Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறைகம்பிகளினூடு...

Featured Replies

இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த நரக வாழ்க்கையோ என்று..மனம் சலித்து விட்டது.....நான் இனி வெளியில் வந்து வெளி உலகத்தை பார்க்க முடியும் என்ற நம்பிக்கை அவனிடமிருந்து மெல்ல மெல்ல போகத்தொடங்கி விட்டது....கடவுள் தான் இனி துணை தனக்கு மட்டும் அல்ல அங்கு சிறை வைக்கபட்டிருக்கும்..எல்லாருக்கும்....கந்த சஷ்டி கவசம் படித்ததில இந்த இரண்டு வருடம்களில் அது பாடமாகியே விட்டது....அவர்களின் அன்றாட வேலைகளில் கந்த சஷ்டி கவசம் படிப்பதும் ஒரு வேலை ஆகி போனது..

இதிலும் அவனை நம்பி இரு உயிர்கள் இந்த உலகத்தில் இருப்பதும் தனக்குரிய தண்டனைகளில் எதுமே அறியா அப்பாவிகளான அவர்கள் சிக்கு பட்டு... தண்டனை அனுபவிப்பதும்..அவனை பெரிதும் வேதனைக்கு உள்ளாக்கி கொண்டு இருக்கிறது..இது தனக்கு மட்டும் அல்ல அங்கு இருக்கும் ஒவ்வொருவர் பின்னாடியும் ஒவ்வொரு..சோக கதை இருக்கும் அவர்களில் சிலர் அப்பாவி பொது மக்கள்..

இவ்வளவிற்கும் அவன் செய்த பாவம் என்ன..?அவன் ஒரு புலனாய்வு துறை போராளி.....போராட புறப்பட்டது அவன் செய்த பிழையா?..ஏன் எல்லாரும்..இப்படி செய்கிறார்கள்..அவனின் உறவுகள் நண்பர்கள்..கூட..பாதுகாப்பாக வெளிநாடில் இருக்கும்..அவனின் அண்ணன் தாயிடம் கூறி இருக்கிறார்..என் phone நம்பர் அவனிடம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி pone நம்பர் கூட மாற்றி விட்டாராம்..தாய் வந்து சொல்லி அழுதார்..அண்ணனே இப்படி இருக்கும் போது..வேறு யாரிடம் கேக்க முடியும்.. ...கைது செய்யபட்டு ஆரம்ப நாட்களில் அவன் எது பற்றியும் கவலை படவில்லை..ஏனெனில் இயக்கம் எப்படியும் வெளில கொண்டு வந்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது....கைது செய்யபடுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர்..சிறப்பு தளபதி அழைத்து..அவனை வெளியேறச்சொல்லி இருந்தார்..அவனோ அப்போது பெரிய இலக்கு ஒன்றினை விழுத்துவதர்க்கான. ஏற்பாடுகளை பூர்த்தி செய்து இருந்தான்..அதை முடித்தவுடன் நாட்டை விட்டு வெளியேற விமான ticket பதிவு செய்து இருந்தான்.அவனுக்கு தெரியும் அந்த இலக்கு நிச்சயம்..விழுத்தபடும் .போராட்டத்திற்க்கான தடை ஒன்று..இல்லாமல் ஆக்கப்படும்..அந்த வெற்றியுடன் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று..

