Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே ( வலி சுமந்த மாதம் ) 18 - போர்க்குற்ற நாள் !

Featured Replies

  • தொடங்கியவர்

Make it a pledge, like Jews remember their Pesach & Matzah. Tamils should remember May 18 for generations like Jews.

The major spring festival is Pesach, Passover. Passover celebrates the Exodus from Egypt when the Jews were led out of slavery and into freedom. For eight days (seven in Reform Judaism), Jews eat no normal bread but only the flat, unleavened, cracker-like bread called Matzah. The Bible tells that, as the Jews made their hasty preparations to leave Egypt, they had no time to prepare bread for their journey. Instead, they placed the dough—which had no time to rise and be baked—on their backs. There the sun baked it into Matzah.

Every Tamil on this planet cooks rice in salt water to register memories of last day of living in Mullivaikkal (genocide).

Edited by akootha

  • Replies 323
  • Views 41.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காட்டாறு, இதனை நீக்கச் சொல்லி பலர் ரிப்போர்ட் பண்ணியிருந்தனர். ஆனால், மாவீரருக்கு வணக்கம் என்று போட்டுவிட்டு அந்த மாவீரர்களும் மக்களும் பெருந்தொகையில் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டதையே மறுத்து நக்கல் விடும் இப்படியானவர்களின் பதில்களை நீக்குவதால் அவர்கள் பற்றி பிறர் அறிய முடியாமல் போய்விடும் என்று விட்டு நீக்காமல் எச்சரிக்கை புள்ளிகள் மட்டும் வழங்கினேன். சிலவற்றை நீக்கினால் புரியும், சிலவற்றை நீக்காமல் அப்படியே விடுவதுதான் புரியும்.

ஒரு 500 சொறிநாய்களை போட்டிருந்தால் இன்னுமொரு சொறி நாய் கூட்டம் வர வாய்ப்பே இல்லை.

  • தொடங்கியவர்

HI Everyone,

The month of May marks the first year remembrance of the Tamil genocide carried out by the Sri-Lankan Government. During this time last year, thousands of innocent Tamils were targeted and brutally massacred. Many others were forcibly displaced into overcrowded detention centers, detention centers that were run more like concentrations camps that failed to provide basic necessities of life. Today, 100,000 Tamils are still unsettled in their respective villages, and remain in these camps.

============================================

The Protest Details

-----------------------

Starting from May 3rd to May 19th, there is going to be a continuous candle light vigil in front of University Ave from 4 PM - 8 PM.

Please come down and show your support. The Tamils will rise one day.

Location: 360 University Avenue, Toronto, Ontario M5G 1S4 Canada

Date: May 03, 2010

Time: 4 PM - 8 PM

============================================

Join Eelam Tamil Youth:

http://www.facebook.com/group.php?gid=115902154793&ref=ts

Join My Country Tamil Eelam:

http://www.facebook.com/group.php?gid=121522489199&ref=ts

காட்டாறு, இதனை நீக்கச் சொல்லி பலர் ரிப்போர்ட் பண்ணியிருந்தனர். ஆனால், மாவீரருக்கு வணக்கம் என்று போட்டுவிட்டு அந்த மாவீரர்களும் மக்களும் பெருந்தொகையில் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டதையே மறுத்து நக்கல் விடும் இப்படியானவர்களின் பதில்களை நீக்குவதால் அவர்கள் பற்றி பிறர் அறிய முடியாமல் போய்விடும் என்று விட்டு நீக்காமல் எச்சரிக்கை புள்ளிகள் மட்டும் வழங்கினேன். சிலவற்றை நீக்கினால் புரியும், சிலவற்றை நீக்காமல் அப்படியே விடுவதுதான் புரியும்.

நன்றி நிழலி

இதைத் தான் நான் ஏற்கனவே பலமுறை சொன்னேன் நீங்கள் செவி மடுக்கவில்லை

முகமில்லாதவர்களின் சுய முகங்களை அவர்களே சுயமாக அடையாளப்படுத்துவதற்கு இது உதவும்

தவிர நீக்கும் போது இவர் இப்படி எழுதியதால் நீக்கப்படுகின்றது என்று யாருக்கும் தெரியாமல் போய்விடுகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக, இதன் முதல் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன, இணையம் மூலமாக தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறொம் ஆனால் இது போதாது என்பது நன்றாக தெரியும். அனைத்து கொடுமைகளையும் இணையத்தில் நாங்கள் பார்த்துவிட்டோம் ஆனால் இந்த படித்த அறிவாளி கூட்டம் சிறியது தெருவில் இறங்கி போராட யோசிப்பவர் இதில் பலர் உண்டு. இறங்கி போராடகூடியவர்கள் அன்றாடம் தன் வயிற்று கஞ்சிக்கு உழைத்து ஓடாய் தேயும் தமிழர்கள் தான் அவர்களை இந்த கட்சிகள் வயிற்றில் அடித்து தங்கள் வயிறு வளர்க்கிறார்கள். ஆனால் இந்த அரசியல் கட்சிகள், ஊடகங்கள் கயமைத்தனத்தை அவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதை முதல் வேலையாக எடுத்துக் கொண்டுள்ளோம். நடந்த அவலங்களை புத்தகமாக வெளியிட முயற்சிகள் நடந்து கொண்டுள்ளது.

ஒற்றுமையே பலம்

எனது நோக்கம் ஜெயலலிதாவுக்கு வாக்கு போட வைப்பதில்லை.ஆனால் காணொளியில் காட்டப்படுபவை நிச வாழ்வில் நடை பெறும் போது தான் உண்மையில் தமிழருக்கு விடுதலை. அது இந்தியாவாக இருக்கட்டும் , ஈழமாக இருக்கட்டும்.

  • தொடங்கியவர்

முக்கிய கடமைகள், முக்கிய நாட்கள்

இவையென்னவென்று தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டுகிறேன்.

ஏப்ரல் 15, 16 வாசிங்டனில் என்ன ? என்ன ??

பதில்: பங்கு பெற்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. பங்கு பெறாதவர்கள் பங்கு பெற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். என்று நீங்கள் பங்கு பெற ஆரம்பிக்கிறீர்களோ அன்றுதான் நம் வெற்றிப் பயணம் தொடங்கும்.

பங்கு பெற்றவர்கள் உடனே நன்றி மடல்கள் அனுப்புங்கள்.தொலை பேசியில் தொடர்பு உண்டாக்கிக் கொள்ளுங்கள். அது மிக மிக முக்கியம்.

மே 2 நாடு கடந்த அரசிற்கு வேட்பாளர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய அத்தனை அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி,

இது ஏன் ? அது ஏன் ? என்று கேள்விகள் கேட்கும் நல்ல உள்ளங்களுக்கு ஒரு பதில்.

