Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சொல் அல்ல செயலே இப்போதைய தேவை...

Featured Replies

இது செஞ்சோலை படுகொலை நடந்த நான்காவது ஆண்டின் நினைவு வாரமாகும். இந்த நினைவு வாரத்தில்;,பல்வேறு நாடுகளில் நாங்கள் நினைவு நிகழ்வுகளை நடத்துகிறோம். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் நினைவுக் குறிப்புகள் நினைவு மீட்டல்களை பதிவேற்றுகிறோம்.

ஆனால் இதுவரை புலத்திலுள்ள நாங்கள் அதாவது தனிநபர்களாகவோ அல்லது அமைப்புக்களோ கடந்த வருடம் நடந்து முடிந்த கொடிய யுத்தத்தின் பின்னர் இந்த செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச் சோலை சிறார்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள்? அவர்களை யார் பராமரிக்கிறார்கள் என்பது பற்றி ஆராய்ந்து அவர்களுக்கு எப்படி உதவுவது என்பது தொடர்பாக உரிய கவனம் செலுத்தவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.

இதன் விளைவுதான் ஜெயந்தி அல்லது சாளினி என்ற செஞ்சோலை மாணவி யுத்தத்தின் பின்னரான சூழ்நிலையால் ஏற்பட்ட உளவியல் தாக்கத்தின் காரணமாக நோய்வாய்ப்பட்டு கடந்த வாரம் உயிரிழந்தாகும், இது நமது மனதை மிகவும் வேதனைப்படுத்திய சம்பவம என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

சிறு வயதில் பெற்றோரை இழந்து அன்பு பாசம் அரவணைப்பு பாதுகாப்பு என்கிற குடும்ப அமைப்பின் அடிப்படைக் கட்டுமானங்கள் தகர்ந்து போன நிலையில் அநாதரவாக ஏதிலிகளாக அந்தரித்து நிற்பதைப் போன்ற பெரும்துயரம் வேறெதுவுமில்லை.

இந்தக் குழந்தைகளுடைய வலியை வேதனையை உணர்ந்து அவர்களது துயரைத்துடைத்து ஆற்றுகைப்படுத்தி அவர்களை ஆற்றல் மிக்கவர்களாக வளர்த்தெடுப்தற்காக தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய அமைப்புகள்தான் செஞ்சோலையும் காந்தரூபன் அறிவுச்சோலையுமாகும்.

இந்த இரண்டு இல்லங்களிலும் வளர்ந்த குழந்தைகள் விடுதலைப்புலிகள் அமைப்பை தங்களது குடும்பமாகவும் அதன் போராளிகளை தங்களது சகோதர சகோதரிகளாகவும் பார்த்து எதிர்காலம் பற்றிய நம்பிக்கையேடு வளர்ந்து வந்ததையும் தாங்கள் தேசியத் தலைவரின் அன்புக்கு பாத்திரமானவர்கள் என்ற பெருமிதத்தோடு அவர்கள் துள்ளி விளையாடித் திரிந்ததையும் அந்த இல்லங்களுக்கு சென்றவர்கள் அவதானித்திருக்கலாம்.

முள்ளிவாய்க்கால் பேரவலமும் விடுதலைப்புலிகளுக்கு இராணுவ ரீதியாக ஏற்பட்ட தோல்வியும் இந்தச் சிறார்கள் எவ்வாறு பாதித்திருக்கும். வரலாறு இரண்டாவது தடவையாக அவர்களை நிராதரவற்ற நிலைக்கு தள்ளியபோது அவர்கள் எவ்வாறு மனமுடைந்து போயிருப்பார்கள் என்கிற நிலையை ஒரு கணம் மனதில் நிறுத்திப் பார்த்தால் முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் தேசம் தேசியம் தேசபக்தி பற்றி புலத்தில் இருந்து அதிகம் பேசிய நாங்கள் எவ்வளவு சுயநலவாதிகளாக இருந்திருக்கிறோம் என்பது புரிய வரும்.

குடும்ப அமைப்புக்குள் கட்டுண்டு வாழ்ந்தவர்களே முள்ளிவாய்க்கால் சுனாமியின் பின் பௌத்த சிங்கள பேரினவாத அடக்குமுறைக்கு முகங்கொடுக்க முடியாமல் அல்லாடுகின்றபோது, தங்களது இருப்பை தக்க வைக்க முடியாமல் திகைத்து நிற்கின்றபோது இந்த சிறார்கள் என்ன செய்வார்கள்?

