Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பறிபோகும் தமிழ் தாயகம்

Featured Replies

இது ஏற்கனவே இங்கு இணைக்கபட்டதோ தெரியாது..

இருந்தாலும் இது ஒரு முக்கியமானதென்று நினைக்கிறேன்

வடக்குக் கிழக்கு, தமிழர் தாயகம். அது தமிழர்களின் கைகளில் இருக்கிறது என நம்பிக்கொண்டிருக்கிறோம். தமிழர் கள் ஆண்ட பூமி என சொல்லிக் கொண் டிருக்கிறோம். மேற்குலக நாடுகளில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் வடக் குக் கிழக்கு இன்னமும் தமிழர் பிரதேச மாக இருக்கிறது என நம்பிக்கொண் டிருக்கின்றனர். தமிழர் பிரதேசங்கள் தமிழர்களின் கையை விட்டு போய்க்கொண் டிருக்கின்றன. என்பதை உணராத நிலை யில் தானே எங்களில் பலர் கனவுகளி லும் கற்பனைகளிலும் மிதந்து கொண்டி ருக்கிறோம்........?

கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுக ளின் பின்னர் இலங்கை வரை படத்தில் சரத் பொன்சேகா வெற்றி பெற்ற பிரதே சங்களை பச்சை நிறத்திலும், மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்ற இடங்களை சிவப்பு நிறத்திலும் அடையாளம் இட்டுக் காட்டியிருந் தார்கள்.

பச்சை நிறம் தீட்டப்பட்ட பகுதி கள் அனைத்தும் தமிழர் தாயகம் என்று எங் களில் பலர் பெருமைப் பட்டுக் கொண் டோம். அதற்கு ஒரு படி மேலே சென்ற சிலர் பச்சை நிறம் தீட்டப்பட்ட இடங் களை உள்ளடக் கியதே தமிழீழம் என் றும் பெருமை பேசிக்கொண்டோம்.

அப்போது வெளியான வரைபடத் தில் பச்சை வர்ணம் தீட்டப்பட்டு காட்டப் பட்டிருந்த வடக்குக் கிழக்கு பிரதேசத் தின் பெரும் பகுதிகள் இன்று தமிழர் களின் கைகளில் இல்லை என்பதை எங்க ளில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?

மின்னாமல் முழங்காமல் தமிழர் பிர தேசங்கள் அபகரிக்கப்பட்டு வரு கிறன என்பதையும் அந்த இடங்க ளில் தமிழர் கள் இனிமேல் கால் வைக்க முடியாத வாறான கட்டமைப்புகள் சிங்களவர்க ளால் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதை நாம் உணர்ந் திருக்கிறோமா? வடக்குக் கிழக்கு தமிழர் தாயகம், அந்த தமிழீழத்தை அடைந்தே தீருவோம். தமிழீழம் இல்லை என்றால் ஒரு துளி மண்ணும் வேண்டாம் என நாங்கள் மேற்குலக நாடுகளில் இருந்து வீரவச னம் பேசிக்கொண்டி ருக்கும் போது, எங்கள் முற்றங்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டு வருகின்ற னவே. இந்த யதார்த்தங்களையும் புரிந்து கொண்டு செயற்படுங்கள் என்றுதான் நாங்கள் உங்களை மன்றாட்டமாகக் கேட்டு வருகிறோம்.

இதைச் சொல்லி வரும் துரைரத்தினம், நிராஜ் டேவிட் ஆகி யோர் சம்பந் தரின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற் படுகிறார் கள் என்று குற்றம் சாட்டு பவர்களும் உண்டு. சம்பந்தரின் நிகழ்சிநிரல் என்று ஒரு மண்ணாங்கட்டியும் எங்களிடம் இல்லை. எங்களின் நோக்கம் ஒன்றுதான். எங்கள் மண் பறிபோவதை தடுக்க வேண் டும். தமிழர் தாயகம் என்று நாங்கள் சொல் லும் இடங்களில் தமிழர் பிரதிநிதித் துவம் காக்கப்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த நோக்க மும் எங்களிடம் இல்லை. வேறு நோக்கங்களில் செயற்பட வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை.

தமிழர் பிரதேசங்களில் தமிழர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதும் அவ்வாறு தெரிவு செய்யப்ப டும் தமிழர் கள், சிங்களப் பேரினவாத அரசுக்கு கைகட்டி சேவகம் செய்ப வர்களாக இல்லாமல், தமிழர்களின் உரிமையை நிலை நிறுத்தக்கூடிய தமிழர்களாக இருக்க வேண்டும் என்பதுமே எமது நோக்கம். அந் தத் தமிழர்கள் சம்பந்தராகவும் இருக்கலாம். அல்லது எந்தக் கந்தப்பராகவும் இருக்கலாம்.

