Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இது யாழ்ப்பாணம் அல்ல ராமநாதபுரம்...!

Featured Replies

இது யாழ்ப்பாணம் அல்ல ராமநாதபுரம்...! இது முல்லைத்தீவு அல்ல நாகப்பட்டினம்!

'தரை மேல் பிறக்க வைத்தான் எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்...' என்று எம்.ஜி.ஆர். பாடிய காலத்தில்கூட மீனவனுக்கு இத்தனை கஷ்டங்கள் இருந்ததில்லை. ஆனால், இப்போது அவர்களது வாழ்க்கையே கண்ணீரால் குளிப்பாட்டப்படுகிறது. நாட்டுக்கு ஓரமாகக் கடல் இருப்பதால், தங்கள் கஷ்ட நஷ்டங்கள் எதுவும் ஊருக்குத் தெரியாமல் வாழ்ந்து வந்த மீனவர்களின் கதறல்தான் இன்று நாட்டுக்குள் அதிகம் கேட்கிறது. சிங்களக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்த சோகத் தொடர்கதையில் இதுவரை 450 இந்திய மீனவர்கள் இறந்துபோய் இருக்கிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்புகளை இழந்து வாழ வழியில்லாமல் நிற்கிறார்கள். சிங்களக் கடற் படையால் பாதிக்கப்பட்ட இவர்களைப் பார்க்க ராமநாதபுரம் போனால், அந்த இடமே யாழ்ப்பாணம் மாதிரி இருக்கிறது! நாகப்பட்டினமோ நமக்கு இன்னொரு முல்லைத் தீவாகக் காட்சியளிக்கிறது!.

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு வெறும் 18 கடல் மைல்கள். நாகை மாவட்டம் கோடியக்கரையில் இருந்து இலங்கை இருப்பது வெறும் 25 கடல் மைல்கள் தூரத்தில். தமிழக மீனவர்கள் கடலுக்குள் கொஞ்ச தூரம் சென்றாலே சிங்களக் கடற் படையினர் வந்து 'எங்க எல்லைக்குள்ள ஏன்டா வர்றீங்க?' என்று சொல்லிசித்ர வதைகளைத் தொடங்கி விடுவார்கள். எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் கடல் தாயின் மடியில் பிழைப்பு நடத்தி வந்த மீனவர்களுக்கு விடுதலைப் புலிகள் வளர ஆரம்பித்த 1983-ம் ஆண்டில் இருந்துதான் இனரீதியான தொல்லைகள் ஆரம்பித்தன. அதுவரை, இலங்கை மீனவர்கள் தமிழகக் கரைக்கு வந்து சினிமா பார்த்ததையும், பொருட்கள் வாங்கிச் சென்றதையும் இன்னமும் நினைவு வைத்திருக்கிறார்கள் நம் மீனவர்கள்.

''விடுதலைப் புலியாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டு எங்களைச் சுடுகிறார்கள் என்று எல்லோரும் நினைக்கலாம். ஆனால், சிங்களக் கடற்படைக்கு மீனவர்களை நன்றாக தெரியும். தெரிந்தும் வேண்டுமென்றேதான் சுடுவான். அவனுக்குத் தேவை தமிழனின் உயிர். அது விடுதலைப் புலியாக இருந்தால் என்ன? அப்பாவி மீனவனாக இருந்தால் என்ன? கொல்லப் பட்டவர்கள் இத்தனை பேர் என்று சொல்லிவிட முடியும். ஆனால், கடலுக்குச் சென்று மாதக்கணக்கில், வருடக்கணக்கில் இன்னமும் வீடு திரும்பாதவர்கள் எத்தனைபேர் என்றே சொல்லமுடியாது!'' என்று கன்னங்களில் உப்பு நீர் உருளச் சொல்கிறார் வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தின் தலைவர் அஞ்சப்பன். கடந்த வாரம் கொல்லப்பட்ட செல்லப்பன் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்தான்..

