Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மலேசியாவில் இருக்கும் போது போராடும் திறன் இருக்கு எண்டவர்.. இப்போ எல்லாம் முடிஞ்சு போச்சாம். (கேபி)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயல்வது தேவையற்றது-கேபி

முடிந்து போன போராளி இயக்கத்திற்கு (விடுதலைப் புலிகள் [^] இயக்கத்தின் சிற்பிகளில் ஒருவரான கேபி, அந்த இயக்கத்தைத்தான் இப்படி போராளி இயக்கம் என்று கூறுகிறார்) மீண்டும் உயிர் கொடுக்க முனைவது, பல்வேறு பிரச்சனைகளுக்கே வழி வகுக்கும் என்று கூறியுள்ளார் கேபி.

ராணுவப் பிடியில் சிக்கியுள்ள கேபி என்கிற குமரன் பத்மநாதன் இலங்கையின் ஐலன்ட் நாளிதழுக்கு கொடுத்துள்ள பேட்டியின் 2ம் பாகம்:

4வது ஈழப் போரின் கடைசி மாதங்களில் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தீர்களா? வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைமை தப்ப முடியாத அளவுக்கு சிக்கியிருந்ததா? ராணுவத்தை தடுக்க முடியவில்லை என்று உங்களது தலைமை உங்களிடம் கூறியதா?

பிரபாகரன், அவரது முக்கியத் தளபதிகள், புலம் பெயர்ந்த தமிழர்களில் சில பிரிவினர், தமிழ்நாடு நமக்கு உதவும் என நம்பியிருந்தனர். தமிழக அரசியல் கட்சிகள் தங்களுக்கு உதவ முன்வரும், பிரதமர் மன்மோகன் சிங் [^] இலங்கைப் பிரச்சனையில் தலையிடுவார் என அவர்கள் பெரிதும் நம்பினர்.

நாங்களும் கூட சில ஐ.நா. அதிகாரிகளை அணுகினோம், கிழக்கு தைமூர் அதிபரை அணுகினோம். ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உடன்பாட்டை ஏற்படுத்த முயன்றோம். இந்த நேரத்தில்தான் 2009ம் ஆண்டு மே மாதம் 3வது வாரத்தில் விடுதலைப் புலிகள் வசம் இருந்த கடைசிப் பகுதியையும் ராணுவம் சுற்றி வளைத்து விட்டது.

தற்போது விடுதைலப் புலிகளின் ராணுவ கட்டமைப்பு இல்லை. இந்த நிலையில், அரசுடன் இணைந்து செயல்பட புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்வருவார்கள் என கருதுகிறீர்களா?

புலம் பெயர்ந்த மக்களின் மன நிலையில் மாற்றம் வர வேண்டியது அவசியம். விடுதலைப் புலிகளின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைந்து போய் விட்டது. எனவே புதிய சூழ்நிலை குறித்து பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். தற்போதைய நிலையை புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் சிந்தித்துப் பார்க்க முன்வர வேண்டும். அதற்கேற்ப அவர்கள் செயல்பட வேண்டும்.

முடிந்து போன போராளி இயக்கத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைவது, பல்வேறு பிரச்சனைகளுக்கே வழி வகுக்கும். எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம்.

இப்போது ராணுவரீதியான பலம் விடுதலைப் புலிகளிடம் இல்லை என்பதால் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

இந்த இடத்தில்தான் நாங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட விரும்புகிறோம். புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு திரும்புவது தொடர்பான பணிகளில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள வடக்கு கிழக்கு மறு சீரமைப்பு வளர்ச்சிக் கழகம் தயாராக உள்ளது. இந்த வாய்ப்பை புலம் பெயர்ந்த தமிழர்கள் விட்டு விடக் கூடாது. ஒரு வருடத்திற்கு முன்பு வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுதந்திரமாக நடமாட முடியும் என யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது.

வெளிநாடுளிலிருந்து ஆயுதங்களைப் பெற்று அனுப்புவதில் நீங்கள் மிகவும் வெற்றிகரமானவர் என்று அறியப்பட்டவர் நீங்கள். அப்படி இருக்கையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒருவரை உங்களது இடத்தில் அமர்த்தினார் பிரபாகரன். எப்போது அதைச் செய்தார், ஏன் செய்தார்?

2003ம் ஆண்டு நான் நீக்கப்பட்டேன். வெளிநாட்டுக் கட்டமைப்பை காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார் பிரபாகரன். உளவுப் பிரிவினரின் தொடர் கண்காணிப்பு காரணமாக நான் மிகவும் அடக்கி வாசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். (இலங்கை உளவுப் பிரிவினரின் திறமை காரணமாகத்தான் வெளிநாடுளில் புலிகள் அமைப்பின் செயல்பாடுகள் முழுமையாக செயலிழந்து போனதாக கூறியுள்ளாராம் கேபி)

உங்களது ஆதரவாளரான ரணில் விக்கிரமசிங்கே தேர்தலில் தோற்றது ஏன்?