சுயநலவாதிகள் மிகுந்த இந்த சமூகத்தில் அவர்களை உண்மையான அக்கறையோடு யார் பராமரிப்பார்கள்? அவர்களுடைய சிறந்த எதிர்கால வாழ்வுக்கு யார் வழி காண்பிப்பார்கள்?

இது பற்றி இந்த குழந்தைகளுக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி இந்த நிமிடம் வரையில் நாங்கள் ஆக்கபூர்வமாக ஏதாவது சிந்தித்திருக்கிறோமா?

யார் துரோகி யார் தேசபக்கதன் என்று ஆராய்வதற்காக நாங்கள் செலவழித்த நேரத்தில் ஒரு சிறு நிமிடத்துளிகளையாவது இந்தக் குழந்தைகளை எப்படிக்காப்பாற்றுவது இவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்பது பற்றி சிந்தித்திருக்கிறோமா?

தமிழீழத்தில் பிறக்கும் எந்தக்குழந்தையும் அநாதரவாக நிற்கக்கூடாது என்கிற தேசியத் தலைவரின் உயரிய சிந்தனையை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை குழந்தைகளை மட்டுமல்ல கடந்த வருடம் நடந்து முடிந்த கொடிய யுத்தத்தில் அநாதரவாக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான குழந்தைகளையும் நிர்க்கதியாக சிங்களத்தின் கொடும் பிடிக்குள் தவிக்கவிட்டுவிட்டு நாங்கள் இங்கே புலத்தில் இருந்து கொண்டு நாங்கள்தான் உண்மையான தேசபக்தர்கள் என்று பேசுவதும் எழுதுவதும் அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும்.

தாயைக் கொல்லும் பஞ்சத்தை தடுக்க முயற்சியெடார்

வாயை திறந்து சும்மா கிளியே.........

தாய்நிலம் ஆசிரியர் தலையங்கம் 13.08.2010

  • கருத்துக்கள உறவுகள்

யார் துரோகி யார் தேசபக்கதன் என்று ஆராய்வதற்காக நாங்கள் செலவழித்த நேரத்தில் ஒரு சிறு நிமிடத்துளிகளையாவது இந்தக் குழந்தைகளை எப்படிக்காப்பாற்றுவது இவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்பது பற்றி சிந்தித்திருக்கிறோமா?

இந்தக் குழந்தைகளை எப்படிக்காப்பாற்றுவது இவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்பது பற்றி சிந்தித்திருக்கிறோமா?

இந்தக் குழந்தைகளை எப்படிக்காப்பாற்றுவது இவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்பது பற்றி சிந்தித்திருக்கிறோமா?

இந்தக் குழந்தைகளை எப்படிக்காப்பாற்றுவது இவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்பது பற்றி சிந்தித்திருக்கிறோமா?

  • தொடங்கியவர்

இந்தக் குழந்தைகளை எப்படிக்காப்பாற்றுவது இவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்பது பற்றி சிந்தித்திருக்கிறோமா?

இந்தக் குழந்தைகளை எப்படிக்காப்பாற்றுவது இவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்பது பற்றி சிந்தித்திருக்கிறோமா?

இந்தக் குழந்தைகளை எப்படிக்காப்பாற்றுவது இவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்பது பற்றி சிந்தித்திருக்கிறோமா?

செஞ்சோலைப் பிள்ளைகளுடன் சிவசக்தி ஆனந்தன் சந்திப்பு‐

கிளிநொச்சி செஞ்சோலையிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வவுனியாவில் தங்கியிருக்கும் பிள்ளைகளை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்துகொண்டதாக அவரது ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11.8.2010அன்று காலை வவுனியா, இறம்பைக்குளம், ஹொரவப்பத்தான வீதியில் அமைந்துள்ள டொன்பொஸ்கோ சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் இந்தச் சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்குப் பொறுப்பாக உள்ள டொன்பொஸ்கோ நிறுவனத்தின் அருட்சகோதரிகள் மேரி மற்றும் மெட்டில்டா ஆகியோருடன் உரையாடி சிறுவர்களின் மனநிலை மற்றும் அவர்களின் கல்வி சம்பந்தமாகக் கேட்டறிந்துகொண்டார்.