செல்லப்பனின் மனைவி ருக்மணி மட்டும் அல்ல... வெள்ளப்பள்ளத்தில் மட்டும் சிங்களப்படையால் விதவையாக்கப் பட்டவர்கள் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள். ''நாங்க ரெண்டு பேரும் ஒரே குடும்பத்தில் அண்ணன் தம்பியைக் கல்யாணம் செஞ்சுகிட்டோம். அவங்க 2001-ம் வருடம் கடலுக்குப் போனப்ப அங்கே சிங்களப் படை துப்பாக்கியால சுட்டதில் ரெண்டு பேருமே செத்துட்டாங்க. அவங்க உடல்கூட எங்களுக்குக் கிடைக்கலை. அதுக்கு இன்னமும் சாட்சியா இருக்கார் அவங்களோட போன சத்தியமூர்த்தி'' என்று சொல்லிக் கலங்கினார்கள் பூபதி மற்றும் மகாலட்சுமி ஆகிய அபலைப் பெண்கள்.

சத்தியமூர்த்தியைத் தேடிப்போய் பார்த்தோம். ''அன்னிக்கு சிங்காரவேலு, பன்னீர், நான் மூணுபேரும்தான் போயிருந்தோம். வலையை விரிச்சுட்டு உட்கார்ந்திருந்தோம். ராத்திரி 10 மணி இருக்கும். அங்க வந்த சிங்களப் படை படபடன்னு சுட்டாங்க. அப்படியே படகுக்குள் படுத்துட்டோம். சத்தம் நின்னவுடன் எழுந்து பார்த்தால் சிங்காரவேலு சிதறிப்போய்க் கெடந்தார். பன்னீருக்கு உடம்பெல்லாம் காயம். உயிர் இருந்துச்சு.

எப்படியாவது கரை சேர்த்துடலாம்னு பார்த்தால் டீசல் டேங்க் உடைக்கப்பட்டு ஒரு சொட்டு டீசல்கூட இல்லை. இன்ஜின் முற்றிலுமாக சிதைக்கப் பட்டிருந்துச்சு. ரெண்டு நாள் வரை தாக்குப்பிடிச்ச பன்னீரும் வைத்தியமில்லாம செத்துப் போனார். ரெண்டு பொணத்தையும் வெச்சுகிட்டு அதுக்கப்புறம் ரெண்டுநாள் வரைக்கும் தாக்குப்பிடிசேன். பிணவாடை தாங்கமுடியாமல் ரெண்டு பேரின் உடல்களையும் கடலுக்குள் போட்டேன். மேலும் ஒருநாள் வரை பசியோடும் தாகத்தோடும் தவிச்சேன். மறுபடி அங்கே வந்த இலங்கைப் படை என்னைக் கைது செஞ்சு அனுராதபுரம் சிறையில் மூன்று மாதம் தள்ளியது. அதுக்கப்புறம் ஊருக்கு வந்தேன். திரும்பி வந்தபோதுதான் நான் மட்டுமாவது உயிரோடு இருக்கிறேன் என்பதே ஊருக்குத் தெரிந்தது!'' என்றார்.

வெள்ளப்பள்ளம் போலவே அடிக்கடி இலங்கை கடற்படையின் ஆவேசத்துக்குப் பலியாகிறவர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள். சென்ற 2008-ம் ஆண்டு ஏப்ரலில் சிங்களப் படையின் குண்டுகளுக்கு இருவரை பலிகொடுத்து, தான் மட்டும் 21 குண்டு காயங்களுடன் தப்பித்து, தற்போது நடைபிணமாய் வாழும் முரளி, தொடரும் மீனவர் வேட்டைக்கு இன்னொரு நிகழ்கால சாட்சி.

