Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதி விவேக பூரண குருவும் ஒன்பது சீடர்களும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதி விவேக பூரண குருவும் ஒன்பது சீடர்களும்!

அதி விவேக பூரண குருவுக்கு ஏழரை பிடித்ததோ, எட்டரை பிடித்ததோ… அவர் சென்று அமர்ந்த இடம் அவரைச் சிறப்பிப்பதாக இல்லை. தெற்கில் தொடர்ந்தும் நிலை கொள்வதற்கு விரும்பாத அதி விவேக பூரண குரு வடக்கே சென்று ஆட்சி பீடத்தில் அமரவே விரும்பினார். அதுவும் அவருக்கு சிக்கல் நிறைந்ததாகவே போய்விட்டது.

அதி விவேக பூரண குரு வடக்கே செல்வதற்குப் பல ஆறுகளைக் கடக்க வேண்டியதாக இருந்தது. அந்தப் பாதையைக் குறுக்கிடும் புலம்பெயர் ஆறுகள் கோப வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. அதி விவேக பூரண குரு வடக்கே சென்று முடி சூட முற்படுவதற்குப் பின்னாலும், முன்னாலும் பெரும் சதிகள் இருப்பதாகப் புலம்பெயர் ஆறுகள் பொங்கிக் குதித்தன.

அதி விவேக பூரண குரு தனது ஒன்பது சீடர்களுக்கும் உடன் அழைப்பு விடுத்தார். நாடு நாடாகப் புலம் பெயர்ந்து வாழ்ந்த அந்த ஒன்பது சீடர்களும் ஒன்றாகப் பயணித்து குருவின் சன்னிதானத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே சென்ற சீடர்களில் பலருக்கு குருவின் பந்தாவும், பவித்திரமும் அதிர்ச்சியைக் கொடுத்தன. தாங்கள் காண்பது எல்லாமே உண்மைதானா? என்று தங்களை ஒவ்வெரு தரமும் கிள்ளிப் பார்த்துக் கொண்டார்கள்.

எதிரிகளின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னப்பட்டு, நொந்து நூலாகியிருப்பார் என்று எண்ணிச் சென்ற சீடர்களில் சிலருக்கு குருவின் ஆடம்பர வாழ்வு நம்ப முடியாததாக இருந்தது. எதிரி நாட்டு மன்னரது பாசத்திற்குரிய இளவரசர்களுடன் குரு கிட்டி அடித்து விளையாடிக்கொண்டிருந்தார். நவீன யுகம் என்பதால், தண்டமும் கமண்டலமும் ஏந்திய குருவின் கரங்களில் கைபேசிகள் கிணு கிணுத்தன. உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் இருந்து அவரது சீடர்கள் அவரது உத்தரவுகளைக் கேட்டுப் பெற்றுக்கொண்டனர்.

”குருவே! எப்படி… உங்களால் மட்டும் எப்படி இந்த அதிசயங்களை நிகழ்த்த முடிந்தது…?” என்று ஆச்சர்யமாகக் கெட்டார்கள்.

”எதிரி நாட்டு ஒற்றர் தலைவன் என்னுடைய நெருங்கிய நண்பன்… 2006 முதலே அவர் என்னுடைய சீடர் ஆகிவிட்டர். அவர் மூலமாக… நான் இளவரசர்களுடனும் நட்பை ஏற்படுத்திக் கொண்டேன்…” என்றார் பெருமையாக.

விக்கித்து நின்ற சீடர்களை அழைத்துக்கொண்டு நகர் வலம் வந்தார் அதி விவேக பூரண குரு. அதற்கான அத்தனை ஒழுங்குகளையும் எதிரி நாட்டு இளவரசர் ஏற்படுத்திக் கொடுத்தார்.

சீடர்களுடன் அதி விவேக பூரண குரு நடத்திய தேனீர் விருந்தில் எதிரி நாட்டு இளவரசரும், ஒற்றர் படைத் தலைவனும், மந்திரி பிரதானிகளும் கலந்து கொண்டனர். வடக்கே குரு முடி சூடுவதில் தங்களுக்குள்ள விருப்பங்களையும் அவர்கள் தெரிவித்தனர். அவர்களது இந்தத் திட்டத்தில் ஏதோ சதி இருப்பதாகச் சீடர்களில் சிலர் அச்சப்பட்டாலும், அங்கு அவர்களால் எதுவும் பேச முடியவில்லை.

