Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினர்தான் தாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடுகின்றார்களா? - பூமுகன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ன்னி இராணுவ ஆளுகைக்குள் இருகின்றது இராணுவ மயமாக்கப்படுகின்றது என்பதை எடுத்துக் காட்டும் வகையில் பல்வேறு செய்திகள் கிடைத்து வருகின்றன. அண்மையில் பூநகரியில் நடந்த மரணச் சடங்கு ஒன்றிற்கு சென்று வந்த பூமுகன் அங்கு இராணுவத்தினர் மக்களை நெருங்கி செய்யும் பணிகள் குறித்தும் அந்த சூழலில் உள்ள அதன் பாதிப்பு குறித்தும் பூநகரியில் ஒரு நாள் என உதயன் நாளிதளில் இந்தப் பதிவை எழுதியுள்ளார்.

இராணுவ மயமாக்கும் எண்ணங்களை அந்த மக்களின் மனங்களிலிருந்து எடுத்துக் காட்டும் இந்த பதிவு.

யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் இலங்கை இராணுவத்தினர் ஓய்வு நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இது அரசுக்கு பொருளாதார ரீதியாகப் பல்வேறு நெருக்கடிகளைத் தோற்றுவித்திருக்கின்றது. தற்போது களமுனைகள், காவல் நிலைகள், காவலரங்குகள் என்பவற்றில் படையினர் இல்லை. குறிப்பாக இராணுவ முகாம்கள் அமைந்துள்ள பகுதிகள்,சில முக்கியமான வீதிகள், கடற்கரையோரங்கள் மற்றும் சோதனைச்சாவடிகள் என்பவற்றில் கணிசமான அளவு படையினர் சுழற்சி முறையில் கடமையில் ஈடுபடுத் தப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்காகச் சேர்க்கப்பட்ட படையினர் தற்பொழுது ஓய்வு நிலையில் இருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் அரசு மாற்று வேலைகளில் இராணுவத்தினரை வித்தியாசமாகப் பயன்படுத்தி வருகின்றது. இங்கு வித்தியாசமன என்பது மக்கள் மத்தியில் இராணுவத்தினர்மீதான நல் அபிப்பிராயம் ஒன்றை ஏற்படுத்தி அதன்மூலம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டமாகும். வன்னிப் பிரதேசத்தில் பூநகரிக் கிராமத்தில் ஒரு மரணச் சடங்கில் இராணுவத்தினர் நடந்து கொண்ட, செயற்பட்ட விதம் இதனை உறுதி செய்வது போன்று அமைந்திருக்கின்றது.

ஆரசின் செயற்திட்டத்தின் ஊடாகப் படையினர் பல உத்திகளைக் கையாண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக நாடு முழுவதும் பரவிய டெங்கு நோய் பல உயிர்களைக் காவு கொண்டதுடன் பலரை நோக்குள்ளாக்கியும் இருந்தது. டெங்கு நோயைக் கட்டுப்படுத்த சுகாதாரணத் திணைக்களத்தினரும் தொண்டு நிறுவனத்தினரும் பல்வேறு திட்டங்களையும் விழிப்புணர்வு செயற்பாடுகளையும் மக்களுக்கு வழங்கியிருந்தனர். மறு பக்கமாக இராணுவத்தினரின் படையணிகள் மக்களுடன் இணைந்து டெங்கை கட்டுப்படுத்த சிரமதானப் பணிகளையும் விழிப்புணர்வுக் கருத்துக்களையும் மக்களிடம் பரப்பி துணை நின்றன.

இவற்றைவிட மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் யாழ் பாதுகாப்பு தலமையகம் ஊடாக படையணிகள் பல இணைந்து பல்வேறு பட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகின்றன. பாடசாலை மட்ட இல்ல மெய்வன்மைப் போட்டிகள் உள்ளுர் விளையாட்டு அணிகளுக்கிடையிலான போட்டிகள், விளையாட்டு அணிகளுக்கும், இராணுவ வீரர்களும் இடையிலான போட்டிகள் என அவை அமைந்திருக்கின்றன. உன்மையில் இந்த செயற்பாடுகள் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு, ஒற்றுமையை ஏற்படுத்துகின்றது? மறுபக்கத்தில் ‘செய்கின்றார்கள் செய்யட்டும்’ என்று அமைகின்றதோ மக்களுக்கு சில நன்மைகள் கிடக்கின்றன என்பது யதார்த்தம் ஆகும். குடா நாட்டில் நிலமை இப்படி இருக்க வன்னிப் பகுதியில் படையினரின் பங்களிப்பு என்பது வித்தியாசமாக உணரப்படுகின்றது.