''அன்னிக்கு நடந்ததை இப்போ நினைச்சாலும் ஈரக்கொலை நடுங்குதுங்க. எப்பவும்போல கடலுக்கு வாசகன், நாராயணனோட நானும் போனோம். வலை விரிச்சுட்டு காத்திருந்தோம். ராத்திரி நேரம் திடீர்னு ரோந்து வந்த சிங்களக் கடற்படை, சேது சமுத்திர கப்பலுக்கு உட்புறம் நமது எல்லையில் இருந்த எங்கள் படகை நோக்கி வந்தாங்க. அவங்க எந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுகிட்டே வந்தாங்க. அப்படியே படகுக்குள் படுத்துட்டோம். அவங்க போனபிறகு எழுந்து பார்த்தா வாசகனும், நாராயணனும் சிதறிக் கிடந்தாங்க. என் உடல் முழுவதும் குண்டுகள் பாய்ஞ்சிருந்தது. அந்த நிலையிலும் செல்போனை எடுத்து என் குடும்பத்துக்கு தகவலை சொல்லிவிட்டு மயங்கிட்டேன். மறுநாள் காலையில் ஊர்க்காரர்கள் படகுகளில் வந்து என்னை கரைக்குக் கொண்டு போனாங்க. சென்னை ஸ்டான்லியில் சேர்த்து என்னைக் காப்பாத்துனாங்க. அன்றில் இருந்து இப்போ வரைக்கும் மாதம் ஒருமுறை அங்கேபோய் வைத்தியம் பார்க்கிறேன். இன்னும் தொழில் பார்க்கக் கூடிய அளவுக்கு உடலில் வலு இல்லை'' என்று கொடூரத்தின் தீவிரம் முகத்தில் தெரியச் சொல்கிறார். செல்போன் பேசும் எல்லைக்குள்தான் இவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றால், எல்லை தாண்டியது யார் என்ற கேள்வி இங்கே எழுவதும் இயல்புதானே!

வாசகனின் அண்ணன் முருகன், நாராயணனின் தாய் செல்வி ஆகியோர் சோகம் கப்பிய முகங்களோடு இருந்தனர் சேகர், ஆறுமுகம் ஆகியோரையும் நாம் சந்தித்தோம். ஆறுமுகத்தின் உடலில் இருந்து அகற்றியவை போக இன்னமும் சில இடங்களில் குண்டுகள் இருக்கின்றன. சேகரோ தன் வலது கையையே இழந்துவிட்டார். ''அவங்க சுட்டதில் கை பிஞ்சு தொங்கிச்சு. ஊர் திரும்ப ரெண்டு நாள் ஆகும்கிறதால நானே கத்தியை எடுத்து தொங்கிய கையை அறுத்து கடலில் தூக்கியெறிந்து உயிர் பிழைச்சேன். ஆனாலும், எங்களுக்குப் பக்கத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த படகில் உதயசங்கர், சிதம்பரம், சிவசண்முகம்னு மூணுபேருமே துப்பாக்கி குண்டுக்கு பலியாகிட்டாங்க. அவங்க படகே தூள் தூளாகி கடல்ல மிதந்துச்சு'' என்று சலனமின்றி சோகம் பகிர்கிறார் சேகர்.

ராமேஸ்வரத்திலும் 'சம்பவ'ங்களுக்குக் குறைச்சல் இல்லை. 29 வயதில் தனது கணவர் செலஸ்டினை சிங்கள வான் படையின் துப்பாக்கி குண்டுக்குப் பறி கொடுத்த ரோஸ்மேரி, ''1990-ம் ஆண்டு எனது கணவர் சென்ற படகின் மீது இலங்கை ராணுவத்தினர் ஹெலிகாப்டரில் வந்து துப்பாக்கி சூடு நடத்தினாங்க. அவர் உட்பட மூணு பேர் செத்தாங்க. தன் சொந்த மக்களைக் காப்பாத்த தவறிய நம்ம அரசாங்கத்துகிட்ட 10 வயசுகூட நிரம்பாத எனது மூணு குழந்தைங்களை காப்பாத்தவாவது உதவி கேட்டேன். 20 ஆண்டுகள் கழிச்சும் அரசின் உதவி கிட்டவில்லை!'' என்று வெறுமையில் சொல்கிறார்.

மடுராணியின் தவிப்போ வேறு மாதிரியானது. ''96-ம் ஆண்டில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற எனது மகன் ஃபிரான்சிஸ் விஜி உள்ளிட்ட நாலு பேர் என்ன ஆனார்கள்னு தெரியாம தவிக்கிறேன். இலங்கையில் சிறை வைக்கப் பட்டிருந்த மீனவர்கள் சிலர் ஃபிரான்சிஸ் விஜியை அங்கு பார்த்திருக்காங்க. எனவே எனது மகனை இலங்கை கடற்படையினர்தான் பிடித்து வைத்திருக்கணும்னு சொல்லி பிரதமர், முதல்வருக்குன்னு எல்லோருக்கும் புகார் செஞ்சும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த கவலையில் என் புருஷன் இறந்துட்டார். நாதியில்லாம தவிக்கிறேன்'' என்றார் அவர்.

