Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்க்குடாநாட்டில்; தலைதூக்கியுள்ள குழுச் சண்டைகள் ராணுவ காவற்துறை பாதுகாப்பு வழங்கும் கட்டத்தை அடைந்துள்ளது

Featured Replies

யாழ்க்குடாநாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள குழுச் சண்டைகள் ராணுவ காவற்துறை பாதுகாப்பு வழங்கும் கட்டத்தை அது எய்தியிருக்கின்றது.

வடமராட்சியின் கரவெட்டி, அல்வாய், மற்றும் நாவலடிப்பகுதியில் கடந்த 4 தினங்களாக இடம்பெற்று வருகின்ற கிராம மோதல்களை அடுத்து அப்பகுதியில் ராணுவத்தினரும் காவற்துறையினரும் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட இரு கிராமக் குழுக்களுக்கிடையே 4ம் நாளாக இன்று ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக 10 வயதுடைய காசிப்பிள்ளை ஜென்சி மற்றும் 30 வயதுடைய ஆறுமுகம் ஜெயரஞ்சனி எனும் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 4 தினங்களாக இரு தரப்புகளும் மாறி மாறி ஆட்களை வெட்டுவதும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும் என அதிகரித்துள்ளது. இன்றுவரை 6க்கும் அதிகமானவர்கள் வெட்டுக் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இன்றைய சம்பவத்தின் எதிரொலியாக நீதிமன்ற உத்தரவை அடுத்து ராணுவத்தினரும் காவற்துறையினரும் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே வறணி மற்றும் வட்டுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளிலும் இவ்வாறு குழுச் சண்டைகள் குடாநாட்டில் தலைதூக்கியுள்ளன. தெருச்சண்டியர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.

www.globaltamilnews.net

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தினது விருப்பத்தை வெகு கச்சிதமாகத் தமிழர்கள் நிறைவேற்றுகிறார்கள். எங்கே சென்றுவிட்டார்கள் மக்களிடம் வாக்கினைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள். ஏன் இவர்களால் சமூக ஒற்றுமையை ஏற்படுத்த முடியாதா? சமூக ஒற்றுமையை ஏற்படுத்த முடியாதவர்களிடம் எப்படி தேசியப் பிரச்சினையில் பல திசைகளாக நிற்போரோடு இணைந்து வேலை செய்வார்களென்று எதிர்பார்க்க முடியுமா? தமிழரின் தலைவிதியே இதுதானா? வாக்கினைப்பெறுவதும் அரச வாசஸ்தலத்தில் ஓய்வெடுப்பதுமா இவர்களது வேலை. மக்கள் எதிரகொள்ளும் பிரச்சினைகள் எதுவானாலும் தீர்வுக்கான தேடலை இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்ய வேண்டும். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இது ஒரு அவசரமான பணியாகும்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழுச்சண்டை எப்பிடி துடங்கிறது எண்டத யாழ பாத்து கத்துகொண்டினமோ தெரியாது, துரோகிப்பட்டங்களும் களையெடுப்பும் இங்கதானே துடங்கிது. இங்க உள்ளவைண்ட வியாபாரத்துக்கும் ராணுவ காவல்த்துறை இருந்தா தானே உதவியா இருக்கும். அதுதான்.....

குழுச்சண்டை எப்பிடி துடங்கிறது எண்டத யாழ பாத்து கத்துகொண்டினமோ தெரியாது, துரோகிப்பட்டங்களும் களையெடுப்பும் இங்கதானே துடங்கிது. இங்க உள்ளவைண்ட வியாபாரத்துக்கும் ராணுவ காவல்த்துறை இருந்தா தானே உதவியா இருக்கும். அதுதான்.....

அண்ணை சிங்கள அரசின் பிரித்தாளுகையை புரிந்து கொண்டியள் எண்டால் மக்கள் எப்படி பலியாகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்... அதிகார வர்க்கம் மிக இலகுவில் மக்களை பிரிக்கிறார்கள் பிரிக்க முடியும்..

தங்களை நோக்கி எவரும் விரல் கூட காட்டக்கூடாது என்பது அதிகாரத்தில் உள்ளவர்களின் எண்ணமாக இருந்தால் அதுக்கு தேவையாவனவை இந்த மக்களை தங்களுக்குள் ஒற்றுமை இல்லாது ஆக்குவது...

( இதை எழுதினாப்போல நீங்கள் ஏதொ தமிழ் மக்களின் அனுதாபி எண்டு மட்டும் நான் நம்பமாட்டன்)

Edited by தயா

இதுக்கு என் சிங்கள அரசையும் ஆமிக்காரனையும் இழுக்கின்றீர்கள்? தமிழர்கள் நாய்கள் மாதிரி...... தாம் இனத்தினுள் தான் சண்டை பிடிப்பார்கள். :lol::lol::D:D:D

யாழ்க்குடாநாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள குழுச் சண்டைகள் ராணுவ காவற்துறை பாதுகாப்பு வழங்கும் கட்டத்தை அது எய்தியிருக்கின்றது.

வடமராட்சியின் கரவெட்டி, அல்வாய், மற்றும் நாவலடிப்பகுதியில் கடந்த 4 தினங்களாக இடம்பெற்று வருகின்ற கிராம மோதல்களை அடுத்து அப்பகுதியில் ராணுவத்தினரும் காவற்துறையினரும் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளனர்.

நடந்தது குடும்பச் சண்டையே ஒழிய கிராமச்சண்டை அல்ல. குறிப்பிட்ட ஊர்களிடையேயும் சண்டை இல்லை என அப்பகுதி நண்பர்கள் உறுதி செய்தார்கள்.

தமிழ் பத்திரிகைகள் எப்படி பொறுப்பற்ற விதத்தில் பிழையான தகவல்களை மக்களுக்கு கொடுக்கிறார்கள் என்பதற்கு இதுவும் உதாரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.