Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சின்ன சந்தேகம்

Featured Replies

திருமணத்தின் போது சீதனம் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா ........

தேவை என்றால் தேவை, தேவை இல்லாட்டி தேவையில்லை, உங்களுக்கு தேவையா? தேவையில்லையா?

தேவைப்பட்டால் நீங்கள் விற்கப்படுகிறீர்கள், தேவையில்லாட்டி நீங்கள் மதிக்கப்படுகிறீர்கள், பணம் இல்லாதவன் பிணம், மதிப்பை வைத்து ஒரு மள்ளாக்கொட்டையும் வாங்க முடியாது. இப்பசொல்லுங்க உங்களுக்கு தேவையா? தேவையில்லையா? :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது தனிப்பட்ட கருத்தை விடுங்க... சீதனம் வாங்காம கல்யாணம் பண்ணினால்.. சில நேரம் உங்கள்ல ஏதும் புரோபிளம் என்றும் நினைக்க வாய்ப்பு உள்ளது...

ஒரு தமிழன் எதுக்கும் பார்த்து செய்யுங்க.... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது தனிப்பட்ட கருத்தை விடுங்க... சீதனம் வாங்காம கல்யாணம் பண்ணினால்.. சில நேரம் உங்கள்ல ஏதும் புரோபிளம் என்றும் நினைக்க வாய்ப்பு உள்ளது...

ஒரு தமிழன் எதுக்கும் பார்த்து செய்யுங்க.... :lol:

விஸ்ணு இது தானே வேணாங்கிறது. இதைச்சொல்லிச்சொல்லி பலர் தப்பிக்கினம். இனிமேல் உந்தக்கதையை விடுங்க.. ஆமா.. :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணத்தின் போது சீதனம் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா ........

இயலாமை உள்ளவர்கள் தான் சீதனம் கேப்பினம். அவரால் பொருளீட்ட முடியாமல் தானே வாங்கிறார் அப்ப இயலாமை தானே..?? தன்னோடு வாழப்போகும் துணையை வாழ்வதற்கு பணம் கட்டி வாழவைப்பது கீழ்த்தரம். தனது வாழ்க்கைக்கு அடுத்தவையிட்ட கேட்பது போன்றது சீதனம். (பிச்சை எடுப்பதற்கு சமம்). :wink: :P

சீதனம் என்பது திருருமணத்தின்போது அவசியமற்ற ஒன்று என்பது எனது கருத்து. :?:

சீதனத்தை எதற்கு வாங்குகிறார்கள்???:?:

இன்றைய நிலையில் சற்று சிந்தித்துப் பாருங்கள், சீதனம் எதற்காக வாங்குகிறார்கள்.:?:

அநேகம் பேர் சீதனத்திலா தம் வாழ்க்கையைக் கொண்டு செல்கிறார்கள் இல்லையே. :idea:

சீதனத்தை வாங்கி பெற்றோரிடம் கொடுத்து விட்டு அப்பெண்ணை இங்க கூட்டிக்கொண்டுவந்து ஒரு சீதனம் வாங்காமல் திருமணம் செய்த இணைகளைவிட மிகவும் துன்பத்தில் வாழ வாழ்கின்றனர்.:idea:

ஏன் சீதனம் வாங்குபவர்கள் என்ன ஊனமுற்றவர்களா? :evil:

ஊனமுற்றிருந்தால் அப்படி வாங்குவதில் ஓரளவு சமரசப்படலாம்.

தன் வாழ்வு மகிழ்வாய் இருக்க வேண்டும் என்பதற்காக அடுத்தவரை வருத்திப் பெறுவது பொறுக்கமுடியாதது. :evil: :evil: :evil:

:arrow: அதனைப் பகற்கொள்ளை என்று சொல்வதைத் தவிர வேறில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீதனம் வாங்கியவனுக்கு ஒருபக்கஇடி!

சீதனம் வாங்காமல் விட்டதால எல்லாப்பக்கத்தாலும் இடி!

சீதனத்தை கொடுத்துவிட்டு சுளையாகத் தந்துதானே தாலிகட்டினாயென சாகுமட்டும் பெண்வீட்டார் இடி மட்டுந்தான்.

சீதனம் வாங்காததால்

அவளின் அழகிலமயங்கி ஒன்றுமே வாங்கவில்லையென தந்தையின் இடி!

என் பிள்ளைக்கு சொக்குப்பொடி போட்டுவிட்டார்கள் என தாயின் இடி!

