Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைக்காக ஓயாது உழைத்து உரமூட்டியவர்களை ஒரே கணத்தில் துரோகிகளாக்குவதற்கு- ஒரு மணிநேரம் கூட காவலரணில் நிற்காமல் வெளிநாடுகளில் ஊடகம் என்ற போர்வையில் அறிக்கை விடுபவர்களுக்கு

Featured Replies

முள்ளிவாய்க்கால் இறுதிச் சமர்க்களத்தில் ஆயிரக்கணக்கான போராளிகள் சிங்களப் படைகளிடம் சிறைப்பட்டனர்.

அவர்களில் சிலர் போரின்போது எதிர்பாராமல் பிடிபட்டனர்.

வேறு சிலர் சரணடைந்தனர்.

எதற்காக ஆயிரக்கணக்கான போராளிகள் சரணடைந்தனர்-அவர்கள் ஏன் சண்டையிட்டுச் சாகவில்லை- குப்பி கடித்து மாளவில்லை? என்று கேள்வி எழுப்புகின்றனர் சிலர்.

இறுதிநேரத்தில் போராளிகளைச் சரணடையுமாறு கட்டளையிட்டது தேசியத் தலைமையே.

தேசியத் தலைமையும் மூத்த தளபதிகளும் முன்நின்று சரணடையுமாறு போராளிகளை அனுப்பி வைத்ததற்கு- சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளே சாட்சி.

ஆயிரக்கணக்கான போராளிகளின் உயிர்களைக் கொடுத்தாலும் போர்க்களத்தில் திருப்பத்தை நிகழ்த்த முடியாது என்ற யதார்த்தம் முள்ளிவாய்க்கால் மண்ணில் உணரப்பட்டிருந்தது.

சண்டையிட்டு மாய்வதாலோ- குப்பி கடித்து சாவதாலோ ஆகப் போவது ஒன்றுமில்லை. எல்லாமே கையை மீறிச் சென்று விட்ட நிலை அது.

போராளிகள் சரணடைந்து உயிர்களையாவது காப்பாற்றிக் கொள்ளட்டும் என்று நோக்கத்தில் தேசியத் தலைமை எடுத்த முடிவு அது.

ஆயிரக்கணக்கான போராளிகளின் மரணங்கள் நிகழ்ந்தால்- அது அவர்களின் குடும்பங்களையும் நடுத்தெருவுக்குக் கொண்டு வரும் என்பதைத் தேசியத் தலைமை உணர்ந்திருந்தது.

எனவே போராளிகளை சரணடையுமாறு அறிவுறுத்தியது தேசியத் தலைமை.

அந்த முடிவுக்கேற்ப சரணடைந்தவர்களே அதிகம்.

சரணடைந்த போராளிகள் இன்று அடையாளம் தெரியாத முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலர் எங்கே- என்னவாயினர் என்று கூடத் தெரியாது.

சிங்களப் படைகள் காவலில் உள்ள போராளிகளைச் சித்திரவதை செய்து- ஆயுதங்களை தோண்டியெடுப்பது தொடக்கம் இரகசியங்களை கறப்பது வரை எல்லாவற்றையும் செய்கின்றனர் என்பது வெளிப்படை.

தடுப்புக்காவலில் உள்ள போராளிகள்- தமது விடுதலையைத் துரிதப்படுத்தும் என்ற நம்பிக்கையிலும், சித்திரவதைகளைத் தாங்க முடியாமலும் இரகசியங்களை உளறுவது ஒன்றும் ஆச்சரியமில்லை.

இப்படியான இரகசியங்கள் சிங்களப் படைகளுக்கு கசிந்து விடக் கூடாது என்பதற்காகவே புலிகள் இயக்கம் தொடங்கப்பட்ட போது கழுத்தில் சயனைட் கட்டும் மரபை உருவாக்கினார் தேசியத் தலைவர்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் அந்த மரபுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆயிரக்கணக்கில் குப்பி கடித்துச் சாவதால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தே அந்த முடிவை எடுத்தார்.

அதேவேளை தடுப்புக்காவலில் உள்ளவர்களைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள் என்பது போன்ற பிரசாரங்களும் முன்னெக்கப்படுகின்றன.

இந்தப் பிரசாரங்களுக்குத் துணை நிற்பது புலம்பெயர் சமூகத்தில் உள்ளவர்களும் ஊடகங்களுமே.

