Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2011 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் புள்ளிகள் பறந்திருக்கும்.ஒவ்வொரு முறையும் நியுசிலாந்து இப்பிடித்தான் அரை இறுதிக்கு வாறது ஒருத்தரும் எதிர் பார்க்காமல்

  • Replies 2.2k
  • Views 83.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

172 / 10 ___ 43 . 2 . :) ஆபிரிக்கா எல்லோரும் காலி! :)

நியுசிலாந்து வெற்றி! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் புள்ளிகள் பறந்திருக்கும்.ஒவ்வொரு முறையும் நியுசிலாந்து இப்பிடித்தான் அரை இறுதிக்கு வாறது ஒருத்தரும் எதிர் பார்க்காமல்

ஒம் அண்ணை என்ர புள்ளியும் போட்டுது :rolleyes::(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நடக்கும் என்று ஒரு தரும் எதிர் பார்த்து இருக்க மாட்டினம்..!!

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமா ஏனென்டால் நியுசிலாந்து வங்காள தேசத்திட்டை அடி வாங்கினதை பார்த்து ஒருத்தரும் நம்பியிருக்க மாட்டினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெ ஆப்பிரிக்காவுக்கு கரி நாள் இண்டைக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமா ஏனென்டால் நியுசிலாந்து வங்காள தேசத்திட்டை அடி வாங்கினதை பார்த்து ஒருத்தரும் நம்பியிருக்க மாட்டினம்

உண்மை தான் :):D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை விளையாடப் போர வீரர்கள் விபரம்

England 1 Andrew Strauss (capt), 2 Ian Bell, 3 Jonathan Trott, 4 Ravi Bopara, 5 Eoin Morgan, 6 Matt Prior (wk), 7 Luke Wright, 8 Tim Bresnan, 9 Graeme Swann, 10 James Tredwell, 11 James Anderson.

Sri Lanka 1 Upul Tharanga, 2 Tillakaratne Dilshan, 3 Kumar Sangakkara (capt & wk), 4 Mahela Jayawardene, 5 Angelo Mathews, 6 Thilan Samaraweera, 7 Chamara Kapugedera, 8 Nuwan Kulasekara, 9 Lasith Malinga, 10 Muttiah Muralitharan, 11 Ajantha Mendis.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சுழலில் தப்புமா இங்கிலாந்து * இன்று காலிறுதியில் மோதல்

கொழும்பு : உலக கோப்பை காலிறுதியில் இன்று இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில், முரளிதரன், மெண்டிஸ் உள்ளிட்ட இலங்கை "சுழல்' வீரர்களின் பிடியில் இருந்து இங்கிலாந்து தப்புவது மிகவும் கடினம்.

இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடக்கும் கடைசி காலிறுதியில் (பகலிரவு) இலங்கை அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

"டாப்-ஆர்டர்' பலம்:

இலங்கை அணியின் "டாப்-ஆர்டர்' பலமாக உள்ளது. தில்ஷன் (286 ரன்கள்), உபுல் தரங்கா (261 ரன்கள்) ஜோடி நல்ல "பார்மில்' இருப்பதால் சூப்பர் துவக்கம் அளிக்கலாம். ஆறு லீக் போட்டியில் ஒரு சதம், இரண்டு அரைசதம் உட்பட 363 ரன்கள் எடுத்துள்ள கேப்டன் சங்ககரா, தனது ரன் வேட்டையை தொடரலாம். இதுவரை 200 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அனுபவ வீரர் மகிலா ஜெயவர்தனா, எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இலங்கை அணியின் "மிடில்-ஆர்டர்' பலவீனமாக உள்ளது. மாத்யூஸ், சமரவீரா, சமர சில்வா, பெரேரா உள்ளிட்டோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் வலுவான இலக்கை அடையலாம்.

