Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு

Featured Replies

அதிர்ச்சி வைத்தியம் இப்போது [ உதயன் ] - [ Sep 21, 2010 04:00 GMT ]

உண்மை இறப்பதில்லை. உண்மையை எவராலும் அழித்துவிடவும் முடியாது. அதனை ஒளித்து மறைத்து வைத்துக் கொள்ளவும் இயலாது. அவ்வாறு ஒரு சில காலத்துக்கு மறைக்க முயன்றாலும் அது ஏதோ வகை யில், ஒரு நாள் வெளிப்படும்; வெளிப்படுத்தப்படும். இது உலக நியதி.

வன்னியில் நடைபெற்று முடிந்த போரின் கடைசிக் காலப்பகுதியில், பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காக அரசாங்கம் பாதுகாப்பு வலயங்களை அறிவித்தது.

கடந்த வருடம் (2009 ஆம் ஆண்டு) ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு கிரா மங்களை உள்ளடக்கிய, பரந்தன் முல்லைத்தீவு வீதி யின் 25ஆம் கிலோமீற்றரில் இருந்து 32ஆம் கிலோ மீற்றர் வரையான 7 கிலோ மீற்றர் நீளமான பிரதே சத்தில் அவ்வீதியின் வடக்குப் பக்கமாக உள்ள 4 கிலோ மீற்றர் தூரமான பிரதேசத்தை இராணுவம் பாது காப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தியது. மக்களை அங்கு சென்று தங்குமாறு கேட்டுக்கொண்டது.

அதன்பின்னர் சென்றவருடம் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி புதிதாக வட்டுவாகல் முதல் புதுமாத்தளன் வரையான பகுதியும் பாதுகாப்பு வலயமாகச் சேர்க்கப் பட்டது.

அந்தப் பகுதிகளில் சென்று தங்கினால், பாது காப்பாக இருக்கலாம், உயிரைக் காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையுடன் மக்கள் எல்லோரும் ஒன்று குவிந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு எதிர்மறையாகிப் போயிற்று. அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்பிச் சென்றவர்களில் ஆயிரக்கணக்கனோர் துடிதுடித்து மாண்டனர். நாளாந்தம் 300 முதல் 600 பொதுமக்கள் மரணமாகினர் என்று இப்போது தெரிவிக்கப்பட்டிருக் கிறது.

பாதுகாப்பு வலயத்தில் இருந்து அரசாங்கக் கட்டுப் பாட்டுப் பகுதிகளுக்குச் செல்ல முயற்சித்தபோதும், அதற்கு முன்னர் பாதுகாப்பு வலயத்தில் தங்கியிருந்த வேளையிலும் குறிப்பாகப் புதுமாத்தளன் பகுதியில் பொஸ்பரஸ் குண்டுகள், கொத்துக் குண்டுகள் வீசிய தால் ஆயிரக்கணக் கான மக்கள் இறந்தனர் என்று அப் போது ஊடகங்கள் தக வல் வெளியிட்டன.

ஆனால், அவை யாவும் கட்டுக்கதைகள், அரசு மீது களங்கம் கற்பிப்பதற்கெனக் கட்டவிழ்த்துவிடப்பட்ட பச்சைப் பொய்கள் என்று பாதுகாப்புத் தரப்பு, அர சாங்கத் தரப்பு அடி யோடு மறுத்தது. அதன்பொருட்டு பல மறுத்தான் அறிக் கைகளையும் வெளியிட்டது.

தமது உயிர்களைக் காப்பாற்றுவதற்காக, அரசு அறி வித்த முகாம்களுக்கு வந்து சேர்ந்தவர்களில் பலர், பொஸ் பரஸ் மற்றும் கொத்துக்குண்டுகளுக்கு மக்கள் இரையான காட்சிகளைக் கண்டிருந்தபோதிலும், அவற்றை வெளியே சொல்லப் பயந்தனர். பேரிரகசியம் போன்று மறைத்தனர். மொத்தத்தில் போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல் லப்பட்டனர் என்பது எந்தவகையிலும் உறுதிப்படுத் தப்படவில்லை.

ஆனால், உண்மை இப்போது வெளிவந்துவிட்டது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக் கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதிவேட்டில் கறுப்பு வெள்ளையில் எழுதப்பட்டுவிட்டது.