தமிழீழம்தான் என்ற உறுதியோடு இருக்கும்போது வடக்குக் கிழக்குப் பிரதேசம் எங்கள் கைகளில் இல்லை என எங்கள் உணர்வுகளை மழுங் கடிக் கப் பார்க்கிறீர்களே எங்கள் கனவுகளை கலைக்கப்பார்க்கிறீர்களே என்று வெளி நாடுகளில் உள்ள ஒரு சிலர் என் மீது ஏவுகணை வீசு வீர்கள் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் அந்தக் கனவுகளுடன் மட்டும் என்னைப்போன்ற ஊடகவி யலா ளர்களால் வாழமுடியாது என்பதால் தான் யதார்த்தங்களையும் இடைக்கி டையே சொல்ல விழைகிறோம்.

முதலில் கிழக்கு மாகாணம் தமிழர் களின் கைகளில் இருக்கிறதா என்ப தைப் பார்ப்போம். கடந்த முறை எழு திய கட்டு ரையில் தமிழர் பிரதேசம் எனச் சொல்லு கின்ற பிரதேசம் தமிழர்க ளின் கைகளில் இருக்கிறதா? எனக் கேட்டிருந்தேன்.

திருகோணமலை

புள்ளிவிவரத் திணைக்களத்தின் விவரங்களின்படி திருகோணமலை மாவட் டத்தின் சனத்தொகை இனவிகி தாசார ரீதி யில் எவ்வாறு மாற்ற மடைந்து சென்றிருக் கிறது என்பதையும் இனி பார்ப்போம்.

1932ஆம் ஆண்டிலிருந்து சிங்கள வர்கள் கிழக்கு நோக்கிய நகர்வு களை மேற் கொள்ள ஆரம்பித்தனர். கல்லோயா திட்டம் முதல் 1977இல் ஆரம்பிக்கப் பட்ட துரித மகாவலி அபி விருத்தித் திட் டம்வரை கிழக்கு மாகா ணத்தில் சிங்க ளக் குடியேற்றங்களை இலக்கு வைத்து 24 குடியேற்றத் திட்டங்கள் இலங்கை அரசு களால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

1950ஆம் ஆண்டுகளின் பின்னர் தமிழர்கள் வடக்குக் கிழக்குப் பிர தேசங்களை இணைத்து தமது அரசி யல் நகர்வுகளையும், அதன் பின்னர் வட கிழக்கு இணைந்த சுயாட்சிக் கோரிக்கை யையும் முன்வைத்து போராட ஆரம்பித் தனர். அப்போது சிங்கள ஆட்சியாளர்கள் வடக்கையும் கிழக்கையும் துண்டாடி கிழக்கை முழுமையாக சிங்கள மயப்படுத்த வேண் டும் என்ற திட்டத்தைத் துரிதப்ப டுத்த ஆரம் பித்தனர்.

சிங்களவர்களின் இந்த நகர்வை உணர்ந்து கொண்ட இலங்கை தமிழ ரசுக் கட்சி 1952ஆம் ஆண்டில் திரு கோணமலையில் தனது மாநாட்டை நடத்தியது. அத்துடன் அந்த மாநாட் டில் திருகோணமலையை தமிழர்களின் தலைநகராகவும் பிரகடனம் செய்தது.

திருகோணமலை தமது தலைநகர் என தமிழர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருக்க, மறுபுறத்தில் திருகோண மலையை தமது வசப்படுத்துவதற்காக சிங்கள தேசம் பாரிய செயற்றிட்டங் களை மேற்கொள்ள ஆரம்பித்தது. கந்தளாய், கல்லோயா, மகாஓயா, தீகவா பித் திட்டங்களை உருவாக்கி திருகோண மலை, அம்பாறை மாவட் டங்களில் சிங் களக் குடியேற்றங்களை உருவாக்கினர்.

கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடி யேற்றங்களை உருவாக்கிய அதேவேளை, சிங்களவர்களின் சனத்தொகை கிழக்கில் அதிகரிக்கும் வகையில் திருகோணமலை மட்டக்களப்பு மாவட் டங்களின் எல்லை களிலும் மாற்றங்களையும் உருவாக்கினர்.

மட்டக்களப்பு மாவட்டம் எவ்வாறு பிரிக்கப்பட்டு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டம் உருவாக்கப்பட்டது என்ப தைப் பின்னர் பார்ப்போம்.

திருகோணமலை மாவட்டம் முல் லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கு எல்லை யான தென்னமரவாடியிலிருந்து மட்டக் களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லை யான வெருகல் ஆறு வரை யான நீண்ட கரையோரப் பிரதேசமாகும். இதன் தெற்கு எல்லையாக அனுராதபுரம், பொலன்ன றுவை மாவட்டங்கள் உள்ளன.

