Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் குடா சிறீலங்கா படை விலகலும் ஈபிடிபி ஆயுதக் கும்பலும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடாநாட்டில் உள்ள சிறீலங்காப் படையினர் தனியாருக்கு சொந்தமான நிலைகளில் இருந்து பின்வாங்க உள்ளதாக அறிவித்தார் கோத்தபாய. யாழ் குடாவில் இருந்து படைகளை படிப்படியாக விலக்க முன் வந்தாராம் யாழ் குடா சிறீலங்கா படைத்தளபதி. ஆனால் இப்போ யாழ் குடாவில் ஈபிடிபி ஆயுதக் கும்பலால் நடத்தப்படும் படுகொலைகள் கப்பம் அறவிடல்கள் கொள்ளைகள் பாலியல் வல்லுறவுக்கள் சட்டவிரோத செயற்பாடுகளை காரணம் காட்டி தமது முன்னைய அறிவிப்பில் இருந்து இவர்கள் பின்வாங்கியுள்ளனராம்.

ஈபிடிபி ஆயுதக் கும்பல் சிறீலங்கா அரசின் ஒரு அங்கம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இருந்த போதும் சிறீலங்கா படைகளுக்கான குடா நாட்டு தளபதி ஈபிடிபி ஆயுதக் கும்பலின் செயற்பாடுகள் குறித்து குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளார்.

அந்தளவுக்கு மோசமான நிலையை ஈபிடிபி ஆயுதக் கும்பல் ஏற்படுத்தி உள்ளதுடன் யாழ் குடாவில் இருந்தான சிங்களப் படைகளின் படை விலகலை தடுத்து சிங்களப் பொலிசாரின் காடைகளின் உதவியுடன் மக்களை அச்சுறுத்தி பாசிச ஆயுத அரசியல் செய்ய முடிவு கட்டியுள்ளதாகவே தெரிகிறது.

Withdrawal of SLA forces from Jaffna peninsula to be reconsidered

[TamilNet, Monday, 03 May 2010, 05:00 GMT]

The earlier decision taken by Jaffna Sri Lanka Army (SLA) Commander Major Gen. Mahintha Kathursinghe to withdraw SLA forces in stages is to be reconsidered as per request of newly appointed Defence Secretary, Gothabaya Rajapakse, the brother of President Mahintha Rajapakse, Mahintha Kathurusinghe told the editors of Jaffna dailies in a meeting Sunday night at Gnanams Hotel SLA base. The decision is to be reconsidered due to the current deterioration of law and order in Jaffna peninsula which the Defence Secretary explored into with the key officials of SLA and Sri Lanka Navy (SLN) at Palaali SLA Head Quarters Saturday, the Major General told the editors. He further alleged that armed men of Eelam Peoples Democratic Party (EPDP), a constituent of ruling United Peoples Freedom Alliance (UPFA), were involved in the social crimes in Jaffna peninsula in the meeting with the editors.

Defence Secretary Gothabaya Rajapakse is on a three day visit to Jaffna after assuming duties as the new Defence Secretary.

The increasing number of crimes in Jaffna peninsula including abduction and killing for ransom, robberies, sexual abuse and extortion alleged to be carried out by the armed wing of EPDP with the assistance of police was discussed in the Palaali military base meeting.

Mahintha Kathurusinghe told the local press that under no circumstances will SLA allow any armed persons to function in the peninsula.

Meanwhile, Sri Lankan Police in Chaavakachcheari Sunday arrested the EPDP coordinator of Thenmaraadchi zone, Alexander Soosaimuththu alias Charles, for allegedly threatening Chavakachcheari Magistrate K. Prabakaran for having issued arrest warrant on EPDP suspects involved in the abduction and murder of student Kapilnath.

Mr. Charles would be brought to the courts on Monday, according to Major General Mahinda Hathurusinghe, who met local press at Gnanam Hotel Sunday night.

The commander blamed the EPDP for blighting Rajapakse government, media sources in Jaffna said.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குடா நாட்டின் அண்மைய சம்பவங்களை வைத்து இராணுவ பிரசன்னத்தை அதிகரிக்க திட்டம்

யாழ் நிருபர்

திங்கட்கிழமை, மே 3, 2010

குடாநாட்டில் அண்மைக் காலமாக நடைபெற்று வரும் கொலை, கடத்தல், கப்பம் கோருதல், பாலியல் பலாத்காரம் போன்ற வன்செயல்களைத் தடுப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் இங்கு உடனடியாக இறுக்கப்படும் என்று யாழ்.பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்க தெரிவித்தார்.மக்கள் நலன்கருதி தாம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைக்கு மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை நல்கவேண்டும் என்றும் இராணுவத்தால் வேஎண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இராணுவம் தான் அனைத்து சமூக சீர்கேடுகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தூண்டிவிட்டு அதில் ஈடுபட்டம் வந்துள்ளது. ஆனால் இப்போ அதனை கட்டுப்படுத்த தாம் நடவடிக்கை எடுக்க போவதாக கூறுவது. படைகளின் பிரசன்னத்தினை அதிகரித்து தொடர்ந்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் குடா நாட்டை வைத்திருக்கவே என மக்கள் கூறுகின்றனர்.