இணையத்தில் சென்று எத்தனை யூத அமைப்புக்கள் உள்ளன என்று பார்க்கவும். விவரம் தெரியாமலா?

நம்மைப் போன்று " நான், நான், நான் " என்ற பெருமைக்காக அல்ல.

அத்தனை அமைப்புக்களும் அவரவர் வேலைகளை ஒழுங்காகச் செய்கிறார்கள். பல அமைப்புக்களுக்கு அனைவரும் பணம் கொடுக்கிறார்கள்,உழைப்பைத் தருகிறார்கள்.

நாம் அனைத்துத் தலைப்பிலும் பேச விரும்புகிறோம் ஆனால் உழைக்கின்றோமா?

உழைப்பவர்களுக்கு ஆதரவாவது தருகிறோமா? வெட்டிப் பேச்சு- வெட்டி இ மெயில் வீரர்களா?

சிந்திக்கவும் செயல் படவும் வேண்டுகிறேன்.

மே 18 உலகெங்கும் என்ன ? என்ன?? என்ன ???

மே 15 வாசிங்டனில் என்ன நடக்கப் போகிறது? வருவதற்கு ஏற்பாடுகள் செய்து விட்டீர்களா?

யார் செய்வார்கள் என்று காத்திருக்கிறீர்கள்?

நமக்காக வேறு யாரையாவது உணவருந்தச் சொல்கிறோமா?

உறுப்பினர் ஆகி விட்டீர்களா? எத்தனை நண்பர்களிடம் பேசிச் சேர்ந்து கொள்ளச் செய்துள்ளீர்கள் ?

நீங்கள் செய்யாவிட்டால் யார் வந்து செய்யப் போகிறார்கள் என்று சொல்வீர்களா?????????????

மிக்க நன்றி, வணக்கம்.

USTPAC.

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி

may18flyer.jpg

வொசிங்டன் டிசி

86855964.png

மெல்பேர்ண்

warcrimesdaymelb1805101.jpg

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

வறியோர்க்கு உணவு - 5-16-2010

அன்புடையீர்,

வணக்கம். தமிழ்சங்கத்திற்குத் தாங்கள் அளித்து வரும் ஆதரவிற்கும், உதவிகளுக்கும் நன்றி.

தமிழ்சங்கம், உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையுடனும், அமெரிக்கத் தமிழ்ப்பள்ளியுடனும் இணைந்து நடத்தும் கடந்த (2009) மே மாதம் 17ல் வக்கிரமம் கொண்ட சிங்கள இரரணுவிதால் தமிழீழத்தில் வாழ்வு இழந்தத் தமிழர்க்கு "நினைவு கூறும் நாள்"

வறியோர்க்கு உணவு -

வரும் விடை (மாசி) 2, திருவள்ளுவர் ஆண்டு 2041

மே 16 - 2010 (5-16-10) ஞாயிறு பகல் 11:00 முதல் பிற்பகல் 2:30 மணி வரையும்

Hesed House

659 S. River St.,

Aurora, IL: 60506

நடைபெறும்.

(10 to 12) பத்திலிருந்து, பதினைந்து ஆண்கள், பெண்கள், சிறார்கள் உதவி தேவையாகும். பங்கு பெறுவோர் உங்கள் விருப்பத்தை 5-10-2010 (திங்களு)க்குள் தெரிவிக்கவும்.

தங்களின் உதவியை பண மூலம் செய்ய விரும்புவோர்

காசோலையினை

Pay to the order of "Thamizh Schools USA" விற்கு எழுதி

குறிப்பில் (For .. ) Homeless Feeding என்று குறிப்பிட்டு

va.sa. Babu

Thamizh Schools USA

Anai Illam, 8844 Oakwood Dr

Hickory Hills, IL: 60457

முகவரிக்கு அனுப்பவும்.

தங்களின் ஆதரவிற்கும், உதவிகளுக்கும் நன்றி.

நன்றி,

அன்புடன்

தொடர்பு, இடைமேற்கு தமிழ்ச்சங்கம்

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்….

  • தொடங்கியவர்

ஈழத்தமிழர் நினைவு நாள்

ஈழத் தமிழர்களின் 26 வருடங்கள் ஆயுதப் போராட்டத்தின் முக்கிய களமாக, காலமாக அமைந்த மே மாதம் 2009ம் ஆண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப் பட்டார்கள். குறிப்பாக முதல் இரண்டு வாரங்களுக்குள் மட்டும் 20,000 ற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.

கொடிய போரிலே கொன்று அழிக்கப்பட்ட அப்பாவி மக்களை நினைவு கூருவதும் அவர்கள் அந்தக் காலப் பகுதியிலே சந்தித்த கொடிய அவலங்களை, வேதனைகளை நினைத்துப் பார்ப்பதும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களாகிய எங்களின் கடமையாகும்.

ஈழத் தமிழர்கள் பட்ட இந்த கொடிய துயரை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவும், எமது குழந்தைகள் வருங்கால சந்ததியினர் ஈழத்தமிழினம் அனுபவித்த இந்த மறக்கமுடியாத அவலங்களை என்றென்றும் மறக்காமல் இருக்கவும், உலகெங்கும் வாழும் தமிழர்களாகிய நாம் – மே மாதம் 18 ம் திகதியை “ஈழத்தமிழர் நினைவு நாள்” எனப் பிரகடனப் படுத்தி அவர்களை நினைவுகூருதல் காலத்தின் தேவையும், கட்டாயமுமாகும்.

ஈழத்தமிழினத்தின் நீண்டகாலத் துயரங்களும், இழப்புகளும் எளிதிலே மறந்துவிட முடியாது என்பதனை எடுத்துச் சொல்வதோடு, அவர்களின் நியாயமான உரிமைகள் கிடைத்து சமாதானமும் சுதந்திரமும் கொண்ட வாழ்வு வாழ எங்களின் ஆதரவு என்றும் இருக்கும் என்பதனையும் உலகத்தில் பரந்து வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட இந்தச் செய்கையானது உறுதி செய்வதாக அமையும்.

1) ஈழத்தமிழர் நினைவு நாள் என்றால் என்ன?

2008 – 2009 ம் ஆண்டு காலப் பகுதிகளில் போரிலே மடிந்த அப்பாவித் தமிழ் மக்களை நினைவுகூர்ந்து நடாத்தப்படும் அமைதியான உண்ணாநோன்பு நிகழ்வு.

2) ஈழத் தமிழர் நினைவு நாளில் என்ன செய்யலாம்?