மலிங்கா மிரட்டல்:

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு அசுர பலத்துடன் உள்ளது. உலக கோப்பை அரங்கில், இரண்டு முறை "ஹாட்ரிக்' சாதனை படைத்த மலிங்கா, மீண்டும் சாதிக்கலாம். இவருக்கு குலசேகரா, பெரேரா, மாத்யூஸ் உள்ளிட்ட வேகங்கள் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலாகிவிடும். சுழலில் அனுபவ முரளிதரன் இருப்பது கூடுதல் பலம். இதுவரை 11 விக்கெட் வீழ்த்தியுள்ள இவர், இன்றும் தனது சுழல் வேட்டையை தொடரலாம். அஜந்தா மெண்டிஸ், ஹெராத், தில்ஷன் உள்ளிட்டோர் "மிடில்-ஓவரில்' ரன் வேட்டையை தடுக்கலாம்.

ஸ்டிராஸ் நம்பிக்கை:

இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக கெவின் பீட்டர்சன் வெளியேறியது பின்னடைவான விஷயம். இருப்பினும் கேப்டன் ஸ்டிராஸ் (329 ரன்கள்), ஆறுதல் அளிக்கிறார். இவருடன் மட் பிரையர், இணைந்து நல்ல துவக்கம் அளிக்க வேண்டும். டிராட் (336 ரன்கள்), இயான் பெல் (220 ரன்கள்) நல்ல "பார்மில்' இருப்பதால், ரன் வேட்டை நடத்த வாய்ப்பு உள்ளது. "மிடில்-ஆர்டரில்' களமிறங்கும் மார்கன், போபரா, கோலிங்வுட் அதிரடியாக ரன் குவிக்க வேண்டிய கட்டயாத்தில் உள்ளனர்.

பலவீனமான பவுலிங்:

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பலவீனமாக உள்ளது. ஆஷஸ் நாயகன் ஆண்டர்சன், ரன்களை மட்டும் வாரி வழங்குகிறார். இவர் விக்கெட் வீழ்த்துவதில் கவனம் செலுத்தினால் நல்லது. டிம் பிரஸ்னன் (9 விக்கெட்), ஸ்டூவர்ட் பிராட் (6 விக்கெட்), கிறிஸ் டிரம்லட், லுக் ரைட் உள்ளிட்டோர் வேகப்பந்துவீச்சில் முழுதிறமையை வெளிப்படுத்த வேண்டும். இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சு எதிர்பார்த்த அளவு இல்லை. இதுவரை 12 விக்கெட் வீழ்த்தியுள்ள சுவான் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இவருக்கு டிரட்வெல் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில், சுழலின் பலம் அதிகமாகும்.

இங்கிலாந்து ஆதிக்கம்

<உலக கோப்பை அரங்கில், இலங்கை-இங்கிலாந்து அணிகள் எட்டு போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 6, இலங்கை 2 வெற்றி கண்டன.

* கடந்த 1983 (2 முறை), 1987 (2 முறை), 1992, 1999ல் நடந்த போட்டிகளில் இங்கிலாந்து அணி, இலங்கையை வீழ்த்தியது.

* கடந்த 1996ல் நடந்த காலிறுதியில் இலங்கை அணி, இங்கிலாந்தை வீழ்த்தியது. பின் அரையிறுதியில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை அணி, பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதன்முறையாக உலக கோப்பை வென்றது.

* கடந்த 2007ல் நடந்த "சூப்பர்-8' போட்டியில் இலங்கை அணி, இங்கிலாந்தை வீழ்த்தியது. பின் அரையிறுதியில் நியூசிலாந்தை தோற்கடித்த இலங்கை அணி, பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

* சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், இங்கிலாந்து-இலங்கை அணிகள் 44 முறை மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 23, இலங்கை 21 போட்டிகளில் வெற்றி கண்டன.

---

கடந்து வந்த பாதை

இலங்கை

லீக் சுற்று

1. 210 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவுடன் வெற்றி

2. பாகிஸ்தானிடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

3. கென்யாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டது

5. 139 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது

6. 112 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது

இங்கிலாந்து

லீக் சுற்று

1. நெதர்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

2. இந்தியாவுக்கு எதிராக "டை'

3. அயர்லாந்திடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

4. தென் ஆப்ரிக்காவை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

5. வங்கதேசத்திடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

6. வெஸ்ட் இண்டீசுடன் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

பையன், எனக்கு தென் ஆபிரிக்கா இன்று வென்று இருந்தால் இலங்கையையும் வெற்றி பெறுவார்கள் என்று நம்பினேன் ஆனால் எல்லாம் தலைகீழா போச்சு இருந்தாலும் சின்ன நப்பாசை இருக்கு இங்கிலாந்த் வெல்லனும் என்று.