இராணுவ பிரசன்னத்தை அதிகரிக்கும் நோக்கில் யாழ். பிராந்திய படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க யாழ்.நகரில் உள்ள 51 ஆவது படையணித் தலைமையகத்தில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை விவரிக்கும் பொருட்டு நேற்றிரவு ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

அங்கே அவர் தெரிவித்தவை வருமாறு:

போர் முடிவடைந்த பின்னர் குடாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை படிப்படியாகத் தளர்த்திவந்தோம். மக்கள் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வசதியாக வீதித்தடைகளை காவலரண்களை அகற்றினோம். மக்களின் சுமூக வாழ்க்கைக்குத் தடையாக இருந்த பல்வேறுபாதுகாப்புச் செயற்பாடுகளையும் நீக்கினோம். மக்கள் தமது பணிகளை சுமூகமாக சீராக மேற்கொள்ள வசதிகள் செய்தோம்.

ஆனால் கடந்த சில நாள்களாக குடாநாட்டில் உருவாகியுள்ள வன்செயல் சம்பவங்கள் காரணமாகப் பாதுகாப்பு நிலைமையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காகவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காகவும் கடந்த வெள்ளிக்கிழமை பலாலியில் விசேட மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முப்படைகளின் தளபதிகளும், பொலிஸ்மா அதிபரும் கலந்து கொண்டனர்.

குடாநாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சட்டம் ஒழுங்கைப் பேணவும், உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்த மாநாட்டில் வைத்து பொலிஸ் மா அதிபருக்குப் பாதுகாப்புச் செயலர் பணிப்புரை விடுத்தார். சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் நடவடிக்கை எடுக்கும் அதேநேரம், அதற்குப் புறம்பாக இராணுவத்தினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்த மாநாட்டில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

அவற்றின் பிரகாரம்

* படையினரின் வாகன ரோந்து, நடைரோந்து ஆகியன இடம்பெறவுள்ளன.

* வீதித்தடைகளோ, புதிய காவலரண்களோ அமைக்கப்பட மாட்டா.

*படையினரின் பிரசன்னம் அதிகரிக்கப்படும்.

* முன்பு இருந்தது போன்று கூடுதல் எண்ணிக்கையான படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

குற்றம் புரியும் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்

ஈ.பி.டி.பியாகவோ, விடுதலைப்புலிகளாகவோ யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இத்தகைய செயற்பாடுகளை பொலிஸார் முன்னெடுப்பர். அதற்குப் படையினர் உதவியாகச் செயற்படுவர்.

குற்ற செயல்களின் பின்னால் இருந்து செயற்படுபவர்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

நீதிவானுக்கு விசேட பாதுகாப்பு

சாவகச்சேரி மாணவன் கொலை தொடர்பாக விசாரணை செய்துவரும் சாவகச்சேரி நீதிவான் ரி.ஜே.பிரபாகரன் தனது பாதுகாப்புக் குறித்து என்னுடன் கலந்துரையாடினார். அவரது வாசஸ் தலத்துக்கும், அவர் நீதிமன்றம் சென்று திரும்பவும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளேன். இப்போது அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பாதுகாப்பைப் பலப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஈழநாதம்.கொம்

Edited by nedukkalapoovan

அண்மையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் கொழும்பு சென்று வரவேண்டி இருந்தது(எனது நண்பரும் புலிகளின் முன்னால் உறுப்பினரும், குறிப்பிட முடியாத சில செயற்பாடுகளில் ஈடுபட்டவரும் இலங்கை சென்று விட்டு ... "இங்கு வாங்கோடாப்பா, இங்கு பிரட்சனை ஒன்றுமில்லை! .... " என்றெல்லாம் சத்தியம் செய்து, .... பின் இங்கு வந்தும் ... "இலங்கை நாட்டை கட்டி எழுப்புவோம் வாருங்கள்" .... இங்கு வந்து பிரபல(?) பத்திரிகையில் அறை கூவல் விடிவெள்ளியாக விடுத்த பின்), அது பின் எரிமலை தூசினால் ஓரிரு வாரங்கள் அங்கு தங்கவும் நேர்ந்தது. அக்கால கட்டத்தில் எனக்கு தெரிந்த நண்பர்கள் ஊடாக ஓரிரு புளொட், ஈபிடிபியினரையும் சந்திக்க(... என்ன தண்ணிக்கு வந்தார்கள்) நேர்ந்தது ....

மே 18இற்குப்பின் இலங்கையில் எல்லா இடங்களிலுள்ள ஒட்டு/ஒட்டில்லாத குழுக்களை இலங்கை பொலிஸார் அழைத்து கூறினார்களாம் ... "இது வரை புலி அழிப்பிற்க்காக உங்கள் செயல்களுக்கு நாங்கள் உடந்தையாக இருந்தோம். நீங்கள் செய்தவை எல்லாம்(கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், ...) எங்களிடம் ஆதரங்களுடன் இருக்கின்றன. இனி இவற்றை நிறுத்துங்கள் ... நாங்கள் இனி அனுமதிக்க மாட்டோம்!!!!!!! ... என கூறப்பட்டதுதானாம்......

.....ஆனால் இலங்கை பொலிஸாரின் செயல்களுக்கு மாறாக இலங்கை இராணுவம், இலங்கை புலனாய்வுத்துறை இவர்களை தொடர்ச்சியாக பழைய கூத்துக்களை செய்ய ஊக்குவிக்கிறதாம், அவர்களின் கூத்துகளுக்கு பாதுகாப்பும் வழங்குகிறதாம்!!!!. இலங்கை பொலிஸாரினால் ஒன்றும் செய்ய முடியாதாம். இது இலங்கை அரசின் தமிழர்கள் சார்பான கொள்கையாம்!!!!!!

