Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய வல்லாதிக்கத்தின் பழங்குடி மக்கள் மீதான போரை எதிர்த்து லண்டனில் பேரணி

Featured Replies

இந்திய வல்லாதிக்கத்தின் பழங்குடி மக்கள் மீதான போரை எதிர்த்து லண்டனில் பேரணி இந்திய தூதரகம் முன் நடை பெற உள்ளது.

இந்தப் பேரணியில் தமிழ் அமைப்புக்களும் கலந்து கொள்வதன் மூலம்,இந்திய வல்லாதிக்கத்துக்கு நாம் தெளிவான செய்தியைச் சொல்லலாம்.

அடக்கப்படும் ஒடுக்கப்படும் மக்களுக்கு நாம் வழங்கும் ஆதரவே அவர்கள் எங்களை ஆதரிக்கத் தூண்டும்.புலத்தில் இருக்கும் தமிழ் அமைப்புக்கள் இதனை முக்கியமான ஒரு அரசியல் வேலைத் திட்டமாகச் செய்ய வேண்டும்.இந்தப் போராட்டத்தில் நேபாளிகளின் தொழிற்சங்ககளும் பங்கு பற்றுகின்றன.

Protest against the murder of Comrade Azad and Hem Pandey , Operation Green Hunt and Indian Expansionism at the Indian High Commission in Aldwych – London on Sunday 15th August between 11 am – 1 pm

Posted by Rajeesh on August 8, 2010

CALLED BY ALLIANCE FOR PEOPLE’S RIGHTS IN SOUTH ASIA

afprisa@googlemail.com

Representing Indian Workers Association (GB)

Progressive Nepalese Society UK

Britain-South Asia Solidarity Forum

Do you know?

According to the Indian government, they have deployed 150,000 troops in India’s central and eastern states. Independent witnesses say the numbers are closer to 250,000. This is more than the number of US troops in Afghanistan. This is war on the Indian people. •Recent statistics show 37% of the country’s people suffer from chronic malnutrition and 50% are undernourished. •A nearly third of India is under army occupation with no democratic freedoms? All over India arrests, detentions, disappearances have increased to alarming levels since the people began resisting the corporate take over of India?•On July 1, the Indian Maoist revolutionary Azad, a Polit Bureau member of the Communist Party of India (Maoist) and the spokesperson of its Central Committee along with a Delhi-based journalist Hem Chandra Pandey were killed by the Andhra state police. •During the last few days at least 29 innocent Kashmiris have been killed.

India has sent one of its ex-ambassador to Nepal to influence the election of the Prime Minister there.

We support

The following demand of the CONCERNED CITIZENS & FORUM AGAINST WAR ON PEOPLE, DELHI, INDIA:

“While condemning in the strongest possible words the killings of Azad and Hem Chandra Pandey, we demand that the government constitute an immediate judicial enquiry to probe into the incident. We also demand an immediate stop to all extra-judicial execution of revolutionaries as well as activists and leaders of people’s movements. The government must respect the constitutionally guaranteed fundamental rights of the people to life and dignity. The gagging of the media and stifling of media freedom must be stopped by the government. We demand an end to the Indian government’s war on people in the name of Operation Green Hunt, and the immediate withdrawal of its armed forces from the areas of conflict. The government must scrap all the MoUs signed with the multinational and Indian corporations for the exploitation of mineral resources at the expense of people’s lives and livelihood. The Indian government must also politically address the demands of the struggling people of Kashmir and the North East through dialogue, and must stop the brutal repression of their voices through state repression. “

http://indianvanguard.wordpress.com/2010/08/08/protest-against-the-murder-of-comrade-azad-and-hem-pandey-operation-green-hunt-and-indian-expansionism-at-the-indian-high-commission-in-aldwych-london-on-sunday-15th-august-between-11-am-1-pm/

.... தன்னையே கொண்டிழுக்க இயலாத வைரவர், நாய் ஒன்றையும் .....