எங்களுக்கெல்லாம் ஒன்றுமே வாங்காமல் ஏமாத்திவிட்டானென சகோதரிகள் இடி!

இந்தப்பெடிப்பிள்ளைக்கு ஏதொகுறையாமெல்லே என அயலவர் இடி!

எங்கபிள்ளையின்ர அழகில மயங்கித்தானே வந்தவர் எங்கடபிள்ளைக்கு இவரல்லோ தரவேணும் என பெண்வீட்டார் இடி!

இப்படி எத்தனையோ இருக்கு அவரவர் விருப்பம்!

நான் சீதனம் வாங்கப்போவதேயில்லை!

குறிப்பு:- எனக்கு இருமகன்கள் வயசு 1,2

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஸ்ணு இது தானே வேணாங்கிறது. இதைச்சொல்லிச்சொல்லி பலர் தப்பிக்கினம். இனிமேல் உந்தக்கதையை விடுங்க.. ஆமா.. :wink: :P

தமிழினியக்கா.... உண்மையை சொன்னேன். நடப்பதை சொன்னேன்.

கீழே ரொம்ப ஆழகாக இடிவிழுறதை பற்றி சொல்லியிருக்கார் பார்திங்களா??

உண்மையாக நானும் எல்லா பக்கத்தாலையும் இடிவாங்கத்தான் போறேன். இதுவரை ஏதும் பிளான் இல்லை. வரப்போவதை சொன்னன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினியக்கா.... உண்மையை சொன்னேன். நடப்பதை சொன்னேன்.

கீழே ரொம்ப ஆழகாக இடிவிழுறதை பற்றி சொல்லியிருக்கார் பார்திங்களா??

உண்மையாக நானும் எல்லா பக்கத்தாலையும் இடிவாங்கத்தான் போறேன். இதுவரை ஏதும் பிளான் இல்லை. வரப்போவதை சொன்னன்.

ம் விஸ்ணு. இதே தலைப்பு ஏற்கனவே விவாதிக்கப்பட்டது.. இதே கருத்தை அப்பவும் வைத்தார்கள். சீதனம் கொடுத்து மணம் முடிப்பதில்லை என்ற முடிவுக்கு பெண்கள் வந்தாச்சு.. சீதனம் வாங்குவதில்லை என்றதை எப்ப ஆண்கள் முடிவாக்கப்போகிறார்கள். இடிகள் விழும் என்று சொல்லிவிட்டிருக்க முடியுமோ?? வாழ்க்கையில இதை விட எத்தனை இடிகள் சாமாளிக்கவில்லையா?? ஆரம்பத்தில் இதுபற்றி 2 நாள் அலட்டிக்கொள்வார்கள் அதன் பின் தங்கள் தங்கள் வேலையைப்பார்த்துக்கொண்டு போவார்கள். இடிகள் பற்றி கவலைப்படுவது கூட ஒரு சாட்டு என்று தான் நான் சொல்வன்.

அம்மாவின் அப்பாவின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியது பிள்ளையின் கடமை.. அதே மாதிரி தங்கையை மணக்கப்போகிறவரும் சீதனத்தை விட்டால் அந்த பிரச்சனையும் இல்லாமல் போய்விடும். தங்கள் தேவைகளை தீர்க்க பெண் வீட்டாரை வதைப்பதற்கு நியாயங்களை அடுக்கிக்கிட்டு போவார்கள். சிந்தையில நல்லாய் உறைச்சா எல்லாம் ஓகே ஆகிடும்.

அனுமந்தன் போட்ட இடிக்கணக்கும் அவர் கடைசியில பிள்ளைககுள்கு சீதனம் வாங்கிறதில்லை என்றாரே கணக்கு தெரிஞ்சும் சந்திக்க முயல்றார்ல அது தான் தேவை இடி என்றிட்டு இருக்க முடியுமோ தொடரமுடியுமோ?? :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

நான் சீதனம் வாங்கப்போவதேயில்லை!

குறிப்பு:- எனக்கு இருமகன்கள் வயசு 1,2

ஓய்ய் எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கிறியள்.. ஏற்கனவே 2 மகன் அதுவும் 1,2 வயசில,, இதுக்கப்புறமும் சீதனத்தோட ஒரு பொண்ணு வேனுமோ?? :evil: :P :P :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீதனம் வாங்கியவனுக்கு ஒருபக்கஇடி!

சீதனம் வாங்காமல் விட்டதால எல்லாப்பக்கத்தாலும் இடி!

