Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.வி.சன்.சீ கப்பலில் 490 அகதிகள், கடற்படையினர் கப்பலிற்குள் பிரவேசித்தனர்

Featured Replies

இலங்கை அகதிகள் 490 பேருடன் கனடாவை அடைந்துள்ள 'எச். வி. சன் சீ ' கப்பலுக்குள் அந்நாட்டுக் கரையோர காவல் படையினர் பிரவேசித்துள்ளதாகத் அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கனேடிய கடற்படைக் கப்பலான எச்.எம்.சி.எஸ். வின்னிபெக், எம்.வி. சன் ஸீ கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தியதாகவும் இறுதியில் கப்பலில் அகதிகள் இருப்பதாக சன் ஸீ கப்பல் பிரகடணப்படுத்தியதாகவும் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு விவகார அமைச்சர் விக் டோவ்ஸ் வியாழனன்று அறிவித்தார்.

கனடாவின் பொருளாதார வலயத்துக்குள் சென்றுள்ள இந்தக்கப்பல் இன்று பிரிட்டிஷ் கொலம்பியாவை சென்றடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கப்பலில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவென விக்டோரியாவில் வைத்தியசாலை ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கப்பலில் வருபவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டாம் என இலங்கையின் உயர்ஸ்தானிகர் கனேடிய அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Eelanatham

அதேவேளை கப்பலில் வருபவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டாம் என இலங்கையின் உயர்ஸ்தானிகர் கனேடிய அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாத சிங்கள அரசின் பயங்கரவாத தூதுவர் கனடாவில் இருக்கும் போது, அப்பாவித் தமிழரை கனடாவிற்குள் அனுமதிக்க வேண்டாம் என்பது வேடிக்கையாகவுள்ளது.

கனடிய அதிகாரிகள் ஏமாந்து போவார்களா? நா. க. த. அ. உறுப்பினர்கள் என்ன செய்யப் போகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

3392092.jpg

A naval ship travels past the dock where several hundred Tamil refugees are expected to land at Canadian Forces Base Esquimalt in Colwood, British Columbia August 12, 2010. Canadian authorities prepared on Thursday to board a cargo ship, off the west coast, that may be carrying as many as 500 people thought to be Tamil migrants who have fled Sri Lanka in a bid to enter Canada as refugees.

MP Keith Martin says outraged Victorians have been flooding his office with angry phone calls for days as hundreds of Tamil refugees head for Vancouver Island.

“We’ve just had to put [the phone] on voicemail because my staff was on the phone all day long,” said Martin, whose constituency includes CFB Esquimault, where the refugees are expected to be brought.

“They’re angry because they don’t want the Tamil people to be let into Canada and they don’t want them drawing from our social services because they’re already under a lot of pressure.”

He said the callers are accusing the refugees, which Ottawa confirmed number close to 500, of jumping the immigration queue.

“Some just want them to be turned away at sea, which we can’t do for a multitude of reasons,” he said. “Legally you could do that [before the boat reached Canadian waters], but that would be signing their death warrant.”

Many are also concerned that members of the Tamil Tigers, banned from Canada because the group is considered a terrorist group, could be on the boat.

Martin said Canada should determine which of the refugees are legitimate, a process he concedes can take years. The Liberal MP said he supports the Conservative government’s plan to speed up the process.

He also proposed Canada ask the United Nations to set up processing centres in Sri Lanka to determine the eligibility of refugees before they leave Sri Lanka.

Two representatives from a Toronto-based National Council of Canadian Tamils are headed to Victoria to ensure the refugees know their rights, said spokesman Krisna Saravanamuttu.

In response to fears that terrorists are on the boat, he said Canada has a right to protect its national security but urged the country to treat the refugees with compassion.

“Canada has already accepted tens of thousands of Tamil immigrants, and why is this situation any different?” said Saravanamuttu, who lives in Toronto’s Tamil community of 300,000, the largest disapora outside of Sri Lanka.

He said after the claimants are processed in Vancouver, “it’s reasonable to expect many of them will come to Toronto.”

Toronto lawyer Lorne Waldman, who represented 30 of the 76 Tamil refugees who arrived by boat in B.C. last fall, said many of his clients work in restaurants, factories and the service industry.

The claimants are eligible for health care and financial assistance while they settle and apply for work permits, according to Immigration Canada’s website.

The website refutes a widely circulated e-mail stating that the claimants receive more per month than a Canadian pensioner.

Waldman said refugee claimants are eligible for welfare while they look for work.

Martin said the claimants don’t receive as much as a pensioner’s $1,100 or $1,200 a month and they don’t receive the payments for long.

Meanwhile, Victoria General Hospital was preparing for the arrival of the Tamils by reopening the hospital’s old emergency ward and reopening a closed wing for any that required inpatient care, said spokeswoman Shannon Marshall.