அவன் ஒன்று நினைக்க அவன் தலைவிதியோ வேறு விதமாக எழுத பட்டிருந்தது..நடு இரவு கதவு தட்டப்படும் ஓசை கேட்டு விழிக்கிறான்..எப்போதுமே..தனது பாதுகாப்பிற்காக இரு காலையும் தூக்கி கதவின் மீது வைத்து கொண்டு தான் தூங்குவது வழக்கம்....கதவு திறந்தவர்கள் தனது பெயரை கேட்டுக்கொண்டு..உள்ளே வரவும் அவனுக்கு விளங்கி விட்டது..எங்கோ தவறு நடந்து விட்டது என்று...உடனடியாக..கொடுப்புக்குள் இருந்த குப்பியை கடிக்கிறான்..வாயில் உமிழ் நீரோடு சேர்த்து இரத்தமும் வெளியேற மயங்கி சரிகிறான்..சரியாக 18 ஆவது நாள் கண் விழித்தபோது மருத்துவ மனையில் வயிற்றில் தையல் போடபட்டிருந்தது..அவனுக்கு தெரிந்து விட்டது...நான் தப்பவைக்க பட்டிருக்கிறேன் ..அவன் கண் விழித்ததை அறிந்து வந்தவர்கள்,,மருத்துவமனை என்று பார்க்காமல்..நல்ல பூசை போட்டு ஆரம்பித்து வைத்தார்கள்..இது தொடர்ந்தது..உடம்பு மரக்குமட்டும்......அவர்கள் அடித்து கொண்டு வந்து போட்டு விட்டு போக அங்கு இருக்கும் மற்றையவர்கள் அந்த காயம்களுக்கு ஒத்தடம் கொடுப்பார்கள்..சில நேரம் நாடு இரவில் வந்து கூட்டி போவார்கள் அந்த நேரம் கொடுக்கும்..வாக்கு மூலமும் ..முன்னர் கொடுத்த வாக்கு மூலமும் ஒன்றாய் இருத்தல் வேண்டும் தூக்க கலக்கத்தில் ஏதாவது மாறி இருந்தால் அதற்கு வேறு வாங்க வேண்டி இருக்கும்..அங்கு பிடி பட்டவர்களில் பலர் சித்திரவதை தாங்காமல் தமக்கு தெரிந்தவற்றை..சொல்லிவிட்டார்கள் அவர்களிற்கும் வேறு வழி இல்லை..அதில் ஒருவர் தனக்கு 1 நாள் சாப்பாடு தந்த ஒரு எல்லையோர கிராமத்து ஆண்மகனை காட்டி கொடுத்து விட அவர் வீணாக 3 மாதம் சிறை வாசம்..அவர் போகும் போது அந்தபோராளியை பார்த்து நல்லாய் இரு ராசா என்று சொல்லி விட்டு போனது..இன்னும் நினைவில் இருக்கு இப்படி இன்னும் எவ்வளவோ...இப்போதெல்லாம் நாடு கடந்த தமிழ் ஈழம் மக்கள் பேரவை என்று..பத்திரிகையில் படிக்கும் போதெல்லாம் தன்னிடம் இறுதியாக விடை பெற்று சென்று கண் முன்னே வெடித்து சிதறிய மற்றவர்களால் அறியபடாத முகம் தெரியா கரும்புலிகளின் முகம்கள் கண்முன் தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை....

யாவும் கற்பனை அல்ல...

இந்த கதை ஒரு போராளியின் கதை இப்படி எத்தனை எத்தனை போராளிகளோ..இந்த போராளிக்கு உதவி செய்யும் பொருட்டு நிறைய பேரிடம் பேசினோம் முகநூலில் போராளிகள் பற்றி STATUS போடுவோர்..YARL களத்தில் பின்னூடம் இடும் சிலர்..இப்படி பலர்..எல்லோரும் கை விரித்து விட்டார்கள் இறுதியில் இந்தியாவில் இருந்து மட்டும் சிறு உதவி கிடைத்தது....அவரிற்கான உதவி கேட்டு இக்கதையை? எழுதினேன் இதில் நிறைய எழுதவில்லை..அவரின் முழு தகவலும் ஒரு நல்ல கதாசிரியரின் கையில் கிடைத்திருக்குமானால் உங்களுக்கு நல்ல க்ரைம் கதை கிடைத்து இருக்கலாம்..

இதில் நிறைய உண்மை களை தவிர்த்து விட்டேன்..அவர் சொன்னது எல்லாம் எழுதுவது என்றால்..ஒரு தொடர் தான் எழுதவேண்டும்..உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள் என் மேல் நம்பிக்கை இருந்தால் அவரையோ அவரின் பெற்றோரையோ தொடர்பு எடுத்து தருகிறன்...

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றிகள்..! இதை நேசக்கரத்தினூடு செய்ய முடியுமா?

  • தொடங்கியவர்

தகவலுக்கு நன்றிகள்..! இதை நேசக்கரத்தினூடு செய்ய முடியுமா?

தனி மடலில் விபரம் அனுப்பி இருக்கிறன் ..

நன்றி

யோவ் யாழ் களத்தில பின்னூட்டம் இடுகிறம் என்கிறதுக்காக உப்புடியான வில்லங்கமாக கேசுகளுக்கை எங்களைக் கொண்டுபோய் மாட்டி கடைசியில நீர் எங்களையும் கம்பி எண்ண வைப்பீர் போல இருக்கிதே. நல்ல குசியான இசையை தருவீர்கள் என்று பார்த்தால் தந்தி அறுந்த வீணாவாய் இருக்கறீங்களே.

  • தொடங்கியவர்

யோவ் யாழ் களத்தில பின்னூட்டம் இடுகிறம் என்கிறதுக்காக உப்புடியான வில்லங்கமாக கேசுகளுக்கை எங்களைக் கொண்டுபோய் மாட்டி கடைசியில நீர் எங்களையும் கம்பி எண்ண வைப்பீர் போல இருக்கிதே. நல்ல குசியான இசையை தருவீர்கள் என்று பார்த்தால் தந்தி அறுந்த வீணாவாய் இருக்கறீங்களே.

