Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நிதி வசூலிக்கும் திட்டம் - கே.பி தலைமையில் சிறீலங்கா புதிய நகர்வு

Featured Replies

புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நிதி வசூலிக்கும் திட்டம் - கே.பி தலைமையில் சிறீலங்கா புதிய நகர்வு

திகதி: 25.06.2010 ஃஃ தமிழீழம்

சிறீலங்கா அரசினால் மலேசியாவில் வைத்துக் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குமரன் பத்மநாதன், அந்நாட்டு அரசுடன் இணைந்து பணியாற்றுவதை சிறீலங்காவின் அரச ஊடகமான சண்டே ஒவ்சேவர் வார கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பலப்படுத்தியிருந்தது.

இதுதொடர்பாக ஏற்கனவே சில செய்திகளை ஈழமுரசு வெளியிட்டிருந்ததுடன்,

கே.பியை நேரடியாக களத்தில் இறக்கி தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சிறீலங்கா தயாராகி வருவதை கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் ஈழமுரசில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இந்நிலையில் இவற்றை உறுதிப்படுத்துகின்ற செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளன. இந்நடவடிக்கையின் மூலம் கே.பியின் ஊடக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களிடம் நிதியை வசூலிக்கும் பாரிய திட்டம் ஒன்றை சிறீலங்கா கொண்டுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது.

இதேவேளை, சண்டே ஒவ்சேவர் தனது செய்தியில் கனடா, சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்கள் குமரன் பத்மநாதன் ஏற்பாட்டில் கொழும்புக்கு வந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவையும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசையும் சந்தித்துப் பேச்சு நடத்தினர் என்று தெரிவித்திருந்ததுடன், "புலிகள் இயக்கத்துக்காக வெளிநாடுகளில் திரட்டப்பட்ட பெருந்தொகையான நிதியை அரசின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு வழங்குவதற்கு குமரன் பத்மநாதன் சம்மதித்துள்ளதாகவும், இதனை ஒருங்கமைப்பதற்காக வெளிநாட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்திருந்தது.

"வடக்கு. கிழக்கு அபிவிருத்தித் திட்டம்" எனப் பெயரிடப்படவுள்ள இந்தத் தன்னார்வ அமைப்பின் மூலம் நிதி சேகரிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்திருந்தன. இந்நிலையில். இலண்டனில் இருந்து கடந்த வாரம் கொழும்பு சென்ற பிரித்தானிய தமிழ் மருத்துவர் தலைமையிலான குழுவொன்று, சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் கொழும்பை சென்றடைந்த பிரித்தானிய தமிழர் நலவாழ்வுக் கழகத்தை சேர்ந்த மருத்துவர் வேலாயுதம் அருட்குமார் தலைமையிலான குழுவினருக்கு, சிறீலங்கா பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்ச, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் ஆகியோரால் விருந்துபசாரமளிக்கப்பட்டு, சினேகபூர்வ கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதில் மருத்துவர் அருட்குமார் அவர்களுடன், ரெலோ இயக்கத்தை சேர்ந்த சார்ள்ஸ் என்பவர் உட்பட பிரித்தானிய குடியுரிமை பெற்ற நான்கு பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்பொழுது இவர்களுக்கு கைலாகு கொடுத்து இவர்களை ஆரத்தழுவிக் கொண்ட கே.பி, உண்மை நிலையைப் புரிந்து கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு இவர்கள் இணங்கியமை தனக்கு தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகக் குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்பொழுது பிரித்தானிய தமிழர் நலவாழ்வுக் கழகத்தால் எதிர்காலத்தில் திரட்டப்படும் நிதியை நேரடியாக சிறீலங்கா சுகாதாரத்துறை அமைச்சிடம் கையளிப்பது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இவ்விடத்தில் கருத்துரைத்த சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்: ‘‘நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள். புலிகளின் காலத்தை மறந்துவிட்டு இனி எங்களோடு செயற்படுங்கள். புலிகளுக்கு வழங்கிய நிதியை இனி எம்மிடம் புலம்பெயர்ந்த தமிழர்கள் வழங்க வேண்டும்.'' என்று குறிப்பிட்டதாக தமிழர் நலவாழ்வுக் கழக வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழர் நலவாழ்வுக் கழகத்தின் தலைவர் மருத்துவர் புவி அவர்களினதும், பிரித்தானியாவின் தமிழ் நகராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரினதும் அனுசரணையுடனேயே மருத்துவர் அருட்குமார் தலைமையிலான குழுவினர் கோத்தபாய - பீரிஸ் - கே.பி தரப்பினரை சந்தித்திருப்பதாக தெரியவருகின்றது.

