Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பின் பிளவுக்கு வித்திட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவு இதோ!

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்மொழியப்பட்டுள்ள தீர்வுத்திட்ட நகலின் பிரதி பொங்கு தமிழுக்குக் கிடைத்துள்ளது.

கட்சித் தலைவர்கள் தவிர்ந்த ஏனைய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம்கூட கையளிக்கப்படாது வாசித்துக் காட்டப்பட்ட அந்த தீர்வுத் திட்ட நகலின் முழுமையான வடிவம் எமக்குக் கிடைத்துள்ளபோதும் அதன் முக்கிய விடயங்களை மட்டும் இங்கு வெளியிடுகிறோம்.

குறித்த தீர்வுத் திட்ட முன்மொழிவு, தமிழ் மக்களின் குறைந்தபட்ச அபிலாசைகளைக்கூட நிறைவேற்றவில்லையென எழுந்த சர்ச்சைககள் கூட்டமைப்பில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளதோடு, நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிலிருந்து பிரிந்து சென்ற தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியும் ஒன்றுக்கொன்று எதிராகப் போட்டியிடும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.

இத் தீர்வுத்திட்ட நகலை தேர்தலுக்;குமுன் மக்கள் முன் வைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை திட்டமுன்மொழிவை மக்கள் முன்வைக்கவில்லை. இனப்பிரச்சனைக்கான தீர்வுத்திட்ட முன்மொழிவுகளை தேர்தல் பிரச்சனையாக்கக் கூடாது என்று கூட்டமைப்பு தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தது.

தேர்தல் முடிவடைந்த பின்னர் தேர்தலில் வெற்றி பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி திட்டநகல் இறுதி செய்யப்படும் எனக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

இத் திட்ட நகல் ஐக்கிய இலங்கைக்குள் - முழு இலங்கைக்குமான அரசியலமைப்பு முன்மொழிவினை மத்திய – மாநில அரசுகள் என்ற அதிகாரப் பரவலாக்கல் முறைமையினை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கிறது. இதற்கு மாற்றாக ஒரு நாடு - இரு தேசங்கள் என்ற அடிப்படையில் இத் தீர்வுத்திட்ட நகல் அமைந்திருக்க வேண்டும் என்பதுதான் கஜேந்திரகுமார், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன் போன்றோர் இத் திட்ட நகலை எதிர்த்து முன்வைத்திருந்த வாதம்.

05.10.2009 ம் திகதியிடப்பட்டு, 'சிறிலங்காவின் தமிழ் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான அடிப்படைகள் பற்றிய உத்தேச அரசியலமைப்பு முன்மொழிவு' என்ற தலைப்பில் 25 உப பகுதிகளைக் கொண்டதாக இவ் ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. 11 பக்கங்களில் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்நகலின் பிரதி பல்வேறு இடங்களில் கையால் வெட்டித் திருத்தப்பட்டுள்ளபோதும் இம்மாற்றங்களை யார் செய்தது என்பது பற்றி விபரங்களை அறிய முடியவில்லை.

இந் நிலையில், மிகவும் இரகசியமாக பேணப்பட்ட இத் தீர்வுத்திட்ட நகலில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்களை இங்கு தருகிறோம்:

ஐக்கிய இலங்கைக்குள், தமிழர் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களில் சமஷ்டி அடிப்படையில் அமைந்த, உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கல்•சமஷ்டி அலகானது வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்தாக அமையும்

•மத்திய, மாநில அலகுகளுக்கான அதிகாரங்கள் தனியானதாகவும் வேறானதாகவும் இருக்கும்

•காணி, சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், கல்வி, நிதிக்கொள்கை போன்ற விடயங்களில் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கல்

•1983 ம் ஆண்டுக்கு முன்பிருந்தது போல், வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தை மீளப்பெறல்

கூட்டமைப்பின் உத்தேச தீர்வுத்திட்ட நகல் மேலும் தெரிவிப்பதாவது:

1.சிறிலங்கா சமஷ்டி அரசுகளின் கூட்டமைப்பாக இருக்கும். இதில் 1978 ம் ஆண்டு அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்டதான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் 'வட-கிழக்கு அரசு' (North- Eastern State) எனும் பெயரில் இச் சமஸ்டிக் கூட்டமைப்பில் ஒரு அலகாக இருக்கும்

2.அவசரகார விதிகளின்கீழ் நாட்டின் அதிபருக்கு சமஷ்டி அலகுகளை கலைக்கும் அதிகாரம் இருக்கும்.