இவர்கள் ஆயுதம் தூக்கியவர்களோ, களத்தின் யதார்த்தத்தை அறிந்தவர்களோ அல்ல.

அவர்களின் தேவைகள் வேறு விதமானவை.

இந்தியப் படைகள் காலத்தில் நூற்றுக்கணக்கான போராளிகள் சிறைப்பட்டனர்.

ஆனால் அவர்களை புலிகளின் தலைமை ஒதுக்கி வைக்கவில்லை.

மீளவும் சேர்த்து உயர் பொறுப்புகளிலும் அமர்த்தியது.

புலிகள் இயக்கத்துக்கு ஆயுதப் போராட்டம் நடத்தக் கூடியபலம் இல்லை என்றுணர்ந்த நிலையில் ஆயுதங்களைக் காட்டிக் கொடுக்கும் போராளிகளை துரோகி என்று பட்டம் சூட்டுவதற்கு யாருக்குமே தகுதியில்லை.

ஐந்து- பத்து- இருபது- முப்பது வருடங்கள் விடுதலைக்காக ஓயாது உழைத்து உரமூட்டியவர்களை ஒரே கணத்தில் துரோகிகளாக்குவதற்கு- ஒரு மணிநேரம் கூட காவலரணில் நிற்காமல் வெளிநாடுகளில் சுகபோகமாக வாழும் இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.

ஆயுதமே தூக்காதவர்கள், ஆயுதப் போராட்டத்தைக் காட்டி புலம்பெயர் மக்களின்; பணத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவோருக்கு இப்படியான குற்றச்சாட்டைச் சுமத்தும் தகுதி கிடையாது.

ஒரு காலத்தில் போராளிகள் என்று பெரிதும் மதிக்கப்பட்டவர்களை- தளபதிகளாக பொறுப்பாளர்களாக இருந்தவர்களை இன்று இவர்கள் துரோகிகள் என்று துச்சமாகப் பிரசாரம் செய்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் தந்த பாடத்தை நாம் சரியாகப் படிக்கவில்லை.

நன்றி மறந்த சமூகமாக மாறிவிட்ட தமிழருக்கு முள்ளிவாய்க்கால் அழிவுகளின் முடிவாக அமைய முடியாது.

காகிதப்புலிகளே உங்களிடம் சில கேள்விகள்?

1. அடிக்கடி நீங்கள் கே.பி விவகாரத்தை தூக்கிப்பிடிப்பதன் மர்மம் என்ன??

2. உங்கள் குழுமம் விடுதலையின் பேரால் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை கடன் கொடுத்தவர்க்களுக்கு கொடுத்துதவாமல் நீங்கள் மட்டும் சுகபோகங்களை அனுபவிப்பதன் மர்மம் என்ன?

3. உங்களை நம்பி எத்தனையோ பணியாளர்கள் விடுதலைக்கு கடன் பெற்று தந்தோமே? அதற்கு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? விடுதலையை நேசித்தோம் என்ற ஒன்றுக்காக நீங்கள் செய்யும் அக்கிரமங்களை பொறுத்துக் கொண்டோம், எத்தனை பணியாளர்களின் குடும்பங்கள் கடன் சுமையால் தவிக்கிறன [நீங்கள் இப்படி தேசிய விடுதல இயக்கத்தை அதுவும் தேசியத் தலைவரை மதிக்கின்றோம் போற்றுகின்றோம் என்று சொல்லிக்கொண்டு]

அவர்களின் வாழ்வுக்கு ஓர் ஆறுதலுக்காவது இதுவரை என்ன செய்தீர்கள். ?

4. கே.பி விவராரத்துக்கு முக்கியம் கொடுத்து வாழ்க்கை ஓட்டும் நீங்கள் எமது மக்களினதும் போராளிகளினதும் விடுதலைக்கும் மறுவாழ்வுக்குமாக என்ன நடவடிக்கைகளை எடுத்தீர்கள்?

5. கே.பி யை விமர்சிக்கும் எந்த காட்டுமானோ இல்லை சேரமானோ அதுசரி நீங்கள் மட்டும் அனைத்துலகத் தொடர்பகத்தின் நிர்வாகத்தில் பணி புரிந்த போராளிகளை மட்டும் சிங்களவனுக்கு காசு கொடுத்து வெளியே கொண்டுவருவதன் மர்மம் என்ன? சிறைப்பட்ட மற்றவர்கள் போராளிகள் இல்லையோ?