அப்போதைய பிரதமர் உறுதியானவராக இல்லை என்று பிரபாகரன் கருதினார். ஈழப் பிரச்சனையை ரணில் விக்கிரமசிங்கேவால் தீர்த்து வைக்க முடியாது என்பது அவரது எண்ணம். இதன் விளைவாக மகிந்தா ராஜபக்சே வெற்றி பெற முடிந்தது. ராஜபக்சேவுக்கு முன்பு இருந்த தலைவர்களை எளிதில் வென்ற பிரபாகரனுக்கு ராஜபக்சேவை வெல்ல முடியவில்லை.

2006 ஆகஸ்ட் மாதம் மீண்டும் சண்டைகளில் ஈடுபடுவதற்கு முன்பு உங்களிடம் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆலோசனை நடத்தியதா?

பாதுகாப்பு படையினர் மீது மிகப் பெரிய தாக்குதலை தொடுப்பதற்கு முன் என்னுடன் பிரபாகரன் ஆலோசனை நடத்தினார். உடனடியாக பெருமளவிலான ஆயுதங்களை வாங்கி அனுப்புமாறு அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார்.மேலும் இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

அதேசமயம், ராணுவரீதியாக ஈழத்தை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தில் பிரபாகரன் உறுதியாக இருந்தவரை அவர் யாருடைய ஆலோசனையையும் கேட்கத் தயாராக இல்லை.

நீங்கள் தற்போது கொழும்பில் இருப்பதால், உங்களுக்கும் அரசுக்கும் ஒப்பந்தம் ஏற்படும், அதனால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என சில தமிழ் அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். அப்படி ஏதேனும் உள்ளதா?

நான் கொழும்பில் இருப்பதால் யாரும் பயப்படத் தேவையில்லை. தற்போதைய தேவை போருக்குப் பிந்தைய பிரச்சனைகளைத் தீர்க்கத் தேவையான அரசியல் அணுகுமுறை மட்டுமே. போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவவும், வடக்கு கிழக்கு மாகாணங்களை மீண்டும் கட்டியெழுப்பவும் தேவையான ஒருங்கிணைந்த திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். இதைத் எந்த அரசியல் தலைவருடனும், கட்சியுடனும் மோதும் எண்ணம் எனக்கு இல்லை.

தமிழ் சமுதாயத்தின் நன்மைக்காக, புலம் பெயர்ந்த தமிழ் சமூகமும், அரசியல் கட்சிகளும், பிரிவுகளும், இலங்கையில் ஒருங்கிணைந்து செயல்பட முன்வர வேண்டும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முன்வர வேண்டும். மற்றபடி எனக்கு வேறு எந்த அரசியல் அபிலாஷைகளும் இல்லை.

இலங்கை அரசை தவிர்த்து விட்டு எதையும் செய்யலாம் என்று நான் நினைக்கவில்லை. அதுசாத்தியமில்லை. பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

புலிகளுக்கு உங்களது நிதி சேகரிப்பு எப்படி இருந்தது?

மிகப் பெரிய அளவில் அப்போது எங்களுக்கு நிதி சேர்ந்தது. நிதிக்குப் பஞ்சமே இல்லை என்று கூறும் அளவுக்கு வந்தது. பல்வேறு தரப்பிலிருந்தும் பணம் வந்தது. சுனாமியின்போதும் கூட எங்களுக்கு பெருமளவில் பணம் வந்தது. இருப்பினும் அதுகுறித்து என்னால் விரிவாகச் சொல்ல முடியாது. காரணம், அவற்றையெல்லாம் அப்போது பராமரித்தது காஸ்ட்ரோதான். அவர் ஒருபோதும் என்னுடன் ஒத்து வந்ததே இல்லை.

பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர், இந்த நிதி குறித்து புலம் பெயர் தமிழ்ச் சமுதாயத்தினர் விவாதித்தனர். அவர்களில் சிலர் வசம் நிதிப் பொறுப்பு இருந்தது. அவர்கள் உடன்பட்டு வர மறுத்து விட்டனர். இதனால்தான் பெரும் பிளவு ஏற்பட வாய்ப்பானது.

பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவை எப்போது சந்தித்தீர்கள்?