நடந்து முடிந்த யுத்த்ததின் பொழுது எல்லாவற்றையும் இழந்து இடம்பெயர்ந்து வவுனியா அகதி முகாங்களில் தங்கியிருந்த மக்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் தற்போது படிப்படியாக மீள்குடிமயர்த்தப்படுகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை முக்கியமான சில பாடசாலைகளில் தற்காலிகமாக விடப்படும் மக்கள் இராணுவத்தினரின் உதவியுடன் மீளக்குடியமர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதன் முதற்கட்டமாக பாடசாலைகளில் இருந்து குடும்பத் தலைவர், குடும்பத்தலைவியரை உழவு இயந்திரத்தில் ஏற்றிகச் கொண்டு அவர்களின் காணிகளுக்கு செல்லும் இராணுவத்தினர் அவரவரது காணிகளில் சிறு குடிசை அமைப்பதற்குத் தேவையான விபரங்களை சேகரிக்கின்றனர். மறுநாள் காலை குறிப்பிட்ட கிராமத்தில் மீள் குடியமர்த்துவதற்காக ஏற்றப்படும் குடும்பங்கள் அவரவரது காணிகளில் இறக்கப்பட்டதும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தற்காலிக குடிசை அமைத்து கொடுப்பதற்காக 6 முதல் 8 வரையான படையினர் உதவிப் பணிகளில் ஈடுபடுகின்றனர். இதன் பொழுது வீட்டிற்கு உருத்துடையவர்கள் எந்த வேலைகளையும் செய்ய படையினர் அனுமதிப்பதில்லை. அந்தளவுக்கு பெருவிருப்புடன் அவர்களின் பணி இருக்கின்றது.

இவ்வாறு முக்கியமான பணியை படையினர் செய்வது மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றிருக்கின்றது. இவ்வாறான பணிகளை முடித்த பின்பும் நலன் விசாரிக்கும் பாணியில் புலன் விசாரணை நடத்தவும் படையினரின் ஒரு பகுதியினர் விசேடமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனபதும் நோக்கத்தக்கது. இவை இவ்வாறு இருக்க இந்த மாதம் முற்பகுதியில் (02.04.2010) அகதி முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த முகாமைத்துவ கற்கைகள் வணிகபீட மாணவனான் பாலசிங்கம் கருணாநிதி தனது இரண்டாம் வருட இறுதி அரையாண்டுப் பரீட்சை முடிவில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இந்த மாணவனின் மரணச் சடங்கில் படையினர் நல்கிய பங்களிப்பை மறந்துவிட முடியாது. மரணமான மாணவனின் குடும்பத்தினர் வவுனியா நலன்புரி நிலையத்திலிந்து ஒரிரு வாரங்களுக்கு முன்பதான் அவர்களது சொந்த இடமான பூநகரி, கறுக்காய் தீவு பகுதியில் மீள குடியமர்த்தப்பட்டனர். இவர்கள் மீளக்குடியமரும்போது படையினர் உதவினரோ என்வோ பன்னிரண்டு தகரங்களில் ஒரு வேப்பமர நிழலில் அவர்களது தற்காலிக குடிசை அமைக்கப்பட்டிருந்தது. வயல் வெளியாக காட்சியளிக்கும் அந்தப் பகுதியில் தற்போது நிலவும் அசாதாரண வெப்பநிலை எப்படி இருக்கும் என்று சொல்லிப் புரிய வைக்க முடியாது. சுற்றியிருக்கும் எல்லா குடும்பங்களும் இ;படித்தான் இருக்கின்றன. முன்னரைப்போhன்று பந்தல், கதிரைகள் என்று வாடகைக்கு அமர்த்துவதற்கு எதுவுமே கிடையாது ஆனால் வன்னியில் தரப்பாலுக்கு பஞ்சமில்லை. இதை ஒவ்வொரு தொண்டு நிறுவனங்களும் தமது நாமத்தால் எல்லா குடும்பங்களுக்கும் வழங்கியிருப்பதை காண முடிகின்றது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இந்த மாணவனின் பூத உடல் அவரின் வீட்டுக்கு கொண்டு செல்லப்படட் போது படையினர் பல்வேறு வகையில் உதவிகளை மேற்கொண்டனர். பூநகரியில் குடி தண்ணீரைப் பெறுவது சற்றுக் கடினம். எல்லா வீடுகளிலும் கிணறு இருந்தலும் அவை உவர் நீராகவே காணப்படும். சில இடங்களில் மாத்திரமே நல்ல தண்ணி கிணறுகள் உள்ளன. இந்த வெப்பமான காலத்தில் தண்ணீர் இல்லாமல் எப்படி சமாளிப்பது? பொறுத்த நேரத்தில் படையினர் மூன்;று நான்கு தாங்கிகளில் நீரை நிப்பி உதவினர்.