6. உங்களின் இன்றைய தேசியத் தலைவர் அறிவு மற்றும் கலையழகன் ஆகியோர் எப்படி வெளிநாட்டுக்கு வந்தார்கள்?

7. காஸ்ரோவின் சர்வதேச நிதித்தொடர்பாளர்களில் ஒருவரான மலேசிய இராயன் மகிந்த சமரசிங்காவின் கூட்டாளியாக இருந்து கொண்டு காட்டிக்கொடுக்கிறாரே அதை மட்டும் ஏன் மறைக்கிறீர்கள்?

8. பாலகுமார் உட்பட யோகி வரை சரணடைந்தார்களே சிறையில் என்ன நிலையோ தெரியாது? ஆனால் கடைசி வரை அதாவது 2009 மே 10 காஸ்ரோ வீரச்சாவடையும் வரை அவருடன் நின்ற ஊடக பிதாமகன் நந்தகோபன், மற்றும் திலீபன் எப்படி புலம்பெயர்ந்த தேசத்துக்கு வந்தார்கள் இதன் மர்மங்களை மக்களுக்கு சொல்வீர்களா??

9. கேபி தமிழினத்துரோக்கி அவர் கோட்டபாயவுடன் கட்டித்தழுவுகின்றார் என்றால், கிசோர் மூலம் TRO ரெஜி இன்றும் பசில் ராஜபட்சவுடன் தொடர்பு கொண்டு பின்கதவால் காரியமாற்றி வருகின்றாரே அது எப்படி? அவரை எந்தப்பட்டியலில் இணைக்கப்போகின்றீர்கள்?

10. கே.பி துரோகம் பண்ணுவதாக சொல்லும் கனவான்களே கருணா கும்பலிடம் சுவிசில் காசுவாங்கினீர்களே அது தவறு என்று நாம் தட்டிக்கேட்ட பொழுது. போராட்டத்துக்கு காசு வேணும் அது எங்கையும் பெறுவோம் அது கருனாவாக இருந்தாலென்ன டக்கிளஸ்சாக இருந்தாலென்ன எமக்கு காசு வேண்டும் என்று காஸ்ரோ சொன்னாரே அதன்படி சுவிசிலுள்ள கருணாவின் தொடர்பாளரிடம் ???? ?????????? 2 லட்சம் சுவிஸ் பிராங்குகள் வாங்கினீர்களே? ஆதாரமும் சாட்சியும் உண்டு இதை எப்படிச் சொல்வது. துரோகம் என்பதா?? இல்லை காஸ்ரோ என்னும் குறுநில மன்னனின் தியாகம் என்பதா?

11. மாவீரரின் இரத்தத்தால் எழுதிய தேசியக்கொடியை விளையாட்டு விழாவில் கிழித்தெறிந்து காவல்துறையில் விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்தவர்களிடம் , நீதி மன்றத்தில் வழக்குப் பதிவுசெய்தவர்களிடம் 1 லட்சம் சுவிஸ் பிராங்குகள் வாங்கினீர்களே? இது தவறு என்று வாதிட்ட கிளைப் பொறுப்பாளாரை தாக்கும்படி காஸ்ரோ தமிழ் இளையோர் அமைப்பிடம் சொல்லி தூண்டி விட்டாரே இதை எப்படி சொல்வது? இந்த தவறினால் இதே விளையாட்டு விழாவை நடத்தவிடாது காவல்துறை தடை விதித்துள்ளதே?

Ex-LTTE Chief “KP”: The Tiger who changed his stripes

ஈமெயிலில் எனக்கு வந்த கேழ்விகளை பதில்களுக்காக இங்கு சமர்ப்பிக்கறேன்!

Edited by Bond007

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடங்களாக அரசுடன் இயங்கும் டக்ளசில் இல்லாத நம்பிக்கை எப்படி ஒரு வருடத்தில் கே.பியிடம் இலங்கை அரசும் , இராணுவமும் கொண்டுள்ளது எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடங்களாக அரசுடன் இயங்கும் டக்ளசில் இல்லாத நம்பிக்கை எப்படி ஒரு வருடத்தில் கே.பியிடம் இலங்கை அரசும் , இராணுவமும் கொண்டுள்ளது எப்படி?

