Jump to content

நேசக்கரங்களை நீட்டுங்கள் யாழ்கள உறவுகளே.


Recommended Posts

பதியப்பட்டது

நேசக்கரங்களை நீட்டுங்கள் யாழ்கள உறவுகளே.

வணக்கம் யாழ்கள உறவுகளே தாயகத்தில் எங்கள் உறவுகளிற்கு உதவுவதற்காக யாழில் ஏற்படுத்தப்பட்ட அமைப்புத்தான் நேசக்கரம் என்கிற அமைப்பு. இதனூடாக யாழ்கள உறவுகளின் உதவிகளுடன் தாயகத்தில் பல உதவித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.அதன் விபரங்களை நேசக்கரம் அமைப்பின் இணையத்தளத்தினில் இன்றும் பார்க்கலாம்.இந்த அமைப்பிற்காக பலநாடுகளிலும் இருந்த யாழ்கள உறுப்பினர்கள் தொர்ச்சியாக தங்கள் பங்களிப்பினை வழங்கியிருந்தனர்..ஆனால் கடந்தவரும் ஈழத்தமிழரின் வரலாற்றில் தாயகத்தில் ஏற்பட்ட மிக மோசமான நிகழ்வுகளால் உலகத்தமிழர்கள் அனைவரிற்கும் ஏற்பட்ட மனச்சோர்வு விரக்கதி என்கிற பாதிப்புகள் போலவே யாழ்கள உறவுகளும் பாதிக்கப்பட்டதால் நேசக்கரத்தின் உதவித் திட்டத்தில் இணைந்திருந்தவர்களில் நான்உட்பட உதவிகளை நிறுத்தியிருந்தோம்..

அன்றைய மோசமான காலச்சூழலில் சிக்குண்டு போய் நேசக்கரம் குழுமமாக இருந்த எங்களிற்குள்ளும் சில கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டதாலும் நேசக்கரம் திட்டம் பாதிக்கப்பட்டதும் உண்மை. அப்படி கிட்டத்தட்ட அனைவராலும் கைவிடப்பட்டிருந்த சேக்கரம் திட்டத்தினை ஜெர்மனியில் வசிக்கும் யாழ்கள உறவாhன சாந்தி ரமேஸ் அவர்கள் தன்னுடைய விடா முயற்சியினால் தொடர்ந்தும் நேசக்கரத்தின் பெயரால் உதவிகளை தாயகத்து உறவுகளிற்கு வழங்கிக்கொண்டிருந்தார்.முன்னைய காலங்களை விட தற்பொழுதுதான் அதிகளவு தேவைகளும் உதவிகளும் தாயகத்து மக்களிற்கு தேவைப்படுவதை உணர்ந்து நானும் அவருடன் இணைந்து மீண்டும் நேசக்கரம் அமைப்பினை பலப்படுத்தும் வேலைகளிலும் புலம்பெயர் தேசத்து மக்களிடம் இருந்து உதவிகளை பெற்று தாயகத்து உறவுகளிற்கு வழங்குவதிலும் ஈடுபட்டேன். அதன் காரணமாக யாழ் இணையத்தில் நேசக்கரம் தொடங்கப்பட்டபொழுது உதவிய யாழ்கள உறவுகளின் நோக்கங்களும் அவர்களது அபிலாசைகளும் வீண் போகவில்லை. நேசக்கரம் அமைப்பினால் இதுவரை 50 ற்கு மேற்பட்ட தாயகத்தில் வாழும் உறவுகளிற்கான சுயதொழில் வாய்ப்பு திட்டங்களும்.70 மாணவர்களிற்கான தொடச்சியாக கல்விபெறுவதற்கான உதவிகளும்..பாடசாலை சீருடைகள் மற்றும் பாடசாலை பொருட்கள்.உடைகள் என்பன கிடைக்கும்படி செய்துள்ளோம்.

