Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்தியா......

சிறுகதை -இளங்கவி

சில மைகள் நடந்து வந்த களைப்பில், அவளுக்குப் பரிச்சயப்பட்ட இடமான அந்த இடத்தில் புதிதாக முளைத்திருந்த அந்தப்பெட்டிக்கடையடியில் வந்து நின்று கொண்டாள் நித்தியா.....

நாவெல்லாம் வறண்டு தலைசுற்றுவது போல வர உடனடியாக ஒரு மரத்தின் கீழ் அமர்ந்துகொண்டவள் கடைக்காரரைப் பார்த்து ''அண்ணை கொஞ்சம் தண்ணி தாறியள...கொஞ்சம் தலைச்சுத்துது....'' எனவும் கடைக்காரர் அவளைப்பார்த்து '' தங்கச்சி இங்க போத்தல் தண்ணி விக்குறத்துக்குத்தான் இருக்கு, இந்த சின்னப்பபோத்தல் தான் குறைஞ்ச்ச விலை... நூறு ரூபாய் மற்றதெல்லாம் விலை கூட...'' என்றார்.

தன்னிடம் காசில்லாத நிலமைய அவரிடம் கூறவும், ''இப்படிப் பார்த்துப்பார்த்து எல்லாருக்கும் சும்மா கொடுத்தால் நான் இப்பத்தான் திறந்த கடையை இழுத்துமூடவல்லோ வேணும்...'' என்று கொஞ்சம் இறுக்கமாகவே பதில் சொல்லிவிட்டு அவர் தன் வேலையைப் பார்க்கவும் தலைச்சுற்றுடன் சத்தியயும் சேர்ந்துவர மரத்துக்குக்கீழ் சத்தியெடுத்த்துவிட்டு அப்படியே கீழே மயங்கி விழுந்துவிட்டாள் நித்தியா....!

அங்கே நின்ற ஒரு சிலரும் செய்வதறியாது ஒருவரையொருவர் பார்த்துவிட்டு விழுந்து கிடந்தவளைத் தூக்கவென்று அருகே செல்லவும், அங்கே தன் உறவினர்களுடன் கடையில் ஏதோ சாமான் வாங்கிக்கொண்டு நின்ற ஓர் வெளிநாட்டு வாழ் தமிழனான மாதவன் கூடவே ஓடிச்சென்று அவளின் முகத்தில் கொஞ்சம் தண்ணீர் தெளிக்க, நித்தியா ஓரளவு மயக்கம் தெளிந்து முளித்துக்கொண்டாள். உடனே எல்லாருமாக அவளைப் பக்குவமாகப் தூக்கி இருத்திவிட்டு அங்கே கடைக்காரரிடம்.....

'' ஒரு சோடா தாங்கோண்ணை...' என்று வாங்கிக் கொண்டுவந்து அவளருகில் சென்று அவளுக்குக்கொடுத்தான் மாதவன். என்னிடம் சோடாவுக்குக்காசு இல்லை என்று நித்தியா கூறவும் '' இல்லை இல்லை இது காசுக்கு இல்லை, நான் என்ர காசில வாங்கித்தாறன் நீங்கள் குடியுங்கோ, மயக்கம் தெளியும்'' என்று மாதவன் கூற....

''மிக்க நன்றி என்று கூறிவிட்டு நித்தியா அதைக் குடிக்க அவளை உற்றுப்பார்த்த மாதவனுக்கு அவளின் நிலமையை ஒரளவு ஊகிக்கமுடிந்து, ஆம், அவள் நிச்சயம் போராட்டத்தில் சம்மந்தப்பட்டவளாகத்தான் இருந்திருக்க வேண்டுமென்பதை அவளிடம் அவதானித்த விடயங்கள் சிலவற்றை வைத்து உறுதிப்படுத்திக்கொண்டான் மாதவன்.