1827ஆம் ஆண்டில் திருகோணமலை மாவட்டத்தில் 250 சிங்கள வர்கள் மட் டுமே வாழ்ந்தனர். அப்போது தமிழர்கள் 15 ஆயிரத்து 663பேராக வும், முஸ்லிம்கள் 3 ஆயிரத்து 245 பேராகவும் காணப்பட்ட னர். இம் மாவட்டத்தின் மொத்த சனத் தொகையில் தமிழர்கள் 81.76 வீதமாகவும், முஸ்லிம்கள் 16.9 வீதமாகவும், சிங்கள வர்கள் 1.3 வீதமாகவும் காணப்பட்டனர்.

1921ஆம் ஆண்டில் தமிழர்களின் சனத்தொகை 54.4 வீதமாக வீழ்ச்சி யடைந்த அதேவேளை, முஸ்லிம்க ளின் சனத்தொகை 37.6 வீதமாகவும், சிங்க ளவர்களின் சனத்தொகை 4.4 வீதமாக வும் உயர்வடைந்திருந்தது.

1971 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சனத்தொகை முடிவுகள் சிங்களக் குடி யேற்றம் மற்றும் முஸ்லிம் களின் சனத் தொகை அதிகரிப்பு என் பனவற்றை தெளிவாகக்காட்டியிருக் கிறது. அந்த ஆண்டின் குடித்தொகை மதிப்பீட்டின்படி திருமலை மாவட் டத்தில் தமிழர்கள் (71 ஆயிரத்து 749 பேர்) 38.1 வீதமாகவும் முஸ்லிம்கள் (59 ஆயிரத்து 924 பேர்) 31.8 வீத மாகவும், சிங்களவர்கள் (54 ஆயிரத்து 744 பேர்) 29.08 வீதமாகவும் காணப்பட்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 1.3 வீதமாக இருந்த சிங்களவர்கள் கடந்த ஆண்டில் குடித்தொகை மதிப்பீட்டின் படி 30 வீதமாகவும், 16 வீதமாக இருந்த முஸ்லிம்கள் 46.5 வீதமாகவும் உயர்வ டைந்திருக்கிறார்கள். 81.76 வீதமாக இருந்த தமிழர்கள் 23.5 வீதமாக வீழ்ச்சி யடைந்திருக்கிறார்கள்.

இந்த விவரங்களைப் பார்க்கும் உங்க ளுக்கு திருகோணமலை மாவட் டத்தில் பெரும்பான்மை இனமாக இருந்த தமிழர் கள் இன்று மூன்றாவது நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தை உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். யுத்தம் காரணமாகவும் திருகோண மலை மாவட்டத்திலிருந்து தமிழர் கள் இடம்பெயர்ந்ததன் காரணமாக வும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. யுத்த அழிவு களால் ஏற்பட்ட இறப்புவீத அதிகரிப்பும் தமிழர்களின் சனத் தொகை வீழ்ச்சிக்கு மற்றுமொரு காரணமாகும்.

உலகில் முஸ்லிம்களின் சனத் தொகை பெருக்கத்தைப்போலவே கிழக்கு மாகா ணத்திலும் அவர்களின் சனத்தொகை வீதம் ஏனைய இனங்களை விட அதி கரித்து வருகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் பெரும் பான்மையாக இருந்த தமிழர்கள் இப் போது மூன்றாவது இடத்திற்கு வந்தி ருக்கிறார்கள். தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்கள் இப்போது சிங்களக் கிராமங்களாக மாற்றப்பட்டு அப்பிரதே சங்களுக்கு சிங்களப் பெயர்களும் சூட் டப்பட்டிருக்கின்றன.

சனத்தொகையில் மட்டுமல்ல, நிலப் பரப்பைக்கூட தமிழர்கள் திருகோண மலையில் இழந்துவிட்டார்கள். 2,728 சதுரகிலோ மீற்றரை கொண்ட திரு கோணமலை மாவட்டத்தில் 346 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தில்தான் தற் போது தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். திருகோணமலை மற்றும் ஈச்சிலம்பற்று, வெருகல் ஆகிய இடங்களை உள்ளடக் கிய இந்த 346 சதுர கிலோ மீற்றர் பிர தேசத்திற்குள்ளும் தற்போது சிங்களவர் களின் தொகை அதிகரித்து வருகிறது.