இது தொடர்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பிரமுகர் ஒருவர் கருத்துக் கூறுகையில்: ‘‘போர்க்குற்றம் பற்றி நாம் பேசிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. இறந்து போனவர்களைப் பற்றிக் கதைப்பதை விடுத்துஇ உயிருடன் இருப்பவர்களைப் பற்றி இனிப் பேசுவோம். சிறீலங்கா அரசாங்கம் யுத்தத்தில் வெற்றியடைந்து விட்டது. எமது மக்களுக்கு நாம் ஏதாவது உதவிகளைப் புரிய வேண்டும்.

அதற்கு சிறீலங்கா அரசாங்கத்துடன் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை. சிறீலங்கா அரசாங்கம் எம்மைப் பயன்படுத்த முற்படுகின்றது. நாமும் சிறீலங்கா அரசாங்கத்தைப் பயன்படுத்த முற்படுகின்றோம். யாரின் கை ஓங்குகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எமது குழுவினருடன் மிகவும் சினேகபூர்வமான முறையில் கோத்தபாய ராஜபக்ச கலந்துரையாடினார். இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களுடனும் நாம் பேசி வருகின்றோம்.'' என்றார்.

இதற்கிடையே, கோத்தபாய - கே.பி தரப்பினரை புத்திஜீவிகள் என்ற போர்வையில் மேற்குலக நாடுகளில் இருந்து தமிழர்கள் சிலர் சந்தித்திருப்பது புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே கடும் சீற்றத்தையும், அதிருப்தியையும் தோற்றுவித்துள்ளது.

வன்னியில் ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களைக் கொன்றுகுவித்த சிங்கள அரசுடன் சமரசம் பேசி நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு இவர்கள் முற்படுவதையிட்டு புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் பலர் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய பிரதிநிதி ஒருவர் எம்மிடம் கருத்துக் கூறுகையில்: ‘தனித் தமிழீழத்திற்கான ஆணையை வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் வழங்கியுள்ளார்கள்.

சிங்கள அரசை போர்க்குற்றவாளியாக பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நாம் முற்படும் பொழுது, சிங்கள அரசுக்கு சாமரம் வீசும் வகையில் இவர்கள் நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.

எமது மக்களைக் கொன்றுகுவித்த கோத்தபாய ராஜபக்சவுடன் இவர்கள் விருந்துண்டது, எமது மக்களின் உடல்களின் மீது அமர்ந்திருந்து உணவருந்தியமைக்கு நிகராகும்.'' என்றார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய பிரதிநிதி.

- நன்றி: ஈழமுரசு

Edited by kalaivani

இவருடன் சகவாசம் வைப்பதும் குற்றம்?

வைத்தவர்களையும் இன்ரபோலுக்கு தெரிவிக்கலாம்?

IF YOU HAVE ANY INFORMATION CONTACT:

http://www.interpol.int/public/Data/Wanted/Notices/Data/1998/43/1998_4743.asp

Edited by akootha

இவன் என்னடாப்பா எல்லாரயும் தெரியும் என்கிறான் என்று நினக்காதையுங்கோ.76 களிலேயே உந்த சாள்ஸ் இலண்டனில் டீ.என்.ஆ என்ற இயக்கம் தொடக்கி பின் இந்தியா சென்று புலிகளுடன் தொடர்பில் இருந்து (பிரபாகரனையும் சந்தித்தவர் .இரண்டாம் தடவை போகும் போது "சாள்ஸ் என்ன மெலிஞ்சு போனீர்கள் " என்று பிரபா கேட்டதாகச் சொன்னார்.}பின் லண்டன் திரும்மி வந்து 83 கலவரத்துடன் டெலோவுடன் தொடர்பை ஏற்படுத்தி சிறீ லண்டன் வந்த போது ஒருத்தரையும் சந்திக்க விடாது கொண்டு திரிந்தார்.பின் திம்பு பேச்சு வார்த்தைக்கு டெலோ சார்பில் கலந்து கொண்டார்(அப்போதும் நான் சந்தித்தேன்).பின் அமெரிக்க பிரமுகர் ஒருவர் டெலோவிற்கு கொடுத்த பெரும் தொகை பணம் இவரிடம் தேங்கிவிட்டது என்றும் கேள்வி.பின் டெலோ கதை முடிய லண்டனில் மெல்ல புலிக்கும் ஆதராவாக வேலை செய்ததாக கேள்வி.இவை எல்லாவற்றையும் விட இவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசியாலோடு சம்பந்தப் பட்ட பெரிய கதை ஒன்று இருக்கின்றது.எழுத மனம் வருகுதில்லை.