3.சட்டமியற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திடம் இருக்கும். பாராளுமன்றம் இரு சபைகளைக் கொண்டதாக அமையும். செனட்சபை உறுப்பினர்கள் மாநில அரசுகளினால் தெரிவுசெய்யப்படுவர். ஒரு மாநில மக்களைப் பாதிக்கின்ற விடயங்களில் சட்டமியற்றும்போது அம்மாநில செனட்சபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தேவை

4.மத்திய அரசின் நிறைவேற்றதிகாரங்கள் பிரதமரிடம் அவர் தலைமையிலான அமைச்சரவையிடமும் இருக்கும்.

மத்திய அரசின் அதிகாரங்கள்:

பாதுகாப்பு

• வெளிவிவகாரம்

• தேசிய நிதிக் கொள்கை (யேவழையெட களைஉயட pழடiஉல)

• குடிவரவு குடியகல்வு

• குடியுரிமை

• சுங்கம்

• தபால், தொலைத் தொடர்பு,

• சர்வதேச விமான நிலையங்கள், முக்கிய துறைமுகங்கள், புகையிரத சேவை

• நெடுஞ்சாலைகள்

மத்திய அரசுக்கு என வரையறை செய்யப்பட்டுள்ள அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசுகளுக்கே இருக்கும். இவற்றின் அடிப்படையில் வட-கிழக்கு அரசுக்கு முன்மொழியப்பட்ட அதிகாரங்களில் முக்கியமானவை கீழே தரப்படுகின்றன.

மாநில அரசின் அதிகாரங்கள்

• வரி விதிப்பு

• நேரடியாக வெளிநாட்டுக் கடன் பெறும் உரிமை

• வடக்கு கிழக்கில் உள்ள அரச காணிகள் அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்

மத்திய அரசின் அதிகாரங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான காணிகள் தவிர்ந்த மேலதிகமான பொதுக் காணி அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும்.

• மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தனிப்பட்ட காணிகள், அக்காணிகளின் சட்ட உரித்துடையவர்களிடம் கையளிக்கப்படும.

• மநிலத்தில் சட்டம் ஒழுங்கு, பொலிஸ் சேவைகள் என்பன மாநில அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்படும்

• கல்வி

• பொதுச் சேவைகள்

தவிர, வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களும், மலையக மக்களும் தமது தனிப்பட்டதும் குழுநிலை சார்ந்ததுமான உரிமைகளை அனுபவிக்கும் உரித்துடையவர்கள்.

மத்திய மாநில உறவுகள், அரசியலமைப்பு மாற்றங்கள் போன்ற விடயங்கள் பற்றியும் இத் தீர்வுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

11 பக்கங்களைக் கொண்ட தீர்வுத்திட்ட முன்மொழிவின் சில முக்கிய விடயங்களை மட்டுமே இங்கு தமிழாக்கம் செய்து தந்துள்ளோம். இதுபற்றிய மேலதிக விபரங்கள் தேவைப்படும் வாசகர்கள் எமது மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம்.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={22474355-2BBF-45A8-83FA-8E323775CB61}

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பம் நல்லதாகத்தானே இருக்கிறது