பூர்வீக தமிழ்ப் பிரதேசங்களான கந்த ளாய், கிண்ணியா, குச்சவெளி, தம்பல காமம் பகுதிகள் இப்பொழுது முற்றுமுழு தான சிங்களப் பிரதேசங்களாக மாற்றப் பட்டு விட்டன. அந்தப் பிரதேசத்தில் உள்ள சுமார் 240 தமிழ்க் கிராமங்களின் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற் றப்பட்டிருக்கின்றன. இதுதான் எமது தமிழீழத் தலைநகரின் இன்றைய நிலை. மட்டக்களப்பு

அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தை பார்ப்போம். வெருகல் தொடக்கம் பாணமை வரையான பிரதேசங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டி ருந்த போதிலும், 1961ஆம் ஆண்டு நாவிதன்வெளி, சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, இறக்காமம், அக்க ரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோ வில், பொத்துவில் ஆகிய பிரதேச செய லகப்பிரிவுகளை மட்டக்களப்பு மாவட் டத்திலிருந்து பிரித்து மொனறாகலை, பதுளை, மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த சில பிரதேச செயலகப் பிரிவுகளை யும் இணைத்து திகாமடுல்ல மாவட் டம் (அம்பாறை) உருவாக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப் படுத்தும் திட்டத்துடனேயே திகாமடுல்ல மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதேபோன்று, மட்டக்களப்பு மாவட் டத்தின் வடக்குப் பக்கமாக உள்ள மன் னம்பிட்டி உட்பட பல தமிழ் கிராமங்கள் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப் பட்டு பின்னர் அவை பொலன்னறுவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருக் கின்றன. திருகோணமலையையும் மட்டக்களப்பையும் துண்டாடும் வகையில் வடமுனையிலிருந்து கிரான் வரையான பிரதேசங்களிலும், அதேபோன்று மேற்கு எல்லையான புல்லுமலை வடமுனை மற்றும் வடக்கு எல்லையான மாங்கேணி, வாகரை, பனிச்சங்கேணி, புனானை கிழக்கு, வட்டவான், மதுரங்கேணிக்குளம், கதிரவெளி, பால்சேனை, அம்பந்தனாவெளி ஆகிய கிராமங்களிலும் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பை மட்டுமே தமிழர்கள் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது கூட நிலைக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

அம்பாறை

1961ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் 1963 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் 44 வீதமாகவும், சிங்களவர்கள் 29.3 வீதமாகவும், தமிழர் 25.2 வீதமாகவும் காணப்பட்டனர். ஆனால் 2007ஆம் ஆண்டு சிங்களவர்கள் 37.5 வீதமாக உயர்வடைந்திருக்கின்றனர். அதேவேளை, தமிழர்கள் 18.3 வீதமாகவும் முஸ்லிம்கள் 44 வீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளனர்.

இப்பொழுது சிங்கள மயமாக்கப்பட்டிருக்கும் பிரதேசங்கள் மீண்டும் தமிழர் கைகளுக்கு வரும் என சிலர் நம்பலாம். உலக நாடுகளில் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் மீட்கப்பட்டன என உங்களில் சிலர் ஆறுதல் சொல்லலாம். ஆனால் அந்த இனங்களுக்கு உலக நாடுகளில் இருந்த ஆதரவின் ஒரு வீதமாவது எமக்கு இருக்கிறதா என்ற யதார்த்தத்தையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். தற்போது போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அபிவிருத்தி என்ற பெயரில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் புதிய சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என அண்மையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

தீகவாபி புனித பிரதேசத் திட்டம் மற்றும் உல்லாசப் பிரயாண அபிவிருத்தி ஆகியவற்றின் கீழ் அம்பாறை மாவட்டத்திலும் மட்டக் களப்பு மாவட்டத்தில் குடும்பிமலை பிரதேசத்திலும் (இலங்கை அரசு வைத்த பெயர் தொப்பிகல) மேற்கொள்ளப்பட்டு வரும் "அக்ரோ' வர்த்தக அபிவிருத்தித் திட்டத்தின் கீழும் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். மகாவலி அபிவிருத்திக் திட்டம், கெடா ஓயா திட்டம் உட்பட மேற்படி திட்டங்களின் கீழ் கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் சிங்களவர்களைக் குடியமர்த்துவதற்கு இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களின் சனத்தொகையை 55 வீதமாக உயர்த்துவதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டங்களை மஹிந்த அரசில் முக்கிய அமைச்சராக இருக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சியைச்சேர்ந்த அமைச்சர் சம்பிக ரணவக்க மேற்கொண்டு வருகிறார். அரச காணிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள இன விகிதாசாரத்திற்கு ஏற்பவே பங்கிடப்பட வேண்டும் என காணிச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற போதிலும் திருகோணமலையில் கந்தளாய், அல்லை, மொரவேவ, முதலிக்குளம், பதவியா திட்டங்களின் கீழும் அம்பாறையில் கல்லோயா, பனல் ஓயா, அம்பலன் ஓயா திட்டங்களின் கீழும் நூறுவீதம் சிங்களவர்களே குடிமயர்த்தப்பட்டனர். இத்திட்டங்களைச் செயற்படுத்து வதற்கு வசதியாக திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் அரச அதிபர் மற்றும் மாவட்ட காணி ஆணையாளர் ஆகிய பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கு சிங்கள வர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

2006ஆம் ஆண்டு வடக்குக்கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணம் தனி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட பின்னர் கிழக்கு மாகாண நிர்வாக உயரதிகாரிகளாக மாகாண சபை நிர்வாகத்திலும் சரி, மாவட்ட செயலகங்களிலும் சரி, சிங்களவர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் றியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம, கிழக்கு மாகாண நிர்வாக உயர்மட்டத்திற்கு சிங்களவர்களையே நியமித்து வருகிறார். அவர்களில் பெரும்பாலானவர்கள் நிர்வாக சேவையைச் சேராத இராணுவ அதிகாரிகளாவர்.

