Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவுக்கு மாணவர்களுக்கான விசாக்களில் வருவோருக்கு கடுமையான கட்டுப்பாடுகள்! - பிரிட்டன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்கள் பிட்டனில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் அத்தகைய விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதென பிரிட்டன் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அலன் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இரண்டு வாரத்திற்குள் இப்புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவிருக்கின்றன.

மாணவ விசாக்களை வழங்குவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு ஆங்கிலம் பேசும் ஆற்றல் இருக்க வேண்டும் என்பதும் குறுகியகால பிரிட்டிஷ் கற்கை நெறிகளுக்கு வருவோர் அவர்களில் தங்கியிருப்போரையும் தம்முடன் அழைத்து வருவதை தடை செய்தல் போன்றவை உட்பட பல கட்டுப்பாடுகள் அமுல்செய்யப்பட இருக்கின்றன என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார்.

உண்மையாக கல்வி கற்க வருவோரை இலக்கு வைத்து இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர், தொழில் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு பிரிட்டன் வருவோருக்காகவே இந்த நடவடிக்கை என்றும் கூறினார்.

தோல்வியில் முடிவடைந்த சிக்காகோ விமானக் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதம மந்திரி கோர்டன் பிரவுணின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சர் ஜோன்ஸன் மேலும் தெரிவித்தார்.

மேற்படி நத்தார் தின குண்டு வெடிப்பை நடத்தியதாக கூறப்படும் உமர் பாரூக் அப்துல் முதலாப் லண்டனில் கல்வி கற்றவர் என்றும் பிரிட்டனிலிருந்து சென்ற பின்னர் யேமனில் அல்குவைதா இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர் என்றும் பிரதமர் கூறியதன் பின்னர் இந்த மதிப்பீட்டுக்கு உத்தரவிடப்பட்டது.

2008 / 2009ம் ஆண்டு காலத்தில் பிரிட்டன் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் மாணவ விசாக்களை வழங்கியது. தற்போதைய நடவடிக்கையால் வெளிநாட்டு மாணவ விசாக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறையலாம் என்று தெரிவித்த உள்துறை அலுவலக பேச்சாளர், எவ்வாறாயினும் பல்லாயிரக்கணக்கில் வீழ்ச்சி ஏற்படும் என்று வெளியான அறிக்கைகளை நிராகரித்தார்.

ஒரு சில வாரங்களுக்குள் அமுல் செய்யப்படவிருக்கும் இந்த நடவடிக்கை தொடர்பாக சட்டம் ஒன்று இயற்ற வேண்டிய தேவை இல்லை. நேபாளம், வட இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட மாணவ விசாக்கள் அதிக அளவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் அந்நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்படும் மாணவ விசாக்கள் இடைநிறுத்தப்பட்டு ஒரு வாரத்திற்குள் மேற்படி புதிய நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உச்சவரம்பை உயர்த்துதல் பிரிட்டனுக்கு வரவிரும்பும் மாணவர்களுக்கான தகைமையில் 40 புள்ளிகளை பெறவேண்டும் என்ற தேவையை கடந்த வருடம் பிரிட்டன் அறிமுகம் செய்தது.

ஆனால் பயங்கரவாதிகளும் ஏனையோரும் இதன் மூலம் பிரிட்டனுக்குள் நுழைந்து விடுவார்களெனக் கூறி பல விமர்சனங்கள் எழுந்தன.

தற்போது கல்வி கற்கும் நோக்கத்தை தவிர்த்து வேலை செய்யும் முக்கிய நோக்கத்துடன் பிரிட்டன் வருவோரை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார்.