சீதனத்தை கொடுத்துவிட்டு சுளையாகத் தந்துதானே தாலிகட்டினாயென சாகுமட்டும் பெண்வீட்டார் இடி மட்டுந்தான்.

சீதனம் வாங்காததால்

அவளின் அழகிலமயங்கி ஒன்றுமே வாங்கவில்லையென தந்தையின் இடி!

என் பிள்ளைக்கு சொக்குப்பொடி போட்டுவிட்டார்கள் என தாயின் இடி!

எங்களுக்கெல்லாம் ஒன்றுமே வாங்காமல் ஏமாத்திவிட்டானென சகோதரிகள் இடி!

இந்தப்பெடிப்பிள்ளைக்கு ஏதொகுறையாமெல்லே என அயலவர் இடி!

எங்கபிள்ளையின்ர அழகில மயங்கித்தானே வந்தவர் எங்கடபிள்ளைக்கு இவரல்லோ தரவேணும் என பெண்வீட்டார் இடி!

இப்படி எத்தனையோ இருக்கு அவரவர் விருப்பம்!

நான் சீதனம் வாங்கப்போவதேயில்லை!

குறிப்பு:- எனக்கு இருமகன்கள் வயசு 1,2

அனுமாந்தன் அண்ணா சொன்னது சரிதான் :P

சீதனம் வாங்கிற ஆண்கள் வேண்டுங்கள் :evil:

எனக்கு சீதனம் வேண்டாம் என்று சொல்கின்ற ஆண்கள் எல்லாரும் வேண்டாமல் விடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கீதா பார்த்து கதையுங்க.. சிலவேளை உங்க அப்பா யாழை பார்த்தாரெண்டால் உங்களுக்கு நடக்கும் பூசை.. :wink: :P :P

சீதனம் வாங்கியவனுக்கு ஒருபக்கஇடி!

சீதனம் வாங்காமல் விட்டதால எல்லாப்பக்கத்தாலும் இடி!

சீதனத்தை கொடுத்துவிட்டு சுளையாகத் தந்துதானே தாலிகட்டினாயென சாகுமட்டும் பெண்வீட்டார் இடி மட்டுந்தான்.

சீதனம் வாங்காததால்

அவளின் அழகிலமயங்கி ஒன்றுமே வாங்கவில்லையென தந்தையின் இடி!

என் பிள்ளைக்கு சொக்குப்பொடி போட்டுவிட்டார்கள் என தாயின் இடி!

எங்களுக்கெல்லாம் ஒன்றுமே வாங்காமல் ஏமாத்திவிட்டானென சகோதரிகள் இடி!

இந்தப்பெடிப்பிள்ளைக்கு ஏதொகுறையாமெல்லே என அயலவர் இடி!

எங்கபிள்ளையின்ர அழகில மயங்கித்தானே வந்தவர் எங்கடபிள்ளைக்கு இவரல்லோ தரவேணும் என பெண்வீட்டார் இடி!

இப்படி எத்தனையோ இருக்கு அவரவர் விருப்பம்!

நான் சீதனம் வாங்கப்போவதேயில்லை!

குறிப்பு:- எனக்கு இருமகன்கள் வயசு 1,2

இதுதான் இன்னும் உண்மையும் கூட...பல இடங்களில்..!

இருந்தாலும்... சீதனம் வாங்காட்டி அதென்னவோ... தியாகம் போலவும்..வாங்கினா...அது குறை அல்லது நிறை போலவும்..அப்படிக் காட்டிகிறதிலும்... அதை முதன்மைப்படுத்தாமல் பெரிதுபடுத்தாமல் எல்லாரும் சத்தப்படாம விட்டொழிச்சிட்டா அதுதான் அழகு சமூகத்துக்கு...! இது என்னடா என்றால்...ஒருவர் வாங்க ஒரு கதை..வாங்கினா ஒரு கதை...வாங்காட்டி இன்னொரு கதை...இப்படியே சீதனம் ஏதோ ஒரு வகையில் இன்னும் பிரபல்யப்படுத்தப்படுகுது...! :wink: :idea: :roll: :shock:

ம் விஸ்ணு. இதே தலைப்பு ஏற்கனவே விவாதிக்கப்பட்டது.. இதே கருத்தை அப்பவும் வைத்தார்கள். சீதனம் கொடுத்து மணம் முடிப்பதில்லை என்ற முடிவுக்கு பெண்கள் வந்தாச்சு.. சீதனம் வாங்குவதில்லை என்றதை எப்ப ஆண்கள் முடிவாக்கப்போகிறார்கள். இடிகள் விழும் என்று சொல்லிவிட்டிருக்க முடியுமோ?? வாழ்க்கையில இதை விட எத்தனை இடிகள் சாமாளிக்கவில்லையா?? ஆரம்பத்தில் இதுபற்றி 2 நாள் அலட்டிக்கொள்வார்கள் அதன் பின் தங்கள் தங்கள் வேலையைப்பார்த்துக்கொண்டு போவார்கள். இடிகள் பற்றி கவலைப்படுவது கூட ஒரு சாட்டு என்று தான் நான் சொல்வன்.