திருகோணமலை மாவட்டத்தின் அரச அதிபராக மேஜர் ஜெனரல் ரஞ்சித் டி சில்வாவும், மாவட்ட புனர்வாழ்வு இணைப்பாளராக மேஜர்ஜெனரல் அமரடேவாவும், ஆளுநரின் செயலாளராக கப்டன் ஜெயசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, கிழக்கு மாகாணசபை ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஆளுநரே சகல அதிகாரங்களையும் கொண்டவராகக் காணப்படுகிறார். முதலமைச்சர் வெறும் கைப்பொம்மையாகவே செயற்படு கிறார்.

கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளராக முன்னாள் திருகோணமலை அரச அதிபர் ரொட்றிக்கோ நெலுதெனிய நியமிக்கப்பட்டிருக்கிறார். கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் மாத்தறை மாவட்ட அரச அதிபர் உடகே நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் காணி அமைச்சின் செயலாளர்களாக சிங்களவர்களே நியமிக்கப்பட் டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு ஆசிரியர், மாகாண செயலாளருக்கு ஒரு கடிதத்தை எழுது வதாக இருந்தால் சிங்களத்தில்தான் எழுத வேண்டும். இந்த அவலங்களுக்குக் காரணம் கிழக்கு மாகாண நிர்வாகம் சிங்களக் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கைகளுக்கு சென்றதுடன், சிங்கள அரசின் கைபொம்மையான ஒருவர் மாகாண முதலமைச்சரானமையும்தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மாகாணசபைக்குப் பூரண அதிகாரம் இல்லாவிட்டாலும் கூட அந்த மாகாணசபை தமிழர்களின் கைகளை விட்டுச் சென்றதால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை கிழக்கு மாகாண மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

அதனால்தான் சொல்லுகிறோம், மாகாண நிர்வாகமானால் என்ன நாடாளுமன்ற பிரதிநிதித்துவமானால் என்ன தமிழர் பிரதிநிதித்துவத்தை தமிழர்கள் ஒற்றுமையோடு செயற்பட்டு அதனைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டால் மட்டுமே எதிலும் வெற்றிபெற முடியும். அது எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கும் பொருந்தும்.

இதை வாசித்த உங்களில் சிலர் கிழக்கு மாகாணம்தானே பறி போயிருக்கிறது, வடமாகாணம் எங்கள் கைகளில்தானே இருக்கிறது என பெருமிதம் அடையலாம். ஆனால் வடமாகாணத்தின் பல பகுதிகளும் இன்று எங்கள் கைகளில் இல்லை என்பதுதான் யதார்த்தம். அதுபற்றி மற்றுமொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்ப்போம்.

மூலம்: http://www.tamilcanadian.com/tamil/index.php?cat=9&id=795

Edited by Sooravali

நல்லதோர் இணைப்பு சூறாவளி. இதை இப்பகுதியில் வாசித்ததாக எனக்கு ஞாபக மில்லை.

பறிபோவதைப்பற்றி கவலைப்பட்டாலும் அதை நிறுத்தக் கூடியவர் எவருமில்லை. இவைகளொன்றும் தெரியாமல் பறிபோகவில்லை. தெரிந்துதான் பறிபோய்க்இகாண்டிருக்கிறது. தாயகக் கோட்பாடு இதனால் சுருங்கிக்கொண்டு போகிறது. அது மட்டுமல்ல, சிங்களவர் குடியேற்றங்கள் அபிவிருத்தியென்ற போர்வையில் நடைபெறுகையில் அவற்றை உலகாலும் தடுக்க முடியாது.

  • தொடங்கியவர்

நல்லதோர் இணைப்பு சூறாவளி. இதை இப்பகுதியில் வாசித்ததாக எனக்கு ஞாபக மில்லை.

பறிபோவதைப்பற்றி கவலைப்பட்டாலும் அதை நிறுத்தக் கூடியவர் எவருமில்லை. இவைகளொன்றும் தெரியாமல் பறிபோகவில்லை. தெரிந்துதான் பறிபோய்க்இகாண்டிருக்கிறது. தாயகக் கோட்பாடு இதனால் சுருங்கிக்கொண்டு போகிறது. அது மட்டுமல்ல, சிங்களவர் குடியேற்றங்கள் அபிவிருத்தியென்ற போர்வையில் நடைபெறுகையில் அவற்றை உலகாலும் தடுக்க முடியாது.