அப்போது கருத்து தெரிவித்த அவர் இந்தச் சிறுவர் பராமரிப்பு நிலயத்தை நடத்திவரும் அருட்சகோதரிகள் சென்னையிலுள்ள பாத்திமா தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சிறுவர்கள் மற்றும் இளைஞர் பராமரிப்பில் தேர்ந்தவர்கள் என்று வவுனியா கோட்டமுதல்வர் எமிலியான்ஸ்பிள்ளை தெரிவித்தார். இவர்கள் சிறுமிகளின் மனக்குறைகளைக் கேட்டறிந்து அவர்களை உளவியல்ரீதியாக ஆற்றுப்படுத்துவதுடன் தங்களது குடும்ப உறுப்பினர்களாகவே நடத்துகின்றனர் என்பது அவர்களுடன் உரையாடியதிலிருந்து தெரிகின்றது.

இங்கு இப்பொழுது 115 பெண்பிள்ளைகள் தங்கியுள்ளனர். அவ்வப்பொழுது நீதிமன்ற ஆணைகளைப் பெற்றுக்கொண்டு உறவினர்கள் வந்து சில பிள்ளைகளை அழைத்துச் செல்கின்றனர். இதுதவிர திருமணவயதை எட்டிய சில பிள்ளைகளும் இருக்கின்றனர். அத்தகைய பெண்களுக்குக் காதலர்கள் இருந்தால் அருட்சகோதரிகள் அவர்களது பெற்றோருடன் கலந்துரையாடி அவர்களது சம்மதத்தைப்பெற்று திருமணம் செய்தும் வைத்துள்ளனர். இவர்களது கல்விக்கென்று இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. விசேட வகுப்புகளை நடாத்தி அவர்களது கல்விமேம்பாட்டிற்கு இந்தக் கல்விநிறுவனம் ஆற்றிவரும் பணி பாராட்டத்தக்கது. இம்மாணவிகள் கணிதப் பாடத்தில் சற்று பலவீனமாக உள்ளனர். இந்தப்பாடத்தில் சிறப்பான கவனம் தேவைப்படுகின்றது.

இவர்கள் கலைத்துறையில் நல்ல ஆர்வமுள்ளவர்ளாக இருக்கின்றனர். சங்கீதம் மற்றும் நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு காட்டுவதாக அருட்சகோதரிகள் தெரிவித்தனர்.

இப்பராமரிப்பு நிலயத்தில் முன்பள்ளி தொடங்கி கல்விதராதர உயர்தர வகுப்பில் படிக்கும் மாணவிகள்வரை இருக்கின்றனர். ஒவ்வொரு பிள்ளையும் மற்ற பிள்ளையுடன் அன்புடன் நெருங்கிப்பழகி ஒருகுடும்பமாக வாழ்வதைக் காணமுடிந்தது. செஞ்சோலையில் இடம்பெற்ற குண்டுவீச்சுத்தாக்குதல் இப்பிள்ளைகளின் மனத்தில் நீங்காத வடுவாக இன்னமும் இருப்பதை அறியமுடிந்தது. சுமார் 35பிள்ளைகள் எத்தகைய உறவும் ஆதரவும் இன்றி இருக்கின்றனர் என்றும் இங்குள்ளவர்களின் கல்வி தொடங்கி அவர்கள் தமது வாழ்க்கையைத் தாமே அமைத்துக்கொள்வதுவரை அனைத்தையும் செய்வதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அருட்சகோதரிகள் தெரிவித்தனர். அவர்களின் இந்த வார்த்தைகள் ஆறுதலளிப்பதாக இருந்தது.

கடந்த மாதம் கோயில்குளம் அகிலாண்டேஸ்வரி முதியோர் மற்றும் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள சிறுவர்களையும் சந்தித்ததாகவும் அங்குள்ள சிறுவர்களும் நன்கு பராமரிக்கப்படுவதாகவும் இங்குள்ள பிள்ளைகளுக்கு கோவில்குளம் இந்து மகாவித்தியாலயம் சிறப்பான கல்வியை வழங்கிவருவதுடன் அவர்களது தேவைகளையும் நன்கு பூர்த்தி செய்து வருகின்றது என்றும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதவாது:

புலம்பெயர் உறவுகளும் நல்லெண்ணம் கொண்டவர்களும் இத்தகைய நிறுவனங்களுக்குத் தமது பங்களிப்பைச் செய்து இச்சிறுவர்களின் எதிர்காலத்தைப் பிரகாசம் அடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் வெளிநாடுகளில் வாழ்கின்ற எமது உறவுகள் வீண்செலவுகளைக் குறைத்துக்கொண்டு இத்தகைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்குத் தமது பங்களிப்பைச் செய்ய வேண்டியது தலையாய கடமை என்றும் தெரிவித்தார்.

