Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கும் வெள்ளை வேன் அனுப்பப்படலாம்: சந்திரிகா அச்சம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் வெள்ளை வேன் அனுப்பப்படலாம்: சந்திரிகா அச்சம்

ign_4_151_403.jpg

இலங்கை அதிபர் ராஜபக்சவின் ஆட்சி குறித்து தாம் கருத்து தெரிவித்தால் தமக்கும் வெள்ளை வேன் அனுப்பப்படலாம் என முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க அச்சம் தெரிவித்துள்ளார்.

18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி மற்றும் முழுமையாக ஜனநாயக மீறல் ஆகும் என தெரிவித்துள்ள அவர், 2000 ஆம் ஆண்டு தாம் முன்வைத்த அரசியல் தீர்வில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றும் யோசனையும் அடங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என தெரிவித்த போதும் தற்போதைய வெளிநாட்டமைச்சர் ஜிஎல் பீரிஸ் இரண்டு வருடங்கள் வரை அதனை நீடிக்கலாம் எனக்கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதியின் பதவியினை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவீர்களா? என அவரிடம் கேட்கப்பட்டபோது, தாம் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டவள் அல்ல என பதிலளித்துள்ளார் சந்திரிகா.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டு வருட ஆட்சி தொடர்பாக சந்திரிகாவிடம் கேட்டபோது, அது தொடர்பாக தாம் பதிலளிக்க விரும்பவில்லை என்றும், பதிலளித்தால் தமக்கு வெள்ளை வேன் அனுப்பப்பட்டு விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

http://tamil.webdunia.com/newsworld/news/international/1009/05/1100905011_1.htm

  • கருத்துக்கள உறவுகள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டு வருட ஆட்சி தொடர்பாக சந்திரிகாவிடம் கேட்டபோது, அது தொடர்பாக தாம் பதிலளிக்க விரும்பவில்லை என்றும், பதிலளித்தால் தமக்கு வெள்ளை வேன் அனுப்பப்பட்டு விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்
245.gif:o
  • கருத்துக்கள உறவுகள்

இதனை குமார் பொன்னம்பலம் போன்றவர்களை கொல்லும் போது சிந்தித்து இருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

33902.jpgMaruti-Omni.jpg

அதென்ன வெள்ளை வேன்? ஆம்னி வேனா? ரோஜா படத்தில் வருவது போல கண்ணை கட்டி கடத்தி கொண்டு போவார்களா? தோழர் தமிழ்சிறி விளக்கவேண்டும்.... 0002014F.gif

  • கருத்துக்கள உறவுகள்

33902.jpgMaruti-Omni.jpg

அதென்ன வெள்ளை வேன்? ஆம்னி வேனா? ரோஜா படத்தில் வருவது போல கண்ணை கட்டி கடத்தி கொண்டு போவார்களா? தோழர் தமிழ்சிறி விளக்கவேண்டும்.... 0002014F.gif

புரட்சி வெள்ளை வானில் கடத்தப்பட்டால் 99% உயிருடன் திரும்பி வர சந்தர்ப்பம் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர்கள் தமிழ்சிறி... நுணாவிலான்.... தெளிவாக புரிந்தது...

TAC_9118.JPG

இங்கு மார்ச்சுவரி வேன் கருப்பு கலரில் இருக்கும் அங்கு இந்த கொலைகார கோஸ்டிகளின்... கைங்கரியத்தில் வெள்ளை நிறத்தில் உள்ளது என தெரிகிறது.... :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.