இவற்றுக்கு அப்பால் ஒட்டு/ஒட்டில்லாத குழுக்களுக்கான சிறிலங்கா அரசின் கொடுப்பனவுகள் ஏறக்குறைய முடிவுக்கும் வந்து விட்டதாம். ...

... புளொட் ... கடந்த தேர்த்லில் புளொட் தனியே கேட்டது. வவுனியா கோயில் குளத்தில் மட்டும் 12000இற்கு மேற்பட்ட வாக்குகளாம். தேர்த்தலுக்கு முன் மட்டும் ஒவ்வொரு நாளும் தண்ணியும், சாப்பாடும் அம்மக்களுக்காம். ஆனால் தேர்த்தலில் 52 வாக்குகளையே கோயில் குளத்தில் எடுக்கவும் முடிந்ததாம். இதன் பின் நிதி பிரட்சனை எல்லாமாக புளொட்டை கலைத்து விட சித்தார்த்தன் முடிவெடுத்தாராம். அவர்களுடை வருடாந்த மாநாடு இம்மாதம் நடைபெறுவது கூட கேள்விக்குறியாம். இக்கலைப்பிற்கு புலத்திலுள்ள புளொட் ஆதரவாளர்கள் இடம் விடுகிறார்கள் இல்லையாம். இரண்டு மூன்று பஸ்ஸுகளை வாங்கி அனுப்புகிறோம், அதை ஓடி செலவுக்கு எடுங்கள் என்கிறார்களாம். இறந்த தலைவருக்காக கழகத்தை கொண்டிழுக்க வேண்டும் என்ற அன்புக்கோரிக்கையும் விடுத்தார்களாம்...

... ஈபிடிபி ... ஏறக்குறைய யாழ்ப்பாணத்தை குத்தைகைக்கு எடுத்த மாதிரி. யார் அங்கு என்ன செய்ய வேண்டுமானாலும் அவர்களுக்கு கொமிஷன். யாழ்-கொழும்பு பஸ்களில் இவர்களுடையது இரண்டாம், ஏனையவை சிங்களவர்களுடையதாம். அதை விட இலங்கை அரசோ, இலங்கை இராணுவமோ யாழில் என்னத்தை செய்ய முனைந்தாலும் இவர்கள் பக்க பலமாக இருக்கிறார்களாம், ஒன்றுக்குமே எதிர்ப்பு தெரிவிப்பதில்லை, இவர்களே யாழில் சிங்களவர்களுக்கு தேவை முன் நின்று நிறைவேற்றுகிறார்களாம் .. பிரதிபலனாக இவர்களின் கடத்தல்கள், கம்பங்கள், ஏனைய கூத்துக்களுக்கு சிறிலங்கா இராணுவ/புலனாய்வுத்துறை பக்க பலமாக நிற்கிறதாம்.

ஒட்டு/ஒட்டில்லாத குழுக்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தபட்டது .... வவுனியாவில் ஒரு புளொட் உறுப்பினருக்கு மூன்று உத்தியோகபூர்வமான மனைவிகளாம், அவர்களின் பிள்ளைகள் வேறு! அதை விட அவருக்கு பல கள்ள மனைவிகளாம்! ... இவர்களுக்கும் இவர்களின் பிள்ளைகளுக்குமான செலவுகள் மாதத்துக்கே பல லட்சம் தேவையாம். இதை யார் புளொட்டோ? சிறிலங்கா அரசோ? கொடுக்கப்போகிறது? இவரை மாதிரி பலராம்!!! அப்போ இவர்களுக்கான செலவுகளுக்கான பணம் எங்கிருந்து வாறது???????? ஏற்கனவே இவர்களின் பல பதுக்கப்பட்ட ஆயுதங்கள் வெளியில்!!! முடிபு ... கடத்தல்கள், கப்பங்கள் தொடர்கின்றன.

சில தினங்களுக்கு முன், எனக்கு தெரிந்த ஒருவர் வவுனியாவில் இறந்து விட்டார். அவரின் மரண அறிவித்தலை வீரகேசரியில் வெளியிட்டு இருக்கிறார்கள். இறந்தவருக்கு சில பிள்ளைகள் புலத்தில். அவர்களது தொலைபேசி இலக்கங்களுடன் அறிவித்தலும் வெளியானவுடன், மரணவீட்டுக்கு தொலைபேசி வந்ததாம், இந்த இடத்துக்கு இத்தனை இலட்சத்தோடு வா!!!! வெளியில் கூறினால் ஒருதரும் இருக்க மாட்டீர்கள்!!! ... கப்பமும் சென்று கொடுக்கப்பட்டது ஒரு சிறிலங்கா இராணுவ முகாமருகிலாம், சிறிலங்கா இராணுவம் சுற்றி நிற்க!!!!!

அதை விட நகைச்சுவை ... யாழில் நடைபெறும் பல செயல்கள், ஈபிடிபியினர் சாதீய பிரட்சனையையும் கையில் எடுக்கிறார்கள். தம் அமைப்பில் உள்ல சில சாதி குறைந்தவர்களின் வேலை என்று கூசாமல் கூறுகிறார்கள் தோழர்கள்!!!

