Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரையரங்கில் பார்த்த 'எல்லாளன்' திரைப்படம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ellalan2.jpg

2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் திகதி நான் காலையில் யாழ் இணையத்தில் ஊர்ப்புதினத்தில் செய்திகள் பார்த்தபின்பு, புதினம் இணையத்தளத்துக்கு சென்றேன். "அனுராதபுரம் வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்" என்ற தலைப்பினைப் பார்த்தேன். யாழில் இணைக்கலாமா என யோசித்தேன். மகிழ்ச்சியான செய்தியைக் கண்டு யாழில் இன்னும் ஒருவரும் இச்செய்தியை இணைக்கவில்லையே. தெரிந்தவர்களுடன் தொலைபேசியில் இச்செய்தியைச் சொன்னேன்.யாழில் யாழ்கள உறவு 'மின்னல்' இச்செய்தியை முதலில் இணைத்தார். நானும் ஊடகங்களில் தேடிப்பிடித்து செய்திகளை இணைத்தேன்.பல வானூர்திகள் முற்றாக அழிக்கப்பட்ட செய்திகளை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அன்று ஈழத்தமிழர்கள் பலர் இச்செய்தி கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். வானூர்தித்தளத்தை தாக்கி அழித்து வீரமரணமடைந்த கறும்புலி வீரர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வந்தன. இவர்களை நினைத்து கவலைப்பட்டாலும் அன்று பெரும்பாலோர் அனுராதபுரம் வான்படைத்தளத்தாக்குதல் வெற்றியை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்கள். அனுராதபுரத்தில் நீதி நேறி தவறாது ஆட்சி செய்த கடைசித்தமிழரசன் 'எல்லாளன்' என்பவரின் பெயரை இத்தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் சூட்டினார்கள். எல்லாள மன்னனை வெற்றி கொள்ளமுடியாத துட்டகைமுனு என்ற சிங்கள அரசன் சூழ்ச்சியின் மூலம் எல்லாளனைத் தோற்கடித்தான் என்பது வரலாறு. அதே போல சேர சோழ பாண்டியன், சங்கிலியன், பண்டாரவன்னியனுக்குப் பிறகு உலகிலே கடைசியாக தமிழர் ஆட்சிசெய்த வன்னி நிலப்பரப்பை வெற்றி கொள்ள முடியாத சிங்களம் சூழ்ச்சி மூலம் தமிழர்களின் ஆட்சியைத் தோற்கடித்தது. பேச்சுவார்த்தை என்று நோர்வே இழுக்க,பயங்கரவாதிகள் என்று கனடா,ஐரோப்பிய நாடுகள் தடை செய்ய,தமிழுக்காக உதவி செய்த சகோதரர்களை அமெரிக்கா, கனடா, ஐரோப்பியா, அவுஸ்திரெலியா நாடுகள் கைது செய்ய, சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கு போட்டியாக சோனியாவின் இந்தியா சிங்களத்துக்கு உதவி செய்ய, குரல் கொடுத்த தமிழகத்து சகோதரர்களின் எழுச்சியை தடுக்க அரசியல்வாதி கருணாநிதி கபட நாடகம் நடாத்தி முடிக்க, யுத்தத்தில் பாவிக்கமுடியாத தடை செய்யப்பட்ட கொத்தணிக்குண்டுகள், நச்சுவாயுக்கள் உதவியுடன் சிங்களம் தமிழரது ஆட்சியைத் தோற்கடித்தது.

சிட்னியில் 'எல்லாளன்' திரைப்படம் பேர்வூட் திரையரங்கில் காண்பிக்கப்பட்டது. பெரிதாக விளம்பரம் இல்லாவிட்டாலும் இப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக 4 முறை திரையிடப்பட்டது. நுளைவுச்சீட்டினைப் பெறமால் ஏமாற்றத்துடன் திரும்பியவர்களுக்காக மேலும் 2 காட்சிகள் இங்கு திரையிடப்பட்டது.படம் காண்பிக்கமுன்பு, பார்வையாளர்கள் எல்லோரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று அனுராதபுரம் தாக்குதலில் வீர மரணமடைந்த போராளிகளுக்கும், இத்திரைப்படத்தில் பங்கேற்று உயிரழந்த கலைஞர்களுக்கும், மண்ணுக்காக வீரமரணமடைந்த போராளிகளுக்கும், மக்களுக்கும் அஞ்சலி செலுத்தினோம்.