மூன்று தசாப்த ஆயுதப் போராட்டத்தின் முடிவில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொண்டதாக இல்லை.

இன்றும் நாம் இந்தியாவையும் சிங்களத்தையும் மேற்கையும் ஏனைய சக்திகளையும் ஏன் எங்களுக்குள்ளயும் எதிர்ப்பினைக்காட்டியே அலைகின்றோம். யார் எதைச் சொன்னாலும் செய்தாலும் அதில் உள்ள பிழைகளை பிடிப்பதிலும் அதை மட்டப்படுத்துவதிளும்தான் நம்மில் அநேகர் செய்கிறோம்.

ஆனால் சிங்களவன் பண்டா கலாம் தொட்டு என்ன செய்ய நினைத்தானோ அதையே இன்று மகிந்த சிந்தனை என்ற பெயரோடு செய்கின்றான்.

சம்பந்தரா இருந்த என்ன கஜேந்திரனாக இருந்தாலென்ன இதுக்கு விதிவிலக்காக இல்லை. அளிக்கப்பட்ட அளிக்கப்படுகின்ற இனம் என்ற வகையில் இவர்கள் பொதுவான ஒரு நிலைப்பாட்டுக்கு வரமுடியவில்லை. கூட்டமைப்பாக ஒருமித்த கருத்துக்கு இவர்களால் வரக்கூடிய ஒரு தூரநோக்கோ அல்லாது தலைமைத்துவமோ இல்லை. எல்லோரும் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றுதான் அடம்பிடிக்கிறார்கள்.

கூட்டமைப்பின் தலைவர் என்றமுறையில் தமது திட்டங்களை தெளியப்படுத்தி அதற்கான ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தி சவால்களை வெல்ல கூட்டமைப்பின் தலைமையால் முடியவில்லை. அதே போன்று தலைமையுடன் உள்ள கருத்து முரண்பாடுகளை களைந்து இனத்தின் இன்றைய தேவைகருதி அமைப்பின் ஒருமைப்பாட்டை தக்கவைக்க ஏனையவர்களுக்கும் முடியவில்லை.

விரும்பியோ விரும்பாமலோ நாம் ஒன்றை விளங்கவேண்டும் மூன்று தசாப்த ஆயுதப் போராட்டம் தொலவில் முடிவடைந்து விட்டது. இதுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பெயரிடமுடியும் அதாவது ஆயுதத்தை மவுநித்தல் அல்லது சர்வதேச அடக்குமுறைக் கும்பலால் அடக்கப்பட்டமை என்று எதை வேண்டுமென்றாலும் சொல்லலாம். எந்த முறையில் பார்த்தாலும் எமது ஆயுதப் போராட்டமும் போராட்ட மையமும் இன்று எதிரியால் வெற்றி கொல்லப்பட்டு விட்டது.

இதன்பின்னரான எமது பாதை சற்று கடினமானதாக இருந்தாலும் இதை செய்யவேண்டியது காலத்தின் கட்டயாம். இதை செய்யவிடாமல் தடுப்பதே எதிரியின் நோக்கமும். எதிரி என்ன செய்ய நினைத்தானோ அதை நாம் சரியாக செய்கிறோம். இதுக்கு நாமே காரணமா அல்லது எதிரியின் சூழ்ச்சிதான் காரணமா என்று காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

நிலைமையை சரி பன்னுவதுக்கு எல்லோர்மீதும் குற்றத்தை சாட்டி தள்ளி நிப்பது எந்த விதத்திலும் உதவப்போறதில்லை. இப்போதுள்ள நிலைமையில் சீரழிவில் இருந்து மீள்வதே பெரும்பாடு. இந்த நேரத்தில் எது அவசியோ அதையே முதலில் செய்யவேண்டும். போராட்டத்தின் இலக்கை இதனுள் போட்டு குழப்போவோமாக இருந்தால் இதைவிட மோசமாக அழிவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்காலுக்குப்பிறகும் தனிநாடு.....சண்டைபுடி எண்டு எழுதிறதப்பாக்க தாயகம் இப்பதான் கிடைச்சிருக்கிறமாதிரி தெரியுது. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தின் மீது எம்மவர்களுக்கு உள்ள பற்று மிக குழப்பகரமானது. இனப்பிரச்சனை என்பது வெளிப்படையான உண்மை அதே நேரம் இனப்பிரச்சனையை காரணம் காட்டி தாயகத்தை விட்டு வெளியேறிவிடுவது தாயகம் மீதான பற்றை விட அதிகப்படியானது. லண்டன் கனடா சுவிஸ் என்று புறப்படும் விருப்பை விட தாயகத்தில் இருக்கவேண்டும் என்ற விருப்பம் மிகக் குறைவானதே. புலப்பெயர்வுக்கு இனப்பிரச்சனை பேரினவாத நெருக்கடிதான் காரணம் தவிர எங்களுக்கு கனடா லண்டன் சுவிஸ் போக விருப்பம் இல்லை என்று எம்மை நாமே ஏமாத்த முடியாது.