நான் சந்தித்த பலர், அதுவும் வடக்கில் இருந்து வந்த பலர் கூறியது அங்கு நிலைமை மோசம்! கேட்க முடியாது! கூற முடியாது! முறையிட முடியாது! ..... ஆனால் நாம் வாழ வேண்டும். இவற்றை பெரிது படுத்தினாலும் ஒன்றும் நடைபெறவும் போவதில்லை, நாம் வாழ வேண்டும், இவற்றினூடாகவே ... பழக்கப்படுகிறோம்!! ... அதைவிட பலர் அங்கு வருவதை தவிருங்கள் என்றார்கள், உங்கள் கெட்ட காலத்துக்கு நீங்கள் ஏன் அம்பிடுவான்??? என்று ...

... ஆனால் என் நண்பர் விடிவெள்ளியாக கூறியது அசரீரியா ....

...."ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்புவோம் .... வாருங்கள்"!!!!!!!!!

ஈ.பி.டி.பியாகவோ, விடுதலைப்புலிகளாகவோ யாராக இருந்தாலும்

ஈபிடிபி என்றால் என்ன புலி என்றால் என்ன நீங்கள் தமிழன் கள் என்பதை சிங்களவன் டமிழ்ஸ்க்கு சொல்லுறான் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈபிடிபி என்றால் என்ன புலி என்றால் என்ன நீங்கள் தமிழன் கள் என்பதை சிங்களவன் டமிழ்ஸ்க்கு சொல்லுறான் :blink:

ஆம் சிங்களம் தெளிவாகத்தான் இருக்கிறது. தமிழன் அவன் காக்கவன்னியனா இருந்தா என்ன பண்டார வன்னியனா இருந்தா என்ன அழிக்கப்படனும் என்பதில் அது தெளிவாக இருக்கிறது.

பிரச்சனை எம்மவருக்குத்தான். காட்டிக் கொடுப்பதையே எஜமான விசுவாசத்தை வளர்ப்பதையே பிழைப்பாகக் கொண்டவர்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லி காலங்கள் பல கடந்தாயிற்று.

இவர்களுக்கு 1987 இல் படித்த பாடம் போதாதா. திரும்ப திரும்ப படிக்க வேண்டுமாமா..??!

காக்க வன்னியனும் தமிழன் தான். பண்டார வன்னியனும் தமிழன் தான். அதற்காக..????! டக்கிளஸின் பாசிச ஆயுத அரசியலை மக்கள் ஏற்று தமிழீழத்தைக் கைவிட்டு சிங்களத்தோடு ஐக்கியமாக வேணும் என்பதையா சொல்ல விளைகிறீர்கள்.

தயவுசெய்து சொல்ல வருவதை தெளிவாகச் சொல்லுங்கள். மறைத்துச் சொல்லி.. துரோகிகளாக்கப்பட்டிருவமோ என்ற பயத்தில்.. மனதுக்குள் ஒலிப்பதை அமுக்கு வைத்து மறைமுகமாகப் பேசித் திரியாதீர்கள். மனதைத் திறந்து சொல்ல வேண்டியதை சொல்லுங்கள். தெளிவை பெற்றுக் கொள்ளுங்கள். :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

:D வணக்கம் நெல்லைய்யன்,

எப்பிடி இருக்கிறீர்கள்? அதுக்குள் ஊருக்கும் ஒருக்கால் போய் வந்துவிட்டீர்கள். என்னால முடியாது. குறைந்தது மகிந்த அரக்கன் சாகும்வரையாவது போக முடியாது என்றுதான் நினைக்கிறேன்.

அண்மையில் கொழும்பிலிருந்து இங்கு வந்திறங்கியுள்ள ஒருவரைக் காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவர் நீர்கொழும்பில் பல் வைத்தியராகக் கடமை புரிபவர்.

அவரிடம் ஊர்ப்புதினங்களை கேட்டு அறிந்துகொள்ளலாமே என்று எண்ணினேன். "அங்க ஒரு பிரச்சனையுமில்லை, சனம் நிம்மதியா இருக்குது. செக்கிங் எண்டெல்லாம் இப்ப இறக்கிறதுமில்லை" என்று தொடங்கினார். சரி, கொழும்பைப்பற்றித்தானே சொல்கிறார் என்று நினைத்துக்கொண்டு, "ஊருகூப் போனீர்களா, கிளிநொச்சி, மாங்குளம், ஆனையிறவுப்பகுதி எப்படி இருக்கிறது என்று வினவினேன். "எந்தப் பகுதியையும் அடையாலம் காண முடியவில்லை. பெயர்ப்பலகை இல்லாவிட்டால் யாராலையும் சொல்ல முடியாது, ரோட்டின் ரெண்டு பக்கத்திலும் 500 மீற்றருக்குக் கிளியர் பண்ணி வச்சிருக்கிறாங்கள்" என்று சொன்னார்.

"கிளிநொச்சியில் கட்டடங்கள் எல்லாம் அப்படியே இருக்கின்றன, ராணுவம் எந்தக் கட்டிடத்தையுமே உடைக்கவில்லை, ஆனால் ஒரு வீட்டிலும் கூரைகளைக் காணவில்லை" என்று சொன்னார். "என்ன நடந்தது?" என்று நான் வினவ, புலிகள்தான் சனத்தைப் பலவந்தமாக எழுப்பிக் கூரைகளையெல்லாம் 6,000 டிராக்டர் நிறைய அள்ளிக்கொண்டு யுத்த சூனியப் பிரதேசத்துக்குள் கொண்டு போனார்கள்" என்று கூறினார். என்னால் நம்ப முடியவில்லை. தமது போராளிகளையும் , ஆயுதங்கலையுமே நகர்த்துவதற்குப் புலிகளுக்கு நேரம் இல்லாதபோது எப்படி இந்த ஆயிரக்கணக்கான வீடெல்லாம் ஏறிக் கூரை பிரித்தார்களோ என்று எனக்குள் எண்ணிக்கொண்டேன்.