அம்மாவின் அப்பாவின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியது பிள்ளையின் கடமை.. அதே மாதிரி தங்கையை மணக்கப்போகிறவரும் சீதனத்தை விட்டால் அந்த பிரச்சனையும் இல்லாமல் போய்விடும். தங்கள் தேவைகளை தீர்க்க பெண் வீட்டாரை வதைப்பதற்கு நியாயங்களை அடுக்கிக்கிட்டு போவார்கள். சிந்தையில நல்லாய் உறைச்சா எல்லாம் ஓகே ஆகிடும்.

அனுமந்தன் போட்ட இடிக்கணக்கும் அவர் கடைசியில பிள்ளைககுள்கு சீதனம் வாங்கிறதில்லை என்றாரே கணக்கு தெரிஞ்சும் சந்திக்க முயல்றார்ல அது தான் தேவை இடி என்றிட்டு இருக்க முடியுமோ தொடரமுடியுமோ?? :wink: :P

வந்திட்டினமா...????! பத்திரிகைகளில இன்னும் போடினமே...ரொக்கம்.. வழங்கப்படும் என்று... வெட்கமில்லாம...!

நீங்க இப்படிச் சொல்லுறேள்....! :roll: :shock: :wink:

சில பேர் அதையே 2 நாளைக்கல்ல..ஆயுள் முழுக்க காவுவினம்..! இல்லை என்றீங்களா...??! உதாரணத்துக்கு பல வீடுகளில் அப்பாமாரை அம்மாமார் எப்பவும் கேட்பாங்க...நான் என்ன சும்மா வந்தனானா...எங்கம்மா எல்லாம் தந்துதான் விட்டவங்க என்று...! :shock: :P :wink:

திருமணத்தின் போது சீதனம் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா ........

அவசியமே இல்லை ராசா ஆணால் இப்ப சுவிசில புதுமையா ஒண்டு நடக்கிது மாப்பிள்ளையே வேண்டாம் எண்டாலும் பெண் வீட்டுக்காறர் பெருமைக்கு குடுக்கினமே

(நம்மட குடும்பத்திலும் நடந்தது நம்மட ************ தன்ர மகளுக்கு கடவுளே அந்தக்கூத்தை ஏனப்பா கேக்க வேணும்)

சரி இப்ப சொல்லுங்கோ வாங்கிறது அவசியமா அவசியமில்லையா யோவ் சாட்றீ சும்மா இருக்கிற உமக்கு நக்மா வீட்டுக்காறர் நக்மாவையும் தந்து லண்டனில 2 வீடு சுவிசில 1000000000000 ( :oops: 5 சைபர் கூட அடிபட்டுட்டுது குறை நினைக்காதேங்கோ ) பிராங் வேண்டாம் எண்டே சொல்லுவீர் இல்லை இவ்வளவத்தையும் 10 :evil: தலைக்கு குடுத்தா வேண்டாம் எண்டே சொல்லுவார்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

யோவ் குடுக்கிதும் (அதாவது குடுத்து கெடுக்கிறதும் )பெண் வீட்டுக்காறர் வாங்கிது சரியா பிளையா எண்டு சாறியை இழுத்து கொழுவிக்கொண்டு களத்தில சண்டைக்கு வாறதும் பெண்கள் தான்

பிகு:lol:சின்னா ஓரு றாப்பன் கூட சீதனம் வாங்கவில்லை அந்த தைரியத்தில தான் இவ்வளவும் எழுதினனான் 8) 8) 8) 8) )

*********** தணிக்கை 10 :evil: சார்பாக சின்னா

குடுத்தால்தானே வாங்க முடியும்.. ஆக, குடுக்குறவங்க குடுக்காம விட்டால் சீதனம் சமாதியாகும்தானே?! :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்திட்டினமா...????! பத்திரிகைகளில இன்னும் போடினமே...ரொக்கம்.. வழங்கப்படும் என்று... வெட்கமில்லாம...!