பூநகரி பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையில் கண்கண்டசாட்சி ஒருவர் பொதுமக்களுக்கு உண்டான இழப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

அவர் சொன்னது யாவும் கட்டுக்கதை, சுத்தப் பொய் என்று அரச தரப்பு அறிக்கை வெளியிடும் என எதிர் பார்க்கலாம்.

போரின்போது விடுதலைப் புலிகளையே கொன்றோம். அவர்கள் தங்கியிருந்த பிரதேசங்கள் மீதே தரை யிலிருந்தும் சரி, வானத்தில் இருந்தும் சரி குண்டு களையும் எறிகணைகளையும் வீசினோம் என்றும் அரசாங்கம் இரண்டொரு நாளில் அறிக்கை விடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலங்கையின் மாண்புமிகு ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் நாளை மறுதினம் வியாழக்கிழமை, உரை நிகழ்த்த இருக்கும் வேளையில் வன்னியில் நடைபெற்ற போரில், உலகளாவிய ரீதி யில் தடைசெய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை யும், கொத்துக் குண்டுகளையும் மக்கள் தங்கியிருந்த புது மாத்தளன் பகுதியில் வீசி தமிழ்மக்களை அழித் தொழித்த தான பதிவுகள் பகிரங்கமாக அரசுக்கு நிச் சயம் ஒவ்வாமையைத் தரப்போகிறது.

இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெற வில்லை என்று நிலைநாட்டுவதற்காக போர் நடவடிக்கைகள் குறித்துப் பொறுப்புக் கூறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு ஆலோசனை கூறும் நிபுணர் குழுவின் நியமனத்தை ஆட்சேபித்தும் எதிர்த்தும் ஐ.நாவுடன் முட்டிமோதும் விதத்தில் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை சுற்றி வளைத்ததும், அமைச்சர் ஒருவர் உண்ணாவிரத "நாடகம்' நடத்தியதும் கடந்த சில மாதங்களில் நிறைவேற்றப்பட்ட நிலையில் கொத்துக்குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகளை வீசி, தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் என்ற சாட்சியம் அரசுக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமையும், அனலாகச் சுடும் என்பது எதிர்பார்க்கக்கூடியதே.

  • தொடங்கியவர்

வன்னியில் நடந்த பேரவலம் சந்திர மண்டலத்தில் நிகழ்ந்த சங்கதியா? [ வலம்புரி ] - [ Sep 21, 2010 04:00 GMT ]

வன்னியில் நடந்த யுத்தம் தொடர்பான விசார ணை இடம்பெற்று வருகின்றது. படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழு இந்த விசாரணைகளை செய்து வருகின்றது. விசாரணைக்குழுவின் நியமனம், விசாரணை, சாட்சியம் என்பவற்றை எல்லாம் பார்க்கும் போது வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவர்கள் வன்னியில் யுத்தம் நடத்திவிட்டு போனது போன்றதொரு பிரமை ஏற்படுகின்றது- ஏற்படுத்தப்படுகின்றது.

அந்த அளவிற்கு விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. வன்னி யுத்தத்தின் போது பொசுபரஸ் குண்டு கள் வீசப்பட்டன. கொத்துக்குண்டுகள் போடப்பட் டன என்பதெல்லாம் வன்னிமக்கள் நேரில் அனுபவித்த நிஜங்கள். இந்த நிஜங்கள் தெரியாமல் இருக்கின்ற போதுதான் உள்ளக விசாரணைகள் தேவையாக இருக்கும். ஆனால் பொசுபரஸ் குண்டுக ளை வீசியவர்களும் கொத்துக்குண்டுகளைப் போட்டவர்களும் இந்த நாட்டில்தான் இருக் கின்றனர்.

இதைச் செய்விப்பதற்கு படைத்தளபதிகள், பாதுகாப்பு அமைச்சு, அவை யாவற்றிற்கும் உத்தரவிடும் அதிகாரம் கொண்டவர்கள் என்ற மிகப்பெரியதொரு கட்டமைப்பு இருந்து அனைத்தையும் நடத்தி முடித்தது. நிலைமை இதுவாக இருக்கும் போது அதற்கு ஒரு விசாரணைக்குழு அமைத்து அந்த விசார ணைக்குழு சாட்சியங்களைப் பதிவுசெய்து, அதனை அறிக்கைப்படுத்தி அரசின் உயர்மட்டத்திடம் கையளிக்க, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையை அரச உயர்மட்டம் வாசித்து குற்றம் இழைத்தவர்களுக்கு தண்ட னை வழங்கும் என எதிர்பார்ப்பது நடக்கக் கூடிய காரியமா என்ன? செய்தவர்களும் அனுபவித்தவர்களும் இங் கேயே இருக்கின்றனர். துயரத்தை- பேரவ த்தை அனுபவித்தவர்கள் தங்கள் சோகத்தைச் சொல்ல அவை அறிக்கை வடிவில் செய்தவர்களுக்கே போய்ச் சேரும் பரிதாபம் உலகில் எங்கும் நடந்ததாக வரலாறில்லை.