"பாடசாலை செல்லும் சிறுவர்களை கிளிநொச்சியில் பார்த்தேன், இவ்வளவுகாலமும் பாடசால செல்ல முடியாமல் இருந்தது, இப்போதுதான் செல்கிறார்கள், ஆனால் எல்லோர் முதுகிலும் நீலப் பைகள்" என்று சொன்னார். அதென்ன நீலப் பை, ஏன் இவ்வலவுகாளமும் பள்ளி செல்லவில்லை, யுத்தம் நடந்த காலத்தைத்தானே சொல்கிறீர்கள் என்று அப்பாவியாக அவரிடம் கேட்டேன்." இல்லையில்லை, புலிகள் வன்னியில் இருக்கும்வரை எவரையுமே பாடசாலை போக விடவில்லை, கட்டாய ராணுவப்பயிற்சி என்று கூட்டிச்சென்று, கொன்றுவிடுவார்கள், அதனால் பெற்றோர்கள் எவருமே தமது பிள்ளைகளை பள்ளிக்கு வன்னியில் இதுவரை காலமும் அனுப்பியதில்லை" என்று ஒரு போடு போட்டார். "அப்படியானால் நாம் வன்னியில் பாடசாலை உடையில் பார்த்த பிஞ்சுகளும், செஞ்சோலையில் இறந்த சிறுமியரும், இன்னும் பாடசாலைப் பேரூந்துகளில் மீது விமானம் தாக்கியும் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்ட சிறுவர்கள் எல்லாம் யார் என்று எனக்குள் எண்ணிக்கொண்டேன்.

சரி, அரசியல்க் களம் எப்படியிருக்கிறது என்று கேட்டேன்."கூட்டமைப்பினர் பிழை விட்டு விட்டார்கள்" என்றார். என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்க, " தனியே நிண்டு ஒண்டும் புடுங்க ஏலாது எண்டு தெரிந்தும் நிண்டிச்சினம், இப்ப மகிந்தவுக்குத் தூது அனுப்பிக்கொண்டிருக்கினம். ஆனால் இவையக் கனக்கெடுக்காம மகிந்த முஸ்லீம்களோடுதான் சேரப் போகிறார்" என்று சொன்னார்.

"மகிந்த ஒரு அரசன், நாட்டில நடக்கிறது அவற்ற ராஜாங்கம். அவரோட சேர்ந்தால்த்தான் எங்களுக்கு விமோசனம்" எண்டு ஒரு போடு போட்டார். "புலிகளும் கள்ளர், மற்ற இயக்கத்தாரும் கள்ளர்" "ஒண்டுக்குமே பிரியோசனமில்லாதவங்கள்"." தாங்கள் மட்டுமே இருக்க வேணும் எண்டு மற்ற நல்ல தலைவர்களையெல்லாம் போட்டுத்தள்ளினாங்கள், இப்ப வையுமில்லை, ஒரு நாயுமில்லை" என்றார்.சரி, யார் அந்த நல்ல் தலைவர்கள் என்று கேட்டேன். அவருக்குச் சொல்லத் தெரியவில்லை, ஏனென்றால் புலிகளுக்கும் அவர் சொல்கிற நல்ல தலைவர்களுக்கும் இடையில் முறுகல் வந்தபோது அவருக்கு 8 அல்லது 9 வயசுதான் இருந்திருக்கும்.

இறுதியாக"இங்க கொஞ்ச பேக்கூட்டம் அவன் இன்னும் உயிரோட இருக்கிறான் எண்டு புழுகிக்கொண்டு திரியுது, அந்தக் கூட்டத்தைக் கண்டால் நாலு சாத்துச் சாத்தவேணும்" என்றார். "உவன் இருந்தாப்போல்ல என்னத்தைப் புடுங்கப் போறான்" என்று நக்கலாகக் கேட்டார்.

இன்னொரு நண்பரின் வீட்டில் இந்தச் சந்திப்பு நடந்தபடியால் வாயை மூடிக்கொண்டு வந்துவிட்டேன்.ஆனால் இன்னமும் மனசாட்சி உறுத்திக்கொண்டிருக்கிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அண்ணை நெடுக்ஸ்! ... உங்களைப் போன்றவர்களின் ஆயுதமே, காக்கை வன்னியர் கதைதான்!!! ... அதை விடுத்து வெளியே வாருங்கள்! நிற்பவன்/பேசுபவன்/னடப்பவன்/கேட்பவன் எல்லோருக்கும் முலாமிடாதீர்கள்!... உங்கள் முலாமிடல்கள் டக்லஸ், கருணா போன்றவர்களை தொடர்ந்து தக்க வைக்கிறது!

ஐயா காட்டிக் கொடுத்து பிழைக்கிறவனை.. அப்ப என்ன மாற்றுக் கருத்தாளன்.. எதிர்கட்சி தலைவர் என்றா சொல்லச் சொல்கிறீர்கள்.

உங்கள் போன்றோரின் அதிபுத்திசாலித்தன அரசியல் எமக்குத் தெரியாது.

