Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாய்மை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிறு கிராமத்துக்கு ஆசிரியப்பணி நிமித்தம் மாற்றலாகி வந்து ஒரு வாரம் இருக்கும். வசுமதி தன் கைக் குழந்தை சுதாகரனோடு தன் தாயார் வீடு நோக்கி பட்டணத்துக்கான பஸ் வண்டியில் ஏறினாள். அது ஒரு இரு மணி நேர பயணம் சற்று கூடலாம் அல்லது நேரத்துக்கு போய் சேரலாம். சரியான் ஜன நெரிசல். ஒருவாறு இருக்க இடம் கிடைத்து டிக்கட் எடுத்து குழந்தையை மடியில் வைத்து நித்திரையாக்கி னாள். ஒரு மணி நேரத்துக்குபின பஸ் வண்டியின் தாலாட்டில் உறங்கிய நம் சின்ன வாண்டுபயல் எழுந்து விடான். அவள் புட்டியில் இருந்த கொதித்தாறிய நீரை பருக கொடுத்தார் அதை சப்பி குடித்தவனுக்கு அடங்க வில்லை. தாயின் அணைப்பு வேறு அவன் தாகத்தை தூண்டவே ..அடம்பிடித்து அழுதான்.

வண்டியில் இருந்தவர்கள் .... கொஞ்சம்காற்று வரட்டும் "விலகுங்கப்பா " என்று சத்தமிட்டனர். அப்போதும் அவன் அழுகை அடங்க வில்லை ....பாலைக் கொடும்மா" என்றனர் பெண்கள்ளில் பாட்டி வயதானவர். முதற்குழந்தை அவள் வெட்கப்பட்டாள். ஆண்கள் வேறு உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர்..இளம் தாய் ..மிகவும் சங்கடபட்டாள். . அவர் சாரியும் பிளவுசும் அணிந்து இருந்தார்....ஒருவாறு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு குழந்தையை மெல்ல அணைத்து சேலைத் தலைப்பால் அவனை மூடி ..மெல்ல பிளவுஸின் கொக்கிகளை .....( hook ) தளர்த்தினாள். அவளையே குறு குறு என் பார்த்து கொண்டிருதவார்களின் கண்கள் மறு திசை நோக்கி பார்த்தன...ஒரு கையால் அணைத்து மறு கையால் தட்டி தட்டி உறிஞ்சத் தொடங்கினார். நம் கதா நாயகன். அழுகை ஓய்ந்த திருப்தியில் அத்தனை பயணிகளும். நிம்மதிப் பெரு மூச்சு விட்டனர்.

அந்தக் காலத்தில் குழந்தைகள் தாயப்பாலையே நம்பி வாழ்ந்தனர். இந்தகாலத்தில் பெண்களின் ஊட்ட சத்து குறைவோ என்ன காரணமோ பால் சுரப்பு சிலருக்கு போதியதாக் இருப்பதில்லை. பலருக்கு வேலைக்கு போகும் அவசரத்தில், புட்டிபால் கொடுகிறார்கள் சிலர் ....அது ஒரு நாகாரிகமாகவே கருதுகிறார்கள். தாய்பால் தான் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது . கண்டிப்பாக ஆறு மாதங்களாவது கொடுக்க படவேண்டும். தாய்க்கும் குழந்தைக்குமான் பிணைப்பு கூடும். இயற்கையான கருக் கொள்ளுங்காலம் பின் போடப்பட்டு தாயும் சேயும் ஆரோக்கியமாக் இருப்பார்கள்.

தாயையும் தாய்மையையும் மதிப்போம்.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

pallavan_bus_340.jpg

நல்ல தொரு பதிவு சகோதரி... இது ஏதோ பல்லவன் பஸ்ஸில் நடந்தது போல் உள்ளது....நேரடியாக கண்டது போல இருந்தது தங்கள் பதிவு...

கூடுதல் தகவல்கள்

தாய் பாலில் காணப்படும் சத்துகள் சரியான அளவில் காணப்படுவதால் குழந்தையின் வளர்ச்சியடையாத உடலுக்கு ஏற்றதாக காணப்படுகிறது. அதேநேரம் தாய்பாலில் சத்துகள் நிறைந்து காணப்படுவதால் அவை மூளை செல்களின் வளர்ச்சியை அதிகப்படுத்தி நரம்பு தொகுதியையும் வளர்ச்சியடைய செய்கிறது.

ஒரு மனிதனால் தற்கால தொழிநுட்பத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளால் இந்த அதிசய உணவை ஈடுசெய்ய முடியவில்லை.

தாய்பாலால் குழந்தை பெற்று கொள்ளும் நன்மைகளின் பட்டியல் அன்றாடம் நீண்டு கொண்டே போகிறது. தாய் பால் ஊட்டப்பட்ட குழந்தைகள் சமிபாடு மற்றும் சுவாச தொகுதிகளில் ஏற்படும் தொற்றுநோய்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆதற்கு காரணம் தாய்பாலிலுள்ள எதிர்ப்பு சக்திகள் தொற்று நோய்களுக்கு எதிராக நேரடியான பாதுகாப்பை வழங்குகிறது.

தாய்பாலிலுள்ள மற்ற நோய் எதிர்ப்பு காரணிகள் கேடு விளைவிக்க கூடிய பக்டீரியா வைரஸ்களுக்கு எதிராக தடுப்பு அமைப்பதுடன் நல்ல பக்டீரியாக்களான நோமல் புளோரா அனுமதிப்பதற்கான சிறந்த சூழலை ஏற்படுத்துகிறது. மேலும் தாய் பாலில் காணப்படும் சில காரணிகள் தொற்று நோய் எதிராக நோய எதிர்ப்பு காரணியாக தயார்படுத்துவதுடன் அதை முறையாக தொழிற்பட உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. 2

தாய் பால் விசேடமாக தயாரிக்கப்பட்டுள்ளதால் அவை மிக இலகுவாக சமிபாடடையகூடிய உணவாக காணப்படுகிறது. அவை சத்து நிறைந்து காணப்படுது மட்டுமல்ல அவை குழந்தையின் மிக மென்மையான சமிபாட்டு தொகுதியில் இலகுவாக சமிபாடு அடைகிறது. குழந்தைகள் சமிபாட்டிற்காக குறைந்தளவு சக்தியே செலவிடுவதால் அந்த சக்தியை கொண்டு உடலின் மற்ற செயல்களுக்கும் மற்ற பாகங்கள் வளர்ச்சியடையவும் பாவிக்கப்படுகிறது.

குறைமாத குழந்தைகளை ஈன்ற தாய்மார்களின் பாலானது குழந்தையின் தேவைகளை ஈடுசெய்யும் முகமாக கொழுப்பு - புரதம் - சோடியம் - குளோரைட் மற்றும் இரும்பு சத்துகளை அதிகளவாக கொண்டு காணப்படும். உண்மையில் தாய்பால் ஊட்டப்பட்ட குறைமாத குழந்தையின் கண் வளர்ச்சியானது சிறப்பாக இருப்பதோடு அவைகள் சிறந்த சிந்தனை ஆற்றில் சிறப்பாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு மேலும் பல ஆற்றல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தைக்கு தாய்பால் அத்தியவசியமானதாக இருப்பதற்கு காரணம் அதில் ஒமேகா-3 ஒயில் அல்பா லினோலிக் அசிட்கள் இருப்பதாலேயாகும். அவை மனித மூளை மற்றும் கண்விழித்திரைக்கு தேவையான பொருளாக இருப்பதோடு புதிதாக பிறந்த குழந்தையின் பார்வையில் அவை மிக முக்கியமானதாக இருக்கிறது. ஒமேகா-3 கருவுற்ற காலகட்டத்திலும் குழந்தையின் ஆரம்ப காலகட்டங்களிலும் மூளையும் நரம்பும் சாதாரணமாக வளர தேவைப்படுகிறது. விஞ்ஞானிகள் ஒமேகா-3 இயற்கையாகவும் சிறந்த சேமிப்பு கிடங்காகவும் தாய்பால் இருப்பதால் அதை மிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.3

மேலும் பிரிஸ்டல் பல்கலைகழ விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தாய்பாலின் நீண்ட கால நன்மையின் காரணமாக அவை இரத்த அழுத்தம் கட்டுப்படுத்துவதுடன் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை குறைக்கிறது. ஆய்வு குழுவின் அறிக்கை தாய்பாலின் பாதுகாக்கும் தன்மை அது கொண்டுள்ள சத்திலிருந்து வருவதாக கூறுகிறது. தாய் பால் கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் வருவது குறைவு என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது. தாய் பாலில்லோன்ங் செயின் பொலிஅன்செடுரேடட்பெட்டி அசிட்கள் காணப்படுவதால்-இவை நரம்புகள் இறுக்கமடையாமல் காப்பாற்றுகிறது- அதை போன்று தாய் பால் ஊட்டப்பட்ட குழந்தைகள் சோடியத்தை குறைவாக பெற்றுகொள்வதால் -இவை இரத்தம் அழுத்தம் ஏற்பட காரணமாக குறைக்கப்படுகிறது. அதன் காரணமாக அவை நிறை அதிகரிக்கப்பதால் தாய்வால் இதயத்திற்கு பயனளிக்கிறது.

4மருத்துவர் லிசா மார்டின் தலைமையின் கீழ் அமேரிக்காவிலுள்ள சின்சினாட்டி குழந்தை மருத்துவமனையின் மருத்துவர் குழு மேற்கொண்ட ஆய்வில் தாய் பாலில் அடிபொனக்டின் என்று அறியப்பட்ட புரத ஹோமோன்கள் அதிகமாக காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 5 அடிபொனக்டின் அளவு இரத்தத்தில் அதிகமாக காணப்பட்டால் இதயத்தில் ஏற்படும் ஆபத்துகள் குறைகிறது.. உடல் பருமனானவர்களிலும் மாரடைப்பு ஆபத்துள்ளவர்களிடமும் அடிபொனக்டினின் அளவு குறைந்து காணப்படுகிறது. இதன் மூலம் பருனாக குழந்தைகளில் ஹோமோன் குறைவதற்கும் தொடர்பு இருப்தாக நிரூபிக்கப்ட்டுள்ளன. மேலும் அவர்களின் ஆய்வின் போது தாய்பாலில் காணப்படும் லெப்டின் என்ற மற்றொரு ஹோமோனுக்கும பெட் மெடபோலிசம் தொடபர்பு இருப்பது தெரியவந்துள்ளது.. உடலில் கொழுப்பு இருப்பதை தெரிவிக்கும் சாதணமாக லெப்டின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் மார்nனின் கூறுவதாவது தாய்பாலின் மூலம் பெறப்பட்ட இத்தகைய ஹோமோன்கள் அளவுக்கு அதிமாக பருமனாவது -இரண்டாம் நிலை சக்கரை வியாதி- இன்சுலினை எதிர்பது போன்ற நோய்களால் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. 6

'பசுமையான உணவை' பற்றிய உண்மைகள்

தாய்பாலின் நன்மைகள் இத்துடன் முடிவடைந்து விடுவதில்லை. குழந்தையின் ஆரோக்கியத்தில் அதன் பங்கானது அந்த குழந்தை கடக்கும் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப அதக் உணவு முறைகள் மாற்றமடைவதுடன் அந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஏற்ப பாலின் உள்ளடக்கமும் மாற்றமடைகிறது. எல்லா நேரத்திலும் தகுந்த வெப்பநிலையில் தயாராக காணப்படும் தாய்பாலானது மூளை வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. ஏனெனில் அது கொண்டுள்ள சீனி மற்றும் கொழுப்புமாகும். மேலும் கல்சியம் போன்றவைகள் குழந்தையின் எழும்பு வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது.

இதை பால் என்று அழைக்கப்பட்ட போதிலும் இந்த அதிசயமான பானத்தின் பெரும்பகுதி தண்ணீராகும். இது முக்கிய பண்பாக காணப்படுகிறது ஏனெனில் உணவை தவிர்நது குழந்தைகளுக்கு தண்ணீர் என்ற வகையில் திரவம் தேவைப்படுகிறது. தாய்பாலை தவிர்ந்து வேறு எந்த உணவிலோ அல்லது தண்ணீரிலோ முழு சத்துகளையும் காணமுடியாது. இருப்பினும் தாய்பாலில் -90 வீதம் தண்ணீர் காணப்பட்டபோதிலும் அது குழந்தையின் தண்ணீர் தேவையை சுகாதார முறையில் பூர்த்தி செய்கிறது.

தாய்பாலும் அறிவும்

மற்ற குழந்தைகளை விட தாய் பாலுட்டப்பட்ட குழந்தைகளுக்கு வளர்ச்சி அதிகமாக இருப்பதை விஞ்ஞான ஆய்வுகள் காட்டுகின்றன. தாய்பால் ஊட்டப்பட்ட குழந்தைகளுயும் பால்மா ஊட்டப்பட்ட குழந்தைகளையும் ஆய்வுக்கு உட்படுத்திய கெண்டகி பல்கலைகழகத்தை சேர்ந்த ஜேம்ஸ் அன்டர்சன் என்பவர் மற்ற குழந்தைகளை விட தாய்பால் ஊட்டப்பட்ட குழந்தைகளின் அறிவு திறன் 5 புள்ளிகள் அதிகமாக இருப்பதை நிரூபித்தார். 6 மாதம் வரை தாய்பாலுட்டப்பட்ட குழந்தையின் அறிவு மேன்படுத்தப்பட்டிருப்பதாகவும் 8 வாரங்களுக்கு குறைவாக பாலூட்டப்பட்ட குழந்தைகளுக்கு எவ்வித அறிவில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது இந்த ஆய்வின் முடிவாக இருக்கிறது. 7

தாய்பால் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறதா?

பல ஆய்வுகள் நடத்தப்பட்டு பல கட்டுரைகள் வெளியடப்பட்டவைகள் அனைத்தும் தாய்பாலானது குழந்தைகளை புற்றுநோயிலிருந்து காப்பாற்றக்கூடியதாக இருப்பதை நிரூபித்துள்ளன. இந்த செயல்முறை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. சோதனை கூடங்களில் உருவாக்கப்பட்ட கட்டி செல்களை தாய்பாலில் காணப்படும் புரதங்கள் மற்ற ஆரோக்கியமான செல்களைவிட்டு விட்டு அழிப்பதை விஞ்ஞானிகள் பெரும் சக்தி இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். சுவீடனிலுள்ள லுன்ட் பல்கலைகழத்தின் தொற்றுநோய் சம்பந்மான பேராசிரியர் கதரீனா சவன்போ என்பவின் தலைமையின் கீழுள்ள ஆராய்ச்சி குழு தாய்பாலிலுள்ள அதிசமான இரகசியங்களை கண்டுபிடித்தது.8. இந்த லுன்ட் பல்கலைகழகத்தின் குழு தாய்பாலானது பலவகையான புற்று நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குவதை அதிசயமான கண்டுபிடிப்பு என கூறுகிறது.

முதலில் ஆராய்சியாளர்கள் புதிதாக பிறந்த குழந்தையிலிருந்து எடுத்த குடல் முகாஸ் செல்களை தாய்பாலோடு சேர்த்து பரிசோதித்தனர். நிமோனியா என்ற னுமகோகஸ் பக்டீரியாவினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளை தாய்பாலானது மிக சிறந்த முறையில் தடுத்து நிறுத்தியதை கண்டறிந்தார்கள். மேலும் தாய்பால் ஊட்டப்பட்ட குழந்தைகளுக்கு புட்டிப்பால் ஊட்டப்பட்ட குழந்தைகளை விட குறைந்தளவு கேட்டல் சம்பந்தமான குறைபாடுகளும் சுவாச தோற்று நோய்களும் ஏற்படுகிறது.

பல ஆய்வுகளுக்கு பிறகு தாய்பாலானது குழந்தைகளுக்கு புற்று நோய் ஏற்படவதை தடுக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தாய்பால் ஊட்டப்பட்ட குழந்தைகளை விட புட்டிப்பால் ஊட்டப்பட்ட குழந்தைகளுக்கு குழந்தை பருவத்தில் புற்று நோய் வருவது 9 வீதம் அதிக வாய்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த பெறுபேறுகள் மற்ற புற்றுநோய் வகைகளுக்கும் பொருந்தும். தூய்பாலானது புற்றுநோய் செல்களை சரியாக இணங்கண்டு அவற்றை அழிப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தாய்பாலில் அதிகமாக காணப்படும் அல்பாலக் (அல்பாலக்டல்புமின்) என்ற பொருள் புற்றுநோய் செல்களை இணங்கண்டு அவற்றை அழிக்கிறது. பாலில் காணப்டும் சுகர் லக்டோஸ் உருவாக்க பயன்படும் புரதத்தாலேயே அல்பா-லக் உருவாக்கப்படுகிறது.

http://www.nidur.info/index.php?option=com_content&view=article&id=191:2008-09-11-05-49-24&catid=50:2008-08-01-04-43-05&Itemid=69

நன்றி... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைக்கு பால் குடுக்கிறதையும் உற்றுப் பார்க்கும், கஞ்சப் பயலுகளை நடுச் சந்தியிலை மற்றவர்கள் பார்கும் படி அம்மணமாய் விடவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

தாய்பால் தான் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது . கண்டிப்பாக ஆறு மாதங்களாவது கொடுக்க படவேண்டும். தாய்க்கும் குழந்தைக்குமான் பிணைப்பு கூடும். இயற்கையான கருக் கொள்ளுங்காலம் பின் போடப்பட்டு தாயும் சேயும் ஆரோக்கியமாக் இருப்பார்கள். தாயையும் தாய்மையையும் மதிப்போம்.

இன்றுதான் பார்த்தேன் ரீச்சர்

தங்களது அனுபவத்தை எழுதியதால் எனது பங்கையும் எழுதலாம் என்று நினைக்கின்றேன்

எனது மனைவியும் இப்படி தன்மீதான பாசம் அதிகரிக்கும் அது இது என்று சொல்லி 6 மாதம்வரை எல்லோருக்கும் பால் கொடுத்தார்

அவருக்கு சிறு அலர்ச்சிக்குணம்இருந்தது

நான் அப்போதே சொல்வேன் அதையும் சேர்த்துக்கொடுத்துவிடாதே என் பிள்ளைகளுக்கு என்று.

இன்று என் பிள்ளைகள் காலையில் ஒருக்கா தும்மினாலும் அவர்களே சொல்வார்கள் அப்பா வேண்டாம் வேண்டாம் சொல்ல அம்மா எமக்குத்தந்த சொத்து இது என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் விசு அண்ணா தாய்பாலால்தான் அலர்ஜி வந்தது என்று சொல்ல மாடேன். வேறு காரணம் இருக்கும். வீட்டின் கார்பெட் ....தூசு ....உணவு ஒவ்வாமை போன்றவை காரனமாயிருக்க்லாம்.

  • கருத்துக்கள உறவுகள்

[இன்று என் பிள்ளைகள் காலையில் ஒருக்கா தும்மினாலும் ..........அவர்களே சொல்வார்கள் அப்பா வேண்டாம் வேண்டாம் சொல்ல அம்மா எமக்குத்தந்த சொத்து இது என்று.

நானும் அப்படி சொல்லவில்லை ரீச்சர்

ஒருக்கா தும்மினால்கூட....... என்றுதான் எழுதினேன்

அதாவது நான் சொன்னதை சாட்டாக வைத்து தாயை பகிடி செய்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் பார்த்தேன் ரீச்சர்

தங்களது அனுபவத்தை எழுதியதால் எனது பங்கையும் எழுதலாம் என்று நினைக்கின்றேன்

எனது மனைவியும் இப்படி தன்மீதான பாசம் அதிகரிக்கும் அது இது என்று சொல்லி 6 மாதம்வரை எல்லோருக்கும் பால் கொடுத்தார்அவருக்கு சிறு அலர்ச்சிக்குணம்இருந்தது

நான் அப்போதே சொல்வேன் அதையும் சேர்த்துக்கொடுத்துவிடாதே என் பிள்ளைகளுக்கு என்று.

இன்று என் பிள்ளைகள் காலையில் ஒருக்கா தும்மினாலும் அவர்களே சொல்வார்கள் அப்பா வேண்டாம் வேண்டாம் சொல்ல அம்மா எமக்குத்தந்த சொத்து இது என்று.

அப்படிப்பார்த்தால் தேன் குடித்த உங்களுக்கும் எல்லோ வியாதி வந்திருக்கவேனும் :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம் பேசுது

இல்லையென்றால்

நம்பவா போகின்றீர்கள்.... :lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.