Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரிஸ் நகரை அண்மிக்கும் சிவந்தனின் 10வது நாள் மனிதநேய நடை பயணம்

Featured Replies

தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் மேற்கொள்ளும் 10வது நாள் மனிதநேய நடை பயணம் பரிஸ் நகரை அண்மித்துள்ளது.

பரிஸ் நகரில் இருந்து 15 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன், சற்று முன்னர் வில்லியேஸ் நகரை சென்றடைந்தபோது அங்குள்ள தமிழ் மக்கள் ஒன்றுகூடி அவரை வரவேற்றதுடன், உள்ளுர் பத்திரிகையாளர்களும் சிவந்தனைச் சந்தித்திருந்தனர்.

தற்பொழுது செவ்றோன் நோக்கி நடந்து செல்லும் சிவந்தன் செவ்றோனை சென்றடைந்ததும், இன்று பிற்பகல் 3:00 மணியளவில் முள்ளிவாய்க்கால் மக்களிற்காக செவ்றோன் நகரசபையால் மரநடுகை செய்யப்பட்ட நினைவிடத்தில் இடம்பெறும் மக்கள் ஒன்றுகூடலில் கலந்துகொள்ள இருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து லாக்கூர்னோவ் என்ற இடத்தில் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு மரநடுகை செய்யப்பட்ட இடத்தில் இன்று மாலை 6:00 மணியளவில் மற்றொரு மக்கள் ஒன்றுகூடலும், சிவந்தனுக்கான வரவேற்பு நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் பிரான்ஸ் நகரசபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து நாளை பரிஸ் நகரில் இருந்து சிவந்தன் தனது ஜெனீவா நோக்கிய மனிதநேய நடை பயணத்தைத் தொடர இருக்கின்றார்.

சிவந்தனுடன் பொஸ்கோ என்ற இளைஞனும் கலைஸ்சில் இருந்து தொடர்ச்சியாக பரிஸ் நோக்கி நடந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் (கொல்லப்பட்ட அப்பாவி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும்).

தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

W4J_001_20100802.jpg

W4J_002_20100802.jpg

W4J_003_20100802.jpg

W4J_004_20100802.jpg

W4J_005_20100802.jpg

W4J_006_20100802.jpg

W4J_007_20100802.jpg

W4J_008_20100802.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நான் நேற்று இந்த பயணத்துடன் சில கிலோமீற்றர்கள் இணைந்திருந்தேன்

மிகவும் அமைதியான ஆணித்தரமான இளைஞன்

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் மீண்டும் ஒரு 2009 வைகாசியில் நடைபெற்றது போன்ற ஒரு அகிம்சை போராட்டம் நடாத்தப்பட வேண்டும்.சிவந்தனின் முயற்சி போல் பல தொடரப்பட வேண்டும்.சிவந்தனுக்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இவர் ஜெனீவாவை அடையும்போது லட்சக்கணக்கான தமிழர்கள் இணையவேண்டும்

உலக நாடுகள் அனைத்திலிருந்தும் மக்கள் வந்து அந்ததந்த நாட்டுக்கொடிகளுடன் நின்று தங்களது கைகளையும் இத்துடன் இணைக்கவேண்டும்

உரத்து எமது குரல் இவருடன் சேர்ந்து ஒலிக்கவேண்டும் என்பது எனது ஆசை

அதற்கான ஏற்பாடுகளும்நடப்பதாகத்தான் அறிகிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.