இவர் இப்ப மகிந்தாவை சந்திக்க போனது .ஒன்றும் அதிசயமில்லை.இப்படித்தான் இங்கே பலர் எமது அரசியலில் இருக்கின்றார்கள்.இதை விளங்காமல் இருப்ப்பவர்கள் தான் பாவம்.

நாளைக்கு நானும் போகின்றேனோ தெரியாது.

திட்டம் இட்டு யாழை நாறடித்தபடி KPயை எதிர்த்த ஒரே காரணத்துக்காக எல்லாரயும் திட்டி தீர்த்தபடி திரிந்த ஒரு கூட்டத்தை இப்ப எல்லாம் யாழுக்கை காணக்கிடைக்குது இல்லை....??

சர்வதேச நாடுகளிலுள்ள சிங்கள தூதரகம் பயங்கரவாத (போரக்குற்றவாளிகளின்) முகவர்களாக செயற்பட ஆரம்பிப்பதை அந்தந்த நாட்டு அரசுகளுக்கும், வெளியுறவுத் துறைகளுக்கும் அறிவிக்கவேண்டும்.

The Honourable Beverley J. Oda

Minister of International Cooperation. Canada.

June 27, 2010

Subject: Please apply sanctions against Sri Lanka

Dear Hon. Minister,

On June 22, UN has appointed a three member panel to look into alleged war crimes. I hope this process will result in a robust accountability that will provide a durable foundation for national reconciliation and the rule of law in the aftermath of Sri Lanka’s decades-long conflict.

Unfortunately, Sri Lanka continues its "counter insurgency", now against the diaspora Tamils, including that of Canadian Tamils. For example, all political organisations democratically built by the diaspora, based on Canadian values, for the Tamil national cause are now vilified by Colombo. When the question of political solution is raised, Sri Lanka now maintains that "nothing could be said on any political solution since the Sinhalese people have not given any mandate for the government for it."

I urge your Hon. Minsiter to consider an immeduate economic sanction until Sri Lanka makes an international delivery of political justice to match the norms of human civilisation. Our tax payers money cannot be given to state that stands accused of war crimes!

Thank you.

  • கருத்துக்கள உறவுகள்

திட்டம் இட்டு யாழை நாறடித்தபடி KPயை எதிர்த்த ஒரே காரணத்துக்காக எல்லாரயும் திட்டி தீர்த்தபடி திரிந்த ஒரு கூட்டத்தை இப்ப எல்லாம் யாழுக்கை காணக்கிடைக்குது இல்லை....??

அப்ப.... அவர், நல்லவரா? கெட்டவரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திட்டம் இட்டு யாழை நாறடித்தபடி KPயை எதிர்த்த ஒரே காரணத்துக்காக எல்லாரயும் திட்டி தீர்த்தபடி திரிந்த ஒரு கூட்டத்தை இப்ப எல்லாம் யாழுக்கை காணக்கிடைக்குது இல்லை....??

அவர்கள் அனைவருக்கும் நிதிவசூலிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதாம், அதனால் அவர்கள் பிஸி இனி வரமாட்டார்கள், சனம் நிதி கொடுத்தால்தானே நல்லா செருப்பால் குடுக்குங்கள். :lol::D:D

[b]இங்கு கனடாவில் நாங்கள் தயாராகவிருக்கிறோம் எவராவது பணம் வசூலிப்பது தெரிந்தால் காவல்துறைக்கு அறிவிப்பது என்பதில் முடிவாகவிருக்கிறோம்.இதையே எல்லாரும் பின்பற்றவும்.இதைவிட முக்கியமான விடயம்.வன்னியில் வறுமைப்படும் மக்களுக்கு பணம் சேகரிப்பதென்பது.