எமது போராட்டத்தைக் கருவறுத்தவர்கள் வரிசையில் டக்கிளஸ் கருணா எப்போதும் அடையாளம் காணப்படுவார்கள். அவர்கள் வரலாற்றுத் துரோகிகள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அவர்களை காக்கவன்னியனிலும் கேடாகவே நான் கருதுகிறேன். அதற்கு என்னிடம் சரியான விளக்கங்கள் உண்டு. நீங்கள் அவர்களை எதுவாகவும் எண்ணிவிட்டுப் போகங்கள். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் எமது போராளிச் செல்வங்களின் மக்களின் மண்ணின் இருப்போடு..உயிர்ப்போடு விளையாடிய இந்தத் துரோகிகளை என்னால் மன்னிக்கவும் முடியாது அவர்களை எமது அரசியல் பிரதிநிதிகளாகக் காணவும் எனக்கு விருப்பமில்லை.

Edited by nedukkalapoovan

வணக்கம் இரகுநாதன்,

நான் போய் திரும்பும்வரை மரணபயம் இருந்து கொண்டே இருந்தது, என் நல்ல காலம் ஏதோ திரும்பி விட்டேன்.

வன்னி நிலை குறித்து ஒருவர் கூறியதை எழுதியுள்ளீர்கள். நான் அங்கு இறுதிவரை இருந்து திரும்பிய பலரோடு கதைத்தேன், பல பிழைகள், இனி அவற்றை கதைத்து ஒன்றும் நடைபெறப்போவதில்லை. இனி அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும், அதுவும் புலத்தில் உள்ள நாம் உறுதியாக!!!

வன்னியில் ... ஒரு தொண்டர் நிறுவன பெண் உறுப்பினர் ஒருவரை சந்தித்தேன், வாய் விட்டுக் கதறி அழுதார், அங்கு இப்பொழுது இளம் பெண்களின் நிலை குறித்து!!! இராணுவ நிலைகளுக்கு அருகருகே குடியமர்த்தப்படவர்களும், அவர்களுடைய நிலையும்!!!! .... அங்குள்ள மக்கள் மனிதர்களல்ல நடை பிணங்களே(விரிவாக பின்பு எழுதுகிறேன்)!!!

கொழும்பு பாதுகாப்பா? .... என்னுடைய நண்பர்கள் சிலர் கொழும்பில் பிரபல வர்த்தகர்கள்/பெரும் புள்ளிகள். அவர்கள் கடந்த காலங்களில் புலி எதிர்ப்பாளர்கள் கூட. அவர்களுடன் கதைத்த போது ஆச்சரியமாக இருந்தது, இவ்வளவு காலமும் கூறியதற்கு மாறாக ... "நீண்ட காலத்துக்கு நாம் கொழும்பில் பிஸ்னர் செய்யலாமா? தெரியாது, ..." ... என்ற அங்கலாய்ப்பு!!

இலங்கையின் வர்த்தகத்தில் ஏறக்குறைய 60/70 விழுக்காடுகளை தமிழர்களும், முஸ்லீங்களும் கொண்டிருக்கிறார்கள். சிங்களவர்கள் இங்கு கஸ்டப்பட சிறுபான்மையினர் நல்லாக இருப்பதோ? ... நீங்கள் விரும்பின் வடகிழக்கில் போய் ஏதும் செய்யுங்கோ!!! என்ற கொள்கை சிங்கள அரச மட்டத்திலேயே வந்து விட்டதாக கூறுகிறார்கள். எம்மவர்கள் கூடுதலாக செய்யும் வர்தகங்களுக்கான வங்கிக்கடன்களுக்கு பல தடைகளாம், அதை விட அங்குள்ள வருமான வரி திணைக்களம், எம்மவர்களை நகர இப்போது விடுகிறார்களில்லையாம்!!

அதைவிட வெள்ளவத்தையில்தான் இலங்கையின் உள்ள பணத்தில் பெரும்பகுதி பிளங்குகின்றது. சில மாதங்களுக்கு முன்பாம், வெள்ளவத்தையில் வெளிநாட்டு நாணயமாற்றை செய்யும் பிரபல நிறுவனத்தை இயக்குபவரிடம் 10 தொடக்கம் 15 கோடி அறவிடப்பட்டு, இங்கிருக்காதே வெளிநாட்டுக்கு ஓடு என்று துரத்தி, அவர் இப்போ மலேசியாவில் தங்கி இருப்பதாக கூறுகிறார்கள். ... இம்முறை நடைபெற்று முடிந்த தேர்தல்களுக்கான தேர்தல் நிதி என்று கொழும்பிலுள்ள தமிழ் வர்த்தகர்களிடையே அரச கட்சி பல கோடிகளை வசூலித்ததாம், இவையெல்லாம் வெளிவராத செய்திகள்.

இப்போதுள்ள இலங்கை திறைசேரி நிதி நிலமை மோசமாம். இலங்கை அரசே பாராளுமன்றத்தில் இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கூட சம்ர்பிக்க திண்டாடுகிறதாம். திறைசேரியை நிரப்ப கொழும்பிலுள்ள எம்மவர்கள் ... மீண்டும் பலியிடப்படக்கூடும்!!!

அங்கு நிலவும் இயல்பு நிலை செயற்கையானதே! ... எந்நேரமும் சூழ்நிலை மாறலாம்!!!

