Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் உறவுகளை எம்மிடம் ஒப்படையுங்கள் கிளியில் 350 பெற்றோர்கள் கண்ணீர்மல்க சாட்சியம்

Featured Replies

ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 19, 2010

எங்கள் உறவுகளை எம்மிடம் ஒப்படையுங்கள் என 350 பெற்றோர்களும் துணைவியர்களும் பிள்ளகளும் நேற்று மஹிந்தவின் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் அளித்தனர். "எங்கள் உறவுகளை எங்களிடம் தாருங்கள்' என்று கண்ணீரும் கம்பலையுமாக மஹிந்தவின் பம்மாத்து ஆணைக்குழு முன் 350 பெற்றோர்கள் துணைவியர்கள் சாட்சியம் அளித்தனர்.

நேற்று கரைச்சி உப அரசாங்க அதிபர் பணிமனையில் பலர் கைது செய்யப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங் களையும், உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களையும் கைகளில் ஏந்தியவாறு சாட்சியம் அளிக்க கூடி இருந்தனர்.

மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது சகோதரர்களும் சீரோ சிவிலியன் கசுவல்றீஸ் எனும் அடிப்படையில் தாம் இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டதாக முழு பூசணிகாயை சோற்றுக்குள் புதைத்து வருகின்றனர்.

ஈழ நாதம்

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மக்களுக்கு எங்கள் ஊர்ப்புதினபகுதியில் கருத்தெழுதும் வசதி இருந்தால் எப்படி இருக்கும் :mellow:

பாவங்கள், இந்த 350 பெற்றோருக்கும் விளங்கவில்லை,... முன்பு டக்லஸுகளும், சித்தார்த்தர்களும் என்பதினாயிரம் தொடக்கம் என்பது இலட்சம் வரை கூவிக்கூவி முகாம்களில் இடுந்த போராளிகளையும், பொதுமக்களையும் புலம்பெயர் உறவுகள்/நண்பர்களுக்கு சிங்களத்தின் ஏவலில் விற்றதை, சிங்களம் நிறுத்தி விட்டு, அதன் ஏகபோக உரிமையை "நம்பிக்கையே வாழ்வு" கேபிக்கு கொடுத்து விற்கத்தொடங்கியிருக்கும் நிலையில் .... கேட்கிறார்கள், விடச்சொல்லை!!!!!!!

... இப்படி வருமானம் இல்லாமல் இந்த செல்வம் கொழிக்கும் விற்பனப்பொருளை சும்மா விட சிங்களம் அனுமதிக்குமா??? இல்லை அதற்கு "நம்பிக்கையே வாழ்வு" கேபி சம்மதிப்பாரா???????????

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மக்களுக்கு எங்கள் ஊர்ப்புதினபகுதியில் கருத்தெழுதும் வசதி இருந்தால் எப்படி இருக்கும் :)

^_^:mellow::D

உடுத்த துணியுடன் முகாமுக்குச் சென்ற நிலையிலேயே இப்போதும் நாங்கள் வாழ வழிகாட்டுங்கள்;நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கிளிநொச்சி மக்கள்: [ தினக்குரல் ] - [ Sep 19, 2010 04:00 GMT ]

கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்துவிட்டு எமது எதிர்காலம் பற்றி சிந்தியுங்கள். உடுத்த உடையுடன் முகாம்களுக்குச் சென்ற நிலைமையிலேயே இப்போதும் நாம் இருக்கின்றோம். எமது சுபிட்சமான வாழ்க்கைக்கு வழியமைத்துத் தாருங்கள்.இவ்வாறு கிளிநொச்சி மாவட்ட மக்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உறுப்பினர்களிடம் உருக்கமான வேண்டுகோளை விடுத்தனர்.