- மதியம் 12.00 மணியிலிருந்து பிற்பகல் 6.00 மணிவரை உண்ணா நோன்பினைக் கடைப்பிடித்தல்.

o மதிய உணவினை முற்றாக விலக்குதல்

o பழரசங்கள், மதுபானங்கள் உட்கொள்ளாமல் இருத்தல்

o மாமிச உணவுகளைத் தவிர்த்தல்

- உண்ணா நோன்பினை பிற்பகல் 6.00 மணிக்கு முடித்தல்

o ஒருவாய்ச் சோறுடனும் சிறியளவு உப்புடனும் உண்ணா நோன்பினை முடித்தல்

o ஒருவாய்ச் சோறு – எமது மக்கள் பட்டினியால் ஒருவாய்ச் சோறுகூட இன்றி அவதிப்பட்டதையும் சிறிய உப்பு – குடிப்பதற்குத் தண்ணீர் இன்றி தாகத்தால் தவித்ததையும் உணர்த்துவதாக அமையும்.

3) எங்கே உண்ணா விரதத்தினைக் கடைப்பிடிக்கலாம்?

- உங்கள் இல்லங்களில்

- உங்களுடைய வழிபாட்டுத் தலங்களில்

- நிகழ்வுக்காக ஒன்றுகூடும் இடங்களில்

4) எப்போது ஈழத்தமிழர் நினைவு நாள் கடைப்பிடிக்கப்படும்?

- ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ம் திகதியில் இதனைக் கடைப்பிடிக்கலாம்.

  • தொடங்கியவர்

ஈழத்தமிழர் நினைவு - மே 05 2009

*வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களுக்கான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கான விநியோகத்தை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்திருப்பதால், அவர்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களால் அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு விடுதலைப் புலிகள் அனைத்துலக சமூகத்தைக் கேட்டனர்.

*தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச படையினரால் இதுவரை விடுவிக்கப்படாமல் எஞ்சியுள்ள சுமார் நான்கு சதுரகிலோமீட்டர் பரப்பளவில் தங்கியிருப்பதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக இலங்கை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கபாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

*கனடா எட்மொன்டன் நகரில் எமது தாயக உயிர்களை காப்பாற்றும் முகவாகவும் மற்றும் எமது தாகய விடுதலைக்காகவும் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் பலதரப்பட்ட மக்களுடன் ஐக்கிய நாடுகள் சபை காரியாலயத்தின் முன்பாக நடைபெற்றது.

*யாழ்ப்பாணத்தில் உயிருக்கஞ்சி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைவோரை மனிதவுரிமைகள் ஆணைக்குழு வாகனங்களில் அல்லாமல் தனியார் வாகனங்களில் அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

*விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியன. *தமிழகத்தின் அனைத்து இந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் ஈழக் கோரிக்கை பொறுப்பற்ற செயலாகும் என மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்தார்.

*அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தனர். இதில் இரு படையினர் கொல்லப்பட்டனர்.

*இலங்கையிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் புகலிடம் கோரிய ஈழத் தமிழர்கள் இருவரை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தினால் அது அவர்களைக் கொலை செய்வதற்கு சமம் என இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவர்கள் தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

* இத்தாலி மேற்பிராந்திய தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் ஜெனேவா மாநகரில் மாபெரும் தீப்பந்த கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தியது.

*ஈழத்தமிழர்கள் திட்டமிட்டு இந்திய, ஸ்ரீலங்கா கூட்டுப்படைகளால் இனப்படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துமாறு தமிழ்நாட்டு மக்களும், புலம்பெயர் ஈழத்து உறவுகளும் இரவு பகலாகப் போராட்டங்களை முன்னெடுத்து விடுத்த கோரிக்கைகளுக்கு இந்திய அரசின் மெளனமும் அதன் மறுதலையான செயற்பாடுகளும் அவர்களின் உண்மையான முகத்தினை இன்னும் வெளிப்படையாகக் காட்டியிருக்கின்றது. தாயகத்திலிருந்து கா.வே. கரிகாலன் தெரிவித்தார்.

*வன்னியில் உள்ள சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் பேருக்கான உணவு நிவாரணங்களை அனுப்பாதிருப்பதன் மூலம் யார் அந்த மக்களை பணயக்கைதிகளாக வைத்திருக்கின்றார்கள் என்ற விடயத்தை சர்வதேசம் தெரிந்து கொள்ள வேண்டும் என வன்னியில் உள்ள மக்கள் தெரிவித்தார்கள்.

*ஜேர்மனி டுசில்டோவ் பாராளுமன்றம் முன்பாக இடம்பெற்ற வரும் பட்டினிப் போராட்டம் இரண்டு நாளாக தொடர்ந்து நடைபெற்றது.

*இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவரின் சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, மற்றும் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக போர் குற்றச்சாட்டு விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என அமெரிக்காவின் உள்ள தமிழர் இனப்படுகொலைகளுக்கு எதிரான அமைப்பின் ஆலோசகர் புருஸ் பெய்ன் தெரிவித்தார்.

*புத்தள பகுதியில் கிளேமோர் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது. இதில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

* கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது. இவ்வாறு சென்னையில் நடைபெற்ற கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சீமான் ஆவேசமாகப் பேசினார்.

*மோதல்கள் காரணமாக வன்னியில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணத்தை தாம் ஒரு போதும் பகிரங்கப்படுத்தவில்லையென கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் தெரிவித்தது.

*மட்டக்களப்பில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட எட்டு வயது மாணவி தினுஷிக்கா படுகொலை தொடர்டபான சந்தேக நபர்கள் மூவர்காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர்.

*தமிழகம் காரைக்குடி அருகே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த வாலிபர் ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை வாழ்த்தி கோசமிட்டபடி, மரக்கட்டையை தூக்கி எறிந்தார்.

*இலங்கைக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் பிரிட்டனின் விசேட பிரதிநிதியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.அதன்போது இடம்பெயர் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகள் தொடர்பில் விரி வாக ஆராயப்பட்டது.

  • தொடங்கியவர்

ஈழத்தமிழர் நினைவு -மே 06 2009

*இலங்கையின் வடக்கே, முல்லைத்தீவில் போர்ப் பிரதேசத்தில் சிக்குண்டுள்ள ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள், பாதுகாப்பான பகுதிக்குள் செல்வதற்கு வசதியாக போர் நிறுத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு கனேடிய அரசாங்கம் விடுத்த கோரிக்கையையும் கொழும்பு அரசு நிராகரித்துவிட்டது.தாம் வகுத்த திட்டப்படி செயற்படவே அரசாங்கம் விரும்புகிறது பெவ் ஒடா தெரிவித்தார்.

*சுவீடனில் நந்தன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாநிலைப் போராட்டம் integration minister ஆகிய Nyamko Sabuni தந்த வாக்குறுதியால் நிறைவுபெற்றது.

*வன்னியில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போது தமது பெற்றோர்களை இழந்தநிலையில், காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில், சிகிச்சைபெற்று வந்த 6 சிறுவர்களை அவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் ஏ ஜூட்சன் உத்தரவிட்டார்

*தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க, பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவேண்டும் என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்தை மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கண்டித்தார்.ஐக்கிய தேசியக்கட்சியும் தமிழர்களுக்கு எதிரான கட்சியே: மனோ கணேசன் தெரிவித்தார்.