தற்போதைய தீர்மானத்தின்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளாவன:

* ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைத் தவிர்ந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதில் தற்போதுள்ள ஆரம்ப மட்ட அறிவிலும் பார்க்க ஜி சி எஸ் ஈ (G C S E) தரத்திற்கு சிறிது குறைந்த மட்ட அறிவையேனும் பெற்றிருக்க வேண்டும். *

பட்டப்படிப்பு மட்டத்திற்கு குறைந்த கற்கைநெறிகளை பின்பற்றுவோர் தற்போதுள்ள 20 மணிநேர வேலைக்கு பதிலாக இனிமேல் 10 மணி நேர வேலை செய்வதற்கே அனுமதிக்கப்படுவார்கள். * 6 மாதங்களுக்கு குறைந்த கற்கைநெறிகளுக்காக வருவோர் அவர்களில் தங்கியிருப்போரை அழைத்து வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் பட்டப்படிப்பு நெறிகளுக்கு குறைந்த நெறிகளை பின்பற்றுவோருடன் வரும் அவர்களில் தங்கியிருப்போர் பிரிட்டனில் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

* இவற்றுக்கு மேலாக, மாணவர்களை அனுமதிக்கும் கல்வி நிறுவனங்கள் அதி உயர் நம்பக தன்மையைக் கொண்ட அனுசரணையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் மட்டுமே அங்கு பட்டப்படிப்பு மட்டத்திற்கு குறைந்த நெறிகளை பின்பற்றுவதற்கான விசாக்கள் வழங்கப்படும்.

http://www.varudal.com

தொழில் தகமையை காட்டி - புள்ளிகள் அடிப்படையில் வரக்கூடிய வசதியை அண்மையில இலகுவாக்கி இருக்கறினம் என்று குடிவரவு திணைக்களத்தில வேலை செய்கிற ஒருவர் சொன்னார். இதன் அடிப்படையில சிறீ லங்காவில இருந்தும் நம்மவர்கள் உட்பட பலர் அண்மையில வந்ததாய் சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவிலும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். வட நாட்டு இந்தியர்களின் தொல்லைகள் தாங்க முடியாமல் இருக்கிறது. தங்களுக்குள்ளே அடித்துக் கொள்கிறது. பிறகு பழியை அவுஸ்திரெலியர்கள் மீது போடுகிறது. வேறு நாட்டவர்களுடன் எப்படிப் பழகுவது என்று தெரியாது. பழக்கவழக்கங்கள் தெரியாத காட்டு மிராண்டிகள்.

ஆஸ்திரேலியாவிலும் வருது புதிய குடிவரவுக்கொள்கை...

சரியா சொனீர்கள் கந்தப்பு... வட இந்திய மாணவர்களுக்கு முதலில் பழக்க வழக்கம் படிப்பிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவிலும் வருது புதிய குடிவரவுக்கொள்கை...

சரியா சொனீர்கள் கந்தப்பு... வட இந்திய மாணவர்களுக்கு முதலில் பழக்க வழக்கம் படிப்பிக்கவேண்டும்.

இதை இங்கே எழுதினால் அவுஸ்திரெலியா அல்லாத வேறு நாட்டில் இருக்கும் எங்கட ஆக்களில் சிலருக்கு கோபம் மூக்கில வந்துவிடும். அவை ஒருக்கா அவுஸ்திரெலியா வந்து இந்த வட இந்தியா குரங்குக் கூட்டங்களைப் பார்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவிலும் வருது புதிய குடிவரவுக்கொள்கை...

சரியா சொனீர்கள் கந்தப்பு... வட இந்திய மாணவர்களுக்கு முதலில் பழக்க வழக்கம் படிப்பிக்கவேண்டும்.

விசா நடைமுறையை கடுமையாக்கும் ஆஸ்திரேலியா!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அரசு பணி விசா நடைமுறைகளில் பெரிய மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தியர் உட்பட 20,000 விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிகிறது.

இந்த மாற்றங்கள் அமல் படுத்தப்பட்ட பின்னர், சமையலர் மற்றும் முடி திருத்துவோர் போன்ற பணிகளுக்காக ஆஸ்திரேலியா செல்வது வெளிநாட்டினருக்கு இயலாமல் போக வாய்ப்புள்ளது.