போராட்டத்தில் இணைவது குறித்தும் எம்மவர்களுக்கு பெரும்பான்மை உடன்பாடு இருந்ததில்லை. போராளியாவதில் இருந்து ஏதோ ஒருவகையில் நழுவி விடுவது பெரும் முயற்சியாக இருந்தது. இருநூறாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்தும் பதினைந்து லட்சம் மக்கள் புலம்பெயர்ந்தும் பலலட்சம் அகதியாகியும் போராடி இறந்தவர்கள் முப்பதாயிரம் மக்கள் மட்டுமே. தாயகம் குறித்த அவசியம் புரிதல் பற்று என்பதை விட நழுவுதல் புலப்பெயர்தல் போன்றவற்றின் மீதான பற்றே அதிகம். எமது முரண்பட்ட இயங்குநிலையில் சிங்களப்பேரினவாதம் ஒரு காரணப்பொருளாக்கப்படுகின்றது.

எமது தாயகம் பறிபோவது என்பது சிங்களம் பறித்துக்கொள்வதும் நாம் பற்றற்று உதறி உதாசீனம் செய்வதும் கலந்து நடக்கும் ஒன்றே. வெள்ளைகளின் ஆக்கிரமிப்புக் காலத்திலும் சிங்கள ஒடுக்குமுறையின் அழுத்தம் குறைவான காலத்திலும் தென்னிலங்கையில் வாழ்வது கொளரவம், லண்டன் பக்கம் போவது அதி உயர் கெளரவம். அதே பழக்கம் சிங்கள ஒடுக்கு முறை வீரியமானவுடன் அதனுடன் இணைந்து முனைப்புக் கொள்கின்றது. இன்றும் கனடா லண்டன் சுவிஸ் கெளரவமான அல்லது என்னவோ ஒன்று.

நாம் சுயத்தை இழந்தவர்கள். சுயமரியாதை என்பது எனைய இனங்களை விட எமக்கு மிகக் குறைவு. போராட்டத்தில் இருந்து நழுவுதல் புலம்பெயர் வாழ்வு மீதான விருப்பு இதற்கு நல்ல உதாரணங்கள். சாதிய ஏற்றதாழ்வுகள் ஏற்படுத்திவிட்ட அடிப்படை விழைவுகள் இவைகள்தான். அதையே அறுவடை செய்கின்றோம். எமக்குள்ளாகவே ஒருவனுக்கு ஒருவன் மேலாகவும் கீழாகவும் மனம் ஏற்றுக்கொண்டு விட்டது. பரம்பரை பழக்கமாகி விட்டது. எங்கும் எவனுக்கும் அடிமையாக இருப்பதே ஏக பெரும் விருப்பாக உள்ளது தவிர எதர்த்து போராடுதல் என்பது நிராகரிக்கப்படுகின்றத. எமக்குள் எல்லாத் தளத்திலும் மேலானவனுக்கு வெள்ளைகளோ அல்லது எவன் அதிகாரம் மிக்கவனோ அவன் மேலானவனாகின்றான். இவ்வாறான மனப்பான்மையை அடிப்படையாகவைத்தே நாம் நகர்கின்றோம்.

எம்மை நாம் அழித்துக்கொண்டிருந்தோம் சிங்களவன் இடையில் வந்து அழித்தான் அவனின் அழிப்பதையும் நாம் மேலும் அழிவதற்கு பயன்படுத்துகின்றோம். பறிகொடுக்க் நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம் அதனால் பறிபோகின்றனது. சுட்டுவிரல் சிங்களவனைக் காட்டினும் மற்றவிரல்கள் எம் நெஞ்சையே சுட்டுகின்றது.

விரும்பியோ விரும்பாமலோ நாம் ஒன்றை விளங்கவேண்டும் மூன்று தசாப்த ஆயுதப் போராட்டம் தொலவில் முடிவடைந்து விட்டது. இதுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பெயரிடமுடியும் அதாவது ஆயுதத்தை மவுநித்தல் அல்லது சர்வதேச அடக்குமுறைக் கும்பலால் அடக்கப்பட்டமை என்று எதை வேண்டுமென்றாலும் சொல்லலாம். எந்த முறையில் பார்த்தாலும் எமது ஆயுதப் போராட்டமும் போராட்ட மையமும் இன்று எதிரியால் வெற்றி கொல்லப்பட்டு விட்டது.