நீங்க இப்படிச் சொல்லுறேள்....!

சில பேர் அதையே 2 நாளைக்கல்ல..ஆயுள் முழுக்க காவுவினம்..! இல்லை என்றீங்களா...??! உதாரணத்துக்கு பல வீடுகளில் அப்பாமாரை அம்மாமார் எப்பவும் கேட்பாங்க...நான் என்ன சும்மா வந்தனானா...எங்கம்மா எல்லாம் தந்துதான் விட்டவங்க என்று...!

அப்ப எங்கள எல்லாம் பெண்களாய் எடுக்கவே மாட்டியளா???

அது முந்திய வழமை வாங்கிறதாய் இருந்திச்சு தந்து தானே விட்டவை என்று சொல்லியிருப்பினம். ( ஏன் இந்தப்பதிலை சொல்றாங்க என்றது தான் முக்கியமே? என்ன கொண்டந்தனி என்று நீங்கள் கேட்டா அவை இதை விட வேறை என்ன பதிலைச்சொல்லமுடியும் ஆஆ) :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடுத்தால்தானே வாங்க முடியும்.. ஆக, குடுக்குறவங்க குடுக்காம விட்டால் சீதனம் சமாதியாகும்தானே?! :P

கேட்டால் தானே குடுக்கவேணும். கேக்காமல் விட்டிட்டா..?? :wink: :P

களத்தில இருக்கிற அண்ணாக்களே

அனுமந்தன் அண்ணா சொன்னா மாதிரி பல பக்க இடி விழும் எண்டு நினைச்சு சீதனம் வாங்காதீங்க வாங்கினா ஒவ்வொரு நாளும் இடி விழும் (மனைவியிடம்)

இப்படி ஊர் கதைக்கும் எண்டு சொல்லி சீதனம் வாங்குறவை கையாலாகாதவை

கல்யாணம் இருவரும் தானே செய்யினம் பிறகெதுக்கு சீதனம்

இப்ப பெரும்பாலான பெண்கள் வேலைக்குபோறதால இவையை வைச்சு காப்பாத்த தான் சீதனம் என்ட வாதம் சரி வராது பிறகு ஏன் உங்களை விலை பேசி விக்க நினைக்கிறீங்க

என்னை பொறுத்தவரை எங்கட வாழ்க்கையை எங்களுக்காகத்தான் வாழ வேண்டுமே தவிர மற்றவைக்காக இல்லை அதால நீங்க முடிவு செய்யுங்க உங்களுக்கு சீதனம் தேவையா எண்டு :wink:

அப்ப எங்கள எல்லாம் பெண்களாய் எடுக்கவே மாட்டியளா???

அது முந்திய வழமை வாங்கிறதாய் இருந்திச்சு தந்து தானே விட்டவை என்று சொல்லியிருப்பினம். ( ஏன் இந்தப்பதிலை சொல்றாங்க என்றது தான் முக்கியமே? என்ன கொண்டந்தனி என்று நீங்கள் கேட்டா அவை இதை விட வேறை என்ன பதிலைச்சொல்லமுடியும் ஆஆ) :wink: :P

நீங்கள் சொல்லுறது நியாயம் என்றாலும் கேட்காமலே சீதனம் கொண்டு வந்தன் என்று பெருமைக்கு சொல்லுற பெண்கள் இல்லையாங்க...??! :wink: :lol:

நீங்கள் பெண்களா இருந்தாலும்..விரல் விட்டு எண்ணலாம்.. சுயமா சிந்திச்சு முடிவெடுக்கிற பெண்களை...சுயமா செயற்பட்டாலும் இப்படியான விடயங்களில் பலர் பெற்றோர் விருப்பத்துக்கு முடிவெடுக்கிறவையாத்தானே இன்னும் இருக்கினம்...! கேட்டா..அம்மா அப்பாட விருப்பம்..அதுக்கு குறுக்க நிக்க நான் விரும்பல்லை என்றிடுவினம்...! அப்ப என்ன செய்யுறது..சோழியான் அண்ணா சொன்னது போலவும் உண்மை நிகழ்வுகளின் படியும் பார்த்தா கொடுக்கிறவை இருக்கும் மட்டும் வாங்கிறவை உருவாகிக்கிட்டுத்தான் இருப்பினம்..! ஒட்டுமொத்தமா கொடுக்கல்லை என்றா வாங்க எங்க போவினம்...??! கேட்காமல் விட்டாலும் வலிஞ்சு கொடுக்கிறவையையும் கட்டுப்படுத்த கொடுக்க விடக் கூடாது..அப்ப வாங்க ஆள் வரமாட்டான்..! :wink: :P