தமிழ்மக்களை இலங்கைப் பிரஜைகள் என்று பெருமிதமாகச் சொல்லவைக்க டக்ளசால் முடியாது. K.P. தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சேர்த்து தன்மானத்துடனும் சுயகெளரவத்தினுடனும் வாழ வழிசெய்வார் என்று இலங்கையரசும் இராணுவமும் நம்பிக்கைகொண்டிருக்கலாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களை இலங்கைப் பிரஜைகள் என்று பெருமிதமாகச் சொல்லவைக்க டக்ளசால் முடியாது. K.P. தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சேர்த்து தன்மானத்துடனும் சுயகெளரவத்தினுடனும் வாழ வழிசெய்வார் என்று இலங்கையரசும் இராணுவமும் நம்பிக்கைகொண்டிருக்கலாம். :lol:

ம்ம், இலங்கை அரசு 60 வருடமாக ஒருவரையும் நம்பவில்லை. கடைசியாக கே.பியை தான் நம்புகிறார்களாக்கும்.

60 வருடமாக சிங்கள அரசுகள் தேடிய ஆள் கிடைத்து விட்டது என்கிறீர்கள்!!!

:lol: ....... மீண்டும் கண்ணீர் விட்டு அழுகின்றன ... ஓநாய்கள்!!!!!! ....... ஆடுகள் நனைகின்றனதான், அதற்காக ஓநாய்கள் அழுவது எதற்கென்று தெரியாத மாங்காய்களா நாங்கள்???????? .... ம்ம்ம்ம்ம்ம்ம் :D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடுகள் நனைகின்றன அது பாவம்தான் அதுக்கு ஏன் இந்த ஓநாய்கள் அழுகின்றன.

2006 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை அரசுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கும் கேபி துரோகம் இழைத்துள்ளார்,

கடைசிவரை ஆயுதகப்பல்கள் வரும் என தலைவரை நம்பவைத்து.

வந்த ஆயுதகப்பல்களை சிறீலங்கா அரசுக்கு காட்டி கொடுத்து, கப்பலை வரவிடாது போராளிகளை ஏமாற்றியதன் மூலம்.

ஆயுத கப்பல் வரும் என மக்களை நம்பவைத்தன் மூலம்.

புலம்பெயர் தமிழரிடம் வாங்கிய காசில் ஆயுத்தை வாங்கி அனுப்பிவிட்டு அதை சிறீலங்கா அரசுக்கு காட்டி கொடுத்தன் மூலம் புலம்பெயர் மக்களையும் ஏமாற்றி இருக்கிறார்.

சரனடைந்த பின்னர் தான் சிறீலங்கா அரசுக்கு விலைபோனதை அறிவியாது வெளிநாட்டு செயற்பாட்டரை நம்ப வைத்து கைது செய்ய அவர்களது கடவுச்சீட்டு எண் முதல் அவர்களது இரகசிய பெயர்கள் முதல் அவர்களை தொடர்புகொள்ளும் இரகசிய வார்த்தைகளையும் காட்டிகொடுத்து, அவர்களை கைது செய்தன் மூலம் செயற்பாட்டளரையும் ஏமாற்றி இருக்கிறார்,

இது மிக மிக ஆபத்தான பெரிய விச பாம்பு.

"சிறிய பாம்பு என்றாலும் பெரிய தடியால் அடித்துகொல்".