அவள் சமீபத்தில்தான் தன் தந்தையுடன் முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாகவும், தன் தந்தை சில நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாகவும், தான் தற்பொழுது தன் வாழ்வாதாரத்தைத் தேடிவருவதாகவும் அவள் சொல்லிக்கொண்டிருந்த பொழுதுகூட அவளிடம் சோகத்தின் கீறல்கள் எதுவும் தெரியாததை அவதானித்த மாதவன், அவள் பேச்சிலிருந்த தைரியம், மனோதிடம் ஆகியவற்றை வைத்து, அவள் அதை எந்தப் பாசறையிலிருந்து கற்றுக்கொண்டிருப்பாள் என்பதை மட்டும் உறுதிசெய்துகொண்டான். ஆனாலும் பெண்ணாயிருந்து அவள் முகாமில் எத்தனை சிரமமங்களை எதிர்கொண்டிருப்பாள் என்பதை நினைக்க அவனுக்கு கண்கலங்கியது. இப்படியான அவலங்களைத் தடுக்கத்தானே கடந்தவருடம் மேலை நாட்டு வீதிகளில் நின்றறோம் இருந்தும் உலக நாடுகள் தமிழருக்கு எதுவும் செய்யவில்லையே என்று நினைத்துக்கொண்டான்......

சரி நீங்கள் எங்க இருக்கிறனீங்கள் என அவன் வினவவும் அவளும் தான் போகுமிடத்தைச் சொன்னாள். சரி எனக்கு நேரமாகுது, கவனமாய்ப் போங்கோ, நான் முடிந்தால் வந்துபார்க்கிறன் என்று சொல்லிவிட்டு தனது கையடக்கத்தொலைபெசி இலக்கத்தைக் அவளிடம் கொடுத்த மாதவன், ஏதாலும் தேவையென்றால் அடியுங்கோ என்றுவிட்டு அவன் புறப்படத்தயாராக அவனை நன்றியுணர்வுடன் பார்த்து நித்தியா வழியனுப்பி வைத்தாள்.

தலைச்சுற்றும் சத்தியும் கொஞ்சம் குறைந்துவிட்டிருந்தபடியால் மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்தாள் நித்தியா, நடந்தவண்ணம் தனது அடிவயிற்றில் கை வைத்துப்பார்த்து அங்கே ஒரு வண்ணத்துப்பூச்சி பறப்பது போன்ற ஒரு படபடப்பை உணர்ந்தவளுக்கு அதை நினைத்ததும் கண்கள் சிறிது கலங்கித்தான் போயின.

ஆம்..... தடுப்புமுகாமெனும் பெயரில் இருக்கும் சித்திரவதை முகாமில் சிங்கள ஓநாய்களின் வன் புணர்வுக்குச் சிக்கி அதில் எவனோ ஒருவனின் விந்துவுக்கு உருவாகிய ஓர் உயிரின் படபடப்புத்தான் என்பது அவளுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம் தான். அவள் அதைக் கலைக்க விரும்பவில்லை, காரணம் முள்ளிவாக்கால் அவலத்தில் எந்தப பாவமும் அறியாத கருவிலிருந்த சிசுகூடக் கொல்லப்பட்டதை நினைத்தவள், இது வக்கிரத்துக்கு உருவான கருவென்றாலும் அது என்ன பாவம் செய்தது அதை நான் ஏன் கொல்லவேண்டுமென்ற நினைவே அவளிடம் மேலோங்கியிருந்தது.

அனாலும் ஒன்றைமட்டும் நினைத்தாள் நித்தியா, அவள் விலங்கியல் படித்தபொழுது படித்திருததாக ஞாபகம், பரம்பரையியல்புகள் தாய் தந்தை மற்றும் அவர்களின் பரம்பரையிலிருந்தே பிள்ளைகளுக்குக் கடத்தப்படுவதாக, அத்துடன் தன் குணத்துடனும் சேர்ந்த ஓர் பிள்ளைதானே தனக்குப் பிறக்கப் போகிறது, மகாபாரதத்தில் பாண்டவரில் ஒருவனான வீமனுக்கும் அரக்கியொருத்திக்கும் பிறந்த பிள்ளைதானே கடோற்கஜன், அவன் அரக்கனாக தாயுடன் வளர்ந்தாலும், இறுதியில் பாரதப்போரில் தந்தை வீமனின் பக்கமாய் நியாயத்தின் பக்கம் நின்றுதானே போர் புரிந்து இறந்தான். அதே போல எனக்குப் பிறக்கும் பிள்ளையையும், அவன் வக்கிரகுணம் கொண்ட ஒரு தந்தையின் பிள்ளையாக இருந்தும், வந்த வழியிலேயே அந்த அம்பைத் திருப்பி எய்தவனின் பரம்பரையையே அழிக்கும் வண்ணம் மாற்றுவேன் என மனதில் உறுதியெடுத்துக்கொண்டாள்.