நான் பிடிபட்டு கட்டுநாயகே விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, மிகவும் மனம் உடைந்திருந்தேன். மிகவும் பதட்டத்துடன் இருந்தேன். எனது முடிவு நெருங்கி விட்டதாக கருதினேன். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சியும், என்னை அவர்கள் கைது செய்ததும் எனது இதயத்தை நொறுங்கச் செய்தது.

கட்டுநாயகே விமான நிலையத்திலிருந்து நேராக என்னை கோத்தபயா வீட்டுக்குக் கொண்டு சென்றனர். மிகச் சிறந்த நிர்வாகியாக, திறமையாளராக அறியப்பட்ட கோத்தபயா ராஜபக்சேவை அப்போது எனக்கு சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரை சந்தித்த அடுத்த சில நிமிடங்களிலேயே எனது அனைத்துப் பயத்தையும் அவர் போக்கி விட்டார். எனக்கு டீ, கேக் தரப்பட்டது. பின்னர் அங்கிருந்து நான் அழைத்துச் செல்லப்பட்டேன்.

கோத்தபயா வீட்டுக்குள் நான் நுழைந்ததும் அங்கு ஒரு புத்தர் சிலையைப் பார்த்தேன். அதைப் பார்த்ததும் எனக்கு நம்பிக்கை வந்தது. இங்கு எனக்கு எதுவும் நடக்காது என்ற தைரியம் கிடைத்தது.

பின்னர் கோத்தபயாவின் ஆசிர்வாதங்களுடன், கனடா, இங்கிலாந்து [^], பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா [^], ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து 9 தமிழர்களை நான் கொழும்புக்கு அழைத்து வந்து அவரை சந்திக்க வைத்தேன். மறு வாழ்வு நடவடிக்கைகளில் அவர்களது உதவியைப் பெறுவது தொடர்பாக அப்போது விவாதிக்கப்பட்டது.

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான விரிசலை குறைக்க நிறைய செய்ய வேண்டியுள்ளது. இதற்காக நான் பல நாட்கள் இரவு கூட தூங்காமல் விழித்திருந்து பாடுபட்டேன். எங்களது நடவடிக்கையை சிலர் எதிர்க்கிறார்கள். ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லை, அதன் ராணுவ பலம் இல்லை என்பதை உணர்ந்து அவர்கள் செயல்பட முன்வர வேண்டும்.

அரசின் அனுமதியோடு நாங்கள் படைத் தலைவர்கள் சிலரையும் சந்திக்க முடிந்தது. ராணுவம் எங்களை இதமாக, அன்பாக வரவேற்கும் என நான் கருதவே இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை. குறிப்பாக பலாலியில் அப்படி ஒரு வரவேற்பு எங்களுக்குக் கிடைக்கும் என கருதவில்லை. ஆனால் அவர்கள் என்னை அன்போடு வரவேற்றுப் பேசினர்.

தட்ஸ்தமிழ்.கொம்

இதில் தேடப்படுபவரை கண்டால் அல்லது எங்கு உள்ளார் என தெரிந்ததால் உங்களுக்கு அருகில் உள்ள காவல் துறை இடம் தெரிவிக்கவும் ... :)

http://www.interpol.int/public/Data/Wanted/Notices/Data/1998/43/1998_4743.asp

கேயண்ணா பீயண்ணா ... கைது செய்யப்பட்டவரோ/சரன் அடைந்தவரோ ... என்பதற்கு மேல் இன்று அவர் சிங்களத்தின் கைகளில்! ... அப்படியானால் இப்போது அவர் ... நல்லவரோ/கெட்டவரோ என்று ஆராய்ந்து என்னத்தை காண முடியும்? ...

... அதை விடுத்து ... கேபி ... கேபி ... கேபி ... என்ற சிங்களத்தின் நாடகத்துக்கு, புலத்து காஸ்ரோக்களும் விடாது எதிர் நாடகம்! ... என்ன உப்படியான நாடகங்கள் சிங்களத்துக்கு மட்டுமல்ல இந்த புலத்து காஸ்ரோக்களும் "வாழ்ந்த வாழ்க்கையை தொடர்ந்து வாழ" ஆடிக்கொண்டிருக்கிறார்கள்! :)

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது கே.பியின் உயிழ் வாழ்வுக்கான ஆசையா மக்கள் மேலான அக்கறையா..??!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்....

மலேசியவில் இருந்த போது கேபி சொன்னவை..

1. போராட்டம் முடியவில்லை எமது போராளி அணிகள் இன்னும் காட்டுக்குள் உள்ளன அவற்றைக் கொண்டு எம்மால் மீள ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்த முடியும்.. ஆனால் நாங்கள் ஆயுதங்களை மெளனிக்கச் செய்திருக்கிறோம்.