அதேபோல், ஆஸ்திரேலியாவில் இந்த வேலைகளுக்காக படித்து வரும் மாணவர்கள் மீண்டும் தற்காலிக விசா கேட்டு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். 18 மாதத்தோடு அங்கிருந்து மூட்டைக்கட்டிக் கொண்டு தாயகம் திரும்பவேண்டிய சூழலும் ஏற்படக்கூடும்.

இதையே நோக்கமாகக் கொண்டு, ஸ்கில்ட் ஆக்குபேஷன் லிஸ்ட் (SOL) எனப்படும் தொழில் பட்டியலில் முடிதிருத்தும் தொழில், சமையல் போன்ற பல தொழில்களை அப்புறப்படுத்த ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

இதுபோன்ற வேலைக்காக விண்ணப்பிக்கப்படும் மாணவர்கள் மத்தியில் தான் ஏராளமான விசா மற்றும் குடியேற்ற குளறுபடிகள் ஏற்படுவதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதோடு, இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் சம்பவங்களுக்கும் இந்த பரிவைச் சேர்ந்த மாணவர் விசாவில் வந்தவர்களே காரணம் என பரவலாக கருதப்படுகிறது.

இந்தியாவில் உள்ள வசதி குறைந்த நடுத்தர மக்களில் பலர் இதுபோன்ற பணிகளை காரணம் காட்டி, மாணவர் விசாவில் ஆஸ்திரேலியா சென்று சுலபமாக நிரந்தர குடியுரிமை பெற்றுவிடமுடியும் என கருதியிருந்தனர்.

இந்தியர் உட்பட பல நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் ஏஜென்சிக்கள் மூலமாக விண்ணப்பித்து காத்துள்ளனர். தற்போது விசா மாற்றம் நடைமுறைக்கு வந்தால், இவற்றில் சுமார் 20 ஆயிரம் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என கூறப்படுகிறது.

துபாயை நாடும் இந்தியர்கள்:

இதற்கிடையே, உயர் கல்வி கற்க துபாய் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எளிமையான மாணவர் சேர்க்கை, நல்ல வேலைவாய்ப்பு உள்ளிட்டவை காரணமாக துபாய்க்கு போகும் இந்திய மாணவர்களின் எண்மிக்கை அதிகரித்து வருகிறதாம்.

மேலும் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு பிரபல கல்வி நிறுவனங்களின் கிளைகள் துபாயில் பெருமளவில் இருப்பதும் இன்னொரு காரணம் என்கிறார்கள்.

பிலானியில் உள்ள பிட்ஸ், மணிப்பால் உயர் கல்வி நிலையம் ஆகியவற்றில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பு. அதேசமயம், துபாயில் உள்ள இவற்றின் கிளை நிறுவனங்களில் சுலபமாக இடம் கிடைத்து விடுகிறது.

இதன் காரணமாகவும் துபாயில் போய் உயர் கல்வி கற்க இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனராம்.

இதுகுறித்து இந்திய துணைத் தூதரக அலுவலக வட்டாரத்தில் கூறுகையில், இந்தியாவைச் சேர்ந்த 19 பிரபல கல்வி நிறுவனங்கள் துபாயிலும் தங்களது நிறுவனங்களை நடத்தி வருகின்றன. தற்போது துபாயிலும் வடக்கு எமிரேட்டிலும் மொத்தம் 4500 இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர் என்கிறார்கள்.

- http://thatstamil.oneindia.in/news/2010/02/09/australia-decides-harden-work-visa.html

பிரித்தானியாவின் லண்டனில் இய்ங்கும் LBC 97.3 வானொலியில் இதைப்பற்றி மக்களி்ன் கருத்து கேட்ட போது அனைவரும் சொன்னது வேலைவாய்ப்புக்கள் பறி போய் கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் பதின் மூண்று லட்ச்சம் வெளிநாட்டவருக்கு போன வருடமான 2009ல் வேலை செய்யும் உரிமை வழங்கப்பட்டு பிரித்தானியர்களுக்கு வேலை வாய்ப்பு குறைக்கப்பட்டு இருக்கின்றது... இதை நிறுத்த வேண்டும் எண்று... ஒருவேளை இதன் எதிரொளியோ என்னவோ...???

