Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தை அழித்தவர்களை புலம்பெயர் தமிழீழம் பழிவாங்க வேண்டும்!!! மறக்குமா?? மன்னிக்குமா?? பழிவாங்குமா??

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது இனத்தின் மீதான ஒரு அழித்தொழிப்பு யுத்தம் நடைபெற்றிருக்கின்றது. எமது இனத்தின் மீதான ஒரு அப்பட்டமான இன அழிப்பு நடைபெற்றிருக்கின்றது. எமது இனத்தை கருவறுத்தவர்களை பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் எமக்கு ஏற்படவில்லை என்றால் ஒரு இனம் என்று கூறிக்கொள்ளும் தகுதியை நாம் நிச்சயம் இழந்தவர்களாகிவிடுவோம்.

இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வி எழலாம்.

எங்களால் என்ன செய்ய முடியும்? எங்களின் பலம்தான் அழிக்கப்பட்டுவிட்டதே? இனி எங்களால் எதைத்தான் செய்யமுடியும்? – இவ்வாறு நீங்கள் கேள்வி எழுப்பலாம்.

எங்களிடம் இல்லாத பலத்தைப் பற்றிக் கவலைப்படாமல்;. எங்களிடம் இருக்கின்ற பலத்தை வைத்துக்கொண்டு அந்த யுத்தக் குற்றவாளிகளை எப்படி பழிவாங்கலாம் என்று யோசிப்பதுதான் சாலச்சிறந்தது.

அப்படி என்னதான் பலம் எங்களிடம் இருக்கின்றது? எங்களை அழித்த பலவான்கனை பழிவாங்கக் கூடிய அளவிற்கு என்ன பலம் எங்களிடம் இருக்கின்றது?

அண்மையில் புலம்பெயர் நாடொன்றில் நடந்த சில சம்பவங்களை மாத்திரம் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக் காண்பிக்கின்றேன். அதன் பின்னர் எங்கள் இனத்தின் மீது கொடுமை புரிந்தவர்களை எங்களிடம் இருக்கின்ற சிறிய பலத்தை வைத்துக்கொண்டு எப்படி எங்களால் பழிவாங்க முடியும்; என்று உங்களுக்கு நன்றாகவே புரியும் என்று நான் நம்புகின்றேன்.

கடந்த டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் திருமதி சிப்பி லிவினி(Tzipi Livni ) பிரித்தானியாவுக்கு பயணமாக இருந்த நேரத்தில் அவருக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி கிடைத்தது.

பிரித்தானியாவில் வைத்து அவரைக் கைதுசெய்வதற்கான பிடியானையை பிரித்தானிய நீதிமன்றம் பிறப்பித்திருப்பதான செய்தி அவருக்குக் கிடைத்தது.

இஸ்ரேலின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் அனைவருக்குமே அது ஒரு பெரிய அதிர்சியை ஏற்படுத்தியிருந்தது.

Tzipi Livni ஒரு சாதாரணமான பெண் அல்ல. இஸ்ரேல் தேசத்தின் அரசியலில் ஒரு முக்கிய அங்கம் வகிப்பவர்.

இஸ்ரேலின் எதிர்கட்சித் தலைவர்.

அவர் மீதான கைது ஆணையை அதுவும் இஸ்ரேலின் மிக முக்கிய நட்பு நாடான பிரித்தானியாவின் நீதிமன்றம் பிறப்பித்திருப்பது ஒரு பெரிய அதிர்ச்சியை இஸ்ரேலின் அனைத்து மட்ட அரசியல் மற்றும் நிர்வாகத் தலைவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.

எதற்காக இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் மீது லண்டன் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது?