சி.ஆர்.டி. சில்வா தலைமையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு நேற்று சனிக்கிழமை கரச்சிப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே கிளிநொச்சி மாவட்ட மக்கள் இந்தக் கோரிக்கையை விடுத்தனர்.பிற்பகல் 1 மணிவரை நடைபெற்ற இந்த முறைப்பாடறியும் சந்திப்பில் மாவட்டத்தின் பல கிராமங்களைச்

சேர்ந்த குறிப்பாக நகரை அண்டியுள்ள கிராம மக்கள் பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.கடந்த காலத்தில் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு அவலங்கள் நடந்துமுடிந்துவிட்டன. அவை தொடர்பாக உண்மை நிலைமைகளை யாரும் அறியாமல் இருக்கமுடியாது. எனவே கசப்பான கடந்த காலச் சம்பவங்களை மறந்துவிட்டு 6 மாதம், 1 வருடம் எனக் கொடுக்கப்பட்ட நம்பிக்கை வார்த்தைகளை மீறி தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்கள் பிள்ளைகளின் விடுதலை துரிதமாக்கப்படவேண்டும், யுத்த காலத்திலும் அதற்கு முன்னரும் காணாமல்போன சொந்தங்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தவேண்டும் எனவும் அவர்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பது போன்ற தகவல்கள் எதுவுமே தெரியாத நிலையில் இன்னமும் வெறும் நம்பிக்கையோடு மட்டும் தாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் மீளக்குடியமர்ந்துள்ள எமக்கு எந்தவிதமான வசதிகளும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை எனவும் இடம்பெயர்ந்து உடுக்க உடைகூட இல்லாமல் முகாம்களுக்குச் சென்ற நிலைமையிலேயே இங்கே மீளவும் வந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் இந்த விடயம் நன்றாகத் தெரியும்.இருந்தும் கவனிப்பாரில்லாமல் நாங்கள் விடப்பட்டுள்ளோம் என் அந்த மக்கள் கூறினார்கள்.ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த விவேகானந்த நகரைச்சேர்ந்த மதிவண்ணன் மதுஷா என்ற தாய் சாட்சியமளிக்கையில் "எனது கணவர் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2 வருடங்கள் புலிகளின் தொழில் நிறுவனமொன்றில் சம்பளத்திற்கு வேலைபார்த்தார். முகாமில் சிலர் சொல்லிக் கொடுத்து அவரை பிடித்துக்கொண்டு போய்விட்டனர். நடந்தவை எல்லாம் தெளிவாகவும் கூறப்பட்டுவிட்டன. தற்போது அவர் ஓமந்தை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

வாழ்வதற்கு எந்த உதவியும் கிடையாது.பிள்ளைக்கு பால்மா வாங்குவதற்கும் கூட பணமில்லாமல் கஷ்டப்படுகின்றேன்.எனது கணவரை மீட்டுத்தாருங்கள்%27 எனக் கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்.

இதற்கான உரிய நடவடிக்கைகளைத் தாம்மேற்கொள்வதாகக் கூறிய ஆணைக்குழு இறுதிப் போர்நடைபெற்றுக்கொண்டிருந்த போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் அல்லது பாதுகாப்பான இடங்களிற்குச் செல்வதற்கு யாராவது தடை விதித்தார்களா? என வினாவினர். அதற்குப் பதிலளித்த பெண் "புலிகள் தடுத்தனர். என்னுடைய பிள்ளை தலை நிமிர்த்த முடியாத எலும்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது.அதைக் கூறியபோதும் எங்களை விடவில்லை.மருத்துவச் சான்றிதழ்களைக் கிழித்தெறிந்தனர்%27 என்றார்.

மலையாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐயாகூகு என்ற முதியவர் சாட்சியமளிக்கையில்; "எனக்கு மூன்று பிள்ளைகள். ஒரு பிள்ளை 17,18 வயதிலேயே புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டு விட்டார். மற்ற ஒரு பிள்ளையை பிடித்துக் கொண்டுபோய்விட்டார்கள்.மிஞ்சியிருந்த பிள்ளை திருமணமாகி 18 ஆவது நாள் மனைவியோடு சேர்த்துக் கொண்டு போய்விட்டார்கள். அவர்கள் இருவருமே இறந்து விட்டார்கள். மூத்த பிள்ளையும் இறந்து விட்டது.மற்றப்பிள்ளையைக் காணவில்லை.எனக்கும் என் மனைவிக்கும் வருத்தம்.எங்கள் பிள்ளை இருக்கிறதா இல்லையா என்ற விபரத்தையாவது வெளிப்படுத்த வேண்டும்%27 என்று கேட்டுக்கொண்டார்.