'எல்லாளன்' திரைப்படத்தில் நடித்தவர்கள் பலர் தற்பொழுது உயிரோடு இல்லை. படப்பிடிப்பு நடக்கும்போது ராணுவம் குண்டு வீசியதில் மேஜர் புகழ்மாறன், தவா, அகிலன், ரவி ஆகிய நால்வர் படப்பிடிப்புத் தளத்திலேயே இறந்துபோனார்கள். நாட்கள் போகப் போக, நடித்தவர்களும் பணிபுரிந்தவர்களும் ஒவ்வொருவராக உயிரிழந்தாலும் படம் முழுமையான திட்டப்படி படப்பிடிப்பின நடாத்தி முடித்தார்கள். வன்னியில் சிறிலங்காப் படை குண்டுவீச்சினால் மக்கள் இறக்க (குறிப்பாக செஞ்சோலையில் வீசிய குண்டினால் 60க்கு மேற்பட்ட சகோதரிகள் இறக்க), கொலைகார விமானத்தை அழிக்க 21 கரும் புலிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். புலம் பெயர்ந்த நாடுகளுக்கு கோழைகளாக என்னைப்போல ஒடிச்சென்ற பலருக்கு அனுராதபுரம் தாக்குதலின் வெற்றி தான் தெரியும். ஆம் அன்று மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் அதன் பின்னால் இருக்கும் போராளிகளின் தியாகம் பலருக்கு தெரியாது. தாக்குதலை நடாத்துவதற்கு பல நாட்களாக கடினமான பயிற்சி, வேவுப்புலிகளின் வேவுபார்த்து தகவல் சேகரிப்பு, இக்கரும்புலிகளுக்கு இருக்கும் அன்பும் பாசமும் உள்ள குடும்பங்கள். இவர்களை நேசிக்கிற குடும்பத்தவர்களும், காதலிக்கிற காதலிகளும் இருக்க பிறந்த மண்ணுக்காக விலைமதிக்கமுடியாத உயிரைத் தியாகம் செய்கிறார்கள்.

எதுவித கற்பனையுமின்றி நடந்தவற்றை மீண்டும் இப்படத்தில் காணலாம். 2008ல் கொடிய யுத்தங்களுக்கு மத்தியில் முல்லைத்தீவு காட்டில் இப்படத்துக்காக விமானத்தளம் செயற்கையாக அமைத்து படம் பிடித்திருக்கிறார்கள். தண்ணீறுற்று போன்ற கிராமங்களில் படம் எடுத்திருக்கிறார்கள். திரையில் கட்டாயம் பார்க்க வேண்டிய இப்படம் முடியும் போது தமிழீழ அரசியல் துறை, நிதித்துறை.... என பலருக்கு நன்றிகள் காண்பிப்பார்கள். சிறுசு சிறுசாகக் கட்டிய கோட்டை முற்றாக தற்போது அழிந்து விட்டதே என்பதை நினைத்து எனது கண்ணில் வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முயற்சித்து தோல்வியடைந்தேன். என்னைப் போல பலர் படம் முடிந்தும் திரையரங்கை விட்டு வெளியேறாமல் சில நிமிடங்கள் அங்கேயே இருந்தார்கள்.

http://kanthappu.blogspot.com/2010/03/blog-post.html

Edited by கந்தப்பு

இந்த வீர வரலாற்றை தமிழகத்திலும் திரையிட வழியுள்ளதா

மக்களே நமக்காக போராடிய யாரையும் மறக்கும்இ கைவிடும் பரம்பரை நாமில்லை என்பதை பலருக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது அதை தயவுசெய்து உங்கள் செயல்கள் மூலம் நினைவு படுத்துங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று எல்லாளன் படம் Harrow safari cinema வில் திரையிடப்பட்டது நானும் சென்று பார்த்தேன். இதில் சொல்லப்பட்ட போராளிகளின் வாழ்க்கை, அவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் என்பதைவிட வேறு எதையுமே சிந்திக்கமுடியவில்லை, வேறு எதனுடனும் ஒப்பிட்டுப்பார்க்கமுடியவில்லை..உதாரணத்துக்கு இயக்கத்தையோ, ஒளிப்பதிவையோ, இசையையோ வேறு எந்தவிதமான technical விடயங்களையோ வேறு எந்தப்படத் தரத்துடனும் மனதளவில் கூட ஒப்பிட்டுப்பார்க்கமுடியவில்லை... படம் முடிந்ததும் மனம் முழுக்கப் பாரமாக வெளிவந்ததுதான் ஞாபகம்....

இதில் நடித்த பலபோராளிகள் இன்று உயிருடன் இல்லையென்ற நிஜத்தையும் மனது ஏற்க மறுக்கிறது..