*அரசாங்கம் 70 ஆயிரம் மக்கள் தான் வன்னியில் உள்ளதெனக் கூறியது. அங்கு 3 இலட்சம் மக்கள் இருந்துள்ளனர். அரசு அரசியல் இலாபத்துக்காக சர்வதேச நாடுகளை பகைப்பது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல' என்றும், அரசின் அநாவசிய செயற்பாடுகளே சர்வதேச அழுத்தம் ஏற்பட காரணமெனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

*நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு சர்வோதயப் பண்ணைக்கு அனுப்பப்பட்ட 3 சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

*இலங்கை நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணிப்பதாகவும் இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மீண்டும் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்தார்.

*இலங்கைத் தமிழர்களுடனான இனமுரண்பாட்டை பயங்கரவாதத்திற்கு எதிரான போரென இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சித்திரிப்பதாக பிரிட்டனின் போர்ட்ஸ்மௌத் ஆயர் விமர்சித்தார்.

*இலங்கை சமாதானத்திற்கான அயர்லாந்தின் அமைப்பு ( Irish Forum for Peace in Sri Lanka) வன்னி நிலைமை குறித்தும், தமிழ் மக்களின் நிலை குறித்தும் ஆராய்வதற்காக அயர்லாந்து பாராளுமன்றத்தில் ஐரோப்பிய செயற்பாடுகளுக்கான இணைச்செயற்குழு ( Joint Committee of European Affairs ) வினருடன் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்தது.

*மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் காயான்மடு பிள்ளையார் கோயிலடியில் வைத்து ஆசிரியர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

* வன்னிப் பகுதியில் இதுவரை, தமது கணக்கீட்டின் படி 6500 சடலங்கள் சேகரிக்கப்பட்டு புதைக்கப்பட்டோ அல்லது தகனம் செய்யப்பட்டதாகவும், அத்துடன் வன்னியில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவர் லோறன்ஸ் கிறிஸ்டி தெரிவித்தார்.

*உலக நாடுகள் தடை செய்துள்ள நாசகார இரசாயன குண்டுகளை விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லி, முல்லைத்தீவில் உள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மீது வீசுவதற்கு சிங்கள அரசு திட்டம் வகுத்து விட்டதாகவும், இதற்குரிய ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியுள்ளது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

* மனிதாபிமானம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் உண்டு என்றால் தற்போதாவது, தாமதிக்காது வன்னி மக்களுக்கு நேரத்தை வீணாக்காமல், உணவுப்பொதிகளை போடவேண்டும் என வன்னியில் உள்ள சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயத்தில் அமெரிக்கா முன்னின்று செயற்படவேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

*சிறிலங்கா இனவெறி சிங்கள அரசிற்கு எதிராக கனடிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்த வீரகத்திப்பிள்ளை குணபாலசுந்தரம் அவர்களிற்கு ஆதரவு தெரிவித்துக் கனடியத் தமிழ் இளையோர் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கினர்.

*இராணுவ நடவடிக்கையினால் இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கிய வயோதிபர்களின் மரணங்கள் பெருமளவுக்கு அதிகரித்த நிலையில், 10 வயோதிபர்கள் மரணமடைந்திருந்ததாக வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

*வன்னியில் இருந்து வெளியேறிய மக்கள் அடைக்கப்பட்டுள்ள 'வதைத் தடுப்பு முகாம்'களில் உணவு இல்லை; இறப்போர்களது உடலங்கள் அந்த இடங்களிலேயே கிடக்கின்றன; குடும்பங்களிடம் இருந்து பெண்கள் பிரிக்கப்படுகின்றார்கள்; பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளாக்கப்பட்டனர்..- பிரித்தானியாவின் 'சனல் - 4' காணொலிச் செய்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டது.

*உலகில் எங்குமே என்றுமே ஏற்பட்டிராத மிகப்பெரும் மனிதப் பேரவலம் வன்னியில் ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கவலையுடன் சுட்டிக்காட்டினார்.

Edited by akootha

  • தொடங்கியவர்

ஈழத்தமிழர் நினைவு -மே 07 2009

*இலங்கைப் போர் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , சமரச முயற்சிகளை கேலிக்குள்ளாக்கிவிட்ட புலிகளுடன் ஒரு போர்நிறுத்தத்தைச் செய்வது பயனற்றது என்றும் கூறினார்.

* "சோனியா காந்தி என்ற ஒரு பெண்மணிக்காக ஓராயிரம் மக்களைப் பழிவாங்க வேண்டுமா? ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தமிழர்களின் முதல் எதிரி" என்று கூறினார் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா.

*ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க எந்தத் தியாகமும் செய்யத்தயார்" என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 16ஆம் ஆண்டு ஆரம்ப விழாவில் உரையாற்றும் போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

*வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதியிலும், சிறிலங்க அரசின் மு்ள்வேலி முகாம்களிலும் அடைந்து கிடக்கும் மக்களின் பசியைப் போக்கிட உறுதியான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று லண்டனில் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டு வரும் 3 தமிழ் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

*மட்டக்களப்பில் மாணவி தினுஷிக்கா படுகொலை: மட்டக்களப்பின் நகரைச்சுற்றியுள்ள சுமார் 25 பாடசாலைகளில் 9 வது நாளாகவும் வகுப்பு பகிஸ்கரிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

*அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட கப்பல் சிறிலங்கா படையினரது எறிகணைத் தாக்குதல் காரணமாக வன்னி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

*விடுதலைப் புலிகளுக்கு எதிராக வன்னியில் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாமல் இருந்திருந்தால் அவ்வமைப்பினர் தனியொரு ஈழ இராச்சியத்தை உருவாக்கியிருப்பார்கள் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

*தமிழீழத்தின் மலர்வோடு வரலாற்றின் நாயகியாக ஒடுக்கப்பட்ட மக்களின் குலதெய்வமாக நீங்கள் நாளை வலம் வருவீர்கள்: ஈழத்தமிழரிற்கு “தனி ஈழத்தைப் பெற்றுக்கொடுப்பேன்” எனும் உறுதிமொழி கூறியுள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவிற்கு கியுபெக் தமிழ் அமைப்புக்களின் இணையம் வாழ்த்து தெரிவித்தது.

*வன்னியின் தற்போதைய நிலவரம் என்ன?.. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்.விளக்கினார்.

*இலங்கையின் உண்மை நிலவரங்களை ஆராயும் பொருட்டு, நியாயமாக செயற்பட கூடிய சிறப்புத் தூதுவர் ஒருவரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்காவின் தமிழருக்காக ஒபாமா என்ற அமைப்பு ஐக்கிய நாடுகளின் பொது செயலர் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்தது.