இதன்பின்னரான எமது பாதை சற்று கடினமானதாக இருந்தாலும் இதை செய்யவேண்டியது காலத்தின் கட்டயாம். இதை செய்யவிடாமல் தடுப்பதே எதிரியின் நோக்கமும். எதிரி என்ன செய்ய நினைத்தானோ அதை நாம் சரியாக செய்கிறோம். இதுக்கு நாமே காரணமா அல்லது எதிரியின் சூழ்ச்சிதான் காரணமா என்று காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

நிலைமையை சரி பன்னுவதுக்கு எல்லோர்மீதும் குற்றத்தை சாட்டி தள்ளி நிப்பது எந்த விதத்திலும் உதவப்போறதில்லை. இப்போதுள்ள நிலைமையில் சீரழிவில் இருந்து மீள்வதே பெரும்பாடு. இந்த நேரத்தில் எது அவசியோ அதையே முதலில் செய்யவேண்டும். போராட்டத்தின் இலக்கை இதனுள் போட்டு குழப்போவோமாக இருந்தால் இதைவிட மோசமாக அழிவோம்.

போராட்டத்தில் இணைவது குறித்தும் எம்மவர்களுக்கு பெரும்பான்மை உடன்பாடு இருந்ததில்லை. போராளியாவதில் இருந்து ஏதோ ஒருவகையில் நழுவி விடுவது பெரும் முயற்சியாக இருந்தது. இருநூறாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்தும் பதினைந்து லட்சம் மக்கள் புலம்பெயர்ந்தும் பலலட்சம் அகதியாகியும் போராடி இறந்தவர்கள் முப்பதாயிரம் மக்கள் மட்டுமே. தாயகம் குறித்த அவசியம் புரிதல் பற்று என்பதை விட நழுவுதல் புலப்பெயர்தல் போன்றவற்றின் மீதான பற்றே அதிகம். எமது முரண்பட்ட இயங்குநிலையில் சிங்களப்பேரினவாதம் ஒரு காரணப்பொருளாக்கப்படுகின்றது.

எமது தாயகம் பறிபோவது என்பது சிங்களம் பறித்துக்கொள்வதும் நாம் பற்றற்று உதறி உதாசீனம் செய்வதும் கலந்து நடக்கும் ஒன்றே. வெள்ளைகளின் ஆக்கிரமிப்புக் காலத்திலும் சிங்கள ஒடுக்குமுறையின் அழுத்தம் குறைவான காலத்திலும் தென்னிலங்கையில் வாழ்வது கொளரவம், லண்டன் பக்கம் போவது அதி உயர் கெளரவம். அதே பழக்கம் சிங்கள ஒடுக்கு முறை வீரியமானவுடன் அதனுடன் இணைந்து முனைப்புக் கொள்கின்றது. இன்றும் கனடா லண்டன் சுவிஸ் கெளரவமான அல்லது என்னவோ ஒன்று.

நாம் சுயத்தை இழந்தவர்கள். சுயமரியாதை என்பது எனைய இனங்களை விட எமக்கு மிகக் குறைவு. போராட்டத்தில் இருந்து நழுவுதல் புலம்பெயர் வாழ்வு மீதான விருப்பு இதற்கு நல்ல உதாரணங்கள். சாதிய ஏற்றதாழ்வுகள் ஏற்படுத்திவிட்ட அடிப்படை விழைவுகள் இவைகள்தான். அதையே அறுவடை செய்கின்றோம். எமக்குள்ளாகவே ஒருவனுக்கு ஒருவன் மேலாகவும் கீழாகவும் மனம் ஏற்றுக்கொண்டு விட்டது. பரம்பரை பழக்கமாகி விட்டது. எங்கும் எவனுக்கும் அடிமையாக இருப்பதே ஏக பெரும் விருப்பாக உள்ளது தவிர எதர்த்து போராடுதல் என்பது நிராகரிக்கப்படுகின்றத. எமக்குள் எல்லாத் தளத்திலும் மேலானவனுக்கு வெள்ளைகளோ அல்லது எவன் அதிகாரம் மிக்கவனோ அவன் மேலானவனாகின்றான். இவ்வாறான மனப்பான்மையை அடிப்படையாகவைத்தே நாம் நகர்கின்றோம்.

எம்மை நாம் அழித்துக்கொண்டிருந்தோம் சிங்களவன் இடையில் வந்து அழித்தான் அவனின் அழிப்பதையும் நாம் மேலும் அழிவதற்கு பயன்படுத்துகின்றோம். பறிகொடுக்க் நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம் அதனால் பறிபோகின்றனது. சுட்டுவிரல் சிங்களவனைக் காட்டினும் மற்றவிரல்கள் எம் நெஞ்சையே சுட்டுகின்றது.

சரியாகக் கூறியுள்ளீர்கள். தோல்வியென்பதை முதலில் ஏற்றுக் கொண்டால்தான் அடுத் கட்டத்திற்கான தெளிவு வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.