திரும்பி வரும்போதும் விமானநிலையத்தில், எனக்கு முன் சென்ற சிங்கள குடும்பமும் என்னை போன்று வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள். அவர்களிடம் எவ்வித விளக்கங்களும் கேட்கப்படாமல் விமானத்தினுள் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் என் குடும்ப அங்கத்தவர்களின் முகம் திருமபத்திரும்ப பார்த்து, சில கேள்விகளின் பின் அனுமதிக்கப்பட்டேன். என் நிலையே அங்கு வந்த பல தமிழர்களுக்கும்! .... இவைகள் மாறாது! மாறவும் விட மாட்டார்கள்!!

ஆனால் நாம் எல்லாவற்றையும் மறந்து .... "ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்ப முன் வர வேண்டும்" ... என அழைப்பு விடுக்கிறார் ... என் முன்னால் ...!

இரு பகுதியினரும் அவரவர்க்குத் தெரிந்த உண்மைகளை, அல்லது அநுபவங்களை எழுதுகிறார்கள்.

நெல்லையன் நீங்கள் எழுதிய அனைத்தும் உண்மை இதற்குமேலும் பல திட்டங்கள்அரசிடம் உண்டு

அவ்வப்பொழுது அவை நடைமுறைக்கு வரும்பொழுது எல்லோரும் தெரிந்துகொள்வார்கள்

அதுபற்றி இப்பொழுது இங்கு எழுதினால் அதை நக்கல்பண்ணி எழத பல உறவுகள்

யாழ்களத்தில் புதிதாக இணைந்திருக்கிறார்கள்

பிரச்சினை என்பது அவர்களுக்கும்தான் ஏனெனில் அவர்களும் தமிழர்கள்

ஆனால் அவர்கள் புரிந்துகொள்வதாக இல்லை

அவர்கள் புரிந்துகொள்ளும்பொழுது வெள்ளம் தலைக்குமெல் போயிருக்கும்

:D வணக்கம் நெல்லைய்யன்,

எப்பிடி இருக்கிறீர்கள்? அதுக்குள் ஊருக்கும் ஒருக்கால் போய் வந்துவிட்டீர்கள். என்னால முடியாது. குறைந்தது மகிந்த அரக்கன் சாகும்வரையாவது போக முடியாது என்றுதான் நினைக்கிறேன்.

அண்மையில் கொழும்பிலிருந்து இங்கு வந்திறங்கியுள்ள ஒருவரைக் காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவர் நீர்கொழும்பில் பல் வைத்தியராகக் கடமை புரிபவர்.

அவரிடம் ஊர்ப்புதினங்களை கேட்டு அறிந்துகொள்ளலாமே என்று எண்ணினேன். "அங்க ஒரு பிரச்சனையுமில்லை, சனம் நிம்மதியா இருக்குது. செக்கிங் எண்டெல்லாம் இப்ப இறக்கிறதுமில்லை" என்று தொடங்கினார். சரி, கொழும்பைப்பற்றித்தானே சொல்கிறார் என்று நினைத்துக்கொண்டு, "ஊருகூப் போனீர்களா, கிளிநொச்சி, மாங்குளம், ஆனையிறவுப்பகுதி எப்படி இருக்கிறது என்று வினவினேன். "எந்தப் பகுதியையும் அடையாலம் காண முடியவில்லை. பெயர்ப்பலகை இல்லாவிட்டால் யாராலையும் சொல்ல முடியாது, ரோட்டின் ரெண்டு பக்கத்திலும் 500 மீற்றருக்குக் கிளியர் பண்ணி வச்சிருக்கிறாங்கள்" என்று சொன்னார்.

"கிளிநொச்சியில் கட்டடங்கள் எல்லாம் அப்படியே இருக்கின்றன, ராணுவம் எந்தக் கட்டிடத்தையுமே உடைக்கவில்லை, ஆனால் ஒரு வீட்டிலும் கூரைகளைக் காணவில்லை" என்று சொன்னார். "என்ன நடந்தது?" என்று நான் வினவ, புலிகள்தான் சனத்தைப் பலவந்தமாக எழுப்பிக் கூரைகளையெல்லாம் 6,000 டிராக்டர் நிறைய அள்ளிக்கொண்டு யுத்த சூனியப் பிரதேசத்துக்குள் கொண்டு போனார்கள்" என்று கூறினார். என்னால் நம்ப முடியவில்லை. தமது போராளிகளையும் , ஆயுதங்கலையுமே நகர்த்துவதற்குப் புலிகளுக்கு நேரம் இல்லாதபோது எப்படி இந்த ஆயிரக்கணக்கான வீடெல்லாம் ஏறிக் கூரை பிரித்தார்களோ என்று எனக்குள் எண்ணிக்கொண்டேன்.

"பாடசாலை செல்லும் சிறுவர்களை கிளிநொச்சியில் பார்த்தேன், இவ்வளவுகாலமும் பாடசால செல்ல முடியாமல் இருந்தது, இப்போதுதான் செல்கிறார்கள், ஆனால் எல்லோர் முதுகிலும் நீலப் பைகள்" என்று சொன்னார். அதென்ன நீலப் பை, ஏன் இவ்வலவுகாளமும் பள்ளி செல்லவில்லை, யுத்தம் நடந்த காலத்தைத்தானே சொல்கிறீர்கள் என்று அப்பாவியாக அவரிடம் கேட்டேன்." இல்லையில்லை, புலிகள் வன்னியில் இருக்கும்வரை எவரையுமே பாடசாலை போக விடவில்லை, கட்டாய ராணுவப்பயிற்சி என்று கூட்டிச்சென்று, கொன்றுவிடுவார்கள், அதனால் பெற்றோர்கள் எவருமே தமது பிள்ளைகளை பள்ளிக்கு வன்னியில் இதுவரை காலமும் அனுப்பியதில்லை" என்று ஒரு போடு போட்டார். "அப்படியானால் நாம் வன்னியில் பாடசாலை உடையில் பார்த்த பிஞ்சுகளும், செஞ்சோலையில் இறந்த சிறுமியரும், இன்னும் பாடசாலைப் பேரூந்துகளில் மீது விமானம் தாக்கியும் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்ட சிறுவர்கள் எல்லாம் யார் என்று எனக்குள் எண்ணிக்கொண்டேன்.