... மூழ்கிப்போனோம், அதிலிருந்து மீளும் முயற்சிகள் இல்லை .... இப்ப உதொண்டு வேறை., :huh:

  • தொடங்கியவர்

நாய் நன்றி உள்ள மிருகம்.மூழ்கிப் போனோம் அணை கட்டாததால்.இனியாவது அணைகளைக் கட்டுவோம்.வெள்ளம் காப்பாற்றும் என்று சொல்லிச் சொல்லியே மூழ்கிப் போனோம்.இனியாவது இதில் இருந்து நீந்திக் கரை சேருவோமோ அல்லது உங்களைப் போல் மூழ்கியே இருப்போமா?

நாய் நன்றி உள்ள மிருகம்.மூழ்கிப் போனோம் அணை கட்டாததால்.இனியாவது அணைகளைக் கட்டுவோம்.வெள்ளம் காப்பாற்றும் என்று சொல்லிச் சொல்லியே மூழ்கிப் போனோம்.இனியாவது இதில் இருந்து நீந்திக் கரை சேருவோமோ அல்லது உங்களைப் போல் மூழ்கியே இருப்போமா?

நாராயணா, வெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டும் என்பார்கள், நீங்களோ வெள்ளம் மூடிய பின் கட்டலாம் என்கிறீர்கள்!!!!! ... ம்ம்ம் சில வேளை நவீன தொழில் நுட்பத்தை பாவித்து கட்டுகிறீர்களோ தெரியாது????? ... அது சரி எங்கிருந்து அணையை கட்டப் போகிறீர்கள்?????

Edited by Nellaiyan

நானும் இங்கு 80களின் கடைசியில் வந்ததுகளில் இருந்து பலஸ்தீனியர்களுக்கோ அல்லது அமெரிக்காவுக்கொ அல்லது இந்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள்/ஊர்வலங்கள் தப்பவிடுவதில்லை! என் சில நண்பர்கள் எனக்கு முன் வந்தவர்கள், அவர்கள் ஆரம்பத்தில் லிபியா, ஈரான் சார்பு போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்களாம்!! ஆனால் இந்த லிபியா, ஈரான், பலஸ்தீனம் எல்லாம் எமக்கு அதுக்குள்ளை வைத்து விட்டுட்டாங்கல்!!!

எமக்கு இன்று எல்லாரும் எதிரானவர்கள்! ஏதாவது ஒரு நாட்டு அரசிடமிருந்தாவது எமக்கு ஆதரவான குரல்கள்?????

தொடர்ச்சியாக இந்தியாவை பகைத்து என்னத்தை சாதிக்கப் போகிறோம்??????

இந்த வர்த்தக சந்தையை மீறி எம்மை எவருமே திரும்பிப் பார்க்கார்!!!

இதுவரை நாம் செய்த அரசியலின் அறுவடைகளை நாம் இன்னும் அனுபவிக்கிறோம்! எம் அரசியல்களை மாற்றுவோம்! எம்மால் பிறருக்கு(ஏனைய நாடுகளுக்கு) இடையூறு வரமாட்டாதென்ற நம்பிக்கையை ஊட்டுவோம்! நாம் இதுவரை இந்திய நாட்டில் கூட்டு வைத்திருந்தது, இந்திய பிரிவினைவாத சக்திகளுடந்தான்!! அதனால் ஏதாவது பலன் ஏற்பட்டதா???? .. எம் தமிழக கூட்டுகளின் ஓசைகள் செல்லாக்காசாகி விட்டன!!! ... இதுவரை செய்த அரசியல் மே18இனோடு முடியட்டும்! இல்லையேல் ... எம்மினத்தை அழிக்க, நாமே சிங்களத்துக்கு உத்வேகத்துடன் செயற்படுத்த உதவிக் கொண்டிருப்போம்!!!

  • தொடங்கியவர்

[ஃஉஒடெ நமெ='ணெல்லையன்' டடெ='11 ஆஉகுச்ட் 2010 - 12:30 PM' டிமெச்டம்ப்='1281526221' பொச்ட்='603818']

நாராயணா, வெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டும் என்பார்கள், நீங்களோ வெள்ளம் மூடிய பின் கட்டலாம் என்கிறீர்கள்!!!!! ... ம்ம்ம் சில வேளை நவீன தொழில் நுட்பத்தை பாவித்து கட்டுகிறீர்களோ தெரியாது????? ... அது சரி எங்கிருந்கெது அணையை கட்டப் போகிறீர்கள்?????