இலங்கை கடற்படையின் கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் உடல் முழுவதும் ஏற்பட்ட குண்டு காயத் தழும்புகளுடன் காரைக்காலைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்ற மீனவர் இன்றுவரை முடமாகிக் கிடக்கிறார். முகத்தில் பாய்ந்த குண்டால் சிதைந்துபோன மூக்குடன் மூச்சு விடவே சிரமப்பட்ட நிலையில் வாழும் அவரது தலையில், இப்போதும் துப்பாக்கி குண்டு இருக்கிறது. அதனை அகற்றினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் இதுவரை தனது வைத்தியத்துக்காக நான்கு லட்ச ரூபாய் கடன்பட்டுள்ளார். இப்படி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தவர்கள், இப்போது தங்கள் கொலைத் திட்டத்தில் கொஞ்சம் மாறுதலைச் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள் மீனவர்கள்.

வெள்ளப்பள்ளம் செல்லப்பன் சம்பவத்தில் அவரோடு சென்றவர்கள் சொல்வதைக் கேட்டால் உச்சி மண்டையில் ரத்தம் சுர்ரென்று பாயும். அவரோடு சென்ற செல்வராஜ், ''வரானுங்க... வலையை அறுக்கிறானுங்க... டீசலை எடுத்துகிறானுங்க... அப்புறம் கயிற்றை முறுக்கி அடிக்கிறானுங்க. அதில் காதுல ரத்தம் வந்து மயங்கிட்டேன். முழிச்சுப் பார்த்தா செல்லப்பன் பொணமா கெடக்குறாரு'' என்று சொல்ல... அவருக்கு பக்கத்து படகில் இருந்து மீண்டிருக்கும் அறிவழகன், ''துணியை அவுக்கிறானுங்க, சார். மீனுக்கு போட வைச்சிருக்கிற ஐஸ் கட்டியை தூக்கி எங்க தலைல வைச்சு, அது கரையுற வரைக்கும் அசையாம நிக்க சொல்றாங்க. ஜட்டிக்குள்ள ஐஸை 'வை'யுங்கிறாங்க. நிர்வாணமா கடல்ல தள்ளி... சுத்திச் சுத்தி நீந்தி வரச் சொல்றாங்க. கை கால் அசந்து மயக்கமானாதான் திரும்ப படகு ஏத்துறாங்க. முள் மீனா எடுத்து வாயில வைச்சு அழுத்தி, அதை முழுங்க சொல்றாங்க. செல்போனை எடுத்துக்கிறாங்க, ஜி.பி.எஸ். கருவியை எடுத்துகிறாங்க. பிடிச்சு வைச்ச மீனையும் அள்ளிக்கிறாங்க. இப்படி எல்லாத்தையும் கொள்ளையடிச்சுகிட்டு அப்புறம் ஆளையும் கொல்றாங்க. இல்லாட்டி ரெண்டு ரெண்டு பேரை நிர்வாணமா ஒண்ணா கட்டி பிடிச்சுகிட்டு படுக்கச் சொல்லி சிரிக்கிறாங்க. மொத்ததில், மீனவனா பொறந்த ஒரே பாவத்துக்காக இப்படி கேவலத்தை நாங்க அனுபவிக்கிறோம்'' என்று சொல்லி உறைய வைக்கிறார்.

