Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரகடன முழக்கம் செய்வோம்

Featured Replies

அன்புத் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம்

முக்கியமான காலகட்டத்தில் நிற்கின்றது.

முள்ளிவாய்க்காலின் பின்

தமிழர்களுடைய எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றதோ என்ற தவிப்பும்

அச்சமும் பலமட்டங்களில் மேலேழுந்துள்ள இவ்வேளை

ஈழத்தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் இருப்பு

எவ்வாறு அமைந்தாக வேண்டும் என்ற தங்கள் மனக் கிடக்கையை

சனநாயக வடிவில் உலகுக்கு உணர்த்தும் வாய்ப்பாக

இரண்டு தேர்தல்களை எதிர்கொண்டு நிற்கும் முனைப்பான காலகட்டமே இது.

இலங்கைத் தீவில் சிறிலங்கா அரசின் பொதுத் தேர்தலும்

புலத்தில் நாடு கடந்த தமிழீழ் அரசுக்கான தேர்தலும்

சமகாலத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

தமிழர்களின் அரசியல் சக்தியாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின்

ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுவிட்ட நிலையில்

இவ்விரு தேர்தல்களும் அதி முக்கியமானதாக பலராலும் கருதப்படுகின்றது.

நடைமுறை அரசொன்றை நிறுவி

உலகத் தமிழ் மக்களுக்களின் வேராக விளங்கிய

விடுலைப் புலிகள் அமைப்பை

சிறிலங்கா அரசும் அதன் நேசசக்திகளும் கூட்டாக சிதைத்துவிட்ட நிலையில்

தமிழர்கள் தங்களின் எதிர்கால அரசியல் இருப்பை

தக்கவைக்கவும் அதனை உறுதியாக கட்டமைத்துக் கொள்ளவும் வேண்டிய

பொருத்தமான சாதக சூழலை உருவாக்க வேண்டிய தருணம் இது.

தமிழர்களின் அரசியல் தளத்தை சிதைத்து

எஞ்சியிருக்கும் நம்பிக்கைகளை அகற்றி

தனது பேரினவாத பிடிக்குள் தமிழர்களை வைத்திருக்கவே

சிறிலங்கா அரசு உறுதியோடு துணிந்து நிற்கின்றது.

ஏப்ரல் 8ம் நாள் இலங்கையில் இடம்பெற இருக்கின்ற

சிறிலங்கா அரசின் பொதுத் தேர்தலில்

தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்து

ஒரு நிலைகுலைந்த அரசியல் தளத்தை நிறுவி

அரசியல் அந்தகார தமிழர்களை தள்ளத் துணிந்த நிற்கும் சிறிலங்கா அரசு -

மே 2ம் நாள் புலத்தில் இடம்பெற இருக்கின்ற

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலையும்

குழப்பவும் சீர்குலைக்கவும் பலவீனப்படுத்தவும

கங்கணங்கட்டி நிறிகின்றது.

நாடு கடந்த தமிழீழ அரசினை உடைப்போம் என

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித்த போகெல்லாகம

கொக்கரித்த சூழுரைப்பு இதன் சமீபத்திய சாட்சியாகும்.

தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையை

சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாது

சிறிலங்காவின் பேரினவான கோரப்பிடிக்குள் சிக்கியிருக்கும்

எமது தாயக உறவுகளுடைய உரிமைக்குரலாக

உலக அரங்கில் ஓங்கி ஒலிக வேண்டிய பொறுப்பு

இன்றைய காலகட்டத்தில் புலத்து தமிழர்களுடையதே என்பதை

நாம் மறக்கவோ தட்டிக்கழிக்கவோ முடியாது.

விடுதலைப் புலிகளின் உயர் அரசியல் ஆலோசனை பீடத்தால்

முள்ளிவாய்காலின் பின் முன்வைக்கபட்ட நாடு கடந்த தமிழீழ அரசு என்பது

தமிழர்களின் எதிர்கால இருப்புக்கு உறுதியாக வழிகோலப் போகும்

ஒப்பற்ற உயர் அரசியல் பீடமாகும்.

எமது இலட்சியத்தை அடைவதற்கு

சமகால உலக அரசியல் ஒழுங்கினை கருத்தில் கொண்டு

சனநாயக அடிப்படையில் உருவாக்கம் பெற்றுள்ள இந்த செயல்திட்டம்

தமிழீழ அரசை நிறுவுவதை இலட்சியமாக கொண்டு

தாயக உறவுகளின் வாழ்வுரிமையை பாதுகாப்பதோடு

புலத்து தமிழர்களின் எதிர்கால அரசியல் இருப்புக்கும் உறுதியாக வழிகோலுகின்றது.

இத்தகயை அரசியல் வல்லமை பொருந்திய

ஒரு புதுமையான அரசியல் வேலைத்திட்டத்தை குழப்பும் நோக்கில்

சிறிலங்கா அரசு பல மறைமுக நாசகார வேலைத்திட்டங்களை

துரிதமாக புலத்தில் ஏவி வருகின்றது.

நாடு கடந்த தமிழீழ அரசினை தோல்வியுறச் செய்வதன் ஊடாக

விடுதலைப் புலிகளினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வேலைத்திட்டத்தை

தமிழர்கள் புறக்கணித்து விட்டனர் என்ற பரப்புரையை

உலக அரங்கில் மேற்கொள்ளவும் அது முனைப்புக் காட்டி வருகின்றது.

இதன் பொருட்டு நாடு கடந்த தமிழீழ அரசு குறித்தான

பொய்யான கருத்தினை தமிழர்கள் மத்தியில் பரப்ப முனைந்துள்ளது.

இதற்கான முகவர்களை தமிழர்கள் மத்தியில் நடமாட விட்டுள்ளதோடு மட்டுமல்லாது

பொய்யான பரப்புரைப் பணியில் சில ஊடகங்களையும் உருவேற்றி

மறைமுகமாக ஊக்குவித்தும் வருகின்றது.

இத்தகைய சூழ்ச்சிக்குள் தமிழ் மக்கள் சிக்காது

ஒரு பலமான அரசியல் தளமாக நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்க

திடசங்கற்பம் பூணுவோம்.

இதன் வழி தமிழீழ தனியரசை மண்ணில் அமைப்போம்.

புலத்தில் வாழ்ந்து வரும் இளையோர்களே - கல்விமான்களே

அறிஞர்களே - சமூக ஆர்வலர்களே - வளம் நிறைந்த பெருமக்களே

தமிழினத்தின் உறுதியான பலமும் நிறைவான வளமும் நீங்களே!

உங்களுடைய பல வடிவப் பங்களிப்பே

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பலமாகும் என்பதனை ஐயம்திரிபற நம்புங்கள்.

இந்த நாடு கடந்த தமிழீழ அரசியல் பீடத்துக்கான தேர்தலில்

இயலுமானவர்கள் வேட்பாளர்களாக முன் வரட்டும் !

அனைவருமே வாக்களர்களாக பங்கெடுப்போம் !

தமிழ் மக்களுக்கான வளம் நிறைந்த

ஓர் அரசியல் எதிர்காலத்தை அனைவரும் கூடி உருவாக்குவோம்

அன்புக்குரிய உறவுகளே !

முள்ளிவாய்காலுடன்

தமிழர்களின் விடுதலைத் தீ அணைந்து விட்டதெனச் சூளுரைக்கும்

சிறிலங்கா பேரினவாத அரசுக்கு

சனநாயக ரீதியில் தகுந்த பதிலுரையை கூறுவோம் !

தமிழர்களை வென்றுவிட்டதாக

ஸ்ரீலங்கா அரசு கொக்கரித்த மே-17ம் நாள்

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைத்து

தமிழர்களின் பலமான அரசியல் இருப்பை

பிரகடன முழக்கம் செய்வோம்.

திரண்டு வாரீர்....!

சுதன்ராஜ்

தமிழ் சமூக மேம்பாட்டு அசைவியக்கம் - பிரான்சு

முழக்கம் செய்தவர் பலபேர்

சிங்கள அரசுக்கும்

இந்திய பயங்கரவாதிகளுக்கும்

எலும்புத்துண்ண்டு தூக்கி திரிகிறார்கள்.

முழக்கம் செய்தவர் பலபேர்

சிங்கள அரசுக்கும்

இந்திய பயங்கரவாதிகளுக்கும்

எலும்புத்துண்ண்டு தூக்கி திரிகிறார்கள்.

முடியுமானால் பிரான்ஸ் இல் சண் டி வியை புறக்கணீக்க முடியுமா?

Edited by சுனாமி

முழக்கம் செய்தவர் பலபேர்

சிங்கள அரசுக்கும்

இந்திய பயங்கரவாதிகளுக்கும்

எலும்புத்துண்ண்டு தூக்கி திரிகிறார்கள்.

முழக்கம் செய்தவர் பலபேர்

சிங்கள அரசுக்கும்

இந்திய பயங்கரவாதிகளுக்கும்

எலும்புத்துண்ண்டு தூக்கி திரிகிறார்கள்.

முடியுமானால் பிரான்ஸ் இல் சண் டி வியை புறக்கணீக்க முடியுமா?

ஐயோ, எங்களால் அதுமட்டும் முடியாது.

ஆனால் மற்றவர்களை இந்திய அடிவருடிகள் என்றுமட்டும் சொல்வோம்.

முடியுமானால் பிரான்ஸ் இல் சண் டி வியை புறக்கணீக்க முடியுமா?

சீரியல் எப்படி பார்பது? :D:D:rolleyes:

போன வருடம் மே மாதம் என்றாலே அவலத்தின் குரல். இரத்தம் தோய்ந்த மாதம். ஒரு வருட நினைவுகள் அசை போடு முன்,

இங்க இலண்ட்னில மே 10 இந்தியபாட்டு காரன் கரிகரன், யாரோடும் படுத்து எழும்பலாம் கற்பு பிரச்சனை இல்லை என்று சொல்லி தமிழரையே கேவலப்படுத்திய குஸ்பு ஆகியோர் இசை நிகழ்சி ஒன்றை வைக்க வருகினம்..

இதே மே மாதம் நாங்கள் தெருவில் அழுத போது கண்டு கொள்ளாத கரிகரன் குஸ்பு கோஸ்டி அதே மாதத்தில் மகிழ்வூட்ட வருகினமாம்.

தமிழ் தரித்திர ஊடகங்களும் மூச்சு வாங்க விளம்பரம்.

தமிழரே ஏன் இப்படி?? ஏய்த்து கொண்டே இருக்கிறார்கள்.

புறக்கணியுங்கள். மே மாத நிகழ்வுகள் கொடுரமானவை. வரலாறே மண்ணுக்குள் அமுக்கபட்ட நாள்.

Edited by நேசன்

இது நடக்கின்ற கதையா? புறக்கணிப்பா? பாருங்க இந்தியர்களை விட எம்மவர்களே நுளைவுச்சீட்டுக்களுடன் முண்டியடித்துக்கொண்டு முன்னுக்கு நிற்பார்கள்.

யாரோடும் படுத்து எழும்பலாம் கற்பு பிரச்சனை இல்லை என்று சொல்லி தமிழரையே கேவலப்படுத்திய குஸ்பு ஆகியோர் இசை நிகழ்சி ஒன்றை வைக்க வருகினம்..

ஏன் என்றால் குஷ்பு சொல்லாவிடின் இது எம்மவர்களுக்கு தெரியாத ஒன்று தானே.... கணவன்மாரை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு எம்மவர்களில் சிலர் செய்யும் அட்டூளியங்கள் சொல்லில் அடங்காதவை. இன்னும் வவுனியா யாழ்ப்பாணத்தில் மணித்தியாலத்துக்கு அறைகளை வாடகைக்குவிடும் வீடுகளும் இருக்கின்றன இங்கு எம் பதின்ம வயது இளம் சிறுமிகள், யுவதிகள் வயதுக்கு வந்த இளைஞர்களுடனும், வயது கூடிய ஆண்களுடனும் செய்யும் லீலைகளை எப்படிச் சொல்வது? இது எல்லாம் என்ன குஷ்பு சொல்லி தானா நடந்தது?

இதை யாரும் நிரூபிக்க கேட்டால் நிரூபிக்க கூடிய சில ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன..... வவுனியா, யாழ் காவல்துறையால் அப்படி சந்தோசமாக இருக்கும் போது கைது செய்யபட்டு வழக்கு பதியப்பட்டவர்களின் விபரங்களுடன் கூடிய குற்றப்பதிவேட்டுடன் உங்களை சந்திக்க தயாராக உள்ளோம்.

Edited by விடிவெள்ளி

  • கருத்துக்கள உறவுகள்

இதை யாரும் நிரூபிக்க கேட்டால் நிரூபிக்க கூடிய சில ஆதாரண்க்கள் எம்மிடம் உள்ளன..... வவுனியா, யாழ் காவல்துறை அப்படி சந்தோசமாக இருக்கும் போது கைது செய்யபட்டு வழக்கு பதியப்பட்டவர்களின் விபரங்களுடன் கூடிய குற்றப்பதிவேட்டுடன் உங்களை சந்திக்க தயாராக உள்ளோம்.

ஓ இப்ப இந்த தொழிலும் தொடங்கியுள்ளீர்கள் போல உள்ளது விடிவெள்ளி.கூட்டமாக தான் செயற்படுகிறீர்கள் போல :D:D

ஓ இப்ப இந்த தொழிலும் தொடங்கியுள்ளீர்கள் போல உள்ளது விடிவெள்ளி.கூட்டமாக தான் செயற்படுகிறீர்கள் போல :D:D

ஏன் நீங்களும் தொடங்க உத்தேசித்திருக்கின்றீர்களா? அதற்குள் நாம் தொடங்கிவிட்டோமா? சும்மா கூச்சல் போடாமல் நான் சொல்வது பொய் என்றால் யாழ்ப்பாணம், வவுனியாவுக்கு ஒரு தடவை வாருங்கள் உங்களுக்கு வேண்டியவையை நீங்கள் காணலாம் :rolleyes::lol:

இத்தகைய உறவுகள் முறையோ தவறோ என்பதுக்கு அப்பால், இது அவர்களின் வாழ்வை சீரழித்து வரவது மட்டும் உண்மை. முன்பு யாரோ ஒருவர் யாழில் எழுதியபடி, இது பலவீனமான எதிர்கால தமிழ் சமுதாயத்தை உருவாகும். எதோ ஈர்ப்பில், சூழ்நிலையில் "முறை தவறி" உறவு வைப்பவர்கள் கிழக்கில் அதிகரிப்பதை நாம் கேட்கும் கதைகள் உறுதி செய்கின்றன. இதை மாற்றவேண்டிய கடப்பாடு, தமிழ் சமுதாயத்தில் அக்கறையுள்ள ஒவ்வருவருக்கும் உண்டென்பது எனது கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.