சரி, அரசியல்க் களம் எப்படியிருக்கிறது என்று கேட்டேன்."கூட்டமைப்பினர் பிழை விட்டு விட்டார்கள்" என்றார். என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்க, " தனியே நிண்டு ஒண்டும் புடுங்க ஏலாது எண்டு தெரிந்தும் நிண்டிச்சினம், இப்ப மகிந்தவுக்குத் தூது அனுப்பிக்கொண்டிருக்கினம். ஆனால் இவையக் கனக்கெடுக்காம மகிந்த முஸ்லீம்களோடுதான் சேரப் போகிறார்" என்று சொன்னார்.

"மகிந்த ஒரு அரசன், நாட்டில நடக்கிறது அவற்ற ராஜாங்கம். அவரோட சேர்ந்தால்த்தான் எங்களுக்கு விமோசனம்" எண்டு ஒரு போடு போட்டார். "புலிகளும் கள்ளர், மற்ற இயக்கத்தாரும் கள்ளர்" "ஒண்டுக்குமே பிரியோசனமில்லாதவங்கள்"." தாங்கள் மட்டுமே இருக்க வேணும் எண்டு மற்ற நல்ல தலைவர்களையெல்லாம் போட்டுத்தள்ளினாங்கள், இப்ப வையுமில்லை, ஒரு நாயுமில்லை" என்றார்.சரி, யார் அந்த நல்ல் தலைவர்கள் என்று கேட்டேன். அவருக்குச் சொல்லத் தெரியவில்லை, ஏனென்றால் புலிகளுக்கும் அவர் சொல்கிற நல்ல தலைவர்களுக்கும் இடையில் முறுகல் வந்தபோது அவருக்கு 8 அல்லது 9 வயசுதான் இருந்திருக்கும்.

இறுதியாக"இங்க கொஞ்ச பேக்கூட்டம் அவன் இன்னும் உயிரோட இருக்கிறான் எண்டு புழுகிக்கொண்டு திரியுது, அந்தக் கூட்டத்தைக் கண்டால் நாலு சாத்துச் சாத்தவேணும்" என்றார். "உவன் இருந்தாப்போல்ல என்னத்தைப் புடுங்கப் போறான்" என்று நக்கலாகக் கேட்டார்.

இன்னொரு நண்பரின் வீட்டில் இந்தச் சந்திப்பு நடந்தபடியால் வாயை மூடிக்கொண்டு வந்துவிட்டேன்.ஆனால் இன்னமும் மனசாட்சி உறுத்திக்கொண்டிருக்கிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மறுபக்கம்.

சில உண்மைகள். சில பொய்கள்.

தயவுசெய்து சொல்ல வருவதை தெளிவாகச் சொல்லுங்கள். மறைத்துச் சொல்லி.. துரோகிகளாக்கப்பட்டிருவமோ என்ற பயத்தில்.. மனதுக்குள் ஒலிப்பதை அமுக்கு வைத்து மறைமுகமாகப் பேசித் திரியாதீர்கள். மனதைத் திறந்து சொல்ல வேண்டியதை சொல்லுங்கள். தெளிவை பெற்றுக் கொள்ளுங்கள். :lol:

இன்று முதல் நான் எனது பெயரை துரோகி ஜில் என்று பகிரங்கமாகவே அறிவிக்கிறேன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு வயதானவரை சந்தித்தேன்...அவர் கடைசி வரை வன்னியில் இருந்து விட்டு தற்போது அவரது பிள்ளைகள் அவரை லண்டனுக்கு கூப்பிட்டு இருந்தார்கள்...அவர் சொன்னார் தற்போது அக்கிரமம் கூடி விட்டது ...கலிகாலம்...கலிகாலத்திலே கடவுள் அக்கிரமக்காரனான சிங்களவருக்கு ஆதரவு காட்டிட்டார்...ஆனால் கடைசி நேரத்தில் புலிகளும் சில அக்கிரமம் செய்து விட்டார்கள்...நான் கேட்டேன் எல்லோரும் ஆமியிடம் போகையில் புலிகள் பின்னுக்கு இருந்து சுட்டதையா சொல்கிறீர்கள் என அவர் சொன்னார் இல்லை புலிகள் யுத்தம் கடுமையாக நெருங்குகையில் பல சிறுவர்,சிறுமிகளை பல வந்தமாக பிடித்துச் சென்றார்களாம் தடுக்க சென்ற பெற்றோர்களை அவர்கள் கண் முன்னே சுட்டார்களாம்...இப்படி சொன்னார் அந்தப் பெரியவர்...எனக்கு என்றால் கடைசி வரைக்கும் நம்ப முடியவில்லை புலிகள் அப்படிச் செய்தார்கள் என...கடைசி நேர யுத்தத்தில் என்ன நடந்தது என கடவுளுக்கு தான் வெளிச்சம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.