இப்படி மிகக் கேவலமான பார்வைக்கு சிங்களப் படையினர் மாறியதைச் சொல்லும்போது, மீனவர் கள் குறிப்பிடும் ஒரு தகவல் - அவர்களோடு வருகிறவர்களில் சீனத்து முகங்களும் தெரிகிறதாம். ''இதுக்கு முந்தி ஒண்ணு மண்ணா பழகின எங்களுக்கு சிங்கள ஆட்களை நல்லாவே தெரியும். ஆனா, இப்ப வருகிறவன்களோடு குள்ளமா சப்பையா சிலர் வரானுங்க. அவனுங்க வந்தப்புறம்தான் இப்படி கொடுமை ஜாஸ்தி. இன்னிக்கு அது இலங்கைக்காரனுக்கு இனிக்குது. ஆனா, நாளைக்கு அவனுக்கும் சீனாக்காரன் இதே ஆப்புதான் வைக்கப் போறான். அப்ப தெரியும் அவனுக்கு... அவனுங்க செய்யுறதை கண்டிக்காத நம்ம கடற்படை. 'நீங்க எல்லை தாண்டிப் போறீங்க, அதனாலதான் சுடறான்'னு திரும்பத் திரும்பச் சொல்லுது. அவங்க மீனவர்கள் கிட்டத்தட்ட சென்னைக்கு நெருக்கம் வரைக்கும் வந்து மீன் பிடிக்கிறாங்களே... அவங்களை நீங்க சுட்டா கொல்றீங்க?'' என்று பொங்கிய ஆறுகாட்டுத்துறை பஞ்சாயத்தாரான கரிகாலன்,

''ஒரு முறையாவது எல்லை தாண்டி வந்து எங்களை சுடுகிற சிங்களக்காரனை நம் கடற்படை பிடித்து வந்து தண்டித்தால், பிறகு நம் எல்லைப் பக்கமே அவன் வரமாட்டான். அதை செய்யாத நம் அரசாங்கம், அவனுக்கு ஆயுதம் கொடுத்து இன்னும் அதிகமாக இதை செய்யச் சொல்கிறதோ என்று எங்களுக்கு சந்தேகமாக இருக்கு'' என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறார்.

நமக்கோ ஒரே ஒரு சந்தேகம் மட்டுமே எழுகிறது. மத்தியில் அரசாங்கம் என்று ஒன்று நடக்கிறதா?

மீனவர்களுக்கு உரிய பரிகாரம்!மீனவர்களின் வாழ்வாதாரம் பற்றி அக்கறையுடன் இயங்கிவரும், எழுத்தாளரும் கடல்போக்குவரத்து வல்லுநருமான ஜோ டி குரூஸ் நம்மிடம் கூறியதாவது...

''தமிழகத்தின் நெய்தல் நிலமும் அதன் சோகமும் ஆதிகாலத்திலிருந்தே பிரிக்கமுடியாததாக இருக்கிறது. மண்டபம், பாம்பன், அக்காமடம், தங்கச்சிமடம், ராமேசுவரம் என வளைந்த வால் போல இருக்கும் தீவுப்பகுதியின் மேலிருக்கும் வடகடல் பகுதியில் மீன்பிடிப்பதில்தான் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னையில் சிக்குகிறார்கள்.

மீனவ மக்கள் இடம்பெயர்ந்து தொழில்செய்வது பாரம்பர்யமான ஒரு பழக்கம். வடகடல் பகுதியில் மீன்வளம் உள்ளதால், மற்ற பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து போய் அங்கு மீன்பிடி செய்வோர் அதிகம். இந்த எண்ணிக்கை அதிகமாகி ஒரு கட்டத்தில் ஈழத்து மீனவர்களின் சமையல் கட்டுக்குள்ளும் எட்டிப் பார்த்தது பிரச்னை. 2001-ம் ஆண்டில் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவுக்கு வந்த ஈழத்து மீனவர்கள், நமது மீனவர்களிடம், ''உங்கள் படகுகள் எங்கள் சாப்பாட்டுப் பானைக்குள்ளும் வந்துவிட்டன'' என்று வருத்தப்பட்டார்கள். அவர்களுக்கு இது மிகப்பெரிய பொருளாதாரப் பிரச்னை. இதுதான் பிரச்னையின் அடிநாதம்.

வடகடலில் இப்படியான பிரச்னைகளை அரசு நினைத்தால் தவிர்க்கமுடியும். இந்த இடப் பெயர்ச்சியைத் தடுக்க தென்கடலில் மூக்கையூர் போன்ற பல இடங்களில் சிறுசிறு மீன்பிடித் துறைமுகங்கள், படகுகளைப் பாதுகாக்கும் வசதி செய்ய வேண்டும். இதனால் மீனவர்கள் இடம்பெயர்வதைக் கட்டுப்படுத்த முடியும்.

