Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு இளம் பெண்களை தென்பகுதிக்கு அழைத்துச் செல்லும் முயற்ச்சி முறியடிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு இளம் பெண்களை தென்பகுதிக்கு அழைத்துச் செல்லும் முயற்ச்சி முறியடிப்பு!

திகதி:26.08.2010

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்களை தென்பகுதிக்கு அழைத்துச் செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தப் பட்டது. தென்னிலங்கையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை வழங்குவதாகக் கூறி ஆடைத் தொழிற்சாலை நிறுவனங்களைச் சேர்ந்த சிலரால் இப்பெண்கள் அழைத்துச் செல்லப்படவிருந்தனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. பா.அரியநேந்திரனின் ஏற்பாட்டில் அது தடுக்கப்பட்டது.

முன்னர் கிளிநொச்சியிலிருந்தும் ஆடைத் தொழிற்சாலையில் வேலைசெய்வதற்கென இளம் பெண்களை அழைத்துச் செல்லும் முயற்சி கூட்டமைப்பு எம்.பிக் கள் சி.சிறிதரன், ஈ.சரவணபவன் ஆகியோரின் தலையீட்டால் தடுத்துநிறுத்தப்பட்டது.

மட்டக்களப்புச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தவை வருமாறு;

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, மாங்கேணிஇ போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 35 இற்கும் மேற்பட்ட யுவதிகள் அண்மையில் மட்டக்களப்பு ரயில் நிலையத்துக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்டனர். தென்னிலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை நிறுவனங்களைச் சேர்ந்த சிலரால் இவர்கள் அழைத்துவரப்பட்டனர். இது குறித்து அன்று கொழும் பில் நின்ற எனக்கு உடனே தகவல் கிடைத்தது. நான் உடனே நடவடிக்கையில் இறங்கினேன்.

மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு எனது ஆதரவாளர்கள் சிலரைப் போகும் படியும் கூறினேன்.

உடனே அங்கு சென்ற எனது ஆதரவாளர்கள் யுவதிகள் ரயில் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டதற்குரிய காரணத்தை ஆடைத்தொழிற்சாலை நிறுவனத்தைச் சேர்ந்தோர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், தென்னிலங்கையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு வழங்குவதற்காக யுவதிகள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர் எனப் பதிலளித்தனர். யாரிடம் அனுமதி பெறப்பட்டது என்று அவர்கள் கூற மறுத்தனர். உடனே எனது ஆதரவாளர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பைக் காட்டினார்கள். இதனையடுத்து யுவதிகளை அழைத்துச்செல்லும் முயற்சியை அவர் கள் கைவிட்டார்கள்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் மட் டக்களப்பு படுவான்கரை பெரிய போர தீவுப்பற்று காளிகோயிலடிப் பகுதிக்குச் சென்ற தென்னிலங்கை ஆடைத்தொழிற் சாலை நிறுவனங்களைச் சேர்ந்த சிலர் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள் ளார்கள் என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அங்கு சென்ற அவர்கள் ஆலய நிர்வாக சபைத் தலைவர்,, கிராமத் தலைவர் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி யுள்ளார்கள்.

யுவதிகளுக்குத் தென்னிலங்கை ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புப் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக அவர் கள் கலந்துரையாடியுள்ளார்கள்.

இந்த வேலை வாய்ப்புக்கு இளைஞர்களை ஏன் ஈடுபடுத்த முயற்சிக்கவில்லை என அவர்களிடம் மக்கள் பிரதிநிதிகள் கேட்ட போது அதற்கு அவர்கள் ஆண்களை வேலைகளில் ஈடுபடுத்தமாட்டோம் என்று பதிலளித்துள்ளார்கள்.

இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் பிரதிநிதிகள் இதற்குக் கடும் எதிர்ப்பைக் காட்டியதையடுத்து அவர்கள் திரும்பிப் போய்விட்டார்கள்.

எனவே, வடக்குக் கிழக்கு மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும். எமது யுவதிகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தின் நம்பகத் தன்மை எதுவும் தெரியாமல் பெண் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவது மிகவும் ஆபத்தானது.

எமது வடக்குக் கிழக்குப் பகுதிகளில் யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் இந்தப் பகுதிகளில் ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவி இளைஞர் யுவதிகளுக்குத் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதையே நாம் விரும்புகிறோம் என்று அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார்.

pathivu

சிங்களவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வடிவில் ஏமாற்றுப் பேர்வழிகள்.

இவ்வளவு நாளும் புலிப்பயங்கரவாதி என்று சொல்லி விட்டு பாலியல் வல்லுறவு செய்து விட்டு கொன்றார்கள். இப்போது அப்படிச் செய்ய இயலாது தானே. அதனால் ஒரேயடியாக அவர்களை பாலியல் தொழிலாளியாக்கப்பார்க்கின்றார்கள். கேடு கெட்ட சிங்கள நாய்களுக்கு எப்போதும் தமிழர்களின் குருதியிலும் சதையிலும் தான் ஆசை.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள யுவதிகள் வேலையில்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இவர்கள் தமிழ் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறார்களாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.