புலம்பெயர் ஆறுகளைக் கடப்பதற்கு ஆவன செய்யுமாறு சீடர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆறுகள் உறங்கும் நேரம் பார்த்து, ஆற்றைக் கடக்கும் திட்டம் தீட்டப்பட்டது. அதைப் பரிசோதிக்க ஆளுக்கொரு கொள்ளிக் கட்டையும் வழங்கப்பட்டது.

ஆற்றங்கரையை அடைந்த சீடர்களுக்குப் பொங்கிப் பிரவகித்து ஓடும் ஆற்றைப் பார்த்ததும் அடி வயிறு கலக்கியது. குருவின் கட்டளையாச்சே… என்ற எண்ணத்துடன் கரையில் நின்றவாறே கொள்ளியை ஆற்றில் அமுக்கினார்கள். கொள்ளிக் கட்டை அதி சீற்றத்துடன் அணைந்தது. திடுக்கிட்ட சீடர்கள் குருவுக்கு கைபேசியில் அழைத்தார்கள்.

”குருவே! புல்பெயர் ஆறுகள் உறங்கவில்லை. விழிப்பாகவே இருக்கின்றன…” என்று அலறினார்கள்.

நம்பிக்கை தளராத குரு ”மீண்டும் முயற்சி செய்யுங்கள். ஆனால்…, நம் முன்னோர்கள் செய்தது போல் அணைந்த கொள்ளிக் கட்டையுடன் சென்று ஏமாந்து விடாதீர்கள்… கொள்ளிக்கட்டையை மீண்டும் எரிய வைத்தே கொண்டு செல்லுங்கள். அப்போதுதான் ஆறு உறங்குகிறதா? விழிப்பாக இருக்கிறதா? என்று பார்க்க முடியும்.” என்று கட்டளையிட்டார்.

குருவின் முட்டாள்த்தனத்தையும், பேராசையையும் புரிந்து கொண்ட ஒரு சீடன் கொள்ளிக்கட்டையை எறிந்துவிட்டுச் செல்ல, மீதி எட்டு முட்டாள் சீடர்களும் மீண்டும் கொள்ளிக் கட்டையை எரிய வைத்தவாறு ஆற்றை நோக்கி நடந்தார்கள்.

’ஆறு உறங்கிவிட்டதா…, இல்லை விழிப்பாகவே இருக்கிறதா…, என்று அறிய உங்களுக்கு ஆவலாக இருக்கிறதா? அவர்களிடமே நீங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கலாம்.”

http://www.tamilkathir.com/news/3722/58//d,full_article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அதி விவேக பூரண குருவும் ஒன்பது சீடர்களும்!

--------

குருவின் முட்டாள்த்தனத்தையும், பேராசையையும் புரிந்து கொண்ட ஒரு சீடன் கொள்ளிக்கட்டையை எறிந்துவிட்டுச் செல்ல, மீதி எட்டு முட்டாள் சீடர்களும் மீண்டும் கொள்ளிக் கட்டையை எரிய வைத்தவாறு ஆற்றை நோக்கி நடந்தார்கள்.

’ஆறு உறங்கிவிட்டதா…, இல்லை விழிப்பாகவே இருக்கிறதா…, என்று அறிய உங்களுக்கு ஆவலாக இருக்கிறதா? அவர்களிடமே நீங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கலாம்.”

KP0806.jpgkumaran_pathmanathan_new_photo.jpgsmiley%20telephone(1).jpgGdaemBAR80288178.gif

சிங்கள அரசின் கையில் இருக்கும் கே பி. யை இன்னும் துரோகியாக்குவதிலே சிலர் குறியாக இருக்கிறார்கள் இது தலைவர் கே பி யை துரோகி ஆக்குவதை விடை தங்களை நல்லவர்கள் போல் காட்ட முற்படுவது போல் இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய கே.பியை தலைவர் ஆக்கி விட்டார். :)

தலைவர் KP... :)

விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையின் புலனாய்வுக் கட்டமைப்புகளின் பார்வை புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மீது திரும்பியுள்ளது.

புலம்பெயர் தமிழ்ச்சமூகம் புலிகள் இயக்கத்துக்கு உயிரூட்ட முனைவதாக அரசாங்கத் தரப்பு அண்மைக்காலமாக குற்றம்சாட்டி வருகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தொடக்கம் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண, முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸ வரை எல்லோருமே இந்தக் குற்றச்சாட்டுகளை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் முன்வைக்கின்றனர்.

