Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பி.பி.சி சிங்கள வானொலிச் சேவையின் செவ்வியை தவிர்த்த கே.பீ பின்னர் சிங்கள பத்திரிகை மற்றும் புலம்பெயர் ஆங்கில இணையம் ஆகியவற்றுக்கு செவ்வி வழங்கியமை குறித்து சர்ச்சை‐

Featured Replies

பி.பி.சி சிங்கள வானொலிச் சேவையின் செவ்வியை தவிர்த்த கே.பீ பின்னர் சிங்கள பத்திரிகை மற்றும் புலம்பெயர் ஆங்கில இணையம் ஆகியவற்றுக்கு செவ்வி வழங்கியமை குறித்து சர்ச்சை‐

11 September 10 03:11 am (BST)

பி.பி.சி சிங்கள வானொலிச் சேவை பல வாரங்களுக்கு முன்னர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடம் செவ்வியொன்றைப் பெறுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திய பின்னர் அந்த செவ்வியில் கேட்கப்படவிருந்த 23 கேள்விகள் அடங்கிய பட்டியலை பி.பி.சியின் கடிதத் தலைப்புடன் கே.பிக்கு கிடைக்கச் செய்திருந்தனர்.

பாதுகாப்புச் செயலாளரின் அனுமதியின்றி கே.பி நேர்காணல்களை வழங்க முடியாது என்பதை அறிந்துகொண்ட பி.பி.சி ஊடகம்இ அதன் கேள்விகளை பாதுகாப்புச் செயலாளருக்கும் அனுப்பி வைத்தது.

புலம்பெயர் சமூகத்தில் இருந்து ஒரு குழுவினர் இலங்கை சென்று கேபியை சந்தித்த பின்னர் ஒரு சில நாட்களிலேயே இந்த செவ்விக்காண கேள்விகள் அனுப்பி வைக்கப்பட்டதாக ஜீரீஎன்னிற்குத் தெரிய வருகிறது.

மிகவும் காத்திரமான பல கேள்விகள் அடங்கிய இந்த செவ்வி பற்றி பாதுகாப்புச் செயலரோ கே.பியோ கவனம் செலுத்தவில்லை என ஜீரீஎன்னிற்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்தக் கேள்விகள் குறித்து எவ்வித கவனமும் செலுத்தாத பாதுகாப்புச் செயலாளர் அதனைக் குப்பைக் குடையில் எறிந்திருக்கலாம் எனவும் பீபீசிஇ மற்றும் சிஎன்என் முதலான ஊடகங்களுக்கு செவ்விகள் வழங்க வேண்டாம் என உத்தரவிட்ட அவர் இலங்கையில் ஒரு சிங்கள பத்திரிகையையும் புலம்பெயர் சமூகத்தில் குறித்த இணையத்தையும் தெரிவுசெய்ததாகவும் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இலங்கை சென்று கேபியை சந்தித்த புலம்பெயர் சமூகப் பிரதிநிதிகள் பலரும் கடுமையான அதிர்ப்த்தியைக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேவேளைஇ அண்மையில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு கே.பி வழங்கிய செவ்வியில்இ பிரபாகரனைக் காப்பாற்றுவதற்குத் தேவையான பண உதவிகளை கெஸ்ரோ வழங்கவில்லையென கே.பி குற்றஞ்சுமத்தியிருந்தார். இது புனையப்பட்ட கதையென பாதுகாப்பு அமைச்சின் உட்தரப்புத் தகவல்கள் ஊடாக தெரியவந்துள்ளது. இவ்வாறு தெரிவிப்பதன் மூலம் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்த்தர்களிடையே கடுமையான உட்பூசல்களை ஏற்படுத்தி புலம்பெயர் செயற்பாட்டளர்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net

Edited by kalaivani

அதேவேளைஇ அண்மையில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு கே.பி வழங்கிய செவ்வியில்இ

பிரபாகரனைக் காப்பாற்றுவதற்குத் தேவையான பண உதவிகளை கெஸ்ரோ வழங்கவில்லையென கே.பி குற்றஞ்சுமத்தியிருந்தார். இது புனையப்பட்ட கதையென பாதுகாப்பு அமைச்சின் உட்தரப்புத் தகவல்கள் ஊடாக தெரியவந்துள்ளது.

இஞ்ச யாழ் களத்தில எல்லாம் தெரிந்த(தாக நினைத்துக் கொள்ளும்) சிலர்

கே பி சொல்லுறதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறொன்றும் இல்லை

எண்டமாதிரி சொல்லித்திரிஞ்சினம்

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச யாழ் களத்தில எல்லாம் தெரிந்த(தாக நினைத்துக் கொள்ளும்) சிலர்

கே பி சொல்லுறதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறொன்றும் இல்லை

எண்டமாதிரி சொல்லித்திரிஞ்சினம்

அவர்களுக்கு அந்தமாதியான உண்மைகளை தவிர வேறேதும் தெரியாது.

ஏதோ தெரிந்ததைதானே அவர்களாலும் எழுத முடியும்........ விடுங்கள் இங்காவது வந்து எழுதிவிட்டு போகட்டும்.

ஏதோ BBC நடுநிலையான ஊடகம் போல! அவர்களின் நடுநிலையை முள்ளி வாய்க்கால் படுகொலைகள் நடந்தபோது பார்த்தோமே?

  • கருத்துக்கள உறவுகள்

றோவின் ஆலோசனையுடன் நடாத்தப்படும் பிபிசி தமிழ்ச்சேவையாக இருந்தால் சிலவேளை கே.பி பதில் அளித்திருப்பார்.

சிங்கள சேவையில் அம்பாந்தோட்டையைச் சேர்ந்த பண்டா என்பவர் வேலை செய்கிறார். இதனால் முன்பு மகிந்தா பேட்டி அளிக்க மறுத்துவிட்டு தமிழ்ச்சேவையில் அன்பழகனுக்கு மகிந்தா பேட்டி அளித்திருந்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.