உயர்பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் மக்களை மீளக்குடியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.குறிப்பாக பொன்நகர் கிராமம் யாரால் பிடித்து வைக்கப்பட்டுள்ளது என்றே தெரியா நிலையில் உள்ளதை மக்கள் சுட்டிக்காட்டினர்.இது தொடர்பாக விளக்கத்தை கேட்ட ஆணைக்குழு புலிகளால் அல்லது புலிகள் சார்ந்த நிறுவனங்களால் வழங்கப்பட்ட காணிகளில் மக்கள் சென்று வாழவோ உரிமை கோரவோ முடியாது. காரணம் காணிகளை வழங்கும் உரிமை புலிகளுக்கு இல்லை என ஆணைக்குழு கூறியது.

எனவே,பொன்நகர் மக்களுக்கு வருட இறுதிக்குள் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் புதிய இடங்களில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு கூறியது. மேலும் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை விடுவிப்பதாகக் கூறி புலனாய்வுத்துறை என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வந்த சிலர் தம்மிடம் பல இலட்சம் ரூபா பணத்தை வாங்கிக் கொண்டு சென்றதாகவும் ஆனால் அவர்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை எனவும் மக்கள் கூறினர். தொடர்ந்து இவ்வாறு பணம் கேட்போர் தொடர்பாக பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் தெரியப்படுத்தியிருந்தோம். ஆனால், அவர்கள் தமக்குத் தெரியாது எனவும் பணம் கேட்டவர்களைக் காட்டித்தருமாறும் கேட்டுக்கொண்டனர்.

தடுப்பு முகாமில் உள்ளவர்களைப்பார்ப்பதற்கான நேரம் தற்போது முக்கால் மணி நேரத்திலிருந்து கால்மணி நேரமாக்கப்பட்டுள்ளதாக கூறிய மக்கள் தடுப்பில் உள்ளவர்களைச் சென்றுபார்த்துவர முடியாத நிலையில்தாம் இருப்பதையும் எடுத்துக்கூறினர். இதனோடு மருதமடு வேரிய குளம் பகுதியில்உள்ள தடுப்பு முகாமில் முத்திரைகள் ஒட்டப்பட்ட 4 விண்ணப்பப் படிவங்களில் கையெழுத்து வாங்கப்படுகின்றது.அதில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்களை விடுவிப்பதற்கான விண்ணப்பப்படிவம் எனப் போடப்பட்டுள்ளது.கையெழுத்து போடப்பட்டவர்களுடைய பிள்ளைகள் கூட இன்னமும் விடுவிக்கப்படவில்லை என மக்கள் கூறினர்.

பொதுவாக மக்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோரின் பிரச்சினைகள் தொடர்பாகவே கேட்டுக்கொண்டனர்.இங்கு ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டீ.சில்வா ஒரே நாட்டில் மக்கள் அனைவரும் சரிசமமானவர்கள் என்ற அடிப்படையில் உங்களுக்குள்ள பிரச்சினைகள் மற்றும் கடந்த காலத்தில் நடந்த அநீதிகள் தொடர்பாக கண்டறிந்து இன,மத,சமூக முரண்பாடுகளைத் தீர்ப்பதே எமது இலட்சியம்.எனவே மக்களுடைய பிரச்சினைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பிரச்சினைகள் முக்கியமாகிறது.இது தொடர்பாக விசேடமாக ஒதுக்கப்பட்ட ஒருநாளில் இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் பேசவுள்ளோம்.எனவே உரிய தீர்வு கிடைக்கும் என்றார்.இந்தச் சந்திப்பில் காணாமல் போனோர், தடுப்பில் உள்ளோர் மற்றும் விதவைகள் பற்றிய விபரங்களும் அவர்கள் எதிர்கொள்ளும பிரச்சினைகள் குறித்தும் மக்கள் தம் கைப்பட எழுதிய மகஜர்களை ஆணைக்குழு பெற்றுக்கொண்டது.இறுதியில் இரகசிய வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக்கொண்டதோடு, சந்திப்பு நிறைவடைந்தது.