நேசக்கரம் அமைப்பின் உதவித் திட்டங்கள் பற்றிய விபரங்களை பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் 24 மணிநேர வானொலியான ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் இரவு 7 மணி செய்திகளின் பின்னர் எடுத்து வருகிறோம்.வானலைகளிலும் எங்கள் நிழ்ச்சியிலும் கேட்கலாம்

மற்றும் தாய் தந்தையரை இழந்த வேறு உறவுகளற்ற 5 சிறுவர்களையும் பாராமரித்து வருவதோடு யுத்தத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உடல் அவயவங்களை இழந்து போன உறவுகளிற்கான மருத்துவ உதவிகளையும் செய்துள்ளோம்.. அது மட்டுமல்லாது நேசக்கரம் அமைப்பினை ஒரு உதவி நிறுவனமாக சட்டப்படி ஜெர்மனியில் பதிவு செய்துள்ளதோடு அதற்காக தனியாக வங்கி கணக்கும் தொடங்கப்பட்டு உதவ விரும்பும் உறவுகள் நேரடியாக தங்கள் உதவிகளை நேரடியாகவே தாயகத்திற்கு எடுத்து செல்ல வழிகளை மேற்கொண்டுள்ளோம்.. எனவே யாழ்கள உறவுகளே எங்கள் கருத்து வேறுபாடுகள் எங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை வீசியெறிந்து விட்டு மீண்டும் இணைவோம் எங்கள் உதவிகளை மீண்டும் ஒருங்கிணைத்து உறவுகளிற்காக எடுத்துச்செல்வோம். கடந்தகாலத்தில் என்னுடைய அரசியல் அல்லது தனிப்பட்ட செயற்பாடுகள் கட்டுரைகளால் யாராவது மனம் நொந்திருப்பின் அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருவதோடு என் மீதான தனிப்பட்ட காரணங்களை விடுத்து உறவுகளிற்காக ஒன்றிணையுங்கள் என்று கேட்டு கொள்வதோடு.. இறுதியாக எம்மால் யாழ் வடமராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உதவி நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை நேக்கரம் இணையத்தில் பார்வையிடுவதோடு நீட்டுங்கள் உங்கள் நேச்கரங்களை

http://nesakkaram.org/

நன்றி.

This post has been edited by sathiri: Today, 09:35 PM

விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்

உறவுகளிற்கு உதவுவோம்..நேசக்கரம்.. மேலதிக விபரங்களிற்கு இங்கு அழுத்துங்கள்

http://nesakkaram.org/

http://sathirir.blogspot.com/

1

  • Replies 94
  • Created
  • Last Reply
Posted

உங்கள் பேபல் கணக்கு எல்லாம் வேலை செய்யும்தானே. அவ்வப்போது வலைத்தளம் ஊடாக எனது சிறிய பங்களிப்பை செய்கின்றேன். சாந்தி அக்கா பேஸ்புக்கிலையும் ஓர் குழுமம் ஆரம்பிச்சி இருக்கிறா. பேஸ்புக்கிலையும் தகவலை இணைச்சுவிடுங்கோ. பேஸ்புக்கில் இருக்கிற நேசக்கர குழுமத்தில இணைய => http://www.facebook.com/group.php?gid=338136421713

Posted

மீண்டும் கை கொடுத்ததற்கு நன்றிகள் மச்சான்..அதே நேரம் யாழின் கனடா உறுப்பினர்களாக இருந்த வல்வை லிங்கம்..ஆதி..வல்வை சகாரா.ரசிகை .ரமா. மணிவாசகன்..காவியா..தமிழச்சி.கண்மணி அக்கா..நிழலி..மற்றும் இங்கு பெயர் விடுபட்டு போன அனைவரும் மீண்டும் இணையவேண்டும் என்பதே எனது விருப்பமும் ஆகும் நன்றிகள்.

இந்தத் தாயின் வேண்டு கோளை ஒரு நிமிடம் கேளுங்கள்.

Posted

நேசக்கரம் அமைப்பு என்பது சுமார் மூன்று ஆண்டு களிற்கு முன்னர் சில நண்பர்களால் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு உதவி அமைம்பாகும். இந்த அமைப்பின் நோக்கம் தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கபட்ட எமது உறவுகளிற்கான உதவிகளை வழங்குதல்..அவற்றில்

1) போரினால் உறவுகளை இழந்த பின்னைகளை பராமரித்தல் மற்றும் அவர்களிற்கான கல்வி உதவிகளை வழங்குதல்.