ஆனால் இன்றைய எமது நிலையில் இது ஆகக்கூடுதலான கேள்வி என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நாங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் படைவலு சமநிலையில் நாங்கள் தோற்கடிக்கப்பட்டு இருக்கின்ற இனம். எங்களிடம் படைவலு இருந்தபோது நாங்கள் பேரம் பேசக்கூடிய நிலையில் இருந்தோம். இப்போது படைவலு முற்றாக சிதைக்கப்பட்ட நிலையில், ஒரு நாடு இரண்டு தேசம் என்று பேரம் பேசமுடியாது. அதற்கு பெரும்பான்மை சிங்களவர் சம்மதிக்கப் போவதில்லை. வேண்டும் என்றால் தமிழ் மக்களை உசுப்பேற்றி விடலாம் ஆனால் கனியப் போவது எதுவும் இல்லை என்பது சாத்தியமான நடைமுறை உண்மையாகும்.

முதலில் ஒரு தொடக்கம் அவசியம் தேவை. அந்தவகையில் இது நல்லதொரு தொடக்கமாகக் கருதலாம். இந்தத் தீர்வுத்திட்டத்தில் பல குறைபாடுகள் இருக்கலாம், ஆனால் எங்கோ ஒர் இடத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

  • வடக்கு கிழக்கில் உள்ள அரச காணிகள் அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
  • மத்திய அரசின் அதிகாரங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான காணிகள் தவிர்ந்த மேலதிகமான பொதுக் காணி அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும்.
  • மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தனிப்பட்ட காணிகள், அக்காணிகளின் சட்ட உரித்துடையவர்களிடம் கையளிக்கப்படும்.
  • மநிலத்தில் சட்டம் ஒழுங்கு, பொலிஸ் சேவைகள் என்பன மாநில அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

மேலே குறிப்பிடப்பட்ட காணி, பொலிஸ் அதிகாரங்கள் முக்கியமானவை.

நடைமுறைக்கு அமைவாக பெறக்கூடிய உச்ச தீர்வு ஒன்றை உருவாக்கிக் கொண்டு அதிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கலாம்

Edited by காவாலி

  • தொடங்கியவர்

இன்று தமிழ்னாட்டில் மானிலவையைக் கலைக்கும் அதிகாராம் மத்திய அரசிடம் இருப்பதாலையே அது இந்தியமதிய அரசு சார்ந்ததாகச் செயற்பட வேண்டி இருக்கிறது.சட்டம் இயற்றும் அதிகராம் சிறிலங்காப் பாராளுமன்றதிடமே இருக்கும்.மத்திய அரசு தனது தேவைகளுக்காக காணிகளைக் கையகப் படுத்தும் அதிகாரம் அதனிடம் இருக்கும்.இது அதி உயர் பாதுகாப்பு வலய்ங்கள் விமான நிலையம் துறைகுகம் என்பனவற்றைச் சாட்டி ஏற்படுத்தப்படிருக்கும் அனைத்து நிலச் சூவீகரிபுக்களையும் நிரந்தரமாக்கும்.

பெயரளவில் சில அதிகாரங்கள் வடகிழக்கு மாகாணசபைக்கு வழங்க்கப்படிருப்பதாகக் கூறப்படினும் நடைமுறையில் அது சாதியப்பட வண்ணம் இருப்பதற்காகவே மேற் காட்டிய வரைபுகளும் இதில் இடம் பெற்றுள்ளன.இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை சிறிலங்கா ஒரு தேசம் என்னும் அங்கீகாரமே.அதனால் தான் தமிழர் தாயக் கோட்பாடு அவசியமான அடிபடையாக் இருக்கிறாது.