*இலங்கை யுத்த விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விடுத்திருந்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்தது.

*பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வவுனியாவில் உள்ள அகதிகளை பார்வையிடுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கின்றது. எனினும் இலங்கையில் உள்ள எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கு அந்த அனுமதி வழங்கப்படவில்லை என ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியது.

*சோதனை நடைபெறும் இடங்களில் ஐ.நா. பணியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியே வழங்கப்படுவதால் அங்கே மக்களுக்கு என்ன நடக்கின்றது என்பது குறித்து உறுதியாகக் கூற முடியாது என இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பேச்சாளரான கோடன் வைஸ் தெரிவித்தார்.

*தமது இலங்கை விஜயம் உயிர்களை காக்கும் வகையில் அமையுமானால் அதனை பரிசீலிக்க தயார் : பான் கீ மூன்

தெரிவித்தார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கு வருமாறு விடுத்த அழைப்பை ஐக்கிய நாடுகளின் செயலாளர் பரிசீலிப்பார் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.

*இலங்கை யுத்தத்தில் பலியாவோர் தொடர்பில் ஏன் தகவல் குறைவாக உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையிடம் கேள்வி?

  • தொடங்கியவர்

Mullivaikal - 18 MAY

  • தொடங்கியவர்

வணக்கம்; பிரான்சில் மே 9ம் நாளன்று முள்ளிவாய்க்காலில் புதையுண்ட மக்கள் நினைவாக மரம் நாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.

மே 18ம் நாள் எங்கள் நெஞ்சங்களை ரணமாக்கிய நாள், பூக்களும், பிஞ்சுகளும், காய்களும், பழங்களுமாய் பூத்துக்குலுங்கிய எங்கள் தேசத்து ஆலம் விருட்சம் வேரோடு சாய்க்கப்பட்ட கரிநாள் உயிர்காக்க, உயிர்தெறிக்க ஓடிய எம் பாசத்திற்குரிய மக்கள் சிங்களம் வீசிய குண்டுகளுக்கு வீழ்ந்து கருகிய நாள்……….

புதையுண்டு போன உங்கள் நினைவாய், வேரினால் இப்பூமியில் உறவைப்பேன உங்கள் ஒவ்வொருவரின் உறவாய் நாம் மரம் நாட்டுகின்றோம். எங்கள் சந்ததி இருக்கும் காலம் வரையும், உலகில் உயிர்கள் வாழும் வரையும் உங்கள் அனைவரின் நினைவிருக்கும்.

காலம் 09.05.2010. சேவரோன் மாநகரசபை பூங்காவில் (Parc Roland ) காலை 10.00 மணிக்கு மாநகரமுதல்வர், அனைத்து மதவழிபாட்டுடன் மரம்நாட்டுதல் இடம் பெறும் அனைத்து தமிழ்மக்களையும் அழைக்கின்றோம்!!!!

  • தொடங்கியவர்

ஈழத்தமிழர் நினைவு -மே 08 2009

* கொழும்பு, மாளிகாவத்தை ஜும்மா பள்ளி வாசலுக்கு அருகில் உள்ள ஜும்மா மஸ்ஜித் வீதியில் பிற்பகல் 1.30 அளவில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 9 பேர் காயமடைந்தனர்.

*யாழ்ப்பாணம் மாதகல் சென் தோமஸ் தேவாலயத்திற்குள் கடற்படையினர் நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

*தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை களைந்து சரணடைவதற்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

*பாதுகாப்பு வலயப் பகுதியில் மாற்றம்: இலங்கை இராணுவம் அறிவிப்பு

* முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் நிவாரணம் பெற காத்திருந்த 32 பேர் உட்பட 134 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 199 பேர் காயமடைந்தனர்.

*அரசாங்கத்தின் வரைமுறை கட்டுப்பாட்டுகளுக்கு அமைய அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் செயற்படுமானால், அவற்றுக்கான பூரண ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

*ஜேர்மனியில் டுஸில்டொர்ப் நகரில்பாராளுமன்றத்தின் முன்பாக கிரி, ராகுல் ஆகிய இளைஞர்களால் முன்னெடுக்கப்ட்ட உண்ணாநிலைப்போராட்டம் ஆறாவது நாளை எட்டியது. அவர்களது உடல்நிலை சோர்வை எட்டியது.

*விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை சீராக எடுத்துச் செல்வதற்கு இரு தரப்பு பாதுகாப்பு உத்தரவாதம் தேவை என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அறிவிப்பு.

*இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தனித் தமிழீழமே நிரந்தரமான ஒரே தீர்வு என இந்தியாவின் தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தெரிவித்த ஆணித்தரமான கருத்தை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அமைப்புக்களுடன் பிரித்தானிய தமிழர்களும் இணைந்து வரவேற்றனர்.

*ஜேர்மனி, பேர்லினில் உள்ள சகல பொதுஅமைப்புக்களின் ஒத்துழைப்புடன் காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை அமெரிக்க, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய நாடுகளின் தூதரகத்தின் முன்றலில் அடையாள உண்ணாவிரதமும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அகூதா அண்ணா.......... எல்லாத்தையும் தொகுத்து தாறீங்கள்........ கனக்க கண்ணீர் வடிச்ச காலங்கள்........... :)

  • தொடங்கியவர்

ஈழத்தமிழர் நினைவு - 09 மே 2009

*கனடா, மொன்றியலில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதுவராலயத்திற்கு முன்பாக மாலை 3 மணியளவில் அடங்காப்பற்று என்னும் மகுடத்தின் கீழ் மாபெரும் மனிதசங்கிலி பேரணியையும் வீதிமறிப்பு போராட்டத்தையும் நடத்தினர். பல்லாயிரம் மக்கள் பங்கேற்பு

*வேல்ட் விசன் நிறுவனத்தில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவத்துடன் புளொட் அமைப்பு உறுப்பினர்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

*இலங்கை இராணுவும் மீண்டும் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக யுத்த சூன்ய வலயத்திலிருந்து தகவல்கள் கிடைக்கப் பெறுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டது.

*கிழக்கில் இடம்பெற்ற சிறுவர் படுகொலைச் சம்பவங்களுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு நேரடித் தொடர்பு காணப்பட்டதாக இலங்கை பிரதி காவல்துறை மா அதிபர் எடிசன் குணதிலக்க தெரிவித்தார்.

*இலங்கையில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கனடா மீண்டும் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்தமை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதென அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் லோறன்ஸ் கனோன் தெரிவித்தார்.

* இலங்கை பிரச்சினையில் இந்திய இறையாண்மை கருதிதான் கட்டுப்பாட்டுடன் நடந்து வருகிறோம் என சிவகாசி பாவடி தோப்பு திடலில் நடைபெற்ற திரையுலக தமிழீழ ஆதரவு குழு சார்பில் பிரசார பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பேசினார்.மகாத்மாகாந்தி ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அதுபோல ஒரு நாடு உண்டென்றால் அது ஈழம்தான்: இயக்குனர் பாரதிராஜா பேச்சு.

*இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான கலந்துரையாடல் 12ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதாக வெளிநாட்டமைச்சு தெரிவித்தது.

*இலங்கை விவகாரம் தொடர்பாக மே 11ம் திகதி திங்கட்கிழமை ஐ.நா. சபையில் கூட்டமொன்றை நடத்துமாறு பிரிட்டிஷ் வெளிவகார ஆமைச்சர் டேவிட் மிலிபான்ட்டும், பிரானக்ஸ் வெளிவிகார அமைச்சர் பேர்னாட் குச்னரும் கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது.

*பிரிட்டனின் இலங்கைக்கான விசேட பிரதிநிதியும் கொழும்புக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான டெஸ் பிறவுண் அவசரமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார்.இராணுவ நடவடிக்கைகளை கண்காணிப்பது அவசியம் என்றார்.

* http://www.tamilnational.com/news-flash/966-situation-report-may-09.html

Edited by akootha

  • தொடங்கியவர்

ஈழத்தமிழர் நினைவு - 10 மே 2009

*மோதல் இடம்பெறும் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மனிக்பாம் நிவாரண கிராமங்களில் தங்கியிருந்த குடும்பங்களிலிருந்து விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் எனக்கூறி 200 இளைஞர்கள் தம்மிடம் சரணடைந்ததாக தெரிவித்துள்ள பாதுகாப்பு தரப்பினர், அந்த இளைஞர்களை தென்பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

*யுத்த சூன்ய பிரதேசத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் இலங்கை அரசாங்கம் பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்ற அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளரின் கருத்துக்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.

*கனடிய அமைப்புகளிளால் சிறிலங்காவில் படுகொலையை நிறுத்தவும்! இன அழிப்பை நிறுத்தவும் கோரி ரொறன்ரோவில் அமெரிக்கத் துனைத் தூதரகத்தின் முன்பாக பகல் 12.00 மணிக்கு ஆரம்பித்து ஒன்ராரியோ பாராளுமன்றத்துக்கு முன்னாள் முடிவடைந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்குபற்றினர்.

*வலிந்த தாக்குதலை செய்யமுடியாத வகையில் புலிகள் பலமிழக்கவில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். அத்தகையதொரு சூழ்நிலை வரும்போதே புலிகள் தமது வலிந்த தாக்குதலை நடத்துவர். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார்.

*வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்கியள்ளவர்களின் மறுவாழ்வுக்கு உதவுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் நிராகரித்தன.

  • தொடங்கியவர்

ஜேர்மனியில் மாபெரும் கண்டனப்பேரணி! மே 18 போர்க்குற்றநாள்!!

காலம் : 22 . 05 . 2010

நேரம் : 15:30 மணி

இடம் : டூசெல்டோஃவ்

  • தொடங்கியவர்

ஈழத்தமிழர் நினைவு - மே 11 2009

* ஸ்ரீலங்கா இராணுவத்தினர், முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதிகளில் பாரிய எறிகனை வீச்சுக்களையும் அளவில்லாத கனரக ஆயுதங்களைக் கொண்டும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.இந் நடவடிக்கைகளில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக சர்வதேசம் மேற்கொள்ள வேண்டும் என தமிழர் புனர்வாழ்வு கழகம் கோரிக்கை விடுத்தது.

*சிறிலங்கா அரசாங்கம், வெளிநாட்டு நிதிகளைப் பெறுவதில் குறியாக இருப்பதாக, இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரித்தானிய "சனல்4" ஊடகவியலாளர் நிக் பெட்டன் வோல்ஸ் தெரிவித்தார்.

*விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு இலங்கை இராணுவத்துக்கு இந்தியா இராணுவ உதவிகளை வழங்கிவருவதாக இலங்கையின் முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமாகிய ரணில் விக்ரமசிங்க பேட்டியொன்றின்போது தெரிவித்தார்.

*இலங்கை தீவுக்குள் தமிழர்களுக்கு தனி நாடு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு தான் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயராம் ஜெயலலிதாவிற்கு அமெரிக்கா வாழ் ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு ”தமிழ் பாதுகாவலர்” என அழைத்து தமது ஆதரவை தெரிவித்தது.

* கும்பகோணத்தில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு கூட்டத்தில் இயக்குனர் சீமான் உரையாற்றுகையில், இந்திய இராணுவத்தினை அனுப்பி தனி ஈழம் அமைத்து தருவேன் என்று பேசி வரும் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து, எமக்கு இராணுவ உதவி வேண்டாம். அதற்கு பதிலாக புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

*தமிழர்கள் மத்தியில் வட்டுக் கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் 98,9%வீதமான தமிழ் மக்கள் தமிழீழ தனி நாடு உருவாக வேண்டும் என வாக்களித்தார்கள்.

*"சிறீலங்கா அரசின் ஊடகத் தடையையும் மீறி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மை நிலையை வெளியுலகுக்கு காட்டிய Chanel 4 News செய்தியாளர் Nick Paton Walsh க்கு அவருடைய மனிதாபிமான செயற்பாட்டிற்கு நன்றி தெரிவிப்பதோடு தொடர்ந்தும் எம் மக்களுக்கு உதவுமாறு கேட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் என உலக தமிழர் அமைப்பு கேட்டது.

*யுத்தம் என்ற போர்வையில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் கேவலமான காரியங்களை உலகிற்கு அம்பலப்படுத்தும் நோக்கிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஐரோப்பாவிற்கு விஜயம் செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

*வன்னியில் நூற்றுக்கணக்கான சிறார்கள் பலி: ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்தது.

* 'More than 1,000 civilians killed' in attacks on Sri Lanka safe zone

A doctor working inside the no-fire zone in Sri Lanka today told the Guardian that more than 1,400 people were believed to have been killed in two days of air and artillery attacks.

Dr V Shanmugarajah said 381 bodies had been brought in to the temporary hospital inside the government safe zone yesterday, and another 55 today.

He warned that reports from survivors led him to believe that as many as 1,000 more people could have been killed.

Shanmugarajah, speaking from inside the no-fire zone, said a further 225 casualties had been received by the hospital during the day today.

He said shells were continuing to fall on the area in which civilians were sheltering. "Still the shelling continues and the fighting is going on," he added.

Shanmugarajah said most of the deaths had been caused by shelling, but added that there had also been an attack by a Sri Lankan air force Kfir jet.

His report came as the UN said the bloodbath it had feared since the government launched its all-out campaign to destroy the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had now become a reality.

UN officials estimate that between 50,000 and 100,000 civilians could still be packed into a tiny three sq km pocket of land, but the Sri Lankan government has claimed that no more than 20,000 are left.