2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் திகதி இஸ்ரேலின் காசாப் பிரதேசம் மீது இஸ்Nலியப் படைகள் ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. காஸ்ட் லீட் படை நடவடிக்கை (Operation Cast Lead) என்ற பெயரில் இஸ்ரேலிய முப்படைகளும் இணைந்து மேற்கொண்ட அந்த நடவடிக்கை மிகப் பெரிய அவலத்தை காசாப் பகுதியில் ஏற்படுத்தியிருந்தது. காசாப் பகுதியில் இருந்து இஸ்லாமிய கமாஸ் போராளிகள் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் முகமாகவே இஸ்ரேலியப் படைகள் இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்கள்:

2008 டிசம்பர் 27ம் திகதி முதல் 2009ம் ஆண்டு ஜனவறி மாதம் 18ம் திகதி வரை நடைபெற்ற இஸ்ரேலின் அந்த மூன்றுவார இராணுவ நடவக்கையில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 1400 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார்கள். 50ஆயிரம் பலஸ்தீனர்களின் வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டன.

காசாப் பகுதி மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட அந்த படை நடவடிக்கையை உலகம் முழுவதும் கண்துடைப்பிற்காக கண்டித்திருந்தாலும் அமெரிக்கா பிரித்தானியா உட்பட மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே நிலைப்பாடு எடுத்திருந்தன.

இந்த இராணுவ நடவடிக்கையில் இஸ்ரேல் பாரிய போர் குற்றங்களைப் புரிந்ததாகவும் மனிதத்திற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் ஐ.நா. கடுமையான கண்டணத்தை வெளியிட்டிருந்தது. சிவிலியன் மீது இஸ்ரேலியப் படைகள் எறிகணை மன்றும் குண்டு வீச்சுக்களை திட்டமிட்டே மேற்கொண்டதாகவும் பொஸ்பரஸ் குண்டுகள் உட்பட தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை அந்த இராணுவ நடவடிக்கையில் இஸ்ரேலியப் படைகள் பாவித்ததாகவும் பலஸ்தீன மக்களை மனிதக் கேடயங்களாக இஸ்ரேலியப் படைகள் பாவித்ததாகவும் வைத்தியசாலைகள் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடாத்தியதாகவும் ஐ.நா. உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியிருந்தன. ஆனாலும் வெறும் கண்டனங்கள் என்பதற்கு அப்பால் இஸ்ரேலை எவராலும் எதுவும் செய்துவிடமுடியவில்லை.

உலகம் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்க இஸ்ரேலின் படைநடவடிக்கையில் பாதிக்கப்பட்டு பிரித்தானியாவுக்கு அகதிகளாக வந்த சில பலஸ்தீனர்களும் பிரித்தானியாவில் உள்ள சில பலஸ்தீன அமைப்புக்களும் இணைந்து பிரித்தானியாவின் சட்டத்தின் கீழ் இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் ஒன்றை மேற்கொண்டார்கள்: வழக்கை விசாரித்த பிரித்தானிய நீதிமன்றம் இஸ்ரேலின் Operation Cast Lead என்ற இராணுவ நடவடிக்கை இடம்பெற்ற காலப்பகுதியில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த Tzipi Livni இனைக் கைதுசெய்யும்படி பிடியானை பிறப்பித்தது. பிரித்தானிய மண்ணில் காலடி எடுத்துவைத்தால் அவரை உடனடியாகவே கைதுசெய்யும் நிலை இருந்தது.

இதேபோன்று காசாவிலும் மேற்குகரையில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் குற்றச் செயல்களுக்காக பிரித்தானியாவின் சட்டத்தில் காணப்படுகின்ற சில ஆரோக்கிமான சரத்துக்களைப் பயன்படுத்தி இஸ்ரேலியத் தலைவர்களை பிரித்தானியாவுக்குள் நுழையவிடாது சங்கடங்களை ஏற்படுத்தும் முயற்சிகளை பலஸ்தீன அமைப்புக்கள் அண்மைக் காலமாகவே மேற்கொண்டு வருகின்றன.