She said the Tamils would be kept separate from other patients and staff would be provided with precautions against any infectious diseases they may have.

http://www.theprovince.com/life/Victoria+residents+angry+arrival+Tamil+refugees/3392087/story.html#ixzz0wUd4s7JS

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

சன் சீ கப்பல் இன்று காலை ஒன்பது முப்பதிற்கு பிறிட்டிஷ் கொலம்பியாவின் கரையைச் சென்றடையவுள்ளது.

[8/13/2010 ] [cmr news bulletin ]

தமிழர்களை ஏற்றிய சன் சீ என்ற கப்பல் கனேடிய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பிறிட்டிஷ் கொலம்பியாவின் கரையை நோக்கிச் செல்வதாக அறிவிக்கப்பட்டது.

ரொறன்றோ நேரப்படி இன்று காலை ஒன்பது முப்பதளவில் அந்தக் கப்பல் கரையை அடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ரொறன்றோ நேரப்படி நேற்றிரவு பத்து மணிக்குச் சற்று முன்னர் ஆர்சீஎம்பியினரும், கடற்படையினரும், சன் சீ கப்பலில் ஏறினார்கள்;. கனேடிய அதிகாரிகளின் வழிகாட்டலில் கப்பல் தற்போது விக்ரோறியாவை நோக்கிக் கொண்டு செல்லப்படுகிறது.

விக்ரோறியா துறைமுகத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் அமைந்துள்ள எஸ்குவிமோல்ட் (Esquimalt) படைத் தளத்திற்கு கப்பல் கொண்டு செல்லப்படும்.

அங்கு கப்பலில் உள்ள தமிழர்கள் பரிசோதனை செய்யப்படுவார்கள். கப்பலில் 490 தமிழர்கள் உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் கனடாவில் அகதிக் கோரிக்கையை முன்வைப்பதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டது.

கப்பல் கரையை அடைந்தவுடன், அதில் உள்ள விடுதலைப் புலிகளையும், கடத்தலுடன் தொடர்புபட்டவர்களையும் தனியே பிரித்தெடுத்துத் தடுத்து வைப்பதற்கு அதிகாரிகள் முற்படுவார்களென அறிவிக்கப்படுகிறது.

எஸ்குவிமோல்ட்(Esquimalt) துறைமுகத்தின் மேலான வான்பரப்பில், விமானங்கள் பறப்பதற்கு அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். குறைந்தது இரண்டாயிரம் அடிக்கு மேலாக விமானங்கள் பறக்கவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த எழுபத்திரெண்டு மணி நேரத்திற்கு அந்தக் கட்டுப்பாடு நடைமுறையில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எம்.வி.சன்.சியில் வந்திருக்கும் ஈழத் தமிழரில் கணிசமான தொகையினர் பெண்கள், சிறுவர்கள்!

எம்.வி.சன்.சியில் வந்திருக்கும் ஈழத் தமிழரில் கணிசமான தொகையினர் பெண்கள், சிறுவர்கள்!

வெள்ளி, 13 ஆகஸ்ட் 2010 04:39 . .

எம்.வி.சன்.சி கப்பலில் புறப்பட்டு வந்த ஈழத் தமிழர்களில் கணிசமான தொகையில் பெண்களும், சிறுவர்களும் இருக்கின்றார்கள்.

ஆயினும் பெண்கள் எத்தனை பேர்... சிறுவர்கள் எத்தனை பேர் வந்திருக்கின்றனர் என்பது ஊடகங்களுக்கு இன்னமும் தெரிய வரவில்லை.

தாய்மாரையும், சிறுவர்களையும் ஒன்றாக அடைத்து வைக்க கனேடிய அதிகாரிகள் உத்தேசித்துள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் கணவரிடம் இருந்து மனைவியரும், தகப்பன்மாரிடம் இருந்து பிள்ளைகளும் பிரிக்கப்பட்டு இரகசியமான இடம் ஒன்றில் அடைக்கப்பட உள்ளனர்.

ஆனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எவரும் பிரித்து வைக்கப்படக் கூடாது என்று அகதிகள் நலன் பேணும் சர்வதேச அமைப்புக்கள் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டன.

அத்துடன் பெண்கள்,சிறுவர்கள் ஆகியோர் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்ப்டவே கூடாது என்றும் இந்த அமைப்புக்கள் வலியுறுத்துகின்றன.

