Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்தியத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த சிவாஜிலிங்கம் முடிவு

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்குள் பிரவேசிப்பதற்கு தமக்கு அனுமதி மறுக்கப்பட்டமைக்கு எதிராகவே இவ் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டு சென்னை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், புதன்கிழமை இரவு பத்தரை மணியளவில் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை மாலை 3.05 மணியளவில் கிங் ஃபிஷர் எனப்படும் தனியாருக்குச் சொந்தமான விமானத்தில் கொழும்பிலிருந்து புறப்பட்ட தாம் 4.40 மணியளவில் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தாகவும், சுமார் நான்கு மணித்தியாலங்கள் தமக்கு சென்னை விமான நிலையத்தில் தரித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"மாலை 5.00மணியளவில் சென்னை விமான நிலையத்தில் குடிவரவு,குடியகல்வு அதிகாரிகள் தம்மை இந்தியாவுக்குள் பிரவேசிக்க முடியாது எனக்கூறினர். அதற்குரிய காரணத்தை நான் வினவியபொழுது தமக்கு இடப்பட்ட உத்தரவு என்றும், தம்மால் எதுவும் கூற முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

எதுவாக இருப்பினும் புது டில்லியில் உள்ள உள்துறை அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர். பின்னர் 9.15 மணியளவில் என்னை ஏயர் லங்கா விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டனர்" என்றார்.

எதிர்வரும் 21 ஆம் திகதிவரை தாம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதாகவும்,அந்த அடிப்படையிலேயே தமது பயணத்தை மருத்துவ பரிசோதனையின் நிமித்தம் மேற்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை செல்லுபடியான சார்க் நாடுகளுக்குச் செல்லும் பயணச் சீட்டை தமது கடவுச் சீட்டில் இணைத்துள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

- வீரகேசரி -_

இந்தியத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த சிவாஜிலிங்கம் முடிவு

ஏதோ குழம்பி போயி மீண்டும் இந்திய படையை அனுப்ப சொல்லி ஆர்ப்பாட்டமோன்னு பயந்து போயிட்டேன்

ஏதோ குழம்பி போயி மீண்டும் இந்திய படையை அனுப்ப சொல்லி ஆர்ப்பாட்டமோன்னு பயந்து போயிட்டேன்

இந்திய படையல்ல இந்திய பயங்கரவாதிகள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. முன்பு இந்தியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டவர் சிவாஜிலிங்கம். பின்னர் என்ன நம்பிக்கையில் மீண்டும் சென்றார்? ஏன் இப்போது ஆர்ப்பாட்டம் வேறு? யாருக்காக இந்த நாடகம்?

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. முன்பு இந்தியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டவர் சிவாஜிலிங்கம். பின்னர் என்ன நம்பிக்கையில் மீண்டும் சென்றார்? ஏன் இப்போது ஆர்ப்பாட்டம் வேறு? யாருக்காக இந்த நாடகம்?

நாடகமோ - கீடகமோ, ஆர்ப்பாட்டம் என்றால் என்னெண்டு தெரியாமல் ஈழத் தமிழன் இருக்கும் காலத்தில், சிவாஜிலிங்கத்தின் போராடும் குணத்தை பாராட்டுவதை விட்டுவிட்டு, சும்மா தொண.... தொண... என்று .........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடகமோ - கீடகமோ, ஆர்ப்பாட்டம் என்றால் என்னெண்டு தெரியாமல் ஈழத் தமிழன் இருக்கும் காலத்தில், சிவாஜிலிங்கத்தின் போராடும் குணத்தை பாராட்டுவதை விட்டுவிட்டு, சும்மா தொண.... தொண... என்று .........

மனித்துக் கொள்ளுங்கள் நண்பரே! அவர் தனக்காகத் தான் ஆர்ப்பாட்டம் செய்கிறார் என்று தவறாக விளங்கிவிட்டேன். ஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்காகவும் போராளிகளை விடுவிக்கக் கோரியும் தான் ஆர்ப்பாட்டம் செய்கிறார் என்பது உங்கள் கருத்துக்குப் பின் தான் விளங்குகிறது. நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.