யுத்தம் நடத்தியவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்ற இருவகுதியினரினதும் நியாயத்துவத்தை விசாரிப்பதாக இருந்தால், அதனை மூன்றாம் தரப்பே செய்யமுடியும். பரவாயில்லை. கொத்துக் குண்டுகளுக்கு குடும்பமாய் உயிரைக் கொடுத்த கொடுமையை கண்னால் கண்டு அந்தச் சடலங்களின் சிதைவு களைக் கடந்துபோய் முட்கம்பி வேலிக்குள் இருந்த நமக்கு விசாரணைகள் அந்த அவலத்தை மீண்டும் ஒருகணம் ஞாபகப்படுத்தட்டும்.

எதுவாயினும் வன்னி யுத்தத்தில் நடந்த அவலங்கள் எதுவும் சந்திரமண்டலத்தில் நடந்த சங்கதிகள் அல்ல. அவை சனல்-4 உள்ளிட்ட ஊடகங்களில் வெளிவந்த பகிரங்கங்களே.சிலவேளை வன்னி யுத்தத்தில் ஏற்பட்ட அழிவுகளை ஐ.நா.சபைச் செயலாளர் பான் கி மூன் உலங்கு வானுர்தியில் சென்று பார்த்த மையால், வன்னி யுத்தத்தை சந்திரமண்டலத்து சங்கதிகளாக சிருஷ்டிக்க உரியவர்கள் நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை.

Edited by akootha

  • தொடங்கியவர்

மயான பூமியான நந்திக்கடலில் போர் எச்சங்கள்; மாலைவேளை பார்த்துத் திரும்பினர் ஆணைக்குழு உறுப்பினர்கள் [ உதயன் ] [முல்லைத்தீவு, செப். 21]

கடந்த வருடம் ஏப்ரல், மே மாதங் களில் இறுதி யுத்தம் இடம்பெற்ற ஆயிரக் கணக்கானோரைக் கொன்றொழித்த முள்ளிவாய்க்கால், நந்திக்கடல், வலைஞர் மடம், வட்டுவாகல் பகுதிகளுக்கு நேற்று மாலைப்பொழுதில் சென்று பார்வையிட் டுள்ளனர் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவரும் மற்றும் உறுப்பினர்களும்.

கோரமான யுத்தம் நடைபெற்ற அந்தப் பகுதிகள் எங்கும் மயான பூமியாகக் காட்சியளித்தது என்றும் போர் எச்சங் களும் பல்வேறு வகையான வாகனங்கள், பொதுமக்களின் உடைமைகள் போன்றவை சேதமடைந்த எரிந்த நிலையில் சிதறிக் காணப்பட்டன என்றும் ஆணைக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்பாக நந்திக்கடல் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆணைக்குழு உறுப் பினர்களுக்கு படைத்தரப்பில் எந்த வித விளக்கமோ அல்லது வேறு விதமான தகவல் கள் எதுவுமே தெரிவிக்கப்படவில்லை என்று அந்த வட்டாரங்கள் குறிப் பிட்டன.

கடந்த வருடம் மே மாதத்தில் இறுதி மோதல் நடைபெற்ற பகுதி ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் சிக்குண்டு கொடு மைகளுக்கும் பேரனர்த்தத்துக்கும் மத்தியில் பெரும் சித்திரவதைகளுக்கு ஆளாகி இருப்பர் என்பதை தம்மால் உணரமுடிகி றது என்று ஆணைக்குழுவைச் சேர்ந்த ஒருவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

அந்தப் பகுதிகளைப் பார்வையிட்டு இருள் சூழும் வேளை அங்கிருந்து புறப் பட்டு வவுனியாவை இரவு சுமார் 9 மணிய ளவில் சென்றடைந்தனர் ஆணைக்குழு உறுப் பினர்கள்.