2)குடும்பத் தலைவரை இழந்து பொருளாதார வசதிகள் இன்றி தவிக்கும் பெண்களிற்கான சுய வேலைவாய்ப்பத் திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தல்

3)யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உடல் அவயவங்களை இழந்தோரிற்கான வைத்திய உதவிகளை வழங்குதல்.

4)பண வசதியின்றி உயர்கல்வியை தொடர முடியாது போயுள்ள மாணவர்களிற்குஉயர் கல்லவியினை தொடர உதவி செய்தல்.

இவை எமது முக்கிய நோக்கங்களாக இருக்கின்றது..

முக்கிய விடயங்கள்

எமது அமைப்பானது நிதி சேகரிப்பு விடயங்களை செய்வதில்லை நாங்கள் எங்களிடம் நிதி தாருங்கள் என்று யாரிடமும் கேட்பதில்லை.. எங்களது செயற்பாடு என்பது தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டு உண்மையாக யார் யாரிற்கெல்லாம் உதவிகள் தேவைப்படுகின்றதோ அவர்களை தேடி இனம்காணுதல்..

அப்படி தேடி இனம் கண்டவர்களையும் வெளி நாடுகளில் உதவ விரும்புவர்களையும் இனம் கண்டு உதவி பெறுபவர்களிற்கும் உதவ விரும்புபவர்களிற்குமான ஒரு தொர்பாளர்களாகவே நாங்கள் செயற்படுகின்றோம்..தொடர்புகளை நேடியாக ஏற்படுத்திக் கொடுப்பதுதான் எமது வேலை.

எமது அமைப்பு எந்த அரசியல் சார்ந்ததாகவே அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் செய்கின்ற அமைப்புகளுடனும் இணைந்து செயற்படுவதில்லை

அதே நேரம் மத நிறுவனங்கள் அல்லது மதம் பரப்ப விரும்பும் அமைப்புக்களுடனும் இணைந்து செயற்படுவதுமில்லை..ஆனால் மதஅமைப்புக்கள் மனமுவந்து உதவிகளை மட்டுமே செய்ய முன்வந்தால் அதனை வரவேற்போம்..

தொடர்புகளிற்கு

சிறி பிரான்ஸ்....06 11 14 94 70.....வெளி நாடுகளிலிருந்து 00 33 61 11 49 470

sri

241.b.d.montboron

06300 nice

france

e.mail.sathiri@gmail.com

சாந்தி..யெர்மனி.....06 7 81 70 723 வெளி நாடுகளிலிருந்து 0 49 67 8 17 07 23

santhy ramesh

haupt str.210

55743 idar-oberstein

germany

e.mail.nesakkram@gmail.com

Posted

உங்கள் பேபல் கணக்கு எல்லாம் வேலை செய்யும்தானே. அவ்வப்போது வலைத்தளம் ஊடாக எனது சிறிய பங்களிப்பை செய்கின்றேன். சாந்தி அக்கா பேஸ்புக்கிலையும் ஓர் குழுமம் ஆரம்பிச்சி இருக்கிறா. பேஸ்புக்கிலையும் தகவலை இணைச்சுவிடுங்கோ. பேஸ்புக்கில் இருக்கிற நேசக்கர குழுமத்தில இணைய => http://www.facebook.com/group.php?gid=338136421713

மச்சான் நீங்கள் அனுப்பிய பங்களிப்பு கிடைத்தது.