கோயில்குளம் அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லம் (அருளகம்) மற்றும் சிவன் முதியோர் இல்லப்பராமரிப்பாளர் ஆறுமுகம் நவரத்தினராஜாவுடன் 0094 776567827 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் வவுனியா டொன்பொஸ்கோ சிறுவர் பராமரிப்பு இல்லத்துடன் 0094 24 3248555 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்புகொண்டு உங்களது பங்களிப்பைச் செலுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

மூலம்- குளோபல் தமிழ் நியூஸ்

This entry was posted on August 14, 2010 at 10:3

post-2907-005767400 1281803427_thumb.jpg

post-2907-000766000 1281803495_thumb.jpg

post-2907-077839900 1281803509_thumb.jpg

post-2907-036103700 1281803617_thumb.jpg

Edited by navam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://tamilcnn.com/ 14.08.2006 அன்று இலங்கை அரசின் கிபீர் விமானங்கள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 53 பாடசாலைமாணவர்கள் கொல்லப்பட்டார்கள். அந்தப் படுகொலையின் 4ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.Sri Lankan government is the only government is killed the highest numbers of students as part of ethnic cleansing attack in the world!

Sencholai attack "pre-meditated, deliberate and vicious"- TNA

[TamilNet, Monday, 14 August 2006, 11:23 GMT]

The parliamentary group of the Tamil National Alliance (TNA) condemned Sri Lankan government’s attack on Sencholai childrens' home as "not merely atrocious and inhuman - it clearly has a genocidal intent...The heavy aerial bombardment on the premises clearly indicates that the attack was premeditated, deliberate and vicious," and appealed to the International Community "to take the earliest possible action to stop the Sri Lankan State from proceeding with its genocidal program," in an urgent press release issued in Colombo Monday.

Edited by Queen

  • கருத்துக்கள உறவுகள்

இது செஞ்சோலை படுகொலை நடந்த நான்காவது ஆண்டின் நினைவு வாரமாகும். இந்த நினைவு வாரத்தில்;,பல்வேறு நாடுகளில் நாங்கள் நினைவு நிகழ்வுகளை நடத்துகிறோம். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் நினைவுக் குறிப்புகள் நினைவு மீட்டல்களை பதிவேற்றுகிறோம்.

ஆனால் இதுவரை புலத்திலுள்ள நாங்கள் அதாவது தனிநபர்களாகவோ அல்லது அமைப்புக்களோ கடந்த வருடம் நடந்து முடிந்த கொடிய யுத்தத்தின் பின்னர் இந்த செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச் சோலை சிறார்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள்? அவர்களை யார் பராமரிக்கிறார்கள் என்பது பற்றி ஆராய்ந்து அவர்களுக்கு எப்படி உதவுவது என்பது தொடர்பாக உரிய கவனம் செலுத்தவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.

இதன் விளைவுதான் ஜெயந்தி அல்லது சாளினி என்ற செஞ்சோலை மாணவி யுத்தத்தின் பின்னரான சூழ்நிலையால் ஏற்பட்ட உளவியல் தாக்கத்தின் காரணமாக நோய்வாய்ப்பட்டு கடந்த வாரம் உயிரிழந்தாகும், இது நமது மனதை மிகவும் வேதனைப்படுத்திய சம்பவம என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

சுயநலவாதிகள் மிகுந்த இந்த சமூகத்தில் அவர்களை உண்மையான அக்கறையோடு யார் பராமரிப்பார்கள்? அவர்களுடைய சிறந்த எதிர்கால வாழ்வுக்கு யார் வழி காண்பிப்பார்கள்?

இது பற்றி இந்த குழந்தைகளுக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி இந்த நிமிடம் வரையில் நாங்கள் ஆக்கபூர்வமாக ஏதாவது சிந்தித்திருக்கிறோமா?

யார் துரோகி யார் தேசபக்கதன் என்று ஆராய்வதற்காக நாங்கள் செலவழித்த நேரத்தில் ஒரு சிறு நிமிடத்துளிகளையாவது இந்தக் குழந்தைகளை எப்படிக்காப்பாற்றுவது இவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்பது பற்றி சிந்தித்திருக்கிறோமா?

தாயைக் கொல்லும் பஞ்சத்தை தடுக்க முயற்சியெடார்

வாயை திறந்து சும்மா கிளியே.........