இதுவே மேலானுது என்போரும் இதைப் பெற்று விட்டு பிறகு பார்க்கலாம் என்போரும், தமிழ்னாட்டைப் பார்க்கலாம்.இன்று சர்வதேச அழுதங்களாலும் வல்லாதிக்கப் போட்டியாலும் ,தமிழருக்கு ஒரு தீர்வை வழங்க வேண்டிய கட்டாயாம் இருக்கிறது.இதனை நாங்கள் சரிவரப்புரிந்து கொள்ளாமால் கிடைக்கின்ற சந்தர்ப்பதைத் தவற விட்டு விட்டு சரனகதி அரசியல் நடத்துவதால் தமிழரின் எதிர்காலாம் மீண்டும் ஒரு தடவை முரண்பாட்டை நோக்கித் தள்ளப்படுகிறது.முன்னர் எவ்வாறு அவசியமான தருணத்தில் இராமனாதான் போன்றோர் தவறு இழைத்தனரோ அதைப்போலவே சம்பந்தர் குழுவும்தவறு இழைக்கிறது.சிங்கள மக்கள் தரும் தீர்வைத் தான் தமிழர்கள் ஏற்க்க வேண்டும் என்போர், எதுவித தீர்வுக்கும் ஏங்கக் கூடாது.ஏன்னெனில் சிங்களப் பேரின்வாத்தைப் பொறுத்தவரை அவர்கள் தமிழர்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை.

இது உண்மையாக இருந்தால் நல்ல அடிப்படையாக கருதலாம்.

ஆனால், உத்தியோக பூர்வமாக அறிவிக்காமல் உறுதியற்ற முறையில், தேர்தல் அண்மிக்கையில், வெளியிடப்பட்ட விதம் பல சந்தேகங்களை தோற்றுவிக்கிறது.

இதைப்போய் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினருக்கு காட்ட மறுத்தது, மேலும் சந்தேகங்களை தோற்றுவிக்கிறது.

தேர்தல் அண்மிக்கையில், குற்றச்சாடுக்களை திசை திருப்பும், மக்களை ஏமாற்றும் இன்னொரு முயற்சியா?

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இப்ப ஒன்றும் இல்லாமல் நிக்கிறம்.எதுக்கும் ஒரு ஆரம்பம் வேண்டுமே.சரி இது உண்மையாக இருந்து அதை நாங்கள் ஏற்றாலும்

இதையாவது நடைமுறைப்படுத்த சிங்கள பேரினவாதம் இடம் கொடுக்க வேனுமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கு மாகாணசபை தலைவா யார் எண்டு முதல் முடிவெடுத்து ஆரம்பிச்சு அடுத்தது என்னவெண்டு செயல்படுங்கோ!

இப்ப சாத்தியமானது உது ஒண்டுதான்.... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஒரு தொடக்கம் அவசியம் தேவை. அந்தவகையில் இது நல்லதொரு தொடக்கமாகக் கருதலாம். இந்தத் தீர்வுத்திட்டத்தில் பல குறைபாடுகள் இருக்கலாம், ஆனால் எங்கோ ஒர் இடத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

நடமுறைக்கு அமைவாக பெறக்கூடிய உச்ச தீர்வு ஒன்றை உருவாக்கிக் கொண்டு அதிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கலாம்

இதைத்தான் நானும் எழுத நினைத்தேன் காவாலி

நேரம் கிடைக்காததால் இரு வரியுடன் முடித்தேன்

பெறக்கூடிய உச்ச தீர்வு ஒன்றை உருவாக்கிக் கொண்டு அதிலிருந்து அடுத்த கட்டத்துக்கு

புலம் பெயர் தமிழர்களது பண பலத்தினால் சில பொருளாதார மற்றும் தொழில்நுடப முன்னேற்றங்களையும் வளங்களையும் ஏற்படுத்தி அபிவிருத்தி செய்தபடி அடுத்த கட்டங்களை நிர்ணயிக்கலாம் என்பதே எனது இன்றையநிலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனேடிய தமிழ் வானொலியின் அரசியல் களம்

பிரமுகர்கள்இ அரசியல்வாதிகள்இ ஆய்வாளர்கள் இணைந்து கொள்ளும் காத்திரமான ஆய்வரங்கம்

03ஃ13ஃ2010

Pடயல

hவவி:ஃஃஉவச24.உழஅஃநெறஉவசஃஉடநைவெளஃனுநகயரடவ.யளிஒ

.பதின்மூன்றாம் திகதி இந்த மாதம் கனடிய சி டி ஆர் வானொலிக்கு கஜேந்திரன் வழங்கிய நேர்காணலை கேட்டால் பல விடயங்கள்இ சம்பந்தர்இ மாவைஇ சுரேஷ் கூட்டின் சதி புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