  • தொடங்கியவர்

அனைவரையும் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை - முல்லைத்தீவு மக்கள் குற்றச்சாட்டு [ வலம்புரி ] - [ Sep 21, 2010 04:00 GMT ]

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஜனா திபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என முல்லை மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த 18, 19ஆம் திகதி களில் கிளிநொச்சியில் தனது சாட்சிகளைப் பதிவு செய்து கொண்டது. நேற்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் தனது சாட்சிகளைக் அவ் ஆணைக்கு பதிவு செய்து கொண்டது. இதில் சாட்சியமளிக்க வென காணாமல் போனோரின் உறவுகள் சுமார் 350 பேர் வரை அங்கு வந்திருந்தனர்.

இவர்களில் சுமார் 15 பேரின் சாட்சிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டதாகவும் ஏனைய வர்கள் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இதேவேளை சாட்சியமளிக்கத் தவறியவர்களின் விபரங்கள் மற்றும் எவ்வாறு காணா மல் போனார்கள் என்பன தொடர்பாக படிவம் ஒன்றில் பூரணப்படுத்தி பெற்றுக் கொண்ட ஆணைக் குழுவினர்இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

விசாரணைக்கென கொண்டு செல்லப்பட்ட உறவுகளும் காணாமல் போயுள்ளனர்! - முல்லைத்தீவில் சாட்சியமளிப்பு

வன்னியில் இடம் பெற்ற இறுதி யுத்தத் தின் போது இடம் பெயர்ந்து இராணுவக்கட்டுப் பாட்டுபகுதிக்குச் சென்றபோது விசாரணைக் கென இராணுவம் மற்றும் கடற்படையினரால் அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர், யுவதிகளும் காணாமல் போயுள்ளதாக படிப் பிணைகள் மற்றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

போர் உக்கிரமாக இடம்பெற்ற வன்னிப் பிரதேசத்தில் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நேற்று அங்குள்ள மக்களிடம் சாட்சியங்களை பதிவு செய்தது. இறுதி மோதல்கள் நடைபெற்ற முள்ளி வாய்க்கால்,வெள்ள முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களுக்கு அண் மையில் அமைந்துள்ள முல்லைத்தீவு செய லகமண்ட பத்தில் நடைபெற்ற இந்த விசாரணை களின் போது பெரும் எண்ணிக் கையிலான பெண்கள் தமது சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வந்திருந்தனர்.

இதில் சாட்சியமளித்த கள்ளப்பாட்டைச் சேர்ந்த இரட்ணசிங்கம் ஈஸ்வரி என்பவர் 2009ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி படகுமூலம் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போது அதில் பயணம்செய்த தனது தங்கை யின் கணவர் இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாகவும் அதன்பின் அவர் குறித்த தகவல் எதுவும் தெரியாதென கூறினார்.

சுமார் 20 பேர் சிறிய படகு ஒன்றில் பயணித்த போதே கடற்படையினர் தம்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் அதன்போது தமது படகிலிருந்த 8 பேர் உயிரிழந்ததாகவும் அதில் தனது தங்கையும் ஒருவர் எனவும் அவர் தனது சாட்சியத்தின் போது கூறினார்.

இறுதியுத்தத்தின்போது இராணுவத்தின ரிடம் சரணடைந்தவர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டோ அல்லது அழைத்துச் செல்லப்பட்டோ தடுப்பு முகாம்களில் இன்ன மும் விடுதலை செய்யப்படாமல் இருப்பவர்கள், காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பாகவே அதிகமானோர் சாட்சியமளித்தனர்.

அத்துடன் மீள்குடியேற்றப் பணிகளில் அடிப்படை வசதிகள் என்னும் நிறைவேற்றப் படாமல் மற்றும் இன்னும் மீள்குடியேற்றப் படவேண்டியவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் நேற்றைய விசா ரணையின் போது அப்பகுதி கிராம சேவை யாளர் ஒருவரால் சாட்சியமளிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி நகரம், கண்டாவளை, பூநகரி ஆகிய இடங் களில் கடந்த இரண்டுநாட்களாக விசாரணை கள் மேற்கொண்டிருந்த ஆணைக்குழு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருநாள் மட்டுமே விசாரணைகள் மேற்கொண்டது என்பது குறிப் பிடத்தக்கது

  • தொடங்கியவர்

காணாமல்போன உறவுகளை மீட்டுத்தருமாறு முல்லை.மக்கள் மன்றாட்டம் [வீரகேசரி நாளேடு] [ 9/21/2010 8:22:17 AM]

இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத் தருமாறு நல்லிணக்க ஆணைக்குழுவிடம் முல்லைத்தீவில் பொதுமக்கள் மன்றாட்டமாகக் கேட்டுள்ளனர். ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை முல்லைத்தீவு செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன் போதே குழுமுன் தோன்றி சாட்சியமளித்தவர்களும் செயலகத்திற்கு வெளியே குழுமியிருந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

புதுமாத்தளனிலிருந்து பாதுகாப்புத் தேடி யாழ்ப்பாணம் நோக்கி படகில் வந்துகொண்டிருந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சகோதரியின் கணவனை கண்டுப்பிடித்துத் தருமாறு நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த கள்ளிப்பள்ளியைச் சேர்ந்த இரட்ணசிங்கம் ஈஸ்வரி கோரிக்கை விடுத்தார். ஆணைக்குழு முன்னிலையில் நேற்று இவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில்; இறுதி யுத்தத்தின் போது பாதுகாப்புத் தேடி முள்ளிவாய்க்கால் வரை வந்து பின்னர் யாழ்ப்பாணம் செல்வதற்காக 20 பேருடன் படகொன்றில் நாம் சென்றுகொண்டிருந்தோம்.

அப்போது இடம் பெற்றஷெல் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். அதில் எனது சகோதரியும் பலியானார். எஞ்சிய 12 பேருடன் நாம் சென்றுகொண்டிருந்த போது கடற்படையினரால் நாம் கைது செய்யப்பட்டு புல்மோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.

இதன் போது 40 முதல் 50 வரையான படகுகளை கடற்படையினர் கட்டியிழுத்துச் சென்றதை நாம் கண்டோம். அவ்வாறு படகில் கொண்டு செல்லப்பட்ட எனது சகோதரியின் கணவர் காணாமல் போயுள்ளார். இதுவரையில் அவரை நாம் காணவில்லை. அவரை எமக்கு மீட்டுத் தரவேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த துணுக்காயைச் சேர்ந்த சின்னத்துரை சத்தியசீலன் தெரிவிக்கையில்; எனது மகள் சத்தியேஸ்வரி விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக 25.02.2009 ஆம் ஆண்டு அழைத்துச் செல்லப்பட்டு முன்னரங்கப்பகுதியில் விடப்பட்டிருந்த போது காயமடைந்து புதுமாத்தளன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாத காலமாக நானே அவரை பராமரித்து வந்தேன். பின்னர் இராணுவத்தினரால் புதுமாத்தளன் பகுதி கைப்பற்றப்பட்டபோது அவர் காணாமல் போயிருந்தார். அவரை கண்டு பிடித்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை வன்னியிலிருந்து விடுதலைப்புலிகளினால் 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் பெண் ஒருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். தமது மீள்குடியேற்றம் தொடர்பாக அவர் கேள்வி எழுப்ப முற்பட்ட போது இதனை இரகசியமாக பதிவு செய்ய வேண்டுமென கூறிய ஆணைக்குழுவினர் அனைவரையும் வெளியேற்றிவிட்டு அவரின் வாக்குமூலத்தினை மட்டும் பதிவு செய்து கொண்டனர்.

ஆணைக்குழு விசாரணையினை ஆரம்பித்த போது 300க்கும் மேற்பட்டவர்கள் செயலக வளவில் கூடி நின்று தமது காணாமல் போன உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை கண்ட ஆணைக்குழுவினர் அவர்களிடம் விண்ணப்பப்படிவங்களை விநியோகம் செய்து காணாமல்போனோரது விபரங்களையும் பதிவு செய்து கொண்டனர்.

யூ.என் உரைக்கு பின் உந்த ஆணைக்குழுவும் பெரும்பாலும் செயலிழந்துவிடும்.இப்போது நடப்பது தான் அமைத்த ஆணைகுழு திறந்தமனதுடனானது,யாரும் நடந்ததை சொல்லாலாம் என உலகிற்கு காட்டவே.இதற்கு மேலொரு ஆணைக்குழுவை நியமிக்க ராசபக்சா தயாரில்லை.

நாங்கள் எங்களுக்கேயே அடிபட நேரம் காணாது இதுக்குள்ள ராஜபக்சாவை எங்கே கூண்டில் ஏத்துவது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.