Posted

நேசக்கரம் சுயதொழில் ஊக்குவிப்புக்கான கொடுப்பனவு 04.02.10 அன்று வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வுக்கு வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையின் அதிபர் திரு.கண்ணதாசன் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்வில் நேசக்கரம் இலங்கைக்கான இணைப்பாளர் திருமதி.கமலாதேவி சதாசிவம் அவர்கள் கலந்து கொண்டு நேசக்கரம் பங்களிப்புகளை வழங்கி மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி இந்து மகளீர் பாடசாலையின் ஆசிரியர் திரு சே. கணேசலிங்கம் , வதிரி வடக்கு மெ.மி.த.கா பாடசாலை அதிபர் திரு.க.இராஜதுரை , மேலைப்புலோலி சைவப்பிரகாசா வித்தியாலய அதிபர் மு.கனகலிங்கம் மற்றும் ஆசிரியர் திரு.த.பார்த்தீபன் அவர்களும் கலந்து கொண்டனர்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலிருந்து வெளியேறி வடமராட்சிப் பகுதியில் வாழும் சில குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்புக்கான உபகரணங்களும் மற்றும் உயர்தரம் கற்கும் இரு மாணவிகளுக்கு உடைகளும் கொப்பிகளும் , பெற்றோரை இழந்த சிறுமிகள் இருவருக்கான உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டது.

பயனாளர்கள்

2) திரு.உமாபதி அவர்களுக்கு தச்சுத் தொழிலுக்கான உபகரணங்கள் பத்தாயிரம் ரூபா(10000) பெறுமதியில் வழங்கப்பட்டது. திரு.உமாபதி அவர்களது மனைவியும் குழந்தையொன்றும் வன்னியில் மரணமடைந்துவிட்டார்கள். தற்போது 3பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். இம்மூன்று பிள்ளைகளும் எறிகணை வீச்சில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மகள் தனது ஒற்றைக்கண்ணை இழந்துள்ளார். தினக்கூலித்தொழிலாளியான இவருக்கான சுயதொழில் வாய்ப்பாக மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது.

2) திருமதி செவ்வந்தி அகிலன் அவர்களுக்கு கோழிவளர்ப்புக்கான உபகரணங்கள் கோழிகள் ஆடு உட்பட பத்தாயிரம் ரூபா (10000) வழங்கப்பட்டது. செவ்வந்தியின் கணவர் கடைசிப்போரில் காணாமற்போய்விட்டார். 4பிள்ளைகளுடன் தனித்துள்ள இப்பெண்ணின் எதிர்காலத்திற்கான உதவியாக மேற்படி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

3) திருமதி.சூரியகுமாரி நவரட்ணம் அவர்களுக்கு எள்ளுப்பா பலகாரங்கள் செய்து விற்பதற்கான உபகரணங்கள் உரல் உலக்கை பலகாரங்கள் செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் அவரது வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவியாக பத்தாயிரம் ரூபா (10000) பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 4பிள்ளைகளுடன் வாழும் இப்பெண் போரில் கணவனை இழந்துவிட்டார். பிள்ளைகள் நெருப்புக்காச்சல் தொற்று நோய்களுக்கு உள்ளாகி பாதிப்படைந்துள்ளார்கள்.

4) மாணவிகளான கயல்விழி ,ரேகா ஆகியோருக்கு ஐயாயிரம் ரூபா (5000) பெறுமதிக்கான உடுப்புகள் மற்றும் படிப்புக்கான கொப்பிகள் வழங்கப்பட்டுள்ளது.

5) போரில் பெற்றோர்கள் சகோதரியை இழந்த 7வயதுச்சிறுமிக்கும் , மற்றும் தந்தையை இழந்த இருதய நோயாளியான 7வயதுச்சிறுமிக்கும் மாதாந்த உதவியாக மூவாயிரத்து ஐந்நூறு ரூபா (3500) பெறுமதிக்கான பொருட்கள் வழங்கப்பட்டது. மேற்படி சிறுமிகளுக்கான மாதாந்த கொடுப்பனவுகளை நேசக்கரம் தொடாந்து செய்து வருகிறது.

இத்திட்டத்திற்காக நாற்பத்தியிரண்டாயிரம் ரூபா (42000) இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் தமது ஆதரவினை வழங்கிய திரு.அன்ரன்(யேர்மனி) அருட்குமரன் (யேர்மனி) ஆகியோருக்கும் தங்கள் உதவிகளை வழங்கிய அனைவருக்கும் நேசக்கரம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

தொடர்ந்த ஆதரவினை புலம்பெயர் உறவுகளாகிய உங்களிடமிருந்து எங்கள் தாயகத்து உறவுகள் வேண்டி நிற்கின்றனர்.