கடலுக்குப் போகும் அவசரத்தில் அடையாள அட்டையை விட்டுச் செல்பவனையும் கடலுக்குள் அட்டையைத் தொலைத்தவனையும் கடலோரக் காவல்படை பிடித்துப் போகிறது. படகையும் கருவிகளையும் பறிமுதல் செய்கிறது.சட்டப்படி செயல்படுவது தவிர, சட்டவிரோதமாகவும் மீனவன் கையூட்டு கொடுத்தால்தான் கருவிகளை மீட்கமுடியும். இப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் மீட்க முடியாமல் மீனவமக்கள் கைவிடப்பட்ட படகுகள் ஏராளம்.

ஒரு வாரமோ, இரண்டு வாரங்களோ படகும் மீன்பிடிக் கருவிகளும் இல்லை என்றாலே மீனவனின் வீடு முடங்கிப் போகும். அந்நிய மொழி பேசுகிறவனும் கடல் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாதவனும் இங்கே அதிகாரியாக இருக்கிறான். எனவே, சொந்த நாட்டு மீனவர்களை குடியுரிமை இல்லாதவர்களைப் போல நடத்துகிறான். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

இந்தப் பிராந்தியத்தில் பணி ஒதுக்கப்படும் அதிகாரிகள் தமிழ் பேசக்கூடியவர்களாக இருக்கவேண்டும். அரசாங்கத்திலும் கடலோரக்காவல் படையிலும் மீனவ சமுதாயத்தினரை பணியமர்த்த வேண்டும். கடலோரப் பகுதிக்கான திட்டங்களும் சட்டங்களும் மீனவ மக்களின் பங்கேற்பு இல்லாமலேயே கொண்டுவரப்படுகின்றன. நாட்டுக்கு அதிக அளவு அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் மீனவமக்கள் கண்டுகொள்ளப்படுவது இல்லை. இன்னொரு பக்கம், நாட்டின் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் கடலோரத்தில் வரும்போது குடிமகன் என்ற முறையில் மீனவமக்கள் விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும். ஆனால், நூற்றுக்கணக்கான கோடிகளில் திட்டம் வரும்போது பாதிக்கப்படும் மீனவர்களுக்கு உரிய பரிகாரம் செய்வது அரசாங்கத்துக்கு ஒன்றும் பெரிய காரியம் கிடையாதே!'' என்றார் அவர்.

- இரா. தமிழ்க்கனல்

Vikatan

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியெல்லாம் சொல்லுறீங்கள்..! பிறகு பார்த்தால் ராமநாதபுரத்தில இருந்து அந்த ராஜபக்ச ஆதரவு காங்கிரஸ் எம் எல் ஏ தெரிவு செய்யப்படுறார்..! சுயநினைவோடதான் இருக்கிறீங்களா இல்லையா? ஒரு மண்புழுவுக்குக் கூட இவ்வளவு பொறுமை இருக்காது..! :blink:

இதுவரை 450 இந்திய மீனவர்கள் இறந்துபோய் இருக்கிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்புகளை இழந்து வாழ வழியில்லாமல் நிற்கிறார்கள். சிங்களக் கடற் படையால் பாதிக்கப்பட்ட இவர்களைப் பார்க்க ராமநாதபுரம் போனால்,

இந்தியன் என்ற போலி மாயையை தமிழர்கள் தகர்த்து, தமிழின படுகொலையாளர்கலான இந்திய பயங்கரவாதிகளை சிதறடிக்கும் வரை, தமிழ் நாட்டில் தமிழன் அநியாயமாக சாவதை யாரும் தடுக்க முன்வரார்கள்.

அவுஸ்திரேலியாவில் ஒரு வட இந்தியன் கொல்லப்பட்டதுக்கு, ஜெர்மனியில் இரண்டு வட இந்தியன் கடைகள் தாக்கப்பட்டதுக்கு துள்ளிக் குதித்த இந்திய நாய்கள், தமிழ் நாட்டில் 450 தமிழனை கொன்றவர்களுக்கு ஆயுதத்தையும், படையையும் கொடுத்து மேலும் 50,000 க்கு மேற்பட்ட தமிழனை படுகொலை செய்ய உதவிய இந்திய பயங்கரவாதிகளின் சுயரூபத்தை தென் இந்திய தமிழர் உணரும் வரை விடிவு தூரத்தில் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுக்காரன் தான் ஒரு இந்தியன் என்கிற மாயைக்குள்ளிருந்து வெளியே வரும்வரையிலும் இந்த நாய்படும் பாட்டிலிருந்து தப்ப முடியாது.அதை புரிந்துகொள்ளும் பக்குவம் அவனுக்கு இவ்வளவு காலமும் இருந்ததில்லை, இனியும் வரப்போவதில்லை.