ம்ம் சின்னப்பு சொல்லுற மாதிரி.. இங்க சுவிஸ்ல ..மாப்பிள்ளை சீதனம் கேக்குறாரோ இல்லையோ..பெண்வீட்டார் நாங்கள் எங்கட மகளுக்கு கொடுக்கிறதை கொடுப்பம் என்று போட்டிக்கு குடுக்குறா ஆக்களும் இருக்கினம்...இங்க இப்படி குடுக்கிரதால இதே மாதிரி தாயகத்தில் உள்ளவர்களிடமும் போய் கேக்கினம் ...மூத்த மகனுக்கு இவ்வளவு கொடுத்தவர்கள் அதாம் இதாம் எண்டு புழுகி தள்ளி சீதனம் வாங்கினம்..அவையலும் மகளை கல்யாணம் கட்டி கொடுக்க வேணும் எண்டதற்க்காக கடன் பட்டு சீதனம் கொடுக்கினம்...

எங்களுக்கெல்லாம் ஒன்றுமே வாங்காமல் ஏமாத்திவிட்டானென சகோதரிகள் இடி!

சரி சீதனம் வாங்கி ஏன் சகோதிரிகளுக்கு கொடுக்க வேணும்.. :roll:

சரி எனக்கு ஒரு அண்ணா இருக்குறார் எண்டு வையுங்க ..அவரின் மனைவிக்கு சீதனம் அவயிண்ட அம்மா அப்பா ஆசைப்பட்டு கொடுக்கிறதை.. அதையேன் எங்களுக்கு தர வேணும்... நிச்சயமா அத நான் வாங்கமாட்டன் :lol:

சரி சீதனம் வாங்க விருப்பம் உள்ளவர்கள் சொல்லுங்க ..உங்க மகளுக்கு என்ன விருப்பமோ எல்லாத்தையும் குடுக்க சொல்லி நிச்சயம் குடுப்பினம் ... :wink: :lol:

கடந்த சில வருடங்களாக நானும் எனது நண்பர்கள் சிலரும் எந்தவொரு சீதனம் சம்பந்தப்பட்டு நடைபெறும் திருமணம் எதிலும் கலந்து கொள்வதில்லை, வாழ்த்துக்கள் அனுப்புவதில்லை. ஏன் வரவில்லை என்று வினவுபவர்களுக்கு எங்கள் காரணத்தை தெளிவாக சொல்லியும் வருகின்றோம். எங்கள் அணியில் மேலும் சிலரை சேர்த்தும் வருகின்றோம். சிலவேளைகளில் இது ஒருவகையான முரட்டுத்தனமான கொள்கையாக இருந்தபோதும் எம்மளவில் சில செயல்முறையில் அமைந்த ஆரோக்கியமான மாற்றங்கள் சிலவற்றை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தொடர்கின்றோம். எமது அணியில் சேர யாழ் கள நண்பர்கள், நண்பிகள் முன்வருவார்களா?????????

நிச்சயமா..! ஆனால் பொதுவாக திருமண நிகழ்வுகளை பகிஸ்கரிப்பது அல்லது கலந்து கொள்ள அக்கறை காட்டாதது எமது வழமை...! :idea:

  • கருத்துக்கள உறவுகள்

இயலாமை உள்ளவர்கள் தான் சீதனம் கேப்பினம். அவரால் பொருளீட்ட முடியாமல் தானே வாங்கிறார் அப்ப இயலாமை தானே..?? தன்னோடு வாழப்போகும் துணையை வாழ்வதற்கு பணம் கட்டி வாழவைப்பது கீழ்த்தரம். தனது வாழ்க்கைக்கு அடுத்தவையிட்ட கேட்பது போன்றது சீதனம். (பிச்சை எடுப்பதற்கு சமம்).

அக்கா ரெம்ப பாதிக்கப்பட்டிருக்கின்றா போல கிடக்குது:wink:

  • கருத்துக்கள உறவுகள்

சரி. சீதனம் வாங்குவதால் பாதிக்கப்பட்டிருப்பது உண்மையில் ஆண்கள் தான்;. இதை கஸ்டப்பட்டு உழைத்துக் கொடுக்கவேண்டிய தேவை அவனைத் தானே சேருகின்;றது. உண்மையில் நாம் தான் அதிகம் வருத்தப்படவேண்டும்;.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.