Edited by சித்தன்

இந்த கொமடி சீனுகள் எழுத எல்லாம் எவ்வளவு காசு குடுப்பாங்கள்....??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காஸரோ தானாக் எதுவும் செய்யவில்லை.போர் முடியுமட்டும் தலைவரின் ஆணைப்படியே நடந்தவன். அவன் பல ஆண்டுகளாக தன் உடல் உபாதையையும் பொருட்படுத்தாது எமது விடுதலைக்காக களத்தில் நின்ற அவனை கே.பி யுடன் ஒப்பிட ஒரு நாய்க்கும் அருகதையில்லை. அவனுக்கு மரணம் இப்போதில்லை. போரின் கடைசியில் சரணடைந்த யாரையும் குறைகூறமாட்டேன். ஆனால் முன்பே சரணடைந்த பாப்பா போன்ற நாய்களை மன்னிககவும் மாட்டேன். கே.பி கைதுக்கு முன்பே இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டவனைக் காட்டிக்கொடுத்தது யார்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதும் இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தமுடியும் என்று புலம்பெயர் தமிழர்கள் நம்பிக்கொண்டிருப்பது வேடிக்கையான விடயம். வன்னியில் இனவொழிப்பையும் சர்வதேச நாடுகளின் ஆசியுடன் நடாத்திமுடித்து விட்டு, அதன் தடயங்களையும் கச்சிதமாக அழிக்கும் பணியில் இலங்கையரசு ஈடுபட்டுவருகின்றது. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் கையாலாக நிலையிலேயே தமிழர்கள் உள்ளார்கள். இன்னமும் நமது இனத்தின் கீழான நிலைக்குக் காரணம் தெரியாமல் வெத்துவேட்டாக சவுண்டுகொடுத்து ஒரு பிரயோசனமுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதும் இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தமுடியும் என்று புலம்பெயர் தமிழர்கள் நம்பிக்கொண்டிருப்பது வேடிக்கையான விடயம். வன்னியில் இனவொழிப்பையும் சர்வதேச நாடுகளின் ஆசியுடன் நடாத்திமுடித்து விட்டு, அதன் தடயங்களையும் கச்சிதமாக அழிக்கும் பணியில் இலங்கையரசு ஈடுபட்டுவருகின்றது. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் கையாலாக நிலையிலேயே தமிழர்கள் உள்ளார்கள். இன்னமும் நமது இனத்தின் கீழான நிலைக்குக் காரணம் தெரியாமல் வெத்துவேட்டாக சவுண்டுகொடுத்து ஒரு பிரயோசனமுமில்லை.

அப்ப சவுண்டு விடாமல் சிறிலங்கா அரசிசை நக்கினால், தமிழன் நிலை மேலான நிலைக்கு உயர்ந்து விடுமா? ^_^:lol::lol:

Edited by சித்தன்

  • தொடங்கியவர்

:lol: ....... மீண்டும் கண்ணீர் விட்டு அழுகின்றன ... ஓநாய்கள்!!!!!! ....... ஆடுகள் நனைகின்றனதான், அதற்காக ஓநாய்கள் அழுவது எதற்கென்று தெரியாத மாங்காய்களா நாங்கள்???????? .... ம்ம்ம்ம்ம்ம்ம் :lol:

அது சரி நாங்கள் ஓநாய்கள் தான் ஆனால் நீங்கள் ஆடுகளை மகுடியாலை ஊதி பின்னாலை வரவைச்சு துவசம் செய்தனியள்! ஓநாய் ஆடு கதையளக்கிறதை விட்டுப்போட்டு மனச்சாட்சியோடை சுய விமர்சனம் செய்யுங்கோ! இருந்தவன் போனவன் எல்லாருக்கும் கள்ளர் கடையர் எண்டு பட்டம் கட்டிப்போட்டு இப்ப ஓநாய் புநாய் கதையளக்கிறியள்! நீங்கள் செய்யவும் மாட்டியள்! செய்யிறவனை விடவும் மாட்டியள்! சும்மா வாய்ச்சவடால்தான்! பிடிபட்டு சித்திரவதை படுகிற போராளியளையே துரோகியள் என்ட உங்களக்கு நாம் எம்மாத்திரம்!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சவுண்டு விடாமல் சிறிலங்கா அரசிசை நக்கினால், தமிழன் நிலை மேலான நிலைக்கு உயர்ந்து விடுமா? ^_^:lol::lol:

வளர்த்தால் குடுமி, சிரைச்சால் மொட்டை என்பதற்கு அப்பால் ஒன்றும் தெரியாமல் இருந்தால் சவுண்டு கொடுப்பதும், நக்குவதும்தான் முடியும்.

தனிநாட்டை வட துருவத்திலும், தமிழர்கள் சிங்களவர்களாக மாறுவதைத் தென்துருவத்திலும் வைத்துப் பார்த்தால் இடையில் உள்ள பெருந்தூரம் தெரியும். அதில் எங்காவது ஒரு புள்ளியில் சென்று நிலைத்து நிற்கலாம் என்பதையும் உணரத் தலைப்படவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.