தாய்நிலம் ஆசிரியர் தலையங்கம் 13.08.2010

நவம் அவர்களுக்கு,

தங்கள் இணைப்புக்கு நன்றிகள். நீங்கள் அக்கறையுடன் இணைத்துள்ள செஞ்சோலை காந்தரூபன் அறிவுச்சோலை குழந்தைகளின் நலனில் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரும் பலர் சிந்தித்துள்ளார்கள். இந்தப்பிள்ளைகளை பொறுப்பேற்றுள்ள இல்லங்கள் பிள்ளைகளை இயன்றவரை சரிவரவே கவனிக்கிறார்கள். ஆனால் வன்னியில் பிள்ளைகள் வாழ்ந்த சூழலுக்கும் தற்போதைய சூலுக்கும் வித்தியாசம் அதிகமே. ஒரு தளிரைப்பிடுங்கி வேறொரு இடத்தில் நடுகின்ற போது அந்தப்பயிரின் வீரியம் வளர்ச்சியில் ஏற்படும் தாமதம் அசெளகரியம் போன்றதே இப்பிள்ளைகளின் நிலமையும்.

கடந்தவருடம் ஒக்ரோபர்மாதம் கோவில்குளம் அருளகம் சிறுவர் இல்லத்தில் உள்ள செஞ்சோலை சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் நேசக்கரம் ஒரு சிறு அணிலாக உதவியது. அதன் பின்னர் பலரை அந்தச் சிறுவர்களுக்கு நேரடியாக உதவ விரும்பியோரையும் உதவ தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதே யாழ் இணையத்தில் செஞ்சோலைப் பிள்ளைகளுக்கான உதவிபற்றி நான் எழுதிய போது வந்த பல கேள்விகள் விமர்சனங்கள் செய்தவர்கள் இப்போதும் இக்களத்தில் உலாவருகிறார்கள். ஆனால் ஒரு துரும்மையும் செய்ய இதுவரை முன்வராதுதான் நிற்கிறார்கள்.

செஞ்சோலை காந்தரூபன் இல்லங்களின் பிள்ளைகள் மட்டுமல்ல ஆயிரக்கணக்கில் அனாதரவான பிள்ளைகளை உள்ள வளங்களுடன் கிறிஸ்தவ ஆச்சிரமங்கள் சைவ ஆச்சிரமங்கள் பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள். தனியே இரு இல்லங்களில் இருந்த பிள்ளைகள் ஏனைய இல்லங்களைவிட வசதிகளோடு வாழ்ந்தார்கள். ஆனால் இன்று அந்தப் பிள்ளைகள் பழைய வசதிகளுடன் வாழமுடியாதிருக்கிறது என்பதனை எழுத்தில் காட்டுவதோடு கடமை முடிந்திடாமல் அவர்களுக்கான உதவிகள் செய்வதில் நீங்களும் இணையலாமல்லவா ?

செஞ்சோலை சிறுமிகள் மற்றும் அருளகம் சிறுமிகளுக்கு நேசக்கரம் வழங்கிய உதவிகள் இந்த இணைப்பில் அழுத்தி தகவலை பார்க்கலாம்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் காந்தரூபன் அறிவுச்சோலைப் பிள்ளைகள் வளர்க்கப்படுகிறார்கள். இவர்களுக்கு நீங்கள் உதவவிரும்பின் அல்லது இந்தச் சிறுவர்களை உங்கள் போன்றவர்கள் பொறுப்பேற்று அவா்களை பழைய வாழ்வுக்கு ஏன் வழியமைக்கக்கூடாது ?

காந்தரூபன் அறிவுச்சோலையில் வளர்ந்த சிறுவர்கள் இன்று இளைஞர்களாக இலங்கையின் பல பாகங்களில் பல்கலைக்கழகங்களில் படிக்கிறார்கள். இவர்களது படிப்புக்கு உதவிகள் தேவைப்படுகிறது. மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலையில் இருந்த பல இளைஞர்கள் கால் கைகளை இழந்துள்ளார்கள் (இவர்கள் போராளிகளாகி களங்களில் நின்றவர்கள்) இந்த இளைஞர்களுக்கும் உங்கள் போன்ற அக்கறை மிக்கவர்களால் உதவ முடியும். இந்த இளைஞர்கள் அல்லது செஞ்சோலைப்பெண் பிள்ளைகளுக்கு உதவுவீர்களாயின் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள் விபரங்கள் தந்துதவுவோம்.