நீண்ட நாள் பலரிடம் கேட்டு பார்த்து வேறு வழி இல்லாத படியினால் தான்..இதை கதையாக எழுதினேன் நான் வேறு என்ன செய்திருக்க வேணும் என்று நீங்கள் எதிர் பார்க்கிறீங்க....எனக்கு தெரியவில்லை..நீங்களே சொல்லுங்க..

அந்த போராளியின் மன ஆதங்கமும், கவலையும் நன்றாக புரிகிறது. உங்கள் ஆக்கத்திற்கான முயற்சிக்கும், அந்த போராளிக்கு உங்களாலான உதவியை செய்ய துடிக்கும் உங்கள் மனசுக்கும் நான் தலை வணங்குகிறேன். இன்றைய நிலையில் எனக்கு இதை தவிர வேறு செய்ய கூடிய மாதிரி இல்லை. மன்னிக்கவும்.

வீணா, இது போன்ற பலர் நேரடியாக பங்களித்தும், துணை போயும் வருட கணக்காக சிறையில் வாடுகிறார்கள். முள்ளிவாய்கால் உடன் போராட்டம் முடிந்துவிட்டதாக இருக்கும் எம் மக்களுக்கு இவர்களின் கதைகளை வெளியில் கொண்டுவாருங்கள். போராட்டம் முடியவில்லை என்பதை உணர்த்துங்கள். நன்றி.

Edited by அபிராம்

  • கருத்துக்கள உறவுகள்

விபரங்களை மின்னஞ்சலில் போட்டு விடுங்கள் நேசக்கரம் அமைப்பானது எமக்கு இருக்கும் தொடர்புகளை வைத்து முடிந்தளவு உதவிகளை செய்வோம் நன்றி.

  • தொடங்கியவர்

விபரங்களை மின்னஞ்சலில் போட்டு விடுங்கள் நேசக்கரம் அமைப்பானது எமக்கு இருக்கும் தொடர்புகளை வைத்து முடிந்தளவு உதவிகளை செய்வோம் நன்றி.

நன்றி அண்ணா..

தயவுசெய்து இப்படியான விடயங்?ளை இங்கே இட்டு அவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்திவிடாதீர்கள். நீங்கள் ௌஉதவி செய்யுங்கள். உங்களு??கு மிகவும் நம்பிக்கை ஆனவர்களிடம் கேட்கலாம் ஆனால் இப்படியான இடங்களி கேட்பது பாதுகாப்பனது அல்ல உதவி கேட்பவர்களும் செய்பவர்களும் மிகவும் கவனமாக இருக்கவும். துன்பத்தில் இருப்பவர்களை நாங்களே எதிரிக்கு காட்டிக்கொடுத்த மாதிரி ஆகிவிடும் .அப்படியான சில சம்பவங்கள் நடந்திருந்தது அண்மையில்.

இவ்வாரம் சுவிசிலும் , இத்தாலியிலும் பிரான்சிலும் எனது தனிப்பட்ட சில தெவைகளுக்காக சிலருடன் கதைக்க வேண்டி இருந்தது . ஒருவருடன் பல வருடங்களுக்கு பின்னரும் மற்றவர்களுடன் சில காலத்தின் பின்னரும்

சந்தித்து இருந்தேன். பெரும்பாலானோர் என்னுடன் சில வருடங்களாக எவ்விதமான தொடர்பிலும் இருக்கவில்லை அக்காலப்பகுதியி நான் எங்கிருந்தேன் என்ன செய்தேன் என்று கூட தெரியாது என்னை நம்பி தகவல்கள் பலவற்றை அள்ளி வீசினார்கள். ஒருவர் தனது தம்பியை பற்றி கூறிய சிலதகவல்கள் என்னை சிறிது ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது அவர் தம்பி கடந்தவருடம் வ*மரணமடையும் வரையும் என் சகோதரனுடன் தான் இருந்தார் அது கூட தெரியாது அவர்கள் செய்தவேலைகளை பற்றிய தகவல்களை சாதரணமாக சொன்னார். தயவுசெய்து இவ்வாறான தகவல்களை மற்றவர்களுக்கு கூறும் போது கவனமாக இருங்கள். எதிரிக்கு மிக முக்கியமாக தேவைப்படும் தேடப்படும் பலர் முகநூலினும் வேறு சில இடங்களிலும் புத்தம் புதிய தங்கள் புகைப்படங்களுடன் தகவல்களுடன்....... அவர்களுக்கும் சொல்லுங்கள். எதிரி மிகவும் உயிர்ப்பாகத்தான் இருக்கிண்றான் கவனம் எண்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.