எமக்கு அனேகமான சொந்தங்கள் வன்னியில் இருக்கிறார்கள் அவர்களுக்கு பணம் அனுப்பும்போது அவர்களிடமே மேலதிகமாக பணத்தை அனுப்பி அயலவர்களுக்கும் சிறு சிறு உதவிகளை செய்ய சொல்வது சிறந்தமுறையாகத் தெரிகிறது(இவ்விடயத்தில் அனைவரும் இதய சுத்தியுடன் பரஸ்பர நம்பிக்கையுடனும் நடந்துகொள்ள வேண்டும்)இப்படி நாங்கள் செய்வதால் போலிகளை அடையாளப் படுத்திவிடலாம்.வெளிப்படையாகவோ மறை முகமாகவோ நாங்கள் வழங்கும் உதவிகளால் அரசு வெளி நாடுகளில் பெறும் பாரிய நிதிகளை ஏப்பம் விட்டு விட்டு உதவி வழங்கிய நாடுகளிடம் உதவிகளை தாம் தகுந்த முறையில் செலவு செய்கிறதாகவும் தம்பட்டம் அடிக்கிறார்கள் ஏனெனில் அங்கு விஜயம் செய்யும் அதிகாரிகள் மக்களை சந்திக்க விடுவதில்லை.

Edited by BLUE BIRD

[b]இங்கு கனடாவில் நாங்கள் தயாராகவிருக்கிறோம் எவராவது பணம் வசூலிப்பது தெரிந்தால் காவல்துறைக்கு அறிவிப்பது என்பதில் முடிவாகவிருக்கிறோம்.இதையே எல்லாரும் பின்பற்றவும்.இதைவிட முக்கியமான விடயம்.வன்னியில் வறுமைப்படும் மக்களுக்கு பணம் சேகரிப்பதென்பது.

எமக்கு அனேகமான சொந்தங்கள் வன்னியில் இருக்கிறார்கள் அவர்களுக்கு பணம் அனுப்பும்போது அவர்களிடமே மேலதிகமாக பணத்தை அனுப்பி அயலவர்களுக்கும் சிறு சிறு உதவிகளை செய்ய சொல்வது சிறந்தமுறையாகத் தெரிகிறது(இவ்விடயத்தில் அனைவரும் இதய சுத்தியுடன் பரஸ்பர நம்பிக்கையுடனும் நடந்துகொள்ள வேண்டும்)இப்படி நாங்கள் செய்வதால் போலிகளை அடையாளப் படுத்திவிடலாம்.வெளிப்படையாகவோ மறை முகமாகவோ நாங்கள் வழங்கும் உதவிகளால் அரசு வெளி நாடுகளில் பெறும் பாரிய நிதிகளை ஏப்பம் விட்டு விட்டு உதவி வழங்கிய நாடுகளிடம் உதவிகளை தாம் தகுந்த முறையில் செலவு செய்கிறதாகவும் தம்பட்டம் அடிக்கிறார்கள் ஏனெனில் அங்கு விஜயம் செய்யும் அதிகாரிகள் மக்களை சந்திக்க விடுவதில்லை.

அண்ணை இந்த சேரமான் கும்பலிடம்; ஏற்கனவே மக்ளிடம் பெற்ற கோடிக் கணக்கான பணத்திற்கு கணக்கு காட்டச் சொல்லுங்கள்

நாங்களும் புலம் பெயர்ந்த தமிழர்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்.புலத்தில் வன்முறையை தூண்ட முயற்சிக்கிறார்கள் என்று அனைத.து ஐரொப்பிய நாட்டு காவல்துiயிடமும் முறைப்பாடு செய்ய இருக்கிறோம்; இவர்களுடைய எழுத்துக்கள் திறந்த கடிதங்கள் கோமணக்கடிதங்கள் எல்லாம் மொழி பெயாக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.இதற்கான சட்ட ஆலோசனையையும் நாங்கள் பெற்றவிட்டோம் பொறுத்திருந்து பாருங்கள் புலம் பெயாந்த தமிழர்களின் பணத்தை யார் சுறட்டினார்கள். அங்கே மக்கள் பட்டி கிடக்க நமது சகோதரிகள் பசிக்காக சிங்களவனுக்கு மானத்தை விக்க இவர்கள் இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு நாடகம் ஆடினார்கள் எண்ட விடயங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.