இதேபோன்று கடந்த ஒக்டோபர் மாதம் பிரித்தானியாவுக்கு விமானத்தில் வந்த இஸ்ரேலின் துணைப்; பிரதமர் மொஷா யாலோன் (Moshe Yaalon) விமானத்தை விட்டு பிரித்தானிய மண்ணில் கால்வைக்காமல் திரும்பிச் சென்ற சம்பவமும் இடம்பெற்றிருக்கின்றது. 2002 ஆம் ஆண்டு அவர் பாதுகாப்புத்துறை உயரதிகாரியாக பதவிவகித்த காலத்தில் காசாப்பகுதியில் இஸ்ரேலியப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதலில் கமாஸ் அமைப்பின் ஒரு முக்கிய தலைவரும் அவரது மனைவி மற்றும் ஒன்பது பிள்ளைகளும் கொல்லப்பட்டிருந்தார்கள். இந்தக் கொலை தொடர்பாக பிரித்தானியாவில் உள்ள சில பலஸ்தீனர்களால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தால் Moshe Yaalon இற்கு எதிராக பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரித்தானியப் பயணம் மேற்கொண்ட மொஷா யாலோன் (Moshe Yaalon) விமான நிலயத்தில் தரையிறங்கினால் கைதுசெய்யப்படும் நிலையில் வந்த விமானத்திலேயே திரும்பிச் செல்லவேண்டி ஏற்பட்டது.

இதேபோன்று காசாவில் பலஸ்தீனர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்குவதற்கு கட்டளையிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட டொரோன் அல்மொக் (Doron Almog) என்ற முன்னாள் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிக்கு எதிராக பிரித்தரியாவில் உள்ள பலஸ்தீன அமைப்பொன்று பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தது. 2005 இல் அவர் பிரித்தானியாவிற்கு பயணம் செய்த பொழுது லன்டன் கீட்துரோ (Heathrow) விமான நிலயத்தில் அவர் கைதுசெய்யப்படக்கூடிய சந்தர்ப்பம் இருந்ததால் விமானத்தை விட்டு இறங்காமல் அதே விமானத்தில் அவர் இஸ்ரேல் திரும்பவேண்டி ஏற்பட்டது.

இதேபோன்று பிரித்தானியாவின் 1988 Criminal Justice Act இன்படி இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எகூட் பாரக்கை (Ehud Barak) கைதுசெய்யும்படியான ஆணையை பிரித்தானியா நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும் என்று சில பலஸ்தீன அமைப்புக்கள் பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் செயற்படுகின்ற இது போன்ற சில பலஸ்தீன அமைப்புக்களின் செயற்பாடுகள் பல்வேறு இராஜதந்திரச் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் இஸ்ரேலுக்கு உருவாக்கி வருகின்றது.

இத்தனைக்கும் பிரித்தானியா இஸ்ரேலின் மிகப் பெரிய ஒரு நட்பு சக்தி. இஸ்ரேலின் அத்தனை அராஜகங்களையும் ஆசீர்வதித்து வருகின்ற ஒரு நாடுதான் பிரித்தானியா. பிரித்தானியாவில் உள்ள அனேகமான அரசியல் தலைவர்கள் அரசியல் கட்சிகள் அனைத்துமே இஸ்ரேலின் பக்கம்தான் நிற்கின்றார்கள். இஸ்ரேலியத் தலைவர்கள் மீது பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருப்பதை அவர்கள் அடியோடு எதிர்க்கின்றார்கள். ஆனாலும் பிரித்தானியாவின் நீதித்துறை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டு சுயாதீனமாகச் செயற்படுகின்றதான ஒரு நிலையில் உள்ளதைப் புரிந்துகொண்ட சில பலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்கு எதிராக பிரித்தானியாவின் நீதித்துறையை சரியான முறையில் பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகின்றார்கள்.

காசாவில் இஸ்ரேல் புரிந்ததாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களை விட அதிக அளவிலான மிக மோசமான யுத்தக் குற்றங்கள் அதே காலப்பகுதியில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாஙங்கத்தால் புரியப்பட்டிருக்கின்றது. இப்படியான யுத்தக்குற்றங்கள் புரியப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை பிரித்தானியாவை மையமாகக்கொண்ட பல தொலைக்காட்சிகள் நிரூபித்தும் இருக்கின்றன. பிரித்தானியாவின் நாடாளுமன்றம் உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் இதனைக் கண்டித்தும் இருக்கின்றன.

இன்று பிரித்தானியாவில் சுமார் மூன்று இட்சம் தமிழர்கள் வாழ்வதாக ஒரு கணிப்பீடு காண்பிக்கின்றது. ஈழத் தமிழரின் நலன்காக்கவென்று அங்கு பல அமைப்புகள் நிறுவனங்கள் செயற்பட்டும் வருகின்றன.