2. தேசிய தலைவரின் வழிகாட்டலில் எமது இலட்சியம் நோக்கிப் போராடுவோம். பாதைகள் மாறினும் பயணங்கள் மாறாது. புலம்பெயர் மக்கள் எனக்கு தொடர்ந்து உதவி வழங்க வேண்டும்.

இன்று சிறீலங்காவில் இருந்து கொண்டு சொல்வது..

1. கோத்தபாய நல்லவன்.. எனக்கு ரீயும் கேக்கும் தந்தவன்.. அன்பாக உபசரித்தவன்.. அதனால் தமிழ் மக்கள் சிங்களவனை நம்பி நடக்கனும். குறிப்பா புலம்பெயர் மக்கள் கோத்தபாயவை நெருங்கி வரனும்.. அதற்காக 9 பேர் கொண்ட புலம்பெயர் தூதுக்குழுவை நான் கோத்தாவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளேன்.

2. புலிகள் தோற்றுப்போன ஒன்று. எனிப் போராட முடியாது.

3. ஆயுதப் போராட்டம் முடிஞ்சுது. பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு பிரகாசமா இருக்குது. (அதெப்படின்னா உங்களால மட்டும் இப்படியெல்லாம் முடியுது. )

4. சிறீலங்காவின் புலனாய்வுத்துறை உலகில் சிறந்தது. அதுவே எங்களை முடக்கிப் போட்டது. (இந்தியா.. மலேசியா.. தாய்லாந்து.. அமெரிக்கா இதில் செயற்பட்டவை திட்டமிட்டு மறைக்கப்பட்டு.. பெருமை முழுவதும்.. சிறீலங்காவிற்கு அள்ளி வழங்கப்பட்டுள்ளது.)

5. ஜனாதிபதி மகிந்த நல்லவர் வல்லவர்.. அவரின் அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் தமிழ் மக்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும்.

6. புலம்பெயர் தமிழ் மக்கள் நாடு திரும்பி சுபீட்சமாக வாழ நான் ஒரு பெரிய கட்டமைப்பை உருவாக்கி வைச்சிருக்கிறன். எல்லாரும் வந்து அதுக்க குந்துங்கோ.

7. வடக்குக் கிழக்கை கட்டி எழுப்பனும். அதுதான் இன்றைய தேவை.

----------------------------------

யதார்த்தம்..

இவர் எப்படி அன்று புலிகளின் முகவராக இருந்தாரோ இன்று அப்படியே சிங்கள அரசின் முகவராகி இருக்கிறார்.

ஆயுதம் அற்ற நிலையில் பேச்சுக்களுக்கு வழிபிறந்திருப்பதாகச் சொல்வது சுத்தப் பொய் என்பதை மக்கள் தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று வரை கஸ்டப்படும் மக்களுக்கு போராளிகளுக்ககு உதவ முடியாத கேபி எப்படி தேசத்தை கட்டி எழுப்புவார். சிங்களவர்கள் வந்து வசதியா குடியேற..தமிழர்கள் கூலிகளாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போலும். :)

புலம்பெயர் மக்களின் பலம்.. குறித்த பயம்.. சிங்களத்திடம் இருக்கிறது. அதை தகர்க்க இவரை பயன்படுத்துகிறது சிங்களம்.

விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் இராணுவ ரீதியில் பலமானால்.. கோத்தா மகிந்த கோஷ்டி தென்னிலங்கையில் அரசியல் செய்ய முடியாது. அதற்காக புலிகள் இல்லவே இல்லை என்று காட்ட இவர் நல்லா உதவி செய்யுறார்.

கோத்தா மீதான போர்க்குற்றங்களை மறைக்க மறக்க.. அவர் நல்லவர் வல்லவர்.. கேக் தந்தவர் ரீ குடுத்தவர் என்று இவர் அளந்து கட்டிக் கொண்டிருக்கிறார். இதனை தமிழ் மக்கள் நம்பனும் என்று நினைக்கிறார்.]

தேசிய தலைவரை தவிர தமிழ் மக்களுக்கு எவரும் தலைவர் அல்ல. வாழ்ந்தாலும் இறந்தாலும் அவரே வழிகாட்டி. அவரின் பாதை தீர்க்கமானது. மக்கள் தேசிய தலைவருக்கு முகவராக இருந்து இன்று சிங்களத்துக்கு முகவர்களாக செயற்படுபவர்களை நம்பிக் கொண்டிராமல்.. தேசிய தலைவர் காட்டிய வழியில் நம்பிக்கையான ஒரு சில தலைமைகள் இன்னும் மிஞ்சியுள்ள நிலையில் அவர்களின் வழியில் பயணிப்பதே சிறந்தது.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.