groupph.jpg

kamaltouma.jpg

kanestoreka.jpg

rajatosewan.jpg

Posted

ஆதரவற்ற பிள்ளைகள் உறவுகளுக்கான உதவிகள் - மணற்காடு இடைத்தங்கல் முகாம்

வியாழக்கிழமை, 11 மார்ச் 2010 17:44

வன்னியில் நடந்து முடிந்த இறுதி யுத்தத்தில் அனைத்து உடைமைகளையும் உறவுகளையும் இழந்துபோய் உயிரையும் தாங்கள் கற்ற கல்வியறிவையும் மட்டுமே சொத்தாக எடுத்துச் சென்று தற்சமயம் வடமராட்சி மணற்காடு இடைத்தங்கல் முகாமில் வாழ்ந்து வரும் பதினொரு மாணவர்களுக்கு அவர்கள் தங்கள் கல்வியை தொடர வழிவகை செய்யும் நோக்குடன் நேசக்கரம் அமைப்பானது பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் ரி.ஆர்.ரி.தமிழ் ஒலி வானொலி ஊடாக புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களிடமிருந்து உதவிகளைப் பெற்று அந்த மாணவர்களிடம் கொண்டு சென்று சேர்த்துள்ளது.06.03.10அன்று மேற்படி உதவிகள் மாணவர்கள் குடும்பங்களுக்கு கிடைத்துள்ளது.

மாணவர்களிற்கான சீருடைகள்,சப்பாத்துக்கள்,மற்றும் பாடசாலை உபகரணங்கள் என்பனவற்றுடன் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களிற்கான பணஉதவிகளும் , எந்த வருமானமும் அற்ற குடும்பத்தினரிற்கு சுயதொழில் உதவிகளும் வழங்கப்பட்டது.அதற்கான ஆதாரங்கள் படங்களாக இங்கு இணைக்கபடுகின்றது.

கீழே உள்ள ஒலிப்பதிவுகளில் உதவிகளைப் பெற்றவர்களின் விபரங்களும் அவர்களது கருத்துக்களுடன் அவர்கள் உதவியவர்களிற்குத் தமது நன்றியினையும் தெரிவித்துள்ளனர்.

உதவிகள் பெற்றோரின் குரல்களின் ஒலிப்பதிவுகள்.

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

நேசக்கரம் அமைப்பினரும் உதவியவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன்...,ஊரிலுள்ள உறவுகளின் மற்றும் மாணவர்களின் தேவைகளை மட்டுமல்லாது அவர்களது உணர்வுகளையும் நேசக்கரத்துடன் இணைந்து வானலைகளில் புலம்பெயர் மக்களிடம் எடுத்து வரும் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலி குழுமத்தினரிற்கும் நேசக்கரம் சார்பாக சிறப்பான நன்றிகள்.

1.jpg

2.jpg

3.jpg

4.jpg

dsc00010.jpg

dsc00022.jpg

dsc00023.jpg

DSC00028.jpg

DSC00031.jpg

படங்கள் கடிதங்கள் விபரங்கள் நேசக்கரம் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. சென்று பாருங்கள்.

Posted
Posted

நல்லவிசயம், வாழ்த்துகள். அன்பே சிவம் எண்டுதான் சமயம் சொல்லிது. சிலைகளுக்கு பால் ஊத்தி, ஆபரணம் போட்டு அழகு பார்க்கிறதைவிட ஊத்துற பாலை தாகத்தில தவிக்கிற ஜீவன்கள் வாயில ஊத்தினால் புண்ணியமாய் போகும்

Posted

நல்லவிசயம், வாழ்த்துகள். அன்பே சிவம் எண்டுதான் சமயம் சொல்லிது. சிலைகளுக்கு பால் ஊத்தி, ஆபரணம் போட்டு அழகு பார்க்கிறதைவிட ஊத்துற பாலை தாகத்தில தவிக்கிற ஜீவன்கள் வாயில ஊத்தினால் புண்ணியமாய் போகும்