அப்படி இருந்தும் ஈழத் தமிழர்கள் மீதான ஒரு இன அழிப்பை மேற்கொண்ட கொலைகாரர்களுக்கு எதிராக ஏன் ஒரு வழக்கு கூட பிரித்தானிய நீதிமன்றத்தில் எம்மால் தாக்கல்செய்யமுடியவில்லை?

பேச்சுக்கள் அறிக்கைகளைக் கடந்து ஏன் எமது இனம் சார்ந்த அமைப்புக்களால் அடுத்தகட்டத்திற்கு நகர முடியவில்லை?

எமது உறவுகளை அழித்துவிட்டு அவர்களது பிணங்களின் மீது ஏறி நின்று வெற்றிப் பிரகடனம் செய்த எத்தனையோ சிறிலங்காத் தலைவர்கள் சிரித்தபடி எங்கள் முன்னால் வலம்வந்துகொண்டிருக்கின்றார்கள்.

நாங்கள் வாழுகின்ற நாடுகளில் உள்ள சட்டங்களை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஏன் அவர்களை நாங்கள் பழிவாங்கக்கூடாது?

Niraj David

nirajdavid@bluewin.ch

http://www.nerudal.com/nerudal.15842.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரையாளர்கள் பழிவாங்குதல் என்ற சொல்லைத் தவிர்த்து தமிழினத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். தமிழினம் ஒற்றுமையாக இருந்திருந்தால் இன்று எமக்கொரு நாடு இருந்திருக்கும். மற்றவர்களை நோக்கி விரலைக் காட்டும்போது முதலில் நாம் சரியாக நடந்துள்ளோமா என்பது முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு. தனிப்பட்ட ரீதியில் செயற்பட்டு இலங்கை அரசின் அராஜகங்களை வெளிக்கொணர முடியாது அல்லது மிக கடினம். ஆனால் அமைப்பு ரீதியாக இலகுவாக செய்யலாம். பிரித்தானியா மட்டுமல்ல பல நாடுகளில்(ஐரோப்பிய, அமெரிக்க,அவுஸ்திரேலிய)சட்டங்கள் அதனை அனுமதிக்கின்றன.பலஸ்தீனியர்களை நாம் உதாரணமாக கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஓம் நாங்கள் தெருக்களில் நிண்டு கத்திக்குரல் எடுத்து வேலைவெட்டியில்லாது போராட்டங்கள் நடாத்துகிறம் அல்லது போராட்டத்துக்கு கக்கூஸ் கழுவியும் கோப்பை களுவியும் காசுசேர்த்துக்கொடுக்கிறம் அதைவிட புலத்தில் உறவுகட்கு அந்தரமாவத்துக்கு உதவிசெய்கிறம் இத்தனையும் செய்துபோட்டு புலம்பெயர்தேசங்களில் இருக்கும் காட்டிக்கொடுப்பாளர்களால் சிங்களவனுக்கு எமது விபரம் அனுப்பப்பட்டு, தமிழீழமெண்டால் என்ன? அது எங்கிருக்கின்றது உங்கட அப்பன் ஆத்தை பாட்டன் பூட்டன் எங்க பிறந்தவையள் எண்டு எங்கட சந்ததிக்கக் காட்டவேணுமாகிலிருந்தால் அவர்களைப் புலத்திற்கு கூட்டிச்சென்று இதுதான் உனக்குச்சொந்தமான மண் இதுக்குத்தான் பல்லாயிரம் தமிழ் மறவர்கள் போராடி இப்மண்ணிலேயே விதையாகினார்கள் என் காலத்திற்குப்பிறகாவது தமிழீழம் கிடைக்குமாகவிருந்தால் நீ இங்கேதான் வரவேண்டும் சிலவேளை அவுக்குமுன்பே நான் மண்டையப் போட்டுட்டனெண்டால் தொடர்ந்தும் இந்தமண்ணைமீடபதற்காய் போராடவேண்டும் எண்டுசொல்ல வழியற்று நிர்க்கதியாக நிக்கும்போது. தமிழீழப் பிரதேசத்தில் சிங்களவனால் கொண்டுவரப்பட்ட இன்னுமொரு இனமுரண்பாட்டுக்கான தேர்தலில், எமதினத்தை அழிப்பதற்குக் கொள்ளிக்கட்டை எடுத்துக்கொடுத்த இந்தியாவுக்கு முதுகுதேய்த்து விடும் சம்பந்தன் மாவை சுரேஸ் (முன்னைநாள் மண்டையன்குழுத்தலைவர்) ஆகியோர் முகத்தில் கரி அள்ளிப்பூசுங்கோ எண்டால், நீங்கள் எல்லாம் ஓடிப்போனவையள் உதப்பத்தி ஒண்டும் கதைக்கக்கூடாது எண்டு எங்களைப்பாத்து எள்ளிநகையாடிப்போட்டு, இப்போ இந்தியாக்காரன் தனது உளவுத்துறையின் அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் திறந்திருக்கிறான் அதுக்கு மண்டையன் குழுத்தலைவரும் மாவையும் போயிருக்கினம் அதைப்பத்தி இங்கு ஒருவரும் கதைப்பாரில்லை இதுக்குப்பிறகு புலம்பெயர் தமிழர்கள் புடுங்குங்கோ எண்டால் யாரையாவது கூப்பிட்டால் செருப்பில பீதோய்ச்சு அடிப்பம் எண்டு எனது நண்பர் கூறுகிறார் இதுக்கு என்னபதில நான் சொல்லுறது நிரோத் டேவிட்