  • தொடங்கியவர்

பொதுவாகவே தமிழருக்கு அரசியல் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. இன்றைய காலத்தில் கூட்டணி இந்தியவை நம்பி உள்ளது.

சோவியத் யூநியன் போல் ஒரு நாள் இந்தியா உடையலாம். சீனாவும் பாகிஸ்தானும் இதை நிச்சயம் விரும்பும்.

-- இருக்கும் ஒரே பலமான புலம் பெயர் மக்கள் ஒற்றுமையுடன் சிதையாமல் செயல்படவேண்டும்.

-- சிங்களத்தை பொருளாதார ரீதியில் பலம் இழக்க வைக்கவேண்டும்.

-- யுத்த குற்றங்கள் ஊடாக எமது பக்கத்துக்கு அரசியல் பலம் சேர்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியெல்லாம் சொல்லுறீங்கள்..! பிறகு பார்த்தால் ராமநாதபுரத்தில இருந்து அந்த ராஜபக்ச ஆதரவு காங்கிரஸ் எம் எல் ஏ தெரிவு செய்யப்படுறார்..! சுயநினைவோடதான் இருக்கிறீங்களா இல்லையா? ஒரு மண்புழுவுக்குக் கூட இவ்வளவு பொறுமை இருக்காது..! :blink:

அதுகும் மகிந்தா துதி பாடும் ஹசன் அலி எம் எல் ஏ

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியெல்லாம் சொல்லுறீங்கள்..! பிறகு பார்த்தால் ராமநாதபுரத்தில இருந்து அந்த ராஜபக்ச ஆதரவு காங்கிரஸ் எம் எல் ஏ தெரிவு செய்யப்படுறார்..! சுயநினைவோடதான் இருக்கிறீங்களா இல்லையா? ஒரு மண்புழுவுக்குக் கூட இவ்வளவு பொறுமை இருக்காது..! :blink:

அதுகும் மகிந்தா துதி பாடும் ஹசன் அலி எம் எல் ஏ

இசை, கந்தப்பு சரியாக சொன்னீர்கள்.

இவர் தான் இராமநாதபுரத்து காங்கிரஸ் எம்.எல். ஏ.ஹசன் அலி 201.jpg

.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சென்றவருடம் குமுதம் ரிப்போட்டர் இணையத்தள தொலைக்காட்சியில் செவ்வி ஒன்றுக்கு யாழ்ப்பாணத்தில் கோவில்களுக்கு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் செல்லக்கூடாது என்று விடுதலைப்புலிகள் அறிவுப்புப் பலகையை கோவில்களில் வைத்திருப்பதாக பொய் சொல்லியிருந்தார். இவர் பணக்கஸ்டத்தில் இருந்து திடிரெனப் பணக்காராராகி தேர்தலில் போட்டியிட்டு வென்றிருக்கிறார். தமிழ் நாட்டில் காங்கிரசில் பல அணிகள், பல தலைவர்கள். இவர் பணக்காரராக வந்ததற்கு அப்பொழுது இந்தியாவுக்கான சிறிலங்காதூதுவர் அம்சா தான் காரணம் என்றும் ஊடகங்களில் வந்தது.

சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் தமிழின விரோதிகளான கன்னட இளங்கோவன், மகிந்தாவின் நண்பர் மணிசங்கர் அய்யர் போன்றவர்கள் தோல்வியடைந்தது போல வாரவருடம் வரவுள்ள சட்டசபைத்தேர்தலில் ஞானசேகரன், ஹசன் அலி போன்றவர்கள் தோற்கப்படுவார்களா என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

சிலவேளை சட்டசபைத்தேர்தலில் இளங்கோவன், தங்கபாலு, மணிசங்கர் அய்யர் ஆகியோர் போட்டியிடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.