இந்தநிலையில் புலம்பெயர் சமூகத்தின் மீது இலங்கைப் புலனாய்வுச் சேவைகளின் கவனம் திரும்பியிருப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயம் அல்ல.

புலிகள் இயக்கம் உள்நாட்டில் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு விட்ட போதும் வெளிநாடுகளில் அதன் கட்டமைப்புகள் சிதையவில்லை என்பது அரசாங்கத்தின் கருத்து.

ஆனாலும்.

முள்ளிவாய்க்கால் அழிவுகளுக்குப் பிறகு புலிகள் இயக்கம் இரண்டுபட்டு நிற்பது உண்மை.

* ஒரு தரப்பு புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை நிராகரிக்கிறது.

* அடுத்த தரப்பு பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக் கொள்கிறது.

ஆனாலும் இந்தப் பிளவின் அடிப்படையானது விடுதலைப் புலிகளுக்கு வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை தக்கவைத்துக் கொள்வதில் ஏற்பட்ட குழப்பம் தான் என்பதில்; சந்தேகம் இல்லை.

* [போராட்டத்துக்கு கடைசி வரை காசு தாருங்கள் இல்லையேல் நீங்களும் துரோகிகள் தான் என்று காஸ்ரோ குழுமம் வலியுறுத்தி காசு திரட்டிய போது காசு கொடுத்த பலர் இன்று நடுத்தெருவில் ஆனால் விடுதலையின் பெயரால் காசு சேகரித்த விடுதலை வியாபாரிகள் ஆடம்பர வாழ்க்கையில், வாழ்வதோடு மட்டுமல்லாமல் , போதாக்குறைக்கு பிரபாகரனின் உயிர்பை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் இக் குழுமம் தாம் மறைத்து வைத்திருக்கும் பணத்தில்......? குறள் தொலைகாட்சி சீமானின் கட்சி போன்றவற்றில் முதலீடுகளை செலுத்தி தமக்கு ஆதரவான பிரச்சாரங்களை இந்திய வியாபாரிகள் மூலம் செய்து வருகின்றனர்]

முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு புலிகள் இயக்கம் கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதன் தலைமையின் ஒன்றுபடும் நிலை உருவானது, ஆனால் அதற்குள் புலனாய்வுப் பிரிவினர் அவரை மலேசியாவில் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு வர புலிகள் இயக்கத்தை மீளமைக்கும் முயற்சிக்குப் பேரிடியாக அமைந்தது.

இப்போது கொழும்பில் அடையாளம் தெரியாத இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கே.பியை வைத்து ஒரு புலனாய்வுப்போர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் மற்றும் அதன் முதல் அமர்வு என்பன அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ள நிலையில் - கே.பியை வைத்து புலம்பெயர் சமூகத்துக்குள் குழப்பத்தை- அவநம்பிக்கையை- பிளவை ஏற்படுத்தும் காரியத்தில் புலனாய்வுச் சேவைகள் இறங்கியுள்ளன.

2. அரசாங்கத் தரப்பு கே.பி தமக்கு ஒத்துழைப்புத் தருவதாக கூறிக் கொண்டு அவரை புலம்பெயர் சமூகத்திடம் இருந்த அந்நியப்படுத்த முனைகிறது.

3. கே.பியின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட நாடு கடந்த அரசைத் தோற்கடிப்பதற்கான ஒரு தந்திரோபாயமாகவே இது பார்க்கப்படுகிறது.

4. இன்னொரு பக்கத்தில் கே.பி தொடர்பாக பல்வேறு செய்திகள் எதிர்க்கட்சிகள் மத்தியில் இருந்தும், சிங்கள, ஆங்கில ஊடகங்களிலும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

5. கே.பி வடக்கு,கிழக்கு புனரமைப்புக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் புலம்பெயர் சமூகத்தினரை ஒன்றிணைக்க முனைவதாகவும் செய்திகள் கசிய விடப்படுகின்றன

6. அவர் வடபகுதிக்கு சென்றதாகவும் சகல சுகபோகங்களுடன் வாழ்வதாகவும் கூட செய்திகள்; வெளியாகின்றன.

எதிர்க்கட்சிகள் இந்த விடயத்தை ஊதிப் பெருப்பிக்க முனைவதையும்,காணமுடிகிறது.