[/ஃஉஒடெ]

அணையை எங்குகிருந்தும் கட்டலாம்.வெள்ளம் வந்து விட்டது என்று அதற்குள்ளே கிடப்பதை விட அணைகளைக் கட்டுவது சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டிலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் அரசியல் அதிகாரமும் வர்த்தக ஆதிக்கமும் ஒரு சிலருடைய கைகளிலேயே போய்க் கொண்டிருக்கின்றது. குடும்ப ஆதிக்கங்களே மேலோங்கிச் செல்கின்றன. தொழில் வளர்ச்சியும் தேசிய உற்பத்தியும் எவ்வளவுதான் கூடினாலும் அதனால் எவ்வளவுதான் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமூகப் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டாலும், இந்தக் குடும்ப ஆதிக்கம் பெரிய ஆபத்தை மெதுமெதுவாகக் கொண்டுவந்துவிடும். இதையுணர்ந்ததால்தான் இந்தியாவின் பின்தங்கிய கிராமப்புற மக்களிடையே புரட்சிகர விழிப்புணர்வு தோன்றி நக்சலல்பாரி இயக்கம் போன்ற தீவிரவாதக் குழுக்கள் வளர்ச்சியடைந்து வருகின்றன.

குடும்ப ஆதிக்க முறைமை வர்த்தகத்திலும் சரி, அரசியலிலும் சரி நிலைநிறுத்தப்பட வேண்டுமாயின் பணம் மட்டுமல்லாது பாதுகாப்பும் அவசியமானது என்ற நிலை உருவாகும்போதுதான் இத்தகைய ஆதிக்க அபாயத்திலிருந்து இந்தியா இலங்கை போன்ற நாடுகள் மீட்சியடைய முடியும்.

ஈழத்தமிழர்கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெற்று மீட்சியடைய வேண்டுமாயின் வர்த்தக நலன்களை நோக்காகக் கொண்ட இந்திய முதலாளிகளும் அவர்களை அண்டிப் பிழைக்கும் அரசியல் வாதிகளும் இலங்கை போன்ற சிறுபான்மையினரைத் துன்புறுத்தும் நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளைச் செய்து தாம் மட்டுமே நன்மையடைய முயற்சிப்பதை நிறுத்த வேண்டும் அல்லது அப்போக்கு ஒழித்துக் கட்டப்படவேண்டும்.

மூக்கறுந்தவனுக்குச் சாங்கமென்ன? சரியென்ன? என்பார்கள். ஏற நனைந்தவனுக்குக் கூதலுமில்லை குளிருமில்லை. ஈழத்தமிழர்களாகிய எங்களது நிலையும் அத்தகையதுதான். இந்திய ஆளும் வர்க்கம் எமது நலன்களில் அக்கறை கொள்ளப் போவதில்லை. ஆதலால் பாதிக்கப்பட்டவர்கள் அணிதிரண்டு அரசியல் பொருளாதார வல்லாதிக்முடைய மிகச்சிறுபான்மையினரான குழுவினரின் செயற்பாடுகளை ஏதோவொரு வகையில் ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியேயில்லை.

இந்தியாவிலுள்ள தீவிர இடதுசாரிச் சிந்தனையாளர்களின் நட்பைப் பெற்று தெற்காசியப் பிராந்தியங்களில் புரட்சிகர மனப்பான்மையை வளர்த்தெடுக்க முழு ஒத்துழைப்பையும் அளிப்பதன்மூலம் குடும்ப ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளியிடும்போது தானாகவே அரசாங்கங்கள் துயரப்படும் தேசிய இனங்களின் பிரச்சனைகளை அனுதாபத்துடன் அணுகும். இந்தியா போன்ற நாடுகளின் கரிசனையும் எமக்காக உருவாகும். அதுவரை ஆளும்தரப்பும் அண்டிப் பிழைக்கும் முதலாளி வர்க்கமும் எமது இன நலன்களை ஒருபோதும் மதிக்கப் போவதில்லை.

இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தெற்காசியப் பிராந்தியத்தில் செயலாற்றும் புரட்சிகர சக்திகளுடன் தொடர்புகளைப் பேணி எமக்கு அதரவு ஏற்படக்கூடிய விதத்தில் ஆசியப் பிராந்தியத்தில் சூழ்நிலைகளை உருவாக்க வேண்டிய கடமையும், அவசியமும், அதற்கேற்ற வசதி வாய்ப்புகளும் உள்ளன. மிகச் சாதுரியமான காய்நகர்த்தல்களால் இத்தகைய அரசியல் நடவடிக்கைகளில் மேற்கு நாடுகளிலிருந்து செயற்பட முடியும். எம்மாற் செய்யக் கூடியதும் அதுவே.

அடியோடு இனமேயில்லாது அழிந்து போவதா? அல்லது கம் ஓ ஹோ சிக்காஹோ என்ற வாறாகச் செயற்பட்டு எமக்குச் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவதா என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும்.

மீண்டும் ஒரு ஈழவிடுதலைப் போரை ஆயுத முனையில் தொடங்குவதைக் காட்டிலும் எமக்கு முழு எதிரிகளாயிருக்கும் தெற்காசியப் பிராந்திய முதலாளித்துவ சக்திகளை அடக்கியொடுக்குவதில் துணைபோவதும் அதன் பெறுபேறாக நீண்ட காலத்திலாயினும் எமது அரசியலுரிமைகளைப் பெற முயற்சிப்பதும் இலகுவானவையே.

சமுதாய மாற்றமில்லாமல் இனிவரும் காலங்களில் எதையும் வென்றெடுக்க முடியாது. ஆதலால் புரட்சிகர சக்திகளுடன் கைகோர்த்துச் செயலாற்றும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது இன்றைய காலகட்டத்தில் மிகச் சரியானதும் அவசியமானதுமாகும்

  • தொடங்கியவர்

இந்தியாவின் பகையாளி சீனவுடன் சிறிலங்கா எத்தினை ஒப்பந்தங்களைப் போட்டாலும் இந்தியா சீனாவைக் காட்டி சிறிலங்காவிற்குத் தொடர்ந்து உதவி வருகிறது.ஆனால் தமிழர்கள் மட்டும் இந்தியாவைப் பகைக்கக் கூடாதாம்.இந்தியாவின் எதிரிகளுடன் கூட்டுச் சேரும் போது தான் இந்தியா உதவும் என்றால் நாம் ஏன் அதனைச் செய்ய முடியாது? எமக்கு இருந்த வாய்ப்புக்கள் அத்தனையையும் தவற விட்டு இந்திய சார்பு அதுகும் இந்திய அதிகார மையங்கள் சார்ந்து அரசியல் செய்ததாலாயே இன்று எமக்கு எவரும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் தூதரகத்தின் முன்பான ஆர்ப்பாட்டத்தில் ஈழத் தமிழ் அமைப்பு

பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசின் படுகொலைகளையும் ஆக்கிரமிப்பையும் கண்டித்து 15.01.2110 அன்று(நேற்று) இந்தியத் தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Representing Indian Workers Association (GB)

Progressive Nepalese Society UK

Britain-South Asia Solidarity Forum

ஆகிய அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்பான புதிய திசைகளும் கலந்துகொண்து. ஆர்ப்பாட்ட முடிவில் பல அமைப்புக்கள் உரை நிகழ்த்தின. புதிய திசைகளின் உரையில் இலங்கையில் நிகழ்த்தப்படும் இன அழிப்பிற்கும், இனச் சுத்திகரிப்பிற்கும் இந்திய அரசு பின்னணியில் செயற்படுவது சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிராகப் புதிய திசைகள் 21.0810 அன்று புதிய திசைகள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் அழைப்புவிடுக்கப்பட்டது.

படங்களைப் பார்வையிட

http://inioru.com/?p=16172

தெற்காசியாவின் அமைதிக்கு பங்கம் விளைவித்து வரும் இந்தியப் படுபயங்கரவாதிகளை எதிர்த்து தெற்காசியாவின் அமைதிக்காக உழைப்பவர்கள் வெற்றி பெறவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.