இன்ரு எனக்கு நீயுசிலாந்த்தின் பந்து வீச்சு பிடித்து இருந்தது. ஆனால் இலங்கை அடிக்கும் போல இருக்கு பார்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தெ.ஆ உலக கிண்ணத்தை வெல்ல வேணும் என்று நினைச்சன் என்ர நினைப்பில இப்பிடி மண்ணை அள்ளிப் போட்டிட்டாங்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நியுசிலாந்து சரிவர மாட்டுது

??????????????????????????????????????????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்து பாக்கிஸத்தான் காரனுக்கு போட்டு தாக்கியதை எல்லாரும் மறந்து போனிங்களோ :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பையன், எனக்கு தென் ஆபிரிக்கா இன்று வென்று இருந்தால் இலங்கையையும் வெற்றி பெறுவார்கள் என்று நம்பினேன் ஆனால் எல்லாம் தலைகீழா போச்சு இருந்தாலும் சின்ன நப்பாசை இருக்கு இங்கிலாந்த் வெல்லனும் என்று.

இன்ரு எனக்கு நீயுசிலாந்த்தின் பந்து வீச்சு பிடித்து இருந்தது. ஆனால் இலங்கை அடிக்கும் போல இருக்கு பார்கலாம்.

நான் இலங்கை ரீம்முக்கு ஆதரவானவன் இல்லை..ஆனா சொல்லுறேன்

இலங்கை அணிய அவங்களின் நாட்டில் வைச்சு வெல்லுறது என்ரா ரொம்ப கஸ்ரம்..

2004 ஆண்டு , இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு ஜந்து ஒரு போட்டில அடிச்சு வேன்டவங்கள்...இப்ப இருக்கிர தென் ஆப்பிரிக்கா கப்டன் சிமித் தான் அப்பவும் கப்டன்னாய் இருந்தவர்..நான் நினைக்க வில்லை தென் ஆப்பிரிக்க அந்த தோல்வியை கூடிய சீக்கிரம் மறந்திருப்பினம் என்று..அதோடை அவங்கட நாட்டில் வைச்சே தென் ஆப்பிரிக்காக்கு அடிச்சவங்கள் 2003 உலக்க கோப்பையில்...!

தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையிடம் பல தடவை தோத்து இருக்கு.... :):D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டி இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆரம்பம் ஆக்கப் போக்குது :):D

யாழ்களப் போட்டியில் தற்பொழுது முதல் இடத்தில் வாத்தியார் இருக்கிறார். 2ம் இடத்தை சுறி கைப்பற்றியுள்ளார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81341&view=findpost&p=648482

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணை

அரை இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து செல்லும் என சரியாகக் கணித்து மீண்டும் முதல் இடத்தில் நெடுக்கால போவான் இருக்கிறார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81341&view=findpost&p=648486

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா வீரர் கப்புக்கேருடா

இவட்ட தலை வெட்டை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்

130458.jpg

Edited by பையன்26

53வது கேள்விக்கு ஒருவரும் சரியாகப் பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து முதல் இடத்தில் நெடுக்கால போவான் இருக்கிறார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81341&view=findpost&p=648490

இன்னும் 35 புள்ளிகள் தான் மீதம் இருக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து மட்டையடியை தெரிவு செய்து இருக்கு...!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:):D
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ சிறிலங்கா இறுதிப்போட்டிக்குள் இலகுவாக நுழையும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் இந்தமுறை இங்கிலாந்து சிறிய அணிகளிடம்தான் தோற்றது. பெரிய அணிகளை வென்றது.பொறுத்திருந்து பார்ப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி தான்..

  • கருத்துக்கள உறவுகள்

21-0-6-ஓட்ட வீதம் வலு குறைவாக இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒம் இன்னும் முரளி மெடின்ஸ் பந்து போட வர வில்லை..

வந்தா இன்னும் ஒட்டம் எடுக்க கஸ்ரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.