ஒரு பக்கத்தில் இப்படியான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்க கே.பியை வடபகுதிக்குக் கொண்டு போகவேயில்லை என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸ. அவர் தடுப்புக் காவலில் தான் வைக்கப்பட்டுள்ளார் - ஆனால் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த சிலரை கொழும்புக்கு வரவழைத்து புனர்நிர்மாணப் பணிகள் குறித்துப் பேசுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் உறுதி செய்துள்ளார்.

இந்தக் கட்டத்தில்,

ஏற்கனவே கே.பியின் தலைமைத்துவத்தை ஏற்க மறுத்த பிரபாகரனின் மரணத்தை உறுதி செய்து அவர் வெளியிட்ட அறிக்கையால் கோபம் கொண்டுள்ள தரப்புகள் அவரை துரோகி என்ற வகையில் பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டன.

* [இதில் சேரமான்களும், வேறும்சில வயிற்றுப்பிழைப்பு கும்பல்களும் அடங்கும்]

புலம்பெயர் ஊடகங்களில் கே.பிக்கு எதிரான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

* கே.பி அரசதரப்புக்கு ஒத்துழைப்பு வழங்குகிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்குச் சுதந்திரமான எந்த வழிகளும் இல்லை.

* ஆனால் அவரை வைத்து இலங்கை அரசாங்கம் ஒரு நாடகம் ஆடுகிறது என்பது உண்மை.

* இந்த நாடகத்தில் அவர் ஒரு பாத்திரமேற்கிறாரா இல்லையா என்பது கூட சரியாகத் தெரியாத நிலை தான் உள்ளது.

* எந்தவொரு சுதந்திர ஊடகவியலாளரையும் கே.பியைச் சந்திக்க அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

* அவர் வடபகுதிக்குச் சென்றது தொடர்பாகவோ, அபிவிருத்தி, புனர்வாழ்வு குறித்த சந்திப்புகளில் பங்கேற்றது தொடர்பாகவோ- எந்தவோரு புகைப்பட ஆதாரத்தையும் அரசாங்கம் வெளியிடவும் இல்லை.

இப்படிப் பல ஓட்டைகள் இந்த விவகாரத்தில் இருக்கின்றன.

* கே.பி அரசுக்கு எந்த வழியில் உதவுகிறார் என்பது பற்றிய பல்வேறு கேள்விகள் இருக்கின்ற நிலையில்.........?

அவரக்கு எதிராக அவரை எதிர்க்கும் ஒருசிலரால் புலம்பெயர் சமூகத்தில் இருந்து கருத்துகள் வெளியாகத் தொடங்கி விட்டன.

இந்தவகையில் பார்க்கும் போது .................,

கே.பி என்ற சொல்லை வைத்து இலங்கையின் புலனாய்வுச் சேவைகள் தொடங்கிய புலனாய்வுப் போரில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளதையே உறுதிப்படுத்த முடிகிறது. அதாவது புலம்பெயர் சமூகத்தின் மத்தியில் இந்தச் செய்திகள் ஏற்படுத்தியுள்ள குழப்பமும் தாக்கமுமே இதை உறுதி செய்கின்றன.

புலிகள் அமைப்பு வெளிநாடுகளில் இருந்தும்; இனிமேல் வலுவாகச் செயற்பட முடியாது என்பதையும், காலப்போக்கில் அது அங்கேயும் வலுவிழந்து போய்விடும் என்பதையுமே இந்த நிகழ்வுகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. [ இதை தமிழ்நெற், மற்றும் தமிழ் தேசியம் பேசும் சிலர் உணரமறுப்பதுதான் வேதனை.]

இலங்கையின் புலனாய்வுச் சேவைகள் இப்போது கடல்கடந்த அளவில் புலனாய்வுச் சமர்களை நடத்தும் அளவுக்கு வளர்ந்து விட்டன. அதற்கு மலேசியா போன்ற நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் மிகத் தாராளமாகவே ஒத்துழைத்து வருகின்றன.

* இலங்கை அரசின் இந்தப் புலனாய்வுப் போருக்கு முகம்கொடுக்க முடியாமல் புலம்பெயர் சமூகம் திணறத் தொடங்கி விட்டது. ஆனாலும் புலம்பெயர் சமூகமும், புலிகள் சார்ந்த தரப்புகளும் தாம் வழிப்புடன் இயங்குவதாகவும் முன்னெச்சரிக்கையோடு செயற்படுவதாகவும் காட்டிக் கொள்வது தான் வேடிக்கையாக உள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.