அவள் சிந்தனையில் உதித்ததெல்லம் இந்தச் சிங்களத்தால் தமிழருக்கு எதுவுமே நடடக்கப்போவதிலல்லை, அண்மையில் நடந்துமுடிந்த, மேலும் தொடர்ந்துகொண்டிருக்கும் கொடுமைகள் மற்றும் சிங்கள ஆட்சியாளர்களின் தமிழர் மீதான அடக்குமுறைகள் மெளனித்த வீரத்தை அழைக்கும் வண்ணமே அமைந்துகொண்டிருக்கிறது. எனவே எனக்குப் பிறக்கப்போகும் பிள்ளையையும் அதற்குத் தயார்படுத்த வேண்டுமென்பதையே மட்டும் நினைத்தவளாகவும், தனக்கு நிகழ்ந்த கொடூரங்களை மறந்தவளாகவும் மனத்தின் உறுதி அவள் கால்களிலும் வர தன் நடையைத் தொடர்ந்தாள் நித்தியா......

நிகழும் உண்மைகளை மனதில் நிறுத்தி கற்பனையில் எழுதப்பட்ட ஓர் கதை.....

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

மகாபாரதத்தில் பாண்டவரில் ஒருவனான வீமனுக்கும் அரக்கியொருத்திக்கும் பிறந்த பிள்ளைதானே கடோற்கஜன், அவன் அரக்கனாக தாயுடன் வளர்ந்தாலும், இறுதியில் பாரதப்போரில் தந்தை வீமனின் பக்கமாய் நியாயத்தின் பக்கம் நின்றுதானே போர் புரிந்து இறந்தான்

நல்ல கதைதான் ஆனாலும்......இந்தியா சினிமாவினதும்,இந்தியா புராண புளுகுகளின் ஆதிக்கம் இருக்குது ....இதுகள் இல்லாமல் நாம் எமது பின்புலத்துடன் எழுதினால் மிகவும் நல்லது என்பது அடியேனின் கருத்து..

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கதைதான் ஆனாலும்......இந்தியா சினிமாவினதும்,இந்தியா புராண புளுகுகளின் ஆதிக்கம் இருக்குது ....இதுகள் இல்லாமல் நாம் எமது பின்புலத்துடன் எழுதினால் மிகவும் நல்லது என்பது அடியேனின் கருத்து..

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

புத்தனுக்கு

முதலில் உங்கள் உண்மையான விமர்சனத்துக்கு மிக்க நன்றி....

இது எங்களின் சமகால நிகழ்வுகளை கற்பனை கதையாய் சொல்லவந்ததால் சினிமாத்தனம் கூடிவிட்டது என்று நினைக்கிறேன், அத்துடன் எங்கள் பேச்சு நடையைக் குறைத்து எழுத்து நடையே அதிகம் ஆதிக்கம் செய்ததாலும் நீங்கள் சொன்னதுபோல ஆகிவிட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்....

மற்றும்படி புராணப்புழுகல்கள் என்று நீங்கள் சொல்வதைத்தானே எங்கள் சமயம், தமிழ் ஆகியவற்றில் எங்களுக்கெல்லாம் கற்பித்தார்கள். அவைகளை வைத்துத்தானே நல்ல விசயங்களை அறியத்தூண்டினார்கள். அப்படியான இலக்கிய நிகழ்வொன்றின் சம்பவம் என் கதையின் நாயகிக்கு மனதில் தைத்ததாகச் சொல்லியிருந்தேன்.

எங்களுக்கென்று ஒரு தேசம் பிறக்ககும், அதில் எங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கென்று ஓர் பாடத்திட்டம் அதில் நாங்கள் தவிர்க்கவிரும்பும் இலக்கியக் கல்விமுறை என்பன எங்கள் முழுக்கட்டுப்பாட்டிலேயே இருக்கும், அப்பொழுது எல்லாம் தானாக மாறும்...

உங்கள் அறிவுரையின் சில விசயங்களைத் தவிர்க்க முயற்சிக்கிறேன்.... அதிகம் செயற்கைத் தன்மையின்றி எழுத முயற்சிக்கிறேன்....

மிக்க நன்றி புத்தன்....

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியாவின் சிந்தனை ஆக்கபூர்வமானது . வாழ்த்துக்கள். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.