உங்கள் கருத்துகளிற்குநன்றிகள். இன்றைய நேரத்தில் புலம்பெயர் ஊடகங்கள் மட்டுமல்ல புலத்து ஊடகங்கள் ஏன் தேர்தலில் நிற்கின்ற கூட்டு சயேட்சை அரசியல்வாதிகள் அனைவருமே இலகுவாய் மறந்துவிட்ட ஒருபக்கத்தினை பற்றி நாங்கள் சிலர் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம்.அதுமட்டுமல்ல இதே யாழ் களத்திலகூட நானும் சலிக்காமல் அந்த மக்களிற்கான உதவிகளின் தேவைகளை இணைத்தே வருகிறேன். அதற்கு உங்கள் ஒருவரின் பதில் கருத்து மட்டுமல்லாமல் உங்கள் உதவியும் கிடைத்து மகிழ்ச்சி.உங்களைப்போலவே உணவுள்ள உண்மையான உள்ளங்கள் ஒருசிலர் இன்னமும் இந்த உலகில் இருக்கும்வரை எங்கள் மக்களிற்கான உதவிகளை நாங்கள் தொடந்துகொண்டேயிருப்போம் நன்றி

Posted

சாத்திரி அண்ணை, ஓர் புதிய திரியை யாழில கதை கதையாம் பகுதியில ஆரம்பியுங்கோ. கதை கதையாம் பகுதியில இணைச்சால் அது பலரிண்ட பார்வைக்கு போகும். மற்றது, கதை மாதிரி சொன்னால்தான் ஆக்கள் கொஞ்சம் கூடப்பார்ப்பீனம். அவலங்கள் நிஜக்கதைகள்தானே. அவற்றை ஒலி, ஒளி, எழுத்து வடிவில கதை கதையாம் பகுதியில இணைச்சீங்கள் என்றால் அதிக response வரும் எண்டு நினைக்கிறன். அத்தோட தொடர்ந்து முகப்பில வெளிக்காட்டப்படும்.

Posted

சாத்திரி அண்ணை, ஓர் புதிய திரியை யாழில கதை கதையாம் பகுதியில ஆரம்பியுங்கோ. கதை கதையாம் பகுதியில இணைச்சால் அது பலரிண்ட பார்வைக்கு போகும். மற்றது, கதை மாதிரி சொன்னால்தான் ஆக்கள் கொஞ்சம் கூடப்பார்ப்பீனம். அவலங்கள் நிஜக்கதைகள்தானே. அவற்றை ஒலி, ஒளி, எழுத்து வடிவில கதை கதையாம் பகுதியில இணைச்சீங்கள் என்றால் அதிக response வரும் எண்டு நினைக்கிறன். அத்தோட தொடர்ந்து முகப்பில வெளிக்காட்டப்படும்.

நீங்கள் சொன்ன விடயத்தை ஏற்கனவே யோசித்து ஒரு இளைஞனின் கதையும் எழுதியுள்ளேன்.அவரின் படம் கிடைக்கும்வரை காத்திருக்கிறேன்.கிடைத்ததும் மீண்டும் முன்பு போலவே அவர்களின் உண்மைகதைகளினூடாகஅவர்களின் அவலங்களை வெளிகொண்டு வருவேன் நன்றி

Posted

வன்னிப்போரில் பாதிக்கப்பட்டு வடமராட்சி பகுதியில் இடைத்தங்கல் முகாம்களிலிருந்து பருத்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் கற்கும் மாணவர்களுக்கான சத்துணவுக்கான ஒரு மாதத்துக்கான கொடுப்பனவு நேசக்கரம் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபா ஐம்பதினாயிரம் ரூபாவை (50000ரூபா) நேசக்கரம் இலங்கைக்கான இணைப்பாளர் கமலாதேவி அவர்கள் பாடசாலை அதிபர் திரு.திரவியராசா அவர்களிடம் 19.03.2010 அன்று கையளித்துள்ளார்.

அதிபர் திரவியராசா அவர்கள் வழங்கிய கடிதம்...

10.png

Posted

Nesakkaram-Copie.gif

DSC00177.gif

DSC00203.gif

Posted

நேசக்கரம் உதவிபெற்றோரின் கடிதங்களிலிருந்து

vithu.png

vasantha.png

thusi.png

thanu.png

thamil.png

praba.png

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.