேன்.

வழியில் வன்னி மக்களின் அவலத்தை, நிலவரங்களை அக்கறையோடு கேட்டபடி வந்தார். களைத்துப்போயிருந்த நான் "என்ன நீங்கள் சென்ற வருடம் மட்டக்களப்பில் பார்த்திருப்பீர்களே... அதைப்போல ..." என்றேன். உடன் ஆவேசத்துடன் மறுத்த அவர் "அப்படியில்லை அண்ணை!. மட்டக்களப்பில் எம்மக்களுக்கு நடமாடும் சுதந்திரம், பிறர் உதவி வழங்கும் சுதந்திரம் ... எல்லாம் இருந்தது. ஆனால் இப்போது வவுனியாவில் எம்மக்களை முள்ளுக்கம்பிக்குள் எல்லோ அடைத்து வைத்து கொடுமை செய்கிறார்கள். ...." என்றார் என் முகத்தில் அடித்ததைப்போல். சாரதியான அவரின் ஆழமான - பிரதேசம் கடந்த தமிழ் உணர்வுகள், பாசப்பிணைப்பு ... என்மனதில் பதிந்துவிட்ட ஒன்று.

(2) இடம்பெயர்ந்த மக்களின் வதை முகாமினுள் நாம் சேகரித்து (பல சவால்களை எதிர்கொண்டு)கொண்டுசென்ற அத்தியாவசிய பொருட்களை வழமைபோல் விநியோகித்துக்கொண்டிருந்தோம். காலையில் போனால் மாலைவரை சாப்பாடு இல்லாமல், தண்ணீர் மட்டும் குடித்தபடி, இயங்குவது எமது குழுவினருக்கு வழமையாகிவிட்டது.

மாலையில் ஒரு பகுதியில் விநியோகித்துக்கொண்டிருக்கும் போது, பலவழிகளில் நன்கு அறிமுகமான ஒருவர் (யாழ் நகரில் பிறந்து வளர்ந்தவர் - 1980 மத்தியில் இருந்து இறுதிநாள் வரை களப்பணிகளில் ஈடுபட்ட வீரர்) என்னை அடையாளம் கண்டு, தனது கூடாரத்தில் தேநீர் அருந்த வரும்படி அழைத்தார். அவரது கூடாரத்தில் ஒருசில நிமிடங்கள் இருந்து பலவற்றை கதைத்த போது, அவரது மனைவி சொன்ன ஒரு விடயம் எனக்கு ஆச்சரியத்தை தந்தது. சிலவாரங்களின் முன்பு அங்கு விஜயம் செய்த முன்னால் கிழக்கு தளபதி - இன்று சிங்கள அரசில் அமைச்சராக இருப்பவர் - பலருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, இடையிடையே அருகில் இருந்த ஒருசிலரிடம் - மெதுவாக "ஆளையாள் காட்டிக்கொடுத்து, வீணாக அழிந்து போகாதீர்கள்" என்று 5, 6 தடவைகள் கூறியதை தான் கேட்டதாக அவரின் மனைவி கூறினார். என்னதான் கேடுகெட்டு குட்டிசுவரானர் என்றாலும், அந்த வார்த்தைகளில் இனப்பற்று இருந்ததாகவே நான் நினைத்துக்கொண்டேன். (அதனால், அவரது 3 வருட செயற்பாடுகளை எந்தவிதத்திலும் நியாயப்படுத்தவே முடியாது.)

ஒவ்வொரு தமிழனிலும் எங்கோ ஒரு மூலையில், மிகச் சிறிய அளவிலேனும் தமிழுணர்வு இருக்கும். (ஒரு மிகச்சில விதிவிலக்குகள் இருக்கலாம்). அந்த சிறிய உணர்வை வளர்த்து, அனைவரையும் அனைத்துப்போகத் தவறியமை, ஒற்றுமையை கட்டியெழுப்ப தவறியமை - முன்னிற்கும் தலைமைகளினதும், அறிஞர் மற்றும் பெரியோர்களினதும், ஊடகவியலாளர்களினதும், ஆசிரியர்களினதும், எம்மைப்போல் ஊடகங்களில் தைரியமாக கருத்துக்களை வெளிப்படுத்துபவர்களினதும் தவறுதான்.

எம்மவர்களை தாக்கும் போது பொறுப்புடன், யோசித்து, சரியான வார்த்தைகள் கொண்டு தாக்குங்கள். எம்மவர்கள் தவறுகளை தயங்காமல் பண்புடன் சுட்டிக்காடுங்கள்.

எதிரியை சகல வளங்களையும் கொண்டு தாக்குங்கள். வலிமையாக தாக்குங்கள்.

"தமிழின எதிரிகளை தாக்க பயந்தவர்கள், கீழான சிந்தனைகள் உடையவர்கள், கோழைகள் தான் பொறுப்பின்றி பிரதேசவாதத்தை தூண்டும் கருத்துக்களையும், எம்மவர்களை அர்த்தமின்றி தாக்கும் கருத்துக்களையும், வெளிப்படுத்துவர்" என்று என்னருகில் தற்போது இருக்கும் ஒரு மனோதத்துவ வைத்தியர் கூறுகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.