Pictures released by medical staff working inside the no-fire zone show the dead and wounded being moved on flatbed trucks and the backs of motorbikes.

The Sri Lankan government has denied using artillery or aircraft and accused the Tamil Tigers of using mortars to fire on civilians for propaganda purposes.

There is no way of verifying any of the claims, because independent journalists are denied access to the area where the fighting is taking place.

The UN has been critical of the Sri Lankan use of artillery and air power in such a small area.

"We have been consistently warning against a bloodbath, and the large-scale killing of civilians, including more than 100 children this weekend, appears to show that the bloodbath has become a reality," Gordon Weiss, a UN spokesman, said.

Diplomats and officials said the UN security council was due to have another informal meeting on Sri Lanka in New York today, with the foreign ministers of Britain and France – who had a stormy visit to Sri Lanka at the end of April – both due to attend.

The council is split over whether to move discussion to a formal level at which it could act. Both the US and Britain are pushing to secure a ceasefire, but Russia and China have opposed such a move.

The assault on the no-fire zone started as the Sri Lankan government ordered the tens of thousands of civilians still trapped by the fighting to move into a restricted area to enable it to flush out remaining Tamil rebels.

The shrinking of the safe zone meant some families had to abandon the bunkers they had dug to find shelter in the new area designated by the government.

According to a UN source, most of the people killed were inside the new no-fire zone.

The official said many were believed to have died in an air strike yesterday morning.

Medical staff working in makeshift facilities inside the zone said shells had started falling on Saturday evening.

One doctor said the shelling began at 5pm and continued through until 9am. It appeared the shells were fired from government positions in Mullaitivu.

The doctor said the dead included a man who worked as a nurse at the hospital and seven members of his family, who were killed when a shell hit the bunker in which they were sheltering.

"The shells were landing about 300 metres from the hospital," he said. "All the time, we have casualties coming in. We don't have time to think."

He said the dead were being buried in large pits, with 30 or 40 bodies in each pit.

The pro-LTTE TamilNet website claimed about 2,000 people had died.

The difficulties in reporting the situation in the north of the country were highlighted by the deportation of three members of a Channel 4 news team who were arrested in Trincomalee, south of the no-fire zone, on Saturday.

The government accused them of fabricating a report in which it was alleged that women were being subjected to sexual abuse in the internment camps set up to hold civilians fleeing the fighting.

Lakshman Hulugalle, the head of the government security information centre, said the journalists had admitted they had "done something wrong" and would not be allowed to return to the country.

Nick Paton Walsh, the channel's Asia correspondent, said the government claims were "complete rubbish".

http://www.guardian.co.uk/world/2009/may/11/sri-lanka-civilian-deaths

Edited by akootha

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

Subject: Information that are useful to know

GO THROUGH EACH LINK TO GET USEFUL INFORMATION:

----------------------------------------------------------------------------------

http://www.facebook.com/pages/Global-Tamil-Forum/111546625523602?v=app_2344061033

----------------------------------------------------------------------------------

http://www.facebook.com/l/172db;ctya.org/blog/speak-out/on-this-day-may-2-2009/

http://www.facebook.com/l/172db;www.tamilnet.com/art.html?catid=13&artid=31734

---------------------------------------------------------------------------------------

TamilNet [MONTH of May 2009] News’s

http://www.facebook.com/l/172db;www.tamilnet.com/cat.html?catid=13&year=2009&month=05&view=compact

----------------------------------------------------------------------------------------

TamilNational [MONTH of May 2009] News Archives from May 11th-31st

http://www.facebook.com/l/172db;tamilnational.com/component/blog_calendar/?year=2009&month=05&day=11&modid=86

---------------------------------------------------------------------------------------

5000 Shells on Safe Zone; More than 3,000 civilians feared slaughtered in a single night

Sunday, 10 May 2009 03:45

http://www.facebook.com/l/172db;tamilnational.com/news-flash/972-3000-civilians-feared-slaughtered-in-a-single-night.html

---------------------------------------------------------------------------------------

Situation Report [May12]: Hospital attacked, dozens killed

http://www.facebook.com/l/172db;tamilnational.com/news-flash/1000-situation-report-may12.html

http://www.facebook.com/l/172db;tamilnational.com/news-flash/1013-mullivaikkal-hospital-repeatedly-attacked.html

---------------------------------------------------------------------------------------

'No Fire Zone' is in ablaze, more than 1000 killed, 4000 injured are begging for help

Friday, 15 May 2009 12:45

http://www.facebook.com/l/172db;tamilnational.com/news-flash/1039-no-fire-zone-is-in-ablaze.html

--------------------------------------------------------------------------------------

Edited by akootha

  • தொடங்கியவர்

ஈழத்தமிழர் நினைவு - மே 12 2009

*இலங்கை இனப்பிரச்சினையில் அனைத்துலக சமூகத்தின் தலையீடு அவசியமா? என அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக தொலைக்காட்சியான சி.என்.என் தொலைக்காட்சி வாக்குப் பதிவை மேற்கொண்டது.

*யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார்.

*இராணுவத்தினரால் புதிதாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தினுள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் இயலுமையை 48 மணித்தியாலங்களுக்குள் நிறுத்திவிட முடியும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

*முகத்துவாரம் கிம்புலாஹெல்ல பகுதியில் அதிகாலை 12.45 மணி அளவில் இனம் தெரியாத துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டார்.

*இலங்கையில் பொதுமக்கள் மீது நடத்தப்படும் கண் மூடித் தனமான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்கா தெரிவித்தது.

*இலங்கை அரசாங்கத்தின் தூர நோக்கற்ற செயல்களினால் நாடு பெரும் பொருளாதார இழப்புக்களை எதிர்நோக்கும் என முன்னணி பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.

*இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிராக ஜப்பானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள் அந்நாட்டு பிரதமர் பிரதமர் டாரோ அசோவிடம் கோரிக்கை விடுத்தன.

*தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினால் பலவந்தமான முறையில் ஆயுத பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்ட நான்கு சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

*ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரம் குறித்து ஆராய்வதை, பாதுகாப்பு சபையின் சில நாடுகள் நிராகரித்து வருகின்றமையை கண்டு பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அமைச்சர்கள் அதிருப்திக்குள்ளாகினர்.

*கடந்த காலங்களில் சர்வதேசப் பிரச்சினைகள் தோன்றிய போது ஐ.நாவும் சர்வ தேச சமூகமும் எவ்வாறான நிவாரண நட வடிக்கைகளில் ஈடுபட்டனவோ அதே போன்ற நடவடிக்கைகளை பாரபட்சமற்ற முறையில் மேற்கொள்ள வேண்டும். என கேட்டுக் கொள்கிறோம். புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான எஸ்.பத்மநாதன் தெரிவித்தார்.

*முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் மீண்டும் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 47 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 56 பேர் காயமடைந்தும் உள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்தனர்.

*அனைத்துலக சமூகத்தின் கண்களைக் கட்டி ஏமாற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை, தான் மேற்கொள்ளும் இனப்படுகொலை போரையும் தமிழ் மக்களுடைய அவல நிலையையும் வெளியே தெரியாமல் சிறிலங்கா அரசு மறைத்திருக்கின்றது எனவும் குற்றம்சாட்டியிருக்கின்றது.

* சுவீடனில் UNHCR தலைமைச் செயலகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்.

தாயகத்தில் ஒரேநாளில் 3000 ற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றொளித்து, கோரத்தாண்டவத்தை ஆடிய, இலங்கை இன வெறி அரசின் இனப்படுகொலையை நிறுத்தி, எமது மக்களைக் காப்பாற்றுமாறு கோரி சுவீடனில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.

* ஜேர்மனி கனோவர் நகரில் கவனயீர்ப்பு, டுசில்டோவ் பாராளுமன்றம் முன்பாக ஒன்பதாவது நாளாகத் தொடரும் பட்டினிப்போராட்டம்

* வன்னியில் உள்ள மக்களைக் காக்க ஜேர்மனிய அரசுஉடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்ட கவனயீர்ப்பு போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று கனோவர் நகரில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

* வார இறுதிக் கொலைகள் திணுக்குற வைக்கின்றன; அரசுக்கும் புலிகளுக்கும் ஐ.நா. அழுத்தம்: உன்னிப்பாக அவதானிப்பதாக எச்சரிக்கை.

* இலங்கையில் முல்லைத்தீவில் வார இறுதியில் பலநூற்றுக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்ட தகவல் என்னைத் திணுக்குற வைத்துள்ளது என்று நேற்றுக் கவலை வெளியிட்டார் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன்.

* ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் யோசனைகள், தீர்மானங்களை ஏற்கப் போவதில்லை: இலங்கை அரசு அறிவிப்பு.

* இலங்கை நிலைவரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விசேட அமர்வுகள் நடைபெற்று யோசனைகள் அல்லது தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது.

* பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்: பிரிட்டன் அரசு கடும் கண்டனம் — மே 12, 2009

இலங்கையிலிருந்து மூன்று பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு பிரிட்டன் அரசு இலங்கை அரசாங்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Edited by akootha

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் முதலாம் ஆண்டு - இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம் !!!

தமிழர்களின் வரலாற்றில் மிகவும் கோரமானதும், மறக்கமுடியாததுமான மிகப்பெரும் இன அழிப்பையும், அவலத்தையும் தமிழினம் சந்தித்த அந்த கறுப்பு நாட்களின் ஓராண்டு நினைவுநாட்கள் அண்மிக்கும் இந்த வேளையில் எனது எண்ணத்தில் உருவான இந்த இணையத்தளத்தை உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு அவர்களின் உறவுகளுக்கான ஓர் நினைவாலயமாகவும், அஞ்சலி செலுத்தும் ஆலயமாகவும் அறிமுகம் செய்வதில் நானும் ஓர் தமிழ் மகனாக திருப்தி கொள்கிறேன்.

இலங்கைத்தீவில் சிங்கள பேரினவாத அரசு பல ஆண்டுகாலமாக தொடர்ந்து தமிழின அழிப்பு போரில் ஈடுபட்டு வந்த போதும் கடந்த ஆண்டு வன்னிப்போர் உகிரமடைந்த வேளையில் தான் தமிழினம் அரலாறு காணா பேரழிவை சந்திக்க நேர்ந்தது. சர்வதேசத்தின் ஆதரவோடு மேற்கொள்ளப்பட்ட இந்த இன அழிப்பில் சர்வதேசங்களால் தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டு, மற்றும் இரசாயண, நச்சுவாயுத் தாக்குதல்களையும் நடாத்தி ஈவிரக்கமற்ற முறையில் எம் மக்களையும், எமக்காகவும் எம் மண்ணின் விடுதலைக்காகவும் போராடிவந்த தமிழர் படையணியாம் தமிழீழ விடுதலைப்புலிகளையும் கொன்றழித்த கொடூரத்தின் ஆண்டொன்று இது. இந்த காலப்பகுதியில் மட்டும் சிங்களத்தின் இனவெறி அழிப்பில் 40,000 ற்கும் மேற்பட்ட மக்களும், மக்களை காக்கும் பணியில் எதிரியுடன் கடும் சமர் புரிந்து தாயக விடுதலைக்காக தம்முயிரை ஈர்ந்து வித்துக்களான 7,000 ற்கும் மேற்பட்ட மாவீரர்களும் என பெரும் எண்ணிக்கையில் இழந்து உலகத் தமிழினம் இன்று தவிக்கிறது.

இந்த தவிப்பில் இருந்து மீண்டு தம்மை தயார்படுத்திக்கொண்டு ஒவ்வொரு தமிழரும் தமிழீழ விடுதலைக்காக போராடவேண்டிய தேவை உள்ளது. அதற்கான உறுதி எடுக்கும் இடமாகவே நான் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு தளத்தை பார்க்கிறேன். இங்கு வந்து தீபம் ஏற்றும் ஒவ்வொருவரும் உங்கள் நெஞ்சங்களில் உறுதியெடுத்துக் கொள்ளுங்கள். தமிழீழ விடுதலைக்காக இனியேனும் அர்ப்பணிப்போடு செயற்படுவோம். தமிழர்களிடம் இருந்த பிளவும், துரோகத்தனங்களுமே இன்று தமிழர்களை இந்த இன அழிப்பில் சிக்கவைத்தது. தமிழர்களால் கட்டியெழுப்பப்பட்டு வந்த தமிழீழ படையணியும் பேரழிவை சந்திக்க நேர்ந்தது. இதனை மாற்றுவோம்.

நாம் தமிழராய் ஒன்றுபடுவோம். எமக்கான விடுதலையை நாமே வென்றெடுப்போம். தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கும், அவர் மக்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கும் பலம் சேர்ப்போம். இன்று இங்கு எம் உறவுகளுக்காக தீபம் ஏற்றுவதோடு உங்கள் பணி தொடரட்டும். சர்வதேசங்களில் உங்கள் குரல் இராஜதந்திர ரீதியில் ஒலிக்கட்டும். அந்த இராஜதந்திர நகர்வே எமக்கான ஈழ விடுதலையை விரைவில் பெற்றுத்தரும்.

இணைவோம் ... எழுவோம்.....

எம் கரங்களில் ஒப்படைக்கப் பட்ட தமிழீழ விடுதலையை நாமே வென்றேடுப்போம்.

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

http://varudal.com/mullivaikaal/

http://november27.net/

http://www.tamilheroesday.com/

முத்தமிழ்வேந்தன்

சென்னை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.