Edited by தயா

இதை இங்கே எழுதினால் அவுஸ்திரெலியா அல்லாத வேறு நாட்டில் இருக்கும் எங்கட ஆக்களில் சிலருக்கு கோபம் மூக்கில வந்துவிடும். அவை ஒருக்கா அவுஸ்திரெலியா வந்து இந்த வட இந்தியா குரங்குக் கூட்டங்களைப் பார்க்கவேண்டும்.

சொறிலங்காவுக்கு போனபோது அங்கிருக்கும் டமிலர் சிலர் வந்து இது துதியோ முறையோ எண்டு என்னிடத்தில் நாயம் கேட்டினம்.. அது ஆஸ்திரேலியாவிற கடமை இல்லோவேறு ஏனோ மூக்கால அழுதினம்.

நல்ல குடுத்தான் ஒரு குடுவல் ஊரில சனம் சாகேக்க உங்க படுத்து கிடந்துட்டு சினிமா பாத்து கிடந்திட்டு ஆஸ்திரேலியா நீதியில்லை எண்டு ஒப்பாரி வையாதேங்கோ எண்டு சொன்னது சனத்துக்கு பிடிக்கேல்ல.

கடைசியா நான் சொன்னான் இந்தியனைக்கண்டால் நாங்களே அடிப்பமேண்டு.. அதோட போத்திட்டினம்.

UK Student Visa புதிய நடைமுறைகள் புகுத்தப்படுகின்றன

மலேசிய நிருபர்

வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010\

UK Home office

பிரித்தானியாவிற்கு கல்வி கற்க செல்லும் மாணவர்கள் அதற்காக விசா பெறும் முறையில் பிரித்தானிய நாடு சில புது விடயங்களை சேர்த்துள்ளது. இதன் படி பட்டப்படிப்புக்கு கீழ் ஏதாவது கல்வியினை பெற வருபவர்கள் அல்லது ஆரம்ப கல்வியினை பெற வருபவர்கள் பிரித்தானியாவில் வேலை செய்ய முடியாது.

அடுத்ததாக ஆக குறைந்தது 06 மாத கல்வி செயற்பாட்டிற்கு வருபவர்களே தான் சார்ந்தவர்களை சுற்றுலா விசாவில் அழைக்க முடியும்.மேலும் ஆங்கில அறிவு கட்டாயமாக்கப்படுவதுடன் போதிய ஆங்கில அறிவு இல்லையாயின் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்த நடைமுறைகள் ஏப்ரல் 6ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வருகின்றது.

http://www.eelanatham.net/story/uk-student-visa-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9

  • கருத்துக்கள உறவுகள்

UK Student Visa புதிய நடைமுறைகள் புகுத்தப்படுகின்றன

மலேசிய நிருபர்

வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010\

UK Home office

பிரித்தானியாவிற்கு கல்வி கற்க செல்லும் மாணவர்கள் அதற்காக விசா பெறும் முறையில் பிரித்தானிய நாடு சில புது விடயங்களை சேர்த்துள்ளது. இதன் படி பட்டப்படிப்புக்கு கீழ் ஏதாவது கல்வியினை பெற வருபவர்கள் அல்லது ஆரம்ப கல்வியினை பெற வருபவர்கள் பிரித்தானியாவில் வேலை செய்ய முடியாது.

அடுத்ததாக ஆக குறைந்தது 06 மாத கல்வி செயற்பாட்டிற்கு வருபவர்களே தான் சார்ந்தவர்களை சுற்றுலா விசாவில் அழைக்க முடியும்.மேலும் ஆங்கில அறிவு கட்டாயமாக்கப்படுவதுடன் போதிய ஆங்கில அறிவு இல்லையாயின் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்த நடைமுறைகள் ஏப்ரல் 6ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வருகின்றது.

http://www.eelanatham.net/story/uk-student-visa-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9

இதில் ஒன்றும் பெரிசா புதிசா இல்லையே.