.பதின்மூன்றாம் திகதி இந்த மாதம் கனடிய சி டி ஆர் வானொலிக்கு கஜேந்திரன் வழங்கிய நேர்காணலை கேட்டால் பல விடயங்கள்இ சம்பந்தர்இ மாவைஇ சுரேஷ் கூட்டின் சதி புரியும்.

சற்று முன் ஒரு நண்பர் சொன்னார்

கஜேந்திரன் யாழில் அரச வாகனங்களில் அரச பாதுகாப்பில் டக்லசின் ஆட்களுடன்தான் திரிகிறாராம்

வலம் வாறாராம்

இதை நான் நம்பவில்லை

ஆனால்நீங்கள் எமக்காக உழைத்தவர்களை ஒரு நொடியில் தூக்கி எறிகிறீர்கள்

நாம் யாரும் சொல்லி அவர்களைப்புரிந்து கொள்ளும் நிலை இருக்கும்வரை.....

Edited by விசுகு

முடிந்தவரை நிலத்தை மாத்திரம் காப்பதில் தீர்வுத்திட்டத்தில் கூட்டமைப்பினர் கவனம் செலுத்தியுள்ளனர்.

முடிந்தவரை நிலத்தை மாத்திரம் காப்பதில் தீர்வுத்திட்டத்தில் கூட்டமைப்பினர் கவனம் செலுத்தியுள்ளனர்.

இதுதான் இறுதியான தீர்வு எண்டால் இந்த தீர்வை சனம் வாங்காமலே இருக்கலாம்... நடை பிணங்களுக்கு இடங்கள் மட்டும் எதுக்கு...???

ஒப்புக்கு சப்பாக ஒரு தீர்வு எண்டதை தமிழர் மேல் திணித்து உலகத்துக்கு தமிழருக்கு எதையோ கொடுத்துவிட்டோம் எண்டு காட்ட தான் சிங்கள இனவாதமும் இவ்வளவு காலமாக துடிக்கிறது....

இந்த தீர்வு கையிலை கிடைக்குமாக இருந்தால் இப்பவே திரும்பி பார்க்காத உலகம் இனி எப்போதும் திரும்பி பார்க்க போவது இல்லை...

Edited by தயா

இதுதான் இறுதியான தீர்வு எண்டால் இந்த தீர்வை சனம் வாங்காமலே இருக்கலாம்... நடை பிணங்களுக்கு இடங்கள் மட்டும் எதுக்கு...???

ஒப்புக்கு சப்பாக ஒரு தீர்வு எண்டதை தமிழர் மேல் திணித்து உலகத்துக்கு தமிழருக்கு எதையோ கொடுத்துவிட்டோம் எண்டு காட்ட தான் சிங்கள இனவாதமும் இவ்வளவு காலமாக துடிக்கிறது....

இந்த தீர்வு கையிலை கிடைக்குமாக இருந்தால் இப்பவே திரும்பி பார்க்காத உலகம் இனி எப்போதும் திரும்பி பார்க்க போவது இல்லை...

உண்மைதான் அண்ணா

ஒப்புச்சப்பிற்கு தமிழர்கள் மீது சிங்களம் திணிக்கப்போகும் தீர்வுத்திட்டம் கூட்டமைப்பின் தீர்வுத்திட்டத்தில் கால் பங்குகூட இருக்கப்போவதில்லை.

2.அவசரகார விதிகளின்கீழ் நாட்டின் அதிபருக்கு சமஷ்டி அலகுகளை கலைக்கும் அதிகாரம் இருக்கும்.

சந்திரிகா அம்மையாரின் முதலாவது தீர்வுப்பொதியில் கூட இது குறிப்பிடப்படவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.