பழி வாங்குவது கூடாது. பொருத்தமான வார்த்தை பிரயோகம் அவசியம்.

இனப் படுகொலையாளர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிட்டவேண்டும்.

என்ன தண்டனை என்பது எமக்கு விளங்கினால் போதும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5 வருசத்தால ஐநா தந்த தமிழீழத்தையும் திமிரில வேண்டாம் எண்டம், காசு கலெக் பண்ணி ஐநா வுக்கு காட்டி கிடைச்ச தமிழீழத்தயும் அடிச்சு புடிக்கிறதெண்டு வேண்டாம் எண்டம், பிளேனடிக்கிற றெக்கற் வேண்டி குடுத்தும் உள்ளுக்க விட்டு அடிச்சு அழிச்சு போட்டாங்கள்.

உதுகள மறக்கிறது ஏலாது, மன்னிக்கிறதும் ஏலாது, இருக்கிற ஒரே சாய்ஸ் ..... :D

  • கருத்துக்கள உறவுகள்

5 வருசத்தால ஐநா தந்த தமிழீழத்தையும் திமிரில வேண்டாம் எண்டம், காசு கலெக் பண்ணி ஐநா வுக்கு காட்டி கிடைச்ச தமிழீழத்தயும் அடிச்சு புடிக்கிறதெண்டு வேண்டாம் எண்டம், பிளேனடிக்கிற றெக்கற் வேண்டி குடுத்தும் உள்ளுக்க விட்டு அடிச்சு அழிச்சு போட்டாங்கள்.

உதுகள மறக்கிறது ஏலாது, மன்னிக்கிறதும் ஏலாது, இருக்கிற ஒரே சாய்ஸ் ..... :D

choice......

மகிந்தவிடம் மன்றாடி கேட்டு என்றாலும் ஒரு புதிய செம்பை பெறுவதுதான். அதிலும் அவர் வெற்றிகளிப்பில் இருக்கும் இந்த நேரத்தை நீங்கள் லாபகமாக பயன்படுத்தி கொள்ளுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனம் தங்களுக்குள்ளே முரண்பட்டு பல பிரிவுகளாகி இன்னும் பல பிரிவுகளை உருவாக்கி ஒன்றை ஒன்று எப்படி அழிக்கலாம் என்று பழிவாங்கிக் கொண்டிருக்கினம். சிங்கள அரசு செய்யவேண்டிய வேலைகளை இவர்கள் மற்றைய பிரிவினைப் பழிவாங்குவதற்காக தெரிந்தோ, தெரியாமலோ செய்து கொண்டிருக்கினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.