முன்னரும் பட்டப்படிப்பு அல்லது பட்டபின் படிப்புக்கு வருவோர் ஆங்கில அறிவிற்கு IELTS 6.0 அல்லது 6.5 அல்லது அதற்கு மேல் காட்ட வேண்டும். 20 மணி நேரம் தான் வேலை செய்ய முடியும். இப்படி இன்னோரென்ன கட்டுப்பாடுகள் இருந்தன தானே. இருக்கின்றன தானே.

ஏறக்குறைய இந்த விதிமுறைகள் எல்லாம் முன்னரும் இருந்தன. இப்போ புதிதாக சில கட்டுப்பாடுகளை ஆரம்பக்கல்வியைப் பெற வருபவர்களுக்கு போடுகிறார்கள். அது நல்லதுதான்.

இந்த நடைமுறைகள் பிரித்தானியாவுக்கு மாணவர்களாக வருபவர்களுக்கு உண்மையில் நல்லது. படிக்க ஏற்றதாக உள்ளது. இந்த நடைமுறைகளை அமுல்படுத்துவதை வரவேற்க வேண்டும்.

உண்மையில் ஏமாற்ற நினைக்கிறவன் பல வழிகளில் ஏமாற்றலாம்.

முதலில் நாட்டுக்குள் எந்த அடிப்படை அறிவும் இன்றி போலியாக நுழையும் அகதிகளை தடுத்து நிறுத்த வேண்டும். இவர்களுக்கு அரசாங்கம் செய்யும் சலுகைகள் போதும் பிரித்தானிய மாணவர்களுக்கு மேலதிக கல்வி வசதி அளிக்க. இப்போ கிட்டத்தட்ட 200,000 பிரித்தானிய மாணவர்கள் தமது பல்கலைக்கழக அனுமதிக்கான சந்தர்ப்பதை இழக்கும் நிலையில் இருக்கின்றனர். இதற்கு காரணம் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கி வந்த மானியத்தொகையை அரசு பெருமளவு குறைத்துக் கொண்டதுதான். கிட்டத்தட்ட ஒரு போலி அகதிக்கு அரசு செய்யும் செலவை விட மிகக்குறைவான செலவே மாணவர்களுக்குப் போகிறது. அகதி அந்தஸ்துப் பெற்றவர்கள் எந்தத் தராதரமும் அற்ற தங்கள் குடும்ப உறுப்பினர்களை நாட்டுக்குள் அழைத்துக் கொள்ள அனுமதிக்கின்ற நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும். ஆங்கில அறிவு கல்வி வேலைத்தகமை எதுவும் இன்றி உள்ள குடும்ப உறுப்பினர்களை நாட்டுக்குள் அழைத்து அவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் செய்யும் உதவிகளை தடுக்க உரிய நடைமுறைகளை பிரித்தானிய அரசு கொண்டு வர வேண்டும்.

அதைவிடுத்து நாட்டின் 3வது பிரதான வருவாய் மூலமாக விளங்கும் வெளிநாட்டு மாணவர்கள் மீது வெறுப்பை அல்லது கட்டுப்பாடுகளைப் போடுவது நிதி நெருக்கடியில் தவழும் பிரிட்டனுக்கு மேலும் பாதிப்பையே உண்டு பண்ணும். ஏலவே பலரும் இது குறித்து எச்சரித்திருக்கிறார்கள்.

தொழில்கட்சியின் தற்போதைய தலைமை தேர்தலை மையமாக வைத்து எதிர்கட்சிகள் குறிப்பாக குடியேற்றவாதத்தை எதிர்க்கும் கட்சிகள் கொடுக்கும் அழுத்ததிற்கு ஏற்ப மாற்றங்களைச் செய்ய முனைகிறது. ஆனால் அது அதற்கே ஆபத்தாகும் நிலையே இருக்கிறது. :lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.