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=8255:2010-08-13-04-45-08&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  • கருத்துக்கள உறவுகள்

4ம் இணைப்பு ‐ எம்.வி.சண் சீ ‐ கப்பல் தனது பயணத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது

13 August 10 01:36 am (BST)

நாற்பது நாட்கள் பசுபிக் கடலில் தொடர்ந்த கடற் பயணத்தையடுத்து எம்.வி.சண் சீ என்ற இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை தாங்கிய கப்பல் தனது பயணத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இன்று காலை அதனை கனேடிய கடற்படைக்கப்பல்கள் சுற்றி வளைத்துள்ளன.

ஏம்.வி.சண் சீ கப்பலின் மாலுமியைத் தொடர்பு கொண்டதில் சிறுவர்கள் பெண்கள் வயதானவர்கள் உட்பட 490 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் அதில் பயணம் செய்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

கப்பலில் உள்ளவர்கள் உடல் நலத்துடன் உள்ளதாகத் தெரிவித்த அவர் ஆனால் அவர்கள் களைப்பாக உள்ளார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனினும் தாய்லாந்தில் இருந்து புறப்பட்டு 40 நாட்கள் பிரயாணத்தின் பின்னர் கனேடிய கடற்பரப்பை வந்தடைந்ததை இட்டு அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பாதாகவும் அவர் தெரிவித்தார்.

கப்பலில் இருந்த எவரும் இறக்கவில்லை என்றும் கடுமையான நோய்த்தாக்குதலுக்கு எவரும் ஆளாகவில்லை என்றும் சாதாரண கடற்காய்ச்சலினாலும் போஷாக்கற்ற உணவினாலுமே அவர்கள் இன்னல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை கப்பலில் கடற்படை அதிகாரிகள் ஏறியதாக எதுவித தகவலும் தெரியவரவில்லை.

இதேவேளை கனேடிய கடற்படைக் கப்பலான எச்.எம்.சி.எஸ். வின்னிபெக், எம்.வி. சண் சீ கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தியதாகவும் கப்பலில் புகலிடக் கோரிக்கையாளர்கள் இருப்பதாக சண் சீ கப்பல் தெரிவித்ததாகவும் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு விவகார அமைச்சர் விக் டோவ்ஸ் அறிவித்துள்ளார்.

ஆட்கடத்தல்காரர்கள், பயங்கரவாதிகள் உட்பட புகலிட அந்தஸ்து கோரும் 490 பேரைக் கொண்ட கப்பல் எமது நீர்ப்பரப்பை அடைந்துள்ளது. இது குறித்து கனேடிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளிகளையும், பயங்கரவாதிகளையும் சர்வதேச கடற்பரப்புக்குள் வைத்து முற்றுகை இடுகின்றமையை விட அவர்களை கனேடிய கடல் பரப்பில் வைத்து மடக்குகின்றமையே மிகவும் சிறந்த உபாயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கடல் பரப்பில் வைத்து இவர்களை மடக்கிப் பிடிக்கின்றபோது சர்வதேச சட்டங்கள், சர்வதேச கடப்பாடுகள் போன்றவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும். அப்படிச் செய்திருந்தால் ஏராளமான சட்டப் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும். எனவேதான் கனேடிய கடலில் இடைமறித்துப் பிடித்தோம் என்றும் அவர் கூறி உள்ளார்.

இதேவேளை கப்பலில் பிரயாணம் செய்துள்ள தாய்மாரையும், சிறுவர்களையும் ஒன்றாக அடைத்து வைக்க கனேடிய அதிகாரிகள் உத்தேசித்துள்ளதாகவும், இத்திட்டத்தின் கீழ் கணவரிடம் இருந்து மனைவியரும், தகப்பன்மாரிடம் இருந்து பிள்ளைகளும் பிரிக்கப்பட்டு இரகசியமான இடம் ஒன்றில் அடைக்கப்பட உள்ளதாகவும் இன்னொரு தகவல் கூறுகிறது.

ஆனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எவரும் பிரித்து வைக்கப்படக் கூடாது என்று அகதிகள் நலன் பேணும் சர்வதேச அமைப்புக்கள் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டன. அத்துடன் பெண்கள்,சிறுவர்கள் ஆகியோர் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்ப்டவே கூடாது என்றும் இந்த அமைப்புக்கள் வலியுறுத்துகின்றன.

இதேவேளை சண் சீ கப்பல் அகதிகளுக்கு சட்ட மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக கனேடிய தமிழர் பேரவை ஒழுங்குகளை செய்துள்ளது. இதற்காக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் வன்கூவருக்கு சென்றுள்ளனர்.

இந்தநிலையில் ஆர்வமுள்ள உறவுகள் கனடியத் தமிழர் பேரவையுடன் 416 240 0078 உடன் தொடர்பு கொண்டு மனித நேயப் பணிகளில் ஈடுபடலாம் எனவும் தமிழர் பேரவை அறிவித்துள்ளது

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=28370&cat=1

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.