ஒருவிடயம் இந்தப் பிள்ளைகளின் பெயர்களை அல்லது இவர்களின் இழப்புகளை நீங்கள் அரசியல் செய்யமாட்டீர்கள் என்ற உத்தரவாதத்துடன் வந்தீர்களானால் தொடர்புகளைத் தரலாம். சில அறிவுச்சோலை மாணவர்களுக்கு நேசக்கரம் தன்னால் ஆன கல்வி உதவியினை வழங்குகிறது. ஆயினும் பலமாணவர்கள் உதவிகளுக்காக காத்திருக்கிறார்கள். இன்னும் பலர் களங்களில் நின்று கை கால்களை கொடுத்துவிட்டு எந்த ஆதரவுமின்றி நிற்கிறார்கள். இந்தப் பிள்ளைகளுக்கு நவம் நீங்கள் எத்தகைய வழியில் உதவப்போகிறீர்கள்....? அறியத்தாருங்கள்.

இப்படியான தலைப்புகளையோ/செய்திகளையோ கள நிர்வாகம் இனி அனுமதிக்ககூடாது?????????!!!!!!!!!! தயவு செய்து உடனடியாக அகற்றுங்கள்!

இப்படியான செய்துகள், இங்குலாவும் ... தேசியத்தூண்கள், நம்பிக்கைதான் வாழ்வுக்கள் ... போன்ற பிராணிகளுக்கு அருவருப்பான செய்திகளாக தெரியும்!!!! ... எங்கே ... இருக்கிறார்/இல்லை, நம்பிக்கைதான் வாழ்வுக்கு ... ஐந்து பக்கங்களை தாண்டும் கருத்துக்கள், இங்கு ஓரிரண்டோடு பின்னுக்கு போகிறது!!!!!!??????????

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்

சிந்தை இரங்காரடி கிளியே சிந்தை இரங்காரடி கிளியே

செம்மை மறந்தாரடி கிளியே ..

செப்பித் திரிவாரடி கிளியே

செய்வதறியாரடி கிளியே ..

வாய்ச் சொல்லில் வீரரடி ........

செஞ்சோலை, காந்தரூபன் சிறுவர் இல்ல சிறுவர்களை நான் நேரடியாக பலதடவைகள் சந்தித்துள்ளேன். வவுனியா நீதி மன்ற உத்தரவின்படி அவர்கள் நான்கு இடங்களில் உள்ளனர். இவர்கள் தடுப்பு முகாம்களில் இருந்து விடுபட அகில இலங்கை இந்து மாமன்றம் பெரும் முயற்சிகளை எடுத்தது. சில சிங்கள பௌத்த அமைப்புக்களும் சிறுவர்களை தமது பொறுப்பில் எடுக்க கடும் முயற்சி எடுத்தது.

ஈற்றில் நீதி மன்றம் தலையிட்டு, சிரந்தி ராஜபக்ச பொறுப்பில் ஒருசில குழந்தைகளையும், மிகுதியானவர்களை கோயில்குளம் அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லம், டொன்பொஸ்கோ சிறுவர் பராமரிப்பு இல்லம், அகில இலங்கை இந்து மாமன்றம் அனுசரணையுடன் திருக்கேதீஸ்வரம் ஆலய பரிபாலன சபையினர் ஆரம்பித்த சிறுவர் பராமரிப்பு இல்லம் ஆகியவற்றிடம் பொறுப்புக்களை கையளித்தது.

இவற்றுக்காக வெளிநாடுகளில் நிதி தனி நபர்களால் திரட்டப்படுவதில்லை என தற்போதைய பொறுப்பாளர்கள் கூறுகின்றனர். உதவி செய்ய விரும்புபவர்கள் கோயில்குளம் அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லம், டொன்பொஸ்கோ சிறுவர் பராமரிப்பு இல்லம், திருக்கேதீஸ்வரம் ஆலய பரிபாலன சபை சார்ந்தோரிடம் நேரடியாக உதவிகளை வழங்கலாம்.

சிறுவர்களை பொறுப்பெடுக்க ஓடிவந்த பௌத்த, ஏனைய மத அமைப்புக்கள் முதியவர்களை பொறுப்பெடுக்க முன்வரவில்லை. முதியவர்களை கோயில்குளம் சிவன் கோவில் நிர்வாகத்தினரும், அகில இலங்கை இந்து மாமன்றம் அனுசரணையுடன் மன்னார் திருக்கேதீஸ்வரம் நிர்வாகத்தினரும், மன்னார் இந்து ஆலயங்களின் ஒன்றிய நிர்வாகத்தினரும் மட்டுமே பொறுப்பெடுக்க முன்வந்ததாக வவுனியா கச்சேரி அதிகாரிகள் கூறினர்.

000202BF.gif
000202BF.gif

000202BF.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.