குறிப்பிட்டளவு வளத்தைமட்டும் வைத்துக்கொண்டு நிஜவாழ்க்கையை திரையில் காண்பித்த அனைத்துத்

தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்....

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரைப்படத்தின் இறுவெட்டினை எப்படி பெற முடியும் நான தாயகத்தில் இருக்கின்றேன் யாராவது மெயிலில் அனுப்புவீர்களா?????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீர வரலாற்றை தமிழகத்திலும் திரையிட வழியுள்ளதா

தமிழகத்திலே, இந்தியாவிலே விடுதலைப்புலிகள் சம்பந்தமான திரைப்படங்களை அனுமதிக்கமாட்டார்கள்.

இத்திரைப்படத்தின் இறுவெட்டினை எப்படி பெற முடியும் நான தாயகத்தில் இருக்கின்றேன் யாராவது மெயிலில் அனுப்புவீர்களா?????

தாயகத்தில் கொலைகார மகிந்தா ஆட்சியில் சிறைக்கு செல்ல விருப்பமா?

இதில் நடித்த பலபோராளிகள் இன்று உயிருடன் இல்லையென்ற நிஜத்தையும் மனது ஏற்க மறுக்கிறது..

உண்மைதான் நம்ப முடியாமல் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு எல்லாளன் இறுவெட்டினை எனக்கு மெயிலில் அனுப்பமுடியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு எல்லாளன் இறுவெட்டினை எனக்கு மெயிலில் அனுப்பமுடியுமா?

இப்பொழுது புலம் பெயர்ந்த நாடுகளில் திரையில் படம் காண்பிக்கப்படுவதினால், இறுவெட்டுக்களை விற்பனைக்கு வெளியிடவில்லை என நினைக்கிறேன். சில மாதங்களுக்கு பிறகு இறுவெட்டினை வெளியிட்டால் நீங்கள் இப்படத்தைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ellalan2.jpg

-----

ஆனால் அதன் பின்னால் இருக்கும் போராளிகளின் தியாகம் பலருக்கு தெரியாது. தாக்குதலை நடாத்துவதற்கு பல நாட்களாக கடினமான பயிற்சி, வேவுப்புலிகளின் வேவுபார்த்து தகவல் சேகரிப்பு, இக்கரும்புலிகளுக்கு இருக்கும் அன்பும் பாசமும் உள்ள குடும்பங்கள். இவர்களை நேசிக்கிற குடும்பத்தவர்களும், காதலிக்கிற காதலிகளும் இருக்க பிறந்த மண்ணுக்காக விலைமதிக்கமுடியாத உயிரைத் தியாகம் செய்கிறார்கள்.

எதுவித கற்பனையுமின்றி நடந்தவற்றை மீண்டும் இப்படத்தில் காணலாம். 2008ல் கொடிய யுத்தங்களுக்கு மத்தியில் முல்லைத்தீவு காட்டில் இப்படத்துக்காக விமானத்தளம் செயற்கையாக அமைத்து படம் பிடித்திருக்கிறார்கள். தண்ணீறுற்று போன்ற கிராமங்களில் படம் எடுத்திருக்கிறார்கள். திரையில் கட்டாயம் பார்க்க வேண்டிய இப்படம் முடியும் போது தமிழீழ அரசியல் துறை, நிதித்துறை.... என பலருக்கு நன்றிகள் காண்பிப்பார்கள். சிறுசு சிறுசாகக் கட்டிய கோட்டை முற்றாக தற்போது அழிந்து விட்டதே என்பதை நினைத்து எனது கண்ணில் வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முயற்சித்து தோல்வியடைந்தேன். என்னைப் போல பலர் படம் முடிந்தும் திரையரங்கை விட்டு வெளியேறாமல் சில நிமிடங்கள் அங்கேயே இருந்தார்கள்.

http://kanthappu.blogspot.com/2010/03/blog-post.html

எனக்கு படத்தை பார்க்க இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

உங்கள் விமர்சனத்தை வாசித்த பின்பு மனதில் ஏற்படும் ஏக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை பார்க்க நானும் ஆர்வமாய் இருக்கிறன்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு படத்தை பார்க்க இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

உங்கள் விமர்சனத்தை வாசித்த பின்பு மனதில் ஏற்படும் ஏக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

காட்டாயம் ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய படம்.

படத்தை பார்க்க நானும் ஆர்வமாய் இருக்கிறன்.

இன விடுதலைக்காக விலைமதிக்கமுடியாத உயிரைத்தியாகம் செய்த தியாகிகளின் கதை எல்லாளன். இத்திரைப்படத்தில் நடித்தவர்களில் பலர் இன விடுதலைக்காக போராடி வீர மரணமடைந்தவர்கள். அவர்களுக்காக இத்திரைப்படத்தை கட்டாயம் திரையில் சென்று பாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் எப்போது திரையிடுவார்கள் என்று யாரவது சொல்வார்களா? இந்த வருமானம், போராளிகள் குடும்பங்களுக்கு போய்செருமா?

லண்டனில் எப்போது திரையிடுவார்கள் என்று யாரவது சொல்வார்களா? இந்த வருமானம், போராளிகள் குடும்பங்களுக்கு போய்செருமா?

லண்டனில் நான்கைந்து இடங்களில் போட்டு விட்டார்கள் என நண்பன் சொல்லக் கேட்டேன். உண்மையா ?

இதில் வருமானம் மாவீரர்குடும்பங்களுக்குப் போய்ச்சேருமா ? எனக்கும் எழுந்த கேள்வி ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் எப்போது திரையிடுவார்கள் என்று யாரவது சொல்வார்களா?

லண்டனில் நான்கைந்து இடங்களில் போட்டு விட்டார்கள் என நண்பன் சொல்லக் கேட்டேன். உண்மையா ?

மேலே இளங்கவி என்ற உறுப்பினர் தான் கரோ சவாரி திரையரங்கில் பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார்.

எப்படியாவது இப்படத்தை பாக்க வேண்டும், இப்போது இறுவெட்டு வந்தா படம் தோல்விஅடைந்து விடும், எல்லோரும் திரைஅரங்குகளில் சென்று பாருங்கள், நாம் ஈழத்தில் காத்திருப்போம், இறுவெட்டு வந்தவுடன் பார்க்கலாம் !!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்படியாவது இப்படத்தை பாக்க வேண்டும், இப்போது இறுவெட்டு வந்தா படம் தோல்விஅடைந்து விடும், எல்லோரும் திரைஅரங்குகளில் சென்று பாருங்கள், நாம் ஈழத்தில் காத்திருப்போம், இறுவெட்டு வந்தவுடன் பார்க்கலாம் !!!

கட்டாயம் பாருங்கள். இப்படத்தில் நடிக்கும் போது சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதல்களினால் போராளிக்கலைஞர்கள் சிலர் வீரமரணம் அடைந்தார்கள். அவர்களுக்காவது பாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வரை தமிழகத்தைவிட்டு வெளியில் சென்றது இல்லை இந்த படம் பார்க்கவாது செல்லலாம் என்று தோன்றுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணேய் இதையும் பாருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71167

இணைப்புக்கு நன்றி தர்மராஜ். அழகாக இத்திரைப்படம் பற்றிச் சொல்லியிருக்கிறார் இலாவண்யா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது வரை தமிழகத்தைவிட்டு வெளியில் சென்றது இல்லை இந்த படம் பார்க்கவாது செல்லலாம் என்று தோன்றுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த நீங்கள் ஈழ விடுதலை மீது மிகுந்த பற்று இருக்கிறீர்கள். ஆனால் ஈழத்தில் பிறந்தவர்களில் சிலர்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தைச் சேர்ந்த நீங்கள் ஈழ விடுதலை மீது மிகுந்த பற்று இருக்கிறீர்கள். ஆனால் ஈழத்தில் பிறந்தவர்களில் சிலர்.....

அய்யா எல்லா இடத்திலும் ஒத்த கருத்துகள் நிலவா, அவர்கள் வலியை உள்ளீருந்து பார்த்தவர்கள், அவரின் வலி அதிகமாக இருக்கும், இப்படி ஒரு வலி தேவையா, இத்தனை நாள் இருந்தது போலவே இருந்து விட்டு போவோமே என்று நினைத்திருக்கலாம். நான் வெளியில் இருந்து பார்த்தவன், வெறும் மனவலிமட்டும் தான், ஏன் நானும் அங்கிருந்திருந்தேன் என்றால் எனக்கு கூட இந்த உணர்வு வந்திருக்கலாம்.

ஆனால் அவர்களை பற்றி நொந்து கொள்வதை விட அடுத்த நடவடிக்கைகள் தான் நல்லது. ஊர் கூடினால் தேர் இழுக்க முடியும் அவர்களும் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் வடக்கயிறை நாம் தூக்குவோம்.

  • 4 weeks later...

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த எல்லாளன் திரைப்படம்

fr20ellalan20pos.png

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி கந்தப்பு!! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.