------------------------------------------------------------------------------------------------------

எழிலனும் சக போராளிகளும் இராணுவத்திடம் சரணடைந்தனர் - எழிலனின் மனைவி சாட்சியம்

[ வலம்புரி ] - [ Sep 19, 2010 04:00 GMT ]

தன்னுடைய கணவன் எழிலனும் அவரு டன் சில போராளிகளும் இராணுவத்தினரிடம் சரணடையும் போது தான் கண்டதாகவும் ஆனால் அவர்கள் குறித்த தகவல்கள் தெரி யாததால் படிப்பினைகள் மற்றும் நல்லிணக் கக்குழு கண்டுபிடித்துத் தரவேண்டும் என விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி சசிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று கிளிநொச்சியில் சாட்சிய மளிக்கும் போது தான் அவர் இதனைக் கூறினார்.சாட்சியமளித்தது குறித்து அவர் பி.பி.சிக்கு கூறியதாவது,

கடைசி நேரம் இராணுவக்கட்டுப் பாட்டுக்குள் பொதுமக்கள் வந்தவுட னே முல்லைத்தீவு வட்டுவாகல் தாண்டி முல்லைத்தீவு பிரதேசத்தில் எல்லோரும் அணிதிரண்டு போய் இராணுவத்தினரிடம் சரண டைந்தனர்.அதில் ஒரு ஆங்கில மொழிக் கல்லூரி அதிபர் பிரன்சிஸ் சாகர் தலைமையில் தான் அவர்கள் சரணடைந்துள்ளனர்.

எழிலனோடு அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் தங்கன், நிர்வாக சேவை பொறுப்பாளர் பூவண்ணன், சிரியன், இளம்பரிதி, விளையாட்டுத்துறை ராஜாவோடு சேர்ந்து மூன்று பிள்ளைகளும் லோரன்ஸ், திலகன், ஜோர்ஜ், வில்வன், குட்டி, கோல்சர் மாவி போன் றோர் சரணடைந்ததை நான் கண்டேன். அவர்கள் சரணடைந்தவுடன் அவர்களை மட்டும் கூட்டிக்கொண்டு போனார்கள் நானும் பின்னுக்கு போனேன்.

ஆனால் என்னைவிடவில்லை நீங்கள் ஒரு அரசாங்க உத்தியோ கத்தராக இருக்கிறபடியால் நீங்கள் மக்களோடு செல்லுங்கள். இவர் களை நாங்கள் விடுவோம் என இராணுவத்தினர் கூறினர். அவர்கள் சரணடைந்து 30 நிமிடத்தில் எங்களை வேறுபாதையால் ஓமந்தைக்குக் கொண்டு சென்றனர்.அதற்குப்பின்னர் எனக்கும் அவருக்கும் இடையில் எந்தத்தகவலும் இல்லை.

முன்னாள் போராளிகள் பலரை அரசாங்கம் விடுவித்திருக்கின்றது. அப்படிவிடுவிக்கப்பட்ட சிலரைக் கண்டு கேட்டேன் ஆனால் எனக்கு எந்தவிதமான பதிலும் இன்று வரை ஓரிடத்திலிருந்தும் வர வில்லை. இப்போ இந்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கிறேன். இறுதிப்போரில் நடந்தவற்றை ஆணைக்குழுவில் ஒரு ஆறுத லுக்கு சொல்லிப்போட்டு வந்தமாதிரித்தான் எனக்கு இருக்கிறது என்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.