மரணச் சடங்கின் பொழுது காலை மதியம் மாலை நேரங்களில் உணவுகளையும் அனைவருக்கும் படையினரே வழங்கினர். உண்மையில் மரணச் சடங்கிற்கு வருபவாகளுக்கு அயலவர்கள் உணவு மற்றும் நீர் ஆகாரங்களை வழங்குவது வன்னியில் ஒரு வழக்கும். இப்பொழுது அவ்வளவுக்கு அவர்கள் வசதியாக இல்லை. பெருமளவில் சமைப்பதற்கு போதுமான பாத்திரங்களை பெறுவதும் சிரம்தான். ஆனால் பல்வேறு இடங்களிலிருந்தும் மரணச் சடங்கிற்கு வந்தவர்களின் பசியை எப்படியோ தீர்க்கத்தான் வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் பூநகரி பிரதேசத்தில் படையினரின் உதவி மிகவும் தேவையான ஒன்றாகவே இருந்திருக்கின்றது. ஆனால் அவர்கள் இந்த உதவியை கேட்காமலே செய்திருந்தனர்.

அன்றைய தினம் இறுதிக் கிரியைக்காக கருணாநிதியின் உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லுவதற்குக் கூட படையினர் உதவினர். அவரின் உடல் உழவு இயந்திரத்தின் மூலம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இப்படி வன்னியில் மக்களுக்கு துணையாக படையினர் ஈடுபட்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். அதனை அந்த பிரதேச மக்கள் நன்றியுடன் எடுத்து சொல்லுகின்றனர். வன்னிப் பகுதியில் யுத்த காலத்தின் பொழுது படையினரால் மக்கள் கட்டம் கட்டமாக இடம்பெயர வைக்கப்படடனர். இதன்போது ஷெல்தாக்குதல்கள் விமானத் தாக்குதல்கள் என்று பல்வேறு இன்னல்களுக்குள் அகப்பட்டு உயிர்களைப் பறிகொடுத்து பெறுமதியான சொத்துக்களை இழந்து உடுத்த உடையுடன் அகதி முகாங்களில் மக்கள் தஞ்சமடைந்தனர். அப்பொது அரச தரப்பினரும் தொண்டு நிறுவனங்களும் வழங்கிய உலர் உணவுப் பொருட்கள், சயைல் பாததிரங்கள், புடவைகள், கூரை விரிப்புக்கள், பிலாஸ்டிக் பொருட்கள் என்று சிறிய மூடைகளுடன் மீளக் குடியமர வந்திருக்கும் இந்த மக்களுக்கு மீண்டும் இராணுவத்தினரே பல்வேறு வகைகளிலும் உதவி புரிவது வித்தியாசமான ஒரு புறச் சுழலை அப்பகுதியில் ஏற்படுத்தி வருகின்றது.

மக்கள் தமக்கு நடந்தவற்றை எல்லாம் மறந்து இந்த உதவிகளை மனதார ஏற்றுக் கொள்ளுகின்றார்களா? அல்லது படையினர்தான் தாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடுகின்றார்களா? என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகும். எப்படியோ இந்தச் சந்தர்ப்பத்தில் படையினர் மக்கள் மனங்களை வென்று ஒரு நல்லுறவைக் கட்டி எழுப்ப முற்படுவதன் விளைவுகள் எப்படி இருக்கப் போகின்றன? படையினரின் இந்த மாற்றத்திற்கு வேறு எதுவும் பின்னணி உண்டா? என்பதை கண்கூடாக பார்ப்பதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

நன்றி : உதயன்

pathivu.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதயன் கட்சி மாறீட்டுது ....சரவணபவன் இன்னும் மாறேல்லதானே! :D

இவர்கள் இப்படித்தான் நடித்து தங்களின் வேலையை கொண்டு போவார்கள். எ து பொ க்களுக்குதான் இது சரி

மற்றும்படி 1996 யாழில் இதே வேலை செய்து பிறகு யாவரும் அறிந்ததே . எத்தனை கொலைகள் பெண்கள் கடத்தல்கள், பாலியல் வல்லுறவுகள், என்று இன்னோரன்ன என்று பலதும் அரங்கேறிக்கொண்டிருக்கிறார்கள்.

உள்னோக்கம் மதிவனங் உட்பட அனைத்து தமிழர்களும் அழியும் வரை சிங்களவனின் நடிப்பு தொடரும்

தி. மு. க. கள் தான்.....

அப்போ பூமுகன் என்ன ஒட்டு குழுவா? அல்லது தேசத்துரோகியா?

என்ன சொல்கின்றீர்கள் யாழ் கள பேராசிரியர்களே, வைதிய கலாநிதிகளே, வழக்கறிஞர்களே ?

எவர் நல்லது செய்தாலும் பாராட்ட பட வேண்டியதே.

  • கருத்துக்கள உறவுகள்

தி. மு. க. கள் தான்.....

அப்போ பூமுகன் என்ன ஒட்டு குழுவா? அல்லது தேசத்துரோகியா?

என்ன சொல்கின்றீர்கள் யாழ் கள பேராசிரியர்களே, வைதிய கலாநிதிகளே, வழக்கறிஞர்களே ?

பூமுகன் சொன்ன சம்பவம் உண்மை.ஆனால் கடந்த காலங்களில் சுனாமி சொன்னது போல் இராணுவம் கடந்த காலங்களில் நடந்து கொண்டு பின்னர் என்ன செய்தது என்பது முழு சமூகமுமே அறியும்.எனவே அனுபவங்களில் இருந்து பட்டறிந்ததை தான் சொல்கிறோம்.அதாவது நல்ல மனதுடன் இராணுவம் செய்வதாக நம்ப தயாரில்லை. உதாரணத்துக்கு 17000 ஆக இருந்த சரணடைந்த போராளிகள் இன்று 11000 என்ற அளவில் உள்ளது.இப்போ தெரியவில்லையா இவர்களின் சுயமுகம்???

இந்த கொலைவெறி இராணுவம் மாறி நல்லவர்களாகி விட்டார்கள் என்றால் நம்ப இன்னும் கேணையர்கள் உலகில் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள். :lol:

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், சிங்களவர் வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ……

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், சிங்களவர் வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ……

என்ன ஆசான் உடைந்த றெக்கொட் போன்று .........

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்....ரூம் போட்டு யோசிபாங்களொ.....

என்ன கிளிபிள்ளை போல கீச்சுட்டுகொண்டு........

ஏதாவது வேற சிடியை கேட்டு வாங்கி போடலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கிளிபிள்ளை போல கீச்சுட்டுகொண்டு........

ஏதாவது வேற சிடியை கேட்டு வாங்கி போடலாமே?

தோழரே மருதங்கெணி நான் இந்த திரிக்கு பதில் எழுத வில்லையே.....

தோழரே மருதங்கெணி நான் இந்த திரிக்கு பதில் எழுத வில்லையே.....

அவர் அப்படித்தான் .... இதை எல்லாம் பெரிசு படுத்தாதீர்கள்... விசயம் வெளியே தெரிஞ்சால் யாரும் பொம்புளை தரமாட்டாங்கள். பெரியமனசு பண்ணி விடுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஆசான் உடைந்த றெக்கொட் போன்று .........

ஏன அண்ண குற்ரமுள்ள நெஞ்சு குறுகுறுக்குதா? :(:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.... இங்கதான் அரசியல் ஆய்வுகள் கட்டுரையள் பறக்குது..... அங்க நடக்கிறது தலைகீழா இருக்கு.

பாக்கபோனா தலைவர்ட தனிநாட்டு கொள்கைய பின்பற்றி கொஞ்ச காலத்தில ஒற்றநாடு உருவாகிடும். :(

ம்.... இங்கதான் அரசியல் ஆய்வுகள் கட்டுரையள் பறக்குது..... அங்க நடக்கிறது தலைகீழா இருக்கு.

பாக்கபோனா தலைவர்ட தனிநாட்டு கொள்கைய பின்பற்றி கொஞ்ச காலத்தில ஒற்றநாடு உருவாகிடும். :(

அப்பவும் புலியை சொறியிற வேலையை நீங